Deepa Babu's Kanne Kalaimaane 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deepa Babu

Author
Author
Joined
Feb 18, 2021
Messages
1,044
Reaction score
2,430
Points
113
Location
salem
KK amazon.jpg

அத்தியாயம் 16

அதுவரை அமைதியாக இருந்த இளங்கதிர் தொலை தூரத்தின் இருளை வெறித்தபடி மெதுவாக பேசத் துவங்கினான்.

"நீ சொல்வதெல்லாம் எனக்கு புரிகிறது அனு... முதலில் வேண்டாவெறுப்பாக அம்மா, அக்காவின் வற்புறுத்தலால் தான் இவள் கழுத்தில் நான் தாலி கட்டினேன். வீட்டிற்கு வந்த முதல் நாளே அக்கா இவளை தன் பெண்ணாக ஏற்றுக்கொண்டு அனைத்து உரிமைகளையும் கொடுக்கவும் எனக்கு அத்தனை கோபம் வந்தது.

அனைத்தையும் அவள் மேல் வெறுப்பாக நான் வளர்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதையெல்லாம் தாண்டி நாட்கள் செல்லச் செல்ல அவளின் நடவடிக்கைகளை கண்டு உண்மையில் என்னையுமறியாமல் என் மனம் மாறத் தொடங்கியுள்ளது.

முன்பு போல் அவள்மீது எனக்கு வெறுப்பெல்லாம் இல்லை. அதற்காக அவளை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கும் என்னால் தயாராக முடியவில்லை. கண் முன்னே நடந்த விபத்தே என் நெஞ்சை அறுக்கிறது.

எத்தனை கனவுகளோடு வளர்ந்தாள்? அனைத்தும் அவளுடன் நொடியில் மடிந்து விட்டதே... வேணியின் நினைவுகள் என் மனதில் ரணமாக இருக்கிறது அனு, என்னால் முடியவில்லை. அவள் குழந்தை..." என்று முகம் கலங்கியவன் இதழ் கடித்து அலையென பொங்கிய உணர்வுகளை அடக்கினான்.

இளவேணியின் மேல் நேசம் என்று சொல்வதை விட கதிர் எத்தனை பாசம் வைத்திருந்தான் என்பது அனுவிற்கும் நன்றாக தெரியும் தான். இருந்தாலும் என்ன செய்வது?

அவளின் கல்லூரி வாழ்க்கை முடிந்து இருவரின் வாழ்வும் இணைய சொற்ப நாட்களே எஞ்சியிருந்த நிலையில் அவ்விபத்து நடக்கும் என்று யாரறிவார்? என லேசாக பெருமூச்சு விட்டவள் மேற்கொண்டு அவனை வற்புறுத்த முயலாமல் இளநகையிடமும், குழந்தையிடமும் கவனத்தை செலுத்தினாள்.

சில நிமிடங்களில் குழந்தையின் தொடர் கெக்கலிக்கும் சிரிப்பில் தன்னிலை உணர்ந்த கதிரும் அவர்களிடம் மெல்ல விழிகளை திருப்பினான்.

குழந்தைக்கு பப்பு கடையும் விளையாட்டு சமையல் செய்து சுற்றியுள்ள மரம், செடிகளுக்கு ஆளொக்கொரு வாய் கொடுத்துவிட்டு நண்டு ஊறுது, நரி ஊறுது என்று அவள் பிஞ்சுக் கையில் இளநகை விரலை வைக்கும்பொழுதே குழந்தை உடலை நெளித்துக்கொண்டு அவள் முகத்தில் சாய்ந்து சிரிக்க ஆரம்பித்து விடுகிறாள்.

சற்று நேரம் அவர்களின் விளையாட்டை ரசித்தவனின் முகம் மெதுவாக இளகியது.

அதைக் கவனித்த அனு, "இருவரின் சிரிப்புக்கும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை இல்லை?" என்றாள் அவனிடம் கேள்வியாக.

