• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiyin kaathal thavam - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

how is it going

  • intersting

    Votes: 14 100.0%
  • boring

    Votes: 0 0.0%

  • Total voters
    14

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 7

ஐநூறு ஆண்டுகளுக்கு முன் :

ரதம் நேராக தஞ்சை அரண்மனை நோக்கி செல்வதை பார்த்து, மதியழகி குழப்பம் அடைந்தாள் முதலில். பின்னர் காரணமில்லாமல், தந்தை இங்கு அழைத்து செல்ல மாட்டார் என்பதை அறிந்து, அவள் அந்த அரண்மனையில் வசிக்கும் தன் பாட்டனாரை சந்திக்க, மகிழ்ச்சியுடன் சென்றாள்.

ஆனால் அவளின் அன்னைக்கும், சிறிய அன்னைக்கும் கலக்கம் உண்டானது. விஷயம் ஏதோ பெரியது என்ற அளவில் புரிந்ததே தவிர, அவர்களுக்கும் என்ன விவரம் என்று தெரியாததால், சற்று கவலை கொண்டனர்.

அரசர் இளங்கோவன் மனதிற்குள், தன் மகள் மதியழகியை ஆபத்தில் இருந்து மீட்க, தன் மாமனார் நிச்சயம் ஒரு வழி யோசித்து இருப்பார். அதை தெரிந்து கொள்வதோடு, அவரின் நலத்தையும் நேரில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியே, எல்லோரயும் அழைத்துக் கொண்டு அங்கே விரைந்தார்.

தஞ்சை அரண்மனைக்குள் ரதம் சென்று கொண்டு இருந்தது, இப்பொழுது. மிடார நாட்டு அரண்மனையை விட, மிகப் பெரிய அரண்மனை இந்த தஞ்சை அரண்மனை. இதன் வளாகம் மட்டுமே, 110 பரப்பளவு கொண்டு அமைந்து இருந்தது.

மதியழகிக்கு எப்பொழுதும், இதன் அமைப்பு மற்றும் அந்த அரண்மனையின் பிரமாண்டமும் ஒவ்வொரு முறையும், அவளை வியப்பில் ஆழ்த்தி கொண்டு இருக்கும். அவளின் தாயார் மங்கையர்கரசிக்கு, தன் பிறந்த வீடு வந்த உணர்வு தான் இருக்குமே தவிர அதன் பிரமாண்டம் கண்ணில் பட்டது கிடையாது.

ஆனால் இந்த அரண்மனைக்கு ஒவ்வொரு முறை வரும் பொழுதும், சற்று தயங்கிய படியே வருவார்கள் மதியழகியின் சிறிய அன்னையும், அவளின் தம்பி இளமாறனும். ஏனெனில், குமாரிதேவி குறவர் குலத்தை சேர்ந்தவர்.

அவர் வசித்தது, பாண்டிய நாட்டில். ஒரு முறை சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் நடந்த போரில் அங்கே குறவர் குலத்தை சேர்ந்தவர்கள், சோழ நாட்டு வீரர்களால் அழிக்கப்பட்டு இருந்தனர்.

அதில் அவரின் தாய், தந்தையை பறிகொடுத்து இருந்தார். அதில் இருந்து சோழர்கள் மேல், அதிக வெறுப்பு கொண்டு இருந்தார். இவரும் அப்போரில் சிறிய நூலிலையில், இளங்கோவ வீரரால் காப்பாற்றப்பட்டு இருந்தார்.

அச்சமயத்தில் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அதன் பின் மிடார நாட்டை கைப்பற்றிய கையோடு, மங்கையுடன் இவரையும் கைப்பற்றினார் இளங்கோவன் அரசர். தன் மகளுக்கு போட்டியாக வந்த இவரை, முதலில் யாரும் அறியாமல் சோழ மன்னர் அவமரியாதை செய்து வந்தார்.

மங்கைக்காகவும், இளங்கோவன் மன்னருக்காகவும் பொறுத்துக் கொண்டு இருந்தார் குமாரிதேவி. ஒரு முறை தந்தை இவரை அவமரியாதை செய்வதை பார்த்த மங்கை, தந்தையிடம் இவருக்காக சண்டையிட்டார்.

“தந்தையே! தங்கள் செய்வது சரியில்லை. அவர் என் கணவருக்கு மனைவி மட்டும் அல்ல, என் உடன் பிறவா சகோதரியும் ஆவார். இவரை நீங்கள் அவமரியாதை செய்தால், அது என்னை செய்தது போலாகும்” என்று தந்தையிடம் கூறிவிட்டு, குமாரிதேவியை அங்கு இருந்து அழைத்து சென்றார்.

சோழ மன்னருக்கு மகள் புரியாமல், நடந்து கொள்கிறாள் என்ற கோபம் தான் முதலில் வந்தது. ஆனால் போக போக, இவரின் நடவடிக்கையை பார்த்து, அவரே அசந்து விட்டார்.

மதியழகியை தன் மகளாகவே பாவித்து, அவளை கவனித்து கொண்ட விதம், தன் மகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடந்து கொண்ட விதமும் சோழ நாட்டு மன்னரை வியப்பில் ஆழ்த்தி, அவரையும் தன் மகளாகவே பாவித்து வந்தார்.

ஆனால் குமாரிதேவிக்கு தான், அன்று செய்த அவமரியாதை மனதில் அவரை அறியாமல் எழுந்து, சற்று ஒதுங்கியே இருந்தார். இதை நன்கு அறிந்த மங்கையர்கரசியும், அவரை அவர் போக்கில் விட்டு விட்டார்.

