• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiyin Kadhal Thavam - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
தவம் – 6

500 வருடங்களுக்கு முன் :

மிகப் பெரிய பூஜை அன்று சிவன் கோவிலில், அரசர் இளங்கோவன் ஏற்பாடு செய்து இருந்தார். தன் மகளுக்கு ஆபத்து இருப்பதை அறிந்து, அந்த ஈசனிடம் தன் மனபாரத்தை இறக்கி வைத்து, அவளை காத்து அருள் புரியுமாறு வேண்டினார்.

190 அடி உள்ள அந்த சிவனின் பிரமாண்டம், மதியழகிக்கு எப்பொழுதும் போல் பிரமிப்பை ஏற்படுத்தியது. ஏனோ அவளுக்கு எப்பொழுதும் போல், அந்த சிவனின் பிரமாண்டம் மனதில் பதிந்த அளவிற்கு, அவரை மனமார வேண்ட வேண்டும் என்று தோன்றியதே இல்லை.

அதன் அமைப்பு, அதன் வடிவம் உள்ளே உள்ள கற்பக அறை, அதன் சுற்றி உள்ள பரப்பளவு என்று கண்கள் அங்கே தான் சுற்றி கொண்டு இருந்தது. தீபாராதனை காட்டும் பொழுது, அதன் வெளிச்சம் சிவனின் மேல் விழும் பொழுது ஒரு சிலிர்ப்பு தனக்குள் ஓடுவதை உணர்ந்து, முதல்முறையாக கண்களை மூடி வேண்டினாள்.

அவளின் வேண்டுதல் எப்பொழுதும் போல், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே. இந்த முறை கூடுதலாக, அவளின் மணாளன் சீக்கிரம் அவள் கண்ணில் பட்டு, காதல் கொண்டு மணம் புரிய வேண்டும் என்று வேண்டினாள்.

இந்த முறை காவிரிபூம்பட்டினம் சென்று வந்ததில் இருந்து, ஏதோ கண்ணுக்கு தெரியாத மாயை ஒன்று தன்னை சுற்றி இருப்பதாக உணர்ந்தாள். எதற்கும் கலங்காத அவளின் தந்தை, அவளை நினைத்து கலங்குகிறார் என்றால், தன்னை சுற்றி ஏதோ ஆபத்து இருப்பதாக தான் தோன்றியது அவளுக்கு.

“தன்னை, கண்காணித்துக் கொண்டு இருக்கிறது போல் ஒரு உணர்வு தோன்றுகிறதே சமீபமாக! யாராய் இருக்கும்?” என்று எண்ணங்களில் வலம் வர தொடங்கவும், அங்கே கோவிலுக்குள் இருக்க முடியாமல், அவள் சிறிது நேரத்தில் தாயாரிடம் சொல்லிக் கொண்டு, அங்கே கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த புல்வெளியில் வந்து அமர்ந்து கொண்டாள்.

அவளை சுற்றி இருந்த பணி பெண்களும், பாதுகாப்புக்கு இருந்த காவலர்களும் அதிர்ந்தனர், அவளின் இந்த செயலில். நாட்டின் இளவரசி, இப்படி புல் தரையில் அமர்ந்து இருந்தால், மன்னர் தங்களை அல்லவா சத்தமிடுவார்.

இளவரசி மதியழகி, இப்பொழுது என்ன மனநிலையில் இருக்கிறார் என்று தெரியாமலும் தவித்தனர். தாங்கள் ஒன்று சொல்ல, கோபத்தில் ஏதேனும் சொல்லிவிட்டால் என்ற அச்சத்தில், அவர்கள் அவளிடம் எடுத்துக் கூற தயங்கினர்.

“இளவரசி! தாங்கள் அமர அங்கே ஆசனம் போடப்பட்டு இருக்கிறது. தாங்கள் அங்கே வந்து அமர வேண்டும், மன்னர் இல்லையென்றால் எங்களை தான் வசை பாடுவார், புரிந்து கொள்ளுங்கள் இளவரசி” என்று ஒரு பணி பெண் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, இளவரசியிடம் கூறினாள்.

இளவரசி மதியழகிக்கு அது புரிந்தாலும், ஏனோ இங்கு அமர்ந்து இருப்பது அவளுக்கு பிடித்து இருந்தது. பல நாள் ஏக்கம் ஒன்று, இப்பொழுது நடந்தது மனதிற்கு திருப்தி அளித்தது.

