• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ch-10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

juliyana

நாட்டாமை
Joined
Sep 22, 2018
Messages
87
Reaction score
197
Location
chennai
Hi friends,
thanks for ur comments.

அன்று காலையில் எழுந்த கயல் இரவில் எடுத்த முடிவின் படி இனியும் இந்த வீட்டினுள் இருப்பது சரிப்படாது

என்று எண்ணியவளாக தன் உடமைகளை எடுத்து வைத்தவள் பக்கத்துக்கு அறையில் இருக்கும் அன்புவின் முன்

சென்றாள். அம்மா ! நா..........ன் இந்த வீட்டை விட்டு போக போறேன்...எனக்கு நீங்க பண்ண எல்லா உதவிக்கும்

ரொம்ப தேங்க்ஸ் மா...ஒரு அம்மா மாதிரி என்ன நீங்க பாத்துக்கிட்டிங்க.....அதுக்கு...............நான் குடுத்து

வச்சிருக்கணும்..

இதை கேட்ட பாரதி அதிர்ந்தாள் ..மகளுக்காக பார்த்து பார்த்து காய் நகர்த்தி இவ்வளவு தூரம் போராடி

வெற்றிபெறும் நேரத்தில் இப்படி சொதப்புகிறாளே என்று.

கயல் உன் கிட்ட நான் ஒரு விஷயம் கேட்டேன் .நீ முடியாதுனு சொல்லிட்ட...அது அதோட முடிஞ்சுது..நீ ஏன் இந்த

வீட்டை விட்டு போணும் ." அம்மா! என்னால....இதுக்கு மேல இங்க இருக்க முடியும் னு தோணல...

கயல் உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கனு எனக்கு தெரில...நான் ..என்னோட ..உயிரை பாதுகாக்க

போராடுறேன்.....என்றவாறு மயங்கி சரிந்தார்.

அம்மா! என்ற கயலின் அழைப்பில் கீழே நின்று கொண்டிருந்த பிரகாஷ், அரவிந்த் இருவரும் பதற்றமாக மேல

வேகமாக வந்தனர்.அன்புக்கரசியை மயங்கின நிலையில் கண்ட இருவரும் வேகமாக அருகில் வந்து எழுப்பினார்.

...அவரிடம் எந்த அசைவும் தெரியவில்லை.அம்மா! என்னாச்சும்மா உங்களுக்கு....


அவசரமாக காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை விரைந்தனர் ..கயல் குற்ற உணர்ச்சியுடன் அவர்களுடனே

ஏறினாள். ICU கு வெளியே மூவரும் நின்று கொண்டிருந்தனர். அரவிந்த் பார்வை அடிக்கடி கயலை தொடந்து. ..இவ கிட்ட

பேசுறப்போ தான் அம்மா மயக்கமானங்க.....அப்படி என்ன பேசுனா...

மெதுவாக அவளின் அருகில் வந்தவன் தந்தை அறியாமல் "கொஞ்சம் அந்த பக்கம் வா....உன் கூட பேசணும்"

என்றான்.

என்ன கேட்பான் என்ற பயத்துடனே சென்றாள் ..


ம்கூம் ..அம்மா கிட்ட என்ன பேசுன? நீ பேசுறப்போ தான் அம்மாக்கு இப்படி ஆயிடிச்சு. ..அப்படி என்ன பேசுன.

என்ன சொல்வதென்று அச்சமாக இருந்தது.

நான்...............வந்து அம்மா கிட்ட நான் வீட்டை விட்டு போறேன்னு ....சொன்னேன்.அதை கேட்டவுங்க என் கிட்ட

பேசிட்டிருக்கும் போதே மயங்கிட்டாங்க...உனக்கு என்னத்தாண்டி பிரச்சனை...வேற எவனையாது லவ் பன்றியா.என் அம்மா உடம்ப பத்தி தெரிஞ்சும் நீ

அவுங்க hurt ஆகுறமாதிரி பேசியிருக்க....அப்படி என்ன கேட்டுட்டாங்க உன் கிட்ட...என்ன உன் மனசுல பெரிய

இவன்னு நினைப்பா....எங்க அம்மாக்கு மட்டும் ஏதாது ஆச்சுன்னா நீ என்னோட இன்னொரு முகத்தை பாக்க

வேண்டியது வரும்...தன் தாயின் நிலை அவனை இவ்வாறு பேசவைத்தது....

அவனின் வார்த்தைகளை கேட்டு மளமள வென கண்ணீர்விட்டாள் ...அம்மா இப்போதான் நான் உன்ன இழந்துட்டு

நிக்கிறேன்...இப்போ எனக்கு அடைக்கலம் குடுத்தவுங்க நிலையும் என்னால இப்படி ஆயிடிக்சே...என்னக்கு ஏன்

மா...இந்த அவப்பெயர்....அவுங்களுக்கு எதுவும் ஆக கூடாது....

