• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chocolate boy - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
சாக்லேட் பாய் – 20

ஹர்ஷா கூறியதை கேட்டு வாய் பிளந்து நின்றாள் ஆர்த்தி. சித்தார்த் அவனை எரிச்சலாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“ ஆர்த்தி.... ஏன் இப்படி அமைதியா இருக்கே” என்றான் ஹர்ஷா.

“லூசாடா நீ.... ஏன்டா உனக்கு இப்படியெல்லாம் தோணுது” என்றாள் கோபம் மாறாமல்.

“ அவ்ளோ அவசரம் மாப்பிள்ளைக்கு” என்றான் சித்தார்த் நக்கலாக.

“ என்ன மாமா... நீங்க என்னை புரிஞ்சிபீங்கங்க னு நினைச்சி தானே உங்க கிட்ட கேட்டேன்”

“புரிஞ்சிச்சி.....புரிஞ்சிச்சி....”

“சரி மாமா.... அப்புறமா ரூம் போட்டு என்னை ஓட்டுங்க.....நான் வாங்கிக்கிறேன்” என்றவன் ஆர்த்தி புறம் திரும்பி,” ப்ளீஸ் ஆர்த்தி.... எனக்காக போய் பேசு.... அவங்க அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் பண்ணிட்டு அஞ்சு மாசம் கழிச்சி கல்யாணத்தை வைச்சிக்கலாம்னு பேசுறாங்க. அவங்க ஏதாவது முடிவு பண்றத்துக்குள்ள போய் பேசி கல்யாணத்தை அடுத்த மாசமே பண்ற மாதிரி செய் ஆர்த்தி....கையோட தேதியையும் குறிக்க வைச்சிடு.....ப்ளீஸ்......”

“என்ன விளையாடுறீயா? அது எப்படிடா அடுத்த மாசமே வைக்க முடியும்? அவங்களுக்கும் டைம் வேண்டாமா? மண்டபம் பார்க்கணும்.... பத்திரிக்கை அடிக்கணும்...எவ்ளோ இருக்கு?”

“ அவங்க அப்பா ஏற்கனவே தர்ஷி கல்யாணத்துக்கு ரெடியா தான் இருந்தாரு. அதனால அவரால முடியும் ஆர்த்தி.... ப்ளீஸ் மாமா.....பேசுங்க” விடாமல் இருவரிடமும் கெஞ்சினான் ஹர்ஷா.

“ அய்யோ ஹர்ஷா.... பெரியவங்க பேசும் போது நான் எப்படிடா குறுக்க பேசுறது”

“ அதெல்லாம் பேசலாம்....உன் சப்போர்ட்க்கு தான் மாமாவையும் சேர்ந்து பேச சொல்றேன். மாப்பிள்ளைக்கு அக்கா நீ.... அதிலயும் பெரிய நாத்தனார் வேற.... உன் வார்த்தைக்கு மதிப்பில்லாம போணுமா சொல்லு? அதே மாதிரி மாமா பேசுக்கும் அப்பீலே இருக்காது....”

“ ஏன் மாப்ள.... உன் அக்காவ நிச்சயதார்த்தம் பண்ணி ஆறு மாசம் கழிச்சி தான கல்யாணம் பண்ணி கொடுத்தீங்க. இப்போ உனக்கு மட்டும் அடுத்த மாசமே கல்யாணத்த வைக்கணுமா? உனக்கு வந்தா ரத்தம்.... எனக்கு வந்தா அது தக்காளி சட்னியா?” என தன் ஆற்றாமையை பதிவு செய்தான் சித்தார்த்.

“இப்போ இது ரொம்ப முக்கியம்” என அலுத்து கொண்டவள் தம்பியிடம்,” ஹர்ஷா.... நீ ஏன் இப்படி அவரசபடுற னு புரியல. அஞ்சு மாசம் தானடா.... அதுவரைக்கும் நல்ல ஜாலியா லவ் பண்ணுங்களேன்.... ரெண்டு பேரும் ஒரே ஆபிஸ் வேற....” என இழுத்தாள்.

