• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chocolate boy - 27 (1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
சாக்லேட் பாய் - 27

“Lets break up.... Lets break up” அவன் கூறிய வார்த்தைகள் அவன் செவிகளிலேயே மீண்டும் மீண்டும் மோதி ஓலித்தது. அவளிடம் சுலபமாக கூறிவிட்டாலும் அவன் மனமே அந்த அதிர்ச்சியிலிருந்து வெளி வர மறுத்தது. தன் மீது துளியளவு நம்பிக்கை கூட இல்லாதவளிடம் காதல் எப்படி இருக்கும்? காதல் இருந்ததிருந்தால் நான் முத்தமிட்டதும் அவளுக்கு வெட்கம் தானே வந்திருக்க வேண்டும்? மாறாக கோபம் ஏன் வந்தது? பார்த்ததும் நம்பிக்கை வரவில்லை என்றாள். சரி.... பழகிய பின்புமா அந்த நம்பிக்கை வரவில்லை? அவள் மனதில் என்னை பற்றிய மதிப்பீடு தான் என்ன? தன்னை தானே கேட்டுக் கொண்ட கேள்விகளுக்கு விடை மட்டும் கிடைக்கவில்லை. அவளை ஆபிஸில் பார்க்கும் போதெல்லாம் அவள் அடித்தது தான் ஞாபகம் வந்தது. வீட்டிற்கு வந்தாலும் அன்று அவள் உலவிய பிம்பங்களே அவனை வாட்டியது. தர்ஷினியை நினைக்கவும் முடியாமல்.... மறக்கவும் முடியாமல்.... மன்னிக்கவும் முடியாமல் நான்கு நாட்களாக அன்னம், தண்ணீர் இல்லாமல் கிடந்தான். ஓயாது தர்ஷினியின் போன் அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்த வண்ணமிருக்க, கோபத்தில் அதை படுக்கையில் வீசினான். அன்று ஆபிஸிலிருந்து சீக்கிரமே வந்துவிட்டவன் அவள் புகைபடங்கள் நிறைந்த அவன் அறையில் படுக்க முடியாமல் ஹாலில் அவள் அமர்ந்த சோபாவில் தலை சாய்த்து படுத்துக் கொண்டான்.

கிர்..... கிர்.....

அழைப்பு மணியோசை காதில் விழுந்தும் அசையாமல் படுத்திருந்தான் ஹர்ஷா.

கிர்.... கிர்....
கிர்..... கிர்

கிர்..... கிர்.... – விடாமல் ஒலித்த மணியோசையில் சிந்தை கலைந்தவன் எழுந்து கதவை திறந்தான். அங்கே ஆர்த்தி தன் நின்றிருப்பாள் என அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவன் இந்த வீட்டிற்கு வந்த புதிதில் தான் அவன் குடும்பத்தினர் இங்கே வந்தனர். அதன் பிறகு வாரயிறுதிலும், விடுமுறை நாட்களிலும் ஹர்ஷா அங்கே சென்றுவிடுவான். ஆர்த்தியும் திருச்சியிலேயே இருந்ததால் அப்படியே அவளையும் பார்த்துவிட்டு வருவான்.

“ வா ஆர்த்தி.... என்ன தீடீர்னு வந்திருக்கே? ஏதும் பிரச்சனையில்லையே?” லேசான பதட்டத்தோடு வினவினான் ஹர்ஷா. தம்பியின் வாடிய முகமும், களைத்த தேகமும் ஏதோ சரியில்லை என உணர்த்தியது அவளுக்கு.

“ சும்மா தான்.... உன்னை பார்த்துட்டு போகலாம் னு வந்தேன்”

அவளின் ஆராய்ச்சி பார்வையை புரிந்தவன்,” உள்ளே வா ஆர்த்தி.... ரெண்டு நாளா லேசா ஜூரம்... அதான்.....” என்றபடி உள்ளே சென்றான். சோபாவில் அமர்ந்தவனின் நெற்றியில் கை வைத்து பார்த்தவள், அவன் கூறியது பொய் என தெரிந்தது. எதுவும் பேசாமல் அவனருகே அமர்ந்தாள்.

