• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே
கண்ணா....

தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!

தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?

குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு

அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

என்று அந்த அழகிய காலைப் பொழுதில் மனதை மயக்கும் குரலில் கண்களை மூடி ஆழ்ந்து பாடிக் கொண்டு இருந்தாள் மதுமிதா.


கயல் போன்ற விழிகள், கூர்மையான மூக்கு, செயற்கை பூச்சு இன்றி பொலிவுடன் இருக்கும் முகம் என வடித்து எடுத்த சிலை போல இருப்பாள் மதுமிதா.


மதுமிதாவின் இனிய குரலில் மயங்கி போய் பூஜையறை வாயிலிலேயே நின்று கொண்டிருந்தார் மதுமிதாவின் அன்னை அருணாதேவி.


மனமுருக கடவுளை வேண்டிக் கொண்டவள் கண்களைத் திறந்து எதிரில் இருந்த தன் தந்தையின் படத்தை தொட்டு வணங்கிக் கொண்டாள்.


"அப்பா எப்போதும் நீங்க எனக்கு துணையாக இருக்கணும்பா" என்று வேண்டிக் கொண்டு திரும்பிய மதுமிதா அறை வாயிலில் கண் மூடி நின்று கொண்டிருந்த அருணாவைப் பார்த்ததும் அவரருகில் சென்று அவர் தோள் தொட கண் திறந்து கொண்டார் அருணா.


"சாரிடாமா உன் பாட்டை கேட்டு அப்படியே மெய் மறந்து போயிட்டேன். வாம்மா வந்து சாப்பிடு டைம் ஆயிடுச்சுலே" என்று கூறி விட்டு அருணா செல்ல அவரின் பின்னால் சென்றாள் மது.


தட்டில் சாப்பாட்டை எடுத்து வைத்து மதுவிடம் கொடுத்து விட்டு அவளருகில் நின்று கொண்டிருந்தார் அருணா.


ஏதோ பேச வாய் எடுப்பதும் தயங்குவதுமாக இருந்த அருணாவைக் கண்டு கொண்ட மது
"அம்மா என்ன சொல்றதுக்காக இவ்வளவு தயங்குற?? எதுவா இருந்தாலும் சொல்லுமா" எனக் கூறவும்


"அது வந்து...நான் சொல்லுறதக் கேட்டு நீ கோபப்படக்கூடாது சரியா???" என்று அருணா கேட்டதற்கு


"அப்போ ஏதோ கோபப்படுற மாதிரி தான் சொல்ல போற இல்லையா???" என மது எதிர்க் கேள்வி கேட்க பதில் பேசாமல் மெளனம் காத்தார் அருணா.


அருணா அமைதியாக இருப்பதைப் பார்த்த மது
"சரி நான் கோபப்படமாட்டேன். என்ன விஷயம் சொல்லுமா?" என்று கூறவும்


"நம்ம ப்ரோக்கர் கோபி அண்ணன் கிட்ட உன்னோட ஜாதகத்தை கொடுத்துருந்தேன்" என்று கூறி விட்டு அருணா மதுவை பார்க்க மது தட்டில் விரலால் கோலம் போட்டு கொண்டு அமர்ந்திருந்தாள்.


மது எதிர்த்து எதுவும் கூறாமல் இருப்பதை பார்த்த அருணா மேற் கொண்டு பேச தொடங்கினார்.


"நேற்று ஈவ்னிங் போன் பண்ணி இருந்தாரு. உன் ஜாதகத்தோட பொருந்துற மாதிரி ஒரு வரன் வந்துருக்காம். பையன் சாப்ட்வேர் என்ஜினியராம். வீட்டுக்கு ஒரே பையனாம். பையனோட வீட்ல உன்னை பத்தி கோபி அண்ணா எல்லாம் சொல்லிட்டாராம்.


