• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Basundhi Paarvai 01

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Arthy

மண்டலாதிபதி
Joined
Jan 21, 2018
Messages
420
Reaction score
2,138
Location
US
வணக்கம் தோழமைகளே! அனைவரும் நலமா? பாசுந்திப் பார்வை கதையின் மூலம் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இக்கதைக்கு முன்னோட்டம் தரவில்லை. கதையின் ஓட்டத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களில் சிலர் இக்கதையின் சில அத்தியாயங்களை வெகு முன்பு வாசித்து இருக்கலாம். நீண்ட இடைவெளிக்குப் பின் இதனைக் கையில் எடுத்திருக்கிறேன். சற்று மெருகேற்றி வருகிறது.

வாசித்துப் பாருங்கள். உங்கள் எண்ணங்களையும் தப்பாமல் பகிருங்கள். ஆன்லைனில் எழுதுவதற்கான ஆவலுக்கு உங்கள் கருத்துகளே காரணம்.

இரண்டு குறுநாவல்களை போட்டிக்காக வேறொரு தளத்தில் பதிவிடுகிறேன். அதனால், இக்கதையின் பதிவுகள் வாரம் ஒரு முறை தான் வரும்.

இப்போது வாருங்கள் நமது நாயகி நாயகனைச் சந்திப்போம்.
 




Arthy

மண்டலாதிபதி
Joined
Jan 21, 2018
Messages
420
Reaction score
2,138
Location
US
ஆர்த்தி ரவியின் ‘பாசுந்திப் பார்வை’

அத்தியாயம் 01

காதலா ஈர்ப்பா?
கண்டதும் காதல்,
காணாமலும் காதல்…
ஈர்ப்பு எனக் கொள்ளவா,
காதல் எனக் கொண்டாடவா?
விடை தெரியா உணர்வில்…

“ரெட் ஹா(ர்)ட் ஆருஷ்!”

ஆழ்ந்த ரசனையுடன் சொல்லிக் கொண்டாள் யாஷ்வி. விழிகளில் மின்னிச் சென்றது மின்னல்.

அதீதக் கவர்ச்சி கொண்டு இயற்கையில் வடிக்கப் பட்டிருந்த அளவான உதடுகளின் பிங்க் நிறத்தை அடர்ச் சிகப்பு க்லாஸி டச் சாயத்தைப் பூசி இன்னும் மெருகேற்றியிருந்தாள்.

‘ஆருஷ்’ என்று சொல்லும் போது விரிந்துக் குவியும் அந்தக் கொவ்வைப்பழ நிறம் கொண்டிருக்கும் இதழ்களை மட்டும் அந்தப் பெயருக்குச் சொந்தக்காரன் பார்த்திருந்தால்? அப்படியே தனது அழுத்தமான விரிந்தப் பெரிய உதடுகளைக் கொண்டு பொத்தி வைத்து மூடி இருப்பானோ?

நின் விழியோரம் துள்ளும் காதல் கண்டேன் பெண்ணே,
நெஞ்சில் பதிந்து போனது சிக்கென உனது பிம்பம்!
கொஞ்சம் காதல் செஞ்சுப் பார்த்து விடுவோமா?
இதயம் கேட்கிறது வன்முறையற்றக் காதலை இப்பம்…
உன் பதில் என்னவோ விழியழகியே?

இப்படி நான்கு விழிகளும் கவிதையாய்க் காதல் பேசி இருக்குமோ?

ஹே, ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்!

ரெட் நாட் (red knot) ஆருஷ்க்குத் தான் நம் ஹைதராபாத்தின் இளஞ்சிட்டைத் தெரியாதே? இனி தானே முட்டிக் கொள்ள(?!) சாரி சாரி! மீட் பண்ணிக் கொள்ள வைக்க வேண்டும்?

முதலில் வந்து போன அவளின் மின்னலின் பின்னணியில் காதல் ஒளிரவில்லை. ஆசை! ஆசை மட்டுமே தான் தெரிகிறது. சுவாரசியத்தில் எழுந்திருக்கும் அவா, மெல்ல மெல்ல வலுப்பெற்றுப் பேராவலில் நிறுத்தியிருக்கிறது.

ஆருஷ் என்ற நபர் மீது யாஷ்விக்குப் பிடித்தம். அவனும் இவளறிந்து கொண்டிருக்கும் அவனின் செயல்களும் தான் அதற்குக் காரணம். இவளின், அவன் மீதானப் பிடித்தத்திற்கு என்ன பெயர்ச் சூட்டுவது? காதல் என்றா?

