• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Deepavali Special - Laddoo

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Laddoo

கடலைமாவு -1 கப்
சர்க்கரை – 1 ½ கப்
கற்கண்டு - 4 tsp
கிராம்பு -4
முந்திரி – 4 tsp
திராட்சை – 4 tsp
ஆரஞ்சு கலர் – ¼ tsp
சோடா உப்பு – ¼ tsp
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு


செய்முறை
முதல்ல சர்க்கரையில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைங்க. ( ஒரு சின்ன தட்டுல ஒரு துளி சர்க்கரை பாகை போட்டு தட்டை கையில் வெச்சு சுத்துநீங்கன்னா அந்த பாகு அசையாம அப்படியே இருக்கணும், வழிய கூடாது, இதுதான் பதம்)

ஒரு பாத்திரத்தில் கடலைமாவை சலித்து, அதனுடன் சோடா மாவு, ஆரஞ்சு கலர், சிட்டிகை உப்பு சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைச்சுக்கோங்க

வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவைங்க

சர்க்கரை பாகு பதம் வந்திருச்சுன்னா அடுப்பை அணைத்து விடவும். ஆனா பாகு சூடா இருக்க மாதிரி பார்த்துக்கோங்க.

இன்னோரு சின்ன வாணலியில 3tsp நெய் ஊத்தி முந்திரி (சின்ன சின்னதா உடைச்சு) முதல்ல வறுத்துகிட்டு, அப்புறம் கிராம்பு, திராட்சை சேர்த்து வறுத்து பாகுல போட்டுடுங்க, அதோட கற்கண்டையும் சேர்த்து பாகுல போட்டுடுங்க.

இப்போ எண்ணெய் நல்லா சூடான உடனே, இடது கையில ஜாரணிய (பூந்தி போட பயன்படும் கரண்டி) வாணலிக்கு மேல புடிச்சுக்கிட்டு, வலது கையால கரைச்சு வைச்சிருக்க மாவை ஒரு குழிகரண்டில எடுத்து ஜாரணி மேல ஊத்துங்க.

எண்ணையில பூந்தி விழும்..

ஜாரணிய லேசா விரலால தட்டி விடுங்க. கரண்டி வச்சு தேய்க்க கூடாது. தேய்ச்சா பூந்தி அமுங்கி போய் விழும்.

பூந்தி வெந்ததும் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக்கோங்க.. சீக்கிரம் வெந்திடும். வெந்ததும் எடுத்து பாத்திரத்தில போடும்போது ச்லங் னு சத்தம் வரணும். அப்போ பூந்தி சரியான பதத்தில் இருக்குன்னு அர்த்தம்.

கொஞ்ச கொஞ்சமா பூந்தி போட போட எடுத்து சர்க்கரை பாகில சேர்த்துட்டே வாங்க..

பாகும் சூடாவே இருக்கணும். ஆறிடுச்சுன்னா இறுக ஆரம்பிச்சிடும்.
எல்லா பூந்தியும் போட்டு முடிச்சதும், எல்லாத்தையும் சேர்த்து நல்லா கிளறி வச்சிடுங்க..

கொஞ்சம் ஆறினதும், லேசான சூட்டோட கையில் நெய் தடவிக்கிட்டு, உருண்டை புடிச்சு வச்சிடுங்க..

பெரிய தட்டில உருட்டி வைங்க, நல்லா ஆற விடுங்க.. ஆறினதும் வேற டப்பாக்கு மாத்திகோங்க..

நல்லா எண்ணெய் சூடான உடன பூந்தி போட ஆரம்பிங்க..
எண்ணையும் கொஞ்சம் நிறைய ஊத்திக்கோங்க..

அவ்ளோதான் பா லட்டு ரொம்ப ஈசி… இந்த அளவு செய்ய ஒரு மணி நேரம் போதும், 25 – 30 லட்டு வரும்..
செஞ்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்கப்பா ??
 




Last edited:

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
பாகு இருகிடுச்சுnnaa reheat பண்ணலாமா டாலி.....?

Colour Kesar powder add பண்ணலாமா.....? My niece loves the colour one...

அப்புறம் சூப்பர் ரெசிபி darling....will try...

@Sanshiv
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
Hai sara baby ladoo pudichuthaa @Sara saravanan
சூடு பொறுக்க லட்டு புடிக்கத்தான்...லைட்டா டர்....... திங்கவும் ஆசை...any ideas.... (பேசாமல் மாம்ஸை களத்தில இறக்கிடுறேன்..... நீ எதையும் தாங்கும் இதயம்... எனக்காக இந்த சூடு தாங்க மாட்டியான்னு... கவுத்துட வேண்டியது தான்....)??????
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பாகு இருகிடுச்சுnnaa reheat பண்ணலாமா டாலி.....?

Colour Kesar powder add பண்ணலாமா.....? My niece loves the colour one...

அப்புறம் சூப்பர் ரெசிபி darling....will try...

@Sanshiv
Colour add pannanum pa.. kadala maavu karaikum bothu add pannikalam..
Paagu stovelaye vachiruntheenganna irukaathu pa.. stove off panninalum antha heat konjam irukum.. athukulla poonthi add panna arambicha correcta irukum
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
சூடு பொறுக்க லட்டு புடிக்கத்தான்...லைட்டா டர்....... திங்கவும் ஆசை...any ideas.... (பேசாமல் மாம்ஸை களத்தில இறக்கிடுறேன்..... நீ எதையும் தாங்கும் இதயம்... எனக்காக இந்த சூடு தாங்க மாட்டியான்னு... கவுத்துட வேண்டியது தான்....)??????
நானும் ரொம்ப சூடா எல்லாம் புடிக்க மாட்டேன்.. கை பொறுக்கும் அளவு சூடு இருக்கும் போது புடிக்கலாம்
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
நானும் ரொம்ப சூடா எல்லாம் புடிக்க மாட்டேன்.. கை பொறுக்கும் அளவு சூடு இருக்கும் போது புடிக்கலாம்
எதுக்கும் மாமா வந்துடட்டும்.. டாலி.. அதான் safe...????... செஞ்சு தின்னதும்...திருப்பி comments போடறேன்....???
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
எதுக்கும் மாமா வந்துடட்டும்.. டாலி.. அதான் safe...????... செஞ்சு தின்னதும்...திருப்பி comments போடறேன்....???
Ok darly
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top