• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Comfort Food Recipies

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
வத்தக்குழம்பு பொடி (இது என்னோட பாட்டி திருமதி. சுப்புலக்ஷ்மி அம்மாளின்(95 வயசு) ரெசிபி)

தேவையான பொருட்கள்:

தனியா – ஒரு கப்
மிளகாய் வத்தல் – 50-60 வத்தல் (உங்கள் காரத்திற்கேற்ப)
துவரம்பருப்பு – ¼ கப்
உளுத்தம் பருப்பு – ¼ கப்
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகு – 3 டீஸ்பூன்
ஜீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு (நன்னா அலம்பி ஆற வெச்சுக்கோங்கோ)
மஞ்சள்பொடி – 1 டீஸ்பூன் (இதுல சேக்கலைன்னா, குழம்புக்கு தாளிக்கும்போது சேத்துக்கலாம்)
நல்லெண்ணை – 11/2 டீஸ்பூன்

செய்முறை:

வாணலில கொஞ்சமா எண்ணை விட்டு ஒவ்வொரு பருப்பா நிதானமா கலர் பொன்னிறமா மாறர வரைக்கும் வறுத்து எடுத்து ஒரு தட்டுல கொட்டி ஆறவைச்சுக்கணும்.

அதுக்கப்பறம் துளி எண்ணை விட்டு தனியாவை வாசனை நன்னா வறவரைக்கும் வறுத்துக்கணும், அதையும் ஆறவெச்சுட்டு, இன்னும் கொஞ்சம் எண்ணை விட்டு மிளகாய் வத்தலை மொறுமொறுன்னு வறுத்து தனியா வைச்சிக்கணும்.

அப்பறமா, மீதியிருக்கிற எண்ணையை விட்டு கடுகு, மிளகு, ஜீரகம், வெந்தயம் எல்லாத்தையும் தாளிக்கராப்புல பொன்னிறமா வறுத்து அதோட கருவேப்பிலையையும் மொருமொருப்பா வறுத்து ஆற வைக்கணும்.

எல்லாம் நன்னா ஆறினபிறகு, முதல்ல மிளகாய் வத்தலைப் போட்டு ஒண்ணும் பாதியுமா அரைச்சுண்டு, அப்பறமா மீதி வறுத்து வெச்ச சாமானையெல்லாம் போட்டு கொஞ்சம் கொரகொரப்பா அறைச்சு வெச்சுண்டா வத்தக்குழம்பு பொடி தயார்.

இதை ஒரு காத்து புகாத டப்பாவில போட்டு வெச்சா ஒரு மாசம் வரைக்கும் ஃபிரெஷ்ஷா இருக்கும்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நேத்துத்தான் சாம்பாருக்கு
அரைச்சு விடறச்சே, சித்த
எரிச்சலா வந்து குழம்புப்
பொடி அரைச்சு வைச்சிண்டா
நன்னா இருக்குமே-ன்னு
நெனச்சேன்
இன்னிக்கு குழம்புப் பொடி
திரிக்கறதுக்கு நீங்கோ
வழியைச் சொல்லிட்டேள்,
சிவப்ரியா முரளி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அருமையான குழம்புப் பொடி
திரிச்சு வைச்சுக்கறதுக்கு
ரொம்ப நன்னா செய்முறை
சொல்லிட்டேள்
நீங்கோ ஷேமமா இருங்கோ,
சிவப்ரியா முரளி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பேஷ், பேஷ், குழம்புப் பொடி
செய்முறை ரொம்பவும்
ஈஸியான்ன இருக்கு,
சிவப்ரியா முரளி டியர்
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Wow...vetha kuzhambukku kooda podi ya..
Very easy and simplified...thanks for sharing ka??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top