“தந்தையிடம் நான் கூறிக் கொள்ளுகிறேன், யாரும் அஞ்ச வேண்டாம். காவலரே! பூஜை முடிந்தவுடன் என் தந்தையை, இங்கே சற்று அழைத்து வாருங்கள்” என்று கூறிவிட்டு, மீண்டும் தன் எண்ணங்களில் மீண்டும் பயணம் செய்ய தொடங்கினாள்.

முதன்முதலில், தன் கனாவில் தோன்றிய தனக்கு பிடித்த மணாளனை கண்டவுடன், மனதில் அவன் உருவத்தை கொண்டு வந்து வரைந்து முடித்து, திருப்தியுடன் அந்த ஓவியத்தை எடுத்து தன் தந்தை முன் காட்டினாள்.

“ஆஹா! அற்புதம்! போர் வீரனை போல் கம்பீரமாகவும், ஒரு அரசனை போல் ஆளுமையுடனும் இருக்கும் இவன் யார் மகளே?” என்று கேட்டார் மன்னர்.

“தெரியவில்லை தந்தையே! என் கனாவில் வந்தவர் இவர். இவர் யார்? எங்கு இருக்கிறார்? என்று எந்த விபரமும் எனக்கு தெரியவில்லை. ஆனால், தாங்கள் எனக்கு திருமணம் செய்ய நினைத்தால், இவரை கண்டுபிடித்து எனக்கு மணம் செய்து வையுங்கள் தந்தையே” என்று மனதில் இருப்பதை பளிச்சென்று, தன் தந்தையிடம் கூறிவிட்டாள்.

மகள், அவள் மனதில் இருப்பதை பளிச்சென்று தன்னிடம் கூறியதை அடுத்து அவர் செய்த முதல் வேலை, இந்த மாவீரன் தேடும் படலம் தான். அவளின் தாயாருக்கு ஆனால், இதில் சிறிதும் விருப்பமில்லை.

“நீங்கள், செய்வது எந்த விதத்திலும் சரியில்லை மன்னா. நம் மகள் தான் புரியாமல், கனவில் வந்தவனை மணம் செய்ய வேண்டும் என்று பிதற்றுகிறாள் என்றால், தாங்களும் அதற்க்கு துணை போவது சரி அல்ல” என்று வாதிட்டார் மங்கையர்க்கரசி.

“மங்கை! மகள் கனவில் வந்தவன், நிச்சயம் அவள் மனதை கொள்ளை கொண்டவனாக தான் இருப்பான். அதுவும் நம் மகள், அவனை எவ்வாறு வரைந்து இருக்கிறாள் என்று, நீ பார்த்தாய் அல்லவா”.

“அந்த ஓவியத்தில், அவன் ஒரு உயிருள்ள மனிதனாக அல்லவா இருக்கிறான். மகள் மனதில் சிம்மாசனமிட்டு முதலில் அமர்ந்தவன் என்பதாலும், அப்படி ஒருவன் இருந்தால் அவனை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தினாலும் தான், இப்பொழுது தேடுதல் வேட்டை நடத்த திட்டமிட்டு வீரர்களை அனுப்ப முடிவு செய்து இருக்கிறேன்”.

“நம் மகளின் எதிர்காலம் மீது, எனக்கும் அக்கறை இருக்கிறது. நல்லவன் ஒருவனை தான், மகளுக்கு மணம் முடிப்பேன். நீ சற்று கவலை கொள்ளாமல் இரு மங்கை, நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று தாயாருக்கு, தந்தை அன்று ஆறுதல் அளித்தது மனதில் மின்னி, இப்பொழுது வேதனை அளித்தது.

“என் மனம் கவர்ந்த மணாளனே! எங்கு இருக்கிறீர்கள்? தாங்கள் சீக்கிரம் வர வேண்டும்! என் தாய், தந்தை துயர் துடைத்து என் கரம் பற்றி என்னை காத்திட, தாங்கள் சீக்கிரம் வர வேண்டும்” என்று மனதிற்குள் மனம் கவர்ந்தவனிடம் பேசிக் கொண்டு இருந்தாள், கண்களில் வழியும் நீரோடு.

பூஜை முடிந்து அவளின் தாயும், தந்தையும் வெளியே வரவும், மன்னருக்கு காவலர் மூலம் விஷயம் சொல்லப்பட்டது. அங்கே மகள் அமர்ந்து இருந்த நிலை கண்டு, அந்த தாயின் உள்ளம் கண்ணீர் வடித்தது. தானும் வருவதாக கூறியவரை, தடுத்து மன்னர் தான் மட்டும் மகளை சந்திக்க சென்றார்.

