• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

CHIPPIKUL MUTHU- 8(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

juliyana

நாட்டாமை
Joined
Sep 22, 2018
Messages
87
Reaction score
197
Location
chennai
பெங்களூருலிருந்து அவசரமாக flight ஏறியவன் வேகமாக மருத்துவமனை உள்ளே நுழைந்தான். பிசினஸ் விஷயமாக சென்ற வேலை

முடிவதற்குள் ப்ரகாஷிடம்இருந்து அழைப்பு வந்தது. அன்புவிற்கு திடீர் நெஞ்சு வலி வந்ததால் மருத்துவனையில் சேர்த்திருப்பதாக

கூறியவுடன் புறப்பட்டு வந்துவிட்டான். அறை வாயிலின்முன்னே நின்று கொண்டிருந்த ப்ரகாஷிடம், "Dad ! அம்மா எப்படி இருக்காங்க? நான்

கெளம்புறப்போ நல்லா தானே இருந்தாங்க. திடீன்று என்ன ஆச்சு? "

உன் கல்யாண விஷயம் பத்தி பேசிட்டிருந்தோம். திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னா ...உடனே இங்க கூட்டிட்டு வந்துட்டேன். டாக்டர் ஒன்னும்

பயப்படுறமாதிரி இல்ல. ஸ்ட்ரெஸ் னால வந்துருக்கலாம் னு சொன்னாங்க. எதுக்கும் ஈசிஜி எடுத்துடலாம் னு சொன்னாங்க. அதுதான்

பாத்துட்டு இருக்காங்க. எனக்கு வேற கொஞ்சம் பதட்டமாஇருந்துதா ...அதுனால தான் உனக்கு கால் பண்ணி வரச்சொன்னேன். நீ பக்கத்துல

இருந்தா எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்பா ....

Dad அம்மாக்கு ஒன்னும் ஆகாது ..கவலைப்படாதீங்க. ..சரி நீங்க ஏதாவது சாப்டீங்களா ? ....இல்லப்பா ..சரி வாங்க நம்ம கான்டீன் போவோம்

என்று விட்டு திரும்பியவன்அப்போது தான் அங்கு ஓரத்தில் நின்று கொண்டிருந்த கயலை கண்டான். ..

ம்கூம் ....அம்மாவை பாத்துக்கோ....வந்துட்றோம் என்று விட்டு சென்றான்.

சரி சார் ..

சிறிது நேரத்தில் வந்தவன் அவளிடம் ஒரு கவரை நீட்டினான். அதில் அவளுக்கு coffee மற்றும் இட்லி இருந்தது. " நீ இந்த பெஞ்ச் ல உக்காந்து


சாப்பிடு ..

அவளும் அன்று காலையில் இருந்து உணவருந்தவில்லை அன்புவிற்கு 10 மணியளவில் நெஞ்சு வலி வந்தவுடன் அவர்களுடன்

மருத்துவமனை வந்தவள் .அரவிந்த்சொன்னதும் சரி சார் என்று அங்குள்ள பெஞ்சில் அமர்ந்து உண்ண தொடங்கினாள். சாப்பிட ஆரம்பித்த

பிறகு தான் அவளுக்கே தெரிந்தது, எவ்ளோ பசியில் இருக்கிறாள்என்பது. மனதிற்குள் அவனுக்கு நன்றி கூறினாள் ..

அன்புவை சோதித்த டாக்டர் அவருக்கு பயப்படும் படியாக எதுவும் இல்லை. ஸ்ட்ரெஸ்னால நெஞ்சு வலி வந்திருக்கலாம். கவனமாக

பாத்துக்கோங்க. முக்கியமாகடென்ஷன் ஆகாம பாத்துக்கோங்க என்று கூறி


வீட்டிற்கு அழைத்து போகும் படி கூறினார்.

வீட்டிற்கு வந்தபின் அரவிந்த் அன்னையிடம் அம்மா எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க..நான் தான் marriage பண்ண ஒத்துக்கிட்டனே அப்புறம் எதுக்கு

டென்ஷன் மா...

தெரியல பா ..உன் கல்யாணத்த பாக்காமலே போய்டுவேனோனு ஒரு பயம் வந்துடிச்சி....அம்மா! என் இப்படி எல்லாம் பேசுறீங்க. ..

