Deepa Babu's Kanne Kalaimaane 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deepa Babu

Author
Author
Joined
Feb 18, 2021
Messages
1,044
Reaction score
2,430
Points
113
Location
salem
KK amazon.jpg

அத்தியாயம் 15

இளங்கதிர் கிளம்பி கீழே வர அவனிடம் இளநகையை அழைத்து வந்த அமுதா, "என்னடா புடவையும், நகைகளும் உன் மனைவிக்கு ஓகே தானே... என் செலக்ஷன் நன்றாக இருக்கிறதா?" என்று வினவினாள்.

அடர்பச்சை, மெரூன், நேவி ப்ளு என மூன்று நிறங்களின் பின்னனியில் ஜரிகை இழையோடிய பட்டுப்புடவையை மிக நேர்த்தியாய் உடுத்தியிருந்தது அவள் மேனி அழகை மேலும் பளிச்சென்று எடுத்துரைக்க தன் துணைவியை கீழிருந்து மேல்வரை ஒருமுறை ஆழமாக வருடியவனின் விழிகளில் திருப்தி தோன்ற, ம்... என்று மட்டும் முனங்கிவிட்டு முன்னே சென்றான்.

ஹும்... என பழிப்பு காண்பித்துவிட்டு, "வாய்விட்டு பாராட்டினால் அப்படியே தலையில் இருக்கும் கிரீடம் கீழே இறங்கிவிடும் இவனுக்கு, நீ வாடா!" என்று தம்பியை நொடித்தபடி அவன் மனைவியின் கரம்பற்றி காருக்கு அழைத்துச் சென்றாள் அமுதா.

அவளை முன்னால் அமர வைத்துவிட்டு கதிரிடம் குனிந்தவள், "பத்திரமாக போய் வாருங்கள். அப்புறம் கதிர்... போகின்ற இடத்தில் இவளிடம் எதுவும் சத்தம் போடாமல் கொஞ்சம் அமைதியாக நடந்துக்கொள். உனக்கு சொல்ல தேவையில்லை இருந்தாலும் பெரியவள் என்கிற முறையில் சொல்லி வைக்கிறேன். அங்கே எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை எதற்கும் போகின்ற வழியில் அவளிடம் ஒருமுறை விளக்கிவிடு. பங்ஷனை நன்றாக என்ஜாய் பண்ணி வாருங்கள்!" என்றாள்.

அதை ஏற்றுக்கொண்டவன், "முதலில் உங்கள் பெண்ணிடம் சொல்லி வையுங்கள். அங்கே ஏதாவது மரம், செடி தெரிந்தால் இவள் உடனே அங்கே சென்று நின்றுவிடப் போகிறாள்!" என்றான் இளநகையிடம் பார்வையை நிறுத்தி.

அவனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு தலைக்குனிந்தவளை நிமிர்த்தி, "உன் புருஷன் சொன்னது காதில் விழுந்ததா... அவனை விட்டு எங்கும் போக கூடாது!" என்று எச்சரித்து அனுப்பி வைத்தாள்.

வழி நெடுகிலும் மௌனமே ஆட்சிப்புரிய மியுசிக் ப்ளேயரை ஆன் செய்தான் கதிர். இளநகையின் கவனமெல்லாம் வெளிப்புறத்தை ஆராய்வதிலேயே குறியாக இருந்தது.

மண்டபத்தை நெருங்கவும் அவளிடம் திரும்பியவன், "சொன்னது எல்லாம் நினைவு இருக்கிறதா... என்னுடனே தான் இருக்க வேண்டும், வேறெங்கும் தனியாக செல்லக் கூடாது!" என்றான்.

சம்மதமாக அவள் தலையசைக்க பார்கிங்கில் காரை நிறுத்தி இறங்கியவன், வா என்ற ஒற்றை சொல்லுடன் நடக்க ஆரம்பித்தான். அவனுடன் இணைந்து நடந்தவளின் மனம் எவ்வளவோ கட்டுப்படுத்தியும் மண்டபத்தின் பிரமாண்டத்தை கண்டு லேசாக அச்சம் கொண்டது.

