• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiyin Kadhal Thavam 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How do you feel about the story?

  • excellent

    Votes: 12 75.0%
  • good

    Votes: 4 25.0%
  • need improvment

    Votes: 0 0.0%

  • Total voters
    16

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
வணக்கம் மக்களே! அழகியின் காதல் தவம் 3வது பகுதி அப்டேட் செய்துட்டாங்க உமா தீபக். படித்துவிட்டு கரத்துக்களை இங்கே பகிரவும்.

தவம் 3
அத்தியாயம் – 3

ஐநூறு வருடங்களுக்கு முன்பு:

அரண்மனைக்குள் நுழைந்ததுமே, அங்கே இருந்த மாற்றங்களை கண்டு கொண்டாள் மதியழகி. தோழிகளுக்கு யாருமறியாமல், கண் ஜாடை செய்து சுற்றி உள்ளவற்றை கவனிக்குமாறு பணித்தாள்.

என்ன தான் தோழிகளை கவனிக்க சொல்லி கூறினாலும், அவளும் கவனித்துக் கொண்டே தான் வந்தாள். அப்பொழுது அங்கே அமைச்சர் சிவனந்தர், இவளை நோக்கி வந்தார்.

அவரின் முகத்தை உற்று கவனித்தவளுக்கு, அதில் தெரிந்த பதற்றம் அவளை சற்று யோசிக்க வைத்தது.

“எதற்காக இந்த பதற்றம்? ஏன்?” என்ற கேள்வி அவளை வண்டாய் குடைந்தது.

அதற்குள் அவரே இவளை நெருங்கி, வரவேற்று அவளை உள்ளே அழைத்து சென்றார்.

“அமைச்சரே! என்னிடம் ஏதும், முக்கியமாக கூற வேண்டுமா?” என்று சற்று மெதுவாக அவருக்கு மட்டும் கேட்கும் படி வினவினாள்.

“ஆம்! இளவரசி தாங்கள் எதற்காக இங்கே விஜயம் செய்து இருக்கிறீர்கள்? இங்கே இப்பொழுது எதுவும் சரியில்லை!”.

“நீங்கள் உள்ளே மன்னரை பார்த்துவிட்டு, உடனே இங்கு இருந்து புறப்படுங்கள். தங்கள் தந்தையாரிடம் மட்டும், விஷயத்தை கூறி இங்கே வர செய்யுங்கள், அது போதும்” என்று அமைச்சர் சுற்றும், முற்றும் ஒரு பயந்த பார்வை பார்த்துக் கொண்டே வந்தார்.

“அமைச்சரே! யாரும் நம்மை பார்க்கவில்லை, ஆகையால் தைரியமாக என்னிடம் என்ன விவரம் என்று கூறுங்கள். ஏற்கனவே, என் தந்தைக்கு செய்தி அனுப்பியாகிவிட்டது”.

“ஆகையால், தாங்கள் கவலை கொள்ளாமல், என்னிடம் விஷயத்தை கூறுங்கள்” என்று அவரை தைரியப்படுத்தி, அவரிடம் இருந்து விஷயத்தை கறந்தாள் மதியழகி.

அவர் கூறிய விஷயங்களை கேட்டவள், மனதில் சொல்லொன்னா வேதனையும், சிலர் மேல் ஆத்திரமும் வந்தது. இந்த விஷயத்தை தன் தந்தையால் மட்டுமே, சரி செய்ய முடியும் என்பதை முழுமையாக நம்பினாள்.

ஆகையால் அவள் விஷயம் தனக்கு தெரிந்தது போல், காட்டிக் கொள்ளாமல் அங்கே அரசபைக்குள் நுழைந்தாள் தன் தோழிகளோடும், அமைச்சரோடும்.

“வருக வேண்டும்! இளவரசி மதியழகி! தாங்கள் நலமா? தங்கள் தந்தையார் மன்னர் இளங்கோவன் நலமா?” என்று அவளை வரவேற்று, விசாரித்துக் கொண்டு இருந்தார் இந்த காவிரிபூம்பட்டனத்தின் மன்னர் வேந்தன்.

