• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக்,கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி!!!

சொன்ன மாதிரியே இன்னைக்கு ud போட்டு விட்டேன்.

மறக்காமல் ஒரு லைக் அன்ட் கமெண்ட்ஸ்;);)


vaaya-moodi-pesavum-01.jpg
பயண அலுப்பு தீர ஒரு குளியல் போட்டு விட்டு வந்த அருள் வெளியில் மழை தூரும் சத்தம் கேட்கவும் பால்கனிக் கதவை திறந்து கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான்.


மண் வாசனை அவன் நாசியை நிறைக்க குளிர் காற்றும், மழைச் சாரலும் அவன் மனதில் ஓர் இனம் புரியாத அமைதியை ஏற்படுத்தியது.


நாளை மதுவை நேருக்கு நேராக பார்க்க போகிறோம் என்ற எண்ணம் அவனை ஆனந்த வெள்ளத்தில் திளைக்கச் செய்தது.


அந்த ஏகாந்தமான சூழ் நிலையை அருள் ரசித்து கொண்டிருக்கையில் ஷோபாவின்
"அத்தான்..." என்ற அழைப்பில் சலித்து கொண்டவாறே அருள் திரும்பினான்.


"நீ இன்னும் வீட்டுக்கு கிளம்பாம இங்க என்ன பண்ணிட்டு இருக்க?" என்று அருள் கேட்கவும்


"மழை பெய்யவும் அத்தை கொஞ்சம் லேட்டா போக சொன்னாங்க அதுதான் அத்தான் போகல" என்று ஷோபா கூற


"ஆமா பெரிய லண்டன்ல இருக்கு இவ வீடு. பக்கத்து தெருவுக்கு போறதுக்கு இவ்வளவு பில்டப்பு" என்று முணுமுணுத்துக் கொண்டு நின்றான் அருள்.


"அத்தான் ஐ யம் ஸாரி..நான் ஏதோ தெரியாம அப்படி பேசிட்டேன். அம்மா வீட்டுக்கு வந்து ஒரே அழுகை. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதனால என்ன பேசுறேனு கூட தெரியாம அப்படி நடந்துக்கிட்டேன். மன்னிச்சுக்கோங்க அத்தான் ப்ளீஸ்.." என்று கூறி விட்டு கண்களை ஷோபா துடைத்து கொள்ள அருளிற்கு அவள் மேல் மீண்டும் கோபத்தை காட்ட முடியவில்லை.


"தங்களுடைய பெற்றோர் அழுதால் எந்த பிள்ளையும் கோபம் கொள்ளத்தான் செய்யும் அது தானே இயல்பு!" என்று எண்ணிக் கொண்ட அருள்


"சரி சரி அழாதே!! இனிமே பெரியவங்க கிட்ட பார்த்து பேசனும் சரியா?" என்று கேட்கவும்


"ஹையா!!! அத்தான் என்ன மன்னிச்சுட்டாங்க" என்று அவள் குதூகலமாக சிரிக்க அவளை பார்த்து புன்னகத்து கொண்டான் அருள்.


"அத்தான் வாங்க போய் சாப்பிடலாம். நான், விஜி, அத்தை எல்லோரும் சேர்ந்து வாழைக்காய் பஜ்ஜி செய்துருக்கோம். மழை பெய்யுற டைம்ல சூடான பஜ்ஜி செம்மயா இருக்கும். வாங்க அத்தான்.." என்று அருளின் கை பிடித்து ஷோபா அழைக்க


அவள் கைகளில் இருந்து தன் கையை மெல்ல எடுத்து கொண்ட அருள்
"விஜியும் நீயுமா? அப்போ இன்னைக்கு எல்லோரையும் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட வேண்டியது தான். மறந்து போய் கூட காக்காக்கு நீங்க பண்ணுண பஜ்ஜியை போட்றாதீங்க! அநியாயமாக ஒரு உயிரை கொன்ன பாவம் நம்ம குடும்பத்துக்கு வந்துடக் கூடாது" என்று சிரித்துக் கொண்டே கூறவும்


அவனை முறைத்து பார்த்த ஷோபா
"அத்தான் திஸ் இஸ் டூ மச்..நான் குக்கரி கிளாஸ்க்கு எல்லாம் போறேன் தெரியுமா? நான் நல்லா சமைப்பேன். ஒரு வாட்டி சாப்பிட்டிங்கனா அப்புறம்.."