சோழ அரசர் இருந்த பகுதிக்கு, ரதம் வந்து நின்றது. இவர்களின் வருகையை அறிந்த சோழ அரசர், தகுந்த மரியாதையோடு அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, வீரர்களை அழைத்த மன்னர் இளங்கோவன் அவர்களின் உதவியுடன், சோழ மன்னரை அவரின் அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தார்.

“தந்தையே! தாங்கள் இவ்வளவு சிரமத்துடன், எழுந்து வந்து எங்களை வரவேற்க வேண்டுமா? நாங்கள் உங்களை காண, இங்கே வந்து இருப்போமே” என்று கவலையுடன் கூறினார் மங்கை.

“அது முறையாகாது, மகளே! மகள்களும், மருமகனும் வந்து இருக்கும் சமயத்தில் இந்த அரண்மனை சார்பாக நான் வரவேற்ப்பது தான் முறை. உன் அண்ணன் இருந்தால், இப்பொழுது அவன் தான் வரவேற்று இருப்பான்”.

“அவனோ, உனக்கு மணமாகும் முன்பே, நம்மை விட்டு பிரிந்து அந்த கடவுளிடம் சென்று விட்டான்” என்று கூறி மகனின் நினைவில் கண் கலங்கினார்.

அதுவரை அமைதியாக ஒரு ஓரமாக இருந்த குமாரிதேவி, சோழ மன்னர் வருத்தம் கொண்டதோடு மட்டுமல்லாமல், மகள் மங்கையையும் வருத்திக் கொண்டு இருப்பதை பார்த்து, பேச்சை திசை மாற்ற எண்ணி, தன் இருப்பை அவருக்கு உணர்த்தினார்.

“தந்தையே! வருத்தம் கொள்ளாதீர்கள்! தங்களின் மருமகன், மகன் போல் அல்லவா இருக்கிறார் தங்களிடத்தில். பின்னர், ஏன் இந்த கவலை? முதலில் தங்களின் உடல்நிலை பற்றி கூறுங்கள், வைத்தியர் என்ன கூறுகிறார்?” என்று அவரை பார்த்து கேட்டார் குமாரிதேவி.

இத்தனை வருடத்தில், எவ்வளவு கெஞ்சியும் தந்தை என்று அழைக்காதவர், இன்று குமாரிதேவி அவரை தந்தை என்று அழைத்ததை கேட்டு ஆனந்தம் கொண்டார் சோழ மன்னர். அதே மகிழ்ச்சியுடன், அவர் அவர்களிடம் தன் உடல்நிலையை பற்றி விலக்கிவிட்டு, மதியழகி, இளமாறன் பற்றி விசாரித்தார்.

அப்பொழுது தான் அங்கே அந்த அறையில், இருவரும் இல்லாததை உணர்ந்து பெண்கள் இருவரும் திடுக்கிட்டனர். அது மட்டுமின்றி, இவர்கள் பேசிக் கொண்டு இருந்த நேரத்தில், மன்னர் இளங்கோவனும் அங்கு இருந்து சென்று இருந்தார்.

அங்கு இருந்த காவலாளியை அழைத்து விசாரித்ததில், மன்னர் இளங்கோவன் வைத்தியருடன் அடுத்த அறையில், சோழ அரசரின் உடல்நிலை குறித்து பேசிக் கொண்டு இருப்பதாக கூறிவிட்டு, மற்ற இருவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பதாக கூறினர்.

“குமாரி! பார்த்தாயா இருவரையும்! இங்கு அவர்களின் பாட்டனாரை வந்து பார்க்க கூட இல்லாமல், இருவரும் தோட்டத்தில் கதை அளந்து கொண்டு இருக்கிறதை” என்று பொருமினார் மங்கை.

“தமக்கையே! கோபம் வேண்டாம்! இருவரும் சிறு பிள்ளைகள் அல்ல, முக்கியமான விஷயமாக இருக்ககூடும், அதனால் தான் அங்கே பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்”.

“நீங்களே பாருங்கள், இன்னும் சற்று நேரத்தில் இருவரும் இங்கே வந்து, அவர்களின் பாட்டனார் நலம் குறித்து கேட்பார்கள்” என்று குமாரி கூறி முடிக்கையில், இருவரும் உள்ளே நுழைந்து பாட்டனாரிடம் நலம் விசாரித்துக் கொண்டு இருந்தனர்.

“பார்த்தீர்களா அக்கா! ” என்று தமக்கையிடம் கண் ஜாடை காட்டினார் குமாரிதேவி. மங்கையும் அதை புரிந்து கொண்டு, சிரித்தார்.

இவர்கள் இங்கே பேசிக் கொண்டு இருக்கையில், உள்ளே வந்த மன்னர் இளங்கோவன் தன் மனைவிகளிடம் கண் ஜாடை செய்து, மதியையும், இளமாறனையும் அழைத்துக் கொண்டு செல்லுமாறு கூறினான்.

அவர்களும் அதை புரிந்து கொண்டு, அவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறினார்கள். அவர்கள் சென்றதை உறுதிபடுத்திக் கொண்டு, காவலர்களிடம் இனி யாரையும் அறைக்கு உள்ளே விட வேண்டாம் என்று கட்டளையிட்டான்.

