• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiyin Kadhal Thavam 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
அத்தியாயம் – 4

ஐநூறு வருடங்களுக்கு முன்பு:

ராஜ இருக்கையில், கம்பீரமாக அமர்ந்து இருக்கும் இளவரசி மதியழகியை பார்த்த அந்த வணிகன் பாசில், அவனையறியாமல் எழுந்து நின்றான்.

ராஜ வம்சத்து குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும், இந்த கம்பீரமும், மிடுக்கும் அவர்கள் கூடவே இருக்குமோ? கண்களில் உள்ள தீட்சயம், நிச்சயம் அவர் புத்திக் கூர்மை உள்ளவராக இருக்க வேண்டும், என்பதை நொடியில் கணித்து விட்டான் வணிகனான பாசில்.

இப்பொழுது கூட, கொள்ளை கூட்டத்து தலைவன் என்று தன்னை கூறுகிறார் என்றால், விஷயம் தெரிந்து தான் வருகை புரிந்து இருக்கிறார் என்று தானே அர்த்தமாகிறது.

“இளவரசி! தாங்கள் என்னை எதற்காக கொள்ள கூட்டத்து தலைவன், என்று விளித்தீர்கள்?” என்று பவ்யமாக கேட்டான் அந்த வணிகன்.

“ஒ அதுவா, வணிகரே! மக்களிடம் பொருள் விற்கும் பொழுது, தங்களை போல் உள்ளவர்கள் எல்லாம், இப்பொழுது லாபம் காண அதிக விலைக்கு அல்லவா விற்பனை செய்கிறார்கள்”.

“அப்பொழுது வணிகரான தங்களை, நான் அவ்வாறு விளிப்பது சரி தானே?” என்று இளவரசி கூறிய பின்பு, வணிகனுக்கு குழப்பம் சூழ்ந்தது.

இளவரசி கூறிய பதிலில், அவன் குழம்பி போனான். இங்கே நடப்பது அவருக்கு தெரிந்து இருக்குமா, இல்லையா? என்று மிகவும் குழம்பி போனான்.

“இளவரசி! இன்னும் சில மணி நேரத்தில் சூரியன் மறைந்து, சந்திரன் வரவிருக்கிறது. ஆகையால் தாங்கள், இங்கேயே தங்கி இளைப்பாறிவிட்டு, நாளை செல்லலாமே” என்று கேட்டார் மன்னர் வேந்தன்.

“மன்னிக்க வேண்டும் மன்னா! நாங்கள் இப்பொழுதே அங்கு செல்ல வேண்டும், வந்துவிடுவோம் என்று அன்னையிடம் சொல்லிவிட்டு தான் வந்து இருக்கிறேன்”.

“அங்கே எங்களுக்காக, எல்லோரும் காத்து இருப்பார்கள். ஆகையால், உடனே இங்கு இருந்து நாங்கள் செல்ல வேண்டும். எங்கள் ரதமும் தயார் நிலையில் தான் இருக்கிறது”.

“இப்பொழுது கிளம்பி சென்றால் தான், அங்கே செல்ல வசதியாக இருக்கும். இல்லையென்றால், என் தந்தை பெரும் படையையே திரட்டிக் கொண்டு வந்திடுவார் இங்கே” என்று கூறி நிறுத்திவிட்டு, கண்களை வணிகன் புறம் செலுத்தி, அவனை ஆராய்ந்தார் இளவரசி மதியழகி.

அரசர் இங்கு வந்திடுவார், தன்னை காணாமல் என்று இளவரசி சொன்ன அடுத்த நொடி, வணிகன் மன்னர் வேந்தனை ஒரு எச்சரிக்கை பார்வை பார்த்தார். அதை இளவரசியின் கண்கள் மட்டுமல்லாது, கங்காவின் கண்களும் அதை குறித்துக் கொண்டது.

கங்கா, இளவரசியின் தோழி மட்டும் அல்ல அவளின் பாதுகாப்புக்கு உரியவளும் கூட. இங்கே வருவதற்கு முன், இளவரசியின் தாய் மங்கை, கங்காவிடம் முதல் கட்டளையிட்டது பத்திரமாக மகளை அழைத்து வர வேண்டும் என்பது தான்.

