• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Dhuruva kaathal - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஹாய் ஹாய் மக்களே,

சாரி , நேற்றே கொடுத்து இருக்க வேண்டியது, சற்று தாமதமாகி விட்டது. இதில் faiq பற்றிய அறிமுகம் கூறி இருக்கிறேன். என்னது இது? ஒரு பிரின்ஸ்க்கு இந்த கஷ்டமா? அப்படின்னு நீங்க கேட்கலாம்.

எவ்வளவு பெரிய பிரின்ஸ்னாலும் அவனும் சாதாரண மனிதனே, நம்மை போல். டீசர் ல நான் கொடுத்த சில விஷயங்கள் எல்லாம் எடிட் செய்து தான் பதிவு கொடுத்து இருக்கேன் மக்களே. காரணம் கதையை சிறிது மாற்றி அமைத்து இருக்கிறேன், மன்னியுங்கள் பா..

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். விரைவில் அடுத்த பதிவுடன் வருகிறேன். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இப்படிக்கு,
உமா தீபக்..
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 2

இரவு நேர துபாய், அழகாக ஜொலித்துக் கொண்டு இருந்தது. முக்கியமாக பணக்காரர்கள் தங்கும், அந்த நட்சத்திர விடுதி அழகாக ஜொலித்துக் கொண்டு இருந்தது.

அந்த விடுதியின் ஒரு பகுதியில், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அமர்களமாக பெரும் இரைச்சலுடன் நடந்து கொண்டு இருந்தது. அந்த கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளாமல், கையில் மது கோப்பையுடன் யோசனையாக அமர்ந்து இருந்தான், அந்நாட்டின் பிரின்ஸ் முகமத் faiq.

அவனின் தாய் சைரா, அவனுடைய ஐந்து வயதில் காலமானார். அவனின் தாய் தான், அவனது உலகமே. தாய் இறந்த அடுத்த மாதத்திலே தந்தை முகமத் கலிப், இரண்டாம் திருமணம் புரிந்து கொண்டார்.

அவனின் தந்தை ஆரம்பத்தில் இருந்தே, அவனின் தாயையும், அவனையும் சரியாக கண்டு கொள்ள மாட்டார். ஐந்து வயது வரை, தாயிடம் ஒட்டிக் கொண்டு இருந்தவன், தாய் இறந்த பின் அவன் நாடியது தந்தையை தான்.

ஆனால் அவரோ, அப்பொழுதும் அவனை கண்டுகொள்ளவில்லை. ஆனால், உடனே இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

சித்தி ஆலாவோ, அவனுக்கு சாப்பாடை மட்டும் பரிமாறுவாள். அவனுக்கு ஆறுதலாகவோ, அன்னையாக அரவணைத்து அவனை வழி நடத்தவோ இல்லை. மாறாக தேளாக கொட்டிக் கொண்டே இருந்தாள், அவர்கள் வாரிசு முகமத் கபார் வந்த பின்.

சாப்பிடவும், தூங்கவும் மட்டுமே வீட்டில். மற்ற நேரம் எல்லாம் அவனின் உற்ற நண்பன் ரசாக் தான், அவனை இன்னும் உயிர்ப்போடு வைத்துக் கொண்டு இருப்பது.

படிப்பில் மட்டுமே தன் கவனத்தை வைத்துக் கொண்டு, தந்தையிடம் அப்படியாவது நல்ல பெயர் எடுத்து, அவரிடம் பாராட்டு வாங்கி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, நன்றாக படித்தான்.

அவரோ, அவனை விட அவனின் தம்பி கபாரும், தங்கை ஆராவையும் தான் கவனித்தார். இன்று வரை, தந்தை தன்னை ஏன் இந்த நிலையில் வைத்து இருக்கிறார் என்று தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கிறான்.

இன்று அதிகமாக வேறு, குடித்து இருக்கிறான். காரணம் துபாயின் பிரின்ஸ் என்று, அவனின் தம்பி முகமத் கபாருக்கு பதவி கொடுத்து கௌரவப்படுத்தி இருக்கிறார் அவனின் தந்தை.