“ நேற்று ஆபிஸ் போனீயா?”

“ ம்.... போனேனே... ஏன் கேட்குற?”

“ ரெண்டு நாளா ஜூரம் னு சொன்னே? காய்ச்சலோட ஆபிஸ் போனியா?” என கேட்டவள் அவனது பதிலுக்கு காத்திராமல் எழுந்து சமையலறைக்கு சென்றாள். இருவருக்கும் சூடாக காபி போட்டு கொண்டு வந்தவள், அவனிடம் ஒரு குவளையை கொடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

“ தனியாவா வந்தே....”

“ இல்லடா. மாமாக்கு இங்க ஹெட் ஆபிஸ்ல ஏதோ வேலையாம் அதுக்காக அவர் வந்தாரு அப்படியே ஸ்ரீஜாவ அம்மா கிட்ட விட்டுட்டு நானும் கூட வந்தேன். அவரு ஆபிஸ்ல இறங்கிட்டாரு. நான் காரெடுத்துட்டு வந்துட்டேன்”

“ஓ...” சுரத்தேயில்லாத குரலில் சொன்னவனை கூர்ந்து பார்த்தவள்,

“ என்னடா பிரச்சனை ஹர்ஷா?” என வினவினாள்.

“ ஒண்ணுமில்லையே” அவளை பாராமல் பதிலளித்தான்.

“ அப்புறம் ஏன் நாலு நாளா வீட்டிற்கு போன்னும் பண்ணல.... நாங்க பண்ணா எடுக்கவும் இல்லை? என்னாச்சுடா?” என்றாள் அக்கறையாக.முகம் இறுக அமர்ந்திருந்தான் அவன்.

“ என் கிட்ட சொல்லமாட்டியா ஹர்ஷா? இல்லை என் கிட்ட சொல்ல முடியாத விஷயமா? யாரைவது ல... லவ் பண்றியா ஹர்ஷா?” சிறிது நாளாகவே அவளுக்கு தோன்றிய சந்தேகத்தை வினவினாள். சென்ற முறை திருச்சி வந்திருந்த போது பனிமலர் அவனுக்கு திருமணத்திற்காக சில பெண்களின் போட்டோகளை காட்ட, அதை பார்க்காமலே அவன் பிடிக்கவில்லை என்றதை கவனித்திருந்தாள். அவளை அதிர்ச்சியாக பார்த்தவன் ஆம் என்பது போல தலையசைத்தான்.

“ ம்... சரி. இப்போ உங்களுக்குள்ள என்ன பிரச்சனை? விருப்பமிருந்தா சொல்லு”

அதற்கு மேல் தன் தமக்கையிடம் மறைக்க விரும்பாதவன் அவளிடம் தன் காதல் விஷயத்தை கூறினான். அவனுக்கும் சில ஆலோசனைகள் தேவைபட்டது. தயங்கி தயங்கி முத்த விஷயத்தை மேலோட்டமாக கூறியவன், தான் அடி வாங்கியதையும் மறைமுகமாக கூறிவிட்டான்.

“ உனக்கு நல்லா வேணும்டா ஹர்ஷா” விழுந்து விழுந்து சிரித்தாள் ஆர்த்தி.

“ ஏய்.... நான் அடி வாங்குனதுக்கு சிரிக்கிறியா? என சீறியவன்,” நான் என்ன பொறுக்கியா ஆர்த்தி? நானும் நல்ல குடும்பத்துல பொறந்தவன் தானே? அவ இங்க நம்ம வீட்டுக்கு கூட வந்திருக்கா.... தப்பா ஒரு பார்வை கூட பார்த்ததில்ல நான்... அன்னைக்கு ஏதோ.....” அதற்கு மேல் தமக்கையிடம் பகிர முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.

தம்பியின் தலையை ஆறுதலாய் வருடியவள்,” சரி.... விடு ஹர்ஷா. அதுக்கப்புறம் தர்ஷினி கிட்ட போய் பேசுனியா?”

“ ம்ஹூம்.... அவள பார்த்தாலே அன்னைக்கு நடந்த பிரச்சனை தான் ஞாபகம் வருது.” எரிச்சலாக வந்தது பதில்.

