• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Episode 12 | ஈற்றத்தியாயம் (Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
புவி

ஜீவா குத்து வாங்கி மயங்கி விழுந்ததும் அங்கே சட்டென ஒரு அமைதி குடியேறியது.

அனைவரும் ஒருவர் முகத்தை முகத்தை ஒருவர் பார்த்து உதட்டைப் பிதுக்கிக்கொண்டனர்.

சந்துரு கூட தன் தவற்றை உணர்ந்து ஜீவாவை தூக்க முனைந்தான். பிரபுவும் பிரபாகரனும் உதவ அவர்கள் மீண்டும் ஜீவாவை அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்தனர்.

நந்தினி கவலையோடு அவன் அருகில் வந்து அவன் முகத்தைத் தட்டிப் பார்த்தாள்.

“தண்ணி தெளிப்போமா?” கல்பனா தயக்கத்துடன் கேட்டாள்.

“ம்ம்... ஆனா, ரொம்ப ஜில்லுனு இல்லாம பார்த்துக்கோங்க...” என்று சொல்லியபடியே அவனது நாடித்துடிப்பை எண்ணத் தொடங்கினார் மருத்துவர்.

“பிரபு, தண்ணி பிளாஸ்கை எடு!”

என்று கை நீட்டினாள் கல்பனா.

“பல்ஸ் ஸ்டடியா இருக்கு, சும்மா அடி வாங்கின அதிர்ச்சிதான், கவலைப்பட ஒன்னும் இல்ல...” என்று மருத்துவர் சொல்ல அனைவரும் சற்று அமைதி அடைந்தனர்.

பிரபு கொடுத்த குடிநீர் பிளாஸ்கிலிருந்து கல்பனா கொஞ்சம் நீரைத் தன் கையில் ஊற்றி அதை ஜீவாவின் முகத்தில் தெளித்தாள். ஆனால் எந்த மாற்றமும் இல்லை.

“ஜீவா?” நந்தினி மீண்டும் முகத்தைத் தட்டிப் பார்த்தாள். அசைவில்லாமல் இருந்தான்.

மருத்துவர் ஸ்தெதஸ்கோப்பை நெஞ்சில் வைத்துப் பார்த்தார், கண்ணிமைகளை இழுத்துத் திறந்து பார்த்தார்...

“க்யூரியஸ்!” தனக்குத்தானே சொல்வதைப் போலச் சொல்லிக்கொண்டார்.

”என்ன ஆச்சு டாக்டர்?” பிரபுவும் நந்தினியும் ஒரு சேர அவரைக் கேட்டனர்.

”முன்னாடி வளவன் இங்க வந்து இறங்கின உடனே மயக்கம் போட்டாருல? என்ன ஆச்சுனே தெரியாம மயக்கத்துல இருந்தாரே?”

“ஆமா...” பிரபு ஆர்வமாய்ச் சொன்னான்.

“இப்பவும் அதே மாதிரிதான் இவரும் மயங்கியிருக்காரு!”

“ஓ... அப்ப?”

“இப்போதைக்கு எதுவும் உறுதியா சொல்ல முடியாது... இவர் கண் திறக்குற வரைக்கும் காத்திருப்போம்!”

மருத்துவர் நிதானமான குரலில் சொன்னார்.

சில மணிநேரங்கள் ஜீவா அப்படியே அசைவின்றித்தான் கிடந்தான்.

ஒவ்வொருவராக அக்கூடாரத்தை விட்டு வெளியேறிருந்தனர். நந்தினி மட்டும் கட்டிலுக்கு அருகில் அமர்ந்து வளவனின் முகத்தையே வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பிரபு சொன்னது அவள் மனத்தில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. அவள் எண்ணங்கள் எங்கெங்கோ சென்று மீண்டன.

“நந்தினி...”

பிரபுவின் குரல் கேட்டு அவள் மெள்ளத் திரும்பிப் பார்த்தாள்.

“எவ்ளோ நேரம் இங்க இப்படியே உக்காந்துட்டு இருப்ப? போய் ரெப்ரஷ் பண்ணிட்டு டீ இல்ல சூப் ஏதாச்சு குடிச்சுட்டு வா, நான் இவன் கூட இருக்குறேன்...”

“ப்ச்... இட்ஸ் ஓக்கே பிரபு, நான் இன்னும் கொஞ்சம் நேரம் இங்கயே இருக்கேன்... எனக்கு இப்ப ஒன்னும் டயர்டாலாம் இல்ல...”

“ஹ்ம்ம்ம்... அவன் இருக்-” பிரபு ஏதோ சொல்லத் தொடங்கி சட்டென நிறுத்தினான். அவனது பார்வை ஜீவாவின் மீது நிலைபெற்றிருந்தது.

