• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience c/o காதலி 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
c/o காதலி 10



மூவரும் ஹாஸ்டலில் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை. அதே சமயம் அன்றைய பாடங்களையும் அவர்கள் அன்றே படித்து புரிந்த பிறகு தான் மற்றவை.

ஹாஸ்டலில் இருக்கும் மற்ற பெண்களுடனும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அமெரிக்கன் காண்வென்டில் படித்த போது இருந்த அந்த உயர்தர வாழ்விலிருந்து இறங்கி வந்து பழக இப்போது நன்றாகவே கற்றுக் கொண்டனர்.

பாரபட்சமின்றி பழகப் பிடித்திருந்தது. அவர்களின் பிசிக்ஸ் கிளாஸ் தோழி ஒருத்தியும் அந்த ஹாஸ்டலில் இருந்தாள். ஆனால் வேறு ப்ளாக். இருந்தாலும் சில நாட்களாக இவர்களோடு சுற்ற ஆரம்பித்திருந்தாள்.

உமா அவளது பெயர். சாதாரண குடும்பத்துப் பெண் தான் அவள். ஆனாலும் மூன்று அக்கா இரண்டு அண்ணன்களுக்குப் பிறகு பிறந்த கடைக்குட்டி. அதனால் வீட்டில் அவளுக்கு ஒருவர் இல்லையென்றால் ஒருவர் செல்லம் கொடுத்து வளர்க்க, அவள் ஒரு தைரியமான அதே சமயம் சாமர்த்தியசாலியும் கூட .

ஏற்கனவே இவர்கள் மூவரும் அராத்து. அவர்களோடு அவளும் சேர்ந்து கொண்டாள்.

“ஹே உமா, உங்க வீட்ல எப்படி இவ்வளோ பிள்ளைங்க. உங்க அப்பாக்கு வேற வேலையே இல்லையா?” அம்பு தான் ஹாஸ்டல் டீயைக் குடித்துக் கொண்டே கேட்டாள்.

உமா அவளுக்கு எதிரே கையில் ஒரு டீ யுடன் வந்து அமர்ந்தாள்.

“ஆமா அவரு ஆறு மாசம் வீட்ல இருப்பாரு. ஆறு மாசம் கடல்ல இருப்பாரு. அதுனால வீட்டுக்கு வரப்ப எல்லாம் எங்க அம்மா நல்லா கவனிப்பாங்க. அந்த கவனிப்புல நாங்க பிறந்தோம்.” சொல்லிவிட்டு சிரித்தாள்.

கூடவே சுப்புவும் மீனாவும் சேர்ந்து சிரிக்க, அம்புவும் கட்டுப்படுத்திப் பார்த்தும் முடியாமல் சிரித்தாள்.

“நல்ல கவனிப்பு..” மீனா வாய் விட்டு சிரித்தாள்.

“சரி உங்க அண்ணனுக்கு எல்லாம் கல்யாணம் ஆயிடுச்சா?” அதி முக்கிய கேள்வியை சுப்பு கேட்க,

“பெரியண்ணனுக்கு ஆயிடுச்சு. அப்புறம் ரெண்டு அக்காக்கு ஆயிடுச்சு. சின்ன அக்காக்கு பாத்துட்டு இருக்காங்க. அவளும் போயிட்டா எனக்குத் தான் போர் அடிக்கும்.” சற்று வருத்தம் போலக் கூற,

“ஹே அப்ப உங்க சின்ன அண்ணன் எப்புடி...?” கண்ணடித்தாள் சுப்பு,

“ஹி ஹி அலையாத மச்சி அவன் அல்ரெடி புக்டு. அவனும் என் மாமா பொண்ணும் ஒரு லவ் ட்ராக் ஓட்டிட்டு இருக்காங்க.”

“என்னடி இது உலகத்துல நம்மளத் தவிர எல்லாரும் புக் ஆகி இருக்காங்க போல.” மீனு வாய்விட்டாள்.

“அடியே..நல்லவளே! நீயும் அந்த விஜயும் லேப்பின்னாடி அன்னிக்கு கிஸ் பண்ணத நான் பாத்தேனே...” போட்டு உடைத்தாள் உமா.

