Chocolate boy - 11

#1
சாக்லேட் பாய் - 11

ஹர்ஷாவும் தர்ஷினியும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அன்றைய நாள் இருவர் மனதிலும் நிழலாடினாலும் இருவரும் அதை புறக்கணித்தபடி சென்றனர்.

“ தர்ஷி! இப்போ பயமா இருக்கா?” தீடீரென ஹர்ஷா இப்படி கேட்டதும் அவனை புரியாமல் பார்த்தாள் தர்ஷினி.

“சொல்லு தர்ஷி.... பயமா இருக்கா?”

“ இல்லையே.... ஏன் பயப்படணும்?” என கேட்டவளுக்கு” ஒன்றுமில்லை” என்று பதிலளித்தான். இருவரும் மூன்றாம் தளத்திற்கு வந்தனர். வீட்டை திறந்து உள்ளே நுழைந்ததும் அன்று போல் “ WELCOME MY CREAMY GIRL” என வரவேற்றான். அவனது வரவேற்புக்கு பதிலாக இதமானதொரு புன்னகையை சிந்தினாள் தர்ஷினி.

“ முதல்ல இந்த சோபால உட்காரு தர்ஷி” என அவளது கையை பிடித்து அன்று அவள் அமர்ந்த அதே இடத்தில் உட்கார வைத்தவன் மார்பின் குறுக்கே கைகளை கட்டி கொண்டு சுவற்றில் சாய்ந்து அவளை ஆசை தீர பார்த்தான்.

“ஏன் அப்படி பார்க்குறீங்க ஹர்ஷா?”

“ பார்க்கல..... ரசிச்சிட்டு இருக்கேன். எப்பவுமே ஒரு சின்ன படபடப்போட தான் என் கிட்ட பேசுவே. ஆனா அன்னைக்கு இதே இடத்தில நீ உட்கார்ந்து ரொம்ப சந்தோஷமா உரிமையா பேசிட்டு இருந்தே.... அந்த நொடிய நான் எவ்ளோ ரசிச்சேன் தெரியுமா? தேவையில்லாம அந்த நாளை நான் காயப்படுத்திட்டேன் இல்லையா தர்ஷி” என்றான் வருத்தமாக.

அவன் கசங்கிய முகத்தை காண முடியாதவளாய்,” ம்ப்ச்.... இப்போ எதுக்கு ஹர்ஷா அதெல்லாம்.... சொல்ல போனா நாம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கத்துக்கு அது ஒரு நல்ல வாய்ப்பா அமைச்சிடுச்சு னு தான் நான் நினைக்கிறேன்.” என்றாள் சமாதானமாக.

“ ம்.... கரெக்ட் தான் இருந்தாலும்....”

“ போதும் விடுங்க ஹர்ஷா.... புருஷன் பொண்டாட்டிக்குள்ள......” என தன்னை மீறி பேசிவிட்டவள் நுனி நாக்கை கடித்து பேச்சை நிறுத்த, வருத்தத்தில் முகத்தை திருப்பியிருந்தவன் சட்டென அவளை திரும்பி பார்க்க.... குப்பென சிவந்து போனாள் மங்கை.

“ஹேய்.... இப்போ என்ன சொன்னே?”

சிவந்த முகத்தை நடந்தபடி மறைத்தவள்,” வந்தவங்களுக்கு காபி,டீ எதுவும் தர மாட்டீங்களா?” என வினவியபடி சமையலறைக்குள் புகுந்தாள். அவளை சமையலறை வாசலிலேயே கை வைத்து நிறுத்தியவன்,” இப்போ என்ன சொன்னே னு சொல்லு” என்றான் குறும்பு கண்களோடு.

“அது.... அது.... காபி,டீ எதுவும் தர மாட்டீங்களா னு கேட்டேன்” என்றாள் அறியாதவள் போல.

“ ஏய்.... அதுக்கு முன்னால என்ன சொன்னே?” அவளை போக விடாமல் மறித்து கொண்டு நின்றான்.

“ம்.... அது லவ்வர்ஸ்க்குள்ள சண்டை வரது சகஜம் னு சொல்ல வந்தேன்.....”

“ஆனா நீ புருஷன் பொண்டாட்டி னு தானே சொன்னே?”

