• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Basundhi Paarvai 03

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Arthy

மண்டலாதிபதி
Joined
Jan 21, 2018
Messages
420
Reaction score
2,138
Location
US
இனிய வணக்கம் நட்புகளே! அனைவரும் நலமா? அடுத்தப் பதிவைப் பதிவு செய்கிறேன். இந்த நேரத்தில் உங்களிடம் ஒரு விசயத்தைப் பகிர்கிறேன். இதனை ஓர் அறிவிப்பு Disclaimer எனக் கொள்ளவும்.

இக்கதையை முழுக்க family genre குடும்பக்கதை வகையில் சேர்க்க இயலாது. Social cause/ Romance/ Family Genre. சமூக அக்கறை, காதல், கொஞ்சம் குடும்பம் என வகைப்படுத்தலாம்.

இக்கதையில் இடம் பெறவிருக்கும் நிகழ்வுகள் யாவும் எனது கற்பனை. இப்படி நடந்ததா, இப்படியும் நடக்குமா என்ற யோசனையை விட்டு விட்டு, இப்படி நடந்தால்... நடக்கும் பட்சத்தில் என்னவாகும்? தீர்வு? என்ற நோக்கில் இணைந்து இருக்கக் கோருகிறேன்.

இதனைச் சொல்வது எனது கடமை. மற்றபடி எப்பவும் போல எனது டச்சுடன் சுவாரசியம் குன்றாமல் கதை வளரும்.

1-3 அத்தியாயங்கள் நான் சென்ற அக்டோபர் நவம்பரில் பதிவு செய்தவை. பிழைகளை நீக்கித் தந்திருக்கிறேன்.

முடியும் வரை ஒவ்வொரு புதனன்று சந்திக்கலாம். தப்பி விட்டால் மன்னியுங்கள்!

ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகளைக் கூறி வரும் தோழமைகளுக்கு மிக்க நன்றி!

குறிப்பு: அழகியே என் அழகியே கதையை தற்போது தொடர இயலாது மக்களே. பாசுந்திப் பார்வையுடன் தற்போது ‘கண்ணம்மா’ என்கிற தலைப்பில் ஒரு நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
 




Arthy

மண்டலாதிபதி
Joined
Jan 21, 2018
Messages
420
Reaction score
2,138
Location
US
ஆர்த்தி ரவியின் ‘பாசுந்திப் பார்வை’ குறுநாவல்

அத்தியாயம் 03


தேடல்கள் மிகவும் ருசியானவை!
ஒரு முறை சுவைத்து விட்டால், அவை தொடர்ப் புள்ளியே!
உனது தேவைகளுக்கேற்பத் தேடல்கள் இருப்பின்,
நிம்மதியை நீ கட்டி இழுக்க அவசியமில்லை…
அதுவே உன்னைக் கட்டித் தழுவி கொள்ளும்!

வானம் மப்பும் மந்தாரமுமாய் இருக்க, விடியல் சோம்பேறியாய்ப் புலர மறுத்து அடம் பிடித்துக் கொண்டிருந்தது.

நீள் வடிவத்தில் அமைந்திருக்கும் அந்தப் பெரிய அறை, கண்களுக்கு இதம் தரும் வகையான உள்ளமைப்புடன், சிறப்பான வகையில் வடிவமைக்கப் பெற்றிருந்தது.

நுரைத்துப் பொங்கும் பசும் பாலின் வண்ணத்தில் உட்கூரை. பாலிஷ் செய்யப்படாத (rugged look) ஆழ்ந்த அடர் நிற மரக் கட்டிலின், தலைப் பக்கச்சுவர் முழுவதும் பேபி ப்ளூ மற்றும் சாம்பல் நிறங்களின் கலவையால் கொண்டு வரப்பட்டிருந்தது. மனதை வருடிக் கொடுக்கும் மிக மெல்லிய சாம்பல் நிறம். மற்ற மூன்று சுவர்களும் பாதாம் பாலின் நிறத்தில் அமைக்கப்பட்டிருந்தன.

கட்டிலின் எதிர்ப்புறம் இருக்கும் நீள் சுவர் முழுவதும் ஆருஷின் படங்கள்.

