• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chocolate boy - 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
சாக்லேட் பாய் – 25

விடியற்காலை மணி 4.30......

பொழுது புலராத அந்த வேளையிலும் களைக் கட்டியிருந்தது அந்த திருமண மண்டபம். வாசலில் ஹர்ஷா வெட்ஸ் தர்ஷினி என பூக்களால் அலங்கரித்த பலகை கட்டப்பட்டு கொண்டிருந்தது. திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்கவென தட்டில் கல்கண்டு, ரோஜா இதழ்கள் மற்றும் பன்னீர் சொம்பை அடுக்கிக் கொண்டிருந்தாள் வர்ஷினி. அதிகாலையில் குளித்து , பட்டுசேலையில் பாந்தமாய் இருந்தவளை உரசியபடி நின்றிருந்தான் கார்த்திக்.

“ ச்சூ.... எவ்வளவு வேலையிருக்கு. இங்க நின்று என்னை இடிச்சிட்டு இருக்கீங்க.” என அதட்டினாள் மனைவி.

“ இதுவும் வேலை தானே? தனியா நின்னு வேலை பாக்குறீயே..... உதவலாம் னு வந்தேன்”

“ ம்க்கும்... கல்கண்டு தட்டு அடுக்க ரெண்டு பேரா?” என அலுத்து கொள்ள

“ வேணானா போ.... நான் போறேன்” என முறுக்கி கொண்டவனை கரம் பிடித்து நிறுத்தினாள் வர்ஷினி.

“ சரி....சரி.... கோச்சிகாதீங்க...” என சிணுங்கினாள். அவர்களின் ஊடல் கூடல் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க,

“ சேர் எல்லாம் நல்லா துடைச்சி போடுப்பா” – சந்திரசேகர் பணியாள்களை ஏவிக் கொண்டிருந்தார். அவர்கள் அனைவருக்கும் காபி கொடுக்கும் வேலை மல்லிகாவினுடைது.

“ மாப்பிள்ளை வீட்டுக்கு காபி கொடுத்து அனுப்பிட்டியா மல்லி....”

“ அனுப்பிட்டேங்க”

“ சமையல் கட்டுல யார் நிற்குறது?”

“ பாஸ்கரன் மாமாவும், முகுந்தன் அண்ணனும் நிற்கிறாங்க. மாலைய வாங்க போன புள்ளைங்க வந்துட்டானுங்களா?”

“ வந்தாச்சு மல்லி. வர்ஷினி கிட்ட கொடுத்து அனுப்பிட்டேனே?”

“ சரிங்க. அப்போ உள்ளே இருக்கும்” எனறவாறே அடுத்தவருக்கு காபி கொடுக்க சென்றார்.

காயத்ரியும், ஆனந்தியும் இன்னும் சில உறவு பெண்களோடு மணமேடையில் வேண்டியதை அடுக்கிக் கொண்டிருந்தனர்.

“ அம்மாடி..... தர்ஷினி ரெடியாகிட்டாளா?” சேகர் தன் பெரிய மகளிடம் கேட்டார்.

“ ப்யூட்டி பார்லர் ல இருந்து வந்தவங்க ரெடி பண்ணிட்டு இருக்காங்கப்பா.”

“நீ போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுமா. நேரமாகுது”

“ அப்பா.... ஆறரை மணிக்கு தான் முகூர்த்தம். அதுக்குள்ள ரெடியாகிடுவாப்பா. நானும் போய் பார்க்கிறேன்” என்றவள் கை வேலையை முடித்து விட்டு, தென்பட்ட உறவுகளை உபசரித்தவாறே மணமகள் அறைக்கு சென்றாள்.

ஏற்கனவே அழகாய் இருக்கும் தர்ஷினி அழகு நிலைய பெண்ணின் கைவண்ணத்தில் இன்னும் தேவதையாய் மின்னிக் கொண்டிருந்தாள். அவளது அலங்காரத்தில் பூரித்த வர்ஷினி எப்போதும் போல் தங்கையின் கன்னத்தை பிடித்து ஆட்டினாள்.

“ சூப்பரா இருக்கேடி தர்ஷூ....”

“ ஆ...” என மெதுவாக கத்தியபடி தர்ஷினியும் எப்போதும் போல் கன்னத்தை தேய்த்து கொணடாள்.

“ இந்த மிளகாய் பழ சிவப்பு பட்டு உனக்கு செம மேட்ச்சா இருக்குடி”

“ உனக்கும் நாவல் பழ கலர் பட்டு எடுப்பா இருக்கு”

“ அப்போ எனக்கு?” என வந்து நின்றான் ஹரிகுட்டி.

“ ம்... ஒட்டிக்கோ... கட்டிக்கோ வேஷ்டி.... பச்சை கலர் சட்டை... செம டா ஹரிகுட்டி. இன்னைக்கு நீ தான் ஹீரோ...” தர்ஷினி அவனை தூக்கி கொண்டு கொஞ்சினாள்.

