• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Episode 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
புவி

”நீ 348 ஆண்டுகள் எதிர்காலத்துலேர்ந்து இங்க வந்திருக்க!” பிரபுவின் குரலிலும் வியப்பு அப்பி இருந்தது.

“பிரபு, நீங்க என்ன சொல்றீங்க? இது எப்படி சாத்தியம்? இரெண்டரை மில்லியன் ஒளியாண்டு தொலைவுலெர்ந்து, முன்னூஊஊற்றி நாப்பத்தெட்ட்டு ஆண்டுகள் பின்னோக்கி இவர் இங்க வளவன் உடலுக்குள்ள வந்திருக்காரா!”

மருத்துவரும் தன் வியப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர்களுக்குத் தெரிந்த தகவலையே மீண்டும் விரிவாகச் சொன்னார்.

”டாக்டர்... எனக்கு இப்பதான் ஒன்னு நியாபகம் வருது...” பிரபி சட்டெனப் பரப்பரப்பானான்.

“என்னது அது பிரபு?” மருத்துவரும் ஆர்வமாய் கேட்டார். ஜீவாவும் பிரபுவைப் பார்த்தான்.

“இவன் கண்விழிச்சப்ப பேசினதலாம் இப்பதான் நிதானமா யோசிச்சுப் பார்த்தேன்...”

“ஓ! அப்ப நான் இங்க இல்லயே, என்ன சொன்னான் இவன்?”

”இன்-பில்ட் கம்யூனிகேட்டர்னான், என்னோட சிஸ்டம்லாம் ஆஃப் லைன்ல இருக்குனான்...”

“என்ன சொல்றீங்க நீங்க? எனக்கு ஒன்னும் புரியலயே?” மருத்துவரின் முகத்தில் குழப்பம் படர்ந்தது.

“நானே சொல்றேன்! டாக்டர், நான் ஒரு இயந்திரம், அதாவது கலாவிக்ல இருக்குற என்னோட உடல் ஒரு இயந்திர உடல்!”

பிரபு பதில் சொல்லும் முன் ஜீவாவே சொன்னான். அதைக்கேட்டு மருத்துவரின் முகம் அஷ்டகோணலாய்ப் போனது.

“நிஜம்மாவா? அதெப்படி சாத்தியம்? உங்க உடல் இயந்திரம்னா, நீங்க? நீங்க இறந்த பிறகு உங்க மைண்டை ஒரு இயந்திர உடலுக்குள்ள வெச்சுக்கிட்டீங்களா?”

மருத்துவர் சரசரவெனக் கேள்விகளை அடுக்கினார்.

ஜீவா மெள்ளத் தன் தலையை இடம்-வலமாக ஆட்டினான்.

“நான் முழுக்க முழுக்க இயந்திரந்தான், டாக்டர்! ‘நான்’ அப்படிங்குறது என் உடலென்ற வன்பொருளில் இருந்த ஒரு மென்பொருள்... அவ்வளவுதான்!”

ஜீவா சொல்லவும் மருத்துவர் அதை மறுப்பதைப் போலத் தலையை ‘இல்லை’ என்று ஆட்டினார்.

“நீங்க முழுக்க ஒரு மென்பொருள்னா உங்களால வளவனின் உடலில் இருப்பது சாத்தியமில்லையே?”

“இருக்கு, டாக்டர்! என் உடலில் சில உறுப்புகள் செமி-ஆர்கானிக், அவற்றில் என் மூளையும் ஒன்று! அதனாலத்தான் என்னோட ஏ.ஐ. (A.I.) ஏறத்தாழ மனித மூளையின் சிந்தனைக்கு நிகரான செயல்திறனோடு இருக்கு... அதே நேரம் மனித மூளையின் பலவீனமான நியாபகமறதி போன்ற குறைகள் எனக்கு இல்லை!”