அங்கே அந்த புல்தரையில், அமர்ந்து இருந்த மகளை நோக்கி வந்தவர், மகளின் கண்களில் வழிந்த கண்ணீரை பார்த்து துடிதுடித்து விட்டார். வேக எட்டுகள் எடுத்து அவளை நெருங்கி, தானும் அங்கே அவளோடு அந்த புல்தரையில் அமர்ந்து, மகளை பாசத்தோடு அனைத்துக் கொண்டார்.

தந்தையின் ஸ்பரிசம் உணர்ந்து, அதுவரை கட்டுபடுத்தி வைத்து இருந்த உணர்வுகளை, சட்டென்று பொங்கும் வழியும் நதி போல் அவள் கண்களில் நீர் ஆறாக ஓடியது. சிறிது நேரம் அழ விட்டவர், அதன் பின் அவளிடம் என்னவென்று கேட்டார்.

“தந்தையே! என்னை சுற்றி என்ன நடக்கின்றது, என்று எனக்கு தெரியவில்லை. தாய், தந்தையின் முதல் ஆசையே மகளை ஒரு நல்ல இடத்தில் மணம் முடித்து, அழகு பார்ப்பது தான்”.

“ஆனால் இங்கே என் விஷயத்தில், என் விருப்பம் அறிந்து நீங்கள் எனக்காக, என் மனம் கவர்ந்த மணாளனை தேடிக் கொண்டு இருகிறீர்கள். இதற்க்கு நடுவில் என்னை சுற்றி ஆபத்து இருக்கிறது என்றவுடன், தாங்கள் இங்கே பூஜை செய்ய வந்து இருக்கிறீர்கள்”.

“நான் மட்டும் தாய் சொன்னது போல், நீங்கள் காட்டும் மணாளனை முதலில் மணந்து இருந்தால், இப்பொழுது அவரும் தங்களுக்கு பக்க பலமாக இருந்து இருப்பார்”.

“என்னால், என் ஒருத்தியின் சுயநலத்தால், உங்கள் அனைவரையும் கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறேனோ என்று மனது சஞ்சலமாக இருக்கின்றது தந்தையே” என்று மனதில் அழுத்திக் கொண்டு இருந்த பாரத்தை, தந்தையிடம் இறக்கி வைத்தாள், மதியழகி.

அவளின் மனதை புரிந்து கொண்ட மன்னரோ, அவளின் வருத்தம் கண்டு வேதனை அடைந்தாலும், இப்பொழுது மகளை சமாதனம் செய்து அவளுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

“ மகளே! வருத்தம் வேண்டாம்! நீ காட்டிய மணாளன் நிச்சயம் உன்னை தேடி வருவான். அவன் வரவில்லை என்றால், உன்னை அவனிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டியது என்னுடைய கடமை”.

“உன்னை நான் பாதுக்காத்துக் கொள்வது போல், அவனும் உன்னை பாதுகாப்பான். இப்பொழுது உன்னை சூழ்ந்து இருப்பது, ஆபத்து இல்லை, இறைவன் நமக்காக வைத்து இருக்கும் சோதனை.

“ இந்த சூழ்நிலையில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்று, நம்மை அவர் கண்காணித்து கொண்டு இருக்கிறார். மகளே! நீ எனக்கு ஒரு சத்தியம் செய்ய வேண்டும், செய்வாயா!” என்று கேட்டார் மன்னர்.

“என் நலனிற்காக, தாங்கள் எதுவும் செய்வீர்கள் என்பதை நான் அறிவேன் தந்தையே. தங்களுக்கு நான் சத்தியம் செய்கிறேன், என்னவென்று கூறுங்கள் தந்தையே?” என்று கேட்டாள் மதியழகி.

“நேரம் வரும் பொழுது, நானே உன்னிடம் கூறுகிறேன் மகளே . இப்பொழுது உன் தாயிடம் நாம் செல்லலாம், மிகவும் பயந்து கொண்டு இருப்பார் உன்னை நினைத்து” என்று கூறிவிட்டு இருவரும், அங்கே நந்தி சன்னதி அருகே அமைக்கப்பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்த தங்கள் குடும்பத்தாரை நோக்கி சென்றனர்.