வெண் மேகம் பின்னணியில், பிறந்த உடன் எடுக்கப் பட்டிருந்த மென் கருமை கொண்டிருந்த அடர்ந்தச் சுருள் கேசத்துடன்; வெளேரென்ற நிற மேனி அதிருப்தியில் சிணுங்கிச் சிவந்த நிறம் கண்டும்; சுழித்திருந்த உதடுகளும்; கூர்மையான விழி மணிகள் ஒளிர்வுடன் மின்னும் பேபி ஆருஷில் தொடங்கி,

அபாரமான உயரத்தில்; அலட்சியப் பார்வையுடன்; சிகாரின் புகையை வெறுக்கும் ரோஸ் நிற உதடுகளின் குவிப்பில் விரியப் போகும் மொட்டாகப் புன்னகை; இள மங்கைகள் விரும்பும் லவ்வர் பாய் தோற்றத்துடன் இன்றைய இளைஞனாக ஆருஷ்!

வெவ்வேறு வயதில் எடுக்கப்பட்ட படங்கள். அவனையும், அவனின் செயல்கள், ஆர்வங்கள், வெற்றிகள், சாதனைகள் என எடுத்துக் காட்டுவதாய்!

வெவ்வேறு இடங்கள், பின்னணி, வடிவங்கள்.

வேண்டும் என்றே ஒழுங்கில்லாத வகையில் வீற்றிருக்கும் படங்கள் அழகுக் காட்சி எனத் தோன்றி, உட்புற வடிவமைப்பாளருக்கு உம்மா கொடுக்கணும் என்று அப்படங்களைப் பார்க்கும் நம்மைத் தூண்டும் வகையில் அருமையான அமைப்பு.

ஓ! நம் ஹீரோ தானே வீட்டின் அவன் பகுதிக்கு உட்புற வடிவமைப்பாளர்? அப்படியென்றால் நாம் ஓர் ‘உம்மா’ என்ன, நச்சு நச்சென்று பல இச்சுகளைத் தாராளமாக வைத்து விடுவோம்.

தச்சு வேலையில் ஆர்வம் கொண்டிருக்கும் ஆருஷ், அவனின் உபயோகத்திற்காக, அழகாக, எளிமையான தோற்றத்துடன், உறுதியான மரச்சாமான்களை உருவாக்கி இருந்தான். அவை அவனது படுக்கை அறை, லைப்ரெரி, அலுவலக அறை என மற்ற பெரிய சாமான்களுக்கு மத்தியில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.

ஆருஷின் அலுவலக அறையில் அலங்காரமாக வீற்றிருக்கும் பெரிய கண்ணாடி அலமாரியில், முழுக்க முழுக்க அவனின் அருங்கலை உருவாக்கங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. சிறு வயது முதல் அவன் செய்து வைத்திருக்கும் சின்னச் சின்ன மரச்சாமான்கள், மினியேச்சர் மாதிரிகள், அவன் கை வண்ணத்தில் உயிர் பெற்றிருக்கும் வித விதமான சிறிய ஓவியங்கள் என வியப்பளிப்பதாய்!

ஆருஷிற்கு எப்போதும் வித்தியாசமான ஆர்வம், ஆழமான சிந்தனை உண்டு. அவனின் செயல்களில் எல்லாம் ஒரு தனித்துவமான அணுகுமுறையைக் காணலாம். ஊர்மிளாவும் அமர்நாத்தும் மகனின் எந்த விதமான ஆர்வத்திற்கும் இதுவரை தடை விதித்ததில்லை.

பெரிய மகன் அனிருத், அப்பாவின் தடத்தை அப்படியே பின்பற்றிப் படித்து வளர்ந்து, தற்போது தொழிலிலும் இணைந்து கொண்டான்.

ஆருஷ், சவாலும், பரபரப்பும், படபடப்பும், மிரட்டலும் கொண்டிருக்கும் ஊடகத்துறையை வாழ்வியலாக்கிக் கொண்டான்.

இதுவரை மகனை, அவனிஷ்டம் போல் விட்டிருக்கும் ஊர்மிளாவிற்குச் சில நாட்களாக மிகுந்த சஞ்சலம் வந்து விட்டது. முதல் காரணம் ஆருஷின் பாதுகாப்பு. இரண்டாவது காரணம் அவனின் ஷாதி (கல்யாணம்).

