• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

Chocolate boy - 24

Messages
139
Likes
1,071
Points
102
Location
Chennai
#1
சாக்லேட் பாய் – 24

பைக் சாவியை விரலில் சுழற்றியபடியே உள்ளே வந்தான் ஹர்ஷா. அத்தனை நேரமும் வாசல் மீதே நிலைத்திருந்த தர்ஷினியின் பார்வை இப்போது தான் பணியில் முழ்கியிருந்தது. கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவனின் பார்வை நேராக தன்னவள் மீது பதிந்தது. அடர் வண்ணங்களின் உபயமோ..... இல்லை காதல் கைகூடிய உவகையோ..... அழகின் சிகரமாய், தேவதையின் பிம்பமாய் கூடுதல் மெருகோடு அமர்ந்திருந்தாள் தர்ஷினி. தன்னையுமறியாமல் மெய்மறந்து நின்றவன், தன்னவளை முடிந்த மட்டும் கண்களால் பருகினான். காதோரம் பூத்திருந்த ரோஜா இவையனைத்தும் உனக்காக தான் என கண் சிமிட்டியது. இதுவரை தர்ஷினி ஆபிஸுக்கு பூ வைத்து வந்ததில்லையே..... மறைத்தாலும் அடங்காது துளிர்த்த புன்னகையை பாவம் தர்ஷினி தான் பார்க்கவில்லை. “ போடா.... நீயும் உன் பழி வாங்குற ஐடியாவும்” என அவன் காதல் மனம் பித்து பிடித்து கத்த,” ம்ஹூகும்..... அவளை பழி வாங்காம விடமாட்டேன்” என ஆண் திமிர் முரண்டு பிடித்தது. நீண்டதொரு மூச்சை இழுத்து விட்டவன் விறுவிறுவென தன் இருக்கைக்கு போனான். அவன் வந்ததை கவனிக்காமல் தர்ஷினி வேலை பார்த்துக் கொண்டிருக்க, சத்தம் காட்டாமல் நம் சாக்லேட் பாயை போக விடுவார்களா என்ன?

“ ஹாய்டா ஹர்ஷா.....” என சாரு வழக்கம் போல் தொடங்க, சலேரென திரும்பி பார்த்தாள்..... வேற யாரு நம்ம தர்ஷினி தான்.

ஆவலாய் திரும்பியவளின் பார்வை அவன் மேல் விழும் முன் தன் பார்வையை திருப்பிக் கொண்டானவன்.


“ ஹாய் சாரு.....”

“ ஏன்டா நேற்று வரல?”

“ அய்யே....ஸ்கூல் டீச்சர் மாதிரி ஏன் வந்ததும் லீவ் லெட்டர் கேக்குற” என்றபடியே அவளது பதிலை எதிர்பார்க்காமல் அவள் கேள்விக்கு பதிலும் சொல்லாமல் தன் இருக்கையில் சென்று அமர்ந்தான். வந்ததிலிருந்து தன்னை பார்க்காமல் ஆட்டம் காட்டுபவனை கீழ் கண்ணால் முறைத்து பார்த்து கொண்டிருந்தாள் தர்ஷினி.


“ பார்க்காதடா ஹர்ஷா.... அவளை பார்க்காத... அவ வேற இன்னைக்கு ஒரு மார்க்கமா வந்திருக்கா.... கவுந்துடாதடா பக்கி....” என தனக்குள் சொல்லி கொண்டவன் தன் கணினியை உயிர்பித்தான். தர்ஷினி ஆர்வமாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அது பாஸ்வேர்டு கேட்டது.

“ பார்றா....என் டெக்னிக்கை எனக்கே யூஸ் பண்றாங்களா மேடம்” என தனக்குள் சிரித்து கொண்டவன் சில பல வார்த்தைகளை போட்டு முயன்றான். அது திறக்கவேயில்லை. நிமிர்ந்து அவளை பார்க்க, சட்டென குனிந்து கொண்டாள் பாவை.

“ அச்சோ..... பாவம் புள்ள....ரொம்ப தவிக்கிறாளே” மீண்டும் காதல்மனம் தலை தூக்க, “ போதும்.... ஜொள்ளு விட்டது. அவ உன்னை கை நீட்டி அடிச்சவ. ஞாபகம் இருக்கட்டும்” என ஆண்மனம் கொட்டியது.

