• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் நன்றி:love::love::love:


கதையின் போக்கு நன்றாக இருந்தாலும் இல்லைனாலும் தயங்காமல் உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கள்;);):p:p
Nazriya-Nazim-Photos-Hd-Wallpapers-4.jpg
Nivin.jpg
ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போன்று தன் அன்றாட வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வெளியில் செல்வதற்காக தயாராகி வந்த மதுவை பார்த்து அருணா


"என்ன மது??ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் வீட்டுல நீ ப்ஃரீயா இருக்குறதே. இன்னைக்கும் உனக்கும் வேலை வந்துடுச்சா?" என்று கேட்கவும்


"இன்னைக்கு ஒரு கஸ்டமருக்கு டிசைன்ஸ் காட்டுறதுக்கு வர சொல்லி இருந்தாங்கமா. ஒரு விஷயம் தெரியுமா? இந்த ஆர்டர் தந்திருக்குறவங்க ரொம்ப பெரிய இடம். இந்த ஆர்டரை நான் கரெக்டா பண்ணி கொடுத்துட்டேன்னா நம்ம பிரச்சினை பாதி குறைஞ்சிடும்மா" என்று கூறினாள் மது.


"பணக்காரங்கனு வேற சொல்ற எதுக்கும் பார்த்து நடந்துக்க மது" என்று அருணா கூறவும்


"அதெல்லாம் ஒரு பிரச்சினையும் வராம நான் சமாளிச்சுக்குறேன் அருணா. யூ டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி.." என்று மது கூறி சிரிக்க


"அடி கழுதை! பேர் சொல்லியா கூப்பிடுற" என்று அவள் முதுகில் செல்லமாக தட்டினார்.


"நான் வர்ற வரைக்கும் காத்துட்டு இருக்காம நேரத்துக்கு சாப்பிடுமா" என்று விட்டு மது வெளியேறி சென்றாள்.


பேரூந்து நிலையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த மது தன்னுடைய போனை எடுத்து ஸ்ரீதருக்கு அழைத்தாள்.


மூன்று, நான்கு முறை முழுமையாக ரிங் போய்க் கொண்டே இருந்தது ஆனால் ஸ்ரீதர் போனை எடுக்கவில்லை.


"எங்க போனான் இந்த ஸ்ரீ? நேத்து நைட் அத்தனை வாட்டி போன் பண்ணி, மெசேஜ் பண்ணி சொல்லியும் இந்த தடியனைக் காணோம்" என்று ஸ்ரீதரை திட்டிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தாள் மது.


அப்போது ஸ்ரீதரிடம் இருந்து மதுவிற்கு போன் வரவும் போனை அட்டன்ட் செய்து காதில் வைத்த மது சரமாரியாக அவனை திட்டத் தொடங்கினாள்.


"எருமை ஸ்ரீ எங்கடா போய் தொலைஞ்ச? தடியா! நேத்து எத்தனை வாட்டி உனக்கு சொன்னேன்? இன்னைக்கு லோகநாதன் ஸார் வீட்டுக்கு போகணும்னு. எருமை உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையா? ஆள் தான் பறங்கி மலையாட்டம் வளர்ந்துருக்க. அறிவு வளர்ந்திருக்கா பாரு" என மது பேசிக் கொண்டிருக்க மறுமுனையில் ஸ்ரீதர் சத்தம் போட்டு சிரிக்கத் தொடங்கினான்.


"உன்னை இவ்வளவு திட்டுறேன் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம சிரிக்குற?" என மது கேட்கவும்


"நான் உன்னோட பிரண்ட் மது. அப்புறம் எப்படி என்கிட்ட நீ அறிவை எதிர்பார்க்கலாம்?" என்று ஸ்ரீதர் எதிர்க் கேள்வி கேட்டான்.