பொன்னிறத்தில் கூடுதலாகப் பால் வண்ணம் கலந்திருக்கும் சருமத்தை மேலும் பளிச்சாக்கிக் காட்டியது ஆருஷ் இப்போது போட்டுக் கொண்டிருக்கும் அடர்ச் சிவப்பு நிறக் கையில்லாத டீசெர்ட். முன் புறத்தில் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ. பின் புறத்தில் வாசகம்.

Run for Wealth. W எழுத்தின் மேல் பெரிதாக X குறியிட்டு, அப்படியே மேலே ஒரு பெரிய, அழுத்தமான H எழுத்து. Run for Health எனும் அர்த்தத்தில்.

மழைக்குத் தோதாக இள நீல நிறத்தில் தொப்பியுடன் கூடிய ஜேக்கெட் மற்றும் ஜாகர்ஸ் பேண்ட் அணிந்து கொண்டிருந்தவன், தன் நீளமான பாதங்களில் நைக்கி பிராண்ட் காலுறைகளை வேகமாக மாட்டினான்.

பின் நிதானமாகக் காலணிகள் வீற்றிருக்கும் அலமாரியைப் பார்வையிட்டான். ஆருஷ் ஒரு ஷூ பிரியன். சாதாரண உபயோகம், அலுவலக உபயோகம், பார்ட்டி தேவைக்காக, ஓட்டத்திற்காக, கூடைப்பந்து விளையாட்டிற்காக, டென்னிஸ் விளையாட்டிற்காக என வகைகள். பல ரகங்கள், பல நிறங்களில்.

நீண்ட அலசலுக்குப் பிறகு ஒரு சிவப்பு நிற ஜோர்டன் ரன்னிங் ஷூவை எடுத்து அணிந்து கொண்டான். அதில் பின் புறத்தில் வெளிப்பக்கம் மட்டும் நீல நிற டிசைன். வெயில் பட்டால் டாலடிக்கும் வகையில்.

அரவமின்றிப் படிகளில் இறங்கினான். அவனின் அம்மா எழுந்து வந்துவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வு.

இளங்காலையின் ரசிகன் ஆருஷ். வீட்டிலேயே உடற்பயிற்சிச் கூடம் வைத்திருந்தாலும், தூய்மையான இயற்கைக் காற்றைச் சுவாசப்பையில் நிரப்பி, உடம்பில் புத்துணர்ச்சியைத் தருவித்துக் கொள்ளத் தான் நித்தமும் அவனின் ஓட்டப் பயிற்சி.

ஆனால், மும்பை நகரின் தூய்மை? கவலைப்பட வேண்டிய விசயம் என்பது ஆருஷின் திண்ணமான எண்ணம். அங்கு நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையில், தொலைந்து போய்க் கொண்டிருக்கும் சுற்றுப்புறச்சூழலின் சுத்தமும் சுகாதாரமும் வருத்தம் தருவிப்பதாய்!


குப்பைத் தொட்டிகள் நிரம்பி வீதியில் வழிந்து, சில அடிகள் தூரம் வரை அலங்கோலமாகக் கிடக்கும் காட்சிகள் அங்கு நித்தம் நித்தம் தொடர்கதையாகப் போய்விட்டன. சிறு தெருக்கள், பெரும் வீதிகள், சாலையோரங்கள் என அசுத்தமான சூழல் நிறையக் கண்ணில் படுகிறது.

கடைநிலை, நடுத்தர வர்க்கம், மேல் தட்டு எனப் பாகுபாடின்றிப் பொது இடங்களில் நிறையப் பொறுப்பற்றத் தன்மை நிலவுகிறது.

ஏற்கெனவே வாகனங்களை அதிகமாகப் பாவிக்கும் மும்பையில், காற்றில் கலந்து விடும் மாசு படிதல் மிக அதிகம். இத்தனைக்கும் மும்பை மெட்ரோ ரெயில்கள் உலகின் முன்னோடி பயணச் சேவைகளில் ஒன்று. மிகச் சீராக ஓடிக் கொண்டிருக்கின்றன. இருந்தும் இந்நிலை!
 