“டேய் faiq! போதும் டா இன்னைக்கு ஓவர் ஆகிடுச்சு. வீட்டுக்கு போகலாம், வாடா” என்று அழைத்தவனை பார்த்து விரக்தியாக புன்னகைத்தான்.

“யார் இருக்கா வீட்டுல? நான் தனியா தான டா இருக்கேன், இரு கொஞ்ச நேரம்” என்று கூறிய நண்பனை பார்க்க, அவன் மனம் வலித்தது.

எப்படி இருக்க வேண்டியவன்! இப்படி ஒரு சூழ்நிலையிலும், அவன் அமைதியாக இருக்கிறான் என்றால், அது அவனின் தாய்க்காக மட்டுமே என்பதை அவன் நன்கு அறிவான்.

“சரி ரசாக்! கிளம்பு நீ, உனக்காக உன் மனைவி, அம்மா எல்லாம் காத்துகிட்டு இருப்பாங்க. நான் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு, அப்புறம் கிளம்புறேன்” என்று faiq கூறவும், அவன் முறைத்தான்.

“உன்னை உன் வீட்டுல இறக்கி விட்டுட்டு தான், நான் என் வீட்டுக்கு போவேன். முதல எழுந்துரு, போதும் இதோட வா போகலாம்” என்று கூறி கிட்டத்தட்ட அவனை இழுத்துக் கொண்டு சென்றான் ரசாக்.

அந்த விடுதியை விட்டு வெளியே வந்தவர்கள், ரசாக் அங்கு ஒருவனை அழைத்து, valet பார்கிங் செய்து இருந்த faiq வண்டியை எடுத்து வர கூறினான்.

அவ்வளவு குடித்து இருந்தும், தள்ளாடாமல் நிதானமாக இருந்த நண்பனை பார்த்து பெருமூச்சு விட்டான் ரசாக். அங்கு வந்து நின்ற faiq வண்டி maserati ghibli, faiqகை வா வா என்று அழைத்தது.

faiq அதை ஆசையுடன் தடவிக் கொடுத்து, ஓட்டுனர் இருக்கையில் அமர போகும் சமயம், ரசாக் தடுத்தான்.

“குடிச்சிட்டு இங்க வண்டி ஓட்ட கூடாது, உனக்கு தெரியும் தான. தள்ளு நான் வண்டி எடுக்கிறேன், நீ சீட் பெல்ட் போட்டு உட்காரு பக்கத்துல” என்று கூறிவிட்டு ரசாக் வண்டி எடுத்தான்.

நீண்ட பெருமூச்சு விட்டு, சீட்டில் சாய்ந்து அமர்ந்து இருந்த faiq இந்த வண்டி வாங்கிய தினத்திற்கு சென்றான்.

கல்லூரியில் அவன் தான் டாப் ஸ்டுடென்ட், archelogy படிப்பில். பழைய பொக்கிஷங்களை கண்டு அறிவதில், அவன் வல்லவன். அப்படி ஒரு நாள், அவன் அந்த காலத்து ராஜாக்கள் பயன்படுத்திய மண் அடுப்பு ஒன்றை, பாலைவனத்தில் சபாரி சென்ற இடத்தில் கண்டுபிடித்து கொடுத்தான்.

அதன் பிறகு, மேலும் சில அறிய பொக்கிஷங்களை எல்லாம் கண்டுபிடித்து அரசரிடம்(தந்தையிடம்) சேர்த்து இருக்கிறான். அதற்க்கு பாராட்டாக தான்(அவனை பொறுத்தவரையில்), அவர் அவனுக்கு இந்த காரை பரிசாக கொடுத்தாரா என்பது இன்னும் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது.

எனினும் தந்தை முதன் முதலில் கொடுத்தது என்று, இன்று வரை அவனுக்கு பிடித்த காராக இது இருக்கிறது. இதை அவனை தவிர யாரும் உபயோகப்படுத்த, அவன் அனுமதிக்க மாட்டான்.

இன்று அதிகமாக குடித்து இருப்பதால், நண்பன் கூறிய பின் அவன் கார் ஓட்டுவதற்கு சம்மதித்தான். அவன் நண்பனுக்கும் தெரியும், தவிர்க்க முடியாததால் தான், தன்னை ஓட்ட சொல்லுகிறான் என்று.