"அய்யே!! ஓவரா மொக்கை போடாதே! எங்கே இருக்க ஸ்ரீ? நீ வர்றியா? இல்லையா?" என மது கேட்கவும்


"நான் பாண்டிச்சேரில இருக்கேன் மது" என ஸ்ரீதர் கூற


"பாண்டிச்சேரியா??" என அதிர்ச்சியாக கேட்டாள் மது.


"அங்கே எதுக்குடா இன்னைக்கு போன?" என மது கேட்கவும்


"நான் இரண்டு நாளா பாண்டிச்சேரில தான் இருக்கேன் மது" எனக் கூறினான் ஸ்ரீதர்.


"இன்னைக்கு காலையில எப்படியாவது வந்துடலாம்னு தான் பார்த்தேன். கொஞ்சம் தூங்கிட்டேன். இப்போவே ரெடி ஆகி வரேன்" என்று ஸ்ரீதர் கூறவும்


"இப்போ ரெடி ஆகி வந்து எத்தனை மணிக்கு இங்க வந்து சேரப் போற? நீ பாண்டிச்சேரிக்கு எதுக்கு போயிரப்பேனு தெரியும். தண்ணி வண்டி!! நீ நாளைக்கு ஆபீஸ்க்கு வா உனக்கு இருக்கு" என்று விட்டு போனை கட் செய்தாள் மது.


செல்லும் வழி முழுவதும் ஸ்ரீதரைத் திட்டிக் கொண்டே லோகநாதனின் வீட்டை வந்து சேர்ந்தாள் மது.


வாயிலில் நின்ற செக்யூரிட்டிமதுவைப் பார்த்து
"நீங்க யார்?" என்று கேட்கவும்


"நான் அருணா வெடிங் பிளானர்ஸ்ல இருந்து வரேன். ஸாரோட டாட்டர் மேரேஜ் விஷயமாக பேச ஸார் இன்னைக்கு வீட்டுக்கு வர சொல்லி இருந்தாரு" என்று மது கூறினாள்.


"ஆமா ஆமா ஸார் சொல்லி இருந்தாரு. உள்ளே வாங்கமா" என்று கேட்டைத் திறந்து விட உள்ளே நுழைந்த மது அந்த வீட்டைப் பார்த்து வாயடைத்துப் போய் நின்றாள்.


இது நாள் வரை கதைகளிலும், திரைப்படங்களிலுமே இவ்வாறான வீட்டை மது பார்த்திருக்கிறாள்.


mansion en Sarasota.jpg

image.jpg
அரண்மனை போன்ற தோற்றத்தில் அந்த வீடு அமைக்கப்பட்டிருந்தது.
அந்த வீட்டைச் சூழ பல வர்ணங்களில் பூ மரங்கள் வைக்கப்பட்டு அது வீட்டு தோட்டமா? இல்லை பூங்காவா? என்று யோசிக்குமளவில் இருந்தது.


திரும்பும் பக்கமெங்கும் வேலையாட்கள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர்.


தயங்கி தயங்கி ஒவ்வொரு இடமாக பார்த்தபடி மது வருவதைப் பார்த்த லோகநாதன் வெளியேறி வந்து
"வாம்மா எப்படி இருக்க? ஸ்ரீதர் தம்பி வரலயா?" என்று கேட்கவும்


"நான் நல்லா இருக்கேன் அங்கிள். ஸ்ரீதருக்கு ஒரு சின்ன வேலை. அதனால அவனால வர முடியாம போயிடுச்சு" என்று கூறினாள்.


"உள்ளே வாம்மா.." என்று லோகநாதன் வீட்டினுள் செல்ல அவரைப் பின் தொடர்ந்து சென்றாள் மது.


வீட்டின் வெளித் தோற்றத்தைப் பார்த்து முற்றாக அசந்து போயிருந்த மது வீட்டின் உள் தோற்றத்தைப் பார்த்து கண் இமைக்கவும் மறந்து போனாள்.


தன் வீட்டை ஒரு முறை எண்ணி பார்த்து கொண்டாள் மது.