தன்னை மறந்து, ம்... என்று ஆமோதித்தவன் திடுக்கிட்டு அவளிடம் திரும்பி, "ம்?" என்று புருவம் சுருக்கினான்.

"சரி கிளம்பலாமா? பாவம் தனியாக பையனை வைத்துக்கொண்டு மனிதர் என்ன அவஸ்தைப்படுகிறாரோ!" என்று இளநகையிடம் சென்றுக் குழந்தையை வாங்கினாள் அனு.

அதுவரை முகத்தில் இருந்த ஆனந்தமெல்லாம் வடிந்து பியூஸ் போன பல்பாக முகம் இருண்டவளிடம், "என்ன ரொம்ப டல்லாகி விட்டாய்? குழந்தையை வாங்கி விட்டேன் என்று கஷ்டமாக இருக்கிறதா?" எனவும் அவள் ஏக்கத்துடன் ஆமோதிப்பாக தலையாட்டினாள்.

"இது நல்ல கதையாக இருக்கிறதே... அதற்காக குழந்தையை உன்னிடமே விட்டிருக்க முடியுமா என்ன? எனக்கு நேரமாகி விட்டது, நாங்கள் வீட்டிற்கு கிளம்ப வேண்டும். எப்பொழுதும் உன்னை விட்டுப் பிரியாமல் உன்னிடமே இருக்கின்ற குழந்தையாக வேண்டுமென்றால் உன் புருஷனிடம் சொல்லி நீயே ஒரு குழந்தையை சொந்தமாக பெற்றுக்கொள்!" என்று அனு இளநகையை சீண்டவும் அதிர்ந்த கதிர் திரும்பி தோழியை முறைத்தான்.

மாறாக... தனக்கே தனக்கென்று ஒரு குழந்தையா? என்று இளநகை மகிழ்ந்தாள்.

என் குழந்தை... என் வயிற்றில் பிறக்கும், எப்பொழுதும் என்னுடனேயே இருக்கும் என உற்சாகம் கொண்டவள் அது சற்றும் குறையாமல் அனுவிடம் தன் சந்தேகத்தை எழுப்பினாள்.

"எனக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்?" என்ற கேள்வியிலேயே மற்ற இருவரையும் மூச்சடைக்க வைத்தவள் பின் யோசித்து, "உங்களுக்கு திருமணமாகி எத்தனை நாட்களில் குழந்தை வயிற்றில் வந்தது? எனக்கு திருமணமாகி... இன்றோடு... ஆங்... இரண்டு மாதங்கள் முடியப் போகிறது!" என்று மேலும் விளக்கினாள்.

"என்னடா இது?" என்றாள் அனு கதிரிடம் அதிர்ச்சியாக, "எனக்கும் தான் புரியவில்லை!" என்றான் அவனும் குழப்பத்துடன்.

இளநகையின் அர்த்தமற்ற கேள்வியினால் உண்மையிலே அவன் மண்டைக் காய்ந்தது.

'இவள் என்ன எதுவும் மனநிலை சரியில்லாதவளா... இல்லையே... வேலையெல்லாம் நன்றாக தெளிவாக தானே செய்கிறாள்!'

"ஏய்... விவரமில்லாதவள் என்றால் தான் வசதி என எதுவும் சைல்ட் மேரேஜ் செய்துக் கொண்டாயா?" என்றாள் அனு சந்தேகமாக.

"ப்ச்... ஏய்... நீ வேறு கடுப்பை கிளப்பாதேடி... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இவளுக்கு வயது அதிகம் என்று தான் திருமணம் முடிவு செய்யும் பொழுது அக்காவும், அம்மாவும் பேசிக் கொண்டார்கள்!" என்றவன் இளநகையிடம் சற்றுக் கோபமாக திரும்பினான்.

தான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் இவர்கள் என்ன சம்பந்தம் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று குழம்பியபடி அவள் நின்றிருந்தாள்.

"உன் வயது என்னடி?" என்று மனைவியை அதட்டினான் கதிர்.