தோழியை பற்றி நன்கு அறிந்த கங்காவும், இளவரசியின் பாதுகாப்பை தனதாக்கிக் கொண்டாள். இப்பொழுது இவர்களின் பார்வை பரிமாற்றத்தை பார்த்தவளும், தோழி இனி இங்கு இருப்பது சரியில்லை என்று தோன்றியது.

“இளவரசி! நாம் கிளம்பலாம், ரதம் தயாராக இருக்கிறது. இப்பொழுது கிளம்பினால் தான், மிடார நாட்டிற்கு சற்று சீக்கிரம் செல்ல முடியும்” என்று கங்கா, இளவரசி மதியழகியிடம் கூறினாள்.

தோழி கூறியதை ஏற்று, இளவரசியும் எல்லோரிடமும் விடைபெறும் நோக்கோடு அந்த இருக்கையில் இருந்து எழுந்தாள்.

“விடை பெறுகிறோம் மன்னா!” என்று கை குவித்து வணக்கம் தெரிவித்து மன்னர் வேந்தனிடம் விடை பெற்றாள்.

“ஆகட்டும் இளவரசி! அரசரிடம் நான் நலம் விசாரித்ததாக கூறுங்கள்” என்று மன்னர் வேந்தனும் விடை கொடுத்தார்.

“கண்டிப்பாக” என்று கூறிவிட்டு அங்கே அமைச்சரிடமும் விடை பெற்றாள் இளவரசி.

“வணிகரே! விடை பெறுகிறோம்!” என்று அவனிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார் இளவரசி மதியழகி.

அரண்மனை வாயில் வரை இளவரசியுடன் சென்று அவரை வழியனுப்ப, மன்னர் அமைச்சர் சிவனந்தரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

அரண்மனை வாயில் முன் நின்ற ரதத்தில், இளவரசி ரதத்தில் ஏறுவதற்கு முன் அமைச்சரை ஒரு பார்வை பார்த்து, தான் பார்த்துக் கொள்வதாக கண்களாலே அவருக்கு ஆறுதல் அளித்தார்.

அவருக்கும் அது புரிந்து, மனதில் பாரம் நீங்கி கண்களாலே விடை அளித்தார். இளவரசியும், அவருக்கு விடையளித்து விட்டு ரதத்தில் ஏறினாள்.

மற்ற தோழிகள், ரதத்தில் முன்னமே ஏறி காத்து இருந்தனர். இளவரசி மதியழகி ஏறிய பின்பு, கங்காவும் ஏறி அமர்ந்தாள். தேரோட்டியிடம் எடுக்க சொல்லி, கட்டளையிடவும் ரதம் அங்கு இருந்து நகர தொடங்கியது.

அவர்கள் அங்கு இருந்து செல்வதை, அரண்மனை மேல் தளத்தில் இருந்து பார்த்தனர் மன்னர் வேந்தனும், வணிகன் பாசிலும். அந்த ரகசிய அறையில் இருந்த இருவரும், வெவ்வேறு மனநிலையில் இதை பார்த்தனர்.

மன்னர் வேந்தனோ, மனம் கவர்ந்தவள் செல்கிறாளே என்று பார்த்தார் என்றால், வணிகனோ சந்தேகப்பார்வை பார்த்தான்.

இளவரசியின் கண்களில், ஏதோ தன்னை குறித்த ஆராய்ச்சி இருந்ததை உணர்ந்தே இருந்தான் வணிகன். அவனுக்கு இப்பொழுது, இளவரசி தன்னை பற்றி தெரிந்து கொண்டு சந்தித்தாரா, இல்லையா என்று சந்தேகமாக இருந்தது.

இதைப்பற்றி, மன்னர் வேந்தனிடம் கேட்க அவர் அவரை காண, அவரோ இன்னும் இளவரசி சென்ற வழியை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அவர் கண்களில் வழிந்த காதலை கண்டு, வணிகன் இவரை வைத்து இளவரசியை நெருங்க சூழ்ச்சி ஒன்றை திட்டமிட்டுக் கொண்டான்.