ஹூம்ம்…

தெரியவில்லை என்பது யாஷ்வியின் பதிலாக இருக்கக் கூடும். நாளிதழ்களில் அவ்வப்போது காணும் ஒரு முகம். சில தடவைகள் தொலைக்காட்சியில் அவனைக் கூர்ந்துக் கவனித்து இருக்கிறாள். அவனின் பின்னணியைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறாள் தான்.

ஆனால், இந்தளவு மட்டுமே அறிந்து வைத்து இருப்பவளுக்கு வந்திருக்கும் உணர்வைக் கொண்டு எப்படிக் காதல் என்று சொல்லலாம்?

அப்புறம்? ஹ்ம் வேறென்ன, இப்போதைக்கு ஈர்ப்பு எனச் சொல்லிக் கொள்ளலாம்.

ரெட் நாட் ஆருஷ். நாட் -யை நீக்கி செல்லமாய் ஹா(ர்)ட் போட்டு வச்சு அழைக்கும் செல்லப் பாப்பா யாரு?

இவள், ஹைதராபாத்தின் பெரும் புள்ளி நரசிம்மகாரு பேத்தி. தேவ் பிலிம்ஸ் (Dev films) புகழ் ராணாதேவின் அக்கா மகள். திரையுலகக் குடும்பத்தில் சொகுசாகப் பிறந்து வளர்ந்து நிற்கும் அம்ச குமாரி, அழகு ராணி, க்யூட்டி சின்ட்ரெல்லா.

ஐம்பொன் சிலை யாஷ்வி! பிப்டி கேஜி? நோ நோ, கூட ஒரு பத்துக். கிலோவைச் சேர்த்துக்கோங்க. தர்பூசணி லுக்கை குறைக்க ஜிம் போக மாட்டா நம்ம அம்மிணி. மேக்-அப் ப்ளஸ் டைட் பிட்ஸ் போட்டு சிக் லுக் கொண்டு வந்து அசத்துற கேடி!

“யாஷ்!”

டிரினிடி தினசரியின் (Trinity Daily) ஞாயிறு பிரதியை விரித்து வைத்து வெறித்துக் கொண்டிருந்த யாஷ்வியின் செவி திடீர் விளிப்பில் அதிர்ந்தது.

காதலனைப் போல் நெருங்கி வந்து நின்று, இத்தனை நேரம் கண் நோகப் பார்த்துப் பார்த்துக் கடுப்பான நாவியா தான் ஹை டெசிபெல்லைக் கொட்டியது.

அவள் கண்களுக்குப் படாதது எதுவோ யாஷைக் கட்டிப் போடுவது? புரியவேயில்லை தான். அது வேறு அவளின் சுருதியை ஏற்றிவிட்டு இருந்தது.

நாவியா யாஷின் ஒன்று விட்ட கசின்.

கொய்ங்ங் சத்தத்தில் துள்ளி விழுந்து காதை தேய்த்துவிட்டுக் கொண்ட யாஷ்வி உர்ரென்ற பார்வையுடன்,

“நவீ! இடியட்! ஸ்ஸ் ஹா, என் காதே பிஞ்சி போச்சு. இப்போ என்னடி வேணும்? முதலில் உன் சத்தத்தைக் குறை. தள்ளிப் போய் நின்னு அப்புறம் பேசு.” என்று சத்தம் போட்டாள்.

“போக்கா! அப்படி என்னத்தைத் தான் இந்தச் சன் டே பேப்பர்ல பார்ப்பியோ? வாரம் தப்பாமல் வெறிச்சு வெறிச்சுப் பார்க்கிறது. நானும் தான் பார்த்துட்டு இருக்கேன். ஒன்னும் புரியலை போ. வெளியே போகலாம்ன்னு வரச் சொல்லிட்டு இப்படி டைம் வேஸ்ட் பண்ணினா என்ன அர்த்தம்?”

“ஹஹ்ஹா நவி! மை புஜ்ஜி! வெரி சாரி. நீ வந்ததை நான் பார்க்கலை. போகலாம் போகலாம்டி. சும்மா ஸ்டார் பாக்ஸ் நியூஸ் தான். இதைப் பற்றியெல்லாம் உனக்கு இப்போ ஒன்னும் புரிய வேண்டாம். அப்படியே விட்ரு.”