நேத்து ஒரு கனவு கண்டேன் அரவிந்த் அதுல எமன் மாதிரி கம்பீரமா ஒருத்தர் வந்தாரு. உனக்கு குடுத்த time முடிஞ்சி போயிடிச்சு. ...உன்னோட

கடமையெல்லாம்முடிச்சிட்டியானு என்ன பாத்து கேட்டாரு...அது கனவு மாதிரி தெரில ...அதுலருந்து தான் எனக்கு இப்படி ஆய்டிச்சி .. ஆனாலும்

அவர் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில்தெரில்ல. ..நான் என்னோட கடமையை முடிச்சிட்டேனா ? ....இல்லியே உனக்கு ஒரு கல்யாணம் பண்ணா

தான் என் கடமை நிவர்த்தி ஆகும் .. என்ன மா....இப்படி எல்லாம்பேசுறீங்க....அது வெறும் கனவு.. நீங்க என்னைப்பத்துன நினைப்புல

இருக்கிறதால அந்த மாதிரி கனவு வந்துருக்கும். .

ம்...எனக்கு அப்படி தோனலப்பா. ..அதுக்கு முன்னாடி உன் கிட்ட ஒரு விஷயம் உனக்கு எந்த மாதிரி பொண்ணு மனைவியா வரணும் னு நீ

ஆசைப்படுற? ....அம்மா ! நீங்க இப்போ இருக்கிற நிலைமைல எனக்கு இந்த மாதிரி நினைப்பெல்லாம் எதுவும் தோணல .........

இல்ல பா ... உன் மனசுக்கு ஏத்தமாதிரி ஒரு பொண்ணு பாத்தா தான் உன் லைப் நல்லா இருக்கும்...உன் மனசுல இருக்கிறத open ஆ என்கிட்ட

சொல்லு.

அவன் அன்னை இவ்வாறு கூறியதும் அவன் மனதிற்குள் கயலின் உருவமே வந்து போனது. ..அவனையும் அறியாமல் புன்னகைத்தான். அந்த

புன்னகையின் அர்த்தம் பாரதிக்கு புரிந்தது. ...

நான்............ஒன்னு சொன்னா தப்பா நெனைக்க மாட்டியே ...

என்ன மா..... இப்படி எல்லாம் பேசுறீங்க... நான் உங்க புள்ள ...நீங்க என்ன நெனைக்கிறீங்களோ சொல்லுங்க...


நம்ம கயல் மாதிரி இந்த குடும்பத்துக்கு ஒரு பொண்ணு அதாவது , உனக்கு ஒரு மனைவி கிடைச்சா நல்லா இருக்கும்..

அவர் இவ்வாறு கூறியதும் அவன் கண்கள் ஆச்சரியத்தை காட்டின ...

என்ன அந்த பொண்ணுக்கு வசதியில்லை. மத்தபடி நல்ல பொண்ணு. ..

ம்.....உங்க அப்பா மாதிரி நீயும் நமக்கு சமமா wife வேணும் னு எதிர்பார்ப்ப ...நம்ம ஸ்டேட்டஸ்க் கு ஏத்த மாதிரி பொண்ணை விட உனக்கு ஏத்த

மாதிரி கிடைச்சா உன் லைப் நல்லா இருக்கும் னு எனக்கு தோணுது. ....

"அவள் தான் எனக்கு சரியானவனு உங்களுக்கு தோணுதுன்னா அவளையே எனக்கு marriage பண்ணி வைங்கம்மா " என்று தன் மனதில்

உள்ளதை பட்டென்று உடைத்தான் ...

பாரதி மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார். அவரின் கண்களில் சந்தோஷத்தின் வெளிப்பாடாக கண்ணீர் வந்தது. அரவிந்த் மனஓட்டம்

ஓரளவு பாரதி அறிந்ததே....ஆனால் இவ்வளவு எளிதில் ஒத்துக்கொள்வான் என்று நினைக்கவில்லை.....

என்ன மா.....ஏன் அழுறீங்க....." இல்ல பா....இது.....!!!! உன் வாழ்க்கை கயலை கல்யாணம் பண்ணா நல்ல இருக்கும் னு தோணிச்சு. அதுதான்

சொன்னேன். உனக்கு இதில் பரிபூரண சம்மதம் தானே ?

என் அம்மா எது பண்ணாலும் எனக்கு ஒகே தான்....!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
JJ டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜூலியானா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top