• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

C N 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Superb ud sis:love::love:
Paatikum indiranukum mouna por. Strt a;)
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
சின்ன நெஞ்சிலே-14

நிவேதாவிடம் இந்திரன் சொன்ன ‘லேட்டஸ்ட்’ விஷயங்களை பகிர்ந்துக் கொண்டிருந்தாள் நிலானி! தோழிக்கு பிடித்ததை சமைக்க முனைய நிவியும் இவள் பக்கமிருந்து நிலானிக்கு உதவிக் கொண்டும், கதையை கேட்டுக் கொண்டும் இருந்தாள்.

“இப்படி ஒரு டர்னிங் பாயிண்ட் இருக்குன்னு தெரியாம கதையை முடிக்க பார்த்துட்டேன் நிலா. நீ இப்ப இதை சொல்லி என் அறிவுக் கண்ணை திறந்து வச்சிட்டே!”
“நீ இன்னும் எழுதுறதை விடலையா?! அச்சோ! தெரியாம இதையெல்லாம் உன் கிட்ட சொல்லிட்டேனே!”
தோழியின் கன்னத்தை கிள்ளிய நிவி,
“என் செல்லம் நீயி! நான் என்னைக்கு எல்லாம் பாயிண்ட் கிடைக்காம ஜாம் ஆகி நீக்கிறேனோ அப்போ கரெக்டா ஏதாவது சொல்லிடுவே! சரி நான் கிளம்புறேன்!”

தான் சொன்னதை எப்படியெல்லாம் இட்டுக்கட்டி இந்த புதிய எழுத்தாளினி எழுதப்போகிறாளோ என்ற நினைப்பில் தன் அடுத்த வேலைகளை கவனிக்கலானாள் நிலா!

அன்று இந்திரன் அலுவலகத்திலிருந்து திரும்ப, வீடே பக்தி மயமாயிருந்தது. கதவை திறந்து வீட்டினுள் வந்தவனுக்கு இது தன்னுடைய வீடு தானா என்ற சந்தேகமே! ஊதுபத்தி புகையின் நடுவே அழகாய் சேலை கட்டி, நெற்றியில் சின்ன கீற்றாய் குங்குமமிட்டு சிரித்த முகமாய் கணவனை வரவேற்றாள் நிலா! அவளின் இந்த புதிய அவதாரம் அவன் உதட்டிலும் மெல்லியதொரு புன்னகையை கொண்டு வந்தது!
“சாரி மேடம் நான் வீடு மாறி வந்துட்டேன்” சிரித்தபடி வெளியே செல்வது போல் பொய்யாய் நடித்தவனின் கைப்பற்றி வீட்டின் உள்ளே அழைத்தாள்.

அவள் செய்திருந்த கேசரியை சுவைத்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருக்க, என்ன என்பதாய் கண்ணசைவில் கேட்டாள்!
“என்ன விஷயம் நிலா! ஏதோ பெருசா என்கிட்ட கேட்க போறே போல!”
அமைதியாக இருந்தவளை ஆசையுடன் பார்த்தவன்,
“சும்மா சொல்லு என்ன விஷயம்”

ஆவுடை பாட்டிக்கு உடம்பு முடியவில்லை என்பதையும், அவரை கொஞ்ச காலமேனும் தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பையும் அவனிடம் சொன்னாள்.
“ஆக…”
“ஆக…”
மேடை பேச்சைப் போல் ஆரம்பித்தவனை பார்த்து அவள் நகைக்க,
“ஏதோ காரியம் சாதிக்க தான் இத்தனை ஏற்பாடும் அப்படிதானே!”

“சே அப்படியெல்லாம் இல்லை இந்திரன், நான் கேட்டா நீ வேணாம்னு சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியுமே!”
“நல்ல பேசுறே நீ!”
சொன்னவன் தன் பக்கம் அமர்ந்திருந்த மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டு அவள் கேட்டதற்கான தன் சம்மதத்தை தெரிவித்தான்.

அடுத்த நாளே அதற்கான வேலைகளை ஆரம்பித்தாள் நிலா, முதலில் ஆவுடை பாட்டியிடமும் பேசினாள்!
“ஆத்தா கொஞ்ச நாள் ஜப்பான் வந்திடுறியா?”