கோபக்கார மன்னர், என்று எல்லோராலும் அழைக்கப்படும் இவருக்கு, இளவரசி மதியழகியை மணம் புரிய வேண்டும் என்பது அவரின் பல நாள் கனவு.

ஆனால் அவரால் கனவு மட்டுமே காண முடிந்ததே தவிர, இளவரசியை நெருங்க கூட முடியவில்லை. இன்று இங்கே தன்னருகில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவும், அவருக்கு சந்தோஷத்தில் என்ன செய்ய வேண்டுமென்று கூட தோன்றவில்லை.

“நான் நலம்! என் தந்தையாரும் நலம்! தாங்கள் நலமா? இங்கே என் தோழிகளோடு சுற்றி பார்க்க வந்தேன், அரண்மனை கண்ணில் படவும் அப்படியே தங்களையும் பார்த்து செல்ல வேண்டும் என்று உள்ளே வந்தேன்” என்று கூறிய மதியழகியை பார்த்து பேரானந்தம் கொண்டார் வேந்தன் மன்னர்.

“நானும் நலம் இளவரசி! அவ்வளவு தூரம் வந்து இருப்பது களைப்பாக இருக்கும், சற்று பசியாறிவிட்டு ஓய்வு எடுதுதுவிட்டு அதன் பின் செல்லலாமே இளவரசி” என்று விருந்தோம்பல் செய்தார் மன்னர் வேந்தன்.

“தங்களின் விருந்தோம்பலுக்கு, நன்றி மன்னா! எங்களுக்கு பசி இல்லை, எதார்த்தமாக இந்த வழியே வந்ததால், தங்களையும் இந்த அரண்மனையையும் பார்த்து விட்டு செல்ல வந்தோம்”.

“அரண்மனையை சுற்றி பார்க்க, இப்பொழுது நாங்கள் செல்லலாமா?” என்று அவரின் விருந்தோம்பலை தவிர்த்துவிட்டு கேட்டாள் மதியழகி.

“தாரளமாக சுற்றி பார்க்க செல்லலாம், இளவரசி. யார் அங்கே? இளவரசி மதியழகியையும், அவரின் தோழிகளையும் அழைத்து சென்று நம் அரண்மனையை சுற்றி காட்டுங்கள்” என்று கட்டளையிட்டார், அந்த பணி பெண்களிடம்.

மதியழகி கண்களாலே, அவரிடம் விடை பெற்றுவிட்டு அந்த பணி பெண்கள் வழி காட்ட, தன் தோழிகளோடு சென்றாள். அவள் சென்ற அடுத்த நமிடம், அங்கு மன்னரை சந்திக்க வந்தான் பாசில் என்னும் வணிகன்.

“நீ எதற்காக, இப்பொழுது இங்கே வந்தாய் பாசில்? இளவரசி மதியழகி உன்னை பார்த்து விட்டால் ஆபத்து, முதலில் இங்கு இருந்து செல்” என்று அவனை அனுப்புவதில் குறியாக இருந்தார் மன்னர் வேந்தன்.

“நான் எதற்காக செல்ல வேண்டும்? இளவரசி தானே! அரசர் இல்லையே? கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை, ஆகையால் நான் வந்த வேலையை பார்த்து விட்டு செல்கிறேன்” என்று அங்கேயே ஒரு இருக்கையில் அமர்ந்தான் அந்த வணிகன்.

இளவரசி மதியழகியின், புத்தி சாதுரியம் பற்றி தெரியாத வணிகனும், வேந்தன் மன்னரும் தங்கள் சதி ஆலோசனையை நடத்திக் கொண்டு இருந்தனர்.