“ ஹே.... ஹீரோ ன உடனே தான் ஞாபகம் வருது. உன் ஹீரோ என்ன செய்றார் னு போய் பார்த்துட்டு.... அப்படியே அவங்களுக்கு ஏதாவது தேவையா னு கேட்டுட்டு வரேன்.” என ஓடினாள் வர்ஷினி.

அலங்காரம் முடித்து அமர்ந்தவளுக்கு நேற்று நடந்த ரிஷப்சன் மனதில் தோன்றியதும் அவள் இதழ்கள் லேசாய் சிரித்தன. அன்று அலுவலகத்தில் திருமணத்தை பற்றி அறிவிக்கும் போது கூட அவன் பேசாததில் தர்ஷினிக்கு அவன் மௌனத்திற்கு கோபத்தை தாண்டியும் வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்பது நன்றாகவே புரிந்தது. அதன் பின் அவள் பேச முயற்சிக்கவே இல்லை. அவளிடம் பேசவில்லை என்றாலும் அவளுக்கு தெரியாமல் அவளை அவன் பார்ப்பதையும், ரசிப்பதையும் அவள் உணர்ந்திருந்தாள். அதை விட கல்யாண வேலைகளில் அவன் காட்டிய துரிதம் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனே பேசட்டும் என சந்தோஷமாக காத்திருக்கலானாள்.

நேற்று ரிஷப்சனில்......

“ இந்தாங்க அண்ணி.... இந்த ஜூஸ் குடிங்க.... ரொம்ப டயர்டா இருக்கீங்க போல... கொஞ்சம் உட்காருங்கண்ணி” என்றபடி மேடையில் நின்றிருந்த தர்ஷினியிடம் பழச்சாறை நீட்டினாள் காவ்யா. சொந்த பந்தங்கள், நண்பர்கள் என ஓரளவு அனைவரும் கைகுலுக்கி பரிசு கொடுத்து விட்டு சென்றிருந்தனர். அப்போது தான் சற்று ஆசுவாசமாக அமர்ந்தாள் தர்ஷினி.

“ ஓய்.... அவங்களுக்கு மட்டும் தான் ஜூஸ்ஸா? நாங்களும் கூட தானே நிற்கிறோம்” என்றான் ஹர்ஷா.

“ நீ அண்ணி டயர்டா இருக்காங்க.... அவங்களுக்கு ஜூஸ் எடுத்துட்டு வா னு தானே சொன்னே? எனக்கும் சேர்த்து எடுத்துட்டு வா னு சொல்லலயே.....” என்றாள் விட்டேற்றியாக. சட்டென தர்ஷினி ஹர்ஷாவை பார்க்க, அவன் முறுவலை மறைத்து வேறு புறம் பார்ப்பது புரிந்தது.

“இப்படியே திருட்டுதனம் பண்ணிட்டு இரு. எல்லாம் நாளைக்கு வரைக்கும் தானே.” என மனதிற்குள் நினைத்து சிரித்தாள் தர்ஷினி.

“ இந்தாங்க..... நீங்க குடிங்க” அவனிடம் பழச்சாறை நீட்டினாள்.

கரும்பச்சை வண்ண பட்டில் பளீரென இருந்தவளை பார்க்காமல் இருக்க ஆன மட்டும் முயற்சி செய்து தோற்று போனான் ஹர்ஷா. இதில் அவள் வேறு அவனை பார்த்து நாண பூக்களை வீச, தலை குப்புற வீழ்ந்தான் அவன்.

“ சே.... நானும் எவ்வளவு நாள் தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது? முடியலயே..... ஹர்ஷா இன்னைக்கு ஒரு நாள் தான்டா.... கெத்தை விட்டுறாதடா....” பெரும்பாடு பட்டு மனதை அடக்கியவன்,” பரவாயில்ல.... நீ முதல்ல குடி...” என்றவன்,” காவி.... எனக்கும் எடுத்துட்டு வா” என்றான் தங்கையிடம்.

“ உனக்கு நான் எடுத்துட்டு வர மாட்டேன்” என அவள் முறுக்கி கொள்ள,” ஏன்டா.... அண்ணன் மேல என்ன கோபம் உனக்கு?” என்றான் கொஞ்சலாக.

“ அதுவா.... நீ எனக்கு மட்டும் தங்க வளையல் வாங்கி கொடுத்தியாம்.... அவளுக்கு வாங்கி கொடுக்கலயாம். அதுக்கு தான் அம்மா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கராங்க” என்றபடி வந்தாள் ஆர்த்தி கையில் பழச்சாறோடு.

தம்பிக்கு பழசாறை கொடுத்தவள்,” ஏன்டி.... நான் அவன் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணேன் அதனால எனக்கு வாங்கி கொடுத்தான். உனக்கு ஏன் பொறாமை?” என தங்கையிடம் வம்பிழுத்தாள்.

“ லவ்வுக்கு ஹெல்ப் பண்ணாங்களா? என்ன ஹெல்ப்?” என தர்ஷினி மனதிற்குள் நினைத்ததை காவ்யா வாய் விட்டே கேட்டுவிட்டாள்.

