• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஹாய்!!ஹலோ!! ப்ரெண்ட்ஸ்!!!

இன்னைக்கு ஐ யம் கொஞ்சம் வெட்டி;) ஷோ சொன்ன நாளுக்கு முன்னால் ud போட்டு விட்டேன்.

படிச்சுட்டு ஒரு லைக் அன்ட் கமெண்ட்ஸ் :p:p:p


nivin-pauly.jpg

ஷோபனா சுலோச்சனாவின் ஒரே வாரிசு.


குணத்திலும், நடத்தையிலும் சுலோச்சனாவின் மறு பிரதியாக இருந்தாள் ஷோபா.


ஷோபா 25 வயது நிரம்பிய ஓர் நவ நாகரீக மங்கை. சற்று சிவந்த நிறம் கொண்ட ஷோபனா பல பியூட்டி பார்லர்களின் கை வண்ணத்தில் தன் நிறத்தை மேலும் அதிகரிக்க செய்து இருந்தாள்.


அவளது ஆடையும், ஒப்பனையுமே அவளது நாகரீக வளர்ச்சியை அனைவருக்கும் பறைசாற்றியது.


ஷோபாவின் சத்தம் கேட்டு அனைவரும் ஹாலுக்கு வந்து சேர்ந்தனர்.


"வாம்மா ஷோபா எப்படி இருக்க?" என்று லோகநாதன் கேட்கவும்


அவர் முன்னால் வந்து நின்று அவரை முறைத்து பார்த்தவள்
"எங்க அம்மாவை எதுக்கு திட்டுனீங்க? அவங்கள இப்படி அவமானப்படுத்த உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு?" என்று கேட்டாள்.


"அதுக்குள்ள பெரிய பூகம்பம் சின்ன பூகம்பத்துக்கு கிட்ட போய் எல்லாத்தையும் வத்தி வைச்சுடுச்சு பாரேன்" என்று வினித் அருளிடம் கூற அவனை பார்த்து சிரித்துக் கொண்டு நின்றான் அருள்.


"நீ சின்ன பொண்ணு ஷோபா. இந்த விஷயத்தில் எல்லாம் நீ தலையிடாதே! பெரியவங்க நாங்க ஆயிரம் பேசுவோம். அதை பற்றி உன் கிட்ட விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது. சரி வா வந்து டிபன் சாப்பிடு" என்று லோகநாதன் ஷோபாவின் கை பிடித்து அழைக்கவும்


அவரது கையை தட்டி விட்ட ஷோபா"நான் ஒண்ணும் எங்க வீட்ல சாப்பிட சாப்பாடு இல்லாம உங்க வீட்டுக்கு வரல. எவளோ ஒரு லோ கிளாஸ் பொண்ணுக்காக எங்க அம்மாவை அசிங்கப்படுத்தி இருக்கீங்க. இதுக்கெல்லாம் நீங்க பின்னாடி ரொம்ப பீல் பண்ணுவீங்க மாமா. கண்டவங்களை எல்லாம் தலையில தூக்கி வைச்சுட்டு ஓவரா ஆட்டம் போடாதீங்க" என்று மதுவை பற்றி தவறாக கூறவும் அருள் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு நின்றான்.


"என்னம்மா ஷோபா இது? பெரியவங்க கிட்ட இப்படி தான் பேசுவியா?" என்று வத்சலா கேட்க


அவரைப் பார்த்து கை காட்டி நிறுத்துமாறு கூறியவள்
"இது எங்க மாமாவுக்கும் எனக்கும் இடையில நடக்குற விஷயம். வீணா நீங்க இதுல தலையிட வேண்டாம். நல்லா இருந்தா எங்க மாமாவை அதையும் இதையும் சொல்லி ஏத்தி விட்டுட்டு இப்போ சமாதானம் பண்ணுற மாதிரி நடிக்குறீங்களா?" என்று கேட்கவும்


"வாயை மூடு ஷோபா!!!!" என்று முகம் சிவக்க உக்கிரமாக ஷோபாவின் முன் வந்து நின்றான் அருள்.


