• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அகிலா, கார்த்திக் வந்து சென்றது மதுவிற்கு இன்னும் கனவு போலவே இருந்தது.


விஜி, வினித், அருளின் பேச்சில் சிறிது நேரம் தன் சிந்தனைகளை மது மறந்திருந்தாலும் இரவு முழுவதும் தூங்காமல் மது அந்த சிந்தனையிலே உழன்று கொண்டிருந்தாள்.


மது புரண்டு புரண்டு படுக்கவும் அந்த அசைவில் கண் விழித்த அருள்
"என்ன மது தூங்காமல் என்ன பண்ணிட்டு இருக்க???" என்று கேட்கவும்


"ஒண்ணும் இல்லை..." என்று விட்டு மறுபுறம் திரும்பி கண் மூடி கொள்ள அருள் மதுவின் தோள் தொட்டு திருப்பினான்.


"சொல்லுடா மது....என்ன யோசனை??" என்று அருள் கேட்கவும்


விழி நிமிர்த்தி அவனை பார்த்தவள்
"உங்களுக்கு கார்த்திக்கை பார்த்து எதுவுமே தோணலயா?? அவங்க கூட கேசுவலா பேசுனீங்களே எப்படி???" என்று கேட்க வாய் விட்டு சிரித்தான் அருள்.


"இதைத் தானா மேடம் இவ்வளவு நேரமா யோசிச்சீங்க??" என்று அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டியவன்


"கார்த்திக் வந்தது எனக்கும் ஷாக் தான்...பட் வீட்டுக்கு வந்தவங்ககிட்ட முகத்தை திருப்பிட்டு இருக்க முடியுமா சொல்லு??? அது மட்டுமில்லாம கார்த்தி எனக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கான்....ஷோ அதற்காகவாவது நல்லா பேசணும் தானே???" என்று அருள் கேட்கவும்


"ஹெல்ப்பா???" என்று குழப்பமாக கேட்டாள் மது.


"ஆமா அன்னைக்கு அவன் அம்மா பேச்சை அவன் கேட்கலனா இன்னைக்கு என் மதுவை மிஸ் பண்ணிருப்பேனே...." என்ன கூற கண்கள் கலங்க அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் மது.


"ஹேய்.....உங்க அத்தை கிளம்பி போகும் போது அவங்க காதுல ஏதோ சொன்னியே என்ன சொன்ன???" என்று அருள் கேட்கவும்


அவனைப் பார்த்து புன்னகத்த மது
"உங்க மேல எனக்கு கோபம் இப்போ இல்லை....நியாயமாக பார்த்தா உங்களுக்கு நான் தாங்க்ஸ் தான் சொல்லணும்....அருளை என் கிட்ட சேர்த்ததுக்குனு சொன்னேன்" என்று கூற


"சேம் டயலாக்கா???" என்று கூறி அருள் சிரிக்க அதே புன்னகையோடு கண்ணயர்ந்தாள் மது.


இரண்டு, மூன்று வாரங்கள் சுமுகமாக கடந்து சென்றது.


அடுத்த நாள் காலை வழக்கம் போல தன் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு பூஜையையும் முடித்த மது சிறிது நேரம் தோட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.


பல வண்ண ரோஜா பூக்களுக்கு நடுவில் சிமெண்ட் மேஜை மற்றும் அதைச் சூழ நான்கு சிமெண்ட் பெஞ்ச்களும் அந்த பகுதிக்கு முழுமையாக நிழல் தரும் வகையில் முல்லை மற்றும் மல்லிகை மலர்களின் கொடி படர விடப்பட்டிருந்தது.


அந்த இடத்தை பார்த்ததுமே மதுவிற்கு ஆசை வந்து விட அங்கு சென்று அமர்ந்து கொண்டாள்.


தன் கையோடு கொண்டு வந்திருந்த இராமாயணம் புத்தகத்தை விரித்து மது படித்து கொண்டிருக்கும் போது எதிரில் நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தாள்.


சுலோச்சனா தன் பற்கள் முழுவதும் காட்டி சிரித்து கொண்டே மதுவின் எதிரில் அமர்ந்து கொள்ள மதுவிற்கோ சிறிது பதட்டம் தொற்றிக் கொண்டது.