மிடார நாட்டு அரண்மனை எல்லைக்குள் இளவரசியின் ரதம் நுழையவும், வீரர்கள் இளவரசிக்கு வழிவிட்டு தலை குனிந்து வணக்கம் செய்தனர். அதை ஒரு தலையசைப்புடன் ஏற்று, அரண்மனை வாயில் அருகே ரதம் நிற்கவும், கம்பீரம் குறையாமல் அதில் இருந்து இறங்கினாள்.

அவளின் அன்னை, அரசி மங்கையர்க்கரசி மகளை எதிர்கொண்டு அவளை அணைத்துக் கொண்டார்.

“மகளே மதி! ஏன் இந்த தாமதம்? இனி தொலைதூரம் பயணம் செய்வதை, சற்று நிறுத்திக் கொள்ளம்மா. நீ வரும் வரையில், என்னால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை” என்று கூறினார்.

“அன்னையே! காவிரிபூம்பட்டனத்தில் தோழிகளோடு சேர்ந்து காவிரி நதியோடு விளையாடிவிட்டு, மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்து, அதன் பின் அங்கே அரண்மனைக்கு சென்று, வேந்தன் மன்னரையும் சந்தித்துவிட்டு திரும்புகிறோம். ஆகையால், தான் இந்த தாமதம் அன்னையே” என்று விளக்கினாள் இளவரசி மதியழகி, தன் அன்னைக்கு.

“பெற்ற வயிறு, மகள் நலமாக திரும்பி வர வேண்டுமே, என்று பரிதவிக்கிறது. உனக்கு, நான் சொல்ல வருவது புரிகிறதல்லவா?” என்று அவளின் அன்னை மங்கையர்க்கரசி, அவளிடம் கேட்டார்.

“புரிகிறது தாயே! தோழிகளோடு நேரம் கழிக்க, நீண்ட நாட்கள் கழித்து இன்று தான் முடிந்தது. அது சற்று நேரம் பிடித்தது, அதான் தந்தையார் எங்களுக்கு தெரியாமல், வீரர்களை மாறு வேடத்தில் அனுப்பி பாதுகாத்தாரே”.

“அது மட்டுமா! கங்காவிடம் கூட நீங்கள் என் பாதுகாப்பு பற்றி, அவளிடம் கூறி எனக்கு கேடையமாக இருக்க செய்தீர்களே! அதன் பின்னரும், ஏன் தாயே இவ்வளவு பயம் தங்களுக்கு?”.

“தங்கள் மகள் இளவரசி மதியழகி, வீரத்திலும், புத்தி கூர்மையிலும் சிறந்து விளங்கியவள் அன்னையே, ஆகையால் கவலை கொள்ளாதீர்கள்” என்று கூறினாள் மதியழகி.

வாயிலில் நின்று பேசிக் கொண்டே இருந்தவர்கள், அப்பொழுது தான் சுற்றம் உணர்ந்து பேச்சை நிறுத்தினர். தோழிகள் தன்னிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டும், என்று காத்து இருப்பதை அறிந்து விரைந்தாள் அவர்களிடம்.

“மன்னித்துக் கொள்ளுங்கள் தோழிகளே! தாயிடம் பேசும் மும்முரத்தில் உங்களை கவனிக்க தவறி விட்டேன்” என்று மன்னிப்பு வேண்டினாள்.

அவர்கள் திடுக்கிட்டு, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறினார்கள். அரசியும் இவர்கள் அருகில் வந்து, எல்லோரையும் நலம் விசாரித்து விட்டு, அவர்கள் பத்திரமாக வீடு செல்ல வீரர்களுடன் அனுப்பி வைத்தார்.

கங்காவை தவிர்த்து, மற்றவர்கள் இவளிடமும், அரசியிடமும் விடை பெற்றுக் கொண்டு சென்றனர். கங்காவுக்கு, அரண்மனை ஒட்டி அவளும் அவள் தாயும் வாழ, ஒரு சிறிய வீட்டை அரசரே முன்னின்று கட்டிக் கொடுத்து இருந்தார்.