“ ம்ப்ச்.... அப்படியே அவ லவ் பண்ணிட்டாலும்.... அவ அதுக்கெல்லாம் செட் ஆக மாட்டா” என்றான் எரிச்சலாக. அதற்கு மேல் ஆர்த்திக்கு என்ன செய்வதென தெரியவில்லை.தம்பதி இருவரையும் முன்னே அனுப்பிவிட்டு ஒன்றும் அறியாதவன் போல பின்னே வந்தமர்ந்தான் ஹர்ஷா.

நிச்சயதார்த்த தேதி குறிக்கப்பட்டு, அந்த தேதியில் எந்த ஹால் காலியாக இருக்கிறது என அலைபேசியில் ஆராய்ந்து கொண்டிருந்தனர். ஆர்த்தியின் பின்னால் வந்தமர்ந்த ஹர்ஷா அவளை பேசுமாறு உந்திக் கொண்டேயிருந்தான்.

“ அப்பா! என்னப்பா பார்த்துட்டு இருக்கீங்க?” என்றாள் ஆர்த்தி. அவரும் விவரம் கூறினார்.

“ஓ....” என தம்பியை திரும்பி பார்க்க, அவன் மீண்டும் கண்களால் கெஞ்சினான்.

மூச்சை ஒருமுறை இழுத்து விட்டு கொண்டு,” எதுக்குப்பா நிச்சயதார்த்தம், கல்யாணம் னு தனி தனியா வைக்கணும்.மாமாவுக்கு தேவையில்லாத சிரமம் தானே. நாம கல்யாணத்துக்கே நாள் பார்த்துட்டா என்ன?” என்றாள்.

“ என் பொண்ணுக்கு செய்றதுல எனக்கு என்னம்மா சிரமம்? “ என்றார் சந்திரசேகர்.

“ உங்களுக்கு ஒரு சிரமமும் இல்லை. இதோ இங்க ஒருத்தன் உட்கார்ந்திருக்கானே அவனுக்கு தான் அவசரம்” என மனதிற்குள் முணுமுணுத்தவள்,” அப்படி இல்ல மாமா.... கல்யாணத்தை அஞ்சு மாசம் கழிச்சி தை மாசத்துல வைச்சிக்கலாம் னு சொல்றீங்க. அந்த நேரம் மண்டபம் எல்லாம் அமையறது கஷ்டம். நிறைய கல்யாணங்கள் இருக்கும். பொங்கல் வேற வருமில்ல.... எதுக்கு அப்படி அரிபரியா பண்ணணும். அதான் நிதானமா பண்ணலாம் னு சொன்னேன்” ஒரு வழியாக திக்கி திணறி கோர்வையாக கூறி முடித்தாள்.

“ ஆர்த்தி சொல்றதும் சரி தான். தை மாசம் கொஞ்சம் நெருக்கடியா தான் இருக்கும். நீங்க தை மாசம் கழிச்சி நாள் பாருங்கண்ணே” என மின்னாமல் முழங்காமல் இடி ஒன்றை தூக்கி போட்டார் பனிமலர். ஆர்த்தி திகைத்து ஹர்ஷாவை பார்க்க அவன் கொலை வெறியில் முறைத்தான்.

“ அத்தை.... ஆர்த்தி சொன்னது உங்களுக்கு புரியல னு நினைக்கிறேன். அவ நிச்சயதார்த்தத்தயே கல்யாணத்தோட சேர்த்து வைச்சிக்கலாம் னு சொல்றா. அப்போ நிச்சயம் கூட பண்ணாமல் கல்யாணத்தை எப்படி அவ்ளோ நாள் தள்ளி வைக்கிறது. நாம இன்னும் முன்னாடியே அதாவது தை மாசத்துக்கு முன்னாடியே கல்யாணத்தை வைச்சிடுவோமே. கல்யாணத்தை சீக்கிரம் வைச்சிட்டா நிச்சயதார்தம் தனியா எதற்கு” என மனைவிக்கு தோள் கொடுத்தான் சித்தார்த்.