Arthy

மண்டலாதிபதி
Joined
Jan 21, 2018
Messages
420
Reaction score
2,138
Location
US
தாங்கள் வசிப்பது சகல வசதிகளைக் கொண்டிருக்கும் செழிப்பான செல்வந்தர்கள் பகுதி தான். ஆனால், அந்த மாதிரியான பகுதிகளை விட்டு வெளியே வரவரவே தெருவோரம், வீதியோரம், சாலையோரத்தில் அலட்சியப்படுத்தப்பட்ட வகையில் குப்பைப் தொட்டிகளும், குப்பைக் கூழங்களும் மனதை வருத்துகின்றன. கடலும் கடற்கரையும் கூட இதற்கு விதி விலக்கல்ல.

சில பகுதிகளை டிரினிட்டி பொதுச் சேவையின் கீழ் பராமரிக்கிறார்கள். தங்‍களால் இயன்றச் சமூகப் பணிகளில் ஒன்றாக.

ஏற்கெனவே விழிப்புணர்விற்காகத் தங்கள் டிரினிட்டி நாளிதழ், வார இதழ் இரண்டிலும் எழுதியாச்சு. ம்கூம்! முன்னேற்றமே இல்லை. தீவிரமாக ஏதாவது செய்ய வேண்டும் எனும் எண்ணம் அவனிடம் மேலோங்குகிறது.

மும்பையிலேயே பிறந்து வளர்ந்தவன் ஆருஷ். இருப்பத்து எட்டு வருடங்கள் கொடுத்திருக்கும் சொந்தம். விபரம் தெரிந்த நாளில் இருந்தே மும்பையின் வளர்ச்சி அவனுள் பிரமிப்பைத் தந்திருக்கிறது.

உலகின் முன்னணி நகரங்களில் ஒன்று. நம் மக்களால் நியூயார்க் நகரத்திற்கு ஈடாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் நகரம். ஆனால், நியூயார்க் அளவு பராமரிக்கப் படுகிறதா? இல்லை அதில் பாதியாவது? நோ!

சுத்தமும் சுகாதாரமும் ஆடம்பரமில்லையே? அடிப்படை உள் கட்டமைப்பின் அவசியத் தேவையல்லவா? அரசாங்கமும் அதிகாரிகளும் அலட்சியப்படுத்தும் விசயங்களில் இதுவும் ஒன்றாகி விட்டதே.

மால், விண்டோ ஷாப்பிங், பப், ஃபாஸ்ட் ஃபுட், லிவ்விங் டுகெதர் என இன்னப் பிற கலாச்சாரங்களை உள் வாங்கிக்கொண்டு தங்கள் வேரின் சுயத்தைத் தொலைத்து வரும் மக்களும் உணர வேண்டும். அப்படியே பிற நாட்டினரின் நற்பண்புகளையும் கூட எடுத்துக் கொள்ளலாமே? ஏன் செய்வதில்லை?

மும்பையில் மட்டுமல்ல, மொத்த இந்தியாவிலும் மக்கள் மனது வைத்தால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். நாட்டைச் சிறப்பாக வைக்கத் தாங்களும் இணைந்து செயல்பட்டு உதவலாம். மக்கள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக இருக்க வேண்டும் என்கிற கோபம் அவனுள் எழுந்தது.

குப்பையை உரிய இடத்தில் மட்டுமே போட வேண்டும். நகராட்சிப் பணியாளர்கள் நித்தமும் குறிப்பிட்ட நேரங்களில் அப்புறப்படுத்தவில்லையெனில், நடவடிக்கையில் இறங்கணும். அதற்கான நேரம் யாருக்கு இருக்கிறது?

‘அரே, டைம் நஹீங் ஹை யார்!’

நேரமில்லை. நேரமில்லை எதற்கும் வரும் பதில் இதுவே! ஏன்? எதை நோக்கி இத்தகைய ஓட்டம்? புரியவேல்லை. கசந்த முறுவல் ஒன்று வந்தமர்ந்து கொண்டது ஆருஷிடம்!

யோசனையூடே அன்றைய ஓட்டம் போய்க் கொண்டிருந்தது.

காலத்தின் சுழற்சியில் நம் வாழ்க்கைப் பயணம். இன்றைய உலகத்தில் பெரும்பாலானோரிடம் காண்பது பரபரப்பு. அவசரம், வேகம், ஓட்டம். இப்படித் தான் ஒவ்வொரு நாளும் போகுது. ஏன்? ஏனென்றால், நமது வேணும்கள் (wants) அதிகரித்து விட்டன.