“அந்த குளிரில் என்னால இருக்க முடியாது புள்ள!”
“இப்ப குளிரில்லை ஆத்தா. வெயில் மண்டையை பிளக்குது. வாயேன் ப்ளீஸ், எனக்கு உன் கூட இருக்கணும் போலிருக்கு!”
பேத்தியின் பாசம் முதியவளை அசைத்து பார்த்ததென்னவோ நிஜம்.

“நீ ரொம்ப நாளா அங்கன தனியா தானே இருக்கே! அதான் அப்படி நெனப்பு உனக்கு!”

“நான்...நான் இப்ப தனியா இல்ல ஆத்தா!”
“ஆமா... அந்த மெட்ராஸ் புள்ள இருக்காளா இன்னமும்! அவ போயிருப்பானுல்ல நெனைச்சேன்!”

நேரடியாக சொல்ல நேரம் வந்திருந்தது. சிறு அமைதிக்கு பின் நிலா,
“நான் இப்ப இங்க இந்திரன் கூட இருக்கேன் ஆத்தா”
என்றாள்.

பதில் சொல்லவில்லை ஆவுடையம்மாள்!
ஏனோ இந்த விஷயமாய் இருவரும் மனம் திறந்து பேசவில்லை, இன்னமும்! தெரிந்த விஷயத்தில் இதற்கு மேலும் விளக்கம் கேட்காத ஆவுடைபாட்டி,

“நான் வந்தா உனக்கு...உங்களுக்கு தொந்திரவு இல்லையாட்டி!”

“அப்படியெல்லாம் எதுவுமில்லை ஆத்தா! நீ இங்க வந்து பாரு, உனக்கு இந்த ஊர் ரொம்ப பிடிச்சு போகும்!”

“எதுக்குட்டி பிடிக்கணும்? எதுக்குங்குறேன்! கண்டதும் பிடிச்சிப் போறதால தான் வாழ்க்கையில் பாதி பிரச்சனையே! எனக்கு என்னோடதை தவிர வேற புதுசா எதையும் புதுசா பிடிக்காதுட்டி!”

விதண்டாவாதமாய் பேசியவரை ஒரு வழியாய் இவளும் சங்கரனும் சேர்ந்து சம்மதிக்க வைத்து ஊரை விட்டு கிளப்பினர். பயணத்துக்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து பாட்டியை சென்னை வரைக்கும் கூட அலைகழித்து விடாமல், திருவனந்தபுரத்திலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பிளைட்டில் ஏற்றி விட்டார் சங்கரன்!

ஆவுடையம்மாளுக்கு இது முதல் விமான பயணம்! நிலானி அதற்காக தன் பாட்டிக்கு போனில் அத்தனை பத்திரம் சொல்கையில்,
“என்ன சும்மா நையி நையின்னுட்டிருக்க! அம்புட்டும் நான் பார்த்துப்பேன். நான் என்ன தனியாளாவா வாரேன்! அதான் விமானத்துல அத்தன பேர் கூட இருப்பாவுல, பெறவு என்ன! சும்மா இருட்டி! பெரிசா வந்திட்டா ஆத்தாவுக்கு புத்திமதி சொல்லன்னு”

மூக்கு உடைக்கப்பட்ட தன் மனைவியை பார்த்து வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான் இந்திரன்! போனில் பேசிய அத்தனையும் அவனுக்கும் கேட்டிருக்கிறது! நிலானி முறைத்தும் அவன் அடங்கவில்லை!
“ஆத்தா உனக்காக தான் சொல்றேன்! கேட்டுக்கோயேன்!”

“அதெல்லாம் எனக்கு தெரியும்டி! பொல்லாத ஏரோபிளேனு, அந்த காலத்தில் என் அப்பாரு சிங்கப்பூருக்கு கப்பலில் போயிருக்காக, தெரிஞ்சிக்கோ!”

மானசீகமாய் தன் தலையில் அடித்துக் கொண்டாள் நிலானி! இன்னமும் கப்பலும் பிளேனும் ஒரே மாதிரின்னு நினைச்சிட்டிருக்கு! இந்த ஆத்தாகிட்ட பத்திரம்னு சொன்னது என் தப்பு தான். இவங்களை சுத்தி இருக்கிறவங்க தான் பத்திரமா இருக்கணும்!