“ ஹர்ஷா .... உன் கிட்ட ஒன்று கேட்கட்டுமா?”

“ ம்....”

“ நம்ம காவ்யா லவ் பண்ணா நீ அவளை அடிப்பியா? சப்போர்ட் பண்ணுவியா ஹர்ஷா?”

“ ஹே.... தீடீர்னு ஏன் இப்படி கேட்குற? இதை பற்றி பேச தான் இப்போ வந்தியா ஆர்த்தி” கலவரமாய் கேட்டான்.

“ சொல்றேன். முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”

“ ம்.... பையன் நல்லவனா இருந்தா சப்போர்ட் பண்ணுவேன்”

“ நீ தற்செயலா பார்க் போகும் போது காவ்யா ஒரு பையனுக்கு கிஸ் கொடுத்துட்டு இருந்தா என்ன பண்ணுவே?” அவள் எதற்காக கேட்கிறாள் என புரிந்தாலும் இதென்ன கேவலமான உதாரணம் என கோபம் வந்தது அவனுக்கு.

“ ச்சீ..... நீ உதாரணத்துக்கு தான் சொல்றே னு புரியுது. அதுக்காக நம்ம காவ்யாவ அசிங்கபடுத்தாதே ஆர்த்தி”

“ ஒரு பேச்சுக்கு கூட உன் தங்கச்சிய அப்படி யோசிச்சி பார்க்க முடியல இல்ல... ஆனா நீ விரும்புற பொண்ணு மட்டும் பொது இடத்தில உன் கூட அப்படி நடந்துக்கணும் இல்லயா ஹர்ஷா?” ஆர்த்தியின் வார்த்தைகளில் சுள்ளென உரைத்தது நிதர்சனம். பதில் பேச முடியாமல் அமர்ந்திருந்தான்.

“ தர்ஷினியும் ஒரு வீட்டுக்கு மகள் தானே... அவளும் நல்ல குடும்பத்துல தானே பொறந்திருக்கா? பொது இடத்தில வைச்சி நீ அப்படி நடந்துக்கும் போது அவளுக்கு கோபம் வராம என்ன செய்யும்? அவளுக்கு ஒரு நியாயம் உன் தங்கச்சிக்கு ஒரு நியாயமா?” அன்று ஒரு நாள் தர்ஷினியை நெற்றியில் முத்தமிட்ட போது அவள் அமைதியாக இருந்ததோடு தன்னோடு ஒன்றியதும் ஞாபகம் வந்தது. தன் தவறை முழுவதுமாக உணர்ந்த பிறகு மனது லேசாகியது அவனுக்கு.

“ போதும்.... அவளை பார்க்காமலே அவளுக்கு நல்லா ஜால்ரா தட்டுற” சிரித்தபடி கூறினான்.

“ தர்ஷினி நிஜமாகவே நல்ல பொண்ணுடா”

“ அப்போ உனக்கு அவளை பிடிச்சிருக்கா?”

“ அவ உன்னை அடிச்சா னு சொன்ன போதே எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிடுச்சி” என்றதும் அவளை முறைத்தான்.

“ சரி.... சரி... முறைக்காத... அவ கிட்ட என்னை இன்டடியூஸ் பண்ணி வைடா” ஆசையாக கேட்டாள் ஆர்த்தி.

“ உடனேலாம் அவ கிட்ட பேச முடியாது. இப்போதைக்கு அவ போட்டோ காட்றேன்” என்றவன் அவளை அழைத்து கொண்டு அறையை திறந்து காட்டினான்.

“ அடப்பாவி..... இந்த கிறுக்குத்தனத்தை எல்லாம் வேற பண்ணி வைச்சிருக்கியா? ஆனா அழகா இருக்காடா.... தர்ஷினி சூப்பர் மேட்ச் டா உனக்கு. உன் உப்பில்லாத கோபத்தை எல்லாம் குப்பையில வீசிட்டு சமாதானம் ஆகுற வழிய பாரு”ஆர்த்தியிடம் பேசிய பிறகு மனதிலுள்ள பாரமெல்லாம் நீங்கியது.