அங்கே படுத்து இருந்த சோழ அரசர் பக்கத்தில், ஒரு இருக்கையில் அமர்ந்து அவரிடம் மதியழகிக்கு சூழ்ந்து இருக்கும் ஆபத்தை பற்றி விளக்கி கூறினார். அதைக் கேட்ட சோழ அரசர், சிறிது நேரத்திற்கு சிந்தனை வயப்பட்டார்.

“மருமகனே! எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், மிடார நாட்டு ராஜ்யத்தையும், இந்த அரண்மனையையும் கைப்பற்ற தான் மதியழகியை ஆபத்து சூழ்ந்து இருக்கிறது என்று கருதுகிறேன்” என்று கூறினார் சோழ அரசர்.

“அது மட்டுமே காரணம் இல்லை மாமா, மதியழகி பற்றி தங்களுக்கு நன்றாக தெரியும். காவிரிபூம்பட்டினம் அவள் சென்று இருக்கும் பொழுது, அங்கே வேந்தன் மன்னனின் ஆட்சியையும், அங்கே இருந்த வணிகன் பாசிலையும் சந்தித்து வந்து இருக்கிறாள்”.

“அங்கு இருக்கும் தற்போதைய நிலைமையை பற்றி சொல்லி, என்னை அங்கு உள்ள மக்களை காக்கும் படி கேட்டுக் கொண்டாள். இந்த செய்திகள் எல்லாம் தூதுவன் ஒருவன் மூலம், முன்னரே அறிந்து கொண்டு இருந்ததால், யாருமறியாமல் சில பாதுக்காப்புகளை அங்கே செய்தேன்” .

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
“அங்கே சில விஷயங்கள் முரண்பாடாக இருக்கிறது, இப்பொழுது அவர்களின் குறி, நம் ராஜ்ஜியம் மட்டும் இல்லை என்று தோன்றுகிறது மாமா. அவர்கள் எதற்காக, மதியை குறி வைத்து இருக்கிறார்கள்? ஏன்? என்று தெரியாமல் மிகவும் குழப்பமாக இருக்கிறது மாமா” என்று தன் மாமனும், சோழ மன்னருமான ராஜசிம்மனிடம் கூறிக் கொண்டு இருந்தார் மன்னர் இளங்கோவன்.

“அதற்கான விடை, கூடிய விரைவில் நாம் தெரிந்து கொள்ளலாம். இப்பொழுது நமக்கு, அந்த துறவியிடம் இருந்து செய்தி வந்தால் நலம். தப்பிக்கும் மார்க்கம், அவர் ஒருவரால் தான் கூற முடியும். நம்மால், பாதுகாப்பு மட்டுமே தான் கொடுக்க முடியும் மதியழகிக்கு” என்று அவர் கூறியதை கேட்டு வருத்தம் இருந்தாலும், அதான் நிதர்சனம் என்பதை அறிவார் மன்னர் இளங்கோவன்.

இங்கே இவர்கள் இப்படி கதைத்துக் கொண்டு இருக்க, அங்கே தன் பெண்ணை விசாரித்துக் கொண்டு இருந்தார் மங்கையர்க்கரசி.

“இருவரும் உள்ளே வராமல், அப்படி என்ன வெளியே தீவீரமாக பேசிக் கொண்டு இருந்தீர்கள் மதி. பாட்டனார் உடல்நிலையை பற்றி கேட்டு அறிந்து கொண்டு, அதன் பிறகு கூட இருவரும் சென்று இருக்கலாமே தோட்டத்திற்கு”.

“ஏன்? என்ன விஷயம் அப்படி இருவரும், தங்களுக்குள் தீவீரமாக விவாதித்துக் கொண்டு இருந்தீர்கள்” என்று கேட்டார்.

“தாயே! எல்லாம் என் சகோதரன் மனதில் இருக்கும், சில கேள்விக்கான விடையை தான் கொடுத்துக் கொண்டு இருந்தேன். தங்களுக்கே தெரியும், இன்னும் கூட நம் சிறிய அன்னையும், என் சகோதரனும் இங்கே வர தயங்குவதை”.

“இதற்கு இனி ஒரு முற்றுபுள்ளி வைக்க தான், அவன் தலைக்குள் நன்றாக சில விஷயங்களை எடுத்துக் கூறி அவனை உள்ளே அழைத்து வந்தேன். இதற்கே எனக்கு மூச்சு வாங்கிவிட்டது, அன்னையே”.

“என் தந்தை, இது போல் எத்தனை சமாளித்தாரோ. உண்மையில் தந்தையிடம், நாங்கள் இருவரும் நிறைய கற்று கொள்ள வேண்டும் தாயே” என்று கூறிய மகளை பார்த்து புன்முறுவல் பூத்தார்.

அதன் பின் மங்கையும், குமாரிதேவியும் அரண்மனையில் இருக்கும் சமையல் கூடாரத்துக்கு சென்று விட்டனர். இளமாறன் அங்கே இருக்கும் குதிரைகளை பார்த்து, அதை காண செல்கிறேன் என்று தமக்கையிடம் கூறிவிட்டு அங்கே விரைந்தான்.

தனிமையில் இருந்த மதியழகியோ, மூன்று மாதத்தில் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறிய தந்தை, இப்பொழுது எப்படியாவது உன் மனம் கவர்ந்தவனிடம் சேர்த்து விடுகிறேன், என்று ஏன் கூறினார் என்று தெரியாது தவித்தாள்.