இதுவரை எத்தனை கோபம் வந்தாலும் அவன் 'டி' போட்டு பேசியதில்லை எனவும் மிரட்சியடைந்தவள் இருபத்தைந்து என்றாள் மெல்லிய குரலில்.

"ஏழு கழுதை வயது என்று குறிப்பிடுவது போல் இருபத்தைந்து வயது ஆகிவிட்டது. இன்னமும் குழந்தை எப்படி உருவாகும் என்று உனக்கு தெரியாதா? சும்மா ஓவராக நடிக்காதே... இப்படி நடித்து நடித்து தான் என் அக்காவை நன்றாக ஏமாற்றி கைக்குள் போட்டு வைத்திருக்கிறாயா?" என்று கதிர் அடிக்குரலில் சீறவும் அவனையே மலங்க மலங்கப் பார்த்தாள் அவள்.

சினம் கொண்டவனின் கண்களுக்கு தெரியவில்லை என்றாலும் இளநகையை மாலையிலிருந்து கண்காணித்துக் கொண்டிருந்த அனுவிற்கு அவளிடம் பொய்மை இருப்பதாய் தோன்றவில்லை.

"நீ கொஞ்சம் நகரு... நான் அவளிடம் பேசிக் கொள்கிறேன். நீ வாயே திறக்கக்கூடாது!" என்று அவனை ஓரங்கட்டிவிட்டு இளநகையின் கையை பற்றிக்கொண்டாள்.

அவளின் கரம் சில்லிட்டு இருக்கவும், "பிள்ளையை ரொம்ப பயமுறுத்தாதேடா..." என்று அவனை கண்டித்தவள், "நீ சொல்லும்மா... ஏன் என்னிடம் அப்படி கேட்டாய்? குழந்தை எப்படி பிறக்கும் என்று எதுவும் உனக்கு தெரியாதா?" என மென்மையாக கேட்டாள்.

அவளோ இவளுக்கு பதிலளிக்காமல் ஆத்திரத்தில் முகம் சிவந்து இறுகி நின்றிருந்த கதிரையே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ம்... நீ இங்கே பார்... அவன் முகத்தை பார்க்காதே, எனக்கு பதில் சொல்!" என்று அவள் நாடியை பிடித்து தன்புறம் திருப்பினாள்.

அனுவை தயக்கத்துடன் ஏறிட்டவள், "எனக்கு தெரியுமே!" என்றாள் மெதுவாக.

"என்ன தெரியும்?"

"திருமணம் ஆகி விட்டால் குழந்தை பிறக்கும் என்று தெரியும். ஆனால் ஏன் எனக்கு வரவில்லை என்று தான் தெரியவில்லை. அதனால் தான் உங்கள் குழந்தை எத்தனை நாட்களில் வந்தது என்று விவரம் கேட்டேன்!" என்றாள் தயங்கித் தயங்கி.

"ஒரு குழந்தை உருவாக திருமணம் மட்டுமே போதுமா... அப்பொழுது திருமணம் ஆகாதவர்களுக்கு எல்லாம் குழந்தையே பிறக்காதா?" என்று தன் கேள்வியாலே அவளுக்கு விஷயத்தை புரியவைக்க முயன்றாள் அனு.

அடிப்படை தெரிந்தால் தானே சூசகமான கேள்விகளை கூட அவளால் புரிந்துக்கொள்ள முடியும்? உலகத் தொடர்புகளை விட்டு விலக்கி தனிமைப்படுத்து வளர்த்தப்பட்ட அப்பெண்ணிற்கு தன் வீட்டிலோ அக்கம்பக்கத்திலோ கண் முன்னாடி என்ன நடந்ததோ அதைத் தவிர வேறெந்த விவரமும் தெரியாது.

"என்ன கேட்கிறீர்கள் நீங்கள்? கல்யாணம் ஆகாமல் எப்படி குழந்தை பிறக்கும்?" என நெற்றியை சுருக்கி அவளிடம் எதிர்கேள்வி கேட்டாள் இளநகை.

