• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chocolate boy - 09

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
சாக்லேட் பாய் 09

தர்ஷினி சென்ற பிறகும் ஹர்ஷா அங்கேயே நின்றுவிட்டான். அவனுக்கு ஏனோ தர்ஷினியை தடுக்க தோன்றவில்லை . நீண்ட நேரத்திற்கு பிறகே தன்னிலை உணர்ந்தவன் ஹாலிற்கு வந்தான். சற்று முன்பு சோபாவில் அமர்ந்து தர்ஷினி சிரித்தபடி பேசியது நினைவிற்கு வந்தது. எவ்வளவு மகிழ்ச்சியாக இருவரும் இங்கு வந்தோம். அவனுக்கு யாரை குற்றம் சொல்வது என புரியவில்லை. அவள் செல்லும் போது தடுக்காமல் விட்டது தப்போ என தோன்றியது ஆனால் அதே நேரம் அவள் தன்னை வேவு பார்த்திருக்கிறாள் என எண்ணும் போது மனம் கொதித்தது. எப்படி யோசித்தாலும் அவள் செய்தது சரியென அவனால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அயர்ந்து போய் சோபாவில் சாய்ந்தவன் எப்போது தூங்கினானோ தெரியவில்லை.


வீட்டிற்கு வந்த தர்ஷினிக்கு அனைவரிடமும் சகஜமாய் பேச பெரும் பாடாக இருந்தது. கலங்கிய கண்களையும், வாடிய முகத்தையும் தன் செயற்கை சிரிப்பால் மறைத்து கொண்டிருந்தாள். இரவு உணவிற்கு பின் தன் அறைக்குள் வந்தவள் இரவு முழுவதும் அழுதே கரைந்தாள். “வேவு பார்த்தியா? இன்னொருத்தன் பின்னாடி போவியா? “ என்ற ஹர்ஷாவின் கேள்விகள் தீயாய் அவள் இதயத்தை சுட்டது. அனைத்து பெண்களிடம் சிரித்து சிரித்து ஓயாமல் பேசுபவன் தன் பேச்சை முழுதாக கூட கேட்காமல் போனது அவளுக்கு பெருத்த ஏமாற்றமாகவே இருந்தது.

மறுநாள் காலை தர்ஷினி அலுவலகத்திற்கு கிளம்பினாள். ஒரு நாள் முன்னாடி விடுப்பு எடுத்திருந்தமையால் தர்ஷினியால் அன்று விடுப்பு எடுக்க முடியவில்லை. அவளுக்கு ஹர்ஷாவை எதிர்கொள்ளும் சக்தி சற்றும் இல்லை. அவனுக்கு தன் காதல் மேலேயே நம்பிக்கை இல்லாத போது, தான் சொல்ல நினைக்கும் விளக்கத்தை மட்டும் நம்ப போகிறானா? என மருகினாள்.

அலுவலகத்திற்குள் நுழைந்ததும் வழக்கம் போல் ஹர்ஷாவின் குரலை தேடினாள். அவனது குரல் செவிக்கு கிட்டவில்லை. நிமிர்ந்து அவனது இருக்கையை பார்த்தாள். வெறுமையாக இருந்தது. இரண்டு நாட்கள் கழித்தே ஹர்ஷா வந்தான். அந்த இரண்டு நாட்களும் இரண்டு யுகங்களாய் கழிந்தது தர்ஷினிக்கு. மூன்றாம் நாள் காலை தாமதமாகவே அலுவலகம் வந்தவன் யாரிடமும் பேசாமல் விறுவிறுவென வந்து தன் இருக்கையில் அமர்ந்தான். மறந்தும் தர்ஷினியின் புறம் திரும்பவில்லை. ஆனால் தர்ஷினியோ அவன் நுழைந்ததிலிருந்து அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள். கோபமாக கூட தன்னை பார்க்கவில்லையே என வாடி போனாள்.

“ உலகத்தில் இல்லாத அதிசயமா ரெண்டு நாள் லீவ் போட்டுட்ட ஹர்ஷா? நீ இன்னைக்கும் லீவ் போட்டுட்டியோ னு நினைச்சேன் டா?” என்றபடி வந்தாள் சாரு.

