• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chocolate boy - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
சாக்லேட் பாய் – 17

வயலட் வண்ண பட்டு புடவையில் மிதமான தங்க நிற சரிகை இழையோட ,அளவான நகைகள் அணிந்து பொற்சிலையாய் அமர்ந்திருந்தாள் தர்ஷினி. வாட்டமான முகத்தை ஒப்பனை சற்று மறைந்திருந்தது. தர்ஷினியை முழுவதுமாக தயார்படுத்தி முடிவாக அவளுக்கு பூச்சூடினார் ஆனந்தி. தர்ஷினியின் பெரியம்மா.

“ அக்கா மணி பதினொன்னு ஆயிடுச்சி தர்ஷினி ரெடியாகிட்டாளா?” பரபரப்பாக உள்ளே வந்தார் மல்லிகா.

“ இதோ முடிஞ்சது. வர்ஷினிய இன்னும் காணோமே மல்லி?”

“ அவளும் வந்துட்டே இருக்காக்கா. இப்போ வந்திடுவா....”

“ அண்ணி! உங்கள அண்ணன் கூப்பிடுறாங்க....” சந்திரசேகரின் தங்கையான காயத்ரி மல்லிகாவை அழைத்தார். தர்ஷினியின் பெண் பார்க்கும் படலத்திற்கு அருகிலிருக்கும் நெருங்கிய உறவுகளை அழைத்திருந்தனர். அனைவரும் பரபரப்பாக சுழன்று கொண்டிருந்தனர். வரைந்து வைத்த வண்ண சித்திரம் போல அசைவின்றி அமர்ந்திருந்தாள் தர்ஷினி ஆனால் கண்களில் மட்டும் உயிரில்லை.

“ அழகா இருக்கேடி ராசாத்தி” என விரல்களை நெட்டி திருஷ்டி கழித்த ஆனந்தியும் எதற்காகவோ வெளியே சென்று விட, அறையில் தர்ஷினி மட்டுமே இருந்தாள். தன்னை மீறி நடக்கும் விஷயங்களை தடுக்கவோ, மறுக்கவோ முடியாமல் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்தாள். சந்திரசேகரும் மல்லிகாவும் ஜாதகம் பார்த்து விட்டு திரும்பும் போதே ஆனந்தி வீட்டையும், காயத்ரி வீட்டையும் சென்று அழைக்க, அவர்களும் இவர்களோடே கிளம்பி வந்து விட்டனர். என்ன செய்வாள் தர்ஷினி?

ஆனாலும் செய்ய வேண்டுமே..... மூளையை கசக்கி கொண்டிருந்தவளுக்கு ஒரு யோசனை தோன்ற, கிடைத்த தனிமையில் உடனே அதை செயல்படுத்தினாள். மேஜை மேல் இருந்த புத்தகங்கள் மத்தியில் ஒரு வெற்று தாளை கண்டெடுத்தவள்,” ப்ளீஸ்! எனக்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லை. தயவுசெய்து நிறுத்திவிடுங்கள். என்னால் முடியவில்லை” என வேகமாக எழுதியவள் அதை மடித்து தன் ரவிக்கைக்குள் ஒளித்து கொண்டாள்.

“ வாங்க! வாங்க!!....” சந்திரசேகர் வரவேற்கும் குரலை தொடர்ந்து பெண்களும் வரவேற்றனர். மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிட்டனர் என தர்ஷினிக்கு புரிந்தது. ஆண்களில் காயத்ரியின் கணவர் மட்டும் வந்திருந்தார். தீடீரென அழைத்ததால் ஆனந்தியின் கணவர் வேலைகளை முடித்து விட்டு சற்று தாமதமாக வருவதாக கூறியிருந்தார்.

ஏற்கனவே பரபரப்பாக காணபட்ட வீடு இன்னும் களை கட்டியது. அன்று வந்த பூமிநாதன்- பனிமலரோடு அவரது புதல்வன், மகள், மருமகன், இளைய மகள் மற்றும் ஒரு குட்டி வாண்டு வந்திருந்தனர். வேறு உறவினர்கள் யாரும் வரவில்லை.