அப்படியெல்லாம் தைரியமாய் கிளம்பியும் அத்தனைக்கும் மாறாய் நடந்தது ஆவுடையம்மாளுக்கு! விமான நிலையத்தில் பாட்டி நடந்து வருகிறேன் என்றும் கூட விடாமல் அவரை சக்கர நாற்காலியில் வைத்து விமானத்தின் வாசல் வரைக்கும் அழைத்து வந்தார் அந்த ஊழியர்!

அதன் பின் ஆவுடைபாட்டி விமானப்பெண்ணின் வசமில்லை, அவள் தான் பாட்டியின் வசம். பாட்டியின் தேவைகளை கவனித்து வந்தவளுக்கு வேறு பக்கம் போகவே கொஞ்சமே கொஞ்சம் தான் இடைவெளி கிடைத்தது!

சிங்கப்பூரில் இரண்டு மணிநேர காத்திருப்பில் அங்கேயும் பாட்டிக்கு ஏற்ப ஒரு தமிழர் பாட்டியின் உதவிக்கு கிடைத்தார். சொந்த ஊர், பிள்ளை, சம்பளம் வீட்டு வாடகை வரைக்கும் அவரிடம் விசாரித்த பாட்டி,
“இந்த சம்பளத்துக்கு ஊருக்கு வந்து நீ விவசாயம் பார்க்கலாமில்ல தம்பி” என்றார்.
“இல்லம்மா பசங்க எல்லாம் இங்க வளர்ந்துட்டாங்க, இனி ஊருக்கு வருவது அவங்களுக்கும் சிரமம்” என்றார்.
“பசங்களை குறை சொல்ல முடியாது, நாம காட்டுற வழி தானே அவங்களுக்கு! பார் நான் வளர்த்த எம் பேத்தியை நேரில் பார்க்க இத்தனை தூரம் போவணும்! ஒரு ஆத்திர அவசரத்துக்கு இப்படியெல்லாம் முடியுமா!”
இன்னும் பல பேச்சில் நேரம் போனது. விமானத்தில் எற்றி விட்டு அவர் கிளம்புகையில், தன் பையிலிருந்த முறுக்கு பொட்டலத்தில் ஒன்றை எடுத்து தந்தார்.
“எம் பேராண்டிக்கு கொடு தம்பி!”
“இதெல்லாம் வேண்டாம் மா, இருக்கட்டும், நான் செஞ்சது என் வேலை தான்!”
அவர் எத்தனையோ தடுத்து பார்த்தும் ஆவுடைபாட்டி தான் நினைத்ததை சாதித்துவிட்டார்!

பல முசுடுகளையும், அதிகார தோரணையில் திரிபவர்களையும் பார்த்த மனிதருக்கு ஆவுடைபாட்டியின் சந்திப்பு மறக்கமுடியாத விஷயமாய் அமைந்து போனது!

சிங்கப்பூரிலிருந்து டோக்கியோ நரிட்டா விமான நிலையத்துக்கு எட்டு மணி நேர பயணம்! பாட்டி நன்றாக உறங்கிவிட்டார்! விமானம் தரைபிறங்கும் நேரமே கண்விழித்தவர் பேத்தியை உடனே காணும் ஆர்வத்திலிருந்தார்.

விமான நிலையம் வரும் பாதையில் அன்று சரியான வாகன நெரிசல். அதன் காரணமாய் இந்திரனும் நிலானியும் சற்று தாமதமாய் வந்து சேர்ந்தனர்! பதட்டத்தில் இருந்தாள் நிலா,
“பாட்டி எங்கே என்னை தேடிட்டு இருக்காங்ளோ! அவங்ககிட்ட இப்ப போன் கூட இல்லை!”
வண்டியை நிறுத்திவிட்டு ஓடோடி வந்தனர் இருவருமே!

பயணிகள் வருகைக்கான இடத்தில் போட்டிருந்த இருக்கையில் தன் பெட்டிகளை சுற்றி வைத்துக் கொண்டு நடுவில் ஒரு ராணி போல் அமர்ந்திருந்தார் ஆவுடை பாட்டி! எவ்வித சோர்வும் முகத்தில் இல்லை. தன் கையிலிருந்த முறுக்கை உண்டபடி தன்னை சுற்றி தெரிந்த புது மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ஆவுடை பாட்டி!