இத்தனை வசதிப்படைத்தவர்களின் மத்தியில் என் கணவனின் கௌரவம் கெடாதவாறு நான் நடந்துக்கொள்ள வேண்டும் கடவுளே என அவரை துணைக்கழைத்துக் கொண்டாள் இளநகை.

அரங்கினுள் நுழைந்ததும் எங்கிருந்தோ கதிர் என்ற கூவலை தொடர்ந்து அந்த திசையில் தலையை திருப்பியவன் முகம் மலர்ந்து கையசைத்தபடி வேகமாக அங்கே குழுமியிருந்தவர்களிடம் சென்றான்.

இரண்டு அடி எடுத்து வைத்தப் பின் தான் இளநகையின் நினைவு வர, திரும்பி அவள் கரத்தை பற்றியிழுத்துக் கொண்டு விறுவிறுவென்று நடந்தான் கதிர்.

அவன் செய்கையில் முகம் மலர்ந்தவள் உள்ளிருந்து கிளம்பும் பரபரப்புடனும், ஆர்வத்துடனும் அவனுடைய நண்பர்களை எதிர்கொண்டாள்.

வெகுநாட்கள் கழித்து சந்தித்த மகிழ்ச்சியில் முதலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் அளவளாவிவிட்டு பின் தங்கள் துணைகளை பரஸ்பரம் மற்றவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர்.

கதிரின் முறைப்பெண்ணான இளவேணியின் இழப்பை பற்றி அனைவரும் அறிந்தவர்கள் என்பதால் தங்கள் நண்பனின் வாழ்க்கை மீண்டும் இளநகையால் மலர்ந்தது குறித்து அவர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

அவர்களில் அனுராதா, "ஹாய் க்யூட்டி... ஐ ஆம் ஸோ ஹாப்பி ஃபார் போத் ஆஃப் யூ!" என்று இளநகையை தோளோடு அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

அவள் அணைப்பில் லேசாக வெட்கம் கொண்டவள் கூச்சத்துடன் புன்னகைத்தாள்.

அதைக் கண்ட அனு, "ஹேய் கதிர்... யூ ஆர் ஸோ லக்கிடா. உன் வொய்ஃப் எவ்வளவு அழகாக வெட்கப்படுகிறாள். எங்களுக்கெல்லாம் அப்படியென்றால் என்னவென்றே தெரியாது!" என்று பாராட்டவும் மற்ற தோழர்கள் அது என்னவோ வாஸ்தவம் தான் என அவளை கேலி செய்து கலகலத்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அனைவரின் உற்சாகமும் இளநகைக்குள் பெரும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.

'அப்பா... இவர்களுக்கெல்லாம் வாய் வலிக்குமா வலிக்காதா, திறந்த வாயை மூடாமல் ஈயென்று எவ்வளவு நேரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவரும் அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் சிரித்துக் கொண்டிருக்கிறாரே... இவருக்கெல்லாம் இந்த அளவுக்கு சிரிக்க கூட தெரியுமா என்ன?' என்று கணவனின் முகத்தையே இமைக்காமல் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கருகில் அமர்ந்திருந்த அனு அவளிடம் குனிந்து, "வீட்டில் எந்நேரமும் உன் புருஷனை தானே சைட் அடிக்கிறாய்... அப்புறம் என்னம்மா? வந்த இடத்தில் கொஞ்சம் எங்களையும் பாருங்களேன்!" என்று அவள் கண்ணடிக்க, மாட்டிக்கொண்ட பதட்டத்தில் இவள் திருதிருவென்று விழித்தாள்.

திருமணத்திற்கு வந்திருந்த கதிரின் கல்லூரி நண்பர்கள் பத்துப் பேரில் மூன்று பெண் தோழிகளும் அடக்கம்.

அனு இளநகையிடம் கிசுகிசுக்கவும் என்ன என்று அவளிடம் புருவம் உயர்த்தினான் இளங்கதிர்.

"அதுவா?" என்று அனு தொடங்கவும், வேகமாக அவள் கரம்பற்றி தடுத்தாள் இளநகை.

"அக்கா... அக்கா... ப்ளீஸ்... அவரிடம் சொல்லி விடாதீர்கள்!" என்று கெஞ்சியவளை விநோதமாக பார்த்தவள், பின் கதிரிடம் திரும்பி இட்ஸ் சீக்ரெட் பிட்வீன் அஸ் என முடித்து விட்டாள்.

