• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Dhuruva kaadhal - 5(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அங்கு அவளின் நிலையை பார்த்தவன், என்ன நினைத்தனோ அவளின் கையை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு, நேராக ஓரிடத்தில் அவளை தள்ளி விட்டான். அவள் அதிர்ந்து, அவனை முறைக்க திரும்பும் பொழுது அவன் மாயமாகி இருந்தான்.
அவன் தள்ளிவிட்ட இடம், துணியை காய வைக்கும் ஒரு எந்திர மெஷின். அதில் ஏற்கனவே, சில பெண்கள் தங்கள் நீச்சல் உடையை காய வைக்க அங்கு நின்று இருந்தனர்.


இதை அவள் முன்னமே பார்த்து இருந்தாலும், 20 நிமிஷம் காய வைக்க 10 aed, அதாவது இந்திய ரூபாயில் 192 ரூபாய். இவ்வளவு செலவு செய்து துணியை காய வைக்க வேண்டுமா, என்ற ஒரு காரணத்திற்காகவே அவள் இங்கே வராமல், சூரிய சூடு தன் மீது படும் இடத்தில் நின்றாள்.

ஆனால், உடலை குத்தும் ஊசி பார்வையில் அவளால் அங்கே நிற்க முடியவில்லை. இதை தெரிந்தோ, தெரியாமலோ அவன் இவளுக்கு உதவி செய்து இருக்கிறான்.

இவன் யார், எனக்கு பணம் கட்ட என்று கோபம் கொண்டவள், பிறகு கட்டட்டும் எத்தனை முறை ரூல்ஸ் பேசி என்னை கழுத்து அறுத்து இருக்கிறான் என்றும் பொறுமினாள்.

உடை காய்ந்ததும், நேராக வெளியே வந்தவள் தன் தம்பியுடன் சேர்ந்து வேனில் ஏறினாள். அங்கே ஏற்கனவே அவளின் அண்ணி குடும்பம் அமர்ந்து இருப்பதை பார்த்து, கண்டுகொள்ளாமல் பின்னாடி சென்று அமர்ந்தாள்.

“மகாராணி எங்க போயிட்டு வந்தீங்க? இங்க நாங்க எல்லாம் சீக்கிரம் எல்லா இடம் பார்த்துவிட்டு, ஹோட்டலுக்கு போக வேண்டாமா?”.

“பசங்க சோர்ந்து போகிறதுக்குள்ள, எல்லா இடத்தையும் சீக்கிரம் பார்த்தா தான் நல்லா இருக்கும். அதனால இனி சீக்கிரம் வர பாருங்க, அக்காவும் தம்பியும்” என்று அவளின் இரு அண்ணிகளும் நொடித்துக் கொண்டனர்.

அவள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினாள். Faiq உடனே வண்டியை எடுக்க சொன்னான், டிரைவரை.

வண்டி சீராக சென்று கொண்டு இருக்கும் பொழுது, அவன் தற்செயலாக திரும்பி பார்க்க, அங்கே காற்றிற்கு தன் முடி பறக்க அதை சற்று சீர் செய்து, வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ஏன் என்று தெரியவில்லை, அவளை பார்க்க சொல்லி உள்ளுணர்வு அவனை உந்தி தள்ளியது. அவளை பார்த்துக்கொண்டே இருக்க சொல்லி, தூண்டிய மனதை கஷ்டப்பட்டு அடக்கினான் faiq.


அதற்குள் காட்ட வேண்டிய இடம் வருவதால், அவர்கள் பக்கம் திரும்பி அதை பற்றி பேச தொடங்கினான்.

“இப்போ நாம tunnel வழியா போக போறோம், இந்த tunnel மேல artificial கடல் உருவாக்கி இருக்காங்க. இப்போ tunnelக்கு மறுபக்கம் இருந்து நாம அதை பார்க்கலாம்” என்று கூறிக் கொண்டு இருந்தவன், tunnel வழியாக வண்டி உள்ளே சென்று, மேலே மறுபக்கம் வந்த உடனே காட்டினான்.