"நோ கதிர்... சத்தியமாக என்னால் இதற்குமேல் எதுவும் கேட்க முடியாது. நீ நினைத்துக் கொண்டிருப்பது போல் இவள் எதுவும் நடிக்கவில்லை, ஐ ஆம் சுயூர் அபௌட் தட். சோ... பெட்டர் உன் நிலையிலிருந்து கூடிய விரைவில் வெளிவந்து அவளுடைய பிரச்சினை என்னவென்று கண்டுப்பிடிக்கப் பார். எதற்கெடுத்தாலும் அவளை குறைச்சொல்லி குதிக்கின்ற வேலையை இந்த நிமிடத்துடன் விட்டுவிடு!" என்றாள் அனு முடிவாக.

தான் பேசியது எதுவோ கதிருக்கு பிடிக்கவில்லை என்பது இளநகைக்கு கொஞ்சம் புரிய, வீடு திரும்பும் வழியில் மறந்தும் அவன்புறம் திரும்பாமல் அவளின் கழுத்து அவனுக்கு எதிர்புறமே தான் திரும்பியிருந்தது.

புருவம் சுளித்தபடி அனுவிடம் பேசியதை தனக்குள் அலசிக்கொண்டு ஸ்டிரியங்கை கைப்போன போக்கில் வளைத்துக் கொண்டிருந்தவனுக்கு சட்டென்று ஒன்று தோன்ற திரும்பி மனைவியை பார்த்தான்.

"ஏய்... சக்தி வேணியை பற்றிப் பேசும்பொழுது நீ ஏன் அப்படி பயந்தாய்?"

ம்... என திரும்பியவள் அவன் கேள்வியில் தடுமாறியபடி, "அது... அப்படியெல்லாம் எதுவும் இல்லையே!" என்று மீண்டும் வெளிப்புறமாக வேகமாக திரும்பிக் கொண்டாள்.

"உன் திருட்டுவிழியே காட்டிக் கொடுக்கின்றது நீ பொய் சொல்கிறாய் என்று... எதற்கு இந்த வீண் முயற்சி? ஒழுங்காக பதில் சொல்!"

கைகளை பிசைந்தவள், "அது வந்து... அவர்கள் அப்படி சொன்னதும் அவ்வளவு நேரமாக சிரித்துக் கொண்டிருந்த நீங்கள் உம்மென்று ஆகிவிட்டீர்களா... கோபத்தில் எங்கே என்னை தனியாக மண்டபத்திலேயே விட்டுவிட்டு வீட்டிற்கு போய் விடுவீர்களோ என பயந்து விட்டேன்!" என்றாள் அவனை தயக்கத்துடன் கடைவிழியில் நோக்கி.

'அவளை நன்றாக கவனித்துப் பார்டா... அவளிடம் நடிப்பு இல்லை!'

இரவெல்லாம் உறக்கம் வராமல் இளநகை பற்றிய குழப்பத்திலே உழன்றுக் கொண்டிருந்தான் கதிர். அதற்கு காரணமானவளோ எந்த கவலையுமில்லாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

அக்காவிடம் கேட்டால்... இவள் யார்? எங்கிருந்தாள்? என்ன செய்துக் கொண்டிருந்தாள்? என்ற விவரமெல்லாம் உடனே தெரிந்துவிடும். ஆனால் கூடவே அவர்களின் கற்பனையும், எதிர்பார்ப்பும் அதிகமாகி விடும்... வேண்டாம் என்று முடிவு செய்தான்.


****

"கதிர்... சொன்னதெல்லாம் நினைவிருக்கிறதா? அவளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள். கம்பெனியே கதியென்று இருக்காதே... நேரமாக வீட்டிற்கு வந்து அவளுக்கு துணையாக இரு.