சுற்றி இருந்த காவலர்கள், மன்னர் இப்படி மகளுக்காக அவருடன் இப்படி புல் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து வாய் பிளந்தார்கள். மன்னரின் கம்பீரம் அறிந்த அவர்கள், அரசவையில் ஆசனம் சரியில்லை என்றால் உடனே கோபப்பார்வை பார்த்து, அடுத்து அவனை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி விடுவார் என்பதை அறிந்தவர்கள், இப்பொழுது நடந்ததை நம்ப முடியாமல் பார்த்து இருந்தனர்.

அவர்களின் பார்வை புரிந்த அரசனும், அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்.

இவர்கள் அங்கே வந்தவுடன், தாய் மங்கையர்க்கரசி மகளை பார்த்து என்னவென்று கேட்டார். மகளோ ஒன்றும் கூறாமல், அவரை கட்டி அனைத்துக் கொண்டு ஒன்றும் இல்லை என்று கூறினாள்.
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
“இன்னும் சற்று நேரம் இருவரும் தாமதித்து இருந்தால், தமக்கை அங்கே உங்களை தேடி வந்து இருப்பார் மதி. இங்கே அந்த அளவிற்கு அவர் புலம்பிக் கொண்டு இருந்தார், உன்னை நினைத்து” என்று கூறினார் குமாரிதேவி, அவளின் சிறிய அன்னை.

இவர்கள் இங்கே பேசிக் கொண்டு இருக்க, மன்னருக்கு அப்பொழுது தூதுவன் ஒருவன் கொண்டு வந்த செய்தியில், உடனே எல்லோரையும் அழைத்துக் கொண்டு அங்கே தஞ்சையில் உள்ள அரண்மனை நோக்கி சென்றார்.

இன்று :

இரண்டு நாட்களில், மதியழகி அங்கே வீட்டில் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பதை ஒருவாறு கணித்து விட்டாள். அவள் வாழ்ந்து, வளர்ந்த சூழ்நிலை வேறு, இங்கு இருப்பது வேறு அல்லவா.

புதிது, புதிதாக நிறைய விஷயங்களை கற்று கொண்டாள். அதில் அவளுக்கு மிகவும் பிடித்தது, சமையல் செய்வது. விதவிதமான பலகாரங்கள், மூன்று வேளை உணவும் சற்று வித்தியாசமாக இருந்தது, எல்லாம் அவள் மனதை கவர்ந்தது.

அவளுக்கு பிடிக்காத ஒரு விஷயம் என்றால், நடிப்பு. ஆதி, நடிப்பு துறை சார்ந்த ஒன்றில் இருப்பதையும், அதில் அவன் வேலை குறித்த விபரமும், அங்கே அவன் நடந்து கொண்ட முறையும், அவளை எரிச்சல் படுத்தியது.

கடந்த கால நினைவுகளை நினைத்து பார்க்க எண்ணினாலும், ஆதி அவனை சுற்றியே அவளின் நினைப்பை அவனை அறியாமல் கொண்டு வந்து இருந்தான்.

அன்று வீட்டில் ஆதியின் தாயும், தந்தையும் இரவு உறங்க செல்ல, ஆதி வருகைக்காக மதி முழித்து இருந்தாள். சற்று களைப்பாக அன்று வந்தவன், மதி அங்கே அமர்ந்து இருந்ததை பார்த்து திடுகிட்டான்.

“வாருங்கள்! கை, கால்களை நன்றாக சுத்தம் செய்துக் கொண்டு வந்து அமருங்கள். நான் உணவு பரிமாறுகிறேன், தாங்கள் பசியாறலாம்” என்று கூறியவளை கண்டு ஆச்சர்யம் அடைந்தான்.

“என்ன டா இது! இவ எதுக்கு முழிச்சு இருக்கா இப்போ, ஹையோ இந்த அம்மா என்னை இந்த பைத்தியம் கிட்ட மாட்டி விட்டுட்டு போயிட்டாங்களே”.

“ஏன்மா? ஏன்? இப்படி நீங்க எங்க ரெண்டு பேரையும் ஆலம் சுற்றி வரவழைச்சா, புருஷன் பொண்டாட்டி ஆகிடுவோமா? என்ன மாம் நீங்க இப்படி பண்ணிட்டீங்களே!” என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே, தன்னை ரெப்ரெஷ் செய்துக் கொண்டு வந்து அமர்ந்தான்.

சாப்பிட்டு முடிக்கும் வரை, அங்கே மௌனம் மட்டுமே ஆட்சி புரிந்தது. தன்னிடம் ஏதோ அவள் பேச எண்ணுகிறாள், என்ற வரையில் அவனுக்கு புரிந்ததே தவிர, என்ன பேச போகிறாள் என்று தெரியவில்லை.