இன்று:

நேற்று இரவு தூக்கம் வரவே, சற்று தாமதமானது ஆதிக்கு. ஆகையால் இன்னும் படுக்கையில், உறங்கிக் கொண்டு இருந்தான் அவன். அவன் அறைக்கு வந்த அவனின் தாய், அவனை எழுப்ப முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

அவன் அசைந்தால் தானே, நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். பார்த்துக் கொண்டு இருந்தவர், அங்கே இருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து வந்து, அதில் உள்ள தண்ணீரை அவன் மேல் ஊற்றி எழுப்பினார்.

எழுந்தவன், யார் தன்னை இப்படி எழுப்ப்பியது என்று முதலில் பார்த்தான். அங்கே தன் தாய், கையில் பாட்டிலுடன் நிற்பதை பார்த்து அவரை முறைத்தான்.

“என்ன டா முறைப்பு? எவ்வளவு நேரம் தான், நான் உன்னை எழுப்பி விடுறது. உன் பொண்டாட்டியை காலையில் இருந்து காணோம், எங்க போனான்னு தெரியல? சீக்கிரம் எழுந்து, போய் அவளை தேடி கூட்டிட்டு வா டா ” என்று கூறியவரை கொலைவெறியுடன் பார்த்தான்.

“ஏன்? ஏன் இப்படி? அவளை என் பொண்டாட்டி அப்படினே, நீங்க முடிவு பண்ணிடீங்களா!” என்று கத்தினான்.

“என்ன டா, இப்படி சொல்லுற! நேத்து நீ கூட தான், என் பொண்டாட்டி அப்படின்னு கூட சொன்னியே!” என்று கூறிய தாயை பார்த்து மேலும் முறைத்தான்.

“உங்க கூட பேசினேன் பாருங்க, அதான் எனக்கும் அப்படி தொத்திகிடுச்சு. நல்ல வேளை! அவளே இங்க இருந்து போயிட்டா. இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு, கடவுளே! என்னை காப்பாத்தினதுக்கு நன்றி” என்று கூறியவனை இப்பொழுது கொலைவெறியுடன் பார்ப்பது, அவனின் தாயின் முறை ஆனது.

“மகனே ஆதி! உனக்கு நம்ம ரமணன் சொன்னது, எல்லாம் மறந்து போச்சு போல. அவளுக்கு நினைவு திரும்புற வரைக்கும், உன் கஸ்டடி ல தான் வைக்க சொன்னான்”.

“இப்போ அவ காணாம போயிட்டா, வெளியே ஏதாவது ஒரு ஆபத்துல அவ மாட்டினா, பழி உன் மேல மட்டும் இல்லை, எங்க மேலயும் சேர்த்து தான் விழும்” என்று அங்கு அப்பொழுது உள்ளே வந்த ஆதியின் தந்தை கூறினார்.

“அம்மா காமாட்சி! இப்படி புருஷனும், பொண்டாட்டியும் சேர்ந்து என்னை ஒரு பைத்தியம் கிட்ட, மாட்ட வச்சது கொஞ்சம் கூட சரியில்லை சொல்லிட்டேன்” என்று கூறியவனை ஒரு அடி அடித்தார், அவனின் அன்னை.

“அவ ஒன்னும் பைத்தியம் கிடையாது, நல்லா தான் இருக்கா. நீ முதல போய், அவளை கூட்டிட்டு வா சீக்கிரம்” என்று கட்டளையிடும் குரலில் கூறினார்.

“எது! ப்ரானனாதா! தங்களை இத்தனை அருகில் பார்க்கும், பாக்கியம் பெற என்ன தவம் செய்தேனோ! என் காதல் தவத்தினை, உங்கள் காதல் எனக்கு கிடைத்தால் என் தவம் முழுமை பெறும் என் நாதனே!”.

“இப்படி ஒரு நாளைக்கு, கிட்டத்தட்ட நூறு தடவைக்கு மேல சொல்லி என்னை கடுப்பு ஏத்தி விடுறவ, நல்லா தான் இருப்பா. அவ எப்படி பைத்தியமா இருப்பா?” என்று பொருமிவிட்டே குளிக்க சென்றான்.

இப்படி கூறி சென்றவனை பார்த்து, அந்த தாயின் மனம் கதறி அழுதது. கணவனின் தோள் சாய்ந்து, ஆறுதல் அடைந்தவர் பின்பு மகன் வருவதற்கு முன், இருவரும் கீழே ஹாலிற்கு சென்றனர்.

ஆதி, அவனின் வலது கை விஷ்வாவிற்கு அழைத்து வர சொல்லி இருந்தான் வீட்டிற்கு. ஆகையால், அவனும் கீழே ஹாலில் இவனின் வருகைக்காக காத்து கொண்டு இருந்தான்.

ஹாலிற்கு வந்த ஆதி, இத்தனை நாள் மனதை உறுத்திக் கொண்டு இருந்த கேள்வியினை கேட்டான் இருவரிடமும்.

“சினி பீல்ட் ல, நான் எத்தனையோ பொண்ணுங்களை பார்த்து இருக்கேன். அது உங்களுக்கும் தெரியும், அவ்வளவு ஏன் நீங்க எனக்கு பெண் பார்க்க தரகரை விட்டு போடோஸ் வாங்கி பார்த்துட்டு, ஆதிக்கு இந்த பொண்ணு சரி வர மாட்டா சொல்லி, நீங்களே நிறைய ரிஜெக்ட் பண்ணிட்டீங்க”.

