Chippikul muthu- 5

juliyana

Author
Author
#1
எங்க போனாலும்
நானும் வருவேன்
கண்ணாடி பாரு
நானும் தெரிவேன்

தாயே உயிர் பிரிந்தாயே
கண்ணே நீயும் என் உயிர் தானே

இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்
நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேக்கும்...........
காலை கதிரவன் கண்களை சிமிட்ட தன்னுடைய இமைகளை மெல்ல திறந்து அருகில் வைக்கப்பட்ட தன்

தாயின் புகைப்படத்தை நோக்கினாள் கயல். "அம்மா ! எப்படி இருக்கீங்க . நீங்க போனப்புறம் நான் எப்படி

இருக்கபோறேன்னு தவிச்சிட்டிருந்தேன். ஆனா அன்புக்கரசி அம்மாவோட அருகாமை என்ன ஏதோ

பண்ணுது.எனக்கு சொல்ல தெரியலமா ...அவுங்கள நீங்கதா அனுப்பினீங்களா?அவுங்களோட அன்பும்

அக்கறையும் உங்கள நினைவு படுத்தது. அவுங்க எங்க? நான் எங்க ? என்ன அவுங்க கிட்ட வேலை செய்றவளா பாக்காம சொந்த பொண்ணு

மாதிரி பாத்துக்குறாங்க . இங்க வந்த ரெண்டு நாள்ல நான் அவுங்கள பாக்க வந்துருக்கேனா ? இல்ல அவுங்க என்ன பாத்துக்கிராங்களானே

தெரியலமா ....அவுங்களுக்கு என்னாலான நல்லதை செய்யணும் ". அவளின் உரையாடலை கலைக்கும் விதமாக அவளின் அறைக்கதவு

தட்டப்பட்டது. கதவை திறந்தவள் யோசனையுடன் நோக்கினாள் . வந்தது அரவிந்த் இந்த வீட்டிற்கு வந்த இரண்டு நாட்களில் அரவிந்த் இவளை

நோக்கி ஒரு அலட்சிய பார்வை பார்த்துவிட்டு செல்வதோடு சரி . இன்று தான் இவளிடம் பேச வந்திருக்கிறான். என்னவாக இருக்கும் என்று

யோசிக்கும் போதே "அம்மா எங்க ?

"எனக்கு தெரியாது. நான் .....இப்போதான் எழுந்தேன் . "கயல். இரவு அதிக நேரம் தாயை நினைத்து அழுதுகொண்டிருந்ததால் அவளால் சீக்கிரம்

எழ முடியவில்லை. ஆனால் அதை இவனிடம் எப்படி கூறுவது ?

"ஓ ! இங்க நீ வேலைக்கு வந்தியா இல்ல விருந்தாளியாய் வந்தியா ? உனக்கு எங்க அம்மாவை பாத்துகிறது தானே வேலை. இல்ல சொகுசா

மகாராணி மாதிரி தூங்குறது வேலையா?

திராவகம் வீசியது போன்ற அவனது வார்த்தையால் கண்களில் இருந்து கண்ணீர் மளமளவென்று கொட்டியது.அதற்குள் அன்பு வரும் அரவம் கேட்கவே திரும்பி நோக்கியவன் " அம்மா எங்க போனீங்க? உங்கள தனியா எங்கயும் போக வேண்டாம் னு

சொல்லிருக்கோம்ல. காரும் எடுத்துட்டு போல ஏன் மா இப்படி பண்றீங்க? உங்களுக்கு ஏதாதுனா எங்களால தங்கி முடியுமா? அன்று பிரகாஷ்

சொன்ன அதே வார்தைகளை இன்று அரவிந்த் கூறும் போது பாரதிக்கு அன்பு மேல் பொறாமை வந்தது. அன்பான கணவன் , மகன் அமைய அவர்

குடுத்து வைத்தவர் என்று மனதில் நினைத்து கொண்டார்.

" இல்லப்பா கொஞ்சம் நடந்தா நல்ல இருக்கும் னு தோணிச்சி " அதுக்கென்ன நம்ம கார்டன் ல நடக்க வேண்டியது தானே ?

" இல்ல மார்க்கெட் போலாம்னு தோணிச்சி நானே என் கையால வாங்கி சமைக்கும் னு தோணிச்சி " உங்களுக்கு ஏன்மா இந்த வேலை . நம்ம

வீட்லதான் இவ்ளோ வேலைக்காரங்க இருக்காங்க இல்ல அப்புறம் ஏன் நீங்க பண்றீங்க ? உங்களுக்கு இந்த சமையல் வேலைல எல்லாம் interest

இல்லதானமா ?

'அன்பு கணவன் , மகனின் தேவைகளை விழுந்து விழுந்து கவனிப்பவர். அவர்களுக்கு என்ன பிடிக்கும் அனைத்தையும் சமையல்காரர்களிடம்

கூறி சமைக்க சொல்லுவார். ஆனால் சமையல் அவருக்கு சுத்தமாக வராது. ஏனென்றால் அவர் வளர்ந்த விதம் அவ்வாறு. வீட்டிற்கு ஒரே

மகள்.செல்வ செழிப்பில் வளர்ந்தவர் ஆயினும் அந்த கர்வம் எதுவும் இல்லாதவர். கணவன், மகன் என்றால் அவர்களுக்காக எதையும் செய்வார்.