“ஒரு வேளை, அவளுக்கு சுயயுணர்வு திரும்பிடுச்சா? இல்லையே! இன்னும் ஏதோ அரச குலத்து பெண் மாதிரி தான, இப்போ கூட பேசிகிட்டு இருக்கா, என்னவா இருக்கும்” என்று குழம்பினான்.

அவன் சாப்பிட்டு முடித்தவுடன், கையை கழுவிக் கொண்டு அங்கே ஹாலில் அமர்ந்த நொடி, அவளும் அங்கே எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு வந்து, சற்று இடைவெளி விட்டு அங்கே அவன் அமர்ந்த சோபாவில் அமர்ந்தாள்.

“என்ன பேசணும் என் கிட்ட? எதுவும் முக்கியமா?” என்று கேட்டான் ஆதி.

“ஆம்! தங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். தாங்கள் ஏன் பெண்களோடு, அதிக நெருக்கம் கொண்டு இருக்கிறீர்கள்? சற்று தள்ளி நின்று, அவர்களுக்கு விளக்கினால் போதுமே”.

“தாங்கள், அவர்களை தொட்டு பேசி தான் செய்து காட்ட வேண்டுமா? என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால், அவர்கள் செய்து விட போகிறார்கள். நீங்கள் இப்படி செய்வதால், அவர்கள் மனம் புண்படாதா?”

“இனி இப்படி செய்யாதீர்கள், அது அவர்களுக்கும் நல்லதல்ல, தங்களுக்கும் நல்லதல்ல” என்று அவள் கூற வந்ததை, அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டாள் மதியழகி.

ஆதிக்கு கட்டுகடங்காத கோபம் வந்துவிட்டது, அவனின் தொழில் அவனுக்கு தெய்வம் மாதிரி. ஒரு காட்சி எடுக்கும் பொழுது, அதில் பிழை நேர்ந்தால், அவன் இப்படி சில சமயம் சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கும்.

அதற்கென்று வேண்டும் என்றே, அவர்களை தொட்டு பேசிட மாட்டான். அவனிற்கு எங்கு, எப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும். இப்பொழுது அவள் கூறுவதை கேட்டு, அவன் தொழிலை குறை சொல்வது போல் அவனுக்கு தோன்றிற்று.

அதில் கோபம் வந்தவனாய், அவனை பார்த்து கர்ஜிக்க தொடங்கினான் அந்த இரவு நேரத்தில்.

“ஏய்! எனக்கு தெரியும் என்ன செய்யணும்ன்னு, நீ உன் வேலையை பாரு. நீயே ஒரு பைத்தியம், உன்னை இப்படி என் தலையில் கட்டி விட்டுடாங்களேன்னு இருக்கு”.

“நீ எப்போ இந்த இடத்தை விட்டு போறியோ, அப்போ தான் எனக்கு நிம்மதி. சும்மா என் உயிரை வாங்காம, போய் படுத்து தூங்கு” என்று சிடுசிடுத்தான்.

இதுவரை யாரிடமும், இப்படி ஒரு வசை மொழி வாங்காதவள். தன் உயிர் என்று நினைத்தவனிடம் இருந்து வாங்கிய சுடு சொற்கள், அவள் நெஞ்சை பதம் பார்த்தது.

கண்களில் எட்டி பார்க்க துடிக்கும் கண்ணீரை, அவனுக்கு காட்டாமல் வேகமாக மாடியேறி அவளின் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

இங்கே ஆதியோ, எரிமலையின் சீற்றத்துடன் அமர்ந்து இருந்தான். அவன் கத்திய கத்தலில், அவனின் தாய் வெளியே வந்து அவனை பார்த்து முறைத்தார்.

“ஏண்டா எருமை, கத்தனும்னா வெளியே போய் கத்த வேண்டியது தானே. இப்படி நடு ராத்திரியில், வீட்டு ஹால் ல நின்னுகிட்டு தான் கத்துவியா?”.

“கொஞ்சம் கூட, அறிவே இல்லை டா உனக்கு. பெரிய டைரக்டர் தான் பெயரு, வீட்டுல எப்படி இருக்கனும்ன்னு இன்னும் தெரியல உனக்கு” என்று அவனை திட்டிக் கொண்டு இருந்தார்.