நிலானிக்கு அந்த காட்சியை பார்த்து முதலில் சிரிப்பு தான் வந்தது! பாட்டியிடம் நெருங்கி சென்றவள்,
“வா ஆத்தா! பிரயாணமெல்லாம் வசதியா இருந்ததா?”
தன் பக்கம் வந்த நிலானியை விரிந்த கண்களுடன் பார்த்தவர்,
“நிலானி” என்ற அழைப்பின் ஊடே
கஷ்டப்பட்டு இருக்கையிலிருந்து இறங்கினார்! தன் பேத்தியை ஆசையுடன் கட்டிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்! சில மாதங்களுக்கு முன்பு பார்த்ததை விட நிலா இன்னும் பொழிவுடன் காட்சித்தர, வளர்த்தவளுக்கு அவள் இப்போது சந்தோஷமாய் இருக்கிறாள் என்ற உண்மை புரிந்தது, மறுக்க தோன்றவில்லை!

இவர்களின் பாச பரிமாற்றங்கள் முடிந்த பின்னரே இவர்கள் பக்கம் வந்தான் இந்திரன்! அவனும் பாட்டியும் ஒருவரையொருவர் பார்த்து முறைத்துக் கொண்டனர்!

காரில் விரைவாய் இல்லம் வந்துவிட்ட ஆவுடை பாட்டி சங்கரனுக்கு போன் செய்து பேசினார்!
“நிலா வீட்டுக்கு வந்துட்டேன் லே! ஆமாமா பிரயாணமெல்லாம் சுகம்தான்!”
நிலா வீடு குருவி கூடாட்டம் இருந்தாலும் நல்லா சுத்தமா வச்சியிருக்கா எம் பேத்தி!”
இந்திரன் காதில் எல்லாமே விழுந்தது. ‘பாட்டி வராங்க ப்ளீஸ் இதை மட்டும் செய்யேன்’ என்று சொல்லியே முன்தினம் முக்கால்வாசி வேலையை அவனை செய்ய வைத்திருந்தாள் நிலா!
‘விஷயம் தெரியாமல் கிழவி பெருமை பேசுறதை பாரேன்’

“அவ சம்பாத்தியத்துக்கு ஏன் இம்புட்டு சின்ன வீட்டில் இருக்கா! இனி தான் அவட்ட கேக்கணும்! நீ வயலுக்கு போனையா? அருப்பு முடிச்சிட்டு நான் கிளம்புறேன்னா கேட்கியா நீ! ஒத்தையிலே என்னவெல்லாம் பார்ப்பே! கூறுகெட்ட பயலே!”
அவர் என்ன சொன்னாரோ!

“சரி சரி! உம் பிள்ள கஸ்தூரி பத்திரம் லே! தனியா எங்கனையும் அனுப்பாதே! பார்த்துக்கோ! நான் தெனமும் போன் போடுதேன்! இப்ப வைக்கவா லே!”

சங்கரனுக்கு பேச வாய்ப்பே தரவில்லை இந்த பாட்டி. இந்திரன் அவரையே பார்த்துக் கொண்டு சோபாவில் அமர, பேத்தி தந்த உணவை சாப்பிட ஆரம்பித்தார்!
“இட்லி நல்லா மல்லிப்பூ மாதிரி இருக்குட்டி! வெங்காய சட்னி ருசியா இருக்கு! நல்லா சமைக்கியே நிலா புள்ள!”
நிலா பெருமையாய் அதற்கு சிரித்து வைக்க,

“அந்த மாவை அரைச்சு வச்சது நான்!” எழுந்து போனவன் போகிற போக்கில் ஆவுடைபாட்டி கேட்கும்படி சொல்லிவிட்டு போனான்.
பாட்டி பேத்தியை பார்க்க, நிலாவும் இப்போது அசடு வழிந்தாள்!
“சுமாராத் தான் இருக்கு. உன் கைப்பக்குவம் எப்படின்னு ஆத்தாவுக்கு தெரியாதாட்டி!”

அவர்கள் பேச்சை தன் அறையிலிருந்து கேட்ட இந்திரன், தானே தன் தலையில் அடித்துக் கொண்டு படுக்க போனான், இன்னும் எத்தனை காலம் இந்த கொடுமையை தாங்க வேண்டுமோ என்று நொந்தபடி!


Sema paati
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஆஹா ஆவுடைப் பாட்டி செம்ம செம்ம கலக்கல்... ??? இந்திரன் நிலைமை தான் என்னவாக போகுதோ தெரியலை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top