“இல்ல ஜீவா, தேர் இஸ் சம்திங் டீப் இன் திஸ்!” மருத்துவர் ஆழ்ந்த சிந்தனையோடு சொன்னார்.

பிரபுவும் அதனை ஆமோதித்தான்.

அப்போது நந்தினியும் கல்பனாவும் மீண்டும் அங்கே வந்தனர்.

பிரபு அவர்களை வரவேற்றான்.

“வாங்க... இங்க சிஷுவேஷன் ரொம்ப குழப்பமா இருக்கு... நீங்களும் தெரிஞ்சுக்கனும்... இருங்க, சந்துருவையும் பிரபாகரனையும் கூட கூப்டுவோம், அவங்களும் இங்க நடந்ததைத் தெரிஞ்சுக்கனும்...”

பிரபு சொல்லிக்கொண்டே அங்கிருந்த கம்பியில்லா தொடர்பு சாதனம் மூலம் பிரபாகரனை அழைத்து வரச்சொல்லிவிட்டு, சந்துருவையும் அழைத்துக்கொண்டு வரும்படி சொன்னான்.

சற்று நேரத்தில் அவர்களும் வந்து சேர, மருத்துவரும் பிரபுவும் அங்கிருந்த நிலைமையை அனைவருக்கும் விளக்கினர்.

“வாட்? இவரு ஜீவாவா? வேற்றுக்கிரக இயந்திர மனிதனா?”

“இரண்டரை மில்லியன் ஒளியாண்டுகளா? 348 ஆண்டுகள் எதிர்காலத்திலேர்ந்தா?”

அவர்கள் மாறி மாறி கேள்விகள் கேட்டனர்.

முதலில் அதிகமாய்க் குழம்பிப் பின் மெள்ளத் தெளிந்தனர்.

”ஆனா, ஒரு ஹ்யூமனாய்ட் ரோபோவான இவரால எப்படி வளவனின் மூளைக்குள்ள வர முடியும்? நாட் பாஸிபிள்!”

நந்தினி நம்பமுடியாமல் மீண்டும் ஒருமுறை கேட்டாள்.

“எனக்கும் அதே குழப்பந்தான் நந்தினி... ஆனா, இவரோட நிஜ உடல் முழுக்க இயந்திரம் இல்லையாம், சில உறுப்புகள் செமி-ஆர்கானிக்காம், இவரோட மூளையும் அப்படி செமி-ஆர்கானிக்தானாம்!”

மருத்துவர் விளக்கினார்.

“இதை எப்படி எடுத்துகுறதுனே தெரியல...” என்று நந்தினி குழப்பம் கலந்த சிந்தனையோடு சொன்னாள்.

”ஆமா, வளவன் என்ன ஆனானும் தெரியல!” பிரபு தன் கவலையை வெளிப்படுத்தினான்.

அவன் வளவனைக் குறிப்பிட்டதும் நந்தினியின் நெஞ்சு பிசைந்தது. என்னவென்று குறிப்பிட முடியாத ஒரு உணர்வு அவளை ஆக்கிரமித்துக்கொண்டது.

“எனக்கென்னவோ, இவர் இங்க வளவன் உடல்ல வந்தா மாதிரி வளவன் அங்க இவர் உடலுக்குள்ள போயிருபார்னு தோனுது!”

கல்பனா சட்டெனச் சொன்னாள்.

அதைக் கேட்டு பிரபு நந்தினி இருவருமே சற்று ஆறுதல் அடைந்தனர்.

“சரிதான், எனக்கும் இந்த மாற்றம் முழுக்க எதேச்சையா நடந்ததா தெரியல, அப்படி ஒருவர் மூளைக்குள்ள இன்னொருவரின் மனம் வந்து கச்சிதமா பொருந்துறது எளிதான விஷயமில்ல... ஸோ, ஜீவா வளவன் உடல்ல வந்தா மாதிரி வளவன் ஜீவா உடல்லதான் இருக்கனும்...”

