• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Episode 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
புவி | கி.பி. 2020

ளவன் அவளது கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த நட்சத்திர உணவகத்தின் இருள் கலந்த மென்மையான தங்க நிற ஒளியில் நந்தினி சிறகுகளைக் கழட்டி வைத்த தேவைதையைப் போலவே தெரிந்தாள்.

இவனது பார்வையைத் தாளாமல் நந்தினி மெல்லிய புன்னகையோடு தலையைத் தாழ்த்திக்கொண்டாள், மெனு கார்டைப் படிப்பவள் போல நடித்தாள்.

வளவனுக்கு அவசரமாய் ஒரு கவிதை தேவைப்பட்டது. ’நிலா... தேவதை... வானம்... மழை... ரோஜா... வானவில்... ஐஸ்கிரீம்...’ அவனது மனம் வரிசையாக எழுவாய்களைப் பட்டியலிட்டது.

“ஐஸ்க்ரீம்!” வளவன் ‘யுரேகா!’ பாணியில் சொன்னான், ‘மைண்ட் வாய்ஸ்’ என்று நினைத்துச் சத்தமாகவே சொல்லிவிட்டான்!

“ஐஸ்க்ரீம்? அதுக்குள்ளவா? இன்னும் சாப்பிடவே இல்லப்பா!”

நந்தினி அவனைப் புன்னகையுடன் கேட்டாள்.

“அது... வந்து...”

வளவனின் தயக்கமும் திண்டாட்டமும் நந்தினியின் புன்னகையைச் சிரிப்பாக்கின. வளவன் அவளது சிரிப்பில் சொக்கிப் போய் மீண்டும் அவளையே பார்க்கும் ‘ஆள்’நிலைத் தியானத்தில் ஈடுபட்டான்.

”ஹே, என்னப்பா? அடிக்கடி கனவுக்குள்ள போயிடுற?”

‘கனவுதான்! எத்தனை நாளைய கனவு?! உன்னைப் பார்த்த அன்றே என்னுள் பட்டாம்பூச்சிகள்! இப்படி இங்கே உன்னோடு அமர்வேன் என்று இன்று காலைவரை நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!’

வளவனின் நெஞ்சம் சுயவிளக்கம் அளித்துக்கொண்டது.

‘அது சரி, என்னைவிட்டு விலகி விலகிப் போனவள், என்னைக் கண்டுகொள்ளாமல் இருந்தவள் எப்படித் திடீர் என என்னோடு இருக்கிறாள்?’

சட்டென ஒரு உள்குரல் சந்தேகத்தைக் கிளப்பியது!

நந்தினி இவனது திண்டாட்டத்தை இரசிக்கத் தொடங்கி, அவளும் இவன் கண்ணொடு கண்ணினை நோக்கு ஒக்கினாள்!

“ஆர்டர் சொல்றீங்களா மேடம்?”

பரிமாறுபவன் குறுக்கிட்டான்.

“ஹலோ, என் கிட்ட கேளுங்க!”

வளவன் இலேசாய்க் கோவப்பட்டான்.

“நீங்க ஏதோ ஆழ்ந்த சிந்தனைல இருந்தீங்க சார், அதான்...”

பரிமாறுபவன் ஒரு நமுட்டுச் சிரிப்புடன் சொன்னான்.

“ஹலோ, என்ன கிண்டலா? உங்க பாஸைக் கூப்டுங்க, நான் அவர்கிட்ட பேசிக்குறேன்!”

“நான் கூப்பிடவே வேணாம் தம்பி, அவரே லைன்ல இருக்காரு... இந்தா, எழுந்திரு!”

பரிமாறுபவன் வளவன் முதுகில் ஓங்கி ஒரு தட்டு தட்டியபடிக் கைப்பேசியை நீட்டினான்.

வளவன் குழம்பினான்.

“எழுந்திரு டா...” மீண்டும் முதுகில் ஒரு அடி.

“டேய், எழுந்திருடா, பகல்லயே கனவு கண்டுட்டு... டிராகுலா லைன்ல இருக்கு, பேசு!”

அவனது நண்பன் பிரபு மீண்டும் கைப்பேசியை நீட்டினான்.

வளவன் கண்களைக் கசக்கிக்கொண்டு நாற்காலியில் சரியாக அமர்ந்துகொண்டான்.

“இந்தா பிடி, மியூட்ட எடுத்துட்டுப் பேசு!”

வளவன் கைப்பேசியை வாங்கி ஒலித்தடுப்பை நீக்கிவிட்டுக் காதில் வைத்தான்,

“ஹ- ஹலோ சார், வளவன் ஹியர்...”