அதனால், நேரமில்லை எனச் சொல்லிக்கொண்டு, அவசியமானவைகளைத் துறந்து, மறந்து ஓடுகிறோம். அனுபவிக்க வேண்டிய சிலவற்றைத் தொலைத்து, தேவையற்ற நோவை வாங்கிக் கொள்கிறோம்.

வேணும் என்பது வேறு. தேவை என்பது வேறு. எத்தனை பேர் இதனைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்? உனது தேவைக்காக நீ வாழ்க்கையின் தேடல்களை வைத்துக் கொள்ள வேண்டும். தேவையைத் தாண்டி உனது வேணும் என்கிற ஆசைக்காக நீ ஓடினால், ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டும். இத்தகையதொரு தேடலில் உனது நேரம் மட்டுமல்ல நீயும் தொலைந்து போகிறாய்!

மனதிற்குள் ஓடியச் சிந்தனையால், தலையை உலுக்கிக் கொண்டான் ஆருஷ்.

Differentiate between your needs and wants. Needs are necessities. Wants are luxuries.

உனது தேடல் முதலில் உனது தேவையைப் பூர்த்திச் செய்வதாக இருக்க வேண்டும். தேவைக்குப் பிறகு வேணும்களைப் பார்க்கலாம். வரமுறையோடு. நிதானமாக. நிர்ணயித்துக் கொள்ளும் எல்லைக்குள்.

நுகர்ந்தவர்களுக்குத் தேடல் மாபெரும் சுகம்! தேடலுக்கு எல்லையும் இல்லை!

ஆனால், மனிதருக்கு இளைப்பாறுதல் மிக அவசியம். குடும்பம், நட்பு, தேசம். அன்பு, நேசம், காதல், சேவை, பற்று, ஓய்வு. இவற்றிற்குக் கண்டிப்பாக நேரத்தை ஒதுக்க வேண்டும். உடல்நிலையில் அக்கறை கொண்டு பேணுதல் மிக மிக அவசியம்!

இழந்து விட்டால், சிலவற்றைத் திரும்பப் பெற மிகவும் கடினமாகப் போராட வேண்டும். அப்படிப் போராடிய பிறகும் கிடைக்க வாய்ப்பில்லாமலும் போகலாம். இழந்தவை, இழந்தவையே!

சுற்றுச்சூழலில் பதிந்திருந்த கவனம், குப்பைகள், அசுத்தம், சுகாதாரம் என்று எண்ணங்களைச் சுழற்சி, சில நிமிடங்களில் எங்கெங்கோ பயணித்து விட்ட வேகத்தை உணர்ந்த ஆருஷிடம் ஒரு விரிந்தப் புன்னகை வந்திருந்தது. தொடர்ந்து தன்னைப் போல் வந்து சேர்ந்து கொண்டது மலர்ச்சியும் புத்துணர்வும்.

வரும் வாரத்தின் வெள்ளி வார இதழுக்கான கட்டுரையாக, வேணும் (want), தேவை (need) எனும் தலைப்பையே நிர்ணயித்துக் கொண்டான். மூச்சு வாங்க நின்றவன், சில நொடிகளில் சமன் பட்டுக் கடற்கரையோரம் சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்தான். தனது எண்ணங்களைப் பேசியில் பதிந்தும் கொண்டான்.


தன் ஹிப் பௌச்சில் இருந்து தண்ணீர் பாட்டிலை உருவி, மடமடவென வாய்க்குள் ஊற்றினான். தண்ணீரைப் பருகியதும், கடற்கரையைச் சுற்றி விழிகளால் அலசினான்.

அவனின் இளம் பச்சை நிற விழி மணிகளில் அத்தனை கூர்மை! எதுவும் அவன் விழிகளுக்குத் தப்புவதில்லை. லேசர் பார்வை போல் அத்தனையும் நொடியில் ஸ்கேன் செய்து உள் வாங்கிக் கொள்ளும் திறன் வாய்ந்தவை.

ஓரிடத்தில் கண்ட விசயத்தால் ஆருஷ் முகம் சுளித்தான். தனது பேசியில் அவசரமாகச் சில படங்களை க்ளிக்கினான். பிறகு வீடியோ பொத்தானைச் சொடுக்கி, படம் பிடிக்க ஆரம்பித்தான்.