“ பாஸ்வேர்டு போட்டு வைச்சா நாங்க அப்படியே வந்து பேசிடுவோமாக்கும்... ஹேஹேய்.... யாரு கிட்ட?” என்றபடியே சில நிமிடங்களில் அந்த பாஸ்வேர்டை அசால்டாக உடைத்தான்.

“ என்ன இவ்ளோ நேரம் ஆச்சு. அவன் எழுந்து வரவேயில்ல?” என நகத்தை கடித்து கொண்டிருந்தாள் தர்ஷினி.

“ ரீனா.... ரீனா...” என அழைத்தான் அவன்.

“ என்ன ஹர்ஷா?”

“ நான் சிஸ்டம் அட்மின். எப்படியாபட்ட பாஸ்வேர்டையும் மேகி நூடூல்ஸ் மாதிரி ரெண்டே நிமிஷத்துல உடைச்சிடுவேன்” என்றான் நக்கலாக. அவன் தன்னிடம் வேண்டுமென்றே பேசாமல் இருக்கிறான் என தெளிவாக புரிந்தது தர்ஷினிக்கு. கண் கலங்க அவனை ஏறிட்டாள். இப்போது தங்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயமானதை சொல்லுவானா மாட்டானா? என குழம்பினாள்.

“ எதுக்கு இப்போ சம்பந்தமே இல்லாமல் இத எங்கிட்ட சொல்ற?” என சலித்தாள் ரீனா.

“ சும்மா... ஒரு ஜென்ரல் நாலேட்ஜுக்கு தான்”

“ டேய்.... எனக்கென்னவோ நீ யாருக்கோ ஏதோ மெசேஜ் கொடுக்குற மாதிரி தோணுது.... இரு... இரு.... கண்டுபிடிக்கிறேன்”

“ஹா...ஹா....ஹா.... இதையே நீ இப்போ தான் கண்டுபிடிக்கிறியா.... டூ லேட் ரீனா” என சிரித்தவனை ரீனாவும் தர்ஷினியும் கொலைவெறியில் முறைத்தனர். அதற்கு மேல் தர்ஷினியால் அங்கே அமர்திருக்க முடியவில்லை. அவளது டீம் லீட் வந்து விட, அவள் அவனது அறைக்கு சென்றுவிட்டாள். போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.

தர்ஷினிக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. என்ன தான் பிரச்சனை இவனுக்கு? நான் அடித்ததிற்கு அப்போதே மன்னிப்பும் கேட்டாயிற்று. பிறகும் கூட குறுஞ்செய்தி மூலமாகவும், போன் அழைப்பு மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், பார்வையாலும் மன்னிப்பு கேட்டாயிற்று? இன்னும் கோபமாக தான் இருக்கிறான் என்றால் எதற்காக இப்போது காதல் விஷயத்தை வீட்டில் சொல்ல வேண்டும்? கல்யாணம் வரை வந்த பிறகும் கூட பேசாமல் இருந்தால் எப்படி? பல கேள்விகள் அவள் மண்டைக்குள் மத்தளம் வாசித்தாலும் விடை மட்டும் கிடைக்கவேயில்லை.

மதிய உணவு இடைவேளையில் வெளியில் வந்தமர்ந்த தர்ஷினிக்கு பீ.பீ தாறுமாறாக ஏறியது. பெண்கள் சிலர் சுற்றி நின்றிருக்க, ஹர்ஷா நடுவில் நின்று எதை பற்றியோ சுவரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தான். இது வழக்கமாக நடக்கும் ஒன்று தான் என்றாலும் இன்று அவளுக்கு பற்றி கொண்டு வந்தது.

அவள் வந்ததை கவனித்த ரீனா அருகில் வந்து, “ வா.... தர்ஷினி சாப்பிட போகலாம்.” என அழைத்தாள்.

“ எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. நீங்க எல்லாரும் போங்க.”

“ ஓகே.... சாரு வா நாம போகலாம்”

“ ம்ஹூம்.... நான் ஹர்ஷா கூட வரேன்”

“ ஏ.... சீ.... வா”

“ போடி.... நான் என் ஆளு கூட தான் வருவேன்” என எக்கச்சக்கமாய் உளறி கொட்ட, துடித்து போனாள் தர்ஷினி.

“ அய்யய்யோ.... பயங்கரமா காண்டாயிடுவாளே ...” ஒரு கண்ணை சுருக்கி ஸ்.... என பதறியவனுக்கு திரும்பி பார்க்காமலே தர்ஷினி முறைப்பது புரிந்தது.