உள்ளே அமர்ந்திருந்த தர்ஷினிக்கு கண்கள் கலங்கியது. இதயத்துடிப்பு அவள் செவிகளை மந்தமாக்கும் அளவிற்கு எகிறி துடித்தது. செய்வதறியாது அவள் பெண் மனம் பரிதவித்தது. பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து கொண்டிருக்க, வர்ஷினியும் வந்து சேர்ந்தாள். வந்தவர்களுக்கு வர்ஷினி குடும்பத்தை அறிமுகபடுத்தினர். அடுத்து விருந்தினருக்கு பழச்சாறு தயார் செய்வதில் அனைவரும் மும்முரமாக இருக்க, “ சித்திஈஈஈஈஈ” என கூவிய படி வர்ஷினியின் நான்கு வயது மகன் ஹரிசரண் தர்ஷினியின் அறைக்குள் வந்தான்.

ஓடி வந்து தன்னை கட்டிக் கொண்ட சுட்டி பையனை தூக்கி அணைத்து கொண்டாள் தர்ஷினி. கேட்காமலே அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவனின் கன்னத்தில் தர்ஷினியும் முத்தமிட்டாள். அவளையுமறியாமல் ஹர்ஷா கொடுத்த முத்தம் நினைவு வர, நெஞ்சில் பாரம் கூடியது.

“ எங்கே மாப்பிள்ளை தம்பிய காணோம்?” ஆனந்தியின் குரல் ஒலித்தது.

“ அங்க பால்கனியில நின்னு போன் பேசிட்டு இருக்கான்” யாரோ பதிலுரைக்க, மின்னலென ஒரு யோசனை தர்ஷினி மனதில் உதித்தது.

“ ஹரி குட்டி சித்தி ஒன்னு சொன்னா செய்வியா?”

“ செய்வனே....”

“ பால்கனியில ஒரு அங்கிள் போன் பேசிட்டு இருப்பாங்க. அவங்க கிட்ட இந்த பேப்பரை கொடுத்துட்டு வரீயா? வேற யார்கிட்டயும் கொடுக்க கூடாது...” அவள் கண் விரித்து கூறியதில் ஹரி குட்டியும் கண்களை விரித்து “ ம்....” என தலையாட்டியது.

பால்கனியில் நின்று சிறு அனல் கலந்த காற்றில் கலையும் தன் சிகையை கோதியபடி அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தவன் தன் பேண்ட்டை யாரோ லேசாக இழுப்பதை உணர்ந்து திரும்பி பார்த்தான். ஹரி குட்டி தன் கையிலிருந்த காகிதத்தை அவனிடம் நீட்டி,” எங்க தர்ஷூ சித்தி தந்தாங்க” என்றதும் நெற்றி சுருக்கி பார்த்தவன் அதனை வாங்கி பிரித்து படித்தான். பேசியில் பேசிக் கொண்டிருந்தவரிடம் தான் பிறகு பேசுவதாக கூறி விட்டு மீண்டும் அக்காகிதத்தில் எழுதியிருந்ததை படித்தவனின் புருவங்கள் ஏகமாய் உயர்ந்தது. சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்தவன் தன் சட்டை பையிலிருந்த பேனாவை எடுத்து ஏதோ எழுதி ஹரி குட்டியிடம் கொடுத்து தர்ஷினியிடம் கொடுக்குமாறு கூறினான்.

ஹரி சரணிடம் துண்டு சீட்டை கொடுத்தனுப்பிய பின் தர்ஷினிக்கு இன்னும் பதற்றம் தொற்றி கொண்டது. அவள் எடுத்திருக்கும் இந்த முயற்சியில் ரிஸ்க் கொஞ்சம் அதிகம் தான். ஹரி சரண் குட்டி பையன். அதனை தவறுதலாக வேறு யாரிடமோ கொடுத்து விட்டால்.........? இல்லை அவன் கொடுப்பதை தந்தையோ மற்றவரோ பார்த்து விட்டால்......? நினைக்கும் போதே வயிற்றுக்குள் ஒரு பய பந்து உருண்டது. ஆனால் வழியில்லை.... ஏதாவது செய்து தான் ஆக வேண்டும்.

ஹரி குட்டி அந்த துண்டு சிட்டோடு அறைக்குள் வர,” ஹரி குட்டி! இதை அந்த அங்கிளிடம் கொடுக்கலயா?” என்றாள் பதட்டமாக.

“ கொடுத்துட்டேனை....” என நீள சுருதியோடு கூறியவன் நீட்டிய சீட்டை குழப்பாக வாங்கி பார்த்தாள் தர்ஷினி.

“உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் எனக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. நீங்கள் பயப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்” என எழுதப்பட்டிருந்தது. படித்தவளுக்கு தன் கண்ணை தன்னாலேயே நம்ப முடியவில்லை. மீண்டும் மீண்டும் படித்து பார்த்தவளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. தனது நெருக்கடி இத்தனை சுலபமாக இலகுவாகும் என அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. துள்ளி குதித்து ஆட வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு.

கதவை திறந்து கொண்டு வர்ஷினி உள்ளே வர, காகிதத்தை கசக்கி எறிந்தாள். தங்கையின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் அவளின் முகத்தையும் தொற்றி கொள்ள,” ஹே தர்ஷூ...... லுக்கிங் ப்யூட்டிபுல் டி” என அவளின் கன்னங்களை கிள்ளினாள்.

“ ஆ... போடி பேசாத...” என அக்காவின் கைகளை செல்லமாக தட்டிவிட்டாள் தர்ஷினி.

“ அன்னைக்கு போன்ல உன்னை திட்டிட்டேன் னு கோபமா”

“ பின்னே? நீயாவது என் லவ்வுக்கு சப்போர்ட் பண்ணுவேன்னு எவ்ளோ எதிபார்த்தேன் தெரியுமா?”

“ எம்மா அதிரூப சுந்தரிகளா! நீங்க அரட்டை அடிக்க இதுவா நேரம்? சீக்கிரம் அவளை கூட்டிட்டு வா வர்ஷினி” என அதட்டி விட்டு சென்றார் காயத்ரி.

“ சரி வா தர்ஷூ” என ஒரு முறை அவளின் தோற்றத்தை சரிபார்த்து விட்டு வெளியே கூட்டி சென்றாள் வர்ஷினி.

சிரித்த முகமாகவே வந்தாள் தர்ஷினி. அதான் மாப்பிள்ளை எனக்கும் சம்மதம் இல்லை என கூறிவிட்டாரே..... பிறகு இவளுக்கு என்ன கவலை? மல்லிகா கொடுத்த பழச்சாறு நிறைந்த கோப்பைகளை அடுக்கிய தட்டை வாங்கி கொண்டு மெதுவாக நடந்து சென்றாள் தர்ஷினி. அவளுக்கு புடவையை கட்டி கொண்டு நடப்பது அதுவும் கையில் கோப்பைகளோடு நடப்பது பயமாக இருந்தது. கவனமாக தரையை பார்த்து நடந்து வந்தாள்.

“ எல்லாருக்கும் ஜூஸ் கொடும்மா” தந்தை சொன்னதும் ஒரு ஒருக்காய் ஜூஸ் கொடுத்து கொண்டு வர, இளம் நீல நிற சட்டையும், கருப்பு பேன்டும் அணிந்திருந்த ஆடவனிடம் நீட்டிய நேரம்,” இவர் தான்மா மாப்ள... பார்த்துக்கோ” என்றார் காயத்ரியின் கணவரான வாசுதேவன். ஆனால் தர்ஷினி நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவனும் சட்டென கோப்பையை எடுக்கவில்லை. அவன் எடுத்த பின் மற்றவர்களுக்கும் கொடுத்து விட்டு அத்தையில் அருகில் நின்றுக் கொண்டாள். அனைவரது பார்வையும் தன்னை அலசுவதை உணர்ந்து கூச்சப்பட்டாள்.

“ சொல்லுங்க மாப்ள.... உங்களுக்கு எங்க பொண்ணை பிடிச்சிருக்கா?” வாசுதேவன் நேரிடையாக கேட்டு விட

“ பிடிச்சிருக்கு.... ரொம்ப பிடிச்சிருக்கு” என அவனும் வெளிப்படையாக கூறி விட, அதிர்ந்து விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள் தர்ஷினி.

தன் அக்மார்க் மந்தகாச புன்னகையை இதழ் விரித்து சிந்தியவன் தர்ஷினியை பார்த்து ரகசியமாய் கண்ணடித்தான்.

அவன்.... ஹர்ஷா தான்.... ஹர்ஷாவே தான்....

தொடரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
2019-07-29-01-11-48-360.jpg
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
??.சூப்பர்...அருமை (நாயகன், நாயகி தேர்வு. )
 




kaivalya

அமைச்சர்
Joined
Jun 24, 2018
Messages
2,229
Reaction score
1,517
Location
tamilnadu
நானும் நெனச்சேன் அது ஹர்ஷா வா தான் இருக்கும்னு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top