மருமகன் சொன்னது புரிந்தும் புரியாமலும் சரியென தலையாட்டினார் அவர். ஹர்ஷா அவனை மெச்சுதலாய் பார்த்தான்.

“ இப்போ நீங்க ஏன் நிச்சயதார்த்தம் பண்ண வேண்டாம் னு சொல்றீங்க. ஏதாவது ஒரு வகையில கல்யாணத்தை உறுதி செய்றது வழக்கம் தானே” என்றான் வர்ஷினியின் கணவன் கார்த்திக். தம்பதியர் இருவரும் திரு திருவென முழிக்க,” தம்பி.... நம்ம சொந்தபந்தம் முக்கால்வாசிபேர் சென்னையிலேயே இருக்காங்க. நமக்கு ஏதும் பெரிய சிரமமில்ல அவங்களுக்கு அப்படியில்லயே.... வெளியூரிலிருந்து எல்லாரையும் திரட்டிட்டு வரணுமில்லையா அதுக்கு தான் யோசிக்கிறாங்க போல” என பாஸ்கரன் ஒரு யூகத்தை கூற அதையே பிடித்து கொண்டனர் Mrs.& Mr. Siddharth.

பூமிநாதன் இப்படியெல்லாம் யோசிக்கவில்லை என்றாலும் மகளும் மருமகனும் சொல்வதும் வாஸ்தவம் தான் எனப்பட்டது. அது மட்டுமல்லாமல் திருமணம் இன்னும் சீக்கிரம் வைப்பதில் அவருக்கும் மகிழ்ச்சி தான். சந்திரசேகரும் ஏற்கனவே தர்ஷினி திருமணத்திற்கென நகைகள் மற்றும் செலவுக்கான பணத்தை தயார் செய்து வைத்திருந்ததால் பெரிதாக மறுப்பு கூறவில்லை.

ஒரு வழியாக அனைவரும் சம்மதித்து திருமணத்திற்கு நாள் பார்த்தனர். வாசுதேவன் நல்ல நாள் பார்ப்பதில் தேர்ந்தவர். ஆகையால் அப்போதே நாள் பார்க்கப்பட்டது. அரையாண்டு தேர்வு, ஆபிஸ் கான்ப்ரன்ஸ் என ஏதேதோ காரணம் சொல்லி திருமண தேதியை முன்னே தள்ளினர் கள்வர் கூட்டணி. ஒவ்வொரு முறை தேதி சொல்லும் போதும் ஆர்த்தி ஹர்ஷாவை பார்க்க, அவன் கண்களாலேயே “ இன்னும் கொஞ்சம் முன்னாடி” என கெஞ்சிக் கொண்டிருந்தான். அப்படி இப்படி என பேசி இரண்டு மாதங்களில் திருமணம் என கொண்டு வருவதற்குள் சித்தார்த்துக்கும் ஆர்த்திக்கும் நா வறண்டு போனது.

வாசுதேவன் நவம்பர் மாதத்தில் ஒரு நாளை கூற, ஆர்த்தி ஹர்ஷாவை பார்க்க திரும்ப, சட்டென அவள் நாடி பிடித்து நிறுத்தினான் சித்தார்த். “ அவனை பார்க்காத....” என காதருகே முணுமுணுத்தவன், “ இந்த தேதி ஓ.கே. அன்னைக்கே கல்யாணத்தை வைச்சிக்கலாம்” என பேச்சை முடித்தான்.

“ மாமா....” என ஹர்ஷா மெல்லிய குரலில் அழைக்க, “ என்னடா.... வேணும்னா இப்போவே ஒரு மஞ்ச கயிறு எடுத்துட்டு போய் கட்டி பொண்ண தூக்கிட்டு வா....தயவுசெய்து இதுக்கு மேல எங்கள படுத்தாத.... “ என அடிக்குரலில் சீறினான். அதற்கு மேல் அவர்களை வற்புறுத்த முடியாது என புரிந்து கொண்டவன் மனதை சமாதானம் செய்து கொண்டான்.

