• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Briyani- Vanisha

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sasi_ts

இணை அமைச்சர்
Joined
May 10, 2018
Messages
655
Reaction score
2,454
Location
India
Eluthaalargalukku thaniyya nammaku thaniyaa vaika sollallama ka.. romba nallarukuthu ethana vaati padichean nae teriyala... Dialogues are very attractive..ka??
Yes..ezhuthalargalukku thaniya namma maathiri kanni muyarchigalukku thaniya contest conduct panna solli oru petition pottu vaippom..
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் வனிஷா
தல இப்படி சாச்சு புட்டீங்களே நம்ம எல்லோருக்கும் புடிச்ச இடமான தலகுப்பாவில் ஹனி மூன் பேக்கஜ் போட்டு அனுப்பினீங்க பாருங்க அங்க நிக்கிறீங்க அதுவும் மூணு மாச கேப் கலக்கிட்டீங்க போங்க உங்கள்
பாணியில் ஷ்யாம் செய்தது தான் கரெக்ட் என்னை பொறுத்தவரை கணவன் மனைவிக்குள் ஈகோ கூடாது தான் அதே சமயத்தில் ஒருவர் மட்டும் விட்டு கொடுப்பதும் சரியாகாது சூப்பர்ப் வனி நைஸ்
 




Muhilramya

மண்டலாதிபதி
Joined
Jul 24, 2018
Messages
122
Reaction score
329
Location
Chennai
வணக்கம் மக்கா,

ஏதோ என்னால முடிஞ்ச அவசர பிரியாணி.....


மூன்று மாதம் பல்லைக் கடித்துக் கொண்டு இன்டர்ன்ஷிப்பை முடித்திருந்தாள் மஹா. ஒவ்வொரு நாளும் ஷ்யாமின் நினைவை நெஞ்சில் சுமந்து அவனின் பாராமுகத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துப் போனாள் அவள்.

‘தப்பு பண்ணது எல்லாம் அவன், தண்டனை மட்டும் எனக்கு. ஓவரா போறேடா பாவா! எனக்கு வர ஆத்திரத்துக்கு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, நேரா வந்து உன் முகரகட்டையைப் பேத்துருப்பேன். கடமையைப் பாதியில விட்டுட்டு வந்துட்டா இந்த மஹான்னு நாளைக்கு ஊர் உலகம் பேசக் கூடாதேன்னு மூனு மாசத்தப் பல்லைக் கடிச்சு முடிச்சுட்டேன்.’ மனதில் புலம்பியபடியே அவளது துணிமணிகளைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

நினைவுகள் மட்டும், வெட்கம் வேலாயுதத்தை அவள் மூட்டைக் கட்டிப் பரணில் போட்ட நாளை நோக்கிப் போனது.

அழுத்தமாக, ஆழமாக, வன்மையாக, வன்மையில் மென்மையாக அவனது இதழில் கதை எழுதிய மகாவை, எந்த வித ரியாக்‌ஷனும் இல்லாமல் பிரித்து நிறுத்தினான் ஷ்யாம். கண்களில் வழிந்த காதல் ஊற்றை கண் சிமிட்டி உள்ளேயே மறைத்தவன், அவளது இடையைப் பிடித்திருந்த கைகளைக் கஸ்டப்பட்டு விலக்கினான்.

அவள் கண்களை ஆழ்ந்துப் பார்த்தவன்,

“என்னடி பண்ணற?” கரகரத்த குரலில் கேட்டான்.

“தெரியல? முத்தக் காவியம் படைக்கிறேன்”

“அது தான் எதுக்குன்னு கேட்கறேன்? செஞ்ச தப்புக்கு இப்படி பிராய்ச்சித்தம் தேடறியா? இத உண்மைன்னு நினைச்சு நான் அடுத்த ஸ்டேப்புக்கு போனா ஐயோ, அம்மா, என்னை விட்டுடு, நான் எதையும் மறக்கலன்னு கண்ணீர் விட்டு நடு ஜாமத்துல என்னை பச்சைத் தண்ணியில குளிக்க வைப்ப. போதும்டா சாமி! இன்னிக்கு நடு ஜாம குளியலுக்கு என் உடம்புலயும் சரி, மனசுலயும் சரி சத்தியமா தெம்பு லேது! குட் நைட்” சொன்னவன் கவுந்தடித்துப் படுத்துக் கொண்டான்.