மருத்துவரும் நம்பிக்கையோடு சொன்னார்.

“நம்மால கலாவிக்கைத் தொடர்பு கொள்ள முடியுமா?” நந்தினி ஆர்வத்தோடு கேட்டான்.

“வாய்ப்பே இல்ல! ஜீவா சொல்றபடி பார்த்தா கலாவிக் இரண்டரை மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவுல இருக்கு, அதிகபட்சமா ஒளி வேகத்துல தகவல் அனுப்பினாலும் அது அங்க போய் சேர இரண்டரை மில்லியன் ஆண்டுகள் ஆகும்! அதுமட்டுமில்லாம...”

பிரபு முடிக்கும் முன் நந்தினியே சொன்னாள்,

“ஜீவா வந்திருக்கிறது எதிர்காலத்துலேர்ந்து!”

“ஆமா! 348 ஆண்டுகள்!” பிரபு அலுப்போடு சொன்னான்.

“என்னப்பா, ஒரு கிரகத்தையே இங்கேர்ந்து அங்க அனுப்பிருக்காங்க, நம்மால ஒரு தகவல் அனுப்ப இயலாதா?” கல்பனா சலிப்போடு கேட்டாள்.

“மேடம், கிரகத்தையே அனுப்புனது 2050-ல, இன்னும் முப்பது வருஷம் கழிச்சு!”

”ம்ம்ம்...” கல்பனா சிந்தனையில் ஆழ்ந்தாள், சட்டென அவள் முகம் பிரகாசமானது,

“அப்ப எதிர்காலத்துல இருக்குற கலாவிக்லேர்ந்து நம்மல தொடர்பு கொள்ள முடியும்ல?” பள்ளிப் பெண்ணைப் போல ஆர்வமாய்க் கேட்டாள்.

“முடியலாம், முடியாமலும் போகலாம்... இரண்டரை மில்லியன் ஒளியாண்டுகள் இட இடைவெளி, முந்நூத்தி நாப்பத்தெட்டு ஆண்டுகள் கால இடைவெளி... என்னால எதையும் உறுதியா சொல்ல முடியல!” பிரபு அலுப்பாய்ச் சொன்னான்.

”நீங்க என்ன நினைக்குறீங்க, ஜீவா?”

கல்பனா விடாமல் ஜீவாவைப் பார்த்துக் கேட்டாள்.

“கலாவிக்ல இங்கவரைக்கும் தகவல் அனுப்பக் கூடிய ஆற்றல் உள்ள கருவிகள் இருக்கு, ஆனா, அங்கேர்ந்து அனுப்பினாலும் இங்க வர-”

“இரண்டரை மில்லியன் ஆண்டுகள் ஆகும், அதானே?” கல்பனா அவனைச் சலிப்போடு இடைவெட்டினாள்,

“எத்தன தடவதான்பா ‘இரண்டரை மில்லியன் ஒளியாண்டு’யே திரும்பத் திரும்பச் சொல்வீங்க, ஸ்ரீ ராம ஜெயம் மாதிரி!”

“சீ... என்னது?” ஜீவா புரியாமல் கேட்டான்.

“சீப்பு! அட போய்ய்யா...” என்று அவள் அருகில் இருந்த இருக்கையில் விழுந்தமர்ந்தாள்.

பிரபுவிற்கு அவளைப் பார்த்து வாஞ்சையுடன் கூடிய ஒரு புன்னகை மலர்ந்தது.

”என்ன டா இளிப்பு?” கல்பனா பிரபுவிற்கு மட்டும் கேட்கும்படி கேட்டாள்.

“அது... நீ சீப்புனதும் எனக்கு சீ.பீ.ஆர். நியாபகம் வந்துச்சு, அதான்...” என்று மீண்டும் ஒரு பெரிய புன்னகையோடு சொன்னான்.