"காலங்கார்த்தாலேயே இந்த அம்மா எதுக்கு இங்க வந்திருக்காங்க?? அதுவும் அதிசயமாக சிரிச்சுட்டு வேற வந்திருக்காங்க...எதுக்கு வம்பு நாமும் சிரிச்சு வைச்சுடுவோம்...." என்று எண்ணி கொண்டே மதுவும் பதிலுக்கு புன்னகத்து வைத்தாள்.


"இராமாயணம் படிக்குற போல...." என்று அவள் கையில் இருந்த புத்தகத்தை வாங்கி பார்த்த படியே சுலோச்சனா கேட்கவும்


ஆமென்பது போல தலை ஆட்டி விட்டு அமைதியாக இருந்தாள் மது.


"அப்புறம் உங்க அம்மா செத்து இன்னையோட எத்தனை நாள்???" என்று சுலோச்சனா கேட்க


முகம் வாட தலை குனிந்த மது
"மூணு வாரம்....." என்று கலங்கிய தன் கண்களை துடைத்து கொண்டே கூறினாள்.


"ஓஹ்......ஆனா உன்னை பார்த்தா அப்படி அம்மாவை பறி கொடுத்தவ மாதிரி தெரியலையே....புது புடவை, கழுத்து நிறைய நகை....முகத்தில் அப்படி ஒரு பொலிவு....ஏதோ இந்த வாழ்க்கைக்கு ஏங்கி கிடந்து அது கிடைச்ச பூரிப்புல இருக்குற மாதிரில இருக்கு...." என்று தன் விஷப் பேச்சை பேச மது அதிர்ச்சியாக அவரை பார்த்தாள்.


"என்ன அப்படி பார்க்குற??? உண்மையைத் தானே சொல்லுறன்....இல்லைனே கல்யாணமே வேண்டாம்னு சொன்னவ எதுக்கு அருளை திடீர்னு கட்டிக்க சம்மதிச்ச??? சொத்துக்காக தானே....அம்மாவும், மகளும் நல்லா திட்டம் போட்டு வந்து சேர்ந்தீங்கடியம்மா.....இவ அம்மா உடம்பு சரியில்லாமல் அருள்கிட்ட போய் ட்ரீட்மெண்ட் எடுப்பாங்களாம்....அதை இவ பார்த்துடுவாவாம்...அப்புறம் இவ அம்மா உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது கல்யாணத்துக்கு வாக்கு கேட்பாங்களாம்...இவங்களும் உடனே ஒத்துக்குவாங்களாம்.....நல்லா காதுல பூ சுத்துரீங்க.....அதை எல்லோருமே நம்பிட்டாங்க....ஆனா நான் நம்பமாட்டேன்...." என்றவர் சுற்றும் முற்றும் ஒரு தடவை நோட்டம் விட்டு விட்டு


"அந்த கார்த்திக் பயலை இன்னும் நீ விரும்பிட்டு இருக்குறதால தானே அவனை கல்யாணத்துக்கு வரவைச்ச....சொத்துக்காக அருள்.....உன் ஆசைக்கு அந்த கார்த்திக்கா????" என்று கேட்க


"ஸ்டாப் இட்..............." என்று தன் காதுகளை இறுக மூடிக் கொண்டு சத்தம் போட்டாள் மது.


மதுவின் சத்தத்தில் சுலோச்சனாவும் ஒரு கணம் மிரண்டு போனார்.


கண்கள் சிவக்க சுலோச்சனாவை உறுத்து விழித்த மது அவரருகில் சென்று நின்றாள்.


மதுவைப் பார்த்து திக்கித் திணறிய சுலோச்சனா
"ஏய்....எ....என்.....என்ன....எதுக்கு....இப்படி முறைச்சு பார்க்குற??? நீ என்ன பெரிய பத்தி....." என்றவரின் கன்னத்தில் இடியென இறங்கியது பத்மாவின் கரம்.


உச்சக்கட்ட அதிர்ச்சியோடு சுலோச்சனா மதுவை பார்க்க அவரை முறைத்து பார்த்த பத்மா
"இன்னொரு தடவை மதுவைப் பற்றியோ...அவ அம்மா, குடும்பத்தைப் பற்றியோ ஒரு வார்த்தை பேசுனாலும் கொன்னுடுவேன்....இத்தனை நாள் உங்க வயசுக்கு தான் மரியாதை தந்தாங்க எல்லோரும்....உங்களுக்கு இல்லை..." என்று கூற மதுவோ சுலோச்சனாவை வெறித்த வண்ணம் நின்றாள்.