"நான் ஒரேயடியாக போய் சேர்ந்துடுவேன் அதுதானே?" என்று அருள் கூற
கோபமாக திரும்பி கொண்டாள் ஷோபா.


"சரி சரி நீ குக்கிங் எக்ஸ்பேர்ட் தான் போதுமா? வா அப்படி எல்லாருமா சேர்ந்து என்னத்த பண்ணி வைச்சுருக்கீங்கனு ஒரு கை பார்ப்போம்" என்று விட்டு அருள் செல்ல அவன் பின்னால் முகம் நிறைந்த புன்னகையோடு சென்றாள் ஷோபா.


ஷோபாவும், அருளும் ஒன்றாக சிரித்துக் கொண்டே படியிறங்கி வருவதைப் பார்த்த வத்சலா சுலோச்சனா தன்னிடம் அருளின் திருமணம் பற்றி கூறிய விடயங்களை ஒரு தரம் நினைத்து பார்த்துக் கொண்டார்.


வத்சலா ஏதோ சிந்தித்து கொண்டிருப்பதை பார்த்து அவரருகில் வந்து நின்ற விஜி
"என்னம்மா ஏதோ பலமா யோசிச்சுட்டு இருக்க??" என்று கேட்கவும்


"அங்கே பாரு அருளும், ஷோபாவும் பேசிட்டு வர்றாங்க" என்று வத்சலா கூற அவர்கள் இருவரையும் திரும்பி பார்த்தாள் விஜி.


"ஆமா பேசிட்டு வர்றாங்க இதுல என்னத்தம்மா யோசிக்குறீங்க? ஒரு வேளை அண்ணா கோபமாக பேசிட்டு இப்போ சிரிச்சுட்டு வர்றானேனு யோசிக்குறீங்களா? அண்ணாவைப் பத்தி தெரியும் தானேமா! அஞ்சு நிமிஷத்துக்கு மேல அண்ணனால கோபத்தை வைச்சிக்க முடியாது" என்று விஜி கூறவும்


அவளைப் பார்த்து புன்னகத்த வத்சலா
"அருளை பத்தி எனக்கு தெரியாதா? நான் அதை சொல்லல" என்று கூற


"அப்போ வேற என்ன? அண்ணா இதுக்கு முன்னாடி பேசாம இருந்துட்டு இப்போ தான் பேசுற மாதிரி சொல்ற? இல்லை அந்த ஷோபா இதுக்கு முன்னாடி ஊமையா இருந்தாளா?" என்று விஜி கேட்டாள்.


"கேள்வியும் நானே பதிலும் நானேனு நீயே பேசுனா அப்போ நான் என்ன தான் சொல்லுறது?" என்று வத்சலா கேட்கவும்


"சரி சரி யூ மே ப்ரோசீட் யுவர் ஹானர்" என்று விஜி கூற


"அருளுக்கும், ஷோபாவுக்கும் நல்ல ஜோடி பொருத்தம்லே" என்று வத்சலா கூறவும் திகைப்புடன் அவரை பார்த்தாள் விஜி.


"அம்மா...." என்று அவள் கூறத் தொடங்கவும் அருளும், ஷோபாவும் அவர்கள் அருகில் வரவும் சரியாக இருந்தது.


ஷோபாவையும், அருளையும் வைத்து கொண்டு எதுவும் பேசக்கூடாது என்று நினைத்து கொண்ட விஜி அமைதியாக நின்றாள்.


"என்ன விஜி? நீயும், ஷோபாவும் இன்னைக்கு கிச்சன்ல புல்லா பூந்து விளையாடிட்டீங்க போல. அப்படி என்ன கருமத்தை....ஸாரி ஸாரி என்ன தேவாமிர்தத்தை பண்ணி வைச்சிருக்கிங்கனு பார்க்க ஆவலாக வந்துருக்கேன். போய் எடுத்துட்டு வா" என்று அருள் கூறவும்
எதுவுமே கூறாமல் அவர்கள் செய்து வைத்திருந்த பஜ்ஜியை அருளிடம் கொண்டு வந்து கொடுத்தாள் விஜி.