கார் அந்த சாலையில், சீராக சென்று கொண்டு இருந்தது. மெதுவாக பாட்டு கேட்க, fm ஆன் செய்தான் faiq. அவனுக்கு அரபிய பாடல்கள் என்றால் உயிர், அவனின் தாய்மொழி ஆயிற்றே.

அவனுக்கு அரபிய மொழி, ஹிந்தி, ஸ்பானிஷ், ஆங்கிலம் எழுத படிக்க, பேசவும் தெரியும். இந்த நான்கு மொழி அவனுக்கு தண்ணீர் பட்ட பாடு, அதில் கரை தேர்ந்தவன்.

தாய்மொழியில் பாட்டு படிக்க மிகவும் பிடிக்கும், இப்பொழுது ரேடியோவில் மெலடி பாட்டு யா லிலி, ஓடவும் அதை அவனும் மெதுவாக பாடிக் கொண்டே வந்தான்.

ரசாக்கிற்கு, அவனிடம் இப்பொழுது சில விஷயங்களை பற்றி கேட்க தோன்றியது. ஆனால், ஏற்கனவே நொந்து போய் இருப்பவனிடம் எப்படி கேட்க என்று தெரியாமல் குழம்பிக் கொண்டு இருந்தான்.

“என்ன டா கேட்கணும்? சும்மா கேளு!” என்று அவனை பார்த்து கூறினான் faiq.

“இல்லை டா, உன் தம்பிக்கு இன்னைக்கு கௌரவப்படுத்தி பார்த்தவர், உனக்கும் அந்த வாய்ப்பு கொடுப்பார்ன்னு இன்னும் நம்பிகிட்டு இருக்கியா? எனக்கு அந்த நம்பிக்கையே இல்லை டா, நீ இதுக்கு போராட கூட செய்யாம இப்படி இருக்கிறது, என் மனசுக்கு தப்புன்னு தோணுது டா ” என்று ரசாக் கூறவும், அவன் சிரித்தான்.

“ஹ்ம்ம்.. என் அம்மா சாகும் பொழுது, என் கிட்ட வாங்கின சத்தியம் உனக்கு நியாபகம் இருக்கு ல டா. என் அப்பாவா கொடுத்தா மட்டும் வாங்கிக்கணும், இல்லைனா கூடாது”.

“அப்போ எனக்கு புரியல டா, இப்போ அது தெரிஞ்சு ரொம்ப வலிக்குது எனக்கு. என் அம்மாவுக்கு அப்போ, எங்க அப்பா பத்தி தெரிஞ்சு இருக்கு தான, ஆனாலும் அவர் மேல வெறுப்பு வர விடாம பார்துகிட்டாங்க”.

“என் அப்பா அது செய்வார், இது செய்வார்ன்னு ஸ்கூல் ல பசங்க சொல்லும் பொழுது, வலிக்கும், நமக்கு என்ன செய்து இருக்கார்ன்னு? ஆனாலும் ஏதாவது கண்டிப்பா செய்வார்ன்னு ஒரு நம்பிக்கை”.

“காலேஜ் முடிக்கும் பொழுது, அருங்காட்சியம்(museum) ல வைக்க சில பொருள் எல்லாம் தேடி கொடுத்த பொழுது, எனக்கு கார் கொடுத்தார் பாரு, அதை இன்னைக்கு காலையில் வரை பெருமையா சொல்லிட்டு இருந்தேன் எல்லோர்கிட்டயும்”.

“ஹ்ம்ம்.. இப்போ எப்படி பெருமையா சொல்லுறது? ஒரு அரசரா கொடுத்தாரா? இல்லை அப்பாவா கொடுத்தாரா? அப்படின்னு கேட்குற கேள்விகளுக்கு மத்தியில் என்ன பதில் சொல்லுறது, எனக்கே அதுக்கு பதில் தெரியாத பொழுது” என்று விரக்தியாக கூறும் நண்பனை வருத்தத்துடன் பார்த்தான் ரசாக்.