“இந்த ரணகலத்துலயும் உனக்குக் கிலுகிலுப்பு கேக்குதா?” கல்பனா பொய்க் கோவத்தோடு அவனை முறைத்தாள்.

“ஜீவா சொன்னதக் கேட்டல, 2050ல உலகம் அழியப் போகுது, இருக்குற முப்பது வருஷத்த நல்லா எஞ்ஜாய் பண்ணிக்கனும் டார்லிங்!” பிரபு குறும்பாகச் சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் கல்பனா பரபரப்பாய் எழுந்தாள்.

“மை காட்! இத எப்படி நான் மிஸ் பண்ணேன்!”

“எதை?” பிரபு புரியாமல் கேட்டான், ஆனால் கல்பனா அவனைக் கண்டு கொள்ளாமல் ஜீவாவை நோக்கினாள்.

“ஜீவா...?”

“ம்?”

“பூமி அழிஞ்சிடுச்சுனு சொன்னீங்கள்ல, அது எப்படி அழிஞ்சுது?”

“டெக்டானிக் பிளேட்ஸ்ல தொடர்ச்சியா ஏற்பட்ட விரிசல்களால பூமி இரெண்டா பிளந்துருச்சு...”

அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் அவனை நம்ப முடியாத பெருவியப்பில் பார்த்தனர்.

கல்பனா மட்டும் அசராமல் அடுத்த கேள்வியைக் கேட்டாள்,

“அந்த ஃபால்ட் எங்க தொடங்கிச்சுனு தெரியுமா?”

“ம்ம், தெரியுமே! இங்கதான், அண்டார்டிக்கால!”

ஜீவா சர்வ சாதாரணமாய்ச் சொல்ல, அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர்.

*******
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
கலாவிக்

வளவன் என்ன ஆராய்ச்சி என்று கேட்டதும் நீனா சற்றே தயங்கினாள்.

“அது... ஜீவாக்கு ரீப்ரொடக்டிவ் எபிலிட்டி கொடுக்க முடியுமானு...”

“வாட்? ஒரு இயந்திர மனிதனைக் குழந்தை பெத்துக்க வைக்க நினைக்குறீங்களா?”

வளவன் அவள் சொன்னதை நம்ப முடியாமல் கேட்டான்.

“அ- ஆமா! ஜீவாவோட சில உறுப்புகள் செமி-ஆர்கானிக்னு சொன்னேன்ல? அதுல ஒரு பாசிவ் ரீப்ரொடக்டிவ் சிஸ்டமும் அடக்கம்!”

“ஆனா?”

“அது முழுசா இல்ல! எக்ஸ்டர்னல் ஆர்கன்ஸ் எதுவும் வைக்கப்படல... உள்ளுக்குள்ள ஒரு சில க்ளாண்ட்ஸ் மட்டும் வெச்சிருக்காங்க!”

“ஓ... ஆனா, எதுக்காக?”

“அது ஒரு பெரிய கதை டாக்டர் வளவன்!” நீனா சலிப்பாகச் சொல்வதைப் போல் சொன்னாலும், அவள் கண்களில் ஒரு ஆர்வம் மின்னியது.

“சொல்லுங்க, இப்ப அதை கேக்குறதைவிட எனக்கு வேற என்ன முக்கியமான வேலை இருக்கு? ஒன் பாத்ரூம் கூட போக முடியாது!”

வளவன் அலுப்போடு சொன்னான். நீனா அவனை பொய்க்கோவத்துடன் முறைக்க, நாக்கைக் கடித்துக்கொண்டான். “சாரி!”

“இட்ஸ் ஓக்கே! அப்புறமா உங்க சைக்காலஜிய தனியா ஒரு ஆய்வு பண்ணனும்... இயந்திர உடலுக்குள்ள இருந்தாலும் உங்களுக்கு ஆர்கானிக் உடலின் தேவைகளும் உணர்வுகளும் மறக்கல பாருங்க!”