அவங்க எல்லாருக்கும் சம்மதமாம். உனக்கு சம்மதம்னா மேலே பேசலாம்னு சொன்னாரு. என்னம்மா மேல பேசலாமா???" என்று அருணா ஆவலுடன் மதுவை பார்த்து கேட்க
எதுவும் பேசாமல் எழுந்து கொண்ட மது கைகளை கழுவி விட்டு வந்து அவளுடைய ஹேண்ட் பாக்கை எடுத்து கொண்டு புறப்பட்டு செல்ல போக அவளின் முன்னால் வந்து நின்றார் அருணா.


"என்ன மது எதுவுமே சொல்லாமலே போற?" என்று அருணா கேட்கவும்


அவரை ஆழ்ந்து பார்த்த மது
"என்ன பத்தி எல்லாமே சொல்லிட்டீங்களா??? எல்லாமே" என அழுத்தமாக கேட்க விக்கித்துப் போய் நின்றார் அருணா.


"என்னம்மா அமைதியாகிட்டீங்க?? எல்லாமே சொல்லிட்டீங்களா இல்லையா??" என மது கேட்கவும்


"அது வந்து.....அது..." என அருணா தடுமாறி கொண்டு நின்றார்.


"அப்போ சொல்லலே அப்படி தானே? அம்மா நாம எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு மீண்டு வந்துருக்கோம்னு தெரியும்லே. இப்போ தான் படிப்படியாக எல்லாமே சரியாகிட்டு வருது. என்னைப் பத்தி எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுகிட்டு அதற்கு அப்புறமா யாரு என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்குறாங்களோ அப்போ பார்த்துக்கலாம். இனி இந்த விஷயத்தை பத்தி பேசாதேமா ப்ளீஸ்" என்று விட்டு மது வேகமாக வீட்டை விட்டு வெளியேறி சென்று விட மது சென்ற வழியையே வேதனையுடன் பார்த்து கொண்டு நின்றார் அருணா.


வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த மதுவின் மனதோ எரிகுழம்பாய் கொதித்து கொண்டிருந்தது.


தன் வாழ்க்கை இப்படி மாறியதற்கு எல்லாம் காரணம் அவன் தானே என எண்ணும் போதே மதுவிற்கு எல்லையில்லா கோபம் வந்தது.


அவளது வாழ்வில் புயலென நுழைந்தவன் அவன்.
எத்தனை கஷ்டங்கள், எத்தனை போராட்டங்கள் எல்லாவற்றுக்கும் ஒட்டுமொத்த காரணம் அவன் தானே.


தன் குடும்ப மானத்தை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து எல்லாவற்றுக்கும் மேலாக உயிருக்கு உயிரான தன் தந்தையை இழந்து அவள் ஒட்டுமொத்த தவிப்புக்கும் காரணம் அவன் அருள்வேந்தன்.


அவன் பெயரை நினைத்தாலே அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.


எல்லாவற்றையும் நினைத்து கொண்டே வந்தவள் வழக்கமாக அவள் செல்லும் பேரூந்திற்காக காத்து நின்றாள்.


எப்போதும் போல தள்ளாடிய படி வந்து சேர்ந்த பேருந்தில் ஏறி அமர்ந்தவள் சிந்தனைகள் பின்னோக்கி நகர்ந்தது.


தந்தை இறந்த பின்பு சொந்த பந்தம், நண்பர்கள் எல்லோரும் அவளையும், அவள் அன்னையையும் கண்டு கொள்ளாது விட்டு விட தவித்துப் போயினர் இருவரும்.


மதுமிதாவின் தந்தை அருணாச்சலம் தனியார் கம்பெனி ஒன்றில் அசிஸ்டென்ட் மேனஜராக பணியாற்றி வந்தார்.


அவர் உயிருடன் இருந்த காலம் வரை குடும்ப கஷ்டங்களோ, சுமைகளோ மதுவிற்கு தெரியவில்லை.


அவர் இறந்த பின்பு தான் இனி அன்னையையும், தன்னையும் காப்பாற்றி கொள்ள என்ன செய்வது?? எனத் திக்குமுக்காடி போனாள் மது.


அவள் தந்தை இறக்கும் போது அவள் பி.காம் இறுதியாண்டு படித்து கொண்டிருந்தாள்.