“ எனக்காக அண்ணி எவ்ளோ சப்போர்டா பேசியிருக்காங்க. அவங்களுக்கு தங்க வளையல் இல்லை வைரத்துல வாங்கி கொடுத்திருக்கணும்” சிலாகித்து கூறினாள் தர்ஷினி.

“ அதுக்கென்ன தர்ஷி.... வாங்கி கொடுத்துட்டா போச்சு....”

“ ஆனா நீங்க அதுக்கப்புறமும் என் கிட்ட பேசவேயில்லையே ஹர்ஷா”

“ என்ன பண்றது பேபி.... மறுநாளே உன்கிட்ட வந்து பேசலாம் னு தான் நினைச்சேன் ஆனா என்னவோ தயக்கமா இருந்தது. மறுபடியும் பழைய மாதிரி பேச முடியுமா னு தெரியல.... அதே சமயம் உன் கிட்ட விலகி நின்னு பழக முடியுமானும் தெரியல.... அதான் ரொம்ப யோசிச்சி..... இனிமே உன் கூட பேசுனா உன்னோட புருஷனா தான் பேசணும் னு முடிவு பண்ணேன். அப்போ தானே நீ எனக்கே எனக்கா.... என்னுடைய பொண்டாட்டியா.... இருப்பே. அப்போ நான் தொடலாம், கட்டிபிடிக்கலாம், முத்தமிடலாம் தானே... அதை தடுக்க உரிமை உனக்கு கூட இல்லையே.... அதனால தான் என் அம்மாவுக்கு போன் பண்ணி நம்ம லவ் மேட்டர ஓபன் பண்ணேன். மறுநாளே வீட்டுக்கு வந்து நிற்கிறாங்க. முதல்ல ஒத்துக்கவேயில்ல... பேசி பேசி கரைச்சேன். அப்பா ரெண்டு நாள் பேசுனதுலேயே ஒத்துகிட்டாங்க. அம்மா தான் வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சாங்க....

“ ம்மா.... நீ ஒரு தடவை இந்த போட்டோல தர்ஷினிய பாரு. கண்டிப்பா உனக்கு அவள பிடிக்கும் மா”

வாங்கி பார்த்தவர்,“ பார்க்க லட்சணமா இருந்தா மட்டும் போதுமா டா.... ஜாதகம் பொருந்த வேண்டாமா? “

“அவங்க ஜாதகம் பற்றி பேசுன போது தான். நீ உன்னோட ஜாதகத்தை உன் அப்பா ஏதோ ஒரு தரகர் கிட்ட கொடுத்து வைச்சிருக்கறதா சொன்னது ஞாபகம் வந்துச்சி.....”

“ இப்போ என்னம்மா.... எங்க ரெண்டு பேருக்கும் ஜாதக பொருத்தம் அமைஞ்சிடுச்சி னா சம்மதம் சொல்லுவியா?” என கிடுக்கிப்பிடி போட்டான்.

“ ஜாதகம் பொருந்திடுச்சினா எனக்கு சம்மதம் தான்”

“ ரைட் விடு” என்றவன் தர்ஷினி வீட்டின் ஏரியாவில் வசித்த தரகர்களை விசாரித்து அதில் தர்ஷினியின் ஜாதகமிருந்த தரகரை கண்டுபிடித்தான். ஆர்த்தியோடு சென்று எதார்த்தமாக விசாரிப்பது போல் பேசி தர்ஷினி ஜாதகத்தை வாங்கினான். முதலில் அதை ஒரு ஜோசியரிடம் காட்ட, அவன் பயந்ததை போல அல்லாமல் ஜாதகம் நன்றாகவே பொருந்தியது.

அதை எடுத்து கொண்டு நேரே தாயிடம் சென்று நீட்டியவன், “ ம்மா.... இது தர்ஷினியோட ஜாதகம். நீயே போய் பொருத்தம் பாரு ... பொருத்தம் நல்லாயிருந்தா சம்மதம் சொல்லிடணும்” என உறுதிமொழி வாங்கி கொண்டு கொடுத்தான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top