தன் மகளின் தோழிக்காக மட்டுமில்லாமல், கங்காவின் தந்தை நீதிமான் அரசரின் உயிர் சிநேகிதர். இப்பொழுது கங்கா, இளவரசியை பாதுகாப்பது போல், அன்று அவளின் தந்தை அரசரை பாதுகாத்தார்.

ஒரு போரில், அரசரை காப்பாற்ற வேண்டி, அவர் தன் உயிரை மாய்த்து கொண்டார். அரசருக்கு அப்பொழுது, நீதிமானின் அன்னையும், மனைவி மற்றும் குழந்தையும் கண் முன் வந்தனர்.

“இப்படி இவர்களை, தனியாக தவிக்க விட்டு சென்று விட்டாயே நண்பா!” என்று அந்த இடத்திலே அழுது விட்டார்.

நண்பனுக்காக, அவரின் குடும்பத்தை பார்த்துக் கொள்வது தன் கடமை என்று எண்ணி,
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
மனைவிமார்கள் இருவரிடமும் இது பற்றி விவாதித்தார்.

அதன் பின்பு தான், அரண்மனை ஒட்டி வீடு கட்டிக் கொடுத்து, அவர்களை தன் பாதுகாப்பில் வைத்துக் கொண்டார். இப்பொழுது கங்கா, மகளை பாதுகாப்பது கூட, நீதிமானின் மனைவி சுமித்ரா கூறியதால் மட்டுமே தவிர, அரசர் கூறி அல்ல.

இதற்க்கு மதியும், அவளின் அன்னை மங்கையும் சேர்ந்து சுமித்ராவிடம் வேண்டாம் என்று கூறியும், அவர் தன் பிடியில் உறுதியாக நின்றார்.

“கங்கா! உன் தந்தை இறந்த பிறகு, உறவினர்கள் நமக்கு உதவி செய்யக் கூட விரும்பவில்லை. ஆனால், அரசர் உன் தந்தைக்காக நமக்கு வீடும், அவர் நிழலில் பாதுகாப்பும் கொடுத்து இருக்கிறார்”.

“நாம் அவருக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும், அவர் மகள் மதியழகி உன் சிநேகிதி தான். அவளுக்கு நீ தான், பாதுகாப்பு கவசமாக இருக்க வேண்டும், செய்வாயா?” என்று கேட்டார்.

மகளும் சந்தோஷமாக சம்மதம் கூறியவுடன், இளவரசியுடனே அவளும் பயிற்சி மேற்கொன்டாள். அதன் பின் யாரும் சொல்லாமலே, இளவரசி மதியழகிக்கு கங்கா பாதுகாவலாக நின்றாள்.

இளவரசியும், தாயும் பேசிக் கொண்டே அரண்மனை உள்ளே நுழைந்து அரசியின் அந்தரங்க அறைக்குள் நுழைந்தனர். அப்பொழுதும் புலம்பிக் கொண்டே இருந்தவரை, மதி இனி இப்படி நேராது என்று சொல்லியே பின்னே விட்டார்.

“அப்படி சொல் மதி, நானும் மதி பத்திரமாக திரும்பி வருவாள் தமைக்கையே! கவலை வேண்டாம்! என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், நீ இன்னும் வந்து சேரவில்லை என்று தெரிந்த பிறகு மிகவும் கலங்கி விட்டார்”.

“அவர் கலங்கியதோடு மட்டுமல்லாமல், உன் தம்பியிடமும், என்னிடமும் அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று கூறி எங்களையும் கதி கலங்க வைத்து விட்டார் அக்கா” என்று கூறினார் அவளின் சிறிய அன்னை குமாரிதேவி, அறைக்குள் உள்ளே நுழைந்து கொண்டே.

“தாயே! நீங்களும் பயந்து, சிறிய அன்னையையும் பயம் கொள்ள செய்து விட்டீர்களே” என்று சிரித்துவிட்டு, சிறிய அன்னையை கட்டிக் கொண்டு வரவேற்றாள்.