“ லீவ் போட்டிருப்பேன் தான் சாரு. ஆனா நான் ரெண்டு நாளாக உன் கிட்ட சரியா பேசல னு அன்னைக்கு பீல் பண்ணேயில்ல.... அதனால தான் வந்துட்டேன்” என்றான் சற்று உரக்க. அவன் தன்னை தான் சீண்டுகிறான் என தர்ஷினிக்கு புரிந்தது. பெரும் முயற்சி செய்து முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது அமர்ந்திருந்தாள்.

“ஆஹா.... ஆஹா.... என்னடா ஆச்சு ஹர்ஷா உனக்கு! காலையிலேயே அசத்துறே....” என சாரு பதிலுக்கு வழிய,

“ அப்போ நீ என்னை பார்க்க வரலியாடா?” என ரீனா போலியாய் அலுத்து கொண்டாள்.

“ அவன் எதுக்கு உன்னை பார்க்க வரணும். அவன் வந்ததே எனக்காக தான்” என ரம்யா இடையில் புகுந்தாள். அங்கே நடக்கும் நாடகத்தில் தர்ஷினிக்கு காதில் புகை வந்தது. ஹர்ஷாவிற்கு அவர்கள் பேசுவது சற்று உறுத்தலாக தான் இருந்தது. இதுவே மற்ற நேரமாக இருந்திருந்தால் அவனும் உடன் சேர்ந்து லூட்டி அடித்திருப்பான்.

“ ஏன்மா.... உங்களுகெல்லாம் ஹர்ஷா மட்டும் தான் கண்ணு தெரியுமா? நாங்களாம் என்ன பாவம் பண்ணோம்?” என ஆண்களின் பிரதிநிதியாய் கேட்டான் தேவா.

“ ஹர்ஷா தான் குட் பாய்.... எங்களுக்கு அவன் சாக்லேட் பாய் தெரியுமா” என ரம்யா வேண்டுமென்றே வெறுப்பேற்ற, அவள் சாக்லேட் பாய் என்றதும் தன்னையறியாமல் ஹர்ஷா தர்ஷினியை பார்த்தான். கலங்கிய விழிகளோடு, அவள் அவனை ஆழ்ந்த பார்வை ஓன்றை பார்த்தாள்.

“அதென்ன சாக்லேட் பாய்?” என்றான் தேவா புரியாமல்

“ பார்த்தயில்ல.... ஹர்ஷா எவ்ளோ ஸ்மார்ட்டா இருக்கான்..... எவ்ளோ ஸ்வீட்டா பேசுறான். அதனால தான் அவன் சாலேட் பாய். அவனை எங்க எல்லோருக்கும் பிடிக்கும். அவன் எங்க எல்லோருக்கும் சொந்தம்” என எக்கச்சக்கமாக உளறி கொட்ட, தன்னவனை ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடியதில் பாவையின் மனம் அனல் மேலிட்ட புழுவாய் துடித்தது.

“ஹோ... ஓ.கே ரம்யா ஹர்ஷா உனக்கு சாக்லேட் பாய்னா..... அப்போ நான் தானே உனக்கு லவ்வர் பாய்?” என தேவா கண்சிமிட்ட, இதை சற்றும் எதிர்பாராத ரம்யாவோ பிரமிப்பில் உறைய,” என்னடா இது! இப்படி சாடார் னு ப்ரபோஸ் பண்ணிட்ட?” என வாயை பிளந்தாள் ரீனா.

அவர்கள் பேச்சு திசை மாற, அவர்களோடு சேர்ந்து சிரித்து கொண்டிருந்தவன் திரும்பி தர்ஷினியை பார்த்தான். என்ன தான் ஓப்பனை செய்து மறைத்திருந்தாலும் அவளது அழுது வீங்கிய முகமும், சோர்ந்து போன விழிகளும் அந்த விழிகளில் தேங்கியிருந்த காதலும் அவனுக்கு தெரிய தான் செய்தது. அவளின் நிலையை கண்டு அவன் மனம் வலித்தது ஆனால் தானாக போய் பேச எதுவோ தடுத்தது.