சமைப்பது மட்டும் அவருக்கு வரவில்லை. ஆயினும் இருவருக்கும் பரிமாறுவது இவர் கையால் தான்.

அரவிந்த் கேட்டவுடன் என்ன கூறவென்று யோசித்தவர் இப்போ எனக்கு சமையல் பண்ணனும் னு ஆசையா இருக்கு. சும்மாவே நோயாளி

மாதிரி எவ்ளோ நேரம் இருக்கிறது பா. அதுதான் கொஞ்சம் சமைக்க கத்துக்கலாம் னு தோணுது .

'சரி மா உங்கள வருத்திக்காம வெறும் hobby ஆ நெனச்சி பண்ணுங்க . திரும்பி கயலிடம் " அம்மா எங்க வெளிய போனாலும் அவுங்க கூட

போகணும் அவுங்கள கவனிச்சிக்கணும் . இதுதானா உன்னோட வேலை. அதை விட்டுட்டு மகாராணி மாதிரி தூங்குறது இதுவே முதலும்

கடைசியும்மா இருக்கனும் என்று கைகளை உயர்த்தி கூறினான். என்ன நடந்திருக்கும் என்று யூகித்த பாரதி " நைட் ல கால் ரொம்ப

வலிக்குதுனேன். கயல் தா என்னோட காலுக்கு மருந்து தடவி விட்டிட்டிருந்தா அப்படியே என் கால பிடிசிட்டே உக்காந்து தூங்கிட்டா .விடியற்

காலைல நான் பாத்துட்டு அவளை ரூம்க்கு போய் தூங்க சொன்னேன்" என்று பொய்யுரைத்தாள் . அதுக்கு போய் ஏன் பா கயலை திட்டுற." தன்

மகள் அழுவதை அவரால் தங்கி கொள்ள முடியவில்லை . அதை வெளிப்படையாய் காட்டவும் முடியவில்லை . அரவிந்த் எதுவும் கூறாமல்

சென்றுவிட்டான். அவன் சென்ற பின் , அன்பு கயலின் கண்களை துடைத்து அழாதமா என்னாலதா தம்பி உன்ன திட்டிட்டான். நீ

தூங்கிட்டிருக்கியேனு நான் அப்டியே போய்ட்டேன் .

" இல்லமா தப்பு என் பேர்லதா நான் இவ்ளோ நேரம் தூங்கிருக்க கூடாது. நாளைல இருந்து சீக்கி ரம் எந்திரிக்கிறேன் மா " கயல் உன்னோட

நிலைமை எனக்கு புரியுது. நீ உன்னோட அம்மா வ நெனச்சி நைட் எல்லாம் அழுத்துருப்ப , என்று நேரில் பார்த்தவரை போல் கூறிய அன்பை

பார்த்து பாரதி அதிர்ச்சியடைந்தாள்.

நானும் ஒரு தாய்தானே மா எனக்கு தெரியும். நீ அழுதா உன் அம்மா சந்தோஷப்படுவாங்களா? அவுங்களும் அழுவாங்க. என் பொண்ண விட்டு

...........போய்ட்டேனேன்னு ( இதை கூறும் பொழுது பாரதியால் அழுகையை அடக்க முடியவில்லை. )!!!!!!!!!!!!! அவுங்க சந்தாஷப்படனுனா அது

உன் கைல இருக்கு. நீ சந்தோஷமா இருக்கனும்மா.....உன்ன அவுங்க சந்தோஷமா இருக்க வைப்பாங்க .


கயலுக்கு அரவிந்தின் வார்த்தைகள் சுட்டெரிந்த போதும் அன்புவின் வார்த்தைகள் அவளுக்கு ஆறுதலை கொடுத்தது. பாரதி தன் மகளுக்கு

விருப்பமானதை சமைப்பதற்காக தான் மார்க்கெட் சென்றதே. அன்புவிற்கு சமைக்க வராது . ஆனால் பாரதி சமையல் கலையில் கைவந்தவர்.

அவருக்கு வீட்டில் சமையல்காரர்கள் சமைப்பது பிடிக்கவில்லை. தன் மகளுக்கு பிடித்த இறால், மட்டன் மற்றும் கீரை வகைகள்

அனைத்தையும் வாங்கினார். அவளின் மனதை மாற்ற " கயல் நான் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன் . நீ எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?