“ஹ்ம்ம்ம்... அதை அப்புறம் பண்ணலாம், முதல்ல இந்த ஆராய்ச்சியைப் பத்திச் சொல்லுங்க!” இப்போது வளவன் பொய்க்கோவத்துடன் நீனாவை முறைத்தான்.

“ஓக்கே ஓக்கே... டாக்டர் வளவன்... நான் உங்கக் கூட பேசிட்டே இந்த உடல்ல ஆராய்வதில் உங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இருக்காதுனு நினைக்குறேன்?”

“தாராளமா... நான் கேட்டா மாதிரி என் கண்ணுக்குள்ள வர அறிவிப்புகளை மட்டும் முடக்கிடுங்க, அது போதும்...”

வளவன் சொல்லவும் நீனா அவனை நெருங்கி அவனின் இடதுகை மணிக்கட்டில் ஓரிடத்தில் அழுத்த, சட்டென அவன் கை பிளந்து உள்ளே ஒரு சிறிய விசைப்பலகையும் எல்.ஈ.டி. திரையும் தெரிந்தன. வளவன் கண்கள் விரியப் பார்த்தான்.

நீனா தேர்ந்த இலாவகத்துடன் சில விசைகளைத் தன் விரல்களால் ஒத்தினாள். வளவனை நிமிர்ந்து பார்த்து,

“டன்!”

“இனிமே அறிவிப்புகள் வராதா?”

வளவன் கேட்டதுக்குப் பதில் சொல்லாமல் அவன் மார்பில் ‘தொம்’ என்று ஒரு குத்து குத்தினாள்.

வளவன் அவளை முறைத்தான்.

“மேடம், வாயால பதில் சொல்லமாட்டீங்களோ?”

“நீங்க நம்பனும்ல?”

“சரி, உங்க ஆராய்ச்சியப் பத்திச் சொல்லுங்க...”

”சொல்றேன்...” என்றபடியே அவள் மீண்டும் அவன் மணிக்கட்டில் ஒத்த அவன் மார்பும் வயிறும் தூக்கியின் (லிஃப்ட்) கதவுகள் திறப்பதைப் போல விர்ர்ரெனப் பிளந்து திறந்தன.

”ஐயையோ!”

வளவன் ஒரு நொடி அதிர்ந்தான். நீனா அவனைப் பார்த்துக் கண்களைச் சுழற்றினாள். பின் வளவன் இது தனது உடலல்ல இயந்திர உடல்தான் என்பதை மெள்ள உணர்ந்து அமைதியானான்.

“நான் வேணா தலையை மட்டும் கழட்டித் தனியா வெச்சுடுவா? எனக்கும் ஈஸீ, உங்களுக்கும் ஈஸீ?”

நீனா வெகு சாதாரணமாக ஒரு நமுட்டுச் சிரிப்புடன் கேட்டாள்.

“யம்மா தாயே... வேணாம்மா! என்னால வெறும் தலையா ஸ்டாண்ட்ல நிக்க முடியாது, இப்படியே இருக்கட்டும் பரவால்ல... லோக்கல் அனஸ்தீஷியா போட்டு ஆபரேஷன் பண்ற மாதிரி நினைச்சுக்குறேன்... நீ உன் ஆராய்ச்சியத் தொடங்கு!”

”குட்!”

நீனா வளவனுக்குத் தன் ஆய்வை விளக்கியபடியே அவன் மார்பில் ’நோண்ட’த் தொடங்கினாள்.

”விஷயம் என்னென்னா, இந்தக் கலாவிக் கிரகத்தை உருவாக்கினப்ப இதோட வளிமண்டலம் கார்பன் டையாக்சைடும் மோனாக்சைடும் அதிகம் நிறைந்ததா இருந்துச்சு... அதை மாத்துறதுக்காக இங்க சில செயற்கை செடிகளையும் அல்கேக்களையும் பரப்பினாங்க... அது முதல் கட்டம்...”