"அருள் அத்தான்!!!" என்று அதிர்ச்சியாக முணுமுணுத்துக் கொண்ட ஷோபா விக்கித்துப் போய் நின்றாள்.


"இவர் எப்போ இங்க வந்தாரு? இந்த அம்மா அருள் அத்தான் இங்க இல்லேனு சொல்லவும் தானே நான் இங்க வந்தேன். இப்போ நான் பேசுன எல்லாத்தையும் இவர் கேட்டிருப்பாரே! இப்போ என்ன பண்ணுறது?" என்று மனதிற்குள் வேகமாக சிந்திக்க தொடங்கினாள் ஷோபா.


லோகநாதனின் ஒட்டுமொத்த சொத்துக்களுக்கும் விஜியும், அருளுமே வாரிசுகள் என்பதால் எப்படியாவது அருளை தன் வீட்டு மருமகனாக ஆக்கி கொள்ள வேண்டும் என்று திட்டம் போட்ட சுலோச்சனா ஷோபவின் சிறு வயதில் இருந்தே 'அருள் உனக்கு தான்' என்று கூறி வளர்த்ததால் அந்த எண்ணம் ஷோபாவின் மனதில் வேரூன்றி இருந்தது.


அருளின் முன்னால் நல்லவள் போன்றும் மற்றவர்களின் முன்னால் தன் சுய ரூபத்தைக் காட்டிக் கொண்டும் இரு வேடமிட்டு கொண்டு இருந்த ஷோபாவின் குணம் தெரிந்தும் அருள் இது நாள் வரை அவளைக் கண்டித்தது இல்லை.


ஆனால் இன்று தன் தாய், தந்தையை அவள் எதிர்த்து பேசவும் கோபம் கொண்ட அருள் அவளை கோபத்துடன் முறைத்து கொண்டு நின்றான்.


அருளின் கோபப் பார்வையை கண்டு மிரண்டு போய் நின்ற ஷோபா உடனே தன்னை சரி செய்து கொண்டு
"அத்தான் எப்படி இருக்கீங்க? திருச்சியிலிருந்து எப்போ வந்தீங்க?" என்று கேட்கவும்


"சுகம் விசாரிக்குறது எல்லாம் இருக்கட்டும். உன் மனசுல என்ன பெரிய சண்டிராணினு நினைப்பா? வயசுல பெரியவங்கனு மரியாதை இல்லாம பேசுற. பல்லைத் தட்டிடுவேன் ஜாக்கிரதை!" என்று உறும செய்வதறியாது நின்றாள் ஷோபா.


அருள் கோபமாக திட்டவும் ஷோபா கண் கலங்கி நிற்க அவளை பார்த்து வருத்தத்துடன் நின்ற வத்சலா அருளைப் பார்த்து 'வேண்டாம்' என்பதை போல சைகை செய்ய அமைதியாக நின்றான் அருள்.


கண்கள் கலங்க நின்ற ஷோபாவின் அருகில் வந்த வத்சலா அவள் தோள் தொட தலைகுனிந்து கொண்டாள் ஷோபா.


"உன் அம்மா, அப்பாவை திட்டுனா உனக்கு கோபம் வர்ற மாதிரி தானே அவளுக்கும் கோபம் வந்துருக்கும். சின்ன பொண்ணு தெரியாம பேசிட்டா இனி இப்படி பண்ணமாட்ட விடு அருள்" என்று வத்சலா கூறவும்


"பார்த்தியா? இது தான் உனக்கும் மத்தவங்களுக்கும் இருக்குற வித்தியாசம். நீ அவங்கள கஷ்டப்படுத்துற மாதிரி பேசியும் உனக்கு சப்போர்டா அவங்க பேசுறாங்க. இனியாவது திருந்தி ஒழுங்கா நடந்துக்க பாரு" என்ற அருள் அவனறையை நோக்கி சென்று விட அவனைத் தொடர்ந்து வினித்தும் சென்றான்.