“ஆமாம் என் தம்பி இளமாறன் எங்கே? அவனை மூன்று நாட்களாக நான் காணவில்லையே! எங்கே சென்றான் அம்மா?” என்று சிறிய அன்னையிடம் விசாரித்தாள்.

அதற்க்கு அவர் கூறிய பதிலில், தம்பியை நினைத்து பெருமிதமாகவும், வருத்தமாகவும் இருந்தது.

இன்று:

மதி அப்படி கூறிவிட்டு மயங்கிய அடுத்த நொடி, ரமணன் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினான்.

“வந்து விட்டீர்களா பிராணநாதா! வாருங்கள் செல்லலாம்!” என்று அவளை போல் நடித்துக் காட்டி, ஆதியை கிண்டல் செய்துக் கொண்டு இருந்தான்.

அவன் அப்படி கிண்டல் செய்து சிரித்ததை பார்த்து, அவனை முறைத்துவிட்டு, அங்கு டேபிளில் இருந்த தண்ணீர் கிளாஸ் எடுத்து, தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தான்.

கஷ்டப்பட்டு, தன் விழிகளை மலர்த்தியவள் ஆதியை பார்த்து கண் கலங்க தொடங்கினாள். அதில் பயந்து போனவன், அவளிடம் பேச்சு கொடுத்து சரி செய்ய எண்ணினான்.

“ஹல்லோ! நீ யாரு? எந்த நாடக சபான்னு சொல்லு, நாங்க அங்க போய் உன்னை விட்டுடுறோம். உனக்கு ஒன்னும் இல்லை, சும்மா அங்க அங்க சின்ன காயம் மட்டும் தான், அதனால பயப்படாத” என்று கூறி அவளை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தான்.

அவளோ, இன்னும் அவனை பார்த்து பார்த்து அழுது கொண்டு இருந்தாள். அதை பார்த்த ரமணன், இன்னும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டு இருந்தான்.

ஆதிக்கு தன்னை காமெடி பீஸ் போல், இருவரும் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படவும், கோபத்தில் நிறுத்துங்க என்று கத்தினான். அந்த கத்தலில், இருவரும் நிறுத்தினர்.

“ஏன் மா நீ யாருன்னு கேட்டேன் ல, சொல்லு இப்போ நீ யாரு? எங்க இருந்து வர?” என்று அவளை பார்த்து கேட்டான் ஆதி.

“நான் ஐநூறு வருடங்கள் கடந்து, இங்கே வந்து இருக்கிறேன். உமக்கு நான் சொல்வது இப்பொழுது புரியாது, போக போக தாங்களே புரிந்து கொள்வீர்கள்” என்று அவள் முடிக்கவும், அங்கே ஆதியும், ரமணனும் வித்தியாசமாக அவளை பார்த்தனர்.

“மேல இருந்து கீழே விழுந்ததுல, அவ மண்டையில் அடிபட்டு இப்போ உள்ளதை மறந்து, பூர்வ ஜென்மத்துக்கு போயிட்டா போல டா. இப்போ இந்த கேசை, எப்படி ஹான்டில் பண்ண போற?” என்று கேட்டான் ஆதி.

“டாக்டர் வந்த உடனே அவர் கிட்ட, இதை பத்தி பேசி ஒரு முடிவுக்கு வரேன்” என்று கூறினான் ரமணன்.

டாக்டர் அடுத்து ரௌண்ட்ஸ் வரவும், இவர்கள் இங்கு இவள் நடந்து கொண்ட முறையை எடுத்துக் கூறி, திரும்பவும் அவளை பரிசோதிக்க கூறினர்.

“நோ, நோ! நத்திங் டு வொர்ரி, ஷி இஸ் பைன். அவளுக்கு இப்போ பாதுகாப்பான இடம் வேணும், அவளோட நினைவுகள் திரும்புற வரைக்கும்”.

“சோ நீங்க தான் அடுத்து என்ன செய்யணும்ன்னு, டிசைட் பண்ணனும்” என்று கூறிவிட்டு சென்றார்.