அருணாசலத்தின் இறப்பிற்கு பின் அருணா தான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த தங்க ஆபரணங்கள் எல்லாவற்றையும் விற்று மதுவின் படிப்பை முழுமையாக பூர்த்தி அடையவைத்தார்.


தனக்காக கஷ்டப்படும் தன் அன்னைக்காக படித்து முடித்த கையோடு வேலை தேடி அலைந்தாள் மது.


ஆனால் அவளின் தகுதிக்கும், படிப்புக்கும் யாரும் மதிப்பளிக்கவில்லை,
மாறாக பணத்தையே நாடினர்.


வெறுத்துப் போய் இருந்த மதுவிற்கு எப்போதும் பக்க பலமாக இருந்தார் அருணா.


இனி பிறர் கையை எதிர்பார்க்க விரும்பாத மது சொந்தமாக தொழில் ஆரம்பிக்க திட்டமிட்டாள்.


எல்லா சொத்துக்களும் கை நழுவி போய் விட இறுதியாக அருணாவிடமிருந்தது அவருடைய தாலியும், அருணாச்சலம் பார்த்து பார்த்து ஆசையாக கட்டிய அவர்களது வீடுமே.


வீட்டை விற்றால் இருக்க இடம் கிடைக்காது எனத் தெரிந்ததால் மதுவின் எதிர்ப்பையும் மீறி தன் தாலியை அடமானம் வைத்து மது தொழில் ஆரம்பிக்க பணம் வழங்கினார் அருணா.


அருணா வெடிங் பிளானர்ஸ் என்ற கம்பெனியை ஆரம்பித்து தட்டு தடுமாறி இன்று நல்ல நிலையில் தன் கம்பெனியை கொண்டு வந்த மது முதல் வேலையாக தன் அன்னையின் தாலியை மீட்டுக் கொடுத்தாள்.


படிப்படியாக இழந்த ஒவ்வொன்றாக மீட்டு வந்தவளால் இழந்து போன தன் குடும்ப மானத்தையோ, தன் தந்தையையோ மீட்ட முடியவில்லை.


தந்தையை நினைக்கும் போதே மதுவின் கண்கள் கலங்கியது.


தன் 23 வருட வாழ்க்கையில் சந்தோஷத்தை மாத்திரம் அனுபவித்தவள் கடந்த இரண்டு வருடங்களாக சிரிப்பையே இழந்து தவிக்கிறாள்.


மறுபடியும் தன் வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்குமா என்பது அவளுக்கே புரியாத புதிராக இருந்தது.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
மது இறங்கும் இடம் வந்து விட பேருந்தில் இருந்து இறங்கி கொண்டவள் வழக்கமாக செல்லும் கோவிலுக்குள் நுழைந்து கொண்டாள்.


தன் தந்தையின் ஞாபகம் மனதில் எழும் போதெல்லாம் அவள் செல்லும் ஒரே இடம் அந்த முருகன் கோவில்.


ஏனோ அங்கு சென்றால் தன்னை சூழ்ந்திருந்த பிரச்சினைகள் எல்லாம் விலகி விட்டதைப் போல மது உணர்வாள்.


சிறிது நேரம் கண் மூடி முருகனை வணங்கி கொண்டவள் தன் ஆபீஸ் இருக்கும் இடத்தை நோக்கி சென்றாள்.


அருணா வெடிங் பிளானர்ஸ் என்ற பெயர் பலகையை பார்த்ததும் மதுவிற்கு தன் தாய், தந்தை இருவரையும் வைத்து கேலி செய்து, சிரித்து மகிழ்ந்த நாட்கள் கண் முன்னே வந்து சென்றது.


"மா எப்படி மா நீங்க இரண்டு பேரும் லவ் பண்ணுணீங்க? எல்லோரும் கேரக்டர், அப்பியரன்ஸ் அப்படி இப்படினு பார்த்து லவ் பண்ணுவாங்க.


ஆனா நீங்க இரண்டு பேரும் உங்க பேருக்கு முன்னாடி அருணானு வாரத வைச்சு லவ் பண்ணுணீங்களா??" என்று மது கேட்கும் போதெல்லாம் சிரித்துக் கொண்டே இருக்கும் தன் தாய், தந்தையின் முகம் அவள் கண் முன்னே நிழலாடியது.


