• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chippikul muthu- 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

juliyana

நாட்டாமை
Joined
Sep 22, 2018
Messages
87
Reaction score
197
Location
chennai
தன் அறையில் இருந்த படி யோசித்து கொண்டிருந்த அன்புக்கரசி, வாயிலில் அரவம் கேட்கவே திரும்பி நோக்கினார். பிரகாஷ் தான் நின்று

கொண்டிருந்தது. ..ம்...அன்பு நீ சொன்னது பத்தி யோசிச்சேன்..அந்த சித்தர் கேட்க சொன்னாருன்னு சொன்னியே அதுப்படி, கயல் கிட்ட எந்த

ஊருனு கேட்டேன் .அப்புறம் தான் தெரிஞ்சுது எங்க நெருங்குன சொந்தத்துல ஒருத்தர் ஒரு ஏழை பொண்ணை கல்யாணம் பண்ணாரு..

அப்புறம் கொஞ்சம் பிரச்சனை வந்ததுல பிரிஞ்சிட்டாங்க...கயல் அவுங்க பொண்ணுதான். அவுங்க இப்போ இறந்துட்டாங்க...எனக்கு ரொம்ப

நெருங்குனவுங்களோட பொண்ண நம்ம அரவிந்த்க்கு கல்யாணம் பண்ணி குடுக்கிறதுல எனக்கு எந்த மறுப்பும் இல்ல...ஆனா அரவிந்த்

என்ன சொல்லுவானு தெரில்ல....நீ ................பேசுனா நிச்சயம் சம்மதிப்பான் ..

அவன் கிட்ட பேசி இதுக்கு சம்மதம் வாங்க வேண்டியது உன் பொறுப்பு....அப்புறம்.....இந்த கல்யாணம் 2 நாள்ல நடக்கணும் னு

சொன்னியே? அதுனால சீக்ரம் ஏற்பாடு பண்ணனும்....

இதை கேட்ட பாரதிக்கு மனதில் சந்தோசம் இருந்தாலும் வெளியே காட்டவில்லை....மனதிற்குள், " உன் மகள் என்ற அங்கீகாரத்தை விட

,என் பொண்ணோட உரிமையை நான் அவளுக்கு கொடுத்துட்டேன்...இதுவே எனக்கு போதும்...." என்று நினைத்து கொண்டாள் .


கயல் இந்த வீட்டுக்கு மருமகளா வரதுல எனக்கும் சந்தோஷமா இருக்கு...நல்ல பொண்ணு ஆனா நீங்க ஸ்டேட்டஸ் பாப்பீங்களே

........சித்தர் சொன்னதுக்கு ஒதுக்குவீங்களானு தான் எனக்கு பயமா இருந்துது...




அதுக்கென்ன என்னோட சொந்தக்காரங்க...அந்த தகுதி ஒண்ணே கயலுக்கு போதும்..என்றவர் அங்கிருந்து சென்றுவிட்டார். ..இப்போகூட

உன்னோட பொண்ணுன்னு சொல்லத்தோணலை இல்ல...ஏன் உன் பொண்டாட்டி உடம்புக்கு ஏதாது ஆய்டும் னு பயம்....இல்ல

..வெறுப்புடன் மனதிற்குள் நினைத்தவர் கயலை நோக்கி சென்றார்.

சமயலறையில் அன்றைய உணவு அட்டவணையை மணியிடம் கூறிக்கொண்டிருந்தவள் , கயல் என்ற அழைப்பில் திரும்பினாள். "

என்ன அம்மா!"

உன் கிட்ட கொஞ்சம் பேசணும்...மேல வா...

இருவரும் மொட்டை மாடிக்கு சென்றனர்....

" சொல்லுங்கம்மா" கயல் உங்க வீட்ல யாரது பெரியவுங்க இருந்தா .........இத பத்தி அவுங்க கிட்ட பேசியிருப்பேன்............உனக்கு நான்

அம்மா மாதிரி இருந்து ஒரு நல்லது பண்ணனும் னு நெனைக்கிறேன்...

கயலுக்கு என்ன பேச வருகிறார் என்று புரியவில்லை.....அம்மா நீங்க என்ன சொல்றீங்கனு புரியல...


ம்...நேரடியா விஷயத்துக்கு வரேன்....அரவிந்த் என் பையன் இல்ல...இவரோட தங்கச்சி பையன்...அவுங்க அப்பா, அம்மா அவன் பிறந்த 6

மாசத்திலேயே accident ல இறந்துட்டாங்க...