“போயேன்! போய் படுத்துக்க. நூறு நாள் செலிப்ரேஷனுக்கு என்னையே பரிசா தரதா இருந்தேன். வேணாட்டி போ! இங்க யாரும் நீ வேணும்னு தவம் இருக்கல! பெரிய இவன், ஒன்னும் வேணாமாம்! உன் மண்டை முழுக்க மசாலா தான்டா இருக்கு. மட்டி!”

சத்தமாகவே திட்டித் தீர்த்தவள், அன்று முழுக்க இருந்த மன அழுத்தத்திலும், உடல் களைப்பிலும் அவன் அருகிலேயே படுத்ததும் தூங்கி விட்டாள்.

மறுநாள் அவள் எழுவதற்கு முன்னமே எங்கேயோ கிளம்பி சென்றிருந்தான் ஷ்யாம். கார்த்திக் தான் இவளை விழுப்புரத்துக்கு கொண்டு விட வந்தான். அதன் பிறகு மூன்று மாதமும், இவள் அழைப்பையும் ஏற்கவில்லை, மேசேஜ்களையும் ரிப்ளை செய்யவில்லை அவன். கொஞ்சலில் ஆரம்பித்து, கெஞ்சலில் போய், கொச்சையாக திட்டிக் கூட மேசேஜ் அனுப்பி விட்டாள் மஹா. நீல டிக் காட்டியதே தவிர எந்த பதிலும் இல்லை. இதோ கிளம்பிவிட்டாள் நேரிலேயே படையல் போட. அவளை ஏற்ற வர கொஞ்சம் லேட் ஆகும் என கார்த்திக் சொல்லி இருந்தான். அதனால் மெதுவாகவே குளித்துக் கிளம்பியவள், பார்க்கிங் ஏரியாவிற்கு தனது மூட்டை முடிச்சுக்களுடன் வந்து நின்றாள்.

பாதி பேர் கிளம்பி இருக்க, அந்த இடத்தில் அங்கும் இங்குமாக சில தலைகள் மட்டும் தெரிந்தன. அவள் அருகே உரசிக் கொண்டு வந்து நின்றது அந்தக் கருப்பு நிற கார். ஓட்டுனர் இருக்கையில் இருந்து இறங்கிய ஒருவன்,

“ஹெமட்டாலாஜி டிப்பார்ட்மெண்டுக்கு எந்த வழியா போகனும் மேடம்?” என கேட்கவும்,

“டேய் ஷ்யாம் முதல்ல இருந்தாடா?” என கத்தி முடிப்பதற்குள் மயங்கி இருந்தாள்.

மயக்கம் தெளிந்து எழுந்தப் போது அதே தலகுப்பா வீட்டில் தான் இருந்தாள். முகத்தில் தானாக புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

‘திருட்டு படவா!’ செல்லமாக கொஞ்சிக் கொண்டாள். அன்று போலவே காபி வந்தது. பயப்படாமல் வாங்கிக் குடித்தவள், பாத்ரூம் சென்று ஒரு குளியலை போட்டுக் கொண்டு அன்று அணிந்திருந்த மாதிரியே உடையை, அங்கே வைக்கப் பட்டிருந்த அவள் பேக்கில் தேடி அணிந்துக் கொண்டு கீழிறங்கி வந்தாள்.

“வெல்கம் மிர்ச்சி, குட் மார்னிங்!” அதே குரல். அன்றிருந்த வெறுப்பு அவள் மனதில் இல்லை, திகட்ட திகட்ட காதல் மட்டுமே நிறைந்திருந்தது.

ஓடி வந்து அவன் மடியில் தொப்பென அமர்ந்துக் கொண்டாள் மஹா.

“ஏய் பார்த்துடி யானைக் குட்டி! காலை ஒடச்சிறாதே! அப்புறம் ட்ரேக்கிங் போக முடியாது”

“வாவ்! நிஜமா ஷ்யாம்? நாம ட்ரெக்கிங் போறோமா?” சந்தோஷத்தில் அவனை இறுக்கிக் கொண்டாள் மஹா. அவள் கூந்தலில் தன் முகத்தை நுழைத்துக் கொண்டவன்,

“ஐ மிஸ் யூ டி மை பொண்டாட்டி” என கட்டிக் கொண்டான்.