ஒரு குடும்பம் தங்கி இருக்கக் கூடிய அளவில் அவர்கள் வீடு அமைக்கப்பட்டிருக்க வீட்டை சுற்றி சிறியளவிலான தோட்டம்.


அவ்வளவே மதுவின் வீடு அதை எண்ணிக் கொண்டவள் வீட்டை சுற்றி
பார்த்தவாறே
"இவ்வளவு பெரிய பணக்காரங்க நம்ம கிட்ட ஆர்டர் தந்திருக்காங்க. கண்டிப்பா இந்த ஆர்டரை சரியாக அவங்க எதிர்பார்க்காத அளவு சிறப்பாக முடிச்சு கொடுத்துறனும்" என்று எண்ணி கொண்டே மது
நடந்து சென்றாள்.


"இப்படி உட்காருமா மது.."
என்று கூறிய லோகநாதன்


"லக்ஷ்மி..." என்று அழைக்க ஒரு நடுத்தர வயது பெண்மணி பவ்வியமாக வந்து அவர்களின் முன் நின்றார்.


"அம்மாவையும் விஜியையும் கூட்டிட்டு வா.." என்று லோகநாதன் கூற


"சரிங்க ஐயா..." என்று விட்டு சென்றவர் சிறிது நேரத்தில் வத்சலாவையும், விஜியையும் அழைத்து வந்தார்.


அவர்கள் இருவரையும் பார்த்து மது எழுந்து நின்று கொள்ள
"பரவாயில்லைமா உட்காரு" என்று கூறியபடி வந்து அமர்ந்தார் வத்சலா.


மதுவின் அருகில் வந்து அமர்ந்து கொண்ட விஜி
"அம்மா இவங்க ரொம்ப அமைதியா, அழகா இருக்காங்கலே! எனக்கு இவங்கள ரொம்ப புடிச்சுருக்கு" என்று கூறி மதுவின் தோள் மேல் கை போடவும் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டாள் மது.


"உங்க பேரு என்ன?" என்று விஜி கேட்கவும்


"மதுமிதா" என்று மது கூற


"உங்க பேர் கூட உங்கள
மாதிரியே அழகாக இருக்கு" என்று கூறினாள் விஜி.


"ஒரு ஆள் சிக்கிட்டா போதும். வைச்சு செஞ்சிடுவியே" என்றவாறு வினித் வரவும் அவனை பார்த்த மது


"இவர இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்துருக்கேனே??" என்று யோசித்து பார்த்தாள்.


ஆனால் எதுவும் ஞாபகம் வராமல் போகவே அந்த எண்ணங்களை எல்லாம் ஒதுக்கி வைத்தாள்.


"வாப்பா வினித் இன்னும் அவன் திருச்சியில் இருந்து வரலயா?" என்று வத்சலா கேட்கவும்


"சென்னைகிட்ட ரீச்சாகிட்டேனு இப்போ தான் போன் பண்ணுணான். அது தான் நான் கிளம்பி வந்தேன் அத்தை" என்று கூறினான் வினித்.


விஜியின் அருகில் அமர்ந்திருந்த மதுவைப் பார்த்து கொண்டே வந்தமர்ந்த வினித்
"இது....." என்று மனதில் கேள்வி எழுப்ப


"அப்போ அங்கிள் இப்போ டிசைன்ஸ் பார்க்கலாமா?" என்று மதுவின் கேள்வியில் தன் மனதுக்குள் எழுந்த கேள்வியை மறந்து போனான்.


"ஓகே மது ஸ்யூர்..." என்று விஜி குதூகலமாக கூறி கொண்டு மதுவின் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டாள்.


ஆல்பத்தில் இருந்த ஒவ்வொரு டிசைன்களாக எல்லோரும் பார்த்து கொண்டிருக்க மதுவின் மறு புறம் வந்து கொண்டார் வத்சலா.