அதை கண்கள் விரிய எல்லோரும் பார்த்துக் கொண்டு இருந்தனர். காவ்யஹரிணி, அதை மெய் மறந்து ரசித்துக் கொண்டு இருந்தாள்.

அவள் மனதினுள், ஒன்றும் இல்லாமல் இருந்த இந்த பாலைவனத்தை சோலைவணமாக மாற்றிய பெரும் தலைவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதத்தில் அழகோ அழகு.
என்ன தான் இருந்தாலும், அவளுக்கு எப்பொழுதும் அவளின் ஊரான மதுரை தான் என்றும் உசத்தி. இங்கு கட்டிடங்கள் ஓங்கி வளர்ந்து இருக்கிறதே தவிர, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையான பயிர்கள் இல்லை.


இந்த எண்ணத்தில் இருந்தவள், அதற்குள் அவன் அடுத்த இடத்தை விளக்க தொடங்கினான்.

“இப்போ நான் உங்களுக்கு gps காட்டுறேன், இந்த palm tree மாதிரி காட்டுது இல்லையா, இந்த ரோடு ல தான் இப்போ நாம போய்க்கிட்டு இருக்கோம். இப்போ இன்னொரு tunnel வரும், அது வழியா போனா அந்த மரத்துக்கு உச்சியில் தான் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் இருக்கிறது”.

“அட்லாண்டிஸ் ஹோட்டல், துபாயின் மூன்றாவது அந்தஸ்து பெற்ற ஹோட்டல் இது. இங்கு தண்ணீர் விளையாட்டு திடல் இருக்கிறது, கடலில் வாழும் உயிரினங்களை காண கடலுக்கு அடியில் கூட்டி செல்ல அனுபவமிக்கவர்கள் இருக்கிறார்கள்”.
“முன்பதிவு செய்து கொண்டு சென்றால், அங்கே எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்” என்று கூறிவிட்டு அங்கே அந்த இடம் வரவும் வண்டியை நிறுத்த கூறினான்.


காவ்யஹரிணி, அந்த இடத்தை பார்த்தவள் ஏதோ மசூதிக்கு வந்த உணர்வு போல் தோன்றவும், இறங்கி கீழே சென்று நன்றாக பார்த்தாள். அந்த கட்டிடம் அப்படி ஒரு அமைப்பை கொண்டு இருந்தாலும், சுற்றி இருந்த கடலும், அங்கே சென்று கொண்டு இருந்த சில வெளிநாட்டு மக்களை பார்த்து தான் அது ஹோட்டல் என நம்பினாள்.

அவளின் தம்பி மனோகர் வந்தவன், இந்த ஹோட்டலை fast and furious படத்திலும், ஹாப்பி நியூ இயர் என்ற ஹிந்தி படத்திலும் பார்த்ததாக கூறினான். அதன் பிறகு அதை பற்றி ரொம்ப ஆராயாமல், அக்காவும் தம்பியும் புகைப்படம் எடுக்க தொடங்கினர்.

இந்த முறை காவ்யஹரிணி, அவன் புகைப்படத்தில் இருந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்து இருந்தாள். எத்தனை படத்தை தான் அழிப்பது, என்ற எரிச்சல் தான் இந்த முடிவிற்கு காரணம்.

எல்லாம் முடிந்து, வேனில் ஏறியவர்கள் அடுத்து சென்றது ஒரு இந்திய உணவகத்திற்கு. அங்கே அவன் அவர்களை இறக்கி விட்டு, அவன் பக்கத்தில் உள்ள ஒரு அரேபிய உணவகத்திற்கு சென்றான்.

அவன் சாப்பிட்டு முடித்து வெளியே வர, அவளும் சாப்பிட்டு முடித்து கையில் ஒரு குச்சி ஐஸ் சுவைத்துக் கொண்டே வந்தாள். சிறு பிள்ளை போல் அவள் அதை ரசித்து சாப்பிடுவதை பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

சாப்பிட்டு முடித்தவுடன், கையில் இருந்த குச்சியை அங்கு இருந்த குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, tissue பேப்பர் கொண்டு கையை நன்றாக சுத்தம் செய்து, அதையும் அங்கே போட்டுவிட்டு வேனில் ஏறினாள்.