மனதினுள் எழுந்த கவலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இதழில் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் ஆபீஸினுள் சென்றாள் மது.


தன்னுடைய அறையில் சென்று அமர்ந்து கொண்ட மது அவளுடைய மேஜை மீது இருந்த ஒவ்வொரு பைல்களாக பார்த்து கொண்டிருந்த வேளை அவளது அறை கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தான் ஸ்ரீதர்.


மதுவோடு காலேஜில் ஒன்றாகப் படித்தவன் தான் ஸ்ரீதர்.


மது பல இக்கட்டான சூழ்நிலைகளில் தவிக்கும் போதெல்லாம் அவளுக்கு துணையாக நின்ற மற்றொரு நல் உள்ளம்.


அவளுடைய சிறிய கம்பெனியில் வன் ஆஃப் த பார்ட்னர்.


அறை வாயிலில் நின்று கொண்டிருந்த ஸ்ரீதரைப் பார்த்து புன்னகத்த மது
"வா ஸ்ரீ ஏன் அங்கேயே நிற்குற?" எனக் கேட்கவும்


"என்ன இருந்தாலும் கம்பெனியோட ஓனர் நீ. பார்மாலிட்டிஸ மீறலாமா?" என ஸ்ரீதர் கேட்க தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டு கொண்டாள் மது.


"ஸாரி ஸார். நீங்க ரூல்ஸ் ரங்கராஜன் ஆச்சே. நான் தான் மறந்துட்டேன். வாங்க வந்து உட்காருங்க" என்று மது கூற


"தட்ஸ் குட்" என்று விட்டு வந்து அமர்ந்து கொண்டான் ஸ்ரீதர்.


"அப்புறம் சொல்லு ஸ்ரீ. வீட்ல அம்மா, அப்பா, அர்ஜுன்லாம் எப்படி இருக்காங்க??" என்று மது கேட்க


"நாங்க எல்லாரும் நல்லா தான் இருக்கோம். ஆனா நீ பண்ணுறது தான் சரி இல்ல" என்று ஸ்ரீதர் கூறவும்


அவனை குழப்பமாக பார்த்த மது
"நான் என்ன பண்ணுணேன்??" என்று கேட்டாள்.


"வர்ற வழியில் உன் வீட்டுக்கு போய்ட்டு தான் வரேன்" என்று ஸ்ரீதர் கூறவும்


"ஓஹ்....அம்மா எல்லாம் சொல்லிருப்பாங்க போல. அவங்களுக்கு எப்போவுமே இதே வேலையா போச்சு" என்று மது கோபமாக கூற


"இப்போ எதுக்கு அம்மா மேல கோபப்படுற?? அவங்களுக்கு உனக்கு ஒரு நல்ல லைப் அமையணும்னு ஆசை இருக்காதா? எத்தனையோ பேரோட மேரேஜை நீ கிராண்டா பிளான் போட்டு பண்ணி கொடுக்குற. அப்படி உன் மேரேஜையும் பார்க்கணும்னு அவங்களுக்கு ஆசை இருக்கும் தானே??" என்று ஸ்ரீதர் கேட்கவும் அமைதியாக இருந்தாள் மது.


"நீ இன்னும் பழசையே நினைச்சுட்டு இருக்கியா மது???" என ஸ்ரீதர் கேட்கவும்


"அதெல்லாம் மறந்தா தானே ஸ்ரீ நினைக்க முடியும்!!" என விரக்தியாக மது கூறவும் திகைத்துப் போனான் ஸ்ரீதர்.


"அந்த நாள என்னால மறக்க முடியலயே ஸ்ரீ. என் அப்பா என்ன விட்டுட்டு போய்ட்டாரே ஸ்ரீ. என்ன யாருமே அன்னைக்கு நம்பலயே. தப்பு என் மேலயும் இருந்துச்சு தான். ஆனா என் பேச்சை யாருமே கேட்கலயே. யாரோ ஏதோ சொன்னாங்கனு.... என்னால மறக்க முடியல ஸ்ரீ" என்று கூறி விட்டு அவள் கைகளிலேயே முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள் மது.