"நீங்க என்ன தான் என்னை அவமானப்படுத்த ட்ரை பண்ணுணாலும் உங்களை என் அம்மா மாதிரி தான் இத்தனை நாள் நினைச்சு இருந்தேன்....ஆனா இன்னைக்கு...சே...." என்று மது கூறவும் சுலோச்சனா அமைதியாக நின்றார்.


"இப்போ சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோங்க.....கார்த்திக்கை நான் விரும்புனேனா இல்லையானு தெரியலை....ஆனா என் மனசுல அருள் மட்டும் தான் இருக்காரு.....என் வாழ்நாள் பூராவும் அவர் மட்டும் தான் இருப்பாரு.....நீங்க அருள் கிட்ட இருந்து என்னைப் பிரிக்க தான் இவ்வளவு தூரம் கஷ்டப்படுறீங்கனும் எனக்கு தெரியும்....ஆனா அது கனவுல கூட நடக்காது....நீங்க வாங்க பத்துமா...." என்று பத்மாவை
கூட்டிக்கொண்டு மது சென்று விட சுலோச்சனா திகைத்துப் போய் நின்றார்.


"பார்க்குறதுக்கு ஊமையாட்டம் இருந்துட்டு என்ன பேச்சு பேசுறா?? இதுல ஆள் வேறு வைச்சு என்ன அடிச்சுட்டலே......இது எல்லாத்துக்கும் சேர்த்து உன்னை என்ன பண்ணுறேன் பாரு...." என்று சுலோச்சனா மனதிற்குள் கருவிக் கொண்டு நின்றார்.


மதுவின் முகம் வாடி இருப்பதை பார்த்த பத்மா
"மது இங்கே பாருடா.....அந்தப் பொம்பளை ஏதோ கிறுக்குத்தனமா பேசுனா அதை நினைச்சு நீ இப்படி பீல் பண்ணலாமா சொல்லு??? அருணாவுக்கு அப்படி நடந்தது எதிர்பார்க்காத ஒண்ணு....அதற்காக நீ இப்படி கவலைப்பட்டுட்டே அவ ஆத்மா சாந்தி அடையுமா??? நீ சந்தோஷமாக வாழணும்னு தானே அருணா ஆசைப்பட்டா....அவ ஆசையை நீ நிறைவேற்ற வேண்டாமா???" என்று கேட்கவும் தலை குனிந்து அமைதியாக இருந்தாள் மது.


"இதோ பாருடா மது....நீ இது வரை கஷ்டம் எல்லாம் போதும்....இனி வரப்போகுற நாள் எல்லாம் சந்தோஷமாக இருக்கணும்....அது தான் அருணாவோட ஆசை....எங்க எல்லோருடைய ஆசையும்...." என்று கூறவும் மனம் சிறிது தெளிவுற பத்மாவின் தோள் மேல் சாய்ந்து கொண்டாள் மது.


இரண்டு, மூன்று மாதங்கள் சக்கரத்தை கட்டி கொண்டு ஓடி சென்றது.


அருள் தன் வேலைகளில் மூழ்கி விட மதுவும் வீட்டு வேலைகளில் வத்சலாவிற்கு உதவி விட்டு தன் ஆபீஸ் வேலைகளையும் கவனிக்க தொடங்கினாள்.


சுலோச்சனா மறுபுறம் தன் சதி வேலைகளில் மூழ்கி போய் இருக்க ஷோபா தன் வாழ்க்கையை எண்ணி முதல் முறை அச்சம் கொண்டிருந்தாள்.


தன் தாயை நல் வழிப்படுத்த ஒரு வாய்ப்பாவது கிடைக்காதா?? என்று ஷோபா கடுமையாக முயன்று கொண்டிருந்தாள்.


இதற்கிடையில் ஸ்ரீதரை சந்திக்க பலமுறை முயன்றும் பயன் கிட்டாது போகவே ஷோபா மிகவும் மனமுடைந்து போனாள்.


அன்று அருள் ஹாஸ்பிடல் கிளம்பி சென்று விட ஆபீஸ் செல்வதற்காக மது தயாராகி வந்து வத்சலாவிடம் கூறி விட்டு புறப்பட்டு சென்றாள்.


மது செல்வதைப் பார்த்து கொண்டு நின்ற சுலோச்சனா தன் போனை எடுத்து யாரிடமோ தீவிரமாக பேசிக் கொண்டு அவரது வீட்டிற்குள் சென்றார்.