அதற்கு மேல் அவனாலேயே பொறுக்க முடியவில்லை,“எம்மா.... தாயே.... தயவுசெய்து உன் திருவாயிக்கு பெரிய திண்டுக்கல் பூட்டா ஒன்று போடு. இனிமே இப்படி உளறாத....பிகாஸ் ஐ யம் கமிட்டட்” என்றதும் அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றனர் அவனை வட்டமிட்டு நின்றிருந்த மங்கையர்.

“ டேய் ஹர்ஷா.... என்னடா சொல்ற?”

“ உண்மையாவா?”

“ பொய் தானே சொல்ற?” ஆளாளுக்கு தங்கள் அதிர்ச்சியை வெளிகாட்ட, தர்ஷினிக்கு படபடப்பு அதிகமானது.

“ ஹேய்..... என்ன எல்லாரும் இவ்ளோ ஷாக்காகுறீங்க? ஏன் நானெல்லாம் லவ் பண்ண கூடாதா?”

“ ஹர்ஷா.... நம்பவே முடியலடா” – ரீனா.

“ அய்யோ என் நெஞ்சு வெடிச்சிடுச்சே” என மெய்யும் பொய்யுமாய் சிணுங்கினாள் சாரு.

“ அவங்க யார் ஹர்ஷா? போட்டோ இருந்தா காட்டேன்” என்றாள் வித்யா ஆவலாக.

“ போட்டோ எதுக்கு? நேர்லயே காட்ரேன். இங்க தான் இருக்காங்க” என ஓரகண்ணால் தர்ஷினியை பார்க்க, அவளுக்கு நாணத்தில் முகம் சிவந்துவிட்டது. தன் காதல் மன்னனின் அழைப்பிற்காக படபடப்போடு காத்திருந்தாள்.

“ ஏய்.... சும்மா எங்களை ஏமாத்துறீயா?” ரீனா கேட்க,

“ என்னது இங்கேயா? என்னடா சொல்ற லூசு.... நான் வேற எக்குதப்பா உளறி வைச்சேனே....” என சாரு முழிக்க,

“ பிராமிஸ்?” என கை நீட்டி உறுதி கேட்டாள் இனொருத்தி....

“ பிராமிஸ் பா..... இங்கே நம்ம ஆபிஸில.... நம்ம ப்ளோர்ல தான் இருக்காங்க. அப்புறம் சொல்ல மறந்துட்டேனே..... எங்க லவ் டிராக் முடிஞ்சி.... கல்யாண டிராக்கும் ஸ்டார்ட் ஆக போகுது.... “ என தன் திருமண தேதியை கூற, பொத்தென அமர்ந்துவிட்டாள் சாரு.

“ என்னடா ஷாக்குக்கு மேல ஷாக் கொடுக்குற....”

“ முதல்ல பொண்ணு யாருனு சொல்லு”

“ இங்க தான் இருக்காங்க னு சொல்லிட்டேன்... கண்டுபிடிங்களேன்” என மேஜை மீது சாய்ந்து நின்று சிரித்தான்.

“ சை.... இதுல கூட விளையாட்டா? அழகா என்னை கூப்பிட்டு அறிமுக படுத்த வேண்டியது தானே? துரை பேச மாட்டாராம்.... அதுக்கு தானே இந்த அலம்பல்” என நொடித்து கொண்டாள் தர்ஷினி. பெண்களின் கண்கள் நாலாபுறமும் அலைபாய, தர்ஷினியை அவர்கள் சிறிதும் நினைக்கவில்லை. ஓயாமல் பேசும் ஹர்ஷாவிற்கும், பேசவே யோசிக்கும் தர்ஷினிக்கு காதல் துளிர்க்கும் என எப்படி அவர்கள் யோசிப்பார்கள்?

“ கிருபாவா....?”

“ இல்ல...”

“ யாழினியா...?”

“சே....சே.....”

ரீனா, “ ஸ்டாப்.... ஸ்டாப்.... என்னதிது ஒவ்வொரு பேரா சொல்லிகிட்டு? ரப்பிஷ்ஷா இருக்கு” என அதட்டியவள், “ ஹே.... இங்க யாருப்பா நம்ம சாக்லேட் பாயோட உட்பி ப்ளீஸ் நீங்களே சொல்லிடுங்க” என உரக்க கேட்க, அனைவருமே பரபரப்பாய் அங்கே கூடினர்.