சுப்புவுக்கும் அம்புவுக்குமே சந்தேகம் வந்தது. முதல் நாள் முத்தமிட்ட பிறகு ஒரே ஒரு முறை மீண்டும் முத்தமிட்டோம் என்று மட்டும் தான் கூறியிருந்தாள் மீனா.

உமா சொன்னதைக் கேட்ட பிறகு,

“மச்சான்..மாட்டிக்கிட்ட... என்ன நடக்குது...” அம்பு ஒற்றைப் புருவத்தை ஏற்ற,

“ ஐயோ அம்பு... க்ரஷ் கிஸ் தான் அது. லவ் எல்லாம் இல்ல...” கள்ளமில்லாமல் அவள் சொல்ல , கூடவே பழகிய இருவரும் நம்பினார். ஆனால் உமா நம்ப மறுத்தாள்.

“அதென்ன டி க்ரஷ் கிஸ்... புதுசா சொல்ற...?” என கேட்க,

“எனக்கு அவன் மேல ஒரு க்ரஷ் இருக்கு உமா. ஆனா அது லவ் எல்லாம் இல்ல. ப்ரெண்ட்லியா குடுத்தா அது ப்ரெண்ட்லி கிஸ். அது மாதிரி இது க்ரஷ் கிஸ்..” விளக்கம் தந்தாள்.

“அதெல்லாம் நான் நம்ப மாட்டேன். இது லவ் தான்.” அடித்துச் சொல்ல,

“எங்க கேங் பத்தி உனக்குத் தெரியாது டி. நாங்க லவ் எல்லாம் பண்ற ஐடியா இல்ல. அத விடு..நீ உங்க குடும்பக் கதைய சொல்லு.. சரி உங்க பர்ஸ்ட் அண்ணனுக்கும் உனக்கும் எவ்வளோ ஏஜ் வித்தியாசம்?” சுப்பு பேச்சை மாற்றி மீனாவைக் காப்பாற்றினாள்.

கண்ணால் மீனா நன்றி சொல்ல, உமா தொடர்ந்தாள்.

“எனக்கும் என் அண்ணனுக்கும் பதினஞ்சு வயசு டிபரென்ஸ். நான் டென்த் படிக்கறப்ப அவங்களுக்கு கல்யாணம் ஆச்சு. அப்பறம் அடுத்த வருஷம் முதல் அக்காக்கு , அப்பறம் ரெண்டாவது அக்கா. இப்ப மூணாவதுக்கு பாக்கறாங்க. எல்லாரையும் தொரத்துன பிறகு தான் எனக்கு... ஹ்ம்ம்.... இதுங்கள எல்லாம் ஏக்கமா பாத்து பாத்தே நமக்கு பக்குவம் வந்துருச்சு.நாம கல்யணம் பண்றப்ப த்ரில்லே போய்டும் போல.” ரொம்பவும் சலித்துக் கொண்டாள்.

“ஓ!! அப்ப உங்க வீட்ல நல்ல நல்ல சீன்ஸ் ஓடும் போலிருக்கே..?” அம்பு ஆர்வமாக,

“எங்க வீடு, பக்கத்து வீடு எல்லா வீட்லயும் சீன்ஸ் தான். அதுனாலையே என்னை ஹாஸ்டல்ல போட்டுடாங்க. அதும் எங்க அண்ணன் இருக்கனே. இப்ப ரெண்டு குழந்தைங்க ஆயிடுச்சு. ஆனா கல்யாணம் ஆன புதுசுல அவன் அடிச்ச லூட்டி இருக்கே..!” அவள் சொல்லாமல் நிறுத்த...

“ஹே என்ன டி சீன் ..சொல்லு டி”சுப்பு தான் ஆர்வமானாள்.

“சொல்றேன்.. இங்க வேணாம். நைட் உங்க ரூம்கு வரேன் டின்னெர் க்கு அப்பறம் பேசுவோம்.. இப்ப கொஞ்சம் ரெகார்ட் வொர்க்ஸ் இருக்கே.. அப்பறம் மூட் மாறிடும். முடிச்சுட்டு வரேன்..” காலியான டீ கப்பை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

இவர்களும் எழுந்து தங்களின் அறைக்கு வந்து சேர்ந்தனர்.