கார்ட்டூன்களில் வருவதைப் போலக் கைப்பேசியின் மறுமுனையிலிருந்து தானியங்கித் துப்பாக்கி சரமாரியாக வெடித்தது!

“உடனே என் அறைக்கு வா...” என்றதோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

“சரி சார்!” வளவன் சொல்வதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

“என்ன டா, டிராகுலா இப்படிக் கத்துறான்?”

வளவன் பிரபுவை அலுப்புடன் கேட்டான்.

“வேறென்ன மச்சி பண்ணுவான்? அவன் கேட்ட புரோபசலைக் கொடுக்க இன்னிக்குத்தான் கடைசி தேதி, நீ அத அனுப்பாம நந்தினி கூட ஐஸ்க்ரீம் சாப்பிடுறதா கனவு கண்டுட்டு இருக்க!”

“நந்தினி? ஐஸ்க்ரீம்? டேய் சும்மா-”

“சமாளிக்காத மச்சி, நீ தூங்குறப்ப உன் பக்கத்துல உக்காந்துட்டு நீ உளறுறதைலாம் கேட்டுட்டுதானே இருந்தேன்!”

பிரபு எகத்தாளமான சிரிப்புடன் சொன்னான். வளவனின் முகத்தில் அசடு வழிந்தது.

“உனக்கு ஒரு இனிப்பான விஷயம் சொல்லவா...?”

பிரபு சிரிப்பு மாறாமல் பீடிகை போட்டான்.

“சொல்லு...” வளவன் ஆர்வமாய்க் கேட்டான்.

“உன்ன டிராகுலாகிட்ட போட்டுக்கொடுத்ததே உன்னோட க்ரஷ் முனைவர். நந்தினிதான்! ஹா ஹா...”

பிரபு சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தான்.

“நந்தினி, ஐஸ்கிரீம்... ஐஸ்கிரீம், நந்தினி...” என்று பிரபு இவனை நக்கலடிக்க, சட்டென வளவனின் முகம் அஷ்டகோணலாய்ப் போனது.

“என்ன, நந்தினி, ஐஸ்கிரீம்?”

பின்னாலிருந்து கேட்ட சூடான குரலில் சட்டென அதிர்ச்சி அடைந்த பிரபு அதைக் காட்டிக்கொள்ளமல் திரும்பிப் பார்த்தான்.

நந்தினி அவனை முறைத்தபடி அவனது ‘கியூபிக்கலு’க்கு வெளியே சுடிதார் போட்ட பத்திரகாளி போல முறைத்துக்கொண்டிருந்தாள்.

“அது- அது என்னனா... எங்க ஏரியால நந்தினி ஐஸ்கிரீம்னு புதுசா விக்குறான், ரொம்ப நால்லா இருக்கு, அதத்தான் இவன்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்... உன் பேர் கூட நந்தினிதான் இல்ல... வாட் எ கோயின்சிடென்ஸ் மா!”

பிரபு முதலில் திக்கினாலும் சட்டெனச் சமாளித்துக்கொண்டு கோர்வையாய்ப் பொய் சொன்னான். சொல்லி முடித்து அவன் வளவனைப் பார்க்க வளவனும் ஆமாம் என்று தலையாட்டினான்.

“ஆமா நந்தினி, என்னையும் வரச் சொல்லிச் சொல்லிட்டு இருந்தான்...”

“வாட்டெவ(ர்)! பாஸ் கேட்ட புரோபோசல அனுப்ப இன்னிக்குத்தான் கடைசி தேதி... நீங்க இன்னும் அனுப்பல-”

“இதோ, இப்ப அனுப்பிடுறேன், ஒரு எஸ்டிமேட்டுக்காகக் காத்திருக்கேன்...”

வளவன் குறுக்கிட்டுச் சொல்ல, அவள் கண்களைச் சுழற்றினாள்,

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் டாக்டர். வளவன், அந்தப் புரோபோசலை நானே முடிச்சு அனுப்பிட்டேன்... அதை உங்ககிட்ட சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்... வரேன்!”

சொல்லிவிட்டு இவன் பதிலுக்குக் கூடக் காத்திராமல் அவள் விறுவிறுவெனச் சென்றுவிட்டாள்.

வளவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“டேய் வளவா... போச்சா! நீ கனவுல ஐஸ்கிரீம் சாப்டுட்டே இரு, இவ நெஜத்துல உன்னையே தூக்கிச் சாப்ட்ருவா!”

பிரபு கிண்டலோடு சொல்ல வளவன் அவனை முறைத்தான்.

