• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஹாய் ப்ரெண்ட்ஸ்...... அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....
தீபாவளி ஸ்பெஷலா இன்னைக்கு ஒரு பதிவு;);)

அருள்- மது திருமணத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்:love::love::giggle:
2017 - 1.jpgdc-Cover-a1enmbf2fb7iglbfmn89gi99f7-20160608002120.Medi.jpeg
5-surprising-things-about-shakti-arora-2-99851-img-2.jpgஅதிகாலை நேரம் கண் விழித்து எழுந்து அமர்ந்த மதுவின் மனம் முழுவதும் ஆனந்த சாரல் வீசியது.


இன்னும் சற்று நேரத்தில் அருளின் மனைவியாக அவனோடு வாழ் நாள் முழுவதும் வாழப் போகிறோம் என்ற மகிழ்வுடன் தயாராகி கொண்டிருந்தாள் மது.


விஜி, பத்மா அவளது நண்பிகள் என அனைவரும் மதுவை கேலி செய்து கொண்டிருக்க அவள் மனமோ அருளை எப்போது பார்ப்போம் என்று ஆவலில் தவித்துக் கொண்டிருந்தது.


இள செம்மஞ்சள் நிற பட்டு சேலை அணிந்து அருள் அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கிய நகைகளை போட்டு கொண்டவள் கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை பார்த்து கொண்டாள்.


ஸ்ரீதரின் கை வண்ணத்தில் மணமேடை அனைவரது கவனத்தையும் வசீகரித்து இருக்க குறைந்த நாள் அவகாசத்திற்குள் சிறப்பாக அலங்கார வேலைகளை ஸ்ரீதர் செய்திருந்தான்.


stage-decorations-500x500.jpg
பூக்களின் தோரணங்களின் கீழ் அழகான மணமேடை அமைக்கப்பட்டு கண்களுக்கு இனிய காட்சியாக அந்த மண்டபம் காணப்பட்டது.


அருள் வெண்ணிற வேஷ்டி, சட்டை அணிந்து கம்பீரமாக நடந்து வந்து மணமேடையில் அமர்ந்து கொண்டான்.


அய்யர் சொன்ன மந்திரங்களை எல்லாம் வார்த்தை மாறாமல் கூறி கொண்டிருந்த அருள்
"பொண்ண அழைச்சிட்டு வாங்கோ..." என்று அய்யர் கூறவும் மது வரப் போகின்றாளா?? என்ற ஆவலில் சிறிது தடுமாறி போனான்.


மணமகள் அறையில் இருந்து வெளியேறி வந்த மதுவை ஒரு நொடி கூட இமைக்காமல் அருள் பார்த்து கொண்டிருந்தான்.


மதுவும் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் விழி பார்த்து வெட்கப்பட்டு அவள் முகம் செவ்வானமாய் சிவந்து போனது.


மணமேடையில் வந்து மது அமர்ந்து கொள்ளவும் அவளை நெருங்கி அமர்ந்து கொண்டான் அருள்.


"டேய் கொஞ்சம் அடக்கி வாசிடா...." என்று ஸ்ரீதர் அருளின் தோளில் தட்டி சொல்ல


"உனக்கு ஏன் வயிற்றெரிச்சல்??" என்று அவனை பார்த்து கேட்ட அருள் மதுவை இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டான்.


இதை எல்லாம் பார்த்து சுலோச்சனா உள்ளுக்குள் பொறுமிக் கொண்டு நிற்க ஷோபாவோ கடைசி வாய்ப்பு ஏதாவது கிடைக்குமா என்று ஆராய்ந்து கொண்டு நின்றாள்.


அய்யர்
"கெட்டி மேளம் கெட்டி மேளம்" என்று கூற அருள் மதுவின் கழுத்தில் தாலிகட்டி மூன்று முடிச்சு போட்டான்.


அருள் ஒவ்வொரு முடிச்சு போடும் போதும் ஷோபாவின் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிந்தது.


யாரும் அறியாமல் தன் கண்களை துடைத்து கொண்டு மதுவை கோபமாக பார்த்து கொண்டு நின்றாள் ஷோபா.


மதுவின் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து விட அவன் ஸ்பரிசத்தை கண் மூடி ரசித்து கொண்டாள் மது.


அதன் பிறகு அக்கினியை வலம் வந்து, அம்மி மிதித்து, அவள் காலில் மெட்டியை மாட்டி விடுவது வரை அனைத்து சடங்குகளையும் செய்து முடித்து விட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க இருவரும் சென்றனர்.