“ எவ்ளோ பெரிய ஹெல்ப் தெரியுமா? சொல்ல போனா நாளைக்கு நடக்க போற இந்த கல்யாணம் இன்னும் மூனு மாசம் கழிச்சி நடக்க வேண்டியது.” என கூற தொடங்கியவள் நிச்சயதார்த்ததிற்கு தேதி குறித்து கொண்டிருந்தவர்களை திருமணத்திற்கே அதுவும் சீக்கிரமே தேதி குறிக்க வைத்த கதையை கூறினாள்.

“ இன்னும் முன்னாடி..... இன்னும் முன்னாடி.... னு இவன் படுத்துன பாடு இருக்கே.... அப்பப்பா.... அதுக்கு தான் இந்த வளையல்” என பேசி முடித்து மூச்சு வாங்கினாள் ஆர்த்தி.

“ இப்போ எதுக்கு இந்த டெலிகாஸ்டிங்?” என்ற ஹர்ஷாவுக்கு கைகளில் முகத்தை புதைத்து கொள்ளலாமா என எண்ணுமளவுக்கு வெட்கம் வந்துவிட்டது.

“ பின்னே என் வீர தீர சாதனையை எல்லார் கிட்டயும் சொல்ல வேண்டாமா.... சரி.... சரி... நீ ஜூஸ் குடி.... இன்னும் நாலு பேரு கிட்ட சொல்லிட்டு வரேன்” என சென்றவள் மறக்காமல் தங்கையை இழுத்து கொண்டு போனாள்.

“அவங்க சொன்னதெல்லாம் உண்மையா?” என விழியாலே வினவி விழி விரித்தவளின் விழிகளில் விரதம் முறிந்து விழுந்தவன் தன் அக்மார்க் மந்தகாச புன்னகையை சிந்த, அதில் மங்கையவளின் மலர் மனம் மலர்ந்து போனது.

“ தர்ஷினி ரெடியாகிட்டாளா?” என்றபடி வந்த மல்லிகா மகளின் அழகில் பேச்சற்று போனாள். அவரின் குரல் கேட்டு சுற்றம் உணர்ந்தவளின் அடிநெஞ்சில் ஹர்ஷாவின் புன்னகை முகம் மறையாது இருந்தது. தன்னருகே வந்தும் ஏதும் பேசாத தாயை கண்டு,” அம்மா.... இன்னும் என் மேல கோபம் போகலியாமா?” என்றாள் முகம் வாட.

மகளின் முகவாட்டத்தை தாளாமல்“ அப்படியெல்லாம் இல்லமா.... மனசுல எதையும் போட்டு உளப்பிகாதே தர்ஷினி.... சந்தோஷமா சிரிச்ச முகமா இரு....” என்றார் அவள் முகத்தை வருடியவாறு. ஆனாலும் எனக்கு கோபம் இல்லை என அவரால் கூற முடியவில்லை.

உறவினர்களின் வாழ்த்துக்கள், தோழமைகளின் கேலி, கிண்டல்கள், பெரியவர்களின் ஆசீர்வாதங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் என அதன் பின் நேரம் றெக்கை கட்டி பறந்தது.

“ மாப்பிள்ளையை வரச் சொல்லுங்கோ” என்ற ஐயரின் குரலை தொடர்ந்து நேற்று ரிஷப்சனில் ஸ்லிம் பிட் கோட் சூட்டில் அனைவரையும் வசீகரித்தவன், பட்டு சட்டையும், பட்டு வேட்டியும் உடுத்து கம்பீரமாய் வந்தமர்ந்தான்.

சிறிது நேர மந்திர ஓதல்களுக்கு பிறகு,” பொண்ணை வரச் சொல்லுங்கோ” என்ற குரலை தொடர்ந்து வானத்து வெண்ணிலவாய், எப்போதும் போல் ஹர்ஷாவை கவரும் மௌன தேவதையாய் கொடி போல் அசைந்து வந்து அவனருகே வந்தமர்ந்தாள் தர்ஷினி.

“கெட்டி மேளம்.... கெட்டி மேளம்” என்றதும் மங்கள இசை முழங்க.... வந்தவர்கள் அட்சதை தூவ, ஹர்ஷா தர்ஷினியின் கழுத்தில் பொன் தாலி கட்டி வகிட்டில் குங்குமமும் இட்டான்.

தன் காதல் கைகூடிவிட்டதில் ஆனந்த கண்ணீர் கன்னங்களை நனைக்க, குனிந்து தன் நெஞ்சில் ஆடும் தாலியை மனம் நிறைந்து பார்த்துக் கொண்டிருந்தவளின் காதில்,”நீங்க ஹர்ஷா மாமாவ பார்க்கணுமாம்” என ஒரு வாண்டு கிசுகிசுத்தது.

நிமிர்ந்து பார்த்தவளின் கையை ரகசியமாய் பற்றி கண்ணடித்தான் அவளது சாக்லேட் பாய்.

தொடரும்......

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை

20190927_215428.jpg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top