எதிரில் வந்த ஷோபாவை கவனிக்காது அவளின் மேல் மோதி நின்ற சுலோச்சனா கோபமாக ஷோபாவை திட்டி விட்டு செல்ல குழப்பமாக அவரைப் பார்த்து கொண்டு நின்றாள் ஷோபா.


"என்னாச்சு இந்த அம்மாவுக்கு??? அவங்க போன் பேசிட்டு வந்து என் மேல மோதிட்டு என்னைத் திட்டிட்டு போறாங்க??? வர வர இந்த அம்மாவுக்கு என்ன பண்ணுறோம்னே தெரிய மாட்டேங்குது...." என்று முணுமுணுத்துக் கொண்டே தன் காரை எடுத்துக்கொண்டு ஷோபா வெளியேறி சென்றாள்.


காரை நேராக அருளின் ஹாஸ்பிடலுக்கு செலுத்தியவள் காரை பார்க் செய்துவிட்டு தன் போனை எடுத்து அருளுக்கு அழைப்பை மேற்கொண்டாள்.


"ஹலோ....ஷோபா.....என்ன அதிசயமாக இருக்கு??? போன் எல்லாம் பண்ணிருக்க....கல்யாணத்துக்கு அப்புறம் அம்மணியை காணவே இல்லை....ரொம்ப பிஸி ஆகிட்டீங்களோ???" என்று அருள் கேட்கவும்


சிறிது நேரம் அமைதியாக இருந்த ஷோபா
"அத்தான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.....உங்க ஹாஸ்பிடலுக்கு வெளியில் தான் இருக்கேன்....இப்போ நீங்க ப்ஃரீயா???" என்று கேட்டாள்.


"ஒரு வன் அவர் வெயிட் பண்ண முடியுமா ஷோபா??? ரவுண்ட்ஸ் போகப் போறேன்....போயிட்டு வந்துடுறேன்...." என்று அருள் கூறவும்


"சரி அத்தான்....நான் கேன்டீனில் வெயிட் பண்ணுறேன்..." என்று விட்டு போனை வைத்த ஷோபா கேன்டீனில் சென்று அமர்ந்து கொண்டாள்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சரியாக ஒரு மணி நேரம் கழித்து வந்த அருளை பார்த்து புன்னகத்தவாறு எழுந்து
நின்றாள் ஷோபா.


"ஹே....உட்காரு ஷோபா....மரியாதை எல்லாம் மனசுல இருந்தா போதும்..." என்று கூறியவாறே ஷோபாவின் எதிரில் அருள் வந்து அமர்ந்தான்.


ஐந்து நிமிடங்கள் தாண்டி சென்றும் ஷோபா அமைதியாக இருக்கவும்
"என்ன ஷோபா ஏதோ பேசணும்னு சொல்லிட்டு அமைதியாக இருக்க???." என்று அருள் கேட்கவும் கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஷோபா.


"ஹேய் ஷோபா!!!!! என்னம்மா ஆச்சு???" என்று அருள் கேட்கவும்


அவன் கைகளை பிடித்து கொண்ட ஷோபா
"நான் தப்பு பண்ணிட்டேன் அத்தான்.....தப்பு பண்ணிட்டேன்....." என்றவாறு அவன் கைகளில் முகம் புதைத்து அழவும் குழப்பமாக அவளைப் பார்த்தான் அருள்.


"ஸ்டாப் இட் ஷோபா....சின்ன பொண்ணாட்டம் கண்ணை கசக்கிட்டு இருக்க...முதல்ல கண்ணைத் துடை....என்ன உன் பிரச்சினை???தெளிவாக சொல்லு..." என்று அருள் சிறிது அதட்டலாக கேட்கவும்


தன் கண்களை துடைத்து கொண்ட ஷோபா
"நான் சொல்லப் போற விஷயத்தை நீங்க எப்படி எடுத்துப்பீங்கனு தெரியலை அத்தான்....ஆனா கண்டிப்பாக கோபப்படுவீங்க....நான் புல்லா சொல்லி முடிக்குற வரை கேட்பீங்கனு பிராமிஸ் பண்ணுங்க" என்று தன் கையை நீட்ட


"சரி பிராமிஸ்.....இப்போ சொல்லு" என்று கூறினான் அருள்.