"மதுமிதா தானே உன் பெயரு? உன் அம்மா அப்பா எல்லாம் என்ன பண்ணுறாங்கமா?" என்று வத்சலா கேட்கவும்


சிறிது முகம் வாட்டமடைந்த மது
"அப்பா இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாரு ஆன்டி. அம்மாவும், நானும் தான் வீட்ல இருக்கோம்" என்று கூற


அவள் கைகளை ஆதரவாக பற்றிய வத்சலா
"ஸாரி மா...." என்று கூறினார்.


"பரவாயில்லை ஆன்டி" என்று மது கூறவும்


"உங்க எல்லாருக்கும் சுடச்சுட காபி போட்டு கொண்டு வரேன்" என்று எழுந்து சென்ற வத்சலாவை வியப்பாக பார்த்தாள் மது.


மதுவின் முக மாற்றத்தை கவனித்த லோகநாதன்
"என்ன தான் வீட்ல வேலை செய்ய வேலைக்காரங்க நிறையப் பேர் இருந்தாலும் சமையல் வேலையை மட்டும் நான் தான் பண்ணுவேனு உறுதியாக வத்சலா சொல்லிட்டா" என்று கூறவும்


"உங்களுக்கு எப்படி அங்கிள் நான் என்ன நினைச்சேன்னு தெரியும்?" என்று மது கேட்க


"எங்க வீட்டுக்கு புதுசா வர்ற எல்லாரும் இந்த கேள்வியை என்கிட்ட கேட்காம போனதே இல்ல"
என்று கூறிய லோகநாதனைப் பார்த்து புன்னகத்தாள் மது.


அப்போது லோகநாதனிற்கு போன் வரவும்
"ஒரு நிமிஷம் இப்ப வந்துடுறேன்" என்று விட்டு லோகநாதன் செல்ல வீட்டை சுற்றி பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் மது.


அப்போது
"விஜி கண்ணா...." என்றவாறு அவர்கள் அருகில் வந்து நின்ற பெண்ணை பார்த்து
"சுலோச்சனா அத்தை...." என்றவாறு எழுந்து நின்றாள் விஜி.


"யாருடா அது நேரங்கெட்ட நேரத்தில்???" என்றவாறு நிமிர்ந்து பார்த்த வினித் சுலோச்சனாவைப் பார்த்ததும்


"அய்யய்யோ!!! பெரிய பூகம்பமா???" என்றவாறு மீண்டும் அமைதியாக தலை குனிந்து அமர்ந்து கொண்டான்.


சரசரக்கும் பட்டு சேலையும், கழுத்தை முழுமையாக மறைக்கும் அளவு தங்க ஆபரணங்களும், உண்மையான வயதை மறைத்து காட்டும் அளவுக்கு ஒப்பனையுமாக வந்து நின்ற பெண்ணை அதிசயமாக பார்த்தாள் மது.


"என்னடா விஜி கண்ணா இதெல்லாம்??" என்றவாறு விஜியின் கையில் இருந்த ஆல்பத்தை வாங்கி பார்த்தார் சுலோச்சனா.


"இதெல்லாம் என்கேஜ்மண்ட், மேரேஜ்க்கு டெகேரேஷன் எப்படி வேணும்னு செலக்ட் பண்ற டிசைன் ஆல்பம் அத்தை.." என்று விஜி கூறவும்


"ஓஹ்...அப்படியா???" என்று கேட்டுக் கொண்டவர் விஜியின் அருகில் அமர்ந்திருந்த மதுவை கேள்வியாகப் பார்த்தார்.


"இவங்க மது. அருணா வெடிங் பிளானர்ஸ்ல இருந்து வந்துருக்காங்க. இவங்கதான் இந்த டெகேரேஷன் வேலை எல்லாம் பார்க்கப் போறாங்க" என்று விஜி கூறவும்


"அருணா வெடிங் பிளானர்ஸா...." என்று ஏதோ கேட்கக் கூடாத வார்த்தையை கேட்டது போல சுலோச்சனா முகத்தை சுளிக்க மனமுடைந்து போனாள் மது.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
தன் முகத்தை சரி செய்து கொண்டு எழுந்து நின்று அவரைப் பார்த்து புன்னகத்து கொண்ட மது


"வணக்கம் ஆன்டி..." என்று கூற கோபமாக அவளை உறுத்து விழித்தார் சுலோச்சனா.


