Chocolate boy - 05

#1
சாக்லேட் பாய் – 05

ஹர்ஷாவிற்கு கால் தரையில் இல்லை. காதலிப்பது எவ்வளவு மகிழ்ச்சியோ அதே போல காதலிக்கபடுவதும் மகிழ்ச்சியான மிக மிக இனிமையான விஷயம் அல்லவா? தர்ஷினியின் கணினியை ஆராய்ந்த பின் ஹர்ஷா அத்தகைய இனிமையை தான் அனுபவித்து கொண்டிருந்தான்.

தர்ஷினியை காண துடித்த மனதிற்கு இந்த ஒரு நாளுக்கு மட்டும் 48 மணி நேரம் இருக்குமோ என்பது போல நேரம் காலில் கல்லை கட்டிவிட்டது போல ஊர்ந்தது.

மறுநாள் தர்ஷினி அலுவலகத்திற்கு வந்தாள். கலக்கமும் படபடப்புமாக உள்ளே நுழைந்தவள் வழக்கம் போல் தலையை நிமிர்த்தாமல் ஹர்ஷாவின் குரலை தேடியபடி வந்தாள். ஹர்ஷாவின் மனநிலையை அவளால் யூகிக்க முடியவில்லை. அவனும் தன் மேல் காதலாகி இருப்பான் என நினைக்க அவளுக்கு தைரியமில்லை. ஏற்கனவே மற்றவர்களோடு கிண்டலும் கேலியுமாக பேசிக் கொண்டிருப்பான்...... தற்போது தனது காதலை என்னவென்று சொல்லி வைத்திருக்கிறானோ தெரியலயே என மனதிற்குள் புலம்பியவளுக்கு அவன் குரல் கேட்காததில் வருத்தம் சூழ்ந்தது.

நம் நாயகன் தான் நாயகியின் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்துக் கிடக்குறானே.... யாருடனும் பேச விழையாதவன் தன்னவள் உள்ளே நுழைந்ததிலிருந்து அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் குரல் கேட்காமல் அவள் தவிப்பதை புரிந்தவன், ரீனா.... ரீனா....” என அழைத்தான்.

“ஓ.... இவன் இங்கே தான் இருக்கானா? சார் எப்பவும் கும்பலாக தானே அரட்டை அடித்துக் கொண்டிருப்பார். இன்னைக்கு என்ன ஆச்சு?” என அவன் குரல் கேட்ட உற்சாகமும் யாரிடம் என்ன சொன்னானோ என்ற பதட்டத்தோடும் மனதிற்குள் வினவினாள்.

அவனது அழைப்பிற்கு திரும்பி பார்த்த ரீனா, “ என்ன ஹர்ஷா?” என்றாள்.

“ நான் இங்க தான் இருக்கேன்” என்றான் ஹர்ஷா.

“நான் உன்னை தேடவேயில்லையே ஹர்ஷா?” என்றாள் அவள் வியப்பாக.

“தேடுன மாதிரி இருந்துச்சு”

“தேடியது நான்.... தேடாதவ கிட்ட அட்டனஸ்ஸா?” மனதிற்குள் வாயடித்தபடி தன் இருக்கையில் அமர்ந்தாள் தர்ஷினி.

“ அப்படியே தேடினாலும் எதிரில் இருக்கும் நீ கண்ணுக்கு தெரியமாட்டியா? என்னடா ஆச்சு உனக்கு?” என்றாள் ரீனா.

“ ஏய்..... என்னை டா போட்டு பேசாத ரீனா” ஹர்ஷா பொரிந்தான்.

“ நீ கூட தான் என்னை டி போட்டு பேசுற....”

“இனிமே அப்படி கூப்பிட மாட்டேன். நீங்களும் யாரும் என்னை டா போட்டு பேச கூடாது.”

“அட...அட..அட.... நம்ம சாக்லேட் பாய்க்கு எப்படி தீடீர் ஞானோதயம் வந்துச்சு” மனதிற்குள் அதிசயித்தாள் தர்ஷினி.

“ ஏன் இந்த தீடீர் மாற்றம்?” என வினவினாள் ரீனா.

“ஹூ...ம்.... எல்லாம் தீடீர் தீடீர் னு தானே நடக்குது. அதான்....”