ஹாலில் இவ்வளவும் நடந்து கொண்டிருக்க, இது எதுவும் தெரியாமல் தர்ஷினி தனது சின்ன நாத்தனாரோடு பேசி..... இல்லை.... இல்லை..... காவ்யா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள். பெரியவர்கள் பேசி முடிக்கும் வரை அவள் பட பட பட்டாசாய் படபடத்து விட்டு போனாள். அவள் போன சிறிது நேரத்தில் பெண்கள் அனைவரும் ( தர்ஷினி வீட்டு பெண்கள்) வந்து அவளை வாரி முகர்ந்தனர். தன் தாயும் உச்சி முகர்ந்ததில் மெய் சிலிர்த்து போனாள் தர்ஷினி.

“ தங்கமான ஆளுங்க அண்ணி. எல்லாரும் நல்ல விதமா பழகுறாங்க. நம்ம தர்ஷினி கொடுத்து வைச்சவ” என திருஷ்டி கழிய நெட்டி முறித்தார் காயத்ரி.

“ மாப்பிள்ளை நல்ல அழகாயிருக்காருடி மல்லி. அமைதியானவரு போல...” – ஆனந்தி.

“ அமைதியா.... அவனா... அய்யோ... அய்யோ... இல்லவே இல்ல....” வாயிலடித்து கொள்ளாத குறையாக கூச்சலிட்டது அவள் மனம். வர்ஷினியோ வாய் விட்டு சிரித்தாள். பின்னே தர்ஷினி மனம் கூச்சலிட்டது இவள் காதுகளில் கேட்டிருக்குமே.

அதன் பின் எல்லாமே துரிதமாகவே நடந்தது. ஹர்ஷா நடக்க வைத்திருந்தான். நிச்சயதார்த்தம் கல்யாணத்தோடு சேர்த்து வைத்து கொள்ளலாம் என முடிவு செய்திருந்ததால் இப்போது ஹர்ஷா வீட்டினர் பெண்ணுக்கு பூ வைத்து விட விரும்பினர். அதற்காக சித்தார்த்தும் ஆர்த்தியும் பழங்கள் மற்றும் பூ வாங்க செல்ல, மாப்பிள்ளை வீடு என்றான பிறகு சாப்பிட வைக்காமல் அனுப்ப முடியுமா? ஆனால் இதற்கு பிறகு சமைக்க முடியாது என்பதால் கார்த்திக் சாப்பாடு ஆர்டர் பண்ணிடலாம் என யோசனை சொன்னான். அதற்காக அவனும் பாஸ்கரனும் சென்றனர்.

வீடே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ஊடல் கொண்ட இரு இதயங்கள் மட்டும் தனிமையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஹர்ஷா நினைத்திருந்தால் தர்ஷினியை சந்தித்திருக்கலாம். ஆனால் அவன் செய்யவில்லையே......

ஆயிற்று.... பூ வைத்து, விருந்து பரிமாறி, இரு குடும்பமும் கலந்து உறவாடி, அனைவரும் கலைந்து சென்றிருந்தனர். இன்னும் தன் தாய், தந்தை தர்ஷினியிடம் சகஜமாக பேசவில்லை. பெருமூச்சு விட்டுகொள்வதை தவிர தர்ஷினிக்கு வேறு வழி தெரியவில்லை. நாளை அப்பாவோடு வந்துவிடுவதாக கூறியதால் கார்த்திக் வர்ஷினியையும் குழந்தையையும் விட்டு விட்டு சென்றிருந்தான்.

ஹரியை அறையில் தூங்க வைத்து விட்டு வெளியே வந்த வர்ஷினியை அப்படியே மொட்டை மாடிக்கு இழுத்து சென்றாள் தர்ஷினி.

தொடரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை

FB_IMG_1566022098072.jpg
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Aarthi and siddarth sema gala gala partyz.. kalyana date fix panna comedy sooper
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top