“ம்ம்ம்...”

“அடுத்ததா, சில செயற்கை விலங்குகளையும் செமி-ஆர்கானிக் இயந்திர மனிதர்களையும் அனுப்பினாங்க...”

“ஓ, ஜீவா மாதிரி?”

“இல்ல, ஜீவா ரொம்ப மேம்பட்ட செயற்கை மனிதன்...”

“ஓகோ, எப்படி?”

“நான் முன்னாடியே சொன்னேனே, ஜீவாவின் உடலில் இனப்பெருக்க அமைப்பு அமைக்கப்பட்டிருக்கு... ஒரு வேளை கலாவிக்ல மனிதர்களால நிலைச்சு உயிர்வாழ முடியலேனா ஜீவா மாதிரி செயற்கை மனிதர்கள் மனித குலத்தின் பிரதிநிதிகளா இருப்பாங்க... ஜீவாவின் அடுத்தகட்டம் இயந்திரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடைபட்ட ஒரு உயிரினம்... மனிதர்களோட ஜீன்கள் அதுல சேமிக்கப்பட்டிருக்கும், கூடவே ஸ்டெம் செல்களும்... மறுபடி மனிதர்கள் வாழச் சாதகமான சூழலோ இல்ல வேறொரு கிரகமோ கிடைக்கும்போது மனிதர்கள் உருவாக்கப்படுவாங்க... இதுதான் கலாவிக்கின் பிளான்-பி!”

நீனா சொல்லச் சொல்ல வளவன் வியப்போடு கேட்டுக்கொண்டிருந்தான்.

“வாவ்... இவ்ளோ தூரம் யோசிச்சிருக்காங்களா?”

“ஆமா டாக்டர் வளவன்... நம் ஆதாரம் அழிவதைக் கண் முன்னாடி பார்க்கும் போது நாம ஆட்டோமேட்டிக்கா எல்லா வாய்ப்புகளையும் ஆபத்துகளையும் பத்தி யோசிப்போம்...”

“சரிதான், ஆனா...”

“என்ன?” நீனா வளவனின் கேள்வியை எதிர்பார்த்து அவனைப் பார்த்தாள்,

“இந்த பாதி இயந்திர பாதி மனித உயிரினம் மறுபடி முழு மனிதனை உருவாக்கும்னு எப்படி நம்புறது?”

“நம்ப முடியாது! ஆனா நமக்கு வேற வழியில்லயே...”

“அதுவும் சரிதான்! சரி, ஏன் நீங்க சொன்னபடி ஜீவாவின் இனப்பெருக்க அமைப்பை முழுசா அமைக்கல?”

“அதுதான் எனக்கும் தெரியல... இந்தத் திட்டத்தை உருவாக்கித் தொடங்கின ஜீவப்பிரபுவே இதைப் பாதில நிறுத்தவும் வெச்சுட்டாரு... அது ஏன்னு தெரிஞ்சுக்கத்தான் நான் ஜீவாவை ஆராய விரும்புறேன்... இந்த உடல்ல அதுக்கான விடை இருக்கும்னு எனக்குத் தோனுது...” அவன் மார்பில் ‘நங் நங்’ என்று தட்டியபடியே சொன்னாள்.

“ஔச்! இன்னும் ஒரு கேள்வி...”

“கேளுங்க...”

“ஜீவா மாதிரி வேற இயந்திர மனிதர்கள் இல்லையா?”

வளவன் அவள் தன் உடலில் நோண்டுவதைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.

“இல்லை!” நீனா தலையைத் தூக்காமல் தன் ஆராய்ச்சியில் கவனத்தை வைத்தபடியே பதில் சொன்னாள்.

”ஏன்-”

”மை காட்!”

வளவன் கேட்கத் தொடங்கும் முன் நீனா பெரும் வியப்போடு கத்தினாள்.