“என்னை அப்புறம் முறைச்சுக்கலாம், முதல்ல போய் டிராகுலாவப் பார்த்துட்டு வா... எதுக்கும் ஒரு ஏ4 ஷீட் எடுத்துப் போ, கையோட ரெசிக்னேஷன் எழுதிக் கொடுக்கச் சொன்னாலும் சொல்லுவார்!”

வளவன் ஒரு நொடி தயங்கிவிட்டுப் பின் அவர்களது தலைமை அதிகாரியின் அறையை நோக்கி விரைந்தான்.

இந்திய அரசின் அந்த அதிரகசிய ஆய்வுக் கூடத்தில் வேலை செய்த ஆய்வாளர்கள், பொறியாளர்கள் அனைவராலும் ‘டிராகுலா’ என்று அன்போடு அழைக்கப்பட்ட அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி சந்திரசேகர் தனது கையில் இருந்த அந்த அச்சடித்த கடிதத்தை ஆழ்ந்த சிந்தனையோடு உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.

”எக்ஸ்கியூஸ்மீ... சார்!”

“வளவா, வா வா! வந்து உக்காரு, உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசனும்...”

‘என்னடா போன்ல அந்தக் கத்துக் கத்தினாரு, இங்க இவ்ளோ அன்பா கூப்டு உக்கார வெக்குறாரு!’ என்று மனத்திற்குள் குழம்பியவாறே வளவன் அவரது மேசைக்கு முன் இருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தான்.

“வளவன், நீ என்ன பண்ற... உடனே உன் வேலையை ராஜினாமா பண்றேன்னு ஒரு லெட்டர் எழுதித் தர!”

‘அந்த ஸ்டாப்ளரை கொஞ்சம் எடுத்துக் கொடேன்’ என்பதைப் போல படு இயல்பாகச் சொன்னார் அவர்.

வளவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“சார்... வந்து... அந்த புரோபோசலை 95% முடிச்சு வெச்சிருந்தேன் சார்... அதுக்குள்ள அந்த நந்தினி-”

“ஆங்... நந்தினி... அவளும் உன்னோட வருவா! நீங்க ரெண்டு பேரும்தான் என்னோட பெஸ்ட் பீப்பிள், அதான் உங்களத் தேர்வு செஞ்சிருக்கேன்... இது ரொம்ப ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி... சீக்கிரம் ரெசிக்னேஷன் எழுதி எடுத்துட்டு வா... கிவிக்!”

அவர் பாட்டுக்குப் படபடவெனச் சொல்லிவிட்டு மீண்டும் அந்தக் கடிதத்தைப் பார்ப்பதில் ஈடுபட்டார்.

வளவன் ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

‘நீதான் பெஸ்ட்-னு சொல்றார், முக்கியமான வேலை தரப்போறேன்னு சொல்றார், ஆனா ராஜினாமா கடிதம் எழுதிட்டு வான்னும் சொல்றார்... என்னாச்சு இவருக்கு? ஓவரா ஆராய்ச்சி பண்ணா இப்படித்தான் ஆயிடுமோ? பேசாம நெசமாவே ராஜினாமா பண்ணிட்டு நாம ஏதாச்சு காலேஜ்ல வாத்தியாரா சேர்ந்துருவோமா...’

வளவன் மனத்திற்குள் குழம்ப,

“யோவ்! நீ இன்னும் போலியா? எழுந்திரு மேன்... உன் ஆளு கிட்ட போய் கேளு எல்லா விவரமும் சொல்வா!”

சந்திரசேகர் இதழோரப் புன்னகையுடன் சொல்லிவிட்டு அவனைப் பார்த்தார்.

“எ- என் ஆளா?”

“எனக்கு எல்லாம் தெரியும் மேன், எவ்ளோ நாள்தான் கனவுலயே ஐஸ்கிரீம் சாப்டுட்டு இருப்ப... இந்த ப்ராஜக்ட்ல நீயும் அவளும் மட்டும்தான்... ஈசியா கரெக்ட் பண்ணிடலாம்...”

அவரது புன்னகை முழுநகை ஆனது.

”சார்-”

“எதுவும் பேசாத, போய் நந்தினியைப் பாரு... ரெசிக்னேஷன் லெட்டரோட இங்க வா, நான் உனக்கு அடுத்த அப்பாயின்மெண்ட் ஆர்டர் தரேன்... நவ் கெட் லாஸ்ட்!”

*******
கலாவிக் | 0318*
[*புவியாண்டு: கி.பி. 2368]

நீனா அவனது கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த விண்படகில் பரவியிருந்த மெல்லிய செந்நிற ஒளியில் ஜீவா சிறகுகளைக் கழட்டி வைத்த ஒரு தேவனைப் போலவே தெரிந்தான்.