"மன்னிச்சுடுங்க அத்தை...நான் தெரியாம.." என்று ஷோபா தயங்கவும்


"பரவாயில்லை ஷோபா வா" என்று ஷோபாவை வத்சலா அழைத்து செல்ல தன் மனைவியை எண்ணி பெருமிதம் கொண்டார் லோகநாதன்.


லோகநாதனின் அருகில் வந்த விஜி அவரைப் பார்க்க
புன்னகத்து கொண்ட லோகநாதன்
"உங்க அம்மாவுக்கு பொறுமையின் சிகரம்னே அவார்ட் கொடுக்கலாம். எல்லாரையும் சமாளிக்க கத்து வைச்சுருக்கா" என்று கூறவும்


"உங்களையே இத்தனை வருஷமா சமாளிச்சுட்டாங்க. அந்த சில்வண்டு சோப்பு டப்பாவை சமாளிக்குறது பெரிய வேலையா என்ன?" என்று சிரித்துக் கொண்டே விஜி கூறினாள்.


"ஷோபா காதுல நீ சொன்னது மட்டும் விழுந்துச்சு அப்புறம் இன்னொரு பிரளயம் கிளம்பிடும்" என்று லோகநாதன் கூற


"அப்போ சங்கத்தை கலைச்சுட வேண்டியது தான்" என்று விட்டு விஜி சென்று விட லோகநாதன் அவருடைய ஆபீஸ் அறைக்குள் நுழைந்து கொண்டார்.


லோகநாதன் அறைக்குள் செல்வதைப் பார்த்து கொண்டு நின்ற விஜி வத்சலா, ஷோபா சென்ற பக்கம் சென்று என்ன நடக்கிறது என்று கண்காணிக்கத் தொடங்கினாள்.


அறைக்குள் நுழைந்த அருள் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அறையினுள் குறுக்கும், நெடுக்கும் நடந்து கொண்டிருக்க வினித் அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டு அருளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.


ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து போன வினித்
"இப்போ எதுக்குடா குட்டி போட்ட பூனை போல அங்கேயும் இங்கேயும் நடந்துட்டு இருக்க?" என்று அருளின் முன் வந்து நின்று கேட்க


"சின்ன பொண்ணு தானே போனா போகுதுனு இத்தனை நாள் அவ பண்ணுற கூத்தை எல்லாம் கண்டுக்காம இருந்தேன். ஆனா இன்னைக்கு அவ என்ன பேச்சு பேசுறானு பார்த்தலே. வந்த ஆத்திரத்திற்கு அங்கேயே அவள அறைஞ்சுருப்பேன். எல்லோரும் இருக்கவும் பொறுமையாக வந்துட்டேன்" என்ற அருள் கண்களை மூடிக் கொண்டு நின்றான்.


சிறிது நேரத்தின் பின் கண்களைத் திறந்த அருள்
"ஆனாலும் அம்மா ஷோபாவுக்கு ரொம்ப தான் இடம் கொடுக்குறாங்க. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ தெரியல" என்று அருள் கூற


சிரித்துக் கொண்ட வினித்

"வீட்டுக்கு மருமகளாக வரப் போறவனு விட்டுக் கொடுத்து போறாங்க போல" என்று கூறவும் அதிர்ச்சியாக அவனை பார்த்தான் அருள்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
"என்னடா லூசுத் தனமாக உளர்ற?" என்று அருள் பயத்தோடு கேட்கவும் அவனைப் பார்த்து மனதினுள் சிரித்துக் கொண்டான் வினித்.


"அன்னைக்கு ஒரு நாள் அத்தையும், பெரிய பூகம்பமும்...ஸாரி ஸாரி உங்க அத்தையும் உட்கார்ந்து ஏதோ சீரியசாக பேசிட்டு இருந்தாங்க. சரி அப்படி என்னதான் பேசுறாங்கனு கேட்குறதுக்காக அப்படியே கேசுவலா அந்த பக்கம் போனேன். அப்போ தான் பெரிய..." என்று இடை நிறுத்திய வினித்


"ஸாரி டா மச்சான் எனக்கு சின்ன வயசுல இருந்து அப்படியே சொல்லி பழகிடுச்சு. நான் பெரிய பூகம்பம்னே சொல்லிக்கவா?" என்று கேட்டான்.