லோகநாதன்- வத்சலா தம்பதியருக்கு அடுத்ததாக அழகேசன்- பத்மாவதி தம்பதியினரிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு அருணாவின் காலில் விழவும் பதறி விலகி கொண்டார் அருணா.


"ஐயோ என்ன மாப்பிள்ளை இதெல்லாம்???" என்று அருணா பதட்டத்துடன் வினவ அவரை பார்த்து புன்னகத்து கொண்ட அருள்


"நீங்களும் பெரியவங்க தானே...நீங்க மட்டும் ஆசிர்வாதம் பண்ணாம நின்னா என்ன அர்த்தம்?? அந்த பழைய பஞ்சாங்கம் எல்லாம் தூக்கி போடுங்க அத்தை..." என்று கூற அருளை எண்ணி பூரிப்படைந்தாள் மது.


மதுவின் முகம் சந்தோஷத்தில் திளைக்கும் ஒவ்வொரு நொடியும் ஷோபாவிற்கு பழி வாங்கும் எண்ணம் அதிகரித்து கொண்டே சென்றது.


சுலோச்சனா அருள் தன் மகளுக்கு இல்லை என்ற உண்மையை ஜீரணிக்க முடியாமல் தன் கோபத்தை எல்லாம் அவர் கணவன் மேல் காட்டிக் கொண்டு நிற்க அவரோ கை கட்டி அமைதியாக நின்றார்.


அன்று இரவே ரிசப்சன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் ஸ்ரீதர் அந்த வேலைகளை கவனிக்க சென்று விட மதுவை ரிசப்சன்க்கு அலங்கரிக்க மற்றவர்கள் அழைத்து சென்றனர்.


தனக்கு என ஒதுக்கப்பட்ட அறையில் வந்து அமர்ந்து கொண்ட அருள்
"சே!! தாலி கட்டி மூணு மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ள மதுவை கூட்டிட்டு போயிட்டாங்க....ஈவ்னிங் ஏழு மணிக்கு ரிசப்சன்க்கு இப்போவே ரெடி ஆகணும்னு என்ன அவசியம்??? புதுசா கல்யாணம் ஆனவங்க கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டும்னு விடாம இப்படி பண்ணிட்டாங்களே!!" என்று புலம்பிக் கொண்டிருக்க


அவனை பார்த்து சிரித்த வினித்
"ஏன் ஸார் இதே மாதிரி தானே நானும் என் கல்யாணத்தன்னைக்கு புலம்புனேன். அதுக்கு என்ன சொன்ன?? காலம் பூரா பேசிட்டு தானே இருக்கப் போற..ஒரு அஞ்சு, ஆறு மணி நேரம் பொறுமையாக இருனு சொல்லி என் வாயை அடைச்சதானே...நல்லா வேணும்டா உனக்கு..." என்று கூற அவனை கொலை வெறியுடன் முறைத்து பார்த்தான் அருள்.


மாலை நேரம் எப்போது வரும் என்று காத்திருந்த அருள் கடிகாரம் மணி ஐந்தை காட்டவும் ரிசப்சனுக்கு தயாராக தொடங்கினான்.


MV5BMTU1MzE5Mjk1M15BMl5BanBnXkFtZTgwMTAyMTIzOTE@._V1_.jpg
7e759c1a26070c886de693c07a9ca316.jpg94b2399e72f8e38318530ade0ffe81b6.jpgவெள்ளை நிற ஷேர்ட், கரு நீல நிற கோட் மற்றும் அதே நிற பேண்ட் அணிந்து தன் வசீகர புன்னகையோடு நடந்து வந்த அருள் மேடையில் சென்று நிற்க மேடையின் மறுபக்கத்தினால் மது நடந்து வந்தாள்.


சிவப்பு நிற லெஹங்கா அணிந்து தன் தோழிகளின் கேலியில் முகம் சிவந்தவளாக நடந்து வந்த மதுவை பார்வையினாலே பருகி கொண்டிருந்தான் அருள்.


மது வந்து அருகில் நிற்கவும் அவள் இடையில் கை வைத்து தன் தோளோடு அணைத்துக் கொண்ட அருள் அவள் காதோரம் குனிந்து
"ஐ லவ் யூ மை ஏஞ்சல்...." என்று கூற மது வெட்கத்தோடு அவன் விழிகளை நிமிர்ந்து பார்த்தாள்.