அதற்குள் அவனின் வீடு (வீடு என்று சொல்லுவதை விட, ஒரு மிக பெரிய மாளிகை என்று சொன்னால், மிகவும் பொருத்தமாக இருக்கும்) வரவும், காரை பார்த்த காவலாளி கதவை திறந்து விட்டார்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
வீட்டினுள் சென்று அவன் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு, ரசாக் அவனை அழைத்துக் கொண்டு வீட்டின் மணியை அழுத்திவிட்டு நின்றான். அப்பொழுது, faiqயின் தந்தை அதிசயமாக கதவை திறந்து விடவும், ரசாக் faiqயிடம் கார் சாவியை கொடுத்துவிட்டு, மரியாதைக்காக அவன் தந்தையிடமும் விடை பெற்று சென்றான்.

அவன் தந்தை அவனை கூர்ந்து பார்க்கவும், குடித்துவிட்டு வந்த காரணத்தால் அவரின் முகம் பார்க்காமல் தலை குனிந்து நின்றான் faiq.

“உள்ள வா, உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அவனை அழைத்த அவனின் தந்தை, அவனுக்கு புதிது.

இதுவரை, இந்த முப்பது வருடங்களில் அவனை அழைத்து அவர் பேசியது இல்லை. இவனாக சென்று அந்த பழைய கால பொருட்களை கொடுத்த பொழுது கூட, ஒன்றும் பேசவில்லை. மாறாக, வண்டி சாவியை ஒரு நாள் அவன் கையில் கொடுத்ததோடு சரி, பேசவில்லை அவர்.

ஆகையால் இப்பொழுது அவர் கூப்பிடும் பொழுது, அவன் சிறிது மனதை திடப்படுத்திக் கொண்டு தான் சென்றான். என்ன கூறுவாரோ? ஏதும் மனதை பாதிக்கும் விஷயமா? இப்படி ஒரு திகிலுடன் தான் சென்றான் உள்ளே அவர் பின்னால்.

அங்கே ஹால் இருக்கையில் அவர் அமர, இவன் அவர் அருகில் நின்று இருந்தான். அவனை எதிர் சோபாவில் அமர சொல்லிவிட்டு, இவர் பேச தொடங்கினார்.

“இப்போ நான் சொல்லுறதை நல்லா கவனி, நாளைக்கு சில பேர் வீட்டுக்கு வருவாங்க. அவங்க உன்னை நோக்கி சில கேள்விகளை கேட்பாங்க, எதுனாலும் எங்க அப்பா கிட்ட பேசிட்டு பதில் சொல்லுறேன் மட்டும் தான் சொல்லணும் நீ புரியுதா?” என்று கிட்டதட்ட அவனுக்கு ஆர்டர் போட்டார், இதான் செய்ய வேண்டும் என்று.

அவன் புரியுது என்று மட்டும் கூறிவிட்டு, மாடி ஏறி சென்றான் அவனது அறைக்கு. வீட்டில், அப்பா, சித்தி, தம்பி, தங்கை என்று இருந்தும் யாரும் தனக்கு இல்லை என்பது கொடுமையிலும் கொடுமை.

இன்று தந்தை பேசியதும் கூட, மனதை வலிக்க செய்தது. காரியமாக வேண்டும் என்றால் மட்டும் தான், அப்பொழுது அவர் பேசுவாரா என்ற எண்ணமே மேலோங்கி அவனை வருத்தம் கொள்ள செய்தது.

மறுநாள் விடியல், அவனின் வாழ்க்கையை புரட்டி போட போகும் தினமாக மாற போவது தெரியாமல் அவனது கட்டிலில், தாயை நினைத்து கொண்டே உறக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தான்.

விடியல் விடிந்து அவன் போன், அந்த அறையில் அலறும் சத்தம் கேட்டு அரை தூக்கத்தில் இருந்தவன், சிறிது எரிச்சலுடன் எழுந்து போனை தேடினான். சார்ஜெரில் இருந்த போனை எடுத்து, யாரு என்று பார்த்தான்.