“அப்படி இருக்கும் பொழுது, இந்த (பைத்தியம் என்று சொல்ல வந்தவன் நிறுத்தி) பொன்னை மட்டும் எப்படி எனக்கு சரி வருவான்னு முடிவு பண்ணீங்க?” என்று வெகு அழுத்தமாக கேட்டான், அதில் உண்மையான பதில் வேண்டும் என்று.

“இப்போவாவது, கேட்கணும் தோனுச்சே! ஹாஸ்பிடல் ல இப்படி ஒரு பொண்ணு அட்மிட் பண்ணி இருக்கன்னு, தெரிஞ்ச அடுத்த நிமிஷம் உனக்கு தெரியாம, நானும் அம்மாவும் அந்த பொன்னை போய் பார்த்தோம்”.

“அப்போ அவ இளவரசி மாதிரி, அந்த கால டிரஸ் ல சும்மா அவ்வளவு அழகா இருந்தா. அது மட்டுமில்லாம, அதுக்கு முன்தினம் தான் செட் ல நீ ராஜா வேஷம் போட்டு ட்ரையல் பார்த்துகிட்டு இருந்த. அப்போ அந்த பொன்னை, உன் கூட நிற்க வச்சு பார்க்கும் பொழுது, இந்த ராஜாக்கு ஏத்த ராணி அவ தான்னு முடிவு பண்ணிட்டோம்”.

“அப்புறம் மெதுவா அந்த பொண்ணு கிட்ட பேச்சு கொடுக்கும் பொழுது, அவளோட பேச்சு, அப்புறம் பெரியவங்களுக்கு அவ கொடுக்கிற மரியாதை இப்படி எல்லாம் பார்த்து அவ தான் உனக்குன்னு டிசைட் பண்ணிட்டோம்” என்று கூறிய தந்தையை பார்த்து முழித்தான்.

அவன் மண்டைக்குள் அப்பொழுது ஒலித்தது “என்ன குடும்பம் டா இது!” என்பது தான். அவனின் மைன்ட் வாய்ஸ் கேட்ச் செய்தது போல், அவனை பார்த்து முறைத்தார் காமாட்சி.

“எல்லாம் நீ ஒழுங்கா இருந்தா, இந்த குடும்பமும் நல்லா இருந்து இருக்கும். சும்மா இங்க நிற்காம, போய் என் மருமகளை கூட்டிட்டு வா” என்று கூறவும், உடனே வேகமாக விஷ்ணுவை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

காரில் செல்லும் பொழுது, அமைதியாக வந்தான் விஷ்வா. இப்பொழுது ஆதி இருக்கும் மனநிலையில், பேச்சு கொடுத்தால் கடித்து குதறிவிடுவான் என்று தெரியும் அவனுக்கு.

ஆனால், ஆதி அவனை அமைதியாக இருக்க விடவில்லை. அவனின் கோபத்தை எல்லாம், விஷ்வா மேல் காட்டிக் கொண்டு இருந்தான். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், விஷ்வா கத்திவிட்டான்.

என்றும் இல்லாமல், இன்று விஷ்வா கத்தவும் அதிர்ந்த ஆதி, வண்டியை ஓரமாக நிறுத்தினான்.

“ஏன் டா ஆதி? உனக்கு என்ன பிரச்சனை இப்போ? அந்த பொண்ணுக்கு நினைவு தான் இல்லையே தவிர, மத்தபடி நல்ல பொண்ணு தான். அந்த பொண்ணை, அப்பாவும், அம்மாவும் கையை காட்டினா காரணம் இல்லாம இருக்காது”.

“நீயேன் இதுக்கு, இவ்வளவு ரியாக்ட் செய்ற? அந்த பொண்ணை உனக்கு பிடிக்கல அப்படினா, இவ்வளவு தூரம் உன்னை போர்ஸ் பண்ண மாட்டாங்க. ஆனா, உனக்கும் அவளை பிடிச்சு இருக்கே, அப்புறம் ஏன் இப்படி செய்ற?” என்று அவனின் நண்பனாக கேட்டான் விஷ்வா.

அவன் என்ன சொல்லுவான்! பாவம்! அவனுமே பார்த்த முதலில் இருந்தே, அவள் மேல் காதல் கொண்டானே! அவனின் பயம் எல்லாம், எங்கே நினைவு தெளிந்து, யார் நீ? என்று கேட்டுவிட்டு அவனை விட்டு பிரிந்து சென்றால், அது அவனால் தாங்க முடியாதே!

அந்த ஒரு காரணத்திற்காக, அவன் இதுநாள் வரை அவளிடம் நெருக்கம் காட்டியதுமில்லை, பேசி மனதை மாற்றியதுமில்லை. இதை அவன் தனக்குள்ளே வைத்து, புழுங்கிக் கொண்டு இருந்தான்.

அப்பொழுது அங்கே எதிரில் இருக்கும் ஒரு கடையில், மதியின் குரல் ஓங்கி ஒலிக்கவும், சட்டென்று காரில் இருந்து இறங்கி வேகமாக அங்கே ஓடினான். அங்கே அவன் கண்ட காட்சி, அவனிற்கு அவள் மேல் இன்னும் காதலை ஆழமாக மனதில் பதிய செய்தது.

தொடரும்....