"சின்ன வயசுல இருந்தே நான் எப்படினு உங்களுக்கு தெரியும் தானே அத்தான்....அம்மா பேச்சு தான் எனக்கு வேதவாக்கு.....அவங்க சொல்லுற எல்லாத்தையும் கண்ணை மூடிக்கிட்டு பண்ணிடுவேன்...சரியா தப்பானு யோசிக்கமாட்டேன்
அப்படி என் அம்மா என் மனசுல பதிய வைச்ச ஒரு விஷயம் நீங்க...நான் என் வீட்டில் இருந்த நேரத்தை விட உங்க வீட்ல இருந்த நேரம் தான் அதிகம்....அதனால என்னவோ தெரியல உங்க மேல ஒரு அட்ராக்ஷன் வந்துச்சு....பட் அது ஜஸ்ட் அட்ராக்ஷன் தான்....அதை புரிஞ்சுக்கவே எனக்கு இத்தனை வருஷம் போயிடுச்சு" என்று வேதனையோடு நிறுத்திய ஷோபா


தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டு அருகில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்து கொண்டாள்.


"எனக்கு நல்லது சொல்லித் தர வேண்டிய என் அம்மா என்னை கவனிக்கவே இல்லை....அவங்களுக்கு எப்பவுமே பணம் தான் முக்கியம் மனுஷங்க இல்லை....உங்களை என் மனசுல பதிய வைச்சதும் அந்த பணத்துக்காக தான்....அது புரியாமல் நானும்...." என்று தன் முகத்தை மூடிக் கொண்டு தேம்பி தேம்பி அழுதவள் மது- அருளின் திருமணம் வரை தான் செய்த எல்லாக் காரியங்களையும் கூற முகம் இறுக அவள் சொல்வதை கேட்டு கொண்டு இருந்தான் அருள்.


"கார்த்திக் வந்து பேசுனதோ, அடிச்சதோ எனக்கு இதை புரிய வைக்கல....ஸ்ரீதரோட ஒதுக்கம் தான் என்னோட தப்பை எல்லாம் எனக்கு புரியவைச்சது....இத்தனை நாள் உங்க யார் முகத்திலும் முழிக்க தகுதி இல்லாமல் தான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு இருந்தேன். ஆனா எங்க அம்மா உங்களையும், மதுவையும் எப்படியாவது பிரிச்சே தீரணும்னு கங்கணம் கட்டிட்டு திரியுறாங்க. மது கிட்ட எனக்கு இதெல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்க தகுதி இருக்கானு தெரியல. ஆனா உங்க கிட்ட எல்லாமே சொல்லணும்னு தோணுச்சு. அதனால தான் புறப்பட்டு வந்தேன்" என்று ஷோபா கூறவும் அமைதியாக அவளையே வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தான் அருள்.


"அ...அத்...அத்தான்...." என்று ஷோபா அழைக்கவும்
நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவாறு நிமிர்ந்து அமர்ந்த அருள்


"எனக்கு விஜி எப்படியோ அப்படி தான் நீயும்....இதில் முழுமையாக உன்னை குறை சொல்ல முடியாது தான்...எப்போ நீ செஞ்ச தப்பை எல்லாம் உணர்ந்தியோ அப்போவே நீ ஒரு மனுஷனா மாறிட்டே....நீ எதையும் நினைச்சு இனி பீல் பண்ணாதே....உங்க அம்மா என்ன எவ்வளவு பெரிய அப்பாடக்கரே வந்தாலும் என்னையும், மதுவையும் பிரிக்க முடியாது. சரி நான் கிளம்புறேன்" என்று விட்டு எழுந்தவன்


"தயவு செய்து என் கல்யாணத்துல பண்ணுண மாதிரி முட்டாள் தனமான எந்த வேலையும் இனி பண்ணிடாதே!!! நான் எப்போதும் இப்படி பொறுமையாக இருக்க மாட்டேன்" என்று கூறி விட்டு இரண்டு அடி எடுத்து வைத்தவன் எதிரில் நின்றவர்களைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றான்.......
 




Jananisudhakar

நாட்டாமை
Joined
Apr 18, 2018
Messages
95
Reaction score
327
Location
Singapore
Nuce ud husna sis. Shoba ippovathu avanga ammava pathi purunjukittale. Antha sulochanava oru vazhli pannidunga sis. Eppo paaru kettathu pattite irukanga. Arul pinnadi ninnathu yaaru. Next ud seekram kudunga
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top