ஏதோ, தெரியாத எண்னில் இருந்து வரவும் முதலில் எடுக்கவில்லை. ஆனால் திரும்ப, திரும்ப அதே எண்ணில் இருந்து அவனுக்கு அழைப்பு வரவும், எடுத்து பேச தொடங்கினான்.

அந்த பக்கம் இருந்து கூறப்பட்ட செய்தியில், அதிர்ச்சியில் கீழே விழுந்தான். அவன் அந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் இருந்து, வெளியே வர முடியாமல் தவித்தான். இதற்குள், அவனின் அறையில் இண்டர்காம் ஒலித்து அதில், அவன் தந்தை அவனை ஒரு மணி நேரத்தில் கீழே வருமாறு கூறினார்.

அறையை ஒழுங்குபடுத்திவிட்டு, குளித்துவிட்டு ஷெய்க் அணியும் உடை உடுத்திக் கொண்டு, தன் அன்னையின் புகைப்படம் முன் வந்து நின்றான் faiq.

“அம்மா, உங்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் எனக்கும் வேண்டாம். ஆனா எனக்கான போராட்டத்தை, இனி ஆரம்பிக்க போறேன். இந்த போராட்டத்துல, அல்லாவின் துணையுடன் ஜெயப்பேன் நான்” என்று மனதில் தாயிடம் உறுதிமொழி கொடுத்துவிட்டு, அவன் கீழே இறங்கினான்.

அவன் தந்தை இவனை முறைக்க, இவனோ அவரை முதல் முறையாக கண்டு கொள்ளாமல் அங்கு உள்ள பெரியவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டு இருந்தான்.

அதில், அவனின் தந்தைக்கு முதல் முறையாக மனதில் பயம் வந்தது. இதுவரை, அவன் இப்படி நடந்து கொண்டது இல்லையே? இப்பொழுது அவனின் கம்பீரம், அவனின் அழுத்தம் எல்லாம் அவருக்கு ஒரு வித திகிலை கொடுத்தது.

அவருக்கு அப்படி என்றால், அவரின் துணைவிக்கு அவனை அப்படி ஒரு கம்பீரத்திலும், அழுத்தத்திலும் பார்த்து மிரண்டு போய் இருந்தார். தன் கணவரை பார்க்க, அவரும் அப்படி ஒரு நிலையில் இருப்பதை அறிந்து, பயம் அப்பட்டமாக அவர் முகத்தில் தெரிந்தது.

“கலிப்! நீ செய்தது தவறு பா. நாட்டோட அரசரா இருந்துட்டு, நீ இப்படி செய்து இருக்க கூடாது. உன் முதல் மனைவிக்கு பிறந்த மகனை, நீ நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டாமல் இருப்பது, ரொம்ப தவறு”.

“குரான் ஒதுறோம் மசூதியில், அதற்க்கு ஒவ்வொரு அர்த்தம் சொல்லிக் கொடுக்கிறோம் எல்லோருக்கும். எல்லாம் தெரிஞ்சு, இப்படி தவறு செய்தா என்ன அர்த்தம்?”

“சின்ன பையனை மட்டும், கௌரவப்படுத்தினா போதுமா? மூத்த பையனுக்கு தான் முதல் உரிமை, முதலில் இன்னைக்கு அறிக்கை கொடுக்கணும் எல்லோருக்கும், முதல் மகனை கௌரவப்படுத்தி அவனுக்கு ஒரு பதவியை கொடுக்கணும்” என்று வயதின் மூத்த வல்லுனர்கள் எல்லாம் சேர்ந்து, அரசரை எச்சரித்து உடனே செய்ய கூறினார்கள்.

அரசர் கலிப், மனைவியை பார்க்க அவரோ கூடாது என்று திடமாக கூறவும், அரசர் பேச வாயை திறக்கும் முன் faiq பேச தொடங்கினான்.

“குறுக்க பேசுறதுக்கு, என்னை மன்னிக்கணும் எல்லோரும். எங்க அம்மாவுக்கு கிடைக்காத இந்த அங்கீகாரம், எனக்கு வேண்டாம். அதுக்கு பதிலா ஒரு மாசம் கழிச்சு, அரசு அருங்காட்சியம், இன்னும் சில அருங்காட்சியம் எல்லாம் என் பொறுப்பில் விட சொல்லுங்க அது போதும் எனக்கு” என்றவனை எல்லோரும் வித்தியாசமாக பார்த்தனர்.