அவனும் தோள்களை குலுக்கிக்கொண்டு திரும்பி விட்டான். அதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் அனுவிடம் மென்மையாய் முறுவலித்தாள். அவளின் செயல்கள் அனுவிற்குள் பல்வேறு சிந்தனைகளை தூண்டி தம்பதியர் இருவரையும் கூர்மையாய் கவனிக்க செய்தது.

தாமதமாக வந்த நண்பன் ஒருவன் அந்த கூட்டத்தில் தானும் ஐக்கியமாகி அனைவரையும் நலம் விசாரித்தான். அறிமுகப்படலத்தின் பொழுது இளநகையை தன் மனைவி என்று அவனுக்கு இளங்கதிர் அறிமுகப்படுத்த அவளை கண்டு வியந்தான் அவன்.

"ஹேய் கதிர்... வேணியா இது? ஆளே மாறிவிட்டாள்... எட்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தது. இப்பொழுது சுத்தமாக அடையாளம் தெரியவில்லை. வேலை விஷயமாக வெளிநாட்டில் போய் செட்டில் ஆனாலும் ஆனேன் இடையில் விட்டுப்போன தொடர்பை புதுப்பிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. வொர்க்கும் சரி டைட்டாக இருக்கிறதா... மற்ற விஷயங்களுக்கு நேரம் ஒதுக்கவே முடிவதில்லை!" என்று புலம்பினான்.

அதுவரை இருந்த குதூகலம் மாறி சட்டென்று அங்கே ஒரு மயான அமைதி நிலவியது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். வந்த இடத்தில் விவரம் தெரியாமல் இப்படி கேட்டு விட்டானே என மற்றவர் வருந்த, கதிரோ வேணியின் நினைவில் முகம் இறுகி அமர்ந்திருந்தான்.

அதைக்கண்ட இளநகைக்குள் குளிர் பரவியது, 'ஐயோ... முகத்திலிருந்த சிரிப்பு அப்படியே தொலைந்து விட்டதே, மிகவும் கோபமாக இருக்கிறார் போலிருக்கிறது. என் மேல் உள்ள வெறுப்பில் என்னை தனியாக விட்டுவிட்டு இவர் மட்டும் கிளம்பி வீட்டிற்குச் சென்று விட்டால் என்ன செய்வது? வீட்டின் முகவரி கூட எனக்கு தெரியாதே!' என்ற கற்பனையில் முகம் வெளுத்தாள் அவள்.

சூழ்நிலையை சகஜமாக்க முயன்ற அனு, "ஏய்... எல்லோரும் வாங்கப்பா, மேடையில் கூட்டம் சற்றுக் குறைவாக இருக்கிறது. மாப்பிள்ளை, பெண்ணுடன் ஒரு ஸ்நாப் எடுத்துக் கொள்ளலாம்!" என்று அனைவரையும் கிளப்பினாள்.

தாமதமாக வந்த நண்பனை வரிசையின் பின்புறம் இழுத்த தோழன் ஒருவன் வேணியின் இழப்பை எடுத்துக் கூறி இனி அதைப்பற்றி மேற்கொண்டு பேசாதே என எச்சரிக்கவும், திகைத்த முதலாமவன் தன் தவறை உணர்ந்து அவன் சொல்லுக்கு ஆமோதித்தான்.

அனைவரும் உணவருந்த டைனிங்கிற்கு செல்ல, முகத்தில் முன்பிருந்த மலர்ச்சி சுத்தமாக மறைந்து லேசான பரிதவிப்புடன் கதிரை விட்டு விலகி ஒதுங்கி ஒதுங்கி நடந்த இளநகையை கண்ட அனு சுவாதீனமாக அவள் அருகே சென்று அவளின் கரம்பற்றி அழுத்தினாள்.

அவளிடம் திரும்பியவள் யோசனையோடு சிரிக்கலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடன் சின்ன மோனாலிசா புன்னகையை சிந்தினாள்.

உணவருந்தி வந்ததும் சிலர் நேரமாகி விட்டது என்று கிளம்ப இளங்கதிரை நிற்க வைத்தாள் அனு.