“மக்களிடம் வாங்கும் வரி பணம், அடுத்த முறை கூட்ட வேண்டும். அது மட்டுமின்றி, இன்னும் இங்கு உள்ள மக்களுக்கு பயம் என்றால் என்னவென்று காட்ட வேண்டும். இது போதாது அவர்களுக்கு, இன்று நடந்த ஒரு விஷயத்தை கூறினார்கள் என் ஆட்கள்”.

“என் ஒற்றன் ஒருவன், ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றான். அவனை தடுக்க, இங்கு இருப்பவர்களுக்கு பயம், அந்த அளவிற்கு பயத்தை நன்கு காண்பித்து இருக்கிறோம், இங்கு வாழும் மக்களிடத்தில்”.

“ அப்பொழுது அங்கே வந்த இளவரசி தான், அந்த பெண்ணை காப்பாற்றியதாக எனக்கு தகவல் கிட்டியது. பெண் புலியாக சீறினாள் என்று கேள்வி, எதற்கும் அது யார் என்று பார்த்து செல்ல தான் யாம் வந்ததே” என்று கூறிய வணிகனை அதிர்ச்சியோடு பார்த்தார் மன்னர் வேந்தன்.

“வேண்டாம் பாசில்! நீ இளவரசியை இப்பொழுது காண வேண்டாம். தோழிகளோடு அரண்மனையை சுற்றி பார்த்துவிட்டு, இளவரசி செல்லட்டும். எப்படியும், இந்த முறை நிச்சயம் எங்கள் திருமண பந்தம் உறுதியாகிவிடும்”.

“அதன் பிறகு, இங்கு என் மனைவியாக அழைத்து வந்த பிறகு நீ அவரை காணலாம்” என்று சற்று அழுத்தத்தோடு முடித்தார் மன்னர் வேந்தன்.

பாசிலை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பிறகு தான், வேந்தன் மன்னர் அவ்வாறு சொன்னதே. அவனுக்கு ஒன்று வேண்டும் என்றால், அதை எப்பாடுபட்டாவது அதை அடைந்தே தீருவான்.

அவனுக்கு பயம் என்பதும் கிடையாது, யாரை பற்றியும் கவலையும் கிடையாது. மற்றவர்கள் தன்னை பார்த்து பயப்பட வேண்டும், என்று என்னுவானே தவிர, அவன் யாருக்கும் அடி பணியவும் மாட்டான், பயப்படவும் மாட்டான்.

இவனின் கட்டுபாட்டில் தான், இந்த நகரம் இப்பொழுது இருக்கிறது. எங்கு எது நடந்தாலும், அவனுக்கு தகவல் உடனே வந்துவிடும்.

இப்பொழுது கூட, இங்கே இளவரசி இருக்கிறாள் என்று தெரிந்து தான் அவன் இங்கு வந்ததே.

அரண்மனையை சுற்றி பார்த்துவிட்டு, அங்கு வந்த இளவரசியும் அவளின் தோழிகளும் அங்கு இருந்த புதியவனை, ஆராய்ச்சி பார்வை பார்த்தனர்.

“இளவரசி இவர் தான் வணிகர் பாசில், இங்கு மக்களுக்கு தன்னாலான எல்லா உதவியும் செய்து கொடுத்து இருப்பவர் இவர் தான். மக்களுக்கு அடுத்து என்ன செய்ய போகிறார், என்று சொல்லிக் கொண்டு இருந்தார், அதற்குள் தாங்கள் வந்து விட்டீர்கள்”.

“வணிகரே! இவர் தான் இளவரசி மதியழகி, இளங்கோவன் மன்னரின் மகள்” என்று இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார் வேந்தன் மன்னர்.

“ஒ! அந்த கொள்ளை கூட்டத்து தலைவன், நீ தானோ! மிக்க மகிழ்ச்சி உன்னை சந்தித்ததில்” என்று கூறிவிட்டு, அங்கு இருந்த ராஜ இருக்கையில் கம்பீரமாக அமர்ந்தாள்.