அம்புவும் சுப்புவும் மீனாவை தீப் பார்வை பார்க்க... மீனா சற்று கிலியானாள்.

“மச்சான்... இல்ல பேசி தீத்துக்கலாம்...லெட் மீ எக்ஸ்ப்ளைன்...” கதவின் பின்னே ஒன்றினாள்.

“எங்களுக்குத் தெரிஞ்சு ரெண்டு தடவ தான் கிஸ் சீன் வந்துச்சு... அப்பறம் எத்தன வாட்டி குடுத்த... ஒழுங்கா சொல்லிடு..” சுப்பு அவளை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தாள்.

“சொல்லிடறேன் மச்சி... எப்பலாம் லேப் நடக்குதோ அப்பலாம் சீன் தான்.” முகத்தை மூடிக் கொண்டு உண்மையச் சொல்ல,

“அடிப்பாவி... லேப்ல நாங்களும் தான இருப்போம்?” அம்பு எங்கோ இவளைத் தவறவிட்டோம் என யோசித்தாள்.

“நாம எல்லாரும் வேற வேற டேபிள் தான, சோ நான் லாஸ்ட் டேபிள் எடுத்துப்பேன். அப்போ விஜய்க்கு ஸ்போர்ட்ஸ் டைம். அப்போ வந்து மீட் பண்ணிட்டுப் போவான். ஒரு பைவ் மினிட்ஸ் தான்...”

“ சரியான பிராடு டி நீ. அதான பாத்தேன்... என்ன டா இவ அரியர் வைக்கற அளவு என்ன நடக்குதுன்னு..இப்ப தான தெரியுது...” மீனாவைப் பிடித்து இழுத்து வந்து அமர வைத்தாள் அம்பு.

“மச்சான்... கை குடு... அட்லாஸ்ட் நீ கொஞ்சம் வளந்துட்ட.. எத்தன வாட்டி டி கிஸ் பண்ண... வேற என்னல்லாம் பண்ணீங்க? ஒன்னு விடாம சொல்லு...” சுப்புவின் கற்பனை அவளை எங்கோ கூட்டிச் சென்றது.

“வேற ஒன்னும் பன்னல டி..சத்தியமா இது வரைக்கும் அவன் கன்னத்துல மட்டும் தான் கிஸ் பண்ணிருக்கேன். நாட் ஈவன் லிப்ஸ்..” மீனா சொன்னதும்...இருவருக்கும் சப்பென்று ஆனது.

“அட தூ... வேஸ்ட் டி நீ. அவன் உனக்கு மேல இருப்பான் போல.. பாக்க தான் ரொம்ப பக்காவா எல்லாம் பத்து வாட்டி பண்ண மாதிரி இருக்கான். ஆறு மாசமா கன்னத்துல தான் தொங்கிட்டு இருக்கீங்களா..? இதுக்கு கமல் பெட்டர்...” இத்தனை மாதங்களில் முதல் முறை அவளது வாயிலிருந்து கமலின் பெயர் வந்தது.

அம்பு அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“என்ன டி அப்படிப் பாக்கற?” சுப்பு ஓரக்கண்ணால் அவளைப் பார்த்துக் கேட்டாள்.

“இல்ல... கமல் அப்படின்னு ஒருத்தன் இருக்கான்னு உனக்கு ஞாபகம் இருக்கா? கோவா விட்டு வந்த இத்தனை நாள்ல ஒரு வாட்டி கூட அவனப் பத்தி நீ பேசல. அவனுக்கு கால்கூட பண்ணலன்னு நினைக்கறேன். அப்படித் தான? இப்ப மட்டும் எப்படி அவன நெனச்ச?” அம்பு கையைக் கட்டிக்கொண்டு சுப்புவை இப்போது கூண்டில் நிற்க வைக்க ,

“அதான...” அம்புவுக்கு ஒத்து ஊதினாள் மீனா.

இருவரும் திரும்பி ஒரே நேரத்தில் அவளை முறைத்தனர்.

“இல்ல.. என் விஷயம் ஸ்டில் பெண்டிங்..ஆனா நெக்ஸ்ட்.. இப்ப நீ சொல்லு...” அப்பாவியாய் அவசரமாய் அவளை கோர்த்துவிட்டு நின்றாள்.