‘அதான் எனக்குச் சேஃப்டி.’

யாஷ்வியின் சிரிப்பில் மற்றது மறந்தாள் நாவியா.

“ஹய்யோ! ரொம்ப அழகுக்கா உன் சிரிப்பு! எந்த ராஜக் குமாரன் வந்து உன்னைத் தூக்கப் போறானோ?”

கள்ளம் கபடமற்ற உள்ளம் நாவியாவிற்கு. யாஷ்வியின் கீழுதட்டைக் கிள்ளிக் கொஞ்சினாள்.

‘ராஜகுமாரனா?’, யாஷ்வியின் விழிகளில் ஆருஷ் தோன்றி புன்னகைத்தான். இதயத்தில் சிறு தடக் தடக் வந்து போவதை எண்ணி பரவசமான மனநிலைக்கு ஆட் பட்டிருந்தாள். அது அப்படியே முகத்தில் ஜொலித்து உதட்டில் படர்ந்தது.

சித்தப்பா மகள். சம வயதில் இல்லையென்றாலும் நல்ல தோழி. யாஷிக்கு இவளின் இன்னொசன்ஸ் தான் கவர்ந்ததே. படித்துப் பட்டம் வாங்கியவள். செல்வச்செழிப்பு மிக்கவள். ஆனால், கர்வம் தீண்டாப் பண்பைக் கொண்டிருப்பவள் நாவியா.

“நானொரு லூசு.” தலையில் தட்டிக் கொண்ட நாவியா, “தேவ்... ராஜகுமாரன் ராணாதேவ், உன்னைக் கொத்திப் போகக் காத்திருக்கும் போது வேறவன் எதுக்கு வர்றான்.” என்றாள் சின்னதாகிப் போன முகத்துடன் சுருதி இறங்கிய குரலில்.

அவளின் சிறு விழிகளில் சுடர் குறைந்து நிராசையின் படர்வு. அவளின் இச்சுணக்கம் ஏன் என்பதை அறியாதவளா பெரியவள்?

“என் நவி சூப்பர் க்யூட் டாலி. இந்தக் குட்டி முகம் நொடியில் எத்தனை ஜாலங்களைக் காட்டுது, அப்ப்பா! என் மாமகாரு மட்டும் என் மேல் ஆசைப்பட்டால் போதுமா?”

தங்கைக்கு ஹிண்ட் கொடுத்தாள் யாஷ்வி.

அவளின் அழகான வரி வடிவம் கொண்ட அடர்ந்த புருவங்கள் உயர்ந்து கேள்வி போல் வளைந்துச் சுருங்கின. அவற்றின் கீழ் விரிந்திருக்கும் இமைகள் இரண்டும் படபடத்து அழகுக் காட்டின.

கண் சிமிட்டிப் புன்னகைத்தபடி,

“உனக்குக் கவலை வேண்டாம் நவி பேபி.”

என்று தங்கையைப் பரிவுடன் அணைத்துக் கொண்டாள் யாஷ்வி.

“நீ ரெடியா? வா போகலாம்.”

தன் மெகா சைஸ் பிரதா கூலர்ஸ் எடுத்து அணிந்து கொண்டு, லூயிஸ் ஊட்டன் கைப்பையுடன் வந்த யாஷ்வியின் தோற்றத்தைப் பார்த்த நாவியா அசந்து தான் போனாள்.

செல்வச் சீமாட்டிகள் இருவரும் ஹைதராபாத்தின் மிகப் பெரிய ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தனர்.

யாஷிக்குத் தெரியும் நாவியா மனதில் ராணா இருப்பது. பத்து வயசு வித்தியாசம் கொஞ்சம் உறுத்தல் தானென்றாலும் அதைத் தவிர வேறு அனைத்தும் நல்ல பொருத்தமே. சொத்து அனைத்தும் இவளைப் போலவே.

என்னவொன்று, இவள் ராணாதேவிற்குச் சொந்த அக்கா மகள். நாவியா ஒன்று விட்ட சொந்தம். அது மட்டுமா? ராணாதேவ் யாஷ்வியை அல்லவா நெஞ்சத்தில் சிறையெடுத்து வைத்திருக்கிறான்?

ராணாவைப் பொறுத்த வரை, தனக்கும் யாஷ்விக்கும் இருக்கும் ஏழு வயது வித்தியாசம் இருப்பது ஒன்றுமேயில்லை. யாஷ்வியைத் தன்னில் புதைத்துப் பொக்கிசமாகக் காவல் காத்துக் கொண்டிருப்பவன்.