“மிஸ் பண்ணறவன் தான் இப்படி மூனு மாசமா என்னை அலைக்கழிச்சியா? நான் எப்படி அழுதேன் தெரியுமா ஷ்யாம்? கோபம் வந்தா என் கூட எப்படி வேணும்னாலும் சண்டை போடுடா பக்கி. இப்படி இக்னோர் மட்டும் பண்ணாத! நான் ஒடஞ்சி போயிருவேன்”

“ஒடஞ்சி போன மாதிரி தெரியலையே மிர்ச்சி. இன்னும் ஒரு சுத்து பெருத்துப் போன மாதிரில இருக்க” அவள் கண்ணீரைப் பார்த்ததும் கிண்டல் செய்து அவளை திசைத் திருப்பினான்.

“ஓ, ஐயா பேசலனா பட்டினி கிடந்து என்னையே வருத்திக்குவென்னு நினைச்சியோ? ஆசை தோசை அப்பள வடை! நமக்கு சோறு முக்கியம் மச்சி!”

“சரி வா, ப்ரேக்பஸ்ட் சாப்பிட்டுட்டு கிளம்பலாம். இன்னிக்கு நல்ல வெதர். ட்ரேக்கிங்க்கு சூப்பரா இருக்கும்”

வேண்டிய பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்பினர் இருவரும். அன்று தங்கி இருந்த இடத்தையே தேடிப்பிடித்து இன்றும் டேன்ட் அமைத்தனர். இருவருக்கும் பேசி தீர்க்க நிறைய இருந்தது.(அதெல்லாம் சசி சிஸ் சொல்லுவாங்கப்பா. அந்த சமாதான பேச்சு வார்த்தை கர்மம்லாம் நமக்கு வேணாம். நாம நேரா மேட்டர்க்கு போவோம்!)

“டீ மிர்ச்சி! நாம முதன் முதலா கிஸ்சடிச்ச இடத்துக்குப் போகலாமா?” ஆசையாக அழைத்தான் ஷ்யாம்.

“நாம கிஸ்சடிச்ச இடம்னு சொல்லாத ஷ்யாம். என் அனுமதி இல்லாம நீ கிஸ்சடிட்ட இடம்னு சொல்லு” கடுப்படித்தாள்.

“சரிடி சரி. நான் மட்டும் தான் குடுத்தேன். நீ இன்வோல்வ் ஆகவே இல்ல. ஓகேவா?” அவளது கைப்பிடித்து எழுப்பியவன், தோளை அணைத்தவாறே, அவனின் காதலை வெளிக் கொணர்ந்த ஏரியை நோக்கி அழைத்துச் சென்றான்.

ஒருவரை ஒருவர் பிரியாமல், இணைந்தே நீந்தி விளையாடியவர்கள் நேரம் போவதே தெரியாமல் நீரில் அமிழ்ந்திருந்தனர். அவ்வளவு நெருக்கத்தில் இருந்தாலும் ஷ்யாம் தானாகவே அவளை நெருங்க முயற்சிக்கவில்லை. மஹாவே அவனிடம் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.

அன்று அவளாகவே முத்தமிட்டது இன்னும் அவன் உதட்டில் தித்திப்பாக இனித்துக் கொண்டே தான் இருக்கிறது. அப்பொழுது மன சஞ்சலத்திலும், குற்ற உணர்ச்சியிலும் இருந்த மஹா, இவன் கொஞ்சம் அசைந்துக் கொடுத்திருந்தாலும் அடுத்தக் கட்டத்துக்கு வந்திருப்பாள். ஆனால் அவனுக்குத் தான் அதில் விருப்பமில்லை. எந்த உறுத்தலும், மன கிலேசமும் இல்லாமல் தங்கள் கூடல் இருக்க வேண்டும் என விரும்பியவன், அவளை கடுப்பேற்றி அன்று நடக்க இருந்த சங்கமத்தைத் தவிர்த்தான்.

தலகுப்பாவில் எப்படி தன்னை நண்பனாய் ஏற்றுக் கொண்டாளோ, அங்கேயே அவளுக்கு கணவனாகனும் மாற வேண்டும் என முடிவெடுத்தவன் போட்ட திட்டம் தான் மீண்டும் இங்கே அவளைக் கடத்தி வந்தது.