"நீ பெரிய பூகம்பம்னு சொல்லு இல்ல கண்ணே! மணியேனு வேணும்னாலும் சொல்லிக்க. முதல்ல சொல்ல வந்த மேட்டர புல்லா சொல்லி முடிடா. டென்சனை ஏத்தாத" என்று அருள் கூறவும்


"ஓகே ஓகே கூல்" என்ற வினித் மேற் கொண்டு கூறத் தொடங்கினான்.


"பெரிய பூகம்பம் உங்க அம்மா கிட்ட என்ன சொல்லிச்சுனா அது தான் விஜி கல்யாணம் இன்னும் கொஞ்ச நாளையில முடிஞ்சுடுமே இனி அருளுக்கு எப்போ கல்யாணம்னு கேட்டாங்க.


அதுக்கு உங்க அம்மா இனி தான் பொண்ணு பார்க்கனும்னு சொன்னாங்க. உடனே பெரிய பூகம்பம் கை வசம் ராணி மாதிரி என் பொண்ணு இருக்கும் போது எதுக்கு நீங்க வெளியில பொண்ணு தேடனும்னு சொல்லவும் உங்க அம்மா யோசிக்க ஆரம்பிச்சாங்க.


அப்புறம் என்ன நினைச்சாங்களோ தெரியல கடவுள் என்ன விதிச்சுருக்காரோ அது நடக்கும் முதல்ல விஜியோட கல்யாணம் நல்ல படியாக நடக்கட்டும்னு சொல்லிட்டு போய்ட்டாங்க" என்று வினித் கூறவும் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான் அருள்.


"அம்மா ஏன் அப்படி சொன்னாங்க??" அருள் கவலையாக கூறவும்
அவனருகில் அமர்ந்து கொண்ட வினித்


"ஆனாலும் நீ கொடுத்து வைச்சவன்டா. ஒரு பக்கம் பெரிய பூகம்பம் இன்னொரு பக்கம் சின்ன பூகம்பம் நடுவில் நீ....அட!!அட!!அட!! என்ன ஒரு கண் கொள்ளா காட்சி" என்று கூறவும்
அவன் கழுத்தில் கையை வைத்து நெறித்தான் அருள்.


அருளின் கைகளை தள்ளி விட்டு எழுந்து தூரமாக நின்று கொண்ட வினித்
"ஆனாலும் உனக்கு மாப்பிள்ளை தோழன் நான் தான் மறந்துடாத!" என்று கூறி சிரிக்கவும் அவனை முறைத்து பார்த்த அருள் ஒரு நிலைக்கு மேல் முடியாமல் வினித்துடன் இணைந்து சிரித்துக் கொண்டான்.


அருளின் அருகில் வந்து அமர்ந்து கொண்ட வினித்
"உன்னை சிரிக்க வைக்க இவ்வளவு மொக்கை போட வைச்சுட்டியேடா!! பரவாயில்லை எல்லாம் நண்பனுக்காக தானே" என்று கூறியவன்


"சரிடா அருள் நான் கிளம்புறேன். அம்மா வீட்ல சாப்பிடாம காத்துட்டு இருப்பாங்க. காலையில் வரேன் மதுவோட ஆபீஸ்க்கு போய் மதுவை மீட் பண்ண ரெடியா இரு" என்று விட்டு சென்றான்.


காலையில் பிரயாணம் செய்து வந்தது களைப்பாக இருக்கவும் ஒரு குளியல் போடலாம் என்று எண்ணி கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான் அருள்.


லோகநாதனின் வீட்டிலிருந்து வெளியேறும் போது அழுது கொண்டே மது செல்வதை எல்லோரும் விநோதமாக பார்க்கவும் தன்னை முடிந்தளவு சரி செய்து கொண்டு கால் போன போக்கில் நடந்து சென்று கொண்டிருந்தாள் மது.