இருவரது பார்வையும் ஒன்றோடு ஒன்றாக கலக்க கீழே நின்று அவர்களை பார்த்து கொண்டிருந்த ஷோபா கோபமாக தன் காலை தரையில் உதைத்து விட்டு போனை எடுத்து காதில் வைத்துக் கொண்டு வேகமாக வெளியேறி சென்றாள்.


சூழ நின்று கொண்டிருந்த நண்பர்களின் கேலியில் அருளிடம் இருந்து சிறு வெட்கத்தோடு மது விலகி நின்றாள்.


ரிசப்சன் ஆரம்பத்தில் இருந்தே ஷோபாவை கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீதர் ஷோபாவின் விசித்திரமான நடவடிக்கையை பார்த்து விட்டு அவளை பின் தொடர்ந்து சென்றான்.


"ஹலோ!!! எங்க இருக்க??? சரியா ஏழு மணிக்கு எல்லாம் மண்டபத்தில் நீ இருக்கணும்னு சொல்லிட்டு தானே வந்தேன். இப்போ மணி எட்டு இன்னும் நீ வரல. வாங்குன காசுக்கு கரெக்டா உன்னால வேலை பார்க்க முடியாதா??" என்று ஷோபா கோபமாக போனில் திட்டிக் கொண்டிருக்க


மறுமுனையில் என்ன கூறினார்களோ சிறிது நேரம் அமைதியாக நின்றாள்.


"எனக்கு அதெல்லாம் தெரியாது. இன்னும் பத்து நிமிஷத்துல நீ இங்க இருக்கணும்..." என்று விட்டு போனை கட் செய்தவள் நிமிர்ந்து பார்க்க அவள் முன்னால் விறைப்பாக நின்றான் ஸ்ரீதர்.


"நீங்க....இங்க???" என்று ஷோபா கேட்கவும்


அவளை கூர்மையாக பார்த்த ஸ்ரீதர்
"உன்னை தான் நான் இந்த கேள்வி கேட்கணும். இந்த ராத்திரி நேரத்தில் நீ தனியா இங்க என்ன பண்ணுற???" என்று கேட்க திருட்டு முழி முழித்தாள் ஷோபா.


"யாருகிட்ட இவ்வளவு கோபமாக பேசிட்டு இருந்த???" என்று ஸ்ரீதர் கேட்க அமைதியாக நின்றாள் ஷோபா.


"உன்னை தான் கேட்குறேன்...யாரு அது???" என்று ஸ்ரீதர் அதட்டலாக கேட்க


திடுக்கிட்டு அவனை பார்த்த ஷோபா
"அது என் பிரண்ட்...மேரேஜ்க்கு வரேனு சொன்னா...இன்னும் வரல அதுதான் திட்டிட்டு இருந்தேன்.." என்று கூறி விட்டு


"அம்மா தேடுவாங்க...நான் போறேன்...." என்று விட்டு அவசரமாக உள்ளே சென்றாள்.


"இவ முகமே சரி இல்லை....ஏதோ தப்பான விஷயம் ஒண்ணு நடக்கப் போகுது" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட ஸ்ரீதர் ஷோபாவை பின் தொடர்ந்து சென்றான்.


ஸ்ரீதரின் பார்வை தன் மீது இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட ஷோபா முயன்று தன் முகத்தை இயல்பாக இருப்பது போல வைத்து கொண்டாள்.


ஸ்ரீதரின் அருகில் வந்த வினித்
"என்ன ஸ்ரீ?? தனியா நின்னு யோசிச்சுட்டு இருக்க?? ஏதும் பிரச்சினையா??" என்று கேட்கவும்


அவனைப் பார்த்து ஆமென்பது போல தலை அசைத்த ஸ்ரீதர்
"எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும்...நானும் மது-அருள் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சதுல இருந்து பார்க்குறேன். ஷோபா பார்வையும் சரி இல்லை, நடவடிக்கையும் சரி இல்லை. அவளுக்கு இந்த கல்யாணம் நடக்குறதுல ஏதும் பிரச்சினையா???" என்று கேட்டான்.


"ஆமா ஸ்ரீ....அவளுக்கும் அவ அம்மாவுக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை. அருளை ஷோபாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பெரிய பூகம்பம் ரொம்ப ட்ரை பண்ணிச்சு. பட் நடக்கல..." என்று வினித் கூறவும்


"பெரிய பூகம்பமா????" என்று குழப்பமாக கேட்டான் ஸ்ரீதர்.