மதிய உணவு நேரத்தில் அனைவரும் கேண்டீனுக்கு செல்ல, தர்ஷினி மட்டும் ரீனாவிடம் ஏதோ காரணம் சொல்லி விட்டு அங்கேயே இருந்துவிட்டாள். கேண்டீனில் சாப்பிட அமர்ந்த ஹர்ஷா தர்ஷினியை தேடினான்.அவள் அங்கு இல்லை.தர்ஷினி சீக்கிரம் மனம் விட்டு பேச கூடியவள் இல்லை. ஆனால் ஹர்ஷாவோ மனதிலேயே வைத்து உழல்பவனில்லை.

அதற்கு மேலும் பிரச்சனையை வளர்க்க விரும்பாதவன், “ ரீனா! என் மொபைல மேலயே வைச்சிட்டு வந்துட்டேன். நீங்க சாப்பிடுங்க. ஐ வில் பேக் சூன்” என்றுவிட்டு மூன்றாவது தளத்தில் இருக்கும் தன் அலுவலகத்திற்கு விரைந்தான்.

தன் மேஜை மேல் இருகைகளையும் வைத்து அதில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள் தர்ஷினி.அவன் எதிர்பார்த்தது தான்......

“ஏன் சாப்பிட வரல?” அவன் குரல் கேட்டதும் விலுகென நிமிர்ந்து பார்த்தாள் தர்ஷினி. அவன் கண்கள் எங்கோ பார்த்திருந்தன. அவள் எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள்.

பதில் வராததால் திரும்பி பார்த்தவன்,” உன்னை தான் கேட்டேன்.... ஏன் சாப்பிட வரல?”என்றான்.

“ பசிக்கல....”

“ பரவாயில்ல... வந்து கொஞ்சமா சாப்பிடு.”

“வேண்டாம்”

“ம்ப்ச்.... நியாயமா நான் தான் கோவமா இருக்கணும். பட் நானே என் ஈகோ விட்டுட்டு வந்து பேசுறேன். உன்னால உன்னோட ஈகோவ விட முடியலயில்ல?”

அவனை ஒரு நொடி அழமாக பார்த்தவள்,” ஈகோவா? சத்தியமாய் எனக்கு அது இல்லை ஹர்ஷா...”

“அப்போ எழுந்து வந்து சாப்பிட வேண்டியது தானே? நான் வந்து கூப்பிட்டும் ஏன் வராம இருக்கே?”

“ என் காதல் பொய் னு நீங்க சொன்ன பின்னாடி என்னால நிம்மதியா சாப்பிட முடியும் னு நினைக்கிறீங்களா?” அவளது நேரிடையான கேள்வியில் அவளது அழமான வலியினை உணர்ந்தான் ஹர்ஷா.

“உனக்கு வலித்தது போல தானே எனக்கும் வலித்திருக்கும்?” என்றான். அவள் தலைகுனிந்து அழுதாள்.

அவளருகே ஒரு இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்தவன்,” ஏன்டி! அப்படி செய்த? என்னால தாங்க முடியல தெரியுமா? காதல்னா நம்பிக்கை இருக்கணும் தர்ஷி. பார்த்ததுமே இவன் தான் நமக்கானவன் னு தோணணும்.... “ என்றான் வலி மிகுந்த குரலில். அவன் தன் பெயரை கூறியதில், அவளை உரிமையாய் ‘டி’ போட்டு அழைத்ததில் எல்லையில்லா நிம்மதி பரவியது தர்ஷினியின் மனதில். அவள் விசும்பும் சத்தம் மட்டுமே கேட்டது அவனுக்கு.

“ம்ப்ச்.... ஏதாவது பேசுடி...”

“ஹர்ஷா..... நான் சொல்றத நீங்க முழுசா கேட்கணும்....”

“ ஓ.கே.... இடையில பேசவே மாட்டேன்” என்றவன் கைககளை தன் மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டான்.