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
hi friends,

i am so sorry for the delay friends.. saththiyama time illai udane update panna, ellorukkum reply panna .. kandippa ini ellorukkum reply panniduven.. and ini eppadiyum ud konjam ennala mudinja varai seekiram kodukka try pannuren friends ..
 
sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
:love::love::love::love:superb ud sis:love::love::love:mathiyai sulnthirukum aapathu ennavo:unsure::unsure::unsure:waiting sis:):)
அவன் என்ன சொல்லுவான்! பாவம்! அவனுமே பார்த்த முதலில் இருந்தே, அவள் மேல் காதல் கொண்டானே! அவனின் பயம் எல்லாம், எங்கே நினைவு தெளிந்து, யார் நீ? என்று கேட்டுவிட்டு அவனை விட்டு பிரிந்து சென்றால், அது அவனால் தாங்க முடியாதே!
love at first sighta:whistle::whistle::whistle::whistle: amnesia patient ninaivu vantha thanai maranthuruvanu than thalaivar othungi irukara:unsure::unsure::unsure::unsure:
 
Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
அக்காலத்திலும் இக்காலத்திலும் பயணிப்பது சுகமாய் உள்ளது....
அக்கால மதியின் மதிநுட்பம் வியக்க வைக்கிறது..
மதியைச் சுற்றியுள்ள ஆபத்து என்னவோ???
ஆதியின் மனதில் காதலை ஆழச் செய்யும் விஷயம் என்னவோ???
 
KrishnaPriya

புதிய முகம்
Joined
Feb 3, 2018
Messages
7
Reaction score
11
Location
Chennai
“அங்கே சில விஷயங்கள் முரண்பாடாக இருக்கிறது, இப்பொழுது அவர்களின் குறி, நம் ராஜ்ஜியம் மட்டும் இல்லை என்று தோன்றுகிறது மாமா. அவர்கள் எதற்காக, மதியை குறி வைத்து இருக்கிறார்கள்? ஏன்? என்று தெரியாமல் மிகவும் குழப்பமாக இருக்கிறது மாமா” என்று தன் மாமனும், சோழ மன்னருமான ராஜசிம்மனிடம் கூறிக் கொண்டு இருந்தார் மன்னர் இளங்கோவன்.

“அதற்கான விடை, கூடிய விரைவில் நாம் தெரிந்து கொள்ளலாம். இப்பொழுது நமக்கு, அந்த துறவியிடம் இருந்து செய்தி வந்தால் நலம். தப்பிக்கும் மார்க்கம், அவர் ஒருவரால் தான் கூற முடியும். நம்மால், பாதுகாப்பு மட்டுமே தான் கொடுக்க முடியும் மதியழகிக்கு” என்று அவர் கூறியதை கேட்டு வருத்தம் இருந்தாலும், அதான் நிதர்சனம் என்பதை அறிவார் மன்னர் இளங்கோவன்.

இங்கே இவர்கள் இப்படி கதைத்துக் கொண்டு இருக்க, அங்கே தன் பெண்ணை விசாரித்துக் கொண்டு இருந்தார் மங்கையர்க்கரசி.

“இருவரும் உள்ளே வராமல், அப்படி என்ன வெளியே தீவீரமாக பேசிக் கொண்டு இருந்தீர்கள் மதி. பாட்டனார் உடல்நிலையை பற்றி கேட்டு அறிந்து கொண்டு, அதன் பிறகு கூட இருவரும் சென்று இருக்கலாமே தோட்டத்திற்கு”.

“ஏன்? என்ன விஷயம் அப்படி இருவரும், தங்களுக்குள் தீவீரமாக விவாதித்துக் கொண்டு இருந்தீர்கள்” என்று கேட்டார்.

“தாயே! எல்லாம் என் சகோதரன் மனதில் இருக்கும், சில கேள்விக்கான விடையை தான் கொடுத்துக் கொண்டு இருந்தேன். தங்களுக்கே தெரியும், இன்னும் கூட நம் சிறிய அன்னையும், என் சகோதரனும் இங்கே வர தயங்குவதை”.

“இதற்கு இனி ஒரு முற்றுபுள்ளி வைக்க தான், அவன் தலைக்குள் நன்றாக சில விஷயங்களை எடுத்துக் கூறி அவனை உள்ளே அழைத்து வந்தேன். இதற்கே எனக்கு மூச்சு வாங்கிவிட்டது, அன்னையே”.

“என் தந்தை, இது போல் எத்தனை சமாளித்தாரோ. உண்மையில் தந்தையிடம், நாங்கள் இருவரும் நிறைய கற்று கொள்ள வேண்டும் தாயே” என்று கூறிய மகளை பார்த்து புன்முறுவல் பூத்தார்.

அதன் பின் மங்கையும், குமாரிதேவியும் அரண்மனையில் இருக்கும் சமையல் கூடாரத்துக்கு சென்று விட்டனர். இளமாறன் அங்கே இருக்கும் குதிரைகளை பார்த்து, அதை காண செல்கிறேன் என்று தமக்கையிடம் கூறிவிட்டு அங்கே விரைந்தான்.

தனிமையில் இருந்த மதியழகியோ, மூன்று மாதத்தில் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறிய தந்தை, இப்பொழுது எப்படியாவது உன் மனம் கவர்ந்தவனிடம் சேர்த்து விடுகிறேன், என்று ஏன் கூறினார் என்று தெரியாது தவித்தாள்.