விஜி அமைதியாக இருப்பதைப் பார்த்து கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்த அருள்
"இவ ஏன் இன்னைக்கு இவ்வளவு சைலண்டா இருக்கா? ஒரு வேளை ஷோபா கோபமாக பேசுனது நினைச்சு கவலைப்படுறாளா? மே பீ இருக்கலாம்" என்று கேள்வியும் அவனே கேட்டு கொண்டு பதிலையும் அவனே உருவாக்கி கொண்டான்.


மழை முற்றாக நிற்கும் வரையிலும் மழையில் ஆட்டம் போட்ட மதுவை இழுத்து செல்லாத குறையாக காரில் கொண்டு போய் அடைத்து வைத்தான் ஸ்ரீதர்.


அவள் காரை விட்டு இறங்குவதற்குள் அவசரமாக காரை ஸ்டார்ட் செய்த ஸ்ரீதர்
"பார்க்குறவங்க எல்லாரும் நான் உன்னை கடத்திட்டுப் போறேனு நினைச்சுக்கப் போறாங்க மது. கொஞ்ச நேரம் வீட்டுக்கு போற வரைக்கும் அமைதியா வா" என்று கூறவும்


அவன் தோளில் தட்டிய மது
"எதுக்கு ஸ்ரீ இப்போ என்ன இப்படி இழுத்துட்டு வந்த? நான் எவ்வளவு ஹேப்பியா மழையில் என்ஜாய் பண்ணிட்டு இருந்தேன். இன்னும் கொஞ்சம் நேரம் விட்டுருந்தா.."


"ஜன்னி புடிச்சு செத்திருப்ப..." என்று ஸ்ரீதர் கூற அவனை முறைத்து பார்த்தாள்.


"நீ இப்போ மழையில நனைஞ்சது மட்டும் அம்மாக்கு தெரிஞ்சதுனு வை நனைஞ்ச உன்ன விட நனைய வைச்ச என்னத்தான் திட்டி தீர்ப்பாங்க" என்று ஸ்ரீதர் கூறவும்


அவனைப் பார்த்து சிரித்த மது
"எங்க அம்மானா உனக்கு அவ்வளவு பயமா ஸ்ரீ? சொல்லவே இல்ல. சரி சரி டோன்ட் வொர்ரி. அம்மா கிட்ட நான் பேசி உன்னை திட்டு வாங்காம நான் காப்பாத்துரேன் ஓகே வா?" என்று கேட்டாள்.


காரை நிறுத்திய ஸ்ரீதர்
"என்னைக் காப்பாத்துரது இருக்கட்டும். உன் அம்மா வாசல்லயே காத்துட்டு நிற்குறாங்க. முதல்ல அவங்க கிட்ட இருந்து நீ தப்பிச்சுக்க. நான் இப்படியே வீட்டுக்கு ஓடிடுறேன்" என்று கூறவும்
திரும்பி பார்த்த மது அப்போது தான் தன்னுடைய வீட்டிற்கு வந்து விட்டோம் என்பதை உணர்ந்தாள்.


வீட்டு வாயிலில் பதட்டத்துடன் அருணா நின்று கொண்டிருப்பதை பார்த்து தயங்கி தயங்கி காரை விட்டு இறங்கினாள் மது.


மது இறங்கியதும் தான் தாமதம் காரை எடுத்துக்கொண்டு பறந்து சென்றான் ஸ்ரீதர்.


"எருமை தனியா என்ன அருணாதேவி கிட்ட மாட்ட வைச்சுட்டு எஸ்கேப் ஆகிட்டான். நாளைக்கு ஆபீஸ்க்கு வரட்டும். அவனை கவனிச்சுக்குறேன்" என்று மனதினுள் கருவிக் கொண்ட மது வீட்டினுள் அடியெடுத்து வைக்க அவள் முன்னால் வந்து நின்றார் அருணா.


அருணாவைப் பார்த்து புன்னகத்தவாறே மெதுவாக வீட்டிற்குள் நுழைந்து கொள்ளப் போன மதுவின் கைகளை பிடித்து கொண்டார் அருணா.


