• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chocolate boy - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
சாக்லேட் பாய் – 18

விரித்த விழி விரித்த படி நிலைத்திருக்க, தர்ஷினி சுவாசிக்கவும் மறந்து சிலையானாள். தன்னை இமைகொட்டாமல் பார்த்து கொண்டிருந்த தன்னவளின் அதிர்ச்சி முகத்தை சுவாரசியமாக ரசித்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா. அந்த நேரம் சரியாக ஆனந்தியின் கணவரான பாஸ்கரன் உள்ளே நுழைய, அனைவரது கவனமும் அவரிடம் திரும்பியது. சந்திரசேகர் வந்தவரை வரவேற்று மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டிருந்தார். யாருடைய கவனமும் தங்கள் மீது இல்லை என்பதை ஊர்ஜிதபடுத்தி கொண்டவன், தன்னவளை பார்த்து மீண்டும் கண்ணடித்தான். அவனது செய்கையில் திகைப்பிலிருந்து மீண்டவள், முகம் சிவக்க தலையை குனிந்து கொண்டாள்.ஆனால் அந்த சிவப்பு நாணச் சிவப்பா? கோப சிவப்பா? என்று தான் ஹர்ஷாவிற்கு புரியவில்லை.

அதுவரை பாஸ்கரனை அனைவருக்கும் அறிமுகபடுத்திக் கொண்டிருந்த சந்திரசேகர், இப்போது ஹர்ஷா வீட்டினரை அவருக்கு அறிமுகம் செய்தார்.


“ அண்ணே.... இவரு தான் மாப்ள... பேரு ஹர்ஷவர்தன்... ஐ.டி கம்பனில வேலை செய்றாரு..... இவங்க மாப்பிள்ளையோட அப்பா.... பெயர் பூமிநாதன்....”

“வணக்கம்....” – பாஸ்கரன்

“வணக்கம்.... இது என் மனைவி பனிமலர். அவ என் பெரிய பொண்ணு ஆர்த்தி.... பக்கத்துல உட்கார்ந்திருக்கிறது மருமகன் சித்தார்த்.சென்ட்ரல் பாங்கு ஆப் இந்தியா ல வேலை செய்றாங்க. அது பேத்தி ஸ்ரீஜா. இவ எங்க வீட்டு கடைக்குட்டி காவ்யா.... காலேஜ் முதல் வருஷம் படிக்குறா...என் ரெண்டாவது மகனை பற்றி தான் சம்பந்தியே சொல்லிட்டாங்களே....” என சந்திரசேகர் ஆரம்பித்த அறிமுகபடலத்தை பூமிநாதன் முடித்து வைத்தார்.

இவர்கள் அங்கே பேசிக் கொண்டிருக்க, தர்ஷினியின் முக மாறுதல்களை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தான் ஹர்ஷா. அந்த குட்டி பையன் கொண்டு வந்து கொடுத்த துண்டு சீட்டை படித்த போது தர்ஷினிக்கு மாப்பிள்ளையாக வந்திருப்பது தான் தான் என தெரியவில்லை போலயே என நினைத்தான். ஆனால் அதை அவளிடம் தெளிவுப்படுத்தி கொள்ள முடியாத சூழ்நிலையால் அவளது பயத்தை போக்குவதை போல எழுதி கொடுத்தான். தர்ஷினி வந்து தன்னை பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போவாள் என எண்ணினால்..... இவள் அவனை பார்த்து திகைத்தது மட்டுமல்லாமல் கோபம் கொண்டது போல அல்லவா முகத்தை தூக்கி வைத்திருக்கிறாள்?


நடப்புகளை கேட்டறிந்த பாஸ்கரனின் முகத்தில் திருப்தி தொனித்தது.” அப்போ உங்களுக்கு எங்க தர்ஷினிய புடிச்சி போச்சு.... அப்படி தானே?” என தன் பங்கிற்கு ஒரு முறை அவனது சம்மதத்தை கேட்டார்.


“ என் சம்மதத்தை தான் சொல்லிட்டேனே.... நீங்க அவங்க கிட்ட கேளுங்க. அவங்க தான் எதுவும் சொல்லல” என்றான் ஹர்ஷா தர்ஷினியின் முகத்தை கவனித்த வாறே.

சந்திரசேகருக்கு மண்டை காய்ந்தது.” அடடடா....இதுங்க செய்த வேலை தெரியகூடாது னு ஒரு சம்பிரதாயமா பொண்ணு பார்க்க கூப்பிட்டா.... என்னவோ இவன் இப்போ தான் முதல் முறையா என் பொண்ண பார்க்குற மாதிரியும்..... என் பொண்ணு என்னவோ பிடிக்காத கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தி நிற்க வைச்ச மாதிரியுமில்ல நடிக்குதுங்க....” என மனதிற்குள் பொருமிக் கொண்டார்.

“ வேணும்னா ரெண்டு பேரும் ஒரு பத்து நிமிஷம் தனியா பேசிட்டு வாங்களேன். ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க ஏதுவா இருக்கும்....” என்றார் ஆனந்தியின் கணவர் முகுந்தன். அவர் அப்படி சொன்னதும் சந்திரசேகர் அதிர்ந்து போனார்.” விட்டா இவனுங்க என் பொண்ண இப்பவே இவன் கூட அனுப்பி வைச்சிடுவானுங்க போலயே.....”

“ என்ன மச்சான்! இப்படி பார்க்குறீங்க.... இந்த காலத்தில இதெல்லாம் சகஜமான விஷயம்தான்.”

“ஆஹா..... ஹர்ஷா உன் காட்ல மழை தான்டா..ம்.... எனஜாய்” ஆர்த்தி அவனது காதை கடித்தாள்.