இன்று:

நேற்று இரவு தூக்கம் வரவே, சற்று தாமதமானது ஆதிக்கு. ஆகையால் இன்னும் படுக்கையில், உறங்கிக் கொண்டு இருந்தான் அவன். அவன் அறைக்கு வந்த அவனின் தாய், அவனை எழுப்ப முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

அவன் அசைந்தால் தானே, நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். பார்த்துக் கொண்டு இருந்தவர், அங்கே இருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து வந்து, அதில் உள்ள தண்ணீரை அவன் மேல் ஊற்றி எழுப்பினார்.

எழுந்தவன், யார் தன்னை இப்படி எழுப்ப்பியது என்று முதலில் பார்த்தான். அங்கே தன் தாய், கையில் பாட்டிலுடன் நிற்பதை பார்த்து அவரை முறைத்தான்.

“என்ன டா முறைப்பு? எவ்வளவு நேரம் தான், நான் உன்னை எழுப்பி விடுறது. உன் பொண்டாட்டியை காலையில் இருந்து காணோம், எங்க போனான்னு தெரியல? சீக்கிரம் எழுந்து, போய் அவளை தேடி கூட்டிட்டு வா டா ” என்று கூறியவரை கொலைவெறியுடன் பார்த்தான்.

“ஏன்? ஏன் இப்படி? அவளை என் பொண்டாட்டி அப்படினே, நீங்க முடிவு பண்ணிடீங்களா!” என்று கத்தினான்.

“என்ன டா, இப்படி சொல்லுற! நேத்து நீ கூட தான், என் பொண்டாட்டி அப்படின்னு கூட சொன்னியே!” என்று கூறிய தாயை பார்த்து மேலும் முறைத்தான்.

“உங்க கூட பேசினேன் பாருங்க, அதான் எனக்கும் அப்படி தொத்திகிடுச்சு. நல்ல வேளை! அவளே இங்க இருந்து போயிட்டா. இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு, கடவுளே! என்னை காப்பாத்தினதுக்கு நன்றி” என்று கூறியவனை இப்பொழுது கொலைவெறியுடன் பார்ப்பது, அவனின் தாயின் முறை ஆனது.

“மகனே ஆதி! உனக்கு நம்ம ரமணன் சொன்னது, எல்லாம் மறந்து போச்சு போல. அவளுக்கு நினைவு திரும்புற வரைக்கும், உன் கஸ்டடி ல தான் வைக்க சொன்னான்”.

“இப்போ அவ காணாம போயிட்டா, வெளியே ஏதாவது ஒரு ஆபத்துல அவ மாட்டினா, பழி உன் மேல மட்டும் இல்லை, எங்க மேலயும் சேர்த்து தான் விழும்” என்று அங்கு அப்பொழுது உள்ளே வந்த ஆதியின் தந்தை கூறினார்.

“அம்மா காமாட்சி! இப்படி புருஷனும், பொண்டாட்டியும் சேர்ந்து என்னை ஒரு பைத்தியம் கிட்ட, மாட்ட வச்சது கொஞ்சம் கூட சரியில்லை சொல்லிட்டேன்” என்று கூறியவனை ஒரு அடி அடித்தார், அவனின் அன்னை.

“அவ ஒன்னும் பைத்தியம் கிடையாது, நல்லா தான் இருக்கா. நீ முதல போய், அவளை கூட்டிட்டு வா சீக்கிரம்” என்று கட்டளையிடும் குரலில் கூறினார்.

“எது! ப்ரானனாதா! தங்களை இத்தனை அருகில் பார்க்கும், பாக்கியம் பெற என்ன தவம் செய்தேனோ! என் காதல் தவத்தினை, உங்கள் காதல் எனக்கு கிடைத்தால் என் தவம் முழுமை பெறும் என் நாதனே!”.

“இப்படி ஒரு நாளைக்கு, கிட்டத்தட்ட நூறு தடவைக்கு மேல சொல்லி என்னை கடுப்பு ஏத்தி விடுறவ, நல்லா தான் இருப்பா. அவ எப்படி பைத்தியமா இருப்பா?” என்று பொருமிவிட்டே குளிக்க சென்றான்.

இப்படி கூறி சென்றவனை பார்த்து, அந்த தாயின் மனம் கதறி அழுதது. கணவனின் தோள் சாய்ந்து, ஆறுதல் அடைந்தவர் பின்பு மகன் வருவதற்கு முன், இருவரும் கீழே ஹாலிற்கு சென்றனர்.

ஆதி, அவனின் வலது கை விஷ்வாவிற்கு அழைத்து வர சொல்லி இருந்தான் வீட்டிற்கு. ஆகையால், அவனும் கீழே ஹாலில் இவனின் வருகைக்காக காத்து கொண்டு இருந்தான்.

ஹாலிற்கு வந்த ஆதி, இத்தனை நாள் மனதை உறுத்திக் கொண்டு இருந்த கேள்வியினை கேட்டான் இருவரிடமும்.

“சினி பீல்ட் ல, நான் எத்தனையோ பொண்ணுங்களை பார்த்து இருக்கேன். அது உங்களுக்கும் தெரியும், அவ்வளவு ஏன் நீங்க எனக்கு பெண் பார்க்க தரகரை விட்டு போடோஸ் வாங்கி பார்த்துட்டு, ஆதிக்கு இந்த பொண்ணு சரி வர மாட்டா சொல்லி, நீங்களே நிறைய ரிஜெக்ட் பண்ணிட்டீங்க”.