"ம்மா!! நான் நடந்து வந்துட்டு இருக்கும் போது திடீர்னு 'சோ'னு மழை. ஒரு இடம் தேடி நிற்குறதுக்குள்ள புல்லா நனைஞ்சிட்டேன். அப்போ தான் ஸ்ரீ அந்த வழியா வந்தான். மழையில நனைஞ்சா அம்மா திட்டுவாங்க பத்திரமா என்ன வீட்டுல கொண்டு போய் விடச் சொன்னனா அது தான் விட்டுட்டு போய்ட்டான். இது தான்ம்மா நடந்துச்சு. நான் மழையில வேணும்னு ஒண்ணும் நனையலமா" என்று மது ஒரே மூச்சில் கூறி முடிக்கவும்


அவளையே பார்த்து கொண்டு நின்ற அருணா
"நான் உன்கிட்ட என்ன ஆச்சு? ஏது ஆச்சுனு எதுவுமே கேட்கலயே?" என்று கூற


"அய்யய்யோ!!! நானாவே உளறிட்டேனா? இன்னைக்கு அருணா என்னை காலி பண்ணப் போற!!" என்று மனதிற்குள் பயத்தோடு நினைத்து கொண்டு அருணாவைப் பார்த்தாள் மது.
மதுவை அங்கிருந்த ஒரு கதிரையில் அமர வைத்து விட்டு உள்ளே சென்ற அருணா டவலோடு வந்தார்.


"உனக்கு எத்தனை வாட்டி சொல்றது மது? மழையில் நனையாதேனு. உனக்கு தான் மழையில் நனைஞ்சா ஒத்துக்காதுனு தெரியும்லே! எல்லாம் தெரிஞ்சும் இன்னும் சின்ன பொண்ணாவே நடந்துட்டு இருக்க. நாளைக்கு கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு போன அப்புறம் அங்க போயும் இப்படி பண்ணுண வை. மாமியார் நல்லா நாலு சாத்து சாத்துவா அப்போ தான் உனக்கு ரோஷம் வரும்" என்று அருணா கோபமாக பேசி கொண்டே மதுவின் தலையை துவட்டி விட்டு கொண்டிருக்க மதுவோ அவர் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல்


"அம்மா இந்த பக்கம் அப்படியே துவட்டி விடு....அப்படியே மத்த சைட்டும்.....இந்த பக்கமும் மா...அப்படியே கொஞ்சம் லெப்ட் சைட்.....இன்னும் கொஞ்சம் ரைட் சைட் வாம்மா" என்று கூறி கொண்டிருக்க அவள் தலையில் கொட்டு ஒன்று வைத்தார் அருணா.


"நான் என்ன வண்டியை ரிவேர்ஸ் எடுத்துட்டா இருக்கேன்? இந்த சைட் வா..அந்த சைட் வானு சொல்ற? போய் ட்ரெஸை மாத்திட்டு வந்து சாப்பிடு" என்று அருணா கூறி விட்டு செல்ல


"ஹப்பாடா....அருணாதேவியின் பஜனை ஓவர்.." என்ற மது தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.


சிறிது நேரத்தில் சாதாரண காட்டன் குர்தி, ஜீன்ஸிற்கு மாறிக் கொண்ட மது ஹாலில் வந்து அமர்ந்து கொண்டு டிவியை ஆன் செய்து பார்த்து கொண்டிருந்தாள்.


மது வந்து அமர்ந்ததும் ஒரு தட்டு நிறைய மிளகாய் பஜ்ஜி மற்றும் காபி கப் ஒன்றை மதுவின் முன் கொண்டு வந்து வைத்தார் அருணா.

 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
"ஹய்யா!!!! சுடச்சுட பஜ்ஜி, சூடான பில்டர் காபி, வெளியில் மழை....செம்ம செம்ம....
ஆனாலும் அம்மா நீ இதை முதல்ல கொண்டு வந்து தந்திருக்கனும். அவ்வளவு திட்டிட்டு இப்போ கொண்டு வந்து வைச்சிருக்க. நான் எடுத்துக்குவேன்னு நினைச்சியா????......
கண்டிப்பாக எடுத்துக்குவேனே!!!" என்று விட்டு பஜ்ஜி சாப்பிடுவதில் மூழ்கி போனாள் மது.


