• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Azhagiye marry me.....-25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி!!!!!IMG_20181023_203835.png
"என்ன அது????" என்று அனைவரும் கோரஸாக கேட்கவும் தன்னுடைய திட்டத்தை அனைவரிடமும் விலாவாரியாக கூறினாள் ஷோபா.


அருள்,விஜி மற்றும் வினித் மூவரும் ஷோபாவின் திட்டத்தை ஏற்றுக் கொள்ள மதுவும், ஸ்ரீதரும் அமைதியாக இருந்தனர்.


மது அமைதியாக இருப்பதைப் பார்த்த அருள்
"என்ன மது??? சைலண்டா இருக்க??" என கேட்க


"இது சரி வருமா?? சுலோச்சனா ஆன்டி மனசு கஷ்டப்படாதா??" என்று மது கேட்கவும்


ஸ்ரீதரை தவிர அனைவரும் அவளை விநோதமாக பார்த்தனர்.


"என்ன மது விளையாடுறியா?? அவங்களுக்கு எப்படி சொன்னாலும் புரியப் போறது இல்ல....சரி நீ சொல்லு. அவங்களை திருந்தி வாழ வைக்க வேற ஏதாவது வழி இருக்கா??...." என்று அருள் கேட்கவும்


சிறிது நேரம் யோசித்து பார்த்த மது மறுப்பாக தலை அசைத்தாள்.


"அப்போ இந்த வழியை விட்டா வேற வழி இல்லை மது...அவங்களை அவங்க வழியில் போய் தான் திருத்தி ஆகணும்..." என்று வினித் கூறவும்


குழப்பத்தோடு அவர்கள் பேசுவதை பார்த்து கொண்டிருந்தாள் மது.


அத்தனை நேரமும் அவர்கள் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதர்
"ஆமா மது....இதை விட்டால் வேறு வழி இல்லை" என்று கூற முற்றிலும் குழம்பி போனாள் மது.


சிறிது நேரம் கண் மூடி அமைதியாக இருந்த மது சிறிது நேரத்தின் பின் புன்னகத்து கொண்டே கண் திறந்து
"ஓகே அருள்....நீங்க சொல்றது போலவே பண்ணிடலாம்...." என்று கூற அனைவரும் சந்தோஷமாக சிரித்து கொண்டனர்.


எப்படி இந்த திட்டத்தை ஆரம்பிப்பது என்று அனைவரும் கலந்தாலோசித்து விட்டு விடைபெற்று செல்ல மதுவும், அருளும் சிறிது நேரம் அங்கேயே இருந்து வருவதாக கூறினர்.


அங்கிருந்த ஒரு பெஞ்சில் மதுவும், அருளும் அமர்ந்திருந்தாலும் அவர்கள் இருவரிடையேயும் ஒரு கனத்த அமைதி நிலவியது.


மது அமைதியாக இருப்பதைப் பார்த்த அருள்
"என்ன மது?? எனி ப்ராப்ளம்??" என்று கேட்க


இல்லை என்பது போல தலை அசைத்தவாறே
அவன் தோள் மேல் கண் மூடி சாய்ந்து கொண்டாள் மது.


பின்னர் சிறிது நேரம் கழித்து கண் திறந்து பார்த்த மது
"எல்லாம் சரியாக போயிட்டு இருக்கு அருள்....இப்படியே எல்லாம் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்லே..." என்று கேட்க


"ஹ்ம்ம்ம்ம்.....கரெக்ட் தான்.....பட் அத்தை.....பாவம் மது ஷோபா அவ இப்படி எமோசனலா பேசி நான் பார்த்ததே இல்லை....அவ கொஞ்சம் திமிரானவ தான்...ஆனா அத்தை அவளை மொத்தமாக கெட்டவளா மாத்திட்டாங்க....சின்ன வயசுல இருந்து அவளை பார்த்து வளர்ந்திருக்கேன்....யாருக்காகவும் எதையும் அவ்வளவு சீக்கிரம் விட்டு கொடுக்க மாட்டா....ஆனா இன்னைக்கு....இப்போ தான் அவளுக்கு சுயபுத்தி வந்திருக்கு...அதுவும் காதலினால்...." என்று அருள் கூற ஆமோதிப்பாக தலை அசைத்தாள் மது.