"யாருக்கு யாரு ஆன்டி?? ஏதோ சொந்தக்காரங்க மாதிரி உரிமையா கூப்பிடுற! ஒழுங்கா மரியாதையா மேடம்னு கூப்பிடு. கொஞ்சம் விட்டா தலைக்கு மேல ஏறி உட்கார்ந்துடுவீங்களே! மிடில் கிளாஸ் ஆளுங்களோட புத்தியே இது தானே! சீப் கேரக்டர்ஸ்.." என்று வாய்க்கு வந்தபடி பேசி கொண்டிருக்க மதுவோ கண்கள் கலங்க தலை குனிந்த படி நின்று கொண்டிருந்தாள்.


எவ்வித ஒப்பனையுமின்றி எளிமையான காட்டன் சுடிதார் அணிந்து மிகவும் எளிமையாக எளிமையின் மறு உருவமாக இருந்த மதுவை ஏனோ முதல் பார்வையிலேயே சுலோச்சனாவிற்கு பிடிக்கவில்லை.


"அத்தை..." என்று விஜி அவரை அடக்கப் போக


"நீ பேசாம உட்காரு விஜி. பெரியவங்க பேசும் போது குறுக்கே பேசுற. என்ன புது பழக்கம் பேசாமல் உட்காரு. தெருவில் போறவங்கள எல்லாம் கூப்பிட்டு நடு வீட்டில் உட்கார வைச்சுட்டு சேவகம் பண்ணுறீங்களா?" என்று சுலோச்சனா பேசிக் கொண்டே போக


"சுலோச்சனா!!!!!!" என்று கோபமாக சத்தமிட்டவாறே ருத்ர மூர்த்தியாக வந்து நின்றார் லோகநாதன்.


லோகநாதனின் சத்தம் கேட்டு அவசரமாக சமையலறைக்குள் இருந்து வெளியேறி வந்த வத்சலா வேலைக்காரர்கள் எல்லோரையும் வெளியில் செல்லுமாறு ஜாடை செய்தார்.


"வீட்டுக்கு வந்த விருந்தாளிங்க கிட்ட இப்படி தான் பேசுவியா? இது தான் உன் பண்பாடா?" என்று லோகநாதன் கோபமாக சுலோச்சனாவைப் பார்த்து கேட்கவும்


"இப்போ நான் என்று சொல்லிட்டேனு இந்த குதி குதிக்குறீங்க? எல்லாரையும் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க சொன்னது ஒரு குத்தமா? ரொம்ப தான் வக்காலத்து வாங்குறீங்க" என்று கூறிய சுலோச்சனாவின் எதிரில் வந்து நின்ற லோகநாதன்


"அடுத்தவங்கள பத்தி குறை சொல்லுறதுக்கு முன்னாடி நாம கடந்து வந்த பாதையை மறந்துடக்கூடாது சுலோச்சனா. நாம ஒண்ணும் பரம்பரை பணக்காரங்க இல்லை. கஷ்டப்பட்டு உழைச்சு தான் இந்த நிலைமைக்கு வந்துருக்கோம். அதை மறந்துடாதே. நமக்கு திரும்பவும் அந்த பழைய நிலை வர்றதுக்கு ஒண்ணும் லேட் ஆகாது. அடுத்தவங்க மனசை கஷ்டப்படுத்துற மாதிரி இனி பேசாதே" என்று லோகநாதன் கூற எதுவும் பேசாமல் சிலை போல நின்று கொண்டிருந்தார் சுலோச்சனா.


"முதல்ல மது கிட்ட போய் மன்னிப்பு கேளு" என்று லோகநாதன் கூற அவரை முறைத்து பார்த்தார் சுலோச்சனா.