"நல்ல பொண்ணு..." என்று சிரித்துக்கொண்டே எழுந்து சென்ற அருணா மற்ற வேலைகளை கவனிக்க தொடங்கினார்.


வயிறு முட்ட சாப்பிட்டு முடித்த மதுவிற்கு கண்களை சொருக அப்படியே சாய்ந்து தூங்க தொடங்கினாள்.


இரவுணவு சாப்பிட அருணா எழுப்பவும்
"எனக்கு வேண்டாம்மா..டயர்டா இருக்கு..நீ சாப்பிட்டு தூங்கு...நான் தூங்குறேன் குட் நைட்..." என்று விட்டு தன்னறைக்குள் நுழைந்து கொண்ட மது அப்படியே கட்டிலில் விழுந்து தூங்கத் தொடங்கினாள்.


இரவு தூங்க செல்வதற்கு முன் மதுவின் அறைக்கு வந்த அருணா மதுவை நேராக தூங்க வைத்து விட்டு போர்வையை போர்த்தி விட்டு சிறிது நேரம் மதுவின் தலையை வருடி விட்டு கொண்டு இருந்தார்.


அருணாவிற்கு மதுவை எண்ணி எண்ணி கவலையாகவே இருந்தது.


அவரது அறைக்குள் நுழைந்து கொண்ட அருணா அவரது கணவரின் புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்துக் கொண்டு நின்றார்.


"என்ன மன்னிச்சுடுங்க...மது கிட்ட என்னால எல்லா உண்மையையும் சொல்ல முடியல. என்னைப் பற்றி எல்லாத்தையும் அவகிட்ட சொன்னா அவ தாங்கமாட்டா. எப்படியாவது அவளுக்கு ஒரு துணையைத் தேடி கொடுத்துடலாம்னு நானும் எவ்வளவோ பாடு பட்டேன். ஆனா அவள் புரிஞ்சுக்குறாள் இல்லையே!! நீங்க தான் எப்படியாவது அவ மனசை மாத்தணும்" என்று கண்ணீர் மல்க அருணாசலத்தின் புகைப்படத்தோடு பேசிக் கொண்டிருந்தார் அருணா.


காலை விடியலில் தன் கண்களை சிரமப்பட்டு விழித்து கொண்டாள் மது.


கால், கைகள் எல்லாம் நடுங்கி கொண்டிருக்க தள்ளாடிய படி எழுந்து நின்ற மது தன்னை தொட்டு பார்த்தாள்.


நெருப்பை போன்று கொதித்து கொண்டிருந்தது அவளது உடல்.


"ஐயோ!!! அருணாக்கு மட்டும் எனக்கு காய்ச்சல் வந்துடுச்சுனு தெரிஞ்சுது என்னைக் கொன்னுடுவா. இன்னைக்கு ஆபீஸ்க்கு வேற போகணுமே. லோகநாதன் ஸார் வீட்ல இருந்து டிசைன் செலக்ட் பண்ணிட்டு இன்னைக்கு வருவாங்க. அந்த பொண்ணு கிட்ட வேற பெரிய சத்தியவான் சாவித்திரி ரேஞ்சுக்கு நான் எல்லாம் பண்ணி கொடுப்பேனு வேற பிராமிஸ் பண்ணி சொல்லிட்டு வந்துருக்கேன். இப்போ என்ன பண்ணுறது?" என யோசித்து கொண்டு நின்றாள் மது.


"மது ஆபீஸ் போக டைம் ஆகுதுலே. இன்னும் ரெடி ஆகாம என்ன பண்ணிட்டு இருக்க??" என்று அருணா கேட்கவும்


"இதோ ரெடி ஆகிட்டேன் மா. இரண்டு நிமிஷத்துல வரேன்" என்று கூறியவள் தட்டுத்தடுமாறி மேஜை மேல் இருந்த மாத்திரை இரண்டை போட்டு விட்டு அவசரமாக குளித்து விட்டு தயாராகி ஹாலுக்கு சென்றாள்.


அருணா டிபன் எடுத்து கொண்டு வர அவரிடம் இருந்து அதை வாங்கி கொண்டவள் அவசரமாக சாப்பிட தொடங்கினாள்.