"காதல் ஒரு மாயை அருள்....அது சட்டென்று வந்து விடும்....வந்தால் நிச்சயம் நம்மளை டோட்டலா மாற்றி விடும்...பட் அந்த மாயை தான் வாழ்க்கை பூரா சந்தோஷத்தை அள்ளி தரும். என்னோட அருள் என்னை சந்தோஷமாக பார்த்துக்குற மாதிரி....." என்று மது கூற
புன்னகையோடு அவள் நெற்றியில் இதழ் பதித்தான் அருள்.


"இன்னைக்கு என்ன நாள் மது??? இந்த நல்ல நாளை இப்படி பேசி வேஸ்ட் பண்ணணுமா சொல்லு??" என்று மதுவின் காதில் மெல்லிய குரலில் கேட்கவும்


"வேற என்ன பண்ணணும் மிஸ்டர்.அருள் வேந்தன்??" என்று மது நக்கலாக கேட்க


"ஓஹோ.....மேடம் புஃல் பார்ம்ல இருக்காங்க போல....." என்று உல்லாசமாக விசிலடித்தான் அருள்.


"என்ன பேசணும், என்ன பண்ணணும் எல்லாம் வீட்டுக்கு போய் சொல்றேன்....இப்போ கிளம்பலாமா??" என்று எழுந்து நின்று கொண்டு அருள் தன் கையை நீட்ட இதழில் தவழ்ந்த புன்னகயோடு அவன் கை மேல் தன் கையை மது வைத்து எழுந்து நின்றாள்.


வீட்டிற்கு வந்து சேரும் வரை அருளின் பார்வை மதுவை சீண்ட சீண்ட அந்தி வானமாக சிவந்து போனாள் மது.


வீட்டினுள் நுழைந்தது முதல்
இரவுணவு சாப்பிட்டு முடியும் வரை அருளின் கையில் அகப்படாமல் மது அருளிற்கு போக்கு காட்டிக் கொண்டு இருக்க அருளும் மனதிற்குள் சிரித்துக் கொண்டே அவளது விளையாட்டை ரசித்து கொண்டிருந்தான்.


அருள் மதுவின் வருகையை எதிர்பார்த்து அறையில் காத்து இருக்க மதுவோ கடும் யோசனையோடு தன் நகத்தை கடித்து கொண்டு அறை வாயிலில் கதவில் சாய்ந்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள்.


ஒரு மணி நேரமாகியும் மது அறைக்குள் வராமல் இருக்க குழப்பம் அடைந்த அருள் அறையில் இருந்து வெளியே வருவதற்காக அறைக் கதவை திறக்க கதவின் மேல் சாய்ந்து நின்ற மது அருளின் மேல் சரிந்து வீழ்ந்தாள்.


ஒருவரை ஒருவர் எதிர்பார்க்காத அருளும், மதுவும் அதிர்ச்சியாக பார்த்து கொண்டு நிற்க முதலில் தன்னை சுதாரித்துக் கொண்ட மது அவனிடம் இருந்து சட்டென்று விலகி நின்றாள்.


மது மாட்டி கொண்டு விட்டோமே என்று திருதிருவென்று விழித்து கொண்டு நிற்க சிறு குழந்தை போல தெரிந்த தன் மனைவியை பார்த்து வாய் விட்டு சிரித்தான் அருள்.


அருள் சிரிப்பதைப் பார்த்து முறைத்து கொண்டு அவனை தாண்டி செல்லப் போன மதுவின் கைகளை பிடித்து அருள் அவளை போக விடாமல் தடுத்தான்.


இதயம் தடதடக்க தவிப்போடு மது அருளை திரும்பிப் பார்த்தாள்.