அத்தனை எளிதாக அவளை நழுவ விட்டு விட மாட்டான். யாஷ்வியும் இதனை நன்றாக அறிந்து வைத்திருக்கிறாள் தான்.

என்று தன் தாய்மாமன், பாசம் மற்றும் பரிவைத் தாண்டி நேசத்தையும் நெருக்கத்தையும் விழிகளில் வழிய விட்டு நின்றானோ, அன்றிலிருந்து அவனிடம் தூரம் காட்டிப் பழகி வருகிறாள்.

ஏனோ, ‘தாய்மாமன்’ என்ற பந்தத்தைத் தாண்டிய ஓர் உறவுநிலை அவனிடம் ஏற்படுவதை யோசித்துப் பார்க்கவே இவள் விரும்பவில்லை. வரும் காலத்தின் கணக்குகளின் டெலிபதியோ?

திண்ணென்றிருக்கும் தன் தோள்கள் யாஷ்விக்காக ஏங்குவதைப் புரிந்தும் விலகிப் போகும் அவளை, விட்டுப்பிடிக்க நினைத்தது பெரிய முட்டாள் தனம் என்பதை ராணாதேவ் விரைவில் உணரப் போகிறான்.
 




Arthy

மண்டலாதிபதி
Joined
Jan 21, 2018
Messages
420
Reaction score
2,138
Location
US
மும்பை மாநகரத்தின் பிரதான வர்த்தக அலுவல் மையப் பகுதி. இரவு பத்து மணியை நெருங்கும் வேளையிலும் அதன் துடிப்பு அடங்கியிருக்கவில்லை.

அகண்ட சாலைகளில் வாகனங்களின் பரபரப்பு. அடுக்கு மாடி கட்டிடங்களில் இன்னும் மிணுக்கிக் கொண்டிருக்கும் விளக்குகள்.

ரியல் எஸ்டேட் மார்க்கெட்டை எப்போதும் உச்சத்தில் பிடித்து வைத்திருக்கும் மும்பையில், ஒரு சதுர அடி இடத்தைக் கூட யோசித்து அளவாக அளந்து உபயோகிப்பது வழமை.

அப்படிப்பட்ட ஊரில் இப்படி ஒரு இடமா? பலருக்கு வியப்பில் இங்கு விழிகள் விரியத்தான் செய்யும். லயிப்பைத் தந்து வியப்பில் ஆழ்த்திடும் கட்டிடம். சற்று மாறுபட்ட வகையில் அமைந்து இருக்கும் இந்த அடுக்கு மாடி கட்டிடம் தான் டிரினிட்டி டவர்ஸ்.

உள்ளும் புறமும் ஈஸ்தெடிக்ஸ் எனச் சொல்லப்படும் அழகியல் மட்டுமின்றி உயிர்ப்பையும் கொண்டு இயங்கி வருகிறது. காரணம் மற்ற சில அலுவலகங்களுக்கு மத்தியில் அங்கு வீற்றிருக்கும், ‘தி டிரினிட்டி ட்ரையோ’ (The Trinity Trio) ஊடக அலுவலகங்கள்.

டிரினிட்டி தினசரி, வாராந்திர, மாதாந்திர இதழ்களின் பதிப்பு மற்றும் இணையதள ஊடக அலுவலகங்கள் அங்கிருந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் முக்கியப் பங்களிப்பை தருகிறது டிரினிட்டி. இந்திய மக்கள் மத்தியில் தற்போது மிகவும் பிரபலம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.

இதன் ஆங்கிலம், ஹிந்தி, மராட்டிய மொழிப் பணிகள் முழுவதும் மும்பையில் நடைபெறுகின்றன. ரீஜனல் மொழி அலுவலகங்கள் அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

நேரத்தை அலட்சியம் செய்தவனாகத் தன் பிரத்யேகக் கணிணியில் கண் பதித்துத் தீவிரமாக வேலையில் மூழ்கி இருந்தான் ஆருஷ்.

அவனின் நீண்ட விரல்கள் விசைப்பலகையில் (keyboard) விளையாடிக் கொண்டிருந்தன. அதன் விளைவாக இந்த வாரம் வெளி வரவிருக்கும் வெள்ளி வாராந்திர மலர் பதிப்பிற்கான கட்டுரை ஒன்று வடிவாக உயிர் பெற்றுக் கொண்டிருந்தது.