"ஓஹ்...ஸாரி உன் கிட்ட ஸ்டார்ட்லயே சொல்லாம விட்டுட்டேன். சுலோச்சனா பெரிய பூகம்பம், ஷோபா சின்ன பூகம்பம்" என்று வினித் கூறவும் வாய் விட்டு சிரித்தான் ஸ்ரீதர்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
"நல்ல நேம் செலக்ஷன் டா...." என்று வினித்தின் தோளில் தட்டிய ஸ்ரீதர்


"என்ன தான் இருந்தாலும் அவ சின்ன பொண்ணு தானே...அவங்க அம்மா அவளுக்கு நல்ல வழிகாட்டாம இப்படி பண்ணுறாங்களே!!!" என்று வருத்தத்துடன் கூறவும் அவனை வியப்பாக பார்த்தான் வினித்.


"என்னடா நடக்குது இங்க??? ஷோபாவுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ணுற?? என்ன விஷயம்???" என்று வினித் கேட்கவும்


வெட்கப் புன்னகை ஒன்று ஸ்ரீதர் முகத்தில் உருவாக வினித்திற்கு விடயம் புரிந்து கொண்டது.


"ஆனாலும் உனக்கு ரொம்ப தியாக மனசுடா ஸ்ரீ.....வேல் முருகன் அங்கிள்க்கு பார்ட்னரா போக போற...கங்க்ராட்ஸ்..." என்று கூறி ஸ்ரீதரின் கை பற்றி வினித் குலுக்கவும்


அவனை பார்த்து புன்னகத்து கொண்ட ஸ்ரீதர்
"மது- அருள் லைப்ல இனி எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக்கணும் வினித்....அவங்களுக்கே தெரியாம நிறைய சதி வேலைகள் நடக்கலாம்...அவங்க இரண்டு பேரும் இனியாவது சந்தோஷமாக இருக்கணும்" என்று கூறவும்


"ரொம்ப சரியா சொன்ன ஸ்ரீ...." என்று கூறினான் வினித்.


உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்க இன்முகத்துடன் அருளும், மதுவும் நின்று கொண்டிருந்தனர்.


சிறிது நேரம் கழித்து மண்டபத்தில் கீழே நின்று கொண்டிருந்த நபர்களுக்கு இடையில் சலசலப்பு கேட்க அனைவரது கவனமும் அங்கே சென்றது.


யாரோ முக்கியமான விருந்தினர்கள் வருகின்றார்களோ என்று வினித்தும், ஸ்ரீதரும் அங்கு செல்ல கூட்டத்தை விலக்கி கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தவனைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றான் ஸ்ரீதர்.


யார் வருகின்றார்கள் என்று ஆவலாக பார்த்து கொண்டிருந்த மது ஸ்ரீதரை பார்த்து சிரித்து விட்டு மேடையேறி வந்து கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்து சிலையாக நின்றாள்.


கார்த்திக்கை இதற்கு முதல் பார்த்திராத அருளோ சினேகமாக அவனை பார்த்து புன்னகக்க பதிலுக்கு கார்த்திக்கும் புன்னகத்து கொண்டான்.


கார்த்திக் தன் கையில் இருந்த கிஃப்டை மதுவிடம் நீட்ட அவளோ அதிர்ச்சியில் கண்கள் கலங்க விக்கித்துப் போய் நின்றாள்.


"என்ன மது ஷாக்காகி நிற்குற??? இந்தா கிஃப்டை வாங்கிக்கோ.." என்று அவள் கையின் மேல் கிஃப்டை வைத்தான் கார்த்திக்.


தன் முன்னால் நடப்பது எல்லாம் கனவா??நனவா?? எனப் புரியாமல் தவிப்போடு மது நின்று கொண்டிருந்தாள்.


மதுவை பார்த்து புன்னகத்து கொண்ட கார்த்திக் அருளின் புறம் திரும்பி
"பை த வே ஹெப்பி மேரிட் லைப்..." என்று அவனின் கை பற்றி குலுக்கி விட்டு


மேடையில் இருந்து இறங்கி செல்ல போக
"ஒரு நிமிஷம்..." என்று அருள் அவனை அழைத்தான்.