அவள் வேனில் ஏறியதை பார்த்துவிட்டு, இவனும் அவளிடம் பேச ஏறிக் கொண்டான். அவன் வேனில் ஏறியதை பார்த்து, இவள் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டாலும், மனதிற்குள் படபடவென்று உணர்ந்ததை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

“இது என்ன இப்படி படபடன்னு வருது எனக்கு, இவனை யார் இப்போ உள்ள வர சொன்னா? மீனு காப்பாத்து மா” என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டே, அவனை கோபமாக பார்த்தாள்.
“மிஸ் நாம நிஜமாவே இன்னும் நிறைய இடத்துக்கு போகணும், அதனால முடிஞ்ச அளவுக்கு நான் சொல்லுற டைமிங் ல வெளியே வந்திடுங்க பிலீஸ்” என்று அவன் கூறவும் அவள் சரி என்றாள்.


“உங்க ஊர் எதுன்னு தெரிஞ்சிக்கலாமா, ஜஸ்ட் சொல்ல விருப்பம் இருந்தா சொல்லுங்க” என்று அவன் கூறவும், அவள் மதுரை என்றாள்.

அவள் மதுரை என்று கூறவும், இவன் முகத்தில் சிந்தனை படிந்தது. அவனுக்குள் ஒரு தேடல், கிட்டத்தட்ட இரண்டு வருடமாக ஆராய்ந்து ஒரு clue அவன் கைக்கு கிடைத்தது. அது அவனுக்கு காட்டிய இடம் தான், மதுரை.

இப்பொழுது இவள் மதுரை என்று கூறவும், அவனின் ஆராய்ச்சிக்கு இங்கு சென்றால் நிச்சயம் அவன் தேடிக் கொண்டு இருக்கும் விஷயம் பிடிபடும் என்று நம்பினான்.
“ஓகே மிஸ், நீங்க எப்போ ஊருக்கு போவாங்க?” என்று அடுத்த கேள்வியை கேட்டான்.


அவன் கேட்ட கேள்வியில், அவள் கொதித்து விட்டாள். இப்பொழுது தான் வந்து இருக்கிறாள், அதற்குள் விரட்டும் இவனை என்ன செய்யலாம் என்று மனதிற்குள் பொறுமினாள்.
“அது ஒரு வருஷமாகும், எனக்கு இங்க வேலை கிடைச்சு இருக்கு. அதான் எல்லோரும் சுத்தி பார்த்துட்டு, இங்க இருக்க வந்து இருக்காங்க” என்று அவள் கூறவும் அவன் அதிர்ச்சியானான்.
“ என்னது ஒரு வருடமா! மிஸ் வேற யாராவது உடனே கிளம்புறாங்களா? கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்” எனவும் இவளுக்கு கோபம் வந்தது.


“யாரும் போகல, நான் கொஞ்சம் தனியா இருக்கணும், இப்போ கிளம்புறீங்களா” என்று கிட்டத்தட்ட அவனை விரட்டி விட்டாள்.

“ராஸ்கல்! என்னை பேக் பண்ணி அனுப்ப, எப்படி எல்லாம் கேள்வி கேட்குறான்! இவனை வச்சு செய்யணும், பொறு டா எல்லோரும் ஊருக்கு போன பிறகு, உன்னை தேடி வந்து வச்சு செய்றேன்” என்று மனதிற்குள் கருவிக் கொண்டாள்.

“நான் என்ன தப்பா பேசிட்டேன் அப்படினு, இந்த குதி குதிக்குறா! இரு இங்க தான வேலை செய்ய போற சொன்ன, உனக்கு இருக்கு” என்று அவன் ஒரு பக்கம் மனதிற்குள் கருவிக் கொண்டான்.