இன்று :

ஆதித்ய வர்மா கெஸ்ட் ஹவுசில் அவனின் அறையில், கையை தலையில் வைத்துக் கொண்டு, பார்வையை கட்டிலில் படுத்து இருந்த பாவையை பார்த்து யோசனையோடு அமர்ந்து இருந்தான்.

அன்று ஆடிஷன் முடிந்து, விஷ்வா இவனை தேடி அங்கு உள்ள சின்ன கூரை வீட்டில் நுழைந்தான். ஆதிக்கு ஒன்று தீவீரமாக யோசிக்க வேண்டும் என்றால், அவன் வருவது இங்கே தான்.

அன்று விஷ்வா சலித்துக் கொண்ட அடுத்த நொடி, மேற் கூரையை கிழித்துக் கொண்டு குதித்தவளை பார்த்து அதிர்ந்து போயினர் இருவரும்.

“டேய் ஆதி! இவ தான், உன் படத்து ஹீரோயின் போல டா. கடவுள் நான் சொன்ன அடுத்த நொடி, மேல இருந்து இந்த பொண்ணை உனக்கு கொடுத்து இருக்கார் போல டா” என்று சர்வசாதரணமாக ஏதோ சாதனை செய்து முடித்தது போல், கூறிய நண்பனை பார்த்து முறைத்தான்.

“வாயை வச்சுக்கிட்டு சும்மா இரு டா, முதல எனக்கு ஒரு கை கொடு இந்த பொண்ணை தூக்க. அப்படியே அடுத்து இங்க என்ன செய்யணுமோ, அதை செய்து முடிச்சிடு புரியுதா?” என்று கேட்டான் ஆதி.

“நல்லா புரிஞ்சிடுச்சு டா, நீ இந்த பொண்ணை பார்த்து பத்திரமா கூட்டிட்டு போ” என்று கூறிய விஷ்வா அவனுக்கு, அவளை தூக்கிக் கொண்டு காரில் படுக்க வைக்க உதவினான்.

 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
அதன் பின் ஆதி, அவளை ஒரு பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அவளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தான். விஷ்வா இங்கே கூரை வீட்டை சரி செய்ய, ஆட்களை வரவழைத்து வேலை வாங்கியதோடு மட்டும் இல்லாமல், போலீசிக்கும் தகவல் அளித்தான்.

அடுத்த அரை மணி நேரத்தில் அங்கே acp ரமணன், ஆஜாரானான். கூரை வீட்டை சுற்றி எல்லாவற்றையும் தன் போலீஸ் கண்களால் பார்த்துவிட்டு, அங்கு இருந்து நேராக மதி அனுமதித்து இருந்த மருத்துவமனைக்கு வந்தான்.

அங்கே அமர்ந்து இருந்த ஆதியை பார்த்து, நேராக அங்கே சென்று அவனருகில் அமர்ந்தான். டாக்டரின் வருகைக்காக, இருவரும் காத்து இருந்த நேரத்தில், ரமணன் அவனிடம் ஒரு அதிகாரியாக கேள்வி எழுப்பினான் ஆதியிடம்.

“மேல கூரையை கிழிச்சிட்டு, கீழே எப்படி விழுந்தா அந்த பொண்ணு? இது தற்செயலா? இல்லை யாரும் கீழே தள்ளி விட்டாங்களா? இல்லை நீங்களே அந்த பொண்ணை பதுக்கி வச்சு இருந்தீங்களா?” என்று அடுத்து அடுத்து கேட்ட கேள்வியில் கடுப்பானான் ஆதி.

“டேய்! செம கோபத்துல இருக்கேன், ஏதாவது சொல்லிட போறேன். அந்த பொண்ணு கிட்ட தான், எதுனாலும் கேட்க முடியும். பேசாம உட்காரு, டாக்டர் வர வரைக்கும்” என்று அவனை போலீசாக பார்க்காமல், தன் அண்ணனாக பார்த்து மிரட்டினான் ஆதித்ய வர்மா.