வீட்டின் கதவை தாழ்பாள் போட்டு வைக்காதே, சாவியால் மட்டும் பூட்டிவிடு, அப்பொழுது தான் மாமா வந்தால் அவன் பாட்டுக்கு கதவை திறந்து உள்ளே வருவான், இல்லையென்றால் நீ வந்து திறக்கும் வரை காத்திருந்ததற்காக உன்னிடம் ஏதாவது கோபித்துக் கொள்வான் என்று அவளிடமும் சொல்லியிருக்கிறேன். பார்த்துக்கொள்!" என மீண்டும் ஆரம்பித்த புள்ளிக்கே வந்த அக்காவை அலுப்புடன் பார்த்தான் கதிர்.

"அவ்வளவு கஷ்டம் ஏன்... அவளையும் ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டியது தானே?"

"இல்லைடா... உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு அப்படியே குலதெய்வ கோவிலுக்கும் போய் வரலாமா என்று பார்க்கிறோம். புதுப்பெண்ணை முதல் முறையாக பூர்வீக ஊருக்கு அழைத்துச் செல்லும்பொழுது அப்படி தனியாக அழைத்துச் சென்றால் கேள்வி வரும்.

நீயும் இரண்டு, மூன்று நாட்கள் எல்லாம் வேலையை அப்படியே விட்டுவிட்டு வரமுடியாது என்று சொல்லி விட்டாய். என்ன செய்வது? வேறுவழியில்லாமல் மனதே இல்லாமல் தான் இவளை தனியாக விட்டுச் செல்கிறோம்!" என்று விளக்கினாள் அமுதா.

"சரி, என்னவோ செய்யுங்கள். எத்தனை மணிக்கு ட்ரெயின்?"

"இப்பொழுது கிளம்பினால் சரியாக இருக்கும். நாங்கள் தயாராக தான் இருக்கிறோம்!" என்றார் கனகம்.

"அப்பொழுது கிளம்புங்கள், உங்களை ஸ்டேஷனில் டிராப் பண்ணிட்டு நான் கம்பெனிக்குச் செல்கிறேன்!" என்று வெளியேறினான் இளங்கதிர்.

முகம் வாடி நின்ற இளநகையின் கன்னம் தட்டி ஆயிரம் ஜாக்கிரதைகளை உதிர்த்துவிட்டு கிளம்பினாள் அமுதா.

கதிர் தன் கையை திருப்பி நேரம் பார்க்க, மணி பன்னிரெண்டு இருபது. கடந்த அரைமணி நேரமாக அலுவலகத்தில் இருப்பே கொள்ளாமல் தவித்தான் அவன்.

எல்லாம் தன் துணைவியை எண்ணித்தான்...

'என்ன செய்துக் கொண்டிருக்கிறாளோ தெரியவில்லையே? அன்று அனுவுடன் பேசும்பொழுதே மிகவும் இம்மெட்சூர்டாக பேசினாள். அக்காவும் வேறு கிளம்பும் வரை அவளை கவனமாக பார்த்துக் கொள்ளும்படி எச்சரித்து சென்றார். இவள் வீட்டில் தனியாக பத்திரமாக இருந்துக் கொள்வாளா?' என்றெண்ணி கவலையடைந்தவன் அதற்குமேல் தாமதிக்காமல் நேராக கிளம்பி வீட்டிற்குச் சென்றான்.

தன்னிடம் இருந்த சாவியால் கதவை திறக்க, அவளுடைய அரவமில்லாமல் வீடே நிசப்தமாக இருந்தது.

மனதில் லேசான திகில் பரவ, கீழ்தளம் முழுவதும் விரைந்து விழிகளால் அலசிவிட்டு அடுத்து அவளை தேடி விறுவிறுவென மாடியேறிச் சென்றான்.

தன்னுடைய அறைக்கதவை பதற்றத்துடன் வெடுக்கென்று திறந்த கதிர், இளநகை அங்கே இருந்த கோலம் கண்டு பலமாக அதிர்ந்தான்.