“ நா.... நான் நம்மள அப்படி தான் நினைச்சிட்டு இருக்கேன் ஹர்ஷா.” என்றாள் தலையை முற்றிலுமாய் கவிழ்த்துக் கொண்டு. அவளது பதிலில் அவளை இறுக்கி அணைக்க துடித்த கரங்களை பெரும் பாடுபட்டு அடக்கினான் ஹர்ஷா.

“ சே.... நம்பிக்கை நம்பிக்கை னு சொல்லி நம்மள ஓவர் நல்லவனாக்கி இப்படி கையை கட்டிப்போட்டுட்டாளே” என புலம்பிய மனதை ஒதுக்கியவன், “ தர்ஷி.... என்னை ரொம்ப கொல்றடி” என்றான் ஏக்கம் நிறைந்த குரலில். அவனை நிமிர்ந்து பார்க்கும் சக்தியின்றி தலை குனிந்தே இருந்தாள் தர்ஷினி.

தன் ஒற்றை விரலால் அவள் முகம் நிமிர்த்த, கண்களை இறுக மூடியிருந்தாள் அவள் ,” தர்ஷி.... பயம்மா இருக்கா?” என்றான் கிசுகிசுப்பாய். மெல்ல கண்களை திறந்து பார்த்தவள் இல்லை என்பது போல் தலையசைத்தாள். ஒரு மெல்லிய சிரிப்போடு அவளை விலகியவன் பாலை காய்ச்ச தொடங்கினான்.

சில நொடி துளிகளில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் அவன் அருகே சென்று நின்றாள்.

“ வீட்டுக்கு வந்தா ஏதோ சொல்றேன் னு சொன்னீங்க” – தர்ஷினி.

“ ஏதோவா?”

“அதான் நம்ம லவ் பற்றி?”

“ நம்ம லவ்வா?”

“ம்ப்ச்.... சரி.... உங்க லவ் பற்றி.... போதுமா? சொல்லுங்க”

“அது சொல்ற விஷயம் இல்ல தர்ஷி.... காட்ற விஷயம்.... ம்... நீ போய் என் பெட்ரூமை பார்த்துட்டு வா...”

“பெட்ரூமுக்கா? அங்க எதுக்கு?” என்றாள் சிறிதான கலக்கத்தோடு....

“ ம்.... புருஷன் பொண்டாட்டி னு சொன்னே? அப்புறம் ஏன் இப்படி பயப்படுற...”காய்ச்சிய பாலை இறக்கியபடி கிண்டலாக கேட்டான் ஹர்ஷா.

“ பயமெல்லாம் இல்லை.....” சொல்லி விட்டு அவனது அறையை நோக்கி நடந்தாள். ஹர்ஷா இருவருக்கும் காபி போட்டு கொண்டிருந்தான்.

லேசான படபடப்போடு அவனது அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தாள் தர்ஷினி. அந்த அறை.... வீடு முழுவதும் எளிமையாக இருந்தாலும் அந்த அறை மட்டும் சற்றே வித்தியாசமாய்.... கவிதைதுவமாய் இருந்தது. அங்கிருந்த அனைத்தும் பொருட்களும் லவெண்டர் வண்ணத்தில் இருந்தது.

“நமக்கு இந்த கலர் ரொம்ப பிடிக்கும் னு ஹர்ஷாவிற்கு எப்படி தெரியும்? இல்லை அவருக்குமே இந்த நிறம் ரொம்பவும் பிடிக்குமா?” மனதில் தோன்றிய கேள்வியோடு விழி விரிய பார்வையை சுழற்றியவள், அங்கே இருந்த புகைப்படத்தில் பார்வையை நிறுத்தினாள்.சந்தேகமேயின்றி அது அவளது படமே தான். முதல் நாள் அவள் அலுவலகம் வந்த போது எடுத்த படம்.... அவளுக்கு மிகவும் பிடித்த லவெண்டர் நிற சுடிதார் அணிந்திருந்தாள்.அங்கே மட்டுமல்ல அவனது மெத்தை உறை, தலையணை, அலமாரி கதவு, மேஜை என எல்லா இடங்களிலும் அவளது விதவிதமான படங்களே ஆக்கிரமித்திருந்தது.

சொல்ல முடியாத ஓர் உணர்வு அவள் மனதை ஊடுருவ, அந்த நொடியில் பொங்கி பெருகிய காதலை ஒற்றை வரியில் அடைக்க முடியாது.

“பிடிச்சிருக்கா பேபி?” அவள் செவியருகில் கிசுகிசுத்தான் அவளது மாய கண்னண்.