லோகநாதனின் தந்தை பூர்வீக விவசாயி.
லோகநாதனும், சுலோச்சனாவுமே அவர்களது வாரிசுகள்.


அவர்களது ஊரில் விவசாயம் அழிந்து வருவதைப் பார்த்து சென்னையில் வந்து குடியேறினார் லோகநாதன்.


கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு உழைத்து ஒரு நல்ல நிலைக்கு வந்தவர் தன் தங்கை சுலோச்சனாவிற்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார்.


சுலோச்சனாவின் கணவர் வேல்முருகனோ ஒரு அப்பாவி.
சுலோச்சனாவிற்கு எப்போதும் பணக்காரர்கள் என்பதற்கு உரிய ஆணவம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.


காலப்போக்கில் சரியாகி விடும் என்று லோகநாதன் விட்டு விட பின்னாளில் அந்த குணம் வளர்ந்ததே தவிர குறையவில்லை.


ஆனால் லோகநாதனோ முற்றிலும் நேர் மாறானவர்.
அனைவரையும் மதிக்க தெரிந்தவர், தான் கடந்து வந்த பாதையை மறக்காதவர்.


குணநலன்கள் நிரம்பிய ஒரு நல்ல மனிதர், தன் தங்கையின் குணம் தெரிந்தும் அவரை தன் வீட்டின் பக்கத்திலேயே ஒரு வீட்டை கட்டி குடியமர்த்தி வைத்திருந்தார்.


எத்தனை நல்ல விடயங்கள் நடந்தாலும் சுலோச்சனா தன்னை மாற்றிக் கொள்ளவே இல்லை.


தன்னை விட வயதில் சிறிய அதுவும் சாதாரண ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவளிடம் தன் அண்ணன் தன்னை மன்னிப்பு கேட்க சொல்லி விட்டாரே என்ற கோபம் எழ மதுவை எரித்து விடுவது போல பார்த்த சுலோச்சனா


"போயும் போயும் ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு கிட்ட என்ன மன்னிப்பு கேட்க சொல்லுறீங்களா? முடியாது" என்று கூறவும்


"அப்போ இப்போவே நீ இந்த வீட்டை விட்டு வெளியே போகலாம்" என்று லோகநாதன் கூற அனைவரும் அதிர்ச்சியடைந்து நின்றனர்.


"என்னங்க..." என்று பேச வந்த வத்சலாவைப் பார்வையாலேயே அடக்கிய லோகநாதன் சுலோச்சனாவைப் பார்க்க


"எவளோ ஒருத்திக்காக கூடப் பிறந்த தங்கச்சியையே தூக்கி எறிஞ்சு பேசுறீங்களே! ஒரு நாள் இல்ல ஒரு நாள் இவ புத்தியை காமிப்பா அப்போ உங்க எல்லாரையும் கவனிச்சுக்குறேன்" என்று விட்டு வராத கண்ணீரை துடைத்து கொண்டே வெளியேறி சென்றார் சுலோச்சனா.


வினித் தன் மனதுக்குள்
"இந்த பூகம்பத்துக்கு ரோஷமெல்லாம் இருக்கா? கோவிச்சுட்டு போகுது!" என்று எண்ணி வியந்து கொண்டான்.


கண்கள் கலங்க நின்ற மதுவின் தோளில் ஆதரவாக வத்சலா தொடவும் தன் கண்களை அவசரமாக துடைத்து கொண்டு அவரை பார்த்து புன்னகத்தாள் மது.


"அவ சொன்ன எதையும் மனசுல வைச்சுக்காதமா. அவ ஒரு வெகுளி. அவ பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்" என்று லோகநாதன் கூற


அவரைப் பார்த்து புன்னகத்த மது
"இப்படி பல பேரோட பேச்சை எல்லாம் கேட்டு தாண்டி தான் இந்த நிலைமைக்கு நான் வந்துருக்கேன் அங்...ஸார். இதெல்லாம் பார்த்தா நாங்க பிழைப்பு நடத்த முடியாது.
நீங்க டிசைன்ஸ் பார்த்து செலக்ட்
பண்ணிட்டு ஆபீஸ்ல வந்து ஆல்பத்தை தந்துட்டு உங்க செலக்ஷன சொல்லிடுங்க நான் வரேன்" என்று கூறி விட்டு சென்றாள்.