கட்டுக்கடங்காமல் பெருகிய ஆத்திரம் எல்லாவற்றையும் மறக்கச் செய்ய, நான்கே எட்டில் மனைவியை வேகமாக நெருங்கியவன் அவளை இழுத்த வேகத்தில் அவள் நிற்க முடியாமல் நிலைத்தடுமாறி அவன் முன் சுழன்று வந்து நிற்க, அடுத்த நொடி அவளின் கன்னத்தில் பலமாக ஓங்கி ஒரு அறை விட்டான் கதிர்.


இனி மீதிக்கதை முழுவதும் நம் அப்பாவி இளா, காதலில் சீண்டி விளையாடும் கதிரின் அதிரடி தாங்க முடியாது அங்கங்கே மிரண்டு விழித்து அவனை அமுதாவிடம் சிக்க வைக்கும் முழு நகைச்சுவையும், ரொமான்ஸும் தான் கலக்கலா வரப்போகுது.

ஆன்லைனில் புதிதாக எழுதும் பொழுது இக்கதைக்கு தன்னால் ரொமான்டிக் சீன்ஸ் அருவியாக மண்டையிலிருந்து கொட்டியது என்றால் இன்னொரு பக்கம் “என்னை தெரியுமா?” ரீரன் செய்கிறேனே... அதற்கு என் வாசக நட்புக்களின் மிரட்டலில் மெனக்கெட்டு யோசித்து ரொமான்ஸ் எழுதியிருப்பேன். என் ஆரம்ப காலங்களில் அதிக ரொமான்ஸ் எழுதியது இந்த இரு கதைகளிலும் தான்.
 
SarojaGopalakrishnan

Well-known member
Joined
Jul 20, 2018
Messages
3,992
Reaction score
6,709
Points
113
Location
Coimbatore
ஐயோ இந்த பிள்ள
இத்தனை அப்பாவியா
இருக்கு

இப்ப என்ன செஞ்சா
மரத்து மேல ஏறிட்டாளோ
 
banumathi jayaraman

Well-known member
Joined
Jan 17, 2018
Messages
28,763
Reaction score
68,700
Points
113
:D :p :p
மிகவும் அருமையான பதிவு,
தீபா பாபு டியர்

இளநகை ரொம்பவே பாவம்
இருபத்தைந்து வயசு வரைக்கும் ஒண்ணுமே தெரியாமல் பச்சை மண்ணா வளர்த்திருக்கிறாளே சுந்தரி இவளுக்கெல்லாம் ஒரு தண்டனையும் கிடையாதா?

இளா இப்போ என்ன பண்ணி வைச்சாள் கதிர் அடிக்கும் அளவுக்கு?
 
Deepa Babu

Author
Author
Joined
Feb 18, 2021
Messages
1,044
Reaction score
2,430
Points
113
Location
salem
ஐயோ இந்த பிள்ள
இத்தனை அப்பாவியா
இருக்கு

இப்ப என்ன செஞ்சா
மரத்து மேல ஏறிட்டாளோ
Haiyo sis... Nalla sirichitten 😂😂😂 Unga doubt correct than. Ava yenna pannanu nalaiku therinjidum. 🙂🙂
 
Deepa Babu

Author
Author
Joined
Feb 18, 2021
Messages
1,044
Reaction score
2,430
Points
113
Location
salem
:D :p :p
மிகவும் அருமையான பதிவு,
தீபா பாபு டியர்

இளநகை ரொம்பவே பாவம்
இருபத்தைந்து வயசு வரைக்கும் ஒண்ணுமே தெரியாமல் பச்சை மண்ணா வளர்த்திருக்கிறாளே சுந்தரி இவளுக்கெல்லாம் ஒரு தண்டனையும் கிடையாதா?

இளா இப்போ என்ன பண்ணி வைச்சாள் கதிர் அடிக்கும் அளவுக்கு?
Vivaram ah valartha... Than pangu sothu ketpale... 😔😔
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top