சட்டென திரும்பி ,” ரொம்ப பிடிச்சிருக்கு ஹர்ஷா.... ரொம்ப.... ரொம்ப...” என்றவள் அவனை அணைத்துக் கொண்டாள். அதை சற்றும் எதிர்பார்க்காதவன் முதலில் திகைத்தாலும் சற்று முன்பு தோன்றிய எண்ணம் நிறைவேறியதில் மனம் மயங்கி அவளை இன்னும் இறுக்கி அணைத்தான்.சில நொடிகளிலேயே தன்னிலை பெற்றவள் அவனை விட்டு விலகினாள். அவன் அருகில் நிற்கும் போதே நாணத்தில் சிவப்பவள்.... இப்போது சொல்லவும் வேண்டுமோ? மொத்தமாய் சிவந்து போனாள் தர்ஷினி.

“ மகா ஜனங்களே.... இதுக்கு நான் பொறுப்பில்ல.... சொல்லிட்டேன். நான் அப்பாவி.... இதோ இந்த பொண்ணு தான் என்னை... என்னை.... கட்டி...” அவன் அவளை கேலியாய் சீண்ட,

கூச்ச மிகுதியால் “ போடா....” என சிணுங்கினாள்.

“என்னது போடாவா?” போலியான கோபத்தோடு அவன் அவளை நெருங்க.... அவள் பின்னால் நகர..... சுவற்றில் இடித்து நின்றாள் தர்ஷினி. இரு கைகளையும் அவளது இரு புறமும் அணை போல் வைத்தவன், குடை போல் விரிந்திருந்த அவளது விழிகளை நோக்கி,” பயம்மா இருக்கா தர்ஷி?” என கேட்டான்.

“இல்ல....”

“ ஓய்.... அதென்ன என்னை பார்த்து பயமில்ல பயம்மில்ல னு சொல்றே” என கூறியவன் அவள் முகம் நோக்கி குனிய....

அவள் தலை கவிழ்ந்து நிற்க,” இப்போ கூட பயமில்லையா?” என்றான்.

“ ம்ஹூகும்....”

“ஏன்?”

“ஏன்னா... ஏன்னா.... நீங்க பக்கா ஜென்டில்மேன்....”

“ம்ஹூகும்.... யாரோ உன்கிட்ட பொய் சொல்லியிருக்காங்க....” என்றபடி அவளை வெகுவாய் நெருங்கி நிற்க தர்ஷினியின் வயிற்றில் ஒரு பய உணர்வு பரவியது.

தன் மூச்சு காற்று அவள் மீது படும் வண்ணம் உரசி நின்றவன், “ என்னாச்சு தர்ஷி? ஏன் அமைதியாகிட்ட....” என்றான் வேண்டுமென்றே.

“ப...பயமாயிருக்கு....” தனக்கே கேட்காத மெல்லிய குரலில் அவள் சிணுங்க,

“அது....” என தல ஸ்டைலில் கூறி வாய் விட்டு சிரித்தவன் விலகி போனான்.

“இனிமே பயமில்ல... பயமில்ல னு சொல்ல கூடாது அடிக்கடி இப்படி பயம் காட்டுவேன்” என ஹர்ஷா குறும்பு கூத்தாட கூற நாணசிவப்போடு முகம் மலர்ந்து புன்னகைத்தாள் தர்ஷினி.

“ உண்மையிலேயே ரொம்ப பிடிச்சிருக்கா தர்ஷி” என்றானவன்.

“ உண்மை தான் ஹர்ஷா. நீங்.... நீங்க என்னை முதல்தடவை பார்த்த போதே காதலிக்க தொடங்கிடீங்களா?” ஆவலாய் கேட்டாள் தர்ஷினி.

“ ஆமா ஸ்வீட்டி! முதல் தடவை உன்னை அந்த லவெண்டர் சுடில பார்த்த போதே எனக்குள்ள ஏதோ சலனம்... எல்லா பொண்ணுங்களும் என் கூட பேச ரொம்ப ஆசப்படுவாங்க தர்ஷி ஆனா நீ.... நீ மட்டும் என்னை கண்டுக்கவே இல்லை. அதுல நான் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிட்டேன். உன்னோட இயற்கையான அழகு, அமைதியான சுபாவம்... அழகான இந்த சிரிப்பு..... எதுவோ.... எதுவோ என்னை காதலிக்க வைச்சிடுச்சி” என சிலாகித்தவன்,” ஹே... தர்ஷி! முதல்ல இந்த காபிய குடி. ஆறிட போகுது” என காபியை நீட்டினான்.