அம்பு பெருமூச்சு விட்டு, சுப்புவிடம் திரும்பினாள்.

“சொல்லு” விடுவதாக இல்லை அம்பு.

“கமலும் நானும் அதுக்கு அப்பறம் பேசிக்க கூடாது. ஜஸ்ட் அந்த ட்ரிப் ஓட இதெல்லாம் ஓவர்னு டிசைட் பண்ணித் தான் அங்க இருந்தே கெளம்புனேன். ஆனா அவன் நெனப்பு எப்பயாச்சும் வரும். சுத்தமா இல்லன்னு சொல்ல முடியாது. ஒரு வாட்டி அவனுக்கு மெசெஜ் பண்ணலான்னு எடுத்தேன் அப்பறம் விட்டுட்டேன்..” தோளைக் குலுக்கினாள்.

“சோ உன் லைஃப் ல அவன் சேப்டர் அவ்ளோ தானா ?”

“ப்ரெண்ட்லியா இருப்பேன். எங்கயாச்சும் பாத்தா பேசாம முகத்தை மூடிக்க மாட்டேன். ஹை பை அப்டி...” சாதாரணமாகச் சொன்னாள்.

“அப்ப அகைன் அவனோட ஸ்டே பண்ற சான்ஸ் கெடச்சா?” மீனா குறுக்கிட்டாள்.

“அது.... அது... அப்போதிக்கு பாத்துக்கலாம்..”

“சோ உனக்கு லவ் பீலிங் இல்லன்னு சொல்ற..அப்படித் தான..” அம்பு புருவத்தை ஏற்றிக் கேட்க,

“ஆமா..”அவளும் ஒத்துக்கொண்டாள்.

“சரி எவ்ளோ நாள்னு பாக்கலாம்.” அம்பு முடித்துக் கொண்டாள்.

“நீ விஜய்ய லவ் பண்ணலையா?” மீனாவைக் கேட்டாள்.

“ச்ச ச்ச..” உடனே அவளும் மறுக்க,

கண்ணை மூடி ஆழ்ந்த மூச்செடுத்தவள், ‘இதுங்க இப்படித் தான்.. மாறாதுங்க.. என மனதில் நினைத்து அந்த பேச்சை விடுத்தாள்.

“எங்கள கேக்கறியே..நீ எப்போ கன்னி கழியறதா இருக்க... ஸ்டில் ஒரு முத்தம் கூட இன்னும் நீ குடுக்க ஆரம்பிக்கல.. எப்போ லைஃப் ஸ்டார்ட் பண்ணப் போற.?” சுப்பு கேள்வியை இப்போது அம்புவின் பக்கம் திருப்ப..

“ எனக்கு புடிச்ச மாதிரி ஒருத்தன மீட் பண்றப்ப..”

“அந்த ஒருத்தன் எப்ப வருவானோ...?” மீனா மேலே பாத்து கூறினாள்.

“எல்லாம் வரப்ப வருவான்... வாங்க படிக்கலாம். அந்த உமா வேற வந்து கத சொல்றேன்னு உக்காந்தா அவ்ளோ தான்.” இருவரையும் துரிதப் படுத்தினாலும், தனக்கானவன் எப்படி இருப்பானோ என்று சிந்தனையும் ஓடாமல் இல்லை.

சரியாக அவர்கள் படித்து முடிக்கவும் , உமா உள்ளே வரவும் சரியாக இருந்தது. வேகமாக வந்து கதவைத் தட்ட, சுப்பு ஓடிச் சென்று திறந்தாள்.

“ஏன் டி இப்படி ஓடி வர?” என கேட்க,

“வார்டன் தொரத்திட்டு வரா டி... ஒன்பது மணிக்கு மேல வெளிய சுத்துனா காச்சி எடுத்துடுவா...கதவ மூடு” மூச்சிரைக்க நின்றாள்.

“அவ கண்ணுல பட்டுடியா?” மீனா அவளுக்கு தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.