"மது ஒரு நிமிஷம்..." என்று விஜி அழைக்கவும் திரும்பி பார்த்த மதுவின் அருகில் சென்ற விஜி


"என்னோட வெடிங்க நீங்க தான் பண்ணி கொடுக்கணும். என்ன நடந்தாலும் ஓகே? ப்ராமிஸ் பண்ணுங்க" என்று கையை நீட்டி விஜி கேட்கவும் ஏனோ அவள் முகம் பார்த்து மறுக்க முடியாமல் அவள் கைகளின் மேல் தன் கையை வைத்த மது


"ப்ராமிஸ். கண்டிப்பாக உங்க வெடிங்க கிரான்டா பண்ணி கொடுக்குறேன் போதுமா??" என்று விட்டு குனிந்த தலை நிமிராது அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி சென்றாள்.


அது வரை அடக்கி வைத்திருந்த மன வேதனை மொத்தமும் கண்ணீராய் வெளி வர தலை குனிந்த படி கண்களை துடைத்து கொண்டே நடந்து சென்றாள் மது.


விஜியின் "மது..." என்ற அழைப்பில் சிறிது யோசித்த வினித்திற்கு அப்போது தான் இந்த மது தான் அருள் தேடி அலைந்த மது என்பது நினைவில் வந்தது.


"மதுவுக்கு மேரேஜ் ஆயிடுச்சுனு தானே அந்த நாராயணன் சொன்னாரு. ஆனா மதுவை பார்த்தா அப்படி தெரியலையே! அன்னைக்கு ஷாப்ல கூட ஸ்ரீதரோட பார்த்த பொண்ணும் இவ தானே? அப்போ கார்த்திக் யாரு? இந்த ஸ்ரீதர் யாரு? மதுவுக்கு மேரேஜ் ஆயிடுச்சா இல்லையா? ஐயோ!!! ராமா!! எனக்கு பைத்தியம் பிடிச்சிரும் போல இருக்கே. இந்த அருள் வேற இன்னும் வந்து சேரல! ஐயோ!! இப்போ நான் என்ன பண்ணுவேன்??" என்று வினித் புலம்பிக் கொண்டு நிற்க அருளின் காரும் சரியாக வீட்டை வந்து சேர்ந்தது.


காவலாளி கேட்டைத் திறந்து விட காரை உள்ளே கொண்டு சென்ற அருள் எதிரில் தலை குனிந்தபடி அழுது கொண்டு வந்து கொண்டிருந்த பெண்ணை பார்த்து காரில் இருந்து இறங்கி கொண்டான்.


ஆனால் அதற்குள் அந்த பெண் அவனைக் கடந்து வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்.


"யாரு இது? நம்ம வீட்டுல இருந்து அழுதுட்டே போறது? பேஸ் கூட சரியா தெரியலையே!" என்று யோசனையோடு அருள் வீட்டினுள் சென்றான்.


அருளை பார்த்ததும் நடந்த பிரச்சினை எல்லாவற்றையும் எல்லோரும் மறந்து விட்டு சகஜமாக அவனோடு பேசிக் கொண்டிருக்க வினித் ஒவ்வொரு நொடியையும் முள் மேல் அமர்ந்திருப்பதைப் போல அவஸ்தையாக உணர்ந்தான்.


வினித்தின் செய்கைகளை வீட்டினுள் வந்தது முதல் கவனித்துக் கொண்டிருந்த அருள்
"வினித் சீப் டாக்டர் உன் கிட்ட ஒரு பைல் கொடுக்க சொன்னாரு. அது என் ஸ்டடி ரூம்ல இருக்கு. வா எடுத்து தர்ரேன்" என்று அவன் அழைக்கவும் உடனே அவனின் பின்னால் சென்றான் வினித்.