“அப்படி இருக்கும் பொழுது, இந்த (பைத்தியம் என்று சொல்ல வந்தவன் நிறுத்தி) பொன்னை மட்டும் எப்படி எனக்கு சரி வருவான்னு முடிவு பண்ணீங்க?” என்று வெகு அழுத்தமாக கேட்டான், அதில் உண்மையான பதில் வேண்டும் என்று.

“இப்போவாவது, கேட்கணும் தோனுச்சே! ஹாஸ்பிடல் ல இப்படி ஒரு பொண்ணு அட்மிட் பண்ணி இருக்கன்னு, தெரிஞ்ச அடுத்த நிமிஷம் உனக்கு தெரியாம, நானும் அம்மாவும் அந்த பொன்னை போய் பார்த்தோம்”.

“அப்போ அவ இளவரசி மாதிரி, அந்த கால டிரஸ் ல சும்மா அவ்வளவு அழகா இருந்தா. அது மட்டுமில்லாம, அதுக்கு முன்தினம் தான் செட் ல நீ ராஜா வேஷம் போட்டு ட்ரையல் பார்த்துகிட்டு இருந்த. அப்போ அந்த பொன்னை, உன் கூட நிற்க வச்சு பார்க்கும் பொழுது, இந்த ராஜாக்கு ஏத்த ராணி அவ தான்னு முடிவு பண்ணிட்டோம்”.

“அப்புறம் மெதுவா அந்த பொண்ணு கிட்ட பேச்சு கொடுக்கும் பொழுது, அவளோட பேச்சு, அப்புறம் பெரியவங்களுக்கு அவ கொடுக்கிற மரியாதை இப்படி எல்லாம் பார்த்து அவ தான் உனக்குன்னு டிசைட் பண்ணிட்டோம்” என்று கூறிய தந்தையை பார்த்து முழித்தான்.

அவன் மண்டைக்குள் அப்பொழுது ஒலித்தது “என்ன குடும்பம் டா இது!” என்பது தான். அவனின் மைன்ட் வாய்ஸ் கேட்ச் செய்தது போல், அவனை பார்த்து முறைத்தார் காமாட்சி.

“எல்லாம் நீ ஒழுங்கா இருந்தா, இந்த குடும்பமும் நல்லா இருந்து இருக்கும். சும்மா இங்க நிற்காம, போய் என் மருமகளை கூட்டிட்டு வா” என்று கூறவும், உடனே வேகமாக விஷ்ணுவை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

காரில் செல்லும் பொழுது, அமைதியாக வந்தான் விஷ்வா. இப்பொழுது ஆதி இருக்கும் மனநிலையில், பேச்சு கொடுத்தால் கடித்து குதறிவிடுவான் என்று தெரியும் அவனுக்கு.

ஆனால், ஆதி அவனை அமைதியாக இருக்க விடவில்லை. அவனின் கோபத்தை எல்லாம், விஷ்வா மேல் காட்டிக் கொண்டு இருந்தான். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், விஷ்வா கத்திவிட்டான்.

என்றும் இல்லாமல், இன்று விஷ்வா கத்தவும் அதிர்ந்த ஆதி, வண்டியை ஓரமாக நிறுத்தினான்.

“ஏன் டா ஆதி? உனக்கு என்ன பிரச்சனை இப்போ? அந்த பொண்ணுக்கு நினைவு தான் இல்லையே தவிர, மத்தபடி நல்ல பொண்ணு தான். அந்த பொண்ணை, அப்பாவும், அம்மாவும் கையை காட்டினா காரணம் இல்லாம இருக்காது”.

“நீயேன் இதுக்கு, இவ்வளவு ரியாக்ட் செய்ற? அந்த பொண்ணை உனக்கு பிடிக்கல அப்படினா, இவ்வளவு தூரம் உன்னை போர்ஸ் பண்ண மாட்டாங்க. ஆனா, உனக்கும் அவளை பிடிச்சு இருக்கே, அப்புறம் ஏன் இப்படி செய்ற?” என்று அவனின் நண்பனாக கேட்டான் விஷ்வா.

அவன் என்ன சொல்லுவான்! பாவம்! அவனுமே பார்த்த முதலில் இருந்தே, அவள் மேல் காதல் கொண்டானே! அவனின் பயம் எல்லாம், எங்கே நினைவு தெளிந்து, யார் நீ? என்று கேட்டுவிட்டு அவனை விட்டு பிரிந்து சென்றால், அது அவனால் தாங்க முடியாதே!

அந்த ஒரு காரணத்திற்காக, அவன் இதுநாள் வரை அவளிடம் நெருக்கம் காட்டியதுமில்லை, பேசி மனதை மாற்றியதுமில்லை. இதை அவன் தனக்குள்ளே வைத்து, புழுங்கிக் கொண்டு இருந்தான்.

அப்பொழுது அங்கே எதிரில் இருக்கும் ஒரு கடையில், மதியின் குரல் ஓங்கி ஒலிக்கவும், சட்டென்று காரில் இருந்து இறங்கி வேகமாக அங்கே ஓடினான். அங்கே அவன் கண்ட காட்சி, அவனிற்கு அவள் மேல் இன்னும் காதலை ஆழமாக மனதில் பதிய செய்தது.

தொடரும்....

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Nice ud uma ???Adiyum madhi ya virumburara super super aana avar baya phadardhu kuda correctu dhaney ena ena nadaka phogudho waiting ?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top