அந்தி சாயும் நேரம் வரை அங்கிருந்தவர்கள், மீண்டும் டேண்ட் போட்டிருந்த இடத்துக்கு நடந்து வந்தார்கள். டென்ட் உள்ளே சென்று இவள் உடை மாற்றி வருவதற்குள், ஷ்யாம் உடை மாற்றி வந்து நெருப்பு மூட்டி இருந்தான்.

“வா மிர்ச்சி சாப்பிடலாம்”

“இவ்வளவு நேரத்துல இப்பதான் நீ உருப்படியா ஒரு வார்த்தை பேசி இருக்கடா பாவாகாரு”

செல்லமாக தலையில் தட்டியவன், பேக் செய்து எடுத்து வந்திருந்த சாண்ட்விச், கேக், பிஸ்கட்ஸ் எல்லாவற்றையும் கடை பரப்பினான். குட்டி ப்ளாஸ்கில் இருந்த காபியை சிறு கப்களில் ஊற்றி நீட்டினான். அடர்ந்த மரங்களுக்கு நடுவே, மெல்ல நிலவு மகள் வெளி வருவதைப் பார்த்தவாறே நெருங்கி அமர்ந்து சாப்பிட்டனர் இருவரும்.

“பாவா நான் என் மனச திறந்து உங்ககிட்ட பேசனும்”

“அதெல்லாம் சசிம்மா கிட்ட பேசிக்கலாம்டா. இவங்க பிரியாணி போட மட்டும் தான் வந்துருக்காங்க. இவங்க கிட்ட நம்ம பீலிங்ஸ்லாம் சரியா, பதமா எதிர்பார்க்க முடியாது”

“அதுவும் சரிதான் பாவா”

ஷ்யாம் அப்படியே தரையில் சரிந்து வானம் பார்க்கப் படுத்துக் கொண்டான். அவன் கையில் சரிந்துப் படுத்துக் கொண்டவள், அவனோடு சேர்ந்து நிலவையும், சில்லென உடலை ஊடுறுவும் குளிர் காற்றையும், ரீங்காரமிடும் சில்வண்டுகளின் சத்தத்தையும் ரசிக்க ஆரம்பித்தாள்.

“மஹா”

“ஹ்ம்ம்ம்”

“இந்த இடம் நமக்கு எப்பவுமே ஸ்பெஷல் இல்லையா?”

“ஹ்ம்ம்ம்”

“இங்கத்தான் உன்னை காதலிக்கறேன்னு நான் மனப்பூர்வமா உணர்ந்துகிட்டேன் தெரியுமா?”

“ஹ்ம்ம்ம்”

“உன்னைத் தவிர என் வாழ்க்கையில இனி வேற ஒருத்திக்கு இடமில்லைன்னு உணர்த்துன இடம் இதுதான் தெரியுமா?”

“ஹ்ம்ம்ம்”

அவன் பேசும் ஒவ்வொன்றுக்கும் மயக்கம் கலந்த ஒரு ஹ்ம்ம்ம் மட்டும் பதிலானது. நன்றாக திரும்பி அவளைப் பார்த்தவனுக்கு, அவள் முகத்தில் இருந்த வெட்கம் கலந்த பூரிப்பு ஒரு வித மயக்கத்தைக் குடுத்தது.

“நம்மளோட ஜலபுலஜங்ஸ்ச இங்கயே அந்த வானம் சாட்சியா, இந்த பூமி சாட்சியா வச்சிக்கனும்னு ஆசையா இருக்கு மிர்ச்சி. வச்சிக்கலாமா?”

“ஹ்ம்ம்ம்”

“மஹாவேங்கடலஷ்மினா சாப்பாட்டு ராமின்னு அகராதியில போட்டுருக்காமே, ஆமாவா மிர்ச்சி?”

“ஹ்ம்ம்ம்”

அவனின் சிரிப்பு சத்தத்தில் மோன நிலை கலைந்தவள்,

“என்ன சிரிப்பு?” என கேட்டாள்.

அவன் சொன்னதை மீண்டும் திருப்பி சொல்லவும்,

“ஒரு அகராதியே, அகராதி பற்றி பேசுதா? ஏத்தம் தான்டா உனக்கு!’ என அவன் முடியைப் பிடித்து ஆட்டினாள்.