“ஆஹா..... இவன் ஏதோ பொடி வச்சு பேசுற மாதிரி இருக்கே.... நம்மள பற்றி தான் சொல்றானா? ஒருவேளை.... ஒருவேளை நம்ம சிஸ்டமை திறந்து பார்த்திருப்பானா?” என எண்ணியவளுக்கு குப்பென வியர்த்தது.

“ என்னவோ ஆயிடுச்சு உனக்கு. உடனேல்லாம் மாற்ற முடியாது.... டிரை பண்றேன்” என்றாள் ரீனா.

ஹர்ஷா தர்ஷினியை தான் பார்த்துக் கொண்டே இருந்தான். இப்போ இதுக்கும் ஒரு மீம் போடலாம் னு நினைப்பியே? பட்... பேபி! இனி அப்படியெல்லாம் பண்ண முடியாது..... நேரடியா என்கிட்ட தான் வந்து வாயாடணும்” என மனதிற்குள் குதூகலித்தவன்,

என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி....
கட்டி புட்டாளே என்னை இறுக்கி....
மனச கட்டி போட மறந்தாளே.... அய்யோ.... அய்யய்யோ....

என பிடித்த பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் அவனது மனமறியாத தர்ஷினியோ, “ இவன் என்ன நம்ம கிட்ட எதுவுமே பேச மாட்டேங்குறான்? பாஸ்வேர்டு பற்றியும் ஒன்றும் கேட்கல அவனோட விருப்பத்தை பற்றியும் எதுவும் சொல்லல...ஹர்ஷா.... ஏன்டா என்னை இப்படி படுத்துற.... ” என குழம்பினாள்.

“ தர்ஷினி! இப்போ உடம்பு நல்லாயிடுச்சா?” அக்கறையாய் வினவினாள் ரீனா.

“ ம்.... பைன் ரீனா”

“அப்புறம் ஏன் இன்னும் டல்லா இருக்கே?”

“மனசுக்குள்ளே வைச்சிட்டு இருந்தா அப்படி தான் இருப்பா.... இன்னைக்கு உன்னை பேச வைக்கிறேன் தர்ஷி....” ஹர்ஷா தனக்குள் கூறியபடி அவர்களை கவனித்துக் கொண்டிருந்தான்.

“ நத்திங் ரீனா. நேற்று லீவ் போட்டதுனால இன்னைக்கு நிறைய வொர்க் சேர்ந்திருக்குமில்லையா. அதை தான் யோசிச்சிட்டு இருந்தேன்” என தர்ஷினி மழுப்பினாள்.

“ஓ....சரி.... டேக் கேர் தர்ஷினி” என்று விட்டு தன் வேலையில் முழ்கினாள்.
தர்ஷினி வேலையை தொடங்க தன் கணினி உயிர்பித்தாள். ரகசிய குறியீடாக ‘I LOVE HARSHA’ என அழுத்த, அது தவறான குறியீடென்றது.

“ அச்சச்சோ.... என்னாச்சு என் ஹர்ஷாவுக்கு” என பதறியவள் மறுபடியும் போட அது தவறென்றே கூறியது. நான்கைந்து முறை முயற்சித்தவள் அது திறக்காததில் சோர்ந்து போனாள்.

“ரீனா.... நேற்று யாராவது என் சிஸ்டமை ஓபன் பண்ணாங்களா?”

“ம்.... ஹர்ஷா தான் ஏதோ செக்கிங் வொர்க் பண்ணிட்டிருந்தான். ஏன் கேட்குற”

“இ...இல்ல.... மறுபடியும் என் சிஸ்டம் ஹேங் ஆயிடுச்சு. அதான்..... கொஞ்சம் நீ போய் சொல்றீயா?” என்றாள் கெஞ்சலாக.

“நோ....நோ.... நான் சொல்ல மாட்டேன். நேற்றே அவன் ரொம்ப பேசினான். நீயே போய் கூப்பிடு தர்ஷினி.”

“அய்யோ நானா....? நான் போட்டது பிடிக்காம தான் அவன் பாஸ்வேர்டை மாற்றி வைச்சிருக்கான். இதுல நான் போய் எப்படி பேசுறது” என மனதிற்குள் குமைந்தாள் தர்ஷினி.

“ நம்மாளு சிக்கிட்டா.... வாடி வா... என் செல்ல குட்டி” ஹர்ஷா ஆவலாய் அவளுக்காக காத்திருந்தான்.

தொடரும்......

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

- பர்வீன்.மை
 

Advertisements

Latest updates

Top