என்ன மா பண்ண முடியுமானு கேக்கறீங்க ? பண்ணுனு சொன்னா பண்ணப்போறேன் "


ஆவலுடன் இருவரும் சமையல் அறைக்குள் நுழைந்தனர். அங்கே veg தனி பகுதியாகவும் non -veg தனி பகுதியாகவும் இருந்தது. முதலில்

மகளுக்கு பிடித்தது மட்டும் செய்ய எண்ணியவர் சந்தேகம் வரக்கூடாது என்று சமையல்காரரிடம் பிரகாஷ் மற்றும் அரவிந்த்கு பிடித்த உணவை

பட்டியலிட சொன்னார். மகளுக்கான உணவை தயார் செய்த பின் அரவிந்த்க்கு பிடித்த நண்டு வறுவல், புதினா துவையல் அதன்பின் இளநீர்

பாயசம் , பிரகாஷ்க்கு பிடித்த உணவை சமைக்கும் போது தங்கள் திருமண வாழ்க்கை புதிதில் அவருக்காக விரும்பி சமைத்த அனுபவம் கண்

முன் வந்தது. மட்டன் வறுவல் அவருக்கு பிடித்தமான உணவு. அதை சமைத்தார் விரும்பியும் விரும்பாமல் ....கடமைக்காக!!!


உணவை உண்ண அனைவரையும் அழைத்து வர சொன்னவர் தன் கைகளால் அனைவருக்கும் பரிமாறினார்.

அவர் hospital லில் இருந்து வந்தபின் இன்று தான் உணவு பரிமாறுகிறார். கயலை அங்கு உக்கார அழைத்தார். கயலுக்கு அரவிந்த் முன்

சாப்பிடுவது விருப்பமில்லை. மறுபடியும் ஏதாது கூறிவிட்டால் .. நாவில் கொடுக்கை வைத்திருப்பான் என்று எண்ணியவள் அம்மா உங்க

பேமிலில இருக்கிறவுங்க முதல்ல சாப்பிடட்டும் நான் அப்புறம் வரேன் என்றாள் . அன்பு விடுவதாய் இல்லை. தன் மகளின் உரிமையை

நிலைநாட்ட விரும்பினார். எப்படியோ வரவைத்துவிட்டார். " உக்காருமா ! அரவிந்தின் கண்களில் கோபம் தெரிந்தது . அம்மா என இவளுக்கு

இவ்ளோ importance குடுக்கணும். நடிச்சே ஏமாத்துறா ? அவள் யார் முகத்தையும் நோக்கவில்லை .அவளுக்கு தெரியும் அரவிந்த் தன் மேல்

கோபமாக இருக்கிறான் என்பது. தன் மனைவி பரிமாறியதை உண்ண ஆரம்பித்தவர் இதே கைப்பக்குவத்தை தான் ஏற்கினவே உண்டிருப்பதாக

நினைவுபடுத்தி பார்த்தார் . அதற்கு மேல் அவரால் உண்ண முடியவில்லை. அவரின் முக பாவத்தை வைத்து பாரதி தெரிந்து கொண்டார்.

'பரவாயில்ல என்ன மறந்தாலும் என் கையால சாப்பிடத மறக்கல '. என்று நினைத்தவர் என்னாச்சி ஏன் நல்லா இல்லியா ? ஏன் எந்திரிக்கிறீங்க

? இல்ல சாப்பாடு நல்லா இருக்கு நீ எப்படி இப்படி நல்லா சமைக்க கத்துகிட்ட ? அது..................???.youtube பாத்து கத்துக்கிட்டேன் . நல்லா

இருக்குன்னு சொல்றீங்க ஏன் வாயில வச்சவுடனே எழுந்துடீங்க ? சாப்பிடுங்க என்று கையை பிடித்து அமர்த்தினார். அரவிந்தும் அம்மா

இவ்ளோ அருமையா சமைச்சிருக்கீங்க முதல் தடவ சமைச்ச மாதிரி இல்ல . உண்மைய சொல்லுங்க ஹோட்டல் ல ஏதாது வாங்கிட்டு

வந்தீங்களா? ஒரு புன்னகையே அன்புவிடம் இருந்து வந்தது. சிறிது நாட்களாகவே தன் தாய் தன்னிடம் ஒரு ஒதுக்கம் காட்டுவதை அவன்

உணர்ந்திருந்தான். அதுவும் இந்த ஹார்ட் அட்டாக் வந்த பின்பு. எதுவும் கேட்டு அவரை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டான்.

இன்றும் அதை உணர்ந்தான். இதுவே பழைய அன்பு வென்றால் மகனின் பேச்சிற்கு கிண்டலாக எதிர் பேச்சு பேசுவார்.

கயலிற்கு தன் தாயின் சமையலை உண்பது போன்ற உணர்வு. 22 வருடங்களாக உணவு கொடுத்த கையின் பக்குவம் எப்படி மறப்பாள் .அந்த

நினைவுகளில் இருந்து மீண்டவள் எப்படி இவுங்க சமைக்கிறது என் அம்மா சமைக்கிற மாதிரி இருக்கு? இவுங்களுக்கும் என் அம்மாவுக்கும்

என்ன சம்மந்தம் இருக்கு? இவுங்க பேச்சிலும் என் அம்மாவ உணர்றேன் . சமையலிலேயும் உணர்றேன். எப்படி இது சாத்தியம் . என்று

யோசித்தவளின் யோசனையை கலைத்தது அன்புவின் குரல் " என்ன யோசனை கயல், சாப்பிடுமா ? ம். சரி மா. எல்லோரும் திருப்தியுடன்

உண்டனர் பிரகாஷ் ஒருவரை தவிர.
 

Sponsored

Advertisements

Top