அவன் நீட்டிய காபியை வாங்கியவள்,” இப்படி ரூம் பூரா என் போட்டோவை ஒட்டி வைச்சிருக்கீங்களே.... உங்க அம்மா பார்த்துட்டா என்ன செய்வீங்க?” என கேட்டாள்

“ சிம்பிள்.... நீ சொன்ன அதே ஐடியா தான். உன்னை பற்றி அம்மா கிட்ட சொல்லி உங்க வீட்டுக்கு நேரா பொண்ணு கேட்க வந்திடணும் னு நெனச்சேன். அதுக்கு முன்னாடி எப்படியாவது உன் கிட்ட பேசிடணும் னும் ஆசைப்பட்டேன். ஆனா பேபி... எனக்கு கஷ்டம் கொடுக்காம நீயே லவ்வ சொல்லிட்ட... தேங்க்ஸ்” என்றான் மகிழ்ச்சியாக.

அவன் பேசுவதையெல்லாம் ஒரு சின்ன முறுவலோடு கேட்டுக் கொண்டிருந்தவள்,” உண்மையில நீங்க என்னை காதலிப்பீங்க னு நான் நினைக்கவேயில்லை ஹர்ஷா. ஏன்னா நீங்க கலகலப்பான ஆள், நிறைய பேசுவீங்க... அதுவுமில்லாம பொண்ணுங்க உங்கள சுத்திட்டே இருப்பாங்க. உங்களுக்கு என்னை பிடிக்குமா னு நிறைய யோசிப்பேன்” என்றாள் காபி குடித்த கோப்பையை மேஜை மீது வைத்தபடி.

“different poles attract each other... படிச்சதில்லையா தர்ஷி? நாம அது போல தான். பொண்ணுங்க தான் என்னை சுத்துவாங்க னு நீயே சொல்லிட்ட.... ஆனாலும் நான் சாரு கிட்ட பேசும் போது கோவ படுற... பட் உன் பொசஸிவ்னஸ் பிடிச்சிருக்கு” என்றான் கண்ணடித்து.

“ ஆமா பொசஸிவ்னஸ் தான் ஆனா சந்தேகமில்ல ஹர்ஷா ஏன்னா நீங்க பொண்ணுங்க கூட பேசுறத கேட்டு தான் நான் உங்கள லவ் பண்ணவே ஆரம்பிச்சேன். உங்க டீசென்ஸி, எல்லைமீறாத பேச்சு, கண்ணியமான பார்வை இதையெல்லாம் பார்த்ததுனால தான் உங்க மேல இவ்ளோ நம்பிக்கை வைச்சிருக்கேன்.”

“ சந்தோஷம் தான் ஆனா இதெல்லாம் மத்த பொண்ணுங்க கூட பேசும் போது மட்டும் தான் பாலோ பண்ணுவேன். உன் கிட்ட இல்ல.” என்றவன் எட்டி அவள் கை பிடிக்க,

“ அச்சச்சோ... இதெல்லாம் தப்பு. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்” என கையை உறுவியவள் கலகலத்து சிரித்தாள்.

அவள் சிரிப்பில் மனம் தொலைந்தவன்,” இது ரொம்ப ஓல்டு டயலாக் பேபி” என்றான்.

“ ஓல்டு ஈஸ் கோல்டு” என்றவள் தற்செயலாக மணி பார்க்க ,” ஹர்ஷா.... டைம் ஆகிடுச்சு. நான் கிளம்பட்டுமா?” என்றாள் சின்ன குரலில்.

“ போகணுமா தர்ஷி? உன்னை அனுப்ப மனசே இல்லடி” என்றான் வருத்தமாக. பதிலேதும் சொல்லாமல் மௌனமாக அவன் வருத்தத்தில் இணைந்தவள் மனசேயில்லாமல் அவனிடமிருந்து விடைபெற்று சென்றாள்.

அன்று மனம் முழுதும் ரணமாகி சென்றவள் இன்று மனம் கொள்ளா காதலுடனும், மகிழ்ச்சியுடன் சென்றாள்

தொடரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை FB_IMG_1561817986282.jpg
 

Sponsored

Advertisements

Top