மதுவின் தவிப்பை ரசித்தவனாக அவளை சீண்டிப் பார்க்கும் எண்ணத்தோடு அருள் அவளை நெருங்கி நின்றான்.


வெட்கம் பிடுங்கி தின்ன அருளை நிமிர்ந்து பார்க்க தைரியம் இன்றி அவன் மேல் பூமாலையாக சாய்ந்து கொண்டாள் மது.


சீண்டும் எண்ணம் மறைந்து போக
மெல்ல மதுவின் முகத்தை நிமிர்த்திய அருள் அவள் மூடிய விழிகளில் தன் இதழ்களை பதித்தான்.


மெல்ல மெல்ல அவன் இதழ்கள் அவள் முகமெங்கும் கவி பாட பெண்ணவள் மொத்தமாக தன் வசம் இழந்தாள்.


இறுதியில் அவன் இதழ்கள் அவள் இதழ்களில் இளைப்பாற அவர்கள் பல வருட காத்திருப்பு இனிதாக அடுத்த கட்டத்திற்கு சென்றது.


அடுத்த நாள் காலை விடியல் அனைவருக்கும் இனிதாக சந்தோஷமாக விடிந்தது.


தன் அருகில் கண் மூடி தூங்கி இருந்த மதுவை பார்வையாலேயே ரசித்து கொண்டிருந்த அருள் கடிகாரத்தில் நேரத்தை பார்த்து விட்டு எழுந்து அமர்ந்து கொண்டான்.


ஏற்கனவே அவர்கள் திட்டமிட்ட படி
தன் போனை எடுத்து அனைவருக்கும் "மிஷன் ஸ்டார்ட்" என்று குறுஞ் செய்தி ஒன்றை அனுப்பி விட்டு அருள் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.


குளித்து தயாராகி வந்த அருள் அசந்து தூங்கும் மதுவின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு வத்சலாவிடமும் சொல்லி விட்டு தன் பைக்கை எடுத்து கொண்டு வெளியேறி சென்றான்.


அருளின் குறுஞ் செய்தி கிடைத்ததும் ஷோபா தன்னுடைய போனை எடுத்து தன் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செவ்வனே செய்து முடித்தாள்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
மெல்ல தூக்கம் கலைந்து கண் விழித்த மது அருகில் திரும்பி பார்க்க அருளைக் காணாமல் போகவும் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.


அறையை சுற்றிலும் நோட்டம் விட்ட மது அருளை காணாது கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்த பின்பே
"அய்யய்யோ....." என்றவாறே அடித்துப் பிடித்து கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.


அவசரமாக குளித்து தயாராகி வந்த மது கீழே வத்சலாவைத் தேடி ஓட்டமும் நடையுமாக சென்றாள்.


மதுவைப் பார்த்து புன்னகத்த வத்சலா
"என்னடா மது ரொம்ப டயர்டா??? அசந்து தூங்கிட்டே போல...." என்று கேட்க


என்ன சொல்வது என்று புரியாமல் "அது....அது...." என்று தவிப்பு பாதி, வெட்கம் பாதி என்று தடுமாறிய வண்ணம் நின்றாள் மது.


மதுவின் தடுமாற்றத்தைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட வத்சலா எல்லாம் புரிந்து விட மதுவின் அருகில் வந்து திருஷ்டி கழித்து விட வெட்கத்தோடு புன்னகத்து கொண்டாள் மது.


"அவர் எங்கே அத்தை???" என்று மது தன் வெட்கத்தை மறைத்து கொண்டே கேட்கவும்


"வெளியில் ஏதோ வேலைனு கிளம்பி போயிட்டான்மா...." என்று வத்சலா கூற


"ஓஹ்...சரி அத்தை...." என்று
அவரோடு பேசிக் கொண்டே சமையல் வேலையில் மூழ்கி போனாள் மது.