ரமணன் சற்று நேரம் யோசித்துவிட்டு, ஆதியை ஒரு பொருள் பொதிந்த பார்வை பார்த்தான். அதில் ஆதி, அவனை பார்த்து முறைத்துவிட்டு, முடியாது என்றான் கண்களாலே.

“நோ ஆதி! யு கான்ட் எஸ்கேப்! இனி இந்த பொண்ணு உன் பொறுப்பு, அவளுக்கு நினைவு வந்த உடனே சொல்லு அப்புறம் நான் பார்கிறேன்”.

“உன் இடத்துல தான் விழுந்தா, நீ தான் இவளை இங்க கூட்டிட்டு வந்து இருக்க. சோ நீயே பார்த்துக்கோ இவளை, டேக் கேர் பை” என்று கூறி அவனிடம் விடைபெற்று சென்றான்.

ஆதிக்கு, ஆத்திரமாக வந்தது. அவன் ஏற்கனவே படத்தில் ஹீரோயின் கேரக்டர்க்கு, சரியான ஆள் கிடைக்கவில்லை என்ற எரிச்சலில் இருந்தான்.

இப்பொழுது, யார் என்று தெரியாத ஒரு பெண்ணை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்பது அவனுக்கு பிடிக்கவே இல்லை. வேண்டாவெறுப்பாக அவள் புறம் திரும்பியவன், அங்கே அவள் இவனை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து மேலும் எரிச்சல் அடைந்தான்.

“இங்க என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? இன்னும் கொஞ்ச நேரத்துல டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க, கிளம்பி என் கூட வா புரியுதா?” என்று கிட்ட தட்ட உறுமினான் அவளிடம்.

அவளோ அவன் சொல்ல வருவதை, ஓரளவு புரிந்து கொள்ள சிறிது கஷ்டப்பட்டாள். கூட செல்ல வேண்டும் என்ற அளவில், மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது அவளால், ஆகையால் உடனே தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தாள்.

அவன் ஏதோ எரிச்சலில் இருப்பது புரிந்ததால், அவன் கோபத்தை அவள் சட்டை செய்யவில்லை. இல்லையென்றால், அவள் அவனை ஒருகை பார்த்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பாள்.

டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று கூறியவுடன், அவன் அவளுக்கு ஒரு சுடிதார் வாங்கி வந்து முதலில் அவளை அதை அணிய கூறினான். முழுக்கை ஜாக்கெட்டும், கீழே ஒரு பாவாடையும், மேல் மார்பை மறைக்க ஒரு சிறு ஷால் போல் உள்ள ஒன்றை அணிந்து இருந்தவள், பக்கா அந்த காலத்து இளவரசி போல் காட்சி அளித்தாள்.

தூக்கி போட்ட கொண்டையும், கழுத்தில், கையில், காதில் கல் வளையலும், மாலையும் , கம்மலும் அணிந்து இருந்ததை எல்லாம் களைய சொல்லி கூறினான்.

அவன் கூறியதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு, அதன் படி செய்தாள். தலையில் இருந்த கொண்டையை, கடைசியாக அதை களையவும் காலுக்கு கீழ் வரை இருந்த முடியை பார்த்தவன் அதிர்ந்தான்.

இது சரிவராது என்று எண்ணியவன், உடனே அழகு நிலைய பெண் ஒருத்தியை வரவழைத்து அவளை மாற்றி அமைக்க கூறினான். அவளோ, யாரையும் அருகில் விடவில்லை. தன் முடியை தானே பார்த்துக் கொள்வதாக கூறியவளை, விடாபிடியாக இழுத்து வைத்து அதை அவள் இடைக்கு மேல் வரை வெட்டி எடுத்தார்கள்.

அவளுக்கு கோபமாக இருந்தாலும், தான் இப்பொழுது இருக்கும் இடம் கருதி அவள் பேசாமல் இருந்தாள். அழகு நிலைய பெண்கள், அவர்கள் கை வரிசையை காட்டி முடிக்கவும், அவனிடம் அவளை காட்டினர்.

பார்த்தவன், அசந்து விட்டான். அவனின் வாய் தானாக, அழகியே தான் என்று முணுமுணுத்தது.

தொடரும்..
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top