தன் கணவனிடம் திரும்பி, "நான் கதிருடன் சற்றுத் தனியாக பேச வேண்டும். சோ... கொஞ்ச நேரம் பெரியவனை மட்டும் பார்த்துக் கொள்கிறீர்களா? பாப்பாவை நான் வைத்துக் கொள்கிறேன். ம்..." என்று தலைசாய்த்து கேட்டவளை வலிக்காமல் கொட்டிய அவள் கணவன்,

"என்னவோ இப்பொழுது தான் முதல் முறையாக சொல்வது போல் ஓவர் சீன் போடுகிறாய். எங்கே போனாலும் இது தானே நடக்கிறது!" என்றவன் கேலி செய்யவும் இவள் ஈயென்று சிரிக்க, அவள் நிலைக்கண்டு கதிர் வாய்விட்டு நகைத்தான்.

அவனை முறைத்தவள் சிரிக்காதேடா என்று அவன் முதுகில் ஒன்று போட்டு இளநகையுடன் தனியிடம் அழைத்துச் சென்றாள்.

ஆளரவமற்ற இடத்திற்குப் போனதும் தனது ஒன்றரை வயது குழந்தையை இளநகையிடம் கொடுத்து, "கொஞ்ச நேரம் இவளை வைத்துக் கொள்டாம்மா, அங்கே சற்று வேடிக்கை காண்பித்துக் கொண்டிரு, சமர்த்துப் பிள்ளையாக இருப்பாள்!" என்று சொல்லவும் அவள் ஆர்வமுடன் குழந்தையை வாங்கிச் சென்றாள்.

தங்கள் கண்பார்வையில் இருவரையும் நிறுத்தி வைத்துவிட்டு கதிரிடம் திரும்பியவளை அவன் கேள்வியோடு எதிர்கொண்டான்.

"என்ன விஷயம் மேடம்? முஸ்தீபெல்லாம் பலமாக இருக்கிறது!" என்று முறுவலித்தவனை பார்வையில் கூர்மையுடன் ஏறிட்டாள் அனு.

"விஷயத்தை நீதான் எனக்கு தெளிவுப்படுத்த வேண்டும் கதிர், ஆக்ட்சுவலி... கணவன், மனைவி விவகாரத்திற்குள் மூன்றாமவர் தலையிடக் கூடாதுதான். ஆனாலும் என் நண்பனின் வாழ்வை பற்றிய தெளிவுக் கிடைத்தால் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் என்று தோன்றுகிறது!"

"ஏய்... உனக்கு என்ன தெரிய வேண்டும்? நேரடியாக கேள்!"

"ஓகே ஃபைன்... நீயும் இளநகையும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகிறீர்களா?" என்றதும் அவன் முகம் சட்டென்று மாறியது.

எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவனின் தோளை தட்டியவள், "உன் அமைதியே என் கேள்விக்கு பதிலை தந்து விட்டதுடா!" என்றாள் வருத்தத்துடன்.

ப்ச்... என்று அலுத்தவன் மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டான்.

"கதிர்... ஒரு நல்ல தோழியாக சில விஷயங்களை உன்னிடம் பேச விரும்புகிறேன். இளவேணியின் இழப்பு ஈடுகட்ட முடியாதது தான்டா... ஐ அன்டர்ஸ்டார்ன்ட். சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்தீர்கள், ஒருவருக்கொருவர் என்ற நேசத்தை வளர்த்துக் கொண்டீர்கள். எல்லாம் சரிம்மா... ஆனால் விதி விளையாடி உங்கள் இருவரையும் பிரித்து விட்டதே... என்ன செய்ய முடியும்?" எனவும் அவன் விழிகள் கலங்கியது.

அவன் கரத்தை ஆதரவுடன் அழுத்தியவள், "உன் மனதை நோகடிக்க வேண்டும் என்று நான் பேசவில்லை, யதார்த்தத்தை புரிந்துக்கொள்ள முயற்சி செய். மாண்டவர் மீள மாட்டார், அதைப் போலவே கண்ணதாசனின் வரிகளில் குறிப்பிடுவது போல் நடந்ததையே நினைந்திருந்தால் மனதில் அமைதி என்றுமில்லை.