இப்போது முகச் சுளிப்பு அகன்று, அவசரமாக ஆராய்ச்சிப் பார்வை வந்திருந்தது.

இன்னும் அருகில் போனால் துல்லியமாகக் காட்சியாக்கலாம். ஐபோன் X கேமரா அருமை தான். ஆனால், இந்தளவு தூரத்தில் இருந்து ஜூம் செய்து வீடியோ? இவன் சற்று முன்னேறிப் போய்ப் படம் பிடித்தால், அந்த ஆட்களின் கண்களில் படுவது உறுதி. விழுவது விழட்டும் என்று கூர்மையுடன் அங்கிருந்தே எடுத்தான்.

காணும் காட்சிகள் உவப்பானவையாக இருக்கவில்லை. மழையின் பொருட்டு ஜனங்களின் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. இந்த நேரத்தை உபயோகப்படுத்தி, அங்கு நடத்திக் கொண்டிருக்கும் செயல்களில் உள்ளம் கொதித்துக் கொண்டிருக்க, இறுகிய முகத்துடன் அத்தனையையும் படமாக்கினான். அந்த வண்டிகளின் நம்பர் பிளேட் உள்பட.

மனதிற்குள் அடுத்து அழைக்க வேண்டிய நபர்களை வரிசைப்படுத்தினான். இன்று மாலைச் செய்தியில் இதனை ஹாட்டா போட்டுடலாமா? யோசனையின் ஊடே, அங்கு இத்தனை நேரம் அலங்கோலத்திற்குக் காரணமாக நின்றிருந்த அந்த மூன்று மினி லாரிகளும், அவற்றில் வந்த நபர்களும் கிளம்புவதைக் கண்டான்.

அதில் ஒருவன் சற்றுத் தேங்கிச் சுற்றுப்புறத்தைக் கவனிக்க, ஆருஷ் அவசரமாகத் தான் இத்தனை நேரம் நின்றிருந்த இடத்தின் மிக அருகே வீற்றிருக்கும் படகின் பக்கவாட்டில் சத்தமில்லாமல் அமர்ந்து கொண்டான். அந்த ஆளின் செயலால், இவையெல்லாம் ஏதோ பெரிய விசயமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் வந்து சேர்ந்து கொண்டது.

சில நெடிய நிமிடங்களை நெட்டித் தள்ளி, அவர்கள் அனைவரும் போனதை உறுதிப்படுத்தி விட்டு, நீரஜ், ஷாகில் இருவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பினான். கடலை நோக்கி நடந்தவன், மினி லாரிகள் நின்று இருந்த பகுதியை மிக விரைவாக எட்டி விட்டான்.

அங்கு அவன் பார்த்தது... பச்சை விழிகளில் நொடியில் சீற்றம்!

Something fishy! கவனமாகக் கையாள வேண்டும்! காதும் காதும் வச்ச மாதிரி. நீரஜ் மற்றும் ஷாகில் இருவரும் உடனே பதில் அளிக்கவில்லை. நீரஜ் வேறொரு முக்கியமான அசைன்மெண்ட் கையில் வைத்து இருப்பது ஞாபகம் வந்தது.

ஷாகில் மனைவியின் வீட்டிற்குப் போயிருக்கிறானே? அவன் வந்து இணைவது கடினம். ஷாகிலுக்குக் காத்திராமல் ஆருஷே அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.

“ஹாய் சாதிக்! வி நீட்...”

மிகத் தீவிரமாகி இருந்தது ஆருஷின் முகம். அவனின் அழுத்தமான குரலில் ஒலித்துக் கொண்டிருக்கும் விசயத்தை உள்வாங்கிய சாதிக்கிற்கு ஆருஷின் கோபத்தின் அளவைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“வில் டேக் சார்ஜ் பாஸ்!”

ஆருஷுக்குப் பணிவுடன் பதிலளித்து உடனே அந்த ஸ்பாட்டிற்கு விரைந்தான் சாதிக்.

அதற்குள் மும்பையின் போலீஸ் கமிஷனரைத் தொடர்பு கொண்டிருந்தான். அவரிடம் ஒரு கோரிக்கையையும் வைத்தான் ஆருஷ்.

 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஆர்த்தி ரவி டியர்
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Arush iin pothu nala akkarai????ippo enna parthan..koba maha what happened waiting eagerly???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top