இவள் பார்ப்பதை அவன் உணரவில்லை. அவனது கவனம் முழுதும் அந்த விண்படகின் இயக்குவிசைகளிலேயே இருந்தது.

கலாவிக்கின் வடமேற்கு திசையில் இருந்தது துறைமுகம்-0521. அதன் கட்டுப்பாட்டு அறையில் நின்றபடி, விழியத் திரையில் ஜீவாவைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அவன் தன்னை நோக்கியே பறந்து வருவதாகத் தோன்றியது. அவனுக்கு முன் இருக்கும் திரையில் இவள் தெரிவாள் என்பது இவளுக்கு நன்றாகத் தெரியும் என்பது தெரிந்திருந்தும் இவளைப் புறக்கணித்துப் படகின் இயக்குவிசைகளில் கவனம் செலுத்திய அவனது அலட்சியம் இவளை என்னவோ செய்தது.

இன்னும் இன்னும் வேண்டும் எனும்படியான ‘என்னவோ’!

விண்படகு துறைமுகத்தை நெருங்க, தொலைத்தொடர்பில் தரையிறங்குவதற்கான சம்பிரதாய அனுமதியைக் கோரினான்.

துறைமுகக் கட்டுப்பாட்டில் இருந்த நீனாதான் அவனுக்கான அனுமதி சமிஞ்சையைக் கொடுத்தாள். அப்போதும் அவன் இவளைப் பெரிதாய்க் கண்டுகொள்ளவில்லை.

‘இருடா உன்னைக் கவனிக்க வேண்டிய வழில கவனிச்சுக்குறேன்!’ என்று நீனா மனத்திற்குள் கங்கணம் கட்டிக்கொண்டாள்.

தரையிறங்கித் தன் படகை அதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பட்டியில் பொருத்தியவன், இறங்கி விறுவிறுவென நகரை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

நீனா அவனை வாயிலில் வழிமறித்தாள்.

“நா இருக்குறது தெரிஞ்சும் நீங்க பாட்டுக்குப் போனா எப்படி, கமாண்டர். ஜீவா?”

நீனா கோவத்தில் இலேசாய்ச் சிவந்த முகத்துடன் கேட்டாள்.

ஜீவா இவளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டுப் பதில் சொன்னான்,

“வணக்கம் டாக்டர். நீனா! நீங்க என்னைப் பார்க்கத்தான் இங்க வந்திருப்பீங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்? சொல்லுங்க என்ன விஷயம்?”

“முன்னாடியே சொன்னதுதான்!”

நீனா கோவம் குறையாமல் சொன்னாள்.

“பதிலையும் நான் முன்னாடியே சொல்லிட்டேனே!”

ஜீவா புன்னகையுடன் சொல்லிவிட்டு மீண்டும் நடக்கத் தொடங்கினான்.

“ஜீவா, நில்லு...”

நீனாவின் குரலைக் காதில் வாங்காமல் அவன் துறைமுக வாயிலைக் கடந்து விரைந்து சென்றான்.

சுள்ளென ஏறிய கோவத்தில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவனை இங்கேயே கைது செய்வோமா என்று நீனா ஒரு கணம் யோசித்தாள், அது தேவைக்கதிமான நாடகமாகிவிடும் என்று தோன்றவே, எதுவும் செய்யாமல் அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சட்டென அவளது மனம் குழைந்தது,

’டேய்! உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது!’

(தொடரும்...)
கலாவிக் கையேடு - குறிப்பு #10

கலாவிக் குறுங்கிரகம் செவ்வாய்கோளுக்கும் வியாழக்கோளுக்கும் இடையில் உள்ள சிறுகோள் பட்டைக்கு (asteroid belt) அருகில்தான் முதலில் உருவாக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்புக் காரணங்களுக்காக அது அண்டிரோமெடா விண்மீன் பேரடைக்கு நகர்த்தப்பட்டது.
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய ''டேய்
உன்னை எப்படிடா
கரெக்ட் பண்றது''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி குறுநாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
விசய நரசிம்மன் தம்பி
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விசய நரசிம்மன் தம்பி
 




Last edited:

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
செம தலைப்பு, விசய் தம்பி
''டேய் உன்னை எப்படிடா
கரெக்ட் பண்றது''?
பெண்கள் சொல்ல வேண்டிய
வார்த்தைகளை நீங்க
சொல்லுறீங்களே,
விசய் தலைவரே?
ஹா... ஹா... ஹா.........
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top