விரும்பியோ விரும்பாமலோ உன் வாழ்க்கை இளநகையுடன் தான் என முடிவாகிவிட்டது, அதை ஏற்றுக்கொள்ள முயற்சி செய். அந்த அப்பாவிப் பெண்ணின் எதிர்காலம் உன் கையில் தான்டா இருக்கிறது. இறந்த காலத்திலேயே உழன்றுக்கொண்டு நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் வீணாக்கி விடாதே!" என்று இடைவெளி விட்டவள் இளநகையை திரும்பிப் பார்த்தாள்.

"உன்னை முதலில் அவளுடன் மகிழ்ச்சியாக பார்த்ததும் எனக்கு எவ்வளவு நிம்மதியாக இருந்தது தெரியுமா? நீ சிரித்துக் கொண்டிருப்பதை அவள் வைத்தக் கண் வாங்காமல் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்ததை நான் கேலி செய்யவும் பயந்து விட்டாள்.

இதில் அவரிடம் சொல்லி விடாதீர்கள் ப்ளீஸ் என்று கெஞ்ச வேறு செய்தாள். அவள் பயம் எனக்கு புரியவில்லை, முதலில் அங்கே தான் குழம்பினேன். பிறகு சக்தி வேணியை பற்றிப் பேசவும் அவள் முகத்தை பார்க்க வேண்டுமே, அப்படியே பேயறைந்தது போல் மாறிவிட்டது.

எதற்காக பயந்தாள் என தெரியவில்லை, ஆனால் உங்கள் இருவருக்கும் இடையே நிலவும் இடைவெளி எனக்கு அப்பொழுது தான் ஊர்ஜிதமாகியது. சரி, கிளம்பும் முன் உன்னிடம் இதைப்பற்றி பேசியே ஆக வேண்டும் என்று தான் இங்கே அழைத்து வந்தேன்!" என முடித்துவிட்டு அவன் முகம் பார்த்தாள் அனு.
 
Last edited:

banumathi jayaraman

Well-known member
Joined
Jan 17, 2018
Messages
28,763
Reaction score
68,700
Points
113
:D :p :p
மிகவும் அருமையான பதிவு,
தீபா பாபு டியர்

அனுராதா அருமையான தோழி
நண்பன் கதிருக்கு யதார்த்தத்தை சொல்லி நல்ல புத்தி சொல்லுறாள்
அக்கா சொல்லியே ஏறாத கதிரின் மரமண்டையில் தோழி சொல்லுவது ஏறுமா?

அப்புறம் அனு பேசும் பொழுது "ஆக்சுவலி கணவன் மனைவி விவகாரத்திற்குள் மூன்றாமவர்........."ன்னு வரணும்
விவாகரத்திற்குள் இல்லை
 
SarojaGopalakrishnan

Well-known member
Joined
Jul 20, 2018
Messages
3,992
Reaction score
6,709
Points
113
Location
Coimbatore
நல்லா இருக்கு பதிவு
அனு உண்மையான
நட்போடு தோழனின் வாழ்க்கையை சரிசெய்ய
நினைப்பது அருமை
 
Deepa Babu

Author
Author
Joined
Feb 18, 2021
Messages
1,044
Reaction score
2,430
Points
113
Location
salem
:D :p :p
மிகவும் அருமையான பதிவு,
தீபா பாபு டியர்

அனுராதா அருமையான தோழி
நண்பன் கதிருக்கு யதார்த்தத்தை சொல்லி நல்ல புத்தி சொல்லுறாள்
அக்கா சொல்லியே ஏறாத கதிரின் மரமண்டையில் தோழி சொல்லுவது ஏறுமா?

அப்புறம் அனு பேசும் பொழுது "ஆக்சுவலி கணவன் மனைவி விவகாரத்திற்குள் மூன்றாமவர்........."ன்னு வரணும்
விவாகரத்திற்குள் இல்லை
Thanks sis 😍❤ Acho... Typo error gavanikkave illai. 2 yrs munnadi proof parthu print panna book la ippadi kottai vittirukene 🙆 udane sari pannidren. Tq sis 😘
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top