இது கேட்டு கயல் அதிர்ச்சியானாள். பெற்றவர்கள் இல்லாதது எவ்வளவு பெரிய துயரம் என்று சமீபகாலமாக தான் அவளுக்கு

தெரியும்...தந்தையின் அரவணைப்பு இல்லாவிட்டாலும் அந்த குறை தெரியாமல் பாரதி வளர்த்தார். அவர் இறந்த பின்தான் அந்த

துக்கத்தை அனுபவித்தாள்...ஆனால் பிறந்தவுடன் தாய், தந்தை இல்லாமல் இருப்பது எவ்வளவு கொடுமை என்று மனதார அரவிந்த் ஐ

நினைத்து பரிதாபம் கொண்டாள் ..



அவனை இவரு அவர் பிள்ளையை நினைத்து தான் வளத்தாரு ...இப்போ அவனோட கலையான பேச்சு வீட்ல நடக்கிற சமயத்துல தான்

எனக்கு நெஞ்சு வலி வந்துடிச்சி....

அதுக்கப்புறம் தான் நீ இங்க வந்த....உன் கிட்ட எப்படி சொல்லனு தெரில. கடவுள் அரவிந்த்க்குனு படைச்ச பொண்ணு நீ தான்....சித்தர்

கூறியதாக தன் கணவனிடம் கூறிய அனைத்து கட்டுக்கதைகளையும் காயலிடமும் கூறினாள் .. உன்ன கல்யாணம் பண்ணாதான் இந்த

வீட்ல இருக்கிறவுங்களுக்கு நல்லதுன்னு சொன்னருமா.....அதுவும் 2 நாள்ல நடக்கணும் னு சொன்னாரு கயல் ...இந்த வீட்ல

இருக்கிறவுங்க உயிர் உன் கைல தான் இருக்கு......மா.......

கயல் பேச்சற்று போனாள் .............கயல்! கயல் என்று பாரதி 2 முறை அழைத்த பின்னே நினைவுக்கு வந்தாள் .

கயல் உன்னோட அம்மா ............உனக்கு எது பண்ணாலும் நல்லதுக்குனு நீ நினைப்பியோ அதுமாதிரி நான் .....என்ன உன் அம்மா வா

நெனச்சி நான் எது பண்ணாலும் உன் நல்லதுக்குனு நீ ஏத்துக்கணும்....

அம்மா! என்னால முடியாது....நான் உங்க குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டேன்.....உங்க அளவுக்கு வசதியான இடமா பாத்து கல்யாணம்

பண்ணுங்க.....அதுதான் உங்களுக்கு நல்லது....

என் அம்மா கல்யாணம் பண்ணவர் ரொம்ப வசதியானவருனு என் பாட்டி சொல்லிருகாங்க....அவரால என் அம்மா பட்ட கஷ்டம் எல்லாம்

பார்த்து வளந்திருக்கேன்....அவரு நான் பொறக்குறதுக்கு முன்னாடியே என்ன விட்டுட்டு போய்ட்டாரு......என் அம்மா அடிக்கடி தனியா

உக்காந்து அழுவாங்க....அவுங்க கண்ண நான் துடைச்சிவிட்டுடே ஏன் மா அழுறீங்கன்னு கேட்பேன்.....அவுங்க சொல்லுவாங்க என்

நிலைமை உனக்கு வரக்கூடாதுன்னு....பணக்காரங்க கிட்ட ஒதுங்கியே இருக்கனும் னு சொல்லி சொல்லி வளத்தாங்க.....அவுங்க

வாழ்க்கைல என்ன நடந்ததுன்னு நான் அவுங்க கிட்ட கேட்டதில்லை.....என் பாட்டி கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன்...ஸ்கூல் ல மத்த பசங்க

அப்பா, அம்மா கூட வரப்போ நமக்கு மட்டும் அப்பா இல்லியே னு ரொம்ப ஏக்கமா இருக்கும்....ஆனா நான் வெளிய கட்டிகிட்டத்தில்ல

..ஏன்னா என் அம்மா வருத்தப்படுவாங்கனு......அவுங்க இருந்தப்பவே அவுங்க வருத்தப்படக்கூடாதுனு நெனச்சவ அவுங்க போனப்புறம்

அவுங்க பண்ணகூடாதுனு சொன்னவிஷயத்தை எப்படி பண்ணுவேன்...இதுவே உங்க பிள்ளை ஒரு ஏழையை இருந்தா ....நீங்க

சொன்னதுக்காக கல்யாணம் பண்ணிருப்பேன்.....ஆனா ஒரு பணக்காரர் நம்பி என் அம்மா ஏமாந்தது போதும்....நானும் ஏமாந்தனா

நாளைக்கு என் குழந்தையும் என்ன போல அனாதை ஆய்டும்.என்ன மன்னிச்சிடுங்க அம்மா.... உங்க குடும்ப நிலைமை எனக்கு

புரியுது.....ஆனா என்னோட வலிகளையும் என்னோட அம்மானு சொன்னீங்களே, அம்மாவா இருந்து புரிஞ்சிக்கோங்க .. என்று கூறிவிட்டு