“ உங்கள பார்த்ததுமே நா...நான் உங்கள விரும்ப ஆரம்பிச்சிட்டேன் ஹர்ஷா. உங்களுக்கே தெரியும் நான் கொஞ்சம் அமைதியானவ ஆனா நீங்க அப்படி இல்ல.... எப்போதும் யாரு கிட்டயாவது பேசிட்டு இருப்பீங்க. அதனால சாதாரணமா பேச கூட வாய்ப்பு கிடைக்கல. எல்லா பொண்ணுங்களும் உங்கள ரசிக்கும் போது என்னால உங்கள நிமிர்ந்து கூட பார்க்க முடியல. அவங்க பார்க்குற பார்வையையும் என்னுடைய பார்வையையும் ஓரே மாதிரி நினைச்சிடுவீங்களோ னு பயம்...... அப்பா வேற எனக்கு மும்முரமா மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க.... எனக்கோ உங்கள நெருங்கவும் முடியல. ஒருவேளை நான் உங்க கிட்ட லவ்வ சொல்றதுக்கு முன்னாடி அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்கனா நான் உங்கள பற்றி சொல்லணுமில்லையா ஹர்ஷா? அவர் நல்லவரு.... என் மனசுக்கு தெரியும்.... இது என் வாழ்க்கை... என் உரிமை னு காதல் வசனம் பேசுறதுல எனக்கு உடன்பாடில்லை ஹர்ஷா...... என் அப்பா கேட்குற எல்லா விதமான கேள்விகளுக்கும் என் கிட்ட உண்மையான..... தெளிவான பதில் இருக்கணும் னு நினைச்சேன். இந்த காலத்தில வெறும் வெளிபுற பேச்சையும் தோற்றத்தையும் மட்டும் நம்பி வாழ்க்கையை ஆரம்பிக்கிறது சரியில்லை னு நினைச்சேன் அதனால தான் இப்படி செய்சேன். அர்ச்சனா உங்கள மேலோட்டமா கண்காணித்து தான் சொன்னா..... உங்க வீட்டையோ.... உங்க படுக்கையறையையோ எட்டி பார்த்து சொல்லல. உங்க கூட உங்க வீட்டுல தனியா இருக்கும் போது எனக்கு பயமேயில்லை ஹர்ஷா..... ரொம்ப பாதுகாப்பா தான் உணர்ந்தேன்.... உங்க மேல நம்பிக்கை இல்லாம இருந்தா நான் கண்டிப்பா உங்க வீட்டுக்கு வந்திருக்க மாட்டேன்.” வாழ்நாளிலேயே தர்ஷினி இவ்வளவு நீளமாய் பேசியது இப்போது தான் போலும். அவள் முகம் முழுதும் சிவந்து போயிருந்தது. அவள் பேசி முடித்த பின்னரும் கூட ஹர்ஷா எதுவும் பேசவில்லை.

“ உண்மை தானே...... எத்தனை ஆழமான வார்த்தைகளை தன்னவள் பேசியிருக்கிறாள். காதலன் என நம்பி எத்தனை பெண்கள் தங்கள் வாழ்க்கையையும், உயிரையும் உயிரினும் மேலான மானத்தையும் இழந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அவன் மேல் எத்தனை நம்பிக்கை வைத்திருப்பார்கள்? காதல் என்ற போர்வையில் தான் எத்தனை எத்தனை அவலங்களும் கேவலங்களும் கொடுமைகளும் அரங்கேறி கொண்டிருக்கின்றன். இத்தகைய மோசமான காலகட்டத்தில் ஒரு ஆடவனை நம்பி ஒரு பெண் போவது எத்தனை முட்டாள்தனம். தர்ஷி சொல்லியது முற்றிலும் சரி தானே. இதோ..... உன்னோடு தனிமையில் இருக்கும் போது பாதுகாப்பாக இருக்கிறேன் என கூறுகிறாளே இது ஒரு ஆணுக்கு எவ்வளவு பெரிய வெகுமானம்? அதை கொடுத்தவளை போற்றாமல் தூற்றிக் கொண்டிருக்கிறோமே” என வெட்கி போனான் ஹர்ஷா.

என்ன சொல்வனோ? என தன்னை கலவரமாய் பார்த்துக் கொண்டிருந்தவளை சட்டென இழுத்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

தொடரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை

FB_IMG_1555760705077.jpg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top