"அப்பா ஏன்பா எங்கள எல்லாம் விட்டுட்டு போனிங்க? எல்லோரும் எப்படி பேசுறாங்கனு பார்த்தீங்களாபா? நீங்க என்கூட இருந்திருந்தா இப்படி எல்லாம் ஆகி இருக்குமாபா? ஏன்பா? ஏன்? எங்கள இப்படி தவிக்க விட்டுட்டு போயிட்டீங்க?" என்று மனதிற்குள் அழுதவளாக நடந்து சென்றாள் மது.


அப்போது அவளுடைய போன் அடிக்கவும் எடுத்து பார்த்தவள் 'ஸ்ரீ' என்ற பெயர் வரவும் உடனே தன் கலங்கிய கண்களைத் துடைத்து கொண்டு முயன்று தனது குரலையும் சரி செய்து கொண்டு போனை அட்டன்ட் செய்து காதில் வைத்தாள்.


"ஹலோ!!ஸ்ரீ!!" என்று மது கூறவும்
மறுமுனையில் ஸ்ரீதர்


"என்னடா மது? ஏதாவது பிரச்சினையா? குரல் ஒரு மாதிரியாக இருக்கே!" என்று கேட்கவும்


அமைதியாக இருந்த மது
"இவன் எப்படி எனக்கு ஒரு பிரச்சினைனு வந்ததும் சரியாக கண்டு பிடிச்சுறான்?" என்று யோசித்துக் கொண்டிருக்க


"மது..." என்று ஸ்ரீதரின் அழைப்பில் தன்னை மீட்டுக் கொண்டவள்


"அதெல்லாம் ஒண்ணும் இல்லை ஸ்ரீ. நான் நல்லா தான் இருக்கேன்" என்று கூறினாள்.


"லோகநாதன் அங்கிள் வீட்டுக்கு போனியா? அங்க ஒரு ப்ராப்ளமும் இல்லையே?" என்று வினித் கேட்கவும்


"ஒரு பிரச்சினையும் இல்லை ஸ்ரீ. ஆல்பத்தை கொடுத்துட்டு வந்துருக்கேன். நாளைக்கு ஆபீஸ்ல வந்து செலக்ட் பண்ணுண டிசைன்ஸ சொல்றேனு சொன்னாங்க. இப்போ வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்" என்று கூறினாள் மது.


"இப்போ எந்த ஏரியாவில் போயிட்டு இருக்கே?" என்று ஸ்ரீதர் கேட்கவும்


அப்போதுதான் தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று சுற்றிலும் பார்வையை சுழல விட்டாள் மது.


"நான் நம்ம ஆபீஸ் இருக்குற ஏரியாவில் இருக்கேன் ஸ்ரீ" என்று மது கூறவும்


"வீட்டுக்கு போறேனு சொன்ன இப்போ எதுக்கு ஆபீஸ்க்கு போன?" என்று ஸ்ரீதர் கேட்க
என்ன சொல்வது என்று யோசித்தவள் அருகில் இருந்த முருகன் கோவிலைப் பார்த்ததும் முகம் மலர்ந்தவளாக


"வீட்டுக்கு போற வழியில் கோவிலுக்கு போயிட்டு போகலாம்னு வந்தேன்டா" என்று கூறினாள்.


"அப்போ நீ கோவில்லயே வெயிட் பண்ணு. ஒரு அஞ்சு நிமிஷத்துல நானும் அங்கே வந்துடுறேன்" என்று ஸ்ரீதர் கூறவும்


"அஞ்சு நிமிஷத்துலயா எப்படி ஸ்ரீ?" என்று வியப்பாக கேட்டாள் மது.


"நீ காலையில போன்ல செம்ம ஆத்து ஆத்திட்ட. நீ போனை கட் பண்ண அடுத்த செக்கனே ஹை ஸ்பீட்ல காரை எடுத்துட்டு பறந்து வந்துட்டேன்" என்று ஸ்ரீதர் கூறவும்


"லூசு ஸ்ரீ!! உன்னை யாரு அப்படி வர சொன்னா லூசு!!லூசு!!" என்று மது திட்ட


சிரித்துக் கொண்ட ஸ்ரீதர்
"சரி சரி!! என்னைத் திட்டுறேனு வீணா உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணாம கோவில்ல வெயிட் பண்ணு" என்று விட்டு போனை கட் செய்ய சிரித்துக் கொண்டே கோவிலுக்குள் சென்றாள் மது.