கீழே வேகமாக இறங்கினாள் ..அவ்வளவு நேரம் அவள் கூறியதை பாரதி மட்டும் கேட்டுக்கொண்டிருக்கவில்லை..... balcony க்கு மகள்

செல்வதை பார்த்த பிரகாஷ் அவர்களின் பின்னாலே வந்து மற்றொரு வாயிலின் அருகே வெளியே நின்று கொண்டிருந்தார்.....அவள்

பேசியது அனைத்தும் அவரின் காதுகளை தீண்டி இதயத்தை கிழித்து சுக்கு நூறாக்கியது.... தான் செய்த பாவத்த்திற்கு பிராயச்சித்தம் ஏதும்

இல்லை என்பதை உணர்ந்தார்.....அதே சமயம் பாரதியும் உள்ளம் உடைந்து போனார்...தன் மகளிடம் தந்தை இல்லாத குறை தெரியாமல்

வளர்த்ததாகவே இதுவரை எண்ணினார். ஆனால் இப்போது தான் தெரிந்தது அவள் உள்ளுக்குள் அன்னைக்கு தெரியாமல்

,தெரியக்கூடாதென்று தன் உணர்ச்சிகளை காட்டாமல் இருந்தது.....தன்னுடைய வார்த்தைகளே தன் மகளுக்கு வேலையாய் மாறியதை

உணர்ந்தாள் ...எப்படி அவளை திருமணத்திற்க்கு ஒத்துக்கொள்ள வைப்பதென்று தெரியவில்லை ..தன்னுடைய அறைக்குள்

நுழைந்தவளின் சிந்தனை மகளை குறித்தே இருந்தது......


.............................................................................................................................................................................................................



இரவு 8 மணிக்கு வீட்டினுள் நுழைந்த அரவிந்த் நேரே சென்றது தாயின் அறைக்கு தான்....அவனுக்கு தன் தந்தை கயலை திருமணம்

செய்ய ஒத்துக்கொள்வாரா என்று சந்தேகமாகவே இருந்தது.....

உள்ளே சென்றவன் அம்மா ! Dad கிட்ட பேசிட்டிங்களா.... என்ன சொன்னாங்க....


உன் அப்பா சம்மதிச்சிட்டாரு......அவனுக்கு ஆச்சர்யம் தாளவில்லை ..எப்படிம்மா.................என்ன சொன்னீங்க ...

கயல் பூர்வீகம் பத்தி கேட்டப்போ தான் தெரிஞ்சுது....அவுங்க அப்பா உன் அப்பா வோட நெருங்கின சொந்தம் னு ..


ஒரு ஏழை பொண்ணை காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டாராம்...அப்புறம் அங்க அவரால இருக்க முடியலன்னு திரும்பவும் அவுங்க

அப்பா கிட்ட வந்துட்டாராம்....

உங்க அப்பா அவுங்க அம்மா பேரை ................கேட்டவுடனே நம்ம சொந்தகார பொண்ணுன்னு தெரிஞ்சிடுச்சி....அதுதான்

ஒத்துக்கிட்டாரு"என்று எந்த உணர்ச்சியும் இல்லாமல் கூறினார்.


அப்பா தான் ஓகே சொல்லிட்டாரே ! நீங்க ஏன் மா எதோ sad ஆஹ் இருக்கீங்க....

உன் அப்பா சரி சொல்லிட்டாரு ..ஆனா கயல் முடியாதுனு சொல்லிட்டா....

என்ன?
உன் அப்பா கிட்ட இன்னும் ரெண்டு நாள்ல உனக்கு கல்யாணம் பண்ணனும் னு சொல்லிட்டேன்....

ஏன் மா 2 நாள்ல ...

உன்னோட ஜாதகத்துல உன்னக்கு கல்யாண யோகம் முடிய இன்னும் 2 நாள் தான் இருக்கு....அதுக்கப்புறம் 5 வர்ஷம் கழிச்சி தான் உனக்கு

கல்யாணம் நடக்குமாம் பா..." என்று மறுபடியும் ஒரு கட்டுக்கதை விட்டார்.


சரி மா...ஆனா அவ ஒத்துக்கலியே.....
ம்...எனக்கும் என்ன பண்ணனு தெரில....நான் ஏதாது பண்றேன் ....கவலை படாத.. நீ போய் தூங்கு...ம்...சரி மா..



அரவிந்த் மனதிற்குள் அவ எப்படி என்ன வேண்டான்னு சொல்லலாம்.....கல்யாணம் பண்ண சொன்னா பண்ண வேண்டியது தானே

.....அதென்ன பண்ண முடியாதுனு சொல்றா....திமிரு பிடிச்சவ....

உன் திமிரை எப்படி அடக்குறேனு பார் என்று உள்ளுக்குள் சபதம் எடுத்து கொண்டான்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜூலியானா டியர்
 




Last edited:

Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Dai aravinda sollama kollama kayal kku thali katirata?:unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top