“ இன்னைக்கு யாரெல்லாம் ஹோம் வர்க் பண்ணல” என ஆசிரியர் கேட்டதும் தலைகுனிந்து எழுந்து நிற்கும் மாணவியை போல எழுந்து நின்றாள் தர்ஷினி.

அனைவரின் பார்வையும் அவள் பாய, கூச்சத்தில் நெளிந்தாள் அவள்.

“ ஹேய்.... தர்ஷினி நீயா?”

“ அடிப்பாவி.... இந்த பூனையும் பால் குடிக்குமான்ற மாதிரி இருந்துகிட்டு இது பீரே குடிச்சிருக்கு பாரேன்” ஆளாளுக்கு தங்கள் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியாய் வெளிபடுத்தினர்.

“ முதல்ல நீ இங்க வா... எங்கிட்ட கூட சொல்லலயில்ல நீ” என கை பிடித்து இழுத்து வந்தாள் ரீனா.அவளை ஹர்ஷாவின் பக்கத்தில் நிற்க வைத்து அழகு பார்த்தனர்.

தன் இரு கரங்களாலும் ஹர்ஷாவின் முகத்தை தாங்கிய தேவா, “ தேங்க்ஸ்டா மச்சான்.... எங்க வயித்துல பால வார்த்துட்டே...” என உணர்ச்சி பொங்க கூற, தலையில் அடித்துக் கொண்டான் ஹர்ஷா.

“ காங்ராஜுலேஷன்ஸ்....” என ஒவ்வொருவரும் வாழ்த்து தெரிவிக்க,” ஒரு நிமிஷம்” என தன்னிடத்திற்கு சென்றவள் இனிப்பு பெட்டியோடு திரும்பினாள்.

ஹர்ஷாவை நோக்கி,” அ... அம்மா... நம்மள சேர்ந்து கொடுக்க சொன்னாங்க” என தயங்கி தயங்கி பேசியவள், தலையை குனிந்த படி இனிப்பு பெட்டியை நீட்ட, அவளை அழமாக பார்த்தபடி வாங்கினான் ஹர்ஷா.

அவளது வெட்கத்தையும், அவனது பார்வையையும் பார்த்தவர்கள்,” ஓ....ஓஹோ...” என ஆர்பரிக்க..... அந்த தளமே அதிர்ந்தது. அப்புறமென்ன அனைவரும் அன்று ஒன்றாக சேர்ந்து உண்டவர்கள் ஹர்ஷா தர்ஷினி பெயரிட்ட பெரிய கேக்கை வரவழைத்து வெட்ட வைத்து, ஒருவருக்கொருவர் ஊட்டி விட செய்தனர்.

“ ஹர்ஷா உங்க லவ் ஸ்டோரி பற்றி சொல்லுடா?”

“ யாரு முதல்ல ப்ரபோஸ் பண்ணது?”

“ நீங்க அடிச்ச லூட்டி எல்லாம் எங்களுக்கு தெரியவேயில்லையேடா?” தங்கள் ஐயங்களை கேட்டு துருவ,

“ என்னப்பா.... எல்லா கொஸ்டீன்ஸும் என்னை மட்டும் தான் கேட்பீங்களா? அவங்கள யாரும் கேட்கமாட்டீங்களா?” என தர்ஷினி மாட்டி விட, மலங்க மலங்க விழித்தாள் அவள்.

இருவரும் அருகருகே இருந்தாலும்.... சில நொடிகள் தோள் உரசிக் கொண்டாலும்.... ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி நின்றாலும், அவன் அவளிடம் பேச மட்டும் இல்லவே இல்லை. அவன் பேச கூடாது என வைராக்கியத்தோடு இருக்கிறான் என்பதை நன்றாக புரிந்து கொண்டாள். அவனுக்கு எப்போது தோன்றுதோ அப்போது பேசட்டும் என விட்டுவிட்டாள். வேறு என்ன செய்வாள் பாவம்?

அதன் பின் அவர்கள் பேசிக் கொள்ளவேயில்லை. அலுவலகத்தில் தான் எல்லோரும் அவர்களை சேர்த்து வைத்து கேலி செய்வார்கள். அப்போதும் மற்றவரின் மூலமாக தான் பேசிக் கொள்வார்கள்.


இரண்டு மாதங்களை பல்லை கடித்துக் கடத்தியவர்களுக்கு அழகாய் விடிந்தது மணநாள்.

தொடரும்....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 
Advertisement

Latest Episodes

Advertisements

Top