அறைக்குள் வந்ததும் கதவை மூடிய வினித்
"டேய் மச்சான்!! உன் மது கிடைச்சிட்டாடா!!" என்று சந்தோஷமாக கூறிக் கொண்டே அருளை அணைத்துக் கொண்டான்.


"என் மதுவா? அதெல்லாம் எப்போவோ முடிஞ்சிடுச்சேடா!" என்று அருள் வேதனையாக கூற அவன் தோளில் தட்டிய வினித் அருள் வருவதற்கு முன்பு நடந்த அனைத்து விடயங்களையும் அவனிடம் கூறினான்.


மது தன் வீட்டிற்கு வந்திருக்கிறாள் என்ற செய்தி அவன் காதில் தேன் வார்க்க தன் அத்தை அவள் மனதை காயப்படுத்தி விட்டார் என்ற செய்தி அவன் கோபத்தை தூண்டி விட்டது.


தன் முன்னால் தன் ஏஞ்சல் தான் அழுது கொண்டு சென்றாளா? என்று எண்ணி வருத்தம் கொண்ட அருள் அவளை எண்ணி வேதனை அடைந்தான்.


"ஆனா ஒண்ணு மட்டும் ஸ்யூர் அருள். மதுவுக்கு மேரேஜ் ஆகல. அதை நான் அடிச்சு சொல்லுவேன்" என்று வினித் கூறவும்


அவனைப் பார்த்து சிரித்த அருள்
"அதனால எனக்கு என்னடா லாபம்?" என்று கேட்டான்.


"இரண்டு வருஷமா அவ என்ன தேடி வரலயே! அவளுக்கு மேரேஜ் ஆகலனா என்ன தேடி வந்துருப்பா தானே? ஆனா அவ வரலயே! என்னைப் பிடிக்கலனு தானே அவ வரல. விடுடா எப்படியாவது அவ நல்லா இருக்கட்டும்" என்று அருள் கூற


அவனை கூர்மையாக பார்த்த வினித்
"அப்போ நீ மதுவை மறந்துட்டே அப்படி தானே??" என்று கேட்க எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான் அருள்.


"சொல்லுடா மறந்துட்ட தானே?" என்று வினித் கேட்கவும்
அமைதியாகவே நின்றான் அருள்.


"எனக்கு தெரியும் நீ மறக்கல. இத்தனை வருஷம் கழிச்சு அவ நீ இருக்குற இடத்திற்கே வர்றானா என்ன அர்த்தம்? அவ உனக்கு தான்னு கடவுள் முடிவு பண்ணிட்டான். அது தான் அவ மறுபடியும் மறுபடியும் நீ இருக்குற இடமாகவே வர்றா. உனக்கு அவதான்னா அதை யாராலும் மாத்த முடியாது. நாளைக்கு அந்த ஆல்பத்தை கொடுக்குறதுக்கு அவ ஆபீஸ்க்கு போறோம். நேர்லயே அவகிட்ட பேசி நம்ம சந்தேகத்தை எல்லாம் கிளியர் பண்ணுறோம். அப்புறம் உன் மனசுல இருக்குற கேள்வி எல்லாம் கேட்டுடு சரியா" என்று வினித் கேட்கவும் சரியென்று அருள் கூற


"மாமா!!!!!!!!!" என்று வீடே அதிரும் அளவுக்கு சத்தம் கேட்கவும் அவசரமாக அறையை விட்டு அருளும், வினித்தும் வெளியேறி வந்தனர்.


ஹாலின் மத்தியில் நின்று கத்தி கொண்டிருந்தவளைப் பார்த்து வினித் அருளின் காதில்
"சின்ன பூகம்பம் வந்தாச்சு..." என்று கூறிக் கொள்ள


வீடே அதிரும் படி உச்சஸ்தானியில் சத்தம் போட்டாள் ஷோபா என்கிற ஷோபனா......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top