தர்ஷினிக்கும் இது நல்ல வாய்ப்பாகவே தெரிந்தது.” வரட்டும்.... வரட்டும்... நல்ல சான்ஸ் தான்.... அவனை பார்த்து நல்லதா நாலு கேள்வி கேட்கலனா எனக்கும் தூக்கம் வராது. ஒரு நாளா..... ரெண்டு நாளா..... முழுசா ரெண்டு வாரம் என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல, என் போன அட்டன் பண்ணல, ஒரு மெசேஜுக்கு கூட ரிப்ளை அனுப்பல..... அதுவும் இந்த ரெண்டு நாளா நான் தவிச்ச தவிப்பிருக்கே.... அப்பப்பா.... ஆனா இவன் என்னடானா ஜாலியா எல்லா பிரச்சனையும் சரிகட்டிட்டு எனக்கே தெரியாம என்னை பொண்ணு பார்க்க வந்திருக்கான்.” அவள் மனம் எண்ணெயிலிட்ட கடுகாய் பொரிந்தது.

“ பரவாயில்லை..... பத்து நிமிஷத்துல நாங்க எதுவும் பெருசா பேசி புரிஞ்சிக்க போறதில்ல.... இப்போ இவங்கள பார்த்ததுலயே எனக்கு பிடிச்சி போச்சு. அவங்களுக்கும் அதே மாதிரி பிடிச்சிருக்கானு தெரிஞ்சா போதும். சொல்லுங்க....தர்ஷினி உங்களுக்கும் என்னை பிடிச்சிருக்கா?” முக்ந்தனிடம் பேச தொடங்கியவன் தர்ஷினியிடம் நேரிடையாக கேட்டு முடித்தான்.

“ அப்போ சரி.... தர்ஷினி உன் பதிலை சொல்லும்மா....” - பாஸ்கரன்

தன்னோடு பேசும் வாய்ப்பை மறுத்தவனை கீழ் கண்ணால் முறைத்தாள் தர்ஷினி. ஆனால் ஹர்ஷாவோ அவளது கோபத்தை சிறிதும் கண்டு பொருட்படுத்தவில்லை.

“ ஏய் தர்ஷு.... ஆனாலும் உன் ஆளுக்கு குசும்பு தான்டி. என்னமா சீன் போடுறாரு பாரேன். உன் சம்மதம் தான் தெரியனுமாம். அலப்றை தாங்கலடி” என சத்தமில்லாமல் கிளுக்கி சிரித்தாள் வர்ஷினி.

“சொல்லுமா தர்ஷினி..... பயப்படமா உன் விருப்பத்த சொல்லு....” முகுந்தன் ஊக்கினார்.

சந்திரசேகரும் மல்லிகாவும் ஏதோ டீவியில் படம் பார்ப்பதை போல ஆவென பார்த்துக் கொண்டிருந்தனர். ஹர்ஷா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ அவ கொஞ்சம் கூச்ச சுபாவம். அதான் தயங்குற.... சொல்லுமா தர்ஷினி....” என்றார் பாஸ்கரன்.

“ பிடிச்சிருக்கு.....” தலையை நிமிர்த்தாமல் மெல்லிய குரலில் தன் விருப்பத்தை கூறினாள் தர்ஷினி. அனைவரும் சந்தோஷத்தில் திளைத்திருக்க, தன்னை உறுத்து விழிக்கும் தர்ஷினியை யோசனையாய் பார்த்திருந்தான் ஹர்ஷா.

“ சரி.... எல்லாம் நல்லாபடியா முடிஞ்சது. இனி மேற்கொண்டு பேசலாமே....” என்றார் சந்திரசேகர்.

“ தராளமா பேசலாம் சம்பந்தி....”

“ வர்ஷினி.... தங்கச்சிய உள்ளே கூட்டிட்டு போம்மா” ஆனந்தி கூறியதும் தர்ஷினியை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள் வர்ஷினி.

எப்படி ஹர்ஷா சமாதானம் ஆனான்? எப்படி அப்பா சம்மதிச்சாங்க?இடையில என்ன நடந்தது? எதற்காக என் கூட பேசுற வாய்ப்பை மறுத்தான்? பல கேள்விகள் அவள் மனதை அழுத்த தன்னறைக்குள் வந்தமர்ந்தாள் தர்ஷினி. தெளிவில்லாத தன் தங்கையின் முகத்தை நாடி பிடித்து நிமிர்த்தி பார்த்தாள் வர்ஷினி.

“ என்னாச்சு தர்ஷு? ஏன் என்னவோ போல இருக்கே?”

“எனக்கு.... எனக்கு ஒன்றுமே புரியல வர்ஷு. எப்படி அப்பாவும் அம்மாவும் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க.... நீ கூட என் மேல கோபமா இருந்தே தானே..... எனக்கென்னவோ அப்பாவ பார்த்தா முழு மனசா சம்மதிச்ச மாதிரி தெரியல. எப்படி இந்த ஏற்பாடு நடந்தது?” தன் மனதின் பாதி குழப்பத்தை மட்டும் வெளியிட்டாள்.

தொடரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அக்கா மகளின் நிக்காஹ் நல்லமுறையில் நடந்ததா, பர்வீன் டியர்?
மணமக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் சொல்லிடுங்கப்பா
 




பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
அக்கா மகளின் நிக்காஹ் நல்லமுறையில் நடந்ததா, பர்வீன் டியர்?
மணமக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் சொல்லிடுங்கப்பா
மிக சிறப்பாக நடந்தது சிஸ். போனவுடன் முதல் வேலையாக உங்களுடைய வாழ்த்துக்களை தான் காண்பித்தேன். ஆச்சரியமாக மகிழ்ச்சியோடு நெகிழ்ந்து போனாள்.
அல்ஹம்துலில்லாஹ்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top