சுலோச்சனா காலையில் எழுந்து தன் அன்றாட அலங்காரங்களை எல்லாம் முடித்து விட்டு படியிறங்கி ஹாலுக்கு வந்தார்.


சுலோச்சனா வருவதைப் பார்த்ததும் ஷோபாவிற்கு சிறிது அச்சமும், படபடப்பும் தொற்றிக் கொண்டாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு சுலோச்சனாவின் முன்னால் ஷோபா வந்து நின்றாள்.


"என்ன அதிசயமாக சிரிச்சுட்டு வந்து நிற்குற?? ஏதோ திருந்திட்டேன்....என்னையும் திருத்தப் போறேனு டயலாக் எல்லாம் விட்ட....அதெல்லாம் நடக்காதுனு இப்போ தான் புரிஞ்சுதா???" என்று சுலோச்சனா கேட்கவும்


அவரைப் பார்த்து சிரித்துக் கொண்ட ஷோபா
"எல்லாம் நடக்கும்மா....காலம் எல்லாவற்றையும் மாற்றும்....சரி வா சாப்பிடலாம்" என்று கூறி விட்டு முன்னே செல்ல சுலோச்சனாவும் அவளைப் பின் தொடர்ந்து சென்றார்.


மேஜை மேல் இருந்த அனைத்து உணவுகளும் சுலோச்சனாவிற்கு பிடித்த உணவுகளாகவே இருக்க ஆச்சரியமாக பார்த்து கொண்டே சென்று அமர்ந்தார் சுலோச்சனா.


ஷோபா ஒவ்வொரு உணவாக சுலோச்சனாவிற்கு பார்த்து பார்த்து பரிமாற ஷோபாவின் நடவடிக்கைகள் சுலோச்சனாவிற்கு புரியாத புதிராக இருந்தது.


நன்றாக வயிறு முட்ட சாப்பிட்டு முடித்த சுலோச்சனா கால் நீட்டி வாகாக அமர்ந்த வண்ணம் டிவியை ஆன் செய்து பார்த்து கொண்டிருந்தார்.


ஷோபா தடதடக்கும் தன் இதயத்தை நீவிக் கொண்டே வாசலை பார்ப்பதும் சுலோச்சனாவைப் பார்ப்பதுமாக நின்று கொண்டிருந்தாள்.


வாசலில் வேல்முருகனின் கார் வந்து நிற்கவும்
"அம்மா...அப்பா வந்துட்டாங்க..." என்றவாறே ஷோபா அவசரமாக வாசலை நோக்கி ஓடி சென்றாள்.


"அவர் வந்தா அதுக்கு இப்போ என்ன பண்ணணும்?? " என்று முணுமுணுத்துக் கொண்டே சுலோச்சனா டிவியில் மீண்டும் மூழ்கி போனார்.


வேல்முருகன் ஷோபாவைப் பார்த்து புன்னகத்து கொண்டே காரின் மறு பக்க கதவைத் திறந்து விட நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கி நின்றார்.


வேல்முருகன் அந்த பெண்ணின் அருகில் வந்து அவர் கை பிடித்து அழைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றார்.


"அம்மா....அம்மா....." என்று சத்தமிட்டு கத்தி கொண்டே ஷோபா சுலோச்சனா அருகில் ஓடி வர


"எதுக்கு இப்படி கத்துற ஷோபா??" என்று சலிப்போடு எழுந்து நின்ற சுலோச்சனா வேல்முருகனையும் அவரருகில் இருந்த பெண்ணையும் குழப்பமாக பார்த்து கொண்டு நின்றார்.


"என்னங்க இது??? யாரு இவங்க???" என்று சுலோச்சனா கேட்கவும்


தன் கண்களை ஒரு முறை இறுக மூடி திறந்த பின்பு
"இவ நேத்ரா...இனிமேல் இந்த வீட்டு எஜமானி..." என்று வேல்முருகன் கூற


"என்ன????????" என்று அதிர்ந்து போய் நின்றார் சுலோச்சனா........
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top