“தம்பி! உனக்கு இது புரியல நினைக்கிறேன்” என்று ஒரு பெரியவர் கூறவும், அவன் புன்னகையுடன் புரியுது செலாப்பா(தாத்தா) என்றான்.

“அவனே வேண்டாம் சொன்ன பிறகு, இவங்க ஏன் இப்படி குசுகுசுன்னு பேசுறாங்க?” என்று கணவரிடம் சிடுசிடுத்துக் கொண்டு இருந்தார் faiqயின் சித்தி ஆலா.

“கொஞ்ச நேரம் சும்மா இரு, நானே என்ன சொல்ல போறாங்கன்னு டென்ஷன் ல இருக்கேன்” என்று பதறியவரை கண்டு, மேற்கொண்டு ஏதும் பேசாமல் அமைதி காத்தார்.

“சரி! தம்பி சொன்ன மாதிரி அருங்காட்சிய பொறுப்பு, அவனுக்கு கொடுங்க கலிப். ஆனாலும், நீங்க செய்தது தவறு, இதற்கு அல்லா உங்களுக்கு என்ன மாதிரியான பதில் வச்சு இருக்கார்ன்னு தெரியல” என்று பொறுக்க முடியாமல் ஒரு பெரியவர் கூறிவிட்டார்.

ஆனால் இது பற்றி எல்லாம், அரசருக்கு கவலை இல்லை. அவர் நினைத்தது போல், ஏதும் நடக்காமல் இருந்ததே அவருக்கு அப்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது.

அவர்கள் முன்பே, faiqகிற்கு அருங்காட்சிய பொறுப்புகளை எல்லாம் அவன் பார்த்துக் கொள்ள நியமித்தார். அந்த பத்திரங்களை எல்லாம், அவரே faiq கையில் கொடுத்து நன்றி கூறவும், அவன் விஷம புன்னகை புரிந்தான்.

அந்த புன்னகையின் பின்னால் இருக்கும், சில வலிகளை அவர் உணரவில்லை. அந்த புன்னகையின் பின்னால் இருக்கும், அவனது போராட்டம் புரியவில்லை.

ஆனால், இனி அவன் இதுவரை பார்த்த faiqயாக இருக்க போவது இல்லை. மாறாக புது faiqயாக, அவன் பெயரை போல் இவர்களை ஆட்டி படைக்க போகும் வல்லவனாக இருக்க போகிறான்.

இவனை ஆட்டி படைக்க, ஒருத்தி இன்னும் சில நாட்களில் துபாயில் கால் பதிக்க போகிறாள் என்பதை அவன் அறிய மாட்டான். அங்கே பொருட்களை எல்லாம் வாங்க, குடும்பத்தோடு மதுரையை வலம் வந்து கொண்டு இருந்தாள் காவ்யஹரிணி.

தொடரும்...
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,198
Reaction score
1,922
Location
Hosur
ஹாய் ஹாய் மக்களே,

சாரி , நேற்றே கொடுத்து இருக்க வேண்டியது, சற்று தாமதமாகி விட்டது. இதில் faiq பற்றிய அறிமுகம் கூறி இருக்கிறேன். என்னது இது? ஒரு பிரின்ஸ்க்கு இந்த கஷ்டமா? அப்படின்னு நீங்க கேட்கலாம்.

எவ்வளவு பெரிய பிரின்ஸ்னாலும் அவனும் சாதாரண மனிதனே, நம்மை போல். டீசர் ல நான் கொடுத்த சில விஷயங்கள் எல்லாம் எடிட் செய்து தான் பதிவு கொடுத்து இருக்கேன் மக்களே. காரணம் கதையை சிறிது மாற்றி அமைத்து இருக்கிறேன், மன்னியுங்கள் பா..

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். விரைவில் அடுத்த பதிவுடன் வருகிறேன். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இப்படிக்கு,
உமா தீபக்..
:love::love::love::LOL:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top