(தொடரும்...)
கலாவிக் கையேடு - குறிப்பு #1

இன்று கலாவிக் கிரகத்தில் இருக்கும் மனித இனமும் பிற உயிர்களும் 300 ஆண்டுகளுக்கு முன் பூமி என்ற கிரகத்தில் இருந்தனர். நமது ஆண்டிரோமெடா பேரடைவை அடுத்த, 2.5 மில்லிய ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் பால்வீதி பேரடையில் ‘சூரியன்’ என்று அழைக்கப்பட்ட ஒரு சிறிய மஞ்சள் விண்மீனைச் சுற்றிக்கொண்டிருந்தது பூமி. கலாவிக்கின் தொடக்கம் பூமியின் அழிவிலிருந்து தொடங்குகிறது!
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
ரொம்ப விறுவிறுப்பாக இருக்கு. Time travellingல்ல ஆட்கள் மாறாமல் எப்படி அவர்கள் சிந்தனைகள் மட்டும் மாறது கூடு விட்டு கூடு பாய்ற மாதிரி இல்ல இருக்கு. புதுசா இருக்கு . ஆனா அந்த ஜீவ பிரபு யாருப்பா?
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
அருமை சகோ, பாதி
இயந்திர மனிதனிடம் இனப்பெருக்க உறுப்பாo_O அதுவும் முழுமையா இல்்லையா:oops:

அடுத்த எபி சீக்கிரம் தாங்க சகோ
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Anna.. intha tectanic plates naa enna.. ?

Eppadi innum rendu epi la mudipeenga.. namba mudiyalaye.. ??

Anga oru shock kaa pottu inga oru surprise pottu enna naa pannureenga.. ???
பூமி முழுசா திடப்பொருள் (solid) அல்ல, அதன் மையப்பகுதி இன்னும் கொத்திக்குக் கொண்டிருக்கும் குழம்பு (பெரும்பாலும் இரும்பால் ஆனது - core), அதற்கு அடுத்து ‘மேண்டில்’ எனப்படும் அரை-திடநிலை, அதற்கு மேல ஒரு மெல்லிய படிமமாதான் திடப் பகுதி இருக்கு (crust).

[புவியின் சராசரி ஆரம் (ரேடியஸ்) 6200 கி.மீ. அதுல இந்த திட மேற்பரப்பு வெறும் 2 - 5 கி.மீ. தடிமந்தான்!]

இந்தக் கிரஸ்டின் மேலத்தான் கண்டங்களும் நாடுகளும், கடலின் படுக்கையும் இருக்கு. இது ஒரே துண்டா இல்லாம பல துண்டுகளா இருக்கு, அந்தத் துண்டுகளைத்தா ‘டெக்டானிக் பிளேட்ஸ்’ என்கிறோம் [இந்த டெக்டானிக் பிளேட்ஸின் நகர்வுகள், இவற்றில் ஏற்படும் விரிசல்களால் உண்டாகும் பெயர்ச்சிகள் இவைதான் நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றைத் தோற்றுவிக்கின்றன!] :):)(y)(y)

கதை முடிஞ்சிடும்னு நான் நெனச்சுட்டு இருக்கேன், நீ ஏன் பயமுறுத்துற? :LOL::LOL:(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ரொம்ப விறுவிறுப்பாக இருக்கு. Time travellingல்ல ஆட்கள் மாறாமல் எப்படி அவர்கள் சிந்தனைகள் மட்டும் மாறது கூடு விட்டு கூடு பாய்ற மாதிரி இல்ல இருக்கு. புதுசா இருக்கு . ஆனா அந்த ஜீவ பிரபு யாருப்பா?
இதை டைம் டிராவலிங்க்னு சொல்ல முடியாது சகோ... ஆனா, அதுவும் நடந்திருக்கு... இதுக்கு நான் வெச்சிருக்குற காரணம் வேற... கடைசில விளக்கப்படும்... :):)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top