அதை வாங்கிப் பருகியவள், “ஜஸ்ட் மிஸ்.. நான் உங்க வராண்டா ல நடந்து வந்துட்டு இருக்கேன் அப்போ அவங்க ரூம்ல இருந்து வெளிய வந்தா.. டக்குனு சுவரோட ஓட்டி நின்னுட்டேன். அப்புறம் ஒரே ஓட்டம் தான். அவ ரௌண்ட்ஸ் வரதுக்குள்ள உங்க ரூம்க்கு வந்துட்டேன்.” கதைச் சுருக்கத்தை சொல்லி முடித்தாள்.

“இந்த பசங்க மட்டும் ஜாலியா நைட் ஷோ படமெல்லாம் பாத்துட்டு வராங்க.. நாம மட்டும் இங்க ஒம்பது மணிக்கு உள்ள இருக்கனுமாம்.” சுப்பு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.

“நீ வேற .. எங்க ஹாஸ்டல் சீனியர் பொண்ணுங்க வாரம் ஒரு மூவி போறாளுங்க.. செம கெத்து அவங்க. வெளிய போய் நல்லா சாப்ட்டுட்டு ஒரு படமும் பாத்துட்டு நைட் ஒரு மணிக்கு ரூம்க்கு வராளுங்க தெரியுமா?” உமா இவர்களின் ஆவலுக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்தாள்.

“நிஜமாவா டி... நாமளும் ஏன் ட்ரை பண்ணக் கூடாது..சுப்பு , மீனா ..?!” இருவரையும் பார்த்தாள் அம்பு.

“ ஒன்னு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ...மாட்டுனா ப்ரின்சிபல் கிட்ட சொல்ல மாட்டாங்க... நேரா நம்ம அம்மா அப்பாக்கு தான் கால் போகும்.” அதையும் எச்சரித்தாள் உமா.

“இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாச்சே...எங்க அப்பா ஏற்கனவே சாமி ஆடிட்டாரு.. இன்னும் கம்ப்ளைன்ட் போனா அவ்ளோ தான். ” மீனா தலையில் கை வைத்து அமர்ந்தாள்.

“பேசாம நாம சீனியர்ஸ் கிட்ட கேட்டு அவங்க கூட போயிட்டு வந்துரலாம்.. அப்ப மாட்டிக்க மாட்டோம். என்ன சொல்றீங்க...” அம்பு தான் சொல்லியது.

“ம்ம்ம் நல்ல ஐடியா தான். கேட்டு பாப்போம்.” சுப்பு ஆமோதித்தாள்.

“சரி நீ வந்த விஷயத்தை ஆரம்பி...” மீனா கையில் ஒரு தலையணையுடன் ஆர்வமானாள்.

அம்பு அவளது தலையில் தட்டினாள். “இதுக்கெல்லாம் முதல் ஆளா ஆஜர் ஆகிடு.”

“பின்ன, லைஃப் லையே இண்டரஸ்டிங் சைட் இந்த கசமுசா தான...”

“அதான் பாத்தேனே உன்னோட சைட.. கன்னத்துல முத்தம் குடுத்துகிட்டு. இந்த காலத்துல எல் கே ஜி பசங்க கூட கன்னத்துல குடுக்காதுங்க..” சுப்பு தலையில் அடித்துக் கொள்ள,

“சரிங்க டி... விடுங்க.. கதைய கேட்டுட்டு போய் இம்ப்ளிமென்ட் பண்ணிடலாம்.” மீனா கையைத் தூக்கி சரணடைய,

“இந்தக் கதைய கேட்டீனா நீ வேற மேட்டருக்குத் தான் ரெடி ஆகணும். ஓகே வா பேபி..?” உமா கலாய்க்க,

“அடடா..மொதல்ல சொல்லும்மா உன் சீன்-அ அப்பறம் எதுக்கு ரெடி ஆகறதுன்னு முடிவு பண்ணலாம்.” அம்புவுக்கு பொறுமை பறந்தது.


“ஒரு நாள் நானும் என் சின்ன அக்காவும் டிவி பாத்துட்டு இருந்தோம்.”

உமா ஆரம்பிக்க மூவரும் காதைத் தீட்டிக் கொண்டனர்.
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
Meenamma Meenamma
Ippadi sothapittiye ma🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Nalla irukku update 👍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top