“ஏன் சொல்ல மாட்டீங்க நீங்க, ஆலம் சுற்றி உள்ள கூட்டி வந்தீங்களே உங்க மருமக, எல்லாம் அவளால வந்தது. இந்த பைத்தியம் எங்க இருந்து வந்தான்னு கண்டுபிடிச்சு, அவளை எப்போ டா அங்க கொண்டு போய் சேர்க்கன்னு இருக்கு” என்று புலம்பி தள்ளினான்.

“சும்மா அவளை பைத்தியம் சொல்லுறதை, முதல நிறுத்து டா. அவ ஒன்னும் பைத்தியம் எல்லாம் கிடையாது, அவ தெளிவா தான் இருக்கா” என்று கூறியவரை பார்த்து முறைத்தான்.

“எது! ஐநூறு வருஷம் முன்னாடி வாழ்ந்த மதியழகி நான் தான், அங்க இருந்து இங்க வந்து இருக்கேன்னு சொல்லிக்கிட்டு இருக்காளே அவ தெளிவா இருக்காளா” என்று கிண்டல் செய்தான்.

“எனக்கு என்னமோ, அதுல உண்மை இருக்கும்ன்னு தோணுது டா. ஏன்னா, வரலாறு ல அவ காணாம போயிட்டதா தான் சொன்னாங்க. ஒரு வேலை விதி வசத்தால், அவ இங்க வந்து இருப்பாளோ?” என்று கூறியவரை பார்த்து சிரித்தான்.

“என்னமா இது, உங்க கற்பனை இப்படி தறிகெட்டு ஓடுது. அப்போ என் பொண்டாட்டி, ஐநூறு வருஷம் முன்னாடி ல இருந்து வந்து இருக்கான்னு சொல்லுறீங்க. நீங்க நல்லா வருவீங்க மா, முதல உங்களை கொண்டு போய் ஒரு டாக்டர் கிட்ட காட்டனும்” என்று கூறியவனை பார்த்து சிரித்தார்.

அதன் பின் நேரமாகிவிட்டதை உணர்ந்து, அவனின் அன்னை அவனை படுக்க சொல்லி அனுப்பி வைத்தார். இங்கே ஆதி பேசிய பேச்சில், மறுநாள் மதியழகி அங்கு இருந்து யாருக்கும் சொல்லாமல், சென்றுவிட்டாள்.

தொடரும்...
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
சூப்பர்....மதியழகி மணாளனை எப்படி சந்தித்தாள்...அவளைச் சுற்றி இருக்கும் ஆபத்து என்ன...ஆதி மதியை என் பொண்டாட்டினே சொல்லிட்டான்..தெரிஞ்சு சொன்னானா இல்ல தெரியாம சொன்ன்னா....எங்க போய்டாள் மதி???....வாரம் ஒரு பதிவு இடலாமே...அருமையாக இருக்கிறது...
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
superb epi sis:love::love::love::love:
சுற்றி இருந்த காவலர்கள், மன்னர் இப்படி மகளுக்காக அவருடன் இப்படி புல் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து வாய் பிளந்தார்கள். மன்னரின் கம்பீரம் அறிந்த அவர்கள், அரசவையில் ஆசனம் சரியில்லை என்றால் உடனே கோபப்பார்வை பார்த்து, அடுத்து அவனை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி விடுவார் என்பதை அறிந்தவர்கள், இப்பொழுது நடந்ததை நம்ப முடியாமல் பார்த்து இருந்தனர்.
arasar magal methu konda anbu athagaiyathu nice:):):):)kanavil vanthavan eppo nanavil varuvaan.... 500 years before aval kanamal poitala:unsure::unsure::unsure::unsure:athiyin amma varalaru solvathaka koorukirarkale:unsure::unsure::unsure::unsure:
இங்கே ஆதி பேசிய பேச்சில், மறுநாள் மதியழகி அங்கு இருந்து யாருக்கும் சொல்லாமல், சென்றுவிட்டாள்.
engu chendral mathi:unsure::unsure::unsure:waiting eagerly
 




Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Hi uma mam.
Naan romba yethir paartha update ithu. Different concept unga story. Pls frequent updates poda try pannunga mam. Intha update romba nalla irunthathu. ????☺
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Hi uma hv r u ?romba. Nall edaivezli ku piragu ud Yoda marubadiyum vandhu teaga suprrrrr??? nandrI?madhi ku puthu edam enga phoye Matta phoragalo puthu kulapam arumbum ??‍♀Waiting
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Ippadi ithu sathiyam theriyala...hahaha rendu perum pesara tamizh ketkave comedy a iruku...pavam da athi
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top