அந்த நேரம் டாக்டர் வெளியே வந்து "அவுங்க கண் முழிச்சிட்டாங்க....உங்க எல்லாரையும் உள்ள

கூப்பிடுறாங்க...ரொம்ப எமோஷனல் ஆக விடாதீங்க....அவுங்க உயிருக்கே ஆபத்தாயிடும்" என்றார்.


பிரகாஷ், அரவிந்த் இருவரும் உள்ளே சென்றனர். கயல் வெளியே நின்றுவிட்டாள் ..அவளுக்கு அவர் கண்

விழித்ததே போதும் என்று மனதளவில் கடவுளுக்கு நன்றி கூறினாள் ..

உள்ளே சென்ற அரவிந்த் கண்களில் கண்ணீர் துளிகளுடன் அம்மா! என்று அழைத்தான்....அவனை நோக்கிய அன்பு

கயல் வரலியா என்று கேட்டார்...ம்....வெளிய இருக்கா...

வரச்சொல்லு.....வெளியே சென்று அம்மா உன்ன கூப்பிடுறாங்க....உள்ள வந்து அவுங்க மறுபடியும் வேதனை படுற

மாதிரி ஏதும் பண்ணாத என்று உரைத்து சென்று விட்டான்....பின்னாலே சென்றவள் அன்புக்கரசி அருகில் சென்று

நின்று கொண்டாள் ..


கயல்.....உன் கிட்ட நான் கேட்டத எனக்காக நிறைவேற்ற மாட்டியா...இந்த கல்யாணம் நடக்கலைனா அந்த சித்தர்

சொன்ன மாதிரி இந்த குடும்பத்துல இருக்கிற ஆம்பிள்ளைங்களுக்கு ஆபத்து....அவர் குடுத்த கெடு இன்னையோட

முடியுது.....எனக்காக நீ இந்த கல்யாணத்துக்கு ஒதுக்கலைனா நான் வீட்டுக்கு வர மாட்டேன்....இங்க இப்டியே

இருந்து சாகுறேன்....

அவர் இப்படி சொன்னவுடன் அனைவரும் பதறினர்... அம்மா என்ன பேசுறீங்க ..இப்போதான் என் அம்மாவை

இழந்துட்டு நிக்கிறேன்....என்னால இன்னொரு உயிர் போறத தாங்க முடியாது....உங்களுக்காக இந்த

கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்.......

அங்கிருந்த அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது....ஆனால் பாரதி விடுவதாக இல்லை...எங்கே வீட்டுக்கு

சென்று விட்டாள் தன் மகள் மனம்மாறி விடுவாள் என்று எண்ணி, எனக்கு இப்பவே இந்த கல்யாணம் நடக்கணும்

...அப்புறம் முறையா ரெஜிஸ்டர் பண்ணிடலாம்...இப்போ என்னோட மனத்திருப்தி காக இங்கயே என் கண்

முன்னாடி நடக்கட்டும்.....

கயல் அதிர்ச்சியானாள் ...அரவிந்த் அம்மா இங்க எப்படி பண்ண முடியும்....

அந்த சித்தரே என் கைல ஒரு தாலியை குடுத்தாரு...அத நான் என் புடவைலயே கட்டி வச்சிருந்தேன்...இதோ !

இருக்கு. இத கட்டுப்பா ....அதை கைகளில் வாங்கியவன் தாயின் வார்த்தைக்கு மறுபேச்சு பேசாமல் கயலின் கழுத்தில்

கட்டினான்...அவள் கண்களில் இருந்து வடிந்த நீர்த்துளி அவன் கைகளில் பட்டது...." இப்போ எதுக்கு இவை

அழுறா...நான் என்ன......கெட்டவனா...இல்ல கொடும படுத்துறவனா.....என்ன பொண்ணு இவ....


மகளின் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தாள் பாரதி.....இதை விட்டால் வேறு வழி

இல்லையென்று எண்ணி தன்னை தேடி வந்த மகளை வீட்டை விட்டு செல்ல விடாமல் தடுப்பதற்கே மயக்கம்

வருவது போல் நடித்தார்....தான் நினைத்தது நிறைவேறிய மகிழ்ச்சியில் பாரதி இருக்க.....தன் தாய் உயிருடன்

இருக்கும் போது கூறிய வார்த்தைகளை மீறிவிட்டோமே என்று எண்ணி கண்ணீர் வடித்தாள்.


அவளின் முகம் நோக்கிய பாரதி நீ சந்தோஷமா இருக்கனும் னு தானே உயிர் பிரிந்த பின்னும் உன்னை தேடி

வந்தேன்......உன்னோட அழுகை என்ன பலவீனமாக்குது கயல்...அழாதே ....என்று மனதிற்குள் பேசினார்.....நான்

செய்றது உன்னோட நல்லதுக்குனு உன்னக்கு புரிய வரும் மா......


மருத்துவர் இன்று ஒரு நாள் அங்கு இருந்துவிட்டு நாளை வீட்டிற்கு செல்லலாம் என்று கூறினார்....

பிரகாஷ்க்கு மனைவியை நினைத்து கவலையாக இருந்தது...இப்படி அடிக்கடி மயக்கம் வருவதை நினைத்து

கவலை கொண்டார்.
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top