ஆம்! ஆதியின் பெரியப்பாவின் மகன் தான், இந்த acp ரமணன். இப்பொழுது ஆதி, இவன் உதவியை தான் நாடி இருக்கிறான். அவனுக்குமே, அவள் எப்படி அங்கு இருந்து குதித்தாளா, இல்லை விழுந்தாளா என்று தெரிய வேண்டி இருந்தது.

அறையில் இருந்து வெளியே வந்த டாக்டர், ஷி இஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட் என்று சொன்ன பின்பு தான், ஆதி சற்று ரிலாக்ஸ் ஆனான்.

சிறிது நேரத்தில், அவளை காண சென்ற இருவரும் சோர்ந்த நிலையில் கண்களை மூடி படுத்து இருந்த மதியழகியை கண்டு, பரிதாப்பட்டனர்.

கண்களை திறந்த மதி, முதலில் கண்டது கனவில் அவள் கண்ட மணாளனான ஆதித்ய வர்மாவை தான்.

“தாங்கள் வந்துவிட்டீர்களா அத்தான்! என் கனவில் பார்த்த உங்களை கண்ட பிறகு தான், கடவுள் மீது இன்னும் அதிகமாக பற்று உண்டாகிறது எனக்கு”.

“உடனே என் தந்தை இளங்கோவன் மன்னரிடம், உங்களை அழைத்து சென்று காட்ட வேண்டும். தந்தையே! இதோ என் கனவில் வந்தவரை நான் பார்த்துவிட்டேன், என் பதின் வயதில் ஆரம்பித்த என் காதல் தவம் நிறைவேற போகிறது என்று உரக்க கூற வேண்டும்”.

“வாருங்கள்! நாம் உடனே மிடார நாட்டிற்கு செல்லலாம்!” என்று கூறியவளை பார்த்து இருவரும் முழித்தனர்.

அப்பொழுது தான் அழகி, அவர்களின் உடை , சுற்றி இருந்த அறை எல்லாவற்றையும் பார்த்தாள். பார்த்தவள் அதிர்ந்து விட்டாள், அவளால் நம்ப முடியவில்லை, இருந்தாலும் தெளிவு படுத்திக் கொள்ள அவனிடம் கேட்டாள்.

“இது எந்த வருடம்? நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன்?” என்று தெளிவு படுத்திக் கொள்ள கேட்டாள் மதியழகி.

“2018 வருஷம், இப்போ இருக்கிறது சென்னை, அதாவது மதராசபட்டினம்” என்று ரமணன் விளக்கினான்.

அவன் கூறிய அடுத்த நொடி, அவள் மயங்கி சரிந்தாள். பின்னே ஐநூறு வருடங்கள் கடந்து, இங்கே வந்து இருக்கிறாள் என்ற உண்மை தெரிந்தால் மயங்கி விழாமல் என்ன செய்வாள்.

தொடரும்...
 




Anusuya alex

நாட்டாமை
Joined
Jan 18, 2018
Messages
24
Reaction score
79
Location
sivakasi
wow...super epi ka...aanalum 500 years ma happada nu yosikka vendi irukku...pavam mathi next enna seiya pora...avalukku enna aachu...eagerly waiting next epi ka..
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Uma ka chance illa.....hahaha....madhi pesaratha kettu athi and Ramana Ava loosu nu mudive panniduvanga pola....
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
time travela sis sema...... nice ud sis. storyla mattum illa aditya varman than rajava:eek::eek:
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
500 varudangalao_Oo_Oennakay ippo mayakan vara madhiri irrukuKay ??ep ????
Hi maha thanks a lot da
Ha ha innum niraya irukke ithukke ippadi sonna eppadi sis
Keep supporting ka??
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
wow...super epi ka...aanalum 500 years ma happada nu yosikka vendi irukku...pavam mathi next enna seiya pora...avalukku enna aachu...eagerly waiting next epi ka..
Hi anu thanks a lot da
Ithukke ippadi sonna eppadi anu chellam
Ini thaan niraya irukku
Keep supporting da ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top