இதழியலைக் (Journalism) கல்வியாகக் கற்றுப் பட்டம் பெற்றவன் ஆருஷ். மும்பையில் பிறந்து வளர்ந்த செல்வந்தர்களில் ஒருவன். அப்பாவின் பணம் கொட்டிக் கிடந்தும் அதை விடுத்து தனக்கான அடையாளத்தைத் தேடி ஊடகத்துறையில் கால் பதித்தவன்.

ஐந்தாறு வருடங்களுக்கு முன் இணையதளம் மற்றும் சமூக ஊடகம் தந்திருந்த பெரும் பாதிப்பால் சரிந்து கொண்டிருந்தது பத்திரிக்கைத் தொழில். இன்றும் நிறையப் பத்திரிக்கைகள் இதனால் பாதிப்பை கண்டு கொண்டு தான் இருக்கின்றன.

அனைவருக்கும் விதி விலக்காய் இருப்பது டிரினிட்டி.

அன்று விற்பனையில் ஆட்டம் கண்டிருந்த டிரினிட்டியை தக்க சமயத்தில் தைரியமாக வாங்கினான் ஆருஷ். இவனுடன் இருவர் சேர்ந்து கொண்டனர். அவர்கள் ஷாகில் மற்றும் நீரஜ். இருவரும் ஆருஷின் டிரினிட்டி டிரையோவிற்குப் பங்குதாரர்களாகினர்.

இவர்கள் மூவரும் நீண்ட கால நண்பர்கள். ஊடகவியல் கல்வி மட்டுமின்றிப் பள்ளிக்கூடக் காலத்திலும் உடன் பயின்றவர்கள்.

தங்களின் கடின உழைப்பினால் மூன்று வருடத்திற்குள் தங்கள் தொழிலை ஸ்திரப்படுத்திக் கொண்டு விஸ்தரித்தும் விட்டனர். டிரினிட்டி என்றால் திரும்பிப் பார்க்கும் அளவு புகழ் பெற்றிருக்கும் இந்நிலைக்கு வெகு முக்கியமான காரணி ஆருஷ்.

ஓய்வுக்காக ஏங்கிய கைகளைப் பின்னுக்கு உயர்த்தி நெட்டி முறித்தான் ஆருஷ். வலிமை மிக்க அக்கரங்களில் தசைக் கோலங்கள் முறுக்கேறி உறுதியைக் காட்டிக் கொண்டிருந்தன. சுழல் நாற்காலியை பின்னுக்குத் தள்ளி, தன் நெடிய கால்களையும் ரிலாக்ஸாக்கிக் கொண்டான்.

இடது பக்கக் கழுத்தில் சுரீரென்று ஒரு வலி தெறித்தது. ஒரு வாகன விபத்தின் உபயம். சமீபத்தில் அடிக்கடி எழும் இந்த வலியைக் கவனிக்க அவனுக்கு நேரமில்லை.

வலிக்கும் பகுதியில் படபடவென இடது கரம் கொண்டு தட்டிய ஆருஷ், அங்கு அழுத்தி விட்டுக் கொண்டிருக்கும் போது அறைக்குள் நுழைந்தான் ஷாகில்.

“அரே ஆருஷ் இன்னும் என்ன பண்ற? கிளம்பி வா, வீட்டிற்குப் போவோம். பசிக்குதுடா.”

“கொஞ்சம் பொறு, இந்தக் கட்டுரை முடிஞ்சது. எடிட்டருக்கு ஒரு ப்ரூஃப் அனுப்பி வச்சிட்டு வர்றேன். மார்னிங் நம்ம வர்றதுக்கு முன்னால் எடிட்டிங் முடிச்சிருவாங்க.”

“சரி சீக்கிரம் பண்ணு. நான் ரேஷ்மிக்கு ஒரு கால் பண்ணனும். வெளியே இருக்கேன்.”

“நீ பேசலைன்னா அவளுக்குத் தூக்கம் வராதா?”

நக்கலாகக் கேட்டுக் கண் சிமிட்டிய ஆருஷை வெட்டவா குத்தவா எனும் ரீதியில் பார்ததான் ஷாகில்.

“இந்தக் கேள்வியை நீ கல்யாணம் செஞ்சு உன் பீவி (மனைவி) கிட்டக் கேளு. நல்ல பதில் கிடைக்கும்.”