"நீங்க யாருனு எனக்கு ஞாபகம் இல்லையே!! தப்பா எடுத்துக்கலன உங்க பேரை நாங்க தெரிஞ்சுக்கலமா???" என்று அருள் கேட்கவும்


மதுவை பார்த்து கொண்டே
"ஐ யம் கார்த்திக்...." என்று கூறினான்.


முதலில் எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறதே என்று யோசித்த அருளிற்கு சிறிது நேரத்தின் பின்பே நினைவு வர அதிர்ச்சியாக அவனை பார்த்தான்.


இருவரது முகத்தையும் பார்த்து சிரித்துக் கொண்ட கார்த்திக் மேடையில் இருந்து இறங்கி சென்று விட ஷோபாவோ மனதிற்குள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து கொண்டாள்.


"பர்ஸ்ட் பிளான் சக்ஸஸ்...இனி எப்படி நீங்க இரண்டு பேரும்
சந்தோஷமாக இருக்குறீங்கனு நானும் பார்த்துடுறேன்...." என்று கூறி கொண்டவள் கார்த்திக்கை பின் தொடர்ந்து சென்றாள்.


ஸ்ரீதரின் தோளில் தட்டி அவனை நடப்புக்கு கொண்டு வந்த வினித்
"ஸ்ரீ....யார் அது??? ஏன் அவனை பார்த்து இப்படி ஷாக் ஆகுறீங்க???" என்று கேட்கவும்


"அவன் தான் கார்த்திக்..." என்ற ஸ்ரீதரின் பதிலில் வினித்தும் அதிர்ச்சி அடைந்தான்.


"இது என்ன புது குழப்பம்????" என்று வினித் கவலையுடன் அருளையும் மதுவையும் பார்த்து கொண்டு நின்றான்.


அருணாவோ சுவற்றில் சாய்ந்து நின்று தன்னை சமன் செய்து கொண்டிருந்தார்.


கார்த்திக் மண்டபத்தில் நுழைவதை பார்த்ததுமே அவர் இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.


"இவன் இங்கே எங்கே??? இத்தனை நாள் காணாமல் போனவன் இப்போ எதுக்கு வந்தான்??? என் பொண்ணு வாழ்க்கை இனியாவது சந்தோஷமாக இருக்கணும்னு நான் ஆசைப்பட்டனே!!! அது நடக்காது போல இருக்கே....என் பொண்ணு வாழ்க்கை...." என்று அருணாவின் மனம் தவியாக தவித்தது.


கண்களை இருட்டிக் கொண்டு வர தன் தலையில் கை வைத்தவாறே அருணா மயங்கி விழ அந்த சத்தம் கேட்டு அவசரமாக அவரருகில் அனைவரும் ஓடி வந்தனர்.


பேச்சு மூச்சின்றி கிடந்த அருணாவை தன் மடியில் வைத்து கொண்டு ஸ்ரீதர் அவர் முகத்தில் தண்ணீரை தெளிக்க சிறிதும் அசைவின்றி இருந்தார் அருணா.


"அம்மா...அம்மா...என்னாச்சு மா....எழுந்திருமா....எழுந்திருமா..." என்று கண்கள் கலங்க அருணாவின் கன்னம் தட்டி எழுப்ப மது போராடிக் கொண்டிருந்தாள்.


எல்லோரையும் தள்ளி போகும் படி கூறி விட்டு அவர் நாடித் துடிப்பை பரிசோதித்த அருள் கண்கள் கலங்க மதுவை நிமிர்ந்து பார்த்து
"அம்மா நம்மள விட்டு போயிட்டாங்க....." என்று கூற


"அம்மா.........." வீரிட்டு அழுது கொண்டே மயங்கி சரிந்தாள் மது......
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
கார்த்திக் மாதிரி ஆளுகளை பார்த்து அருணா மாதிரி நபர்கள் பயந்து உயிரை விட்டு விடுவதால்தான் அவர்கள் துணிந்து அநீதி செய்கிறார்கள் அருளுக்கு அனைத்து உண்மையும் சொல்லியாச்சு அப்புறம் என்ன ஊர் தப்பாக பேசும் உலகம் தப்பாக பேசும் என்றால் ஊரும் உலகமும் ஆபத்தில் உதவாது அதற்கு பேசதான் தெரியும் வழி சொல்ல தெரியாது அதை நினைத்து கெட்டவர்கள் பயபடாத போது நல்லவர்கள் ஏன் பயபடனும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top