மனமுருக முருகனை கண் மூடி வேண்டிக் கொண்ட மது கண்களை திறக்க அவள் முன்னால் சிரித்துக் கொண்டு நின்றான் ஸ்ரீதர்.


"ஹேய் ஸ்ரீ!!! என்னடா இப்படி ஷாக் கொடுக்குற?" என்று மது கேட்கவும்


வாய் விட்டு சிரித்த ஸ்ரீதர்
"நீ தான் போன்ல லெப்ட் அன்ட் ரைட் வாங்கிட்டியே! அப்புறம் எப்படி நான் நிம்மதியாக இருக்க முடியும்? உன்னை டார்ச்சர் பண்ணுறதுக்காகவே ஓடி வந்துட்டேன்" என்று கூறினான்.


மனதில் இருந்த கவலைகள் எல்லாம் விலக மனம் விட்டு சிரித்தாள் மது.


திடீரென்று வானத்தை கார் மேகம் சூழ்ந்து கொள்ள அந்த இயற்கையை ரசித்து கொண்டிருந்தாள் மது.


மெல்லிய சாரலாக தூரத் தொடங்கிய மழை பெரு மழையாக மாறத் தொடங்க மதுவிற்கு அவளது குழந்தை தனம் மெல்ல தலை தூக்க தொடங்கியது.


மழையில் நனைவதற்காக செல்ல போன மதுவை ஸ்ரீதர் தடுத்து நிறுத்த
"ப்ளீஸ் ஸ்ரீ!! ஒரே ஒரு வாட்டி மழையில் நனைய ஆசையாக இருக்கு ஸ்ரீ. அப்படி போயிட்டு இப்படி வந்துடுவேன். இரண்டு நிமிஷம் தான் ப்ளீஸ் ஸ்ரீ! ப்ளீஸ்! ப்ளீஸ்! ப்ளீஸ்!" என்று கெஞ்சலாக மது கேட்கவும்


மறுக்க முடியாமல் சம்மதித்த ஸ்ரீதர்
"இரண்டு நிமிஷம் தான். கூட நேரம் நின்னேனா அம்மா கிட்ட போட்டு கொடுத்துருவேன்" என்று கூற அவனை தள்ளி விட்டு மழையில் வந்து ஆனந்தமாக நனையத் தொடங்கினாள் மது.


"இரண்டு நிமிஷம் முடிஞ்சாச்சு மது வா போகலாம்" என்று ஸ்ரீதர் அழைக்கவும்


"இன்னும் இரண்டு நிமிஷம் ப்ளீஸ் ஸ்ரீ" என்று விட்டு மீண்டும் மழையில் மது நனையத் தொடங்க


"நீ சரிப்பட்டு வரமாட்ட" என்று மதுவின் கை பிடித்து ஸ்ரீதர் இழுக்க வர அவனையும் சேர்த்து மழையில் இழுத்து விட்டாள் மது.


"ஐயோ!! அம்மா!! தண்ணீ!!" என்றவாறு ஸ்ரீதர் அலற அவனைப் பார்த்து சிரித்தாள் மது.


பழைய அவனது தோழி மது கிடைத்து விட்ட மகிழ்வுடன் நின்ற ஸ்ரீதர்
"கடவுளே!! மது எப்போவும் இப்படியே சந்தோஷமாக இருக்கனும்" என்று மனதினுள் வேண்டிக் கொள்ள அவன் வேண்டுதலை ஏற்று கொண்டாற்போல கோவில் மணியும் அடித்தது.......
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Indha vineeth romba ottraane arul ah...arul shoba va kalyanam pannikaradhu la avanukku enna oru aanandham...mappilai thozhanaame...appidiye thaali kattara nerathula unna izhuthu katta vechuranum da...enna panra nu paakalam...un love ennathukku aagum..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top