ஆருஷிற்குப் பதில் சொன்ன ஷாகில் தன் பீவி ரேஷ்மாவை தற்காலிகமாக மறந்தான். தன் நண்பனிடம் பேச்சில் ஆழ்ந்தான்.

“ஆன்ட்டி உனக்குப் பொண்ணு பார்த்து வச்சிருக்கேன்னு சொல்லி இருந்தாங்க. அந்த டீடெயில்ஸ் பற்றிச் சொல்லு. பொண்ணு எப்படி இருக்கிறாள்?”

“எனக்கென்ன தெரியும்? நான் பார்க்கலை.”

உதடு பிதுக்கி ஷாகிலை அசால்டாகப் பார்த்தான் ஆருஷ்.

இது தேறாது எனப் பெருமூச்சு விட்டான் ஷாகில்.

“உன்னைப் போய் இந்த உலகம் லவ்வர் பாய்ன்னு ஜொல்லுது. நிஜ வாழ்க்கைல நீ சாமியார். இதுவரை எந்தப் பட்சியையும் தீண்டாத சுத்த சைவம்ன்னு சொன்னா நம்ம நாட்டு மக்கள் நம்புவாங்கங்கிற?”

ஆருஷைக் கிண்டலடித்தான்.

“ஹஹ்ஹஹ்ஹா!”

நண்பன் பேசிய விதத்தில் மனம் விட்டுச் சிரித்தான் ஆருஷ்.

பின்னர்த் தன் தோள்களைக் குலுக்கி, “ஹூ கேர்ஸ்!” எனக் கூறினான்.

அவனின் பதிலால் ஷாகில் வருத்தம் கொண்டான். பெண்களின் மேல் நாட்டமில்லாத ஒருவனாக எப்படி இருக்கின்றான்? அதுவும் மும்பை அழகிகளின் மத்தியில்.

இத்தொழில் சம்பந்தமாக எத்தனை பெண்களின் சந்திப்புக் கிடைக்கிறது? இவனின் மனதை எவரும் கவரவில்லையா? இல்லை இவனின் பெண்களுக்கான பார்வை வேறா இருக்கிறதா?

நண்பனின் மன ஓட்டத்தை அறிந்தும் அறியாதவனாய்… இல்லை கண்டு கொள்ளாதவனாய் மிக அலட்சியமாகக் கேசத்தை ஒதுக்கி விட்டுக் கொண்டு தன் இருக்கையைச் சுழற்றி விட்டு எழுந்தான்.

கடந்த இரண்டு வருடங்களாக டிரினிட்டி தினசரியின் ஞாயிறு பிரதியில் ஒரு பக்கம் முழுக்க இவன் ராஜ்ஜியம் தான். சமயங்களில் ஒரு பக்கம் பத்தாது. அடுத்தப் பக்கத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு இவன் விளையாடி மகிழ்வதுண்டு.

இவனால் ஞாயிறு வரும் தினசரி பத்திரிக்கையின் விற்பனை களை கட்டுகிறது.

விலாவாரியான அலசல். பச்சை பச்சையான எழுத்துக்கள். பிச்சி மேய்ந்து வைத்து எழுதி விடுகிறான். பலரின் நிஜ வாழ்க்கையும், வெள்ளித்திரையும் அல்லோலப்படுவது தான் அதிகம்.

சர்ச்சைக்குரிய எழுத்துக்களுக்குச் சொந்தக்காரன். ஆனாலும் ரசிகர்களைப் பெற்ற செலிப்ரிட்டி. இளைய தலைமுறையின் நாயகன். வயது வித்தியாசமில்லாமல் பெண்களை அதிகம் கவர்ந்தவன்.

அப்படி என்னத்தைத் தான் ரெட் நாட் ஆருஷ் எழுதி வைத்து ஹாட் பிகர் ஆகி, டச்சிங் டச்சிங் ஸ்வீட் ஹார்ட்ஸ்?

விரைவில் பார்ப்போம் இவனின் ஆட்டத்தையும், இத்தகையவனையும் ஆட்டுவிக்க வந்து சேர்பவளையும்.


 




Arthy

மண்டலாதிபதி
Joined
Jan 21, 2018
Messages
420
Reaction score
2,138
Location
US
அருமை ?
இரண்டு பதிவுகளாக வந்திருக்கிறது சித்ரா. இரண்டையும் பார்த்தீர்களா? நன்றி!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top