"எதுக்கு இவ்வளவு அவசரம்? மெதுவாக சாப்பிடு மது.." என்றவாறு மதுவின் மேல் கையை வைத்த அருணா


"என்ன மது இது? உடம்பெல்லாம் நெருப்பாக கொதிக்குது? இதுக்கு தான் மழையில் நனையாதேனு படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டியா? முதல்ல வா ஹாஸ்பிடல் போகலாம். இன்னைக்கு ஒண்ணும் நீ ஆபீஸ்க்கு போக வேண்டாம்" என்று பதட்டத்துடன் கூறினார்.


"அம்மா எனக்கு ஒண்ணும் இல்லமா. டெப்லட் போட்டுருக்கேன் சரியாகிடும். அப்படி சரியாகலேனா உடனே வீட்டுக்கு வந்துடுறேன் போதுமா?" என்று மது கூறவும்


"இன்னைக்கு கட்டாயம் போய்த்தான் ஆகணும்னு என்ன அவசியம்? உடம்புக்கு முடியாதப்போ கூட இப்படி கஷ்டப்படணுமா?" என்று அங்கலாய்த்துக் கொண்டார் அருணா.


"ம்மா காலையிலேயே ஆபீஸ்க்கு போறப்பவே போகாதேனு சொன்னா போற வேலை நல்லா நடக்குமா? இன்னைக்கு முக்கியமான ஒரு கஸ்டமர்ஸை வரச் சொல்லி இருக்கேன். அவங்கள பார்த்துட்டு வந்துடுறேன் போதுமா?" என்று மது கூறவும்


"ஏன் அந்த வேலையெல்லாம் ஸ்ரீதர் பார்த்துக்க மாட்டானா? என்னவோ பண்ணு. அப்புறமா ரொம்ப உடம்புக்கு முடியலனு சொல்லிட்டு வா. உன்னை கவனிச்சுக்குறேன்" என்று விட்டு அருணா சென்று விட மதுவும் ஆபீஸ்க்கு கிளம்பி சென்றாள்.


ஆபிஸ்க்கு வந்து சேரும் வரை மதுவின் உடல் நல்ல நிலையில் தான் இருந்தது.


ஒவ்வொரு பைல்களாக மது பார்த்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.


"நோ மது நோ ஒண்ணும் இல்லை" என்று தனக்குள்ளேயே கூறி கொண்டவள் மீண்டும் பைல்களை பார்த்து கொண்டிருக்க வாந்தி வரவும் அவசரமாக அங்கிருந்த ரெஸ்ட் ரூமினுள் நுழைந்து கொண்டாள்.


உடம்பில் இருந்த மொத்த சக்தியும் வடிந்து போக தொய்ந்து போய் நின்றாள் மது.


"அப்போவே அருணா சொல்லிச்சு போகாதேனு!!கேட்டேனா? இப்போ நடக்கக் கூட முடியலயே" என்று புலம்பிக் கொண்டே அங்கிருந்த சுவரில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் மது.


காலையில் எழுந்து அவசரமாக தயாராகி வந்த அருள் அருணா வெடிங் பிளானர்ஸின் முன்னால் நின்று கொண்டிருந்தான்.


"அ..ரு..ணா..வெடிங் பிளானர்ஸ்...பரவாயில்லையே நம்ம ஆளு! ஒரு ஆபீஸை
தனியா மெயிண்டைன் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டாலே! இத்தனை நாள் ஒருத்தர ஒருத்தர் பார்க்காம கண்ணாமூச்சி ஆடினதுக்கு இன்னைக்கு ஒரு புல் ஸ்டாப் வைச்சிட வேண்டியது தான்" என்று அருள் கூறி கொண்டு நிற்க


"இன்னைக்கு நீ பார்க்கலனாலும் இழுத்து கொண்டு போய் உன்ன பார்க்க வைச்சிட்டுதான் நான் மறு வேலை பார்ப்பேன்" என்று கூறி கொண்டே அருள் அருகில் வந்து நின்றான் வினித்.


"சரி உள்ளே போகலாமா?" என்று வினித் கேட்கவும்


"பயமாக இருக்குடா!!" என்று கூறிய அருளை பார்த்து வாய் விட்டு சிரித்தான் வினித்.