"ஹேய் மது!!! இப்போ எதுக்கு அழற?? நீ அழுதா அப்பாக்கு பிடிக்குமா??" என்று ஸ்ரீதர் கேட்கவும் சட்டென்று தலை நிமிர்ந்து கொண்ட மது தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டாள்.


"நான் அழமாட்டேன் அப்பாக்கு நான் அழுதா பிடிக்காது ஷோ நான் அழமாட்டேன்" என்று விட்டு முயன்று புன்னகைத்து கொண்டாள் மது.


மதுவைப் பார்க்க ஸ்ரீதருக்கு கவலையாக இருந்தாலும் முகம் தெரியாத அந்த நபரின் மேல் கோபமாக வந்தது.


எப்போதும் சிரிப்பும், சந்தோஷமுமாக பட்டாம் பூச்சி போல திரிந்து கொண்டிருந்த பெண்ணை இப்படி மாற்றி விட்டானே! என எண்ணி கொண்டவன் மதுவின் மன நிலையை மாற்ற வேறு விடயத்தை பற்றி பேச நினைத்தான்.


"மது சொல்ல மறந்துட்டேனே! லாஸ்ட் வீக் ஜட்ஜ் வீட்டு மேரேஜ் பண்ணிக் கொடுத்தேலே அதை பார்த்து நியூ கஸ்டமர் வந்துருக்காங்க. Logo enterprises கம்பெனியோட எம்.டி டாட்டர்க்கு நெக்ஸ்ட் மன்த் என்கேஜ்மண்ட், வெடிங் எல்லாமே டேட் குறிச்சுட்டாங்களாம். நாம தான் மற்ற அரேன்ஜ்மண்ட்ஸ் எல்லாம் பண்ணி தரணும்னு கேட்டாங்க. நானும் உன்னை கேட்காம ஓகே சொல்லிட்டேன் பரவாயில்லை தானே" என ஸ்ரீதர் கேட்கவும்


"நீ எனக்கு எப்பவும் நல்லது தானே ஸ்ரீ பண்ணுவ. இதுலயும் ஏதாவது நல்லது இருக்கும். சிறப்பா பண்ணிடலாம். வேற டீடெய்ல்ஸ் எதுவும் சொல்லலயா அவங்க??" என்று மது கேட்கவும்


சிறிது நேரம் யோசித்த ஸ்ரீதர் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்து மதுவிடம் கொடுத்தான்.


"இது தான் அவங்களோட கம்பெனி அட்ரஸ். உனக்கு வேற என்ன இன்பார்மேஸன் தேவைப்பட்டாலும் நேரடியாகவே நீ போய் கேட்டுக்கலாம். என்ன போட்டு நீ கேள்வி கேட்க வேண்டியது இல்லை பாரு. அவங்களுக்கும் ஒரு ப்ராப்ளமும் இல்லை" என்று ஸ்ரீதர் கூறவும்


"ஓஹ்.....அதுவும் நல்லதா போச்சு. இப்போவே போய் பேசிட்டு வந்துரலாம் வா வா" என்று ஸ்ரீதரின் கை பற்றி இழுத்து கொண்டு சென்றாள் மது.


"இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா இன்னைக்கு இங்க வந்து இந்த விஷயத்தை பத்தி பேசிருக்கவே மாட்டேனே!!!" என சத்தமாக ஸ்ரீதர் புலம்பிக் கொண்டு வர


அவனை பார்த்து சிரித்துக் கொண்டே ஸ்ரீதரின் காரில் அமர்ந்து கொண்ட மது
"சீக்கிரம் வந்து வண்டியை எடு ஸ்ரீ" என்று கூற


"எல்லாம் என் நேரம்" என்று புலம்பியபடி காரை ஸ்டார்ட் செய்தான் ஸ்ரீதர்........

Nazriya-in-Ohm-Shanthi-Oshaana-(17)6964.JPG
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஹுஸ்னா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top