நெருக்கமாக உடல் உரச நெருங்கி இருந்தவளை, தாபமாக பார்த்தவன்,

“பார்த்த நாளில இருந்து என்னை கொன்னுப் போடறடி மிர்ச்சி. சீக்கிரமா எனக்கு விமோஷனம் குடுடி” என கெஞ்சி கொஞ்சினான்.

தலையிலிருந்து கையை இறக்கி அவன் கன்னம் கொண்டு வந்தவள்,

“பாய் கூட முள்ளா போச்சு

தலைகாணி கல்லா போச்சு

தூங்காம வாடுறேனே

பாவா உன் பேர

மணலில் எழுதி கை நோகுது

கற்பூரமாட்டும் உருகி உருகி

நாள் போகுது

ஓஓஓஓஒ

ஊரடங்கும் சாமத்திலே

நானுறங்கும் நேரத்திலே

காத்து போல வந்து தொட்டதாரு

காதல் தீயை நெஞ்சில் இட்டதாரு”

அவன் முகத்தை காதலாக பார்த்தபடியே பாடினாள். அதில் இருந்தா மோகத்தில் மூச்சடைக்க தன் மஹாவை இறுக்கி அணைத்து வன்மையாக இதழொற்றினான் ஷ்யாம்.

பௌர்ணமி நிலவின் சாட்சியாக, பிண்ணி பிணைந்துக் கலந்து ஷ்யாம், மஹாவாக இருந்த இருவரும் ஷ்யாமாவாக மாறினர்.

முற்றும்…எங்க போறிங்க? இருங்கப்பா.. இவங்க சேர்ந்தா போதுமா? என் விஜி? அவன கொஞ்சம் நெனைச்சிப் பார்த்தீங்களா? இக்கட சூடு. நான் சேர்க்கறேன் அவனுக்கு ஜோடிய.

கே.எல்.ஐ.ஏ விமான நிலையம் (மலேசியா)

புதிதாக தொடங்கி இருந்த பிஸ்னஸ் ஒன்றின் மீட்டிங்கிற்காக மலேசியா வந்து இறங்கி இருந்தான் விஜி. ஏற்கனவே ப்ளைட் டிலே ஆனதில் அரை மணி நேரம் லேட் ஆகி இருந்தது. வேகமாக ட்ராலி பேக்கைத் தள்ளிக் கொண்டு வந்தவன், முன்னால் நின்றிருந்த பெண்ணை கவனிக்காமல் மோதி நின்றான். அவள் கையில் அவன் பெயர் போட்டிருந்த பலகையைப் பிடித்தப்படி நின்றிருந்தாள்.

அவன் மோதிய வேகத்தில் கீழே விழுத்தவள், அப்படியே அவனை முறைத்தவாறு அமர்ந்திருந்தாள்.

‘அட, நம்ம கூப்பிட வந்த பொண்ணு போல இருக்கே’

“சாரி மேடம், தெரியாம அவசரத்துல மோதிட்டேன். நான்” தான் விஜி என சொல்வதற்குள் எழுந்து நின்றிருந்தவள்,

“யோ சாவுகிராக்கி! பேமானி! வூட்டுல சொல்லிட்டு வந்திட்டியா? எவ்ளோ திமிரு இருந்தா இந்த தனிஷா(நிஷா--- நோட் திஸ் பொய்ன்ட் யுவர் ஆனர்) மேலயே மோதிருப்ப. இன்னிக்கு உன் டங்கு வார அத்து மேலோகத்துக்கு பார்சல் பண்ணல, என்ன பண்ணல, பண்ணறேன், என் பேரு தனிஷா இல்லடா.”

சத்தம் போட ஆரம்பித்தாள்.

அவளை நெருங்கி வந்து அணைத்தது போல நின்றவன்,

“ஏன்டி பஜாரி மாதிரி கத்தற? நீ மலேசியாவா, இல்ல மாயாவரமான்னு சந்தேகமா இருக்கு?” என அழுத்தமாக சொன்னான்.

அவனது நெருக்கத்தில் அதிர்ந்து போய் விழித்தவள் முன் கை நீட்டியவன்,

“ஹாய் தனிஷா. ஐம் விஜி. க்ளேட் டூ மீட் யூ” என அழகாக சிரித்தான்.

(அவ்ளோதான் ---- இதுக்கு மேல உங்க கற்பனையில கதைய முடிச்சுக்குங்கப்பா. நன்றி, வணக்கம், தெரிம காசே(மலாய் நன்றி)
Hai vanisha super....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top