"என்னடா நீ? சின்னப் பசங்க பிரின்சிபல் ஆபீஸ்க்கு போறதுக்கு பயப்படற மாதிரி சொல்ற? எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்துடலாம் வா" என்று அருளின் கை பிடித்து வினித் அழைக்க தயங்கி நின்றான் அருள்.


"ஹலோ பாஸ்!!! எப்படி இருக்கீங்க?" என்ற குரலில் இருவரும் திரும்பி பார்க்க அவர்களைப் பார்த்து புன்னகத்தவாறு நின்றான் ஸ்ரீதர்.


"ஹலோ ஸ்ரீதர்!!! நீங்க எங்க இங்கே?" என்று அருள் கேட்கவும்


"அதை நான் கேட்கனும். எங்க ஆபீஸ் முன்னாடி நின்னுட்டு எங்க வந்தேன்னு என்னையே கேட்குறீங்களா?" என்று ஸ்ரீதர் பதில் கேள்வி கேட்டான்.


"உங்க ஆபீஸா??? ஆனா மது..." என்று குழப்பமாக அருளும், வினித்தும் ஒருவரை ஒருவர் பார்க்க


"மதுவும், நானும் தான் இந்த வெடிங் பிளானர்ஸை நடத்துறோம்...அது சரி மதுவை எப்படி உங்களுக்கு தெரியும்?" என்று கேட்டான் ஸ்ரீதர்.


"நான் Logo enterprises கம்பெனி எம்.டி லோகநாதனோட சன்" என்று அருள் கூறவும்


"ஓஹ்....ஓகே ஓகே இப்போ புரியுது. நேற்று மது டிசைன் ஆல்பம் தந்துட்டு வந்தா. நீங்க டிசைன் செலக்ட் பண்ணிட்டு வந்திருக்கீங்க ரைட்?" என்று ஸ்ரீதர் கேட்க


"கரெக்ட்..." என்று கூறினான் வினித்.


"சரி வாங்க உள்ளே போகலாம்" என்று ஸ்ரீதர் முன்னால் செல்ல அவனைத் தொடர்ந்து அருளும், வினித்தும் சென்றனர்.


கண்களை சிரமப்பட்டு திறந்து கொண்ட மது
"ஸ்ரீக்கு போன் பண்ணி வரச் சொல்லலாம். இதுக்கு மேல முடியாது" என்று கூறி கொண்ட மது மெதுவாக ரெஸ்ட் ரூமை விட்டு வெளியேறி வந்தாள்.


தட்டு தடுமாறி மெல்ல அடியெடுத்து வைத்து நடந்து வந்து கொண்டிருந்தாள் மது.


ஸ்ரீதர் மதுவின் அறையின் கதவை தட்ட எந்த பதிலும் இல்லாமல் போகவே கதவைத் திறந்தான்.


தட்டு தடுமாறி நடந்து வந்து கொண்டிருந்த மது கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க ஸ்ரீதர் வரவும்
"வா ஸ்ரீ...." என்றவாறு அவனை பார்த்து புன்னகக்க


"மது என்ன ஆச்சு???" என்றவாறு ஸ்ரீதர் உள்ளே வந்தான்.


"அது...." என்று கூற தொடங்கியவள் கண்களை இருட்டிக் கொண்டு வர அப்படியே மயங்கி சரிந்தாள்.


"மது!!!!!!!!!" என்று கூச்சலிட்டவனாக ஒரே தாவலில் மதுவை நெருங்கி அவளை தன் கரங்களில் தாங்கிக் கொண்டான் அருள்........
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
ஹுஸ்னா டியர்
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Nice epi husna mayankiyavalai kaiyil thanki kittan innum madhu arulai pakkalai ..
Aruna ma kitta enna secret .... waiting eagerly
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஹுஸ்னா டியர்
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai sis...

Nice uD.. sis....

Madhu FBku wait panuna... intha Arunamma.... avangaluku oru FB vanchurukanga polavey... ella Fbun sikiram kondu vanga Husna....

Parra... intha arul payapullaya... cycle gapla.. avala... thangikitan.. logic padi... sri thana first vanthan... intha arul muthikitaney... epadi...:unsure::unsure: Ethuthan...kadhala... Madhu kanna thorakatum... appu irukudi... unaku... arul... esahkiru....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top