எல்லோரும் வந்த பிறகு, அடுத்து அவர்கள் சென்றது துபாயின் முதல் அந்தஸ்து பெற்ற ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலை காண.

Burj al arab, இந்த ஹோட்டல் தான் துபாயின் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல். இது, ஒரு தனி தீவு போல் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த இடத்திற்கு செல்ல வேண்டுமானால், ஒரு ஹெலிகாப்டர் மூலம் செல்ல வேண்டும் அல்லது பெரிய படகு எடுத்து செல்ல வேண்டும்.

இந்த ஹோட்டலின் விசேஷம் இது மட்டுமில்லை, அதன் அமைப்பும், ஒவ்வொரு அறையில் இருக்கும் சுற்றும் கட்டிலும், துபாய் அழகை ரசிக்க மேல் மாடியில் இருக்கும் டெலெஸ்கோப்பும் தான்.

துபாய் என்றாலே, கண் முன் முதலில் இந்த ஹோட்டலை தான் முதலில் காட்டுவர். அந்தளவு பெரிய கட்டிடம் முதன் முதலில் அமைத்த பெருமை, இந்த ஹோட்டலுக்கு தான் சேரும்.

ஹோட்டலிற்குள் செல்ல அனுமதி இல்லாததால், அங்கே அருகே உள்ள பீச் மணல் அருகே தான் நின்று பார்க்க வேண்டும். அங்கே சென்று பார்த்துவிட்டு, புகைப்படம் எடுத்து முதலில் திரும்பினாள் காவ்யஹரிணி.

அவளை பொறுத்தவரை, அங்கே அப்படி ஒன்றும் விசேஷமாக தோன்றவில்லை. ஆனால் அவன் எல்லோரும் வந்த பிறகு கூறினான், அந்த ஹோட்டலின் வடிவமைப்பு ஒரு வாள் உருவத்தில் செய்யப்பட்டு இருந்தது என்று.
அப்பொழுது தான், அவள் எடுத்து இருந்த புகைப்படத்தில் மீண்டும் பார்த்தவள் அது அவன் கூறியது போல் இருக்கவும், மனதிற்குள் சபாஷ் போட்டாள் அந்த கட்டடம் அமைத்த கலைஞருக்கு.


அடுத்து, அடுத்து அவன் காட்டிய கட்டிடங்கள் எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உருவத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அவளுக்கு அப்பொழுது தோன்றியது ஒன்று தான், இவர்கள் கட்டிடம் கட்டுவதில் வல்லவர்கள் என்று.
அடுத்து வண்டி நின்ற இடம் பார்த்து, எல்லோரும் மலைத்து போயினர். போட்டோ Frame போல் இருந்தது, அந்த கட்டிடம் பெரிய அளவில்.

இதற்கு பெயர் தான் துபாய் frame, என்று அறிமுகப்படுத்திவிட்டு அவர்களை அழைத்து சென்றான். இரண்டு பக்கமும் லிப்ட் வசதி இருப்பதை கூறி, அவர்களுக்கு உள்ளே விளக்க வேறு கைட் இருப்பதாக கூறி, அவர்களிடம் டிக்கெட் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.


அவன் வரமாட்டான் எனவும், ஏனோ காவ்யஹரிணிக்கு முகம் சுருங்கிவிட்டது. அவன் அருகே இருக்கும் பொழுது, கோபமாக இருக்க, இப்படி அவன் தள்ளி செல்லும் பொழுது முகம் சுருங்க இருக்கும் தன்னையே வெறுத்தாள்.

அங்கே லிப்டில் மேலே செல்ல, மனமோ கீழே அவனை சுற்றி கொண்டு இருந்தது காவ்யஹரிணிக்கு. அவனோ, அவளை எப்படி தன் வழிக்கு கொண்டு வருவது என்ற தீவிர யோசனையில் இருந்தான்.
இப்படி இருவரும், இரு துருவங்களாக இருக்க இவர்களுக்குள் எப்பொழுது காதல் மலரும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தது விதி.
தொடரும்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top