நந்தினியும் சட்டெனத் திரும்பி ஜீவாவைப் பார்க்க அவனிடம் அசைவுகள் தெரிந்தன.

“ஹே... இவன் அசையுறான், கண்விழிக்கப் போறான்... டாக்டரைக் கூப்பிடு, க்விக்...” நந்தினி பரபரப்பானாள்.

அவள் சொல்வதற்கு முன்பே பிரபு அங்கிருந்த கம்பியில்லா தொடர்பு மூலம் பிரபாகரனுக்கும் மருத்துவருக்கும் தகவல் சொல்லத் தொடங்கியிருந்தான்.

அவன் அப்படியும் இப்படியும் அசைந்துவிட்டு மெள்ளக் கண்விழித்தான்.

நந்தினியும் பிரபுவும் அவன் முகத்தையே ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“யார் நீங்க? என் இன்பில்ட் கம்யூனிகேட்டர்லாம் ஏன் ஆஃப்லைன்ல இருக்கு? என்ன பண்ணீங்க என்னை?”

அவன் சட்டென எழுந்து அமர்ந்துகொண்டு விறைப்புடன் கேட்க நந்தினி முகத்தில் ஏமாற்றம் அப்பியது, பிரபு அலுப்பாகக் கண்களைச் சுழற்றினான்.

“மறுபடியும் பர்ஸ்ட்லேர்ந்தா? டேய், வேண்டாண்டா... நான் அழுதுறுவேன்...” என்று அழுவதைப் போலவே சொன்னான்.

“நீ அழுதா ஆடியன்ஸ் ஒத்துக்கமாட்டாங்க மச்சி!” வளவன் ஒரு மெல்லிய புன்னகையுடன் சொல்ல, நந்தினியும் பிரபுவும் நம்ப முடியாமல் அவனைப் பார்த்தனர்.

“நீங்க... நீ?”

“நான் டாட்கர் வளவன் செம்பியன், இயற்பியலாளன்!” அவன் ஏதோ முதல் முறை அறிமுகம் செய்துகொள்பவனைப் போலப் பிரபுவை நோக்கிக் கை நீட்டினான்.

“டேய்... வளவா...? நீதானா?” பிரபு நம்ப முடியாமல் கேட்டான்.

அதற்கு மேல் அவனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. நந்தினி கூட அதே மனநிலையில் உணர்ச்சிப் பெருக்கில் திண்டாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது அறைக்குள் மற்றவர்களும் வந்து சேர, அங்கே கேள்விகளும் பதில்களும் குருக்ஷேத்திரப் போரின் அம்புகளைப் போலப் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

ஒரு வழியாய் அவர்கள் அமைதியடைந்து ஒவ்வொருவராக வளவனைக் கேள்வி கேட்கத் தொடங்கினர்.

வளவனும் அவனது கலாவிக் அனுபவங்களை அவர்களது கேள்விக்கேற்பச் சொல்லிக்கொண்டே வந்தான்.

ஒருவழியாகத் திருப்தியாக எல்லாவற்றையும் கேட்டு முடித்துவிட்டு அவர்கள் வெளியேறினர். மீண்டும் நந்தினியும் பிரபுவும் மட்டும் வளவனோடு இருந்தனர்.

“அப்புறம், வளவா... நந்தினிக்கு தெரிஞ்சு போச்சு...” பிரபு அவன் காதில் கிசுகிசுத்தான்.

“ஓ, குட்!” வளவன் பெரிதாக எந்த உணர்ச்சியையும் காட்டாமல் சொன்னான்.

“என்ன குட்?” நந்தினி சற்றே முறைத்தபடி கேட்டாள். அவனது காதல் அவளுக்குத் தெரிந்துவிட்டது என்று தெரிந்தும் அவன் அப்படிச் சாதாரணமாகக் கேட்டது அவளுக்கு ஏதோ ஒரு ஏமாற்றத்தைக் கொடுத்தது.

“எல்லாமேதான்... நான் எதிர்பாராதவிதமா எங்கயோ எப்படியோ போய், இப்ப ஏதோ லக்குல திரும்பி வந்திருக்கேனே... அது குட் இல்லையா?”

வளவன் மீண்டும் சாதாரணமாகச் சொன்னான்.

“ஆமா! சரி நான் வரேன், எனக்குப் பசிக்குது...” நந்தினி அவர்கள் பதிலுக்குக் கூட காத்திராமல் அங்கிருந்து விறுவிறுவென்று சென்றாள்.

அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்த பிரபு அவள் போனபின் வளவனைப் பார்த்து முறைத்தான்.

“என்னடா?”

“என்ன என்னடா? நீ அதே வளவன்தானா? இல்ல கலாவிக்ல எதாச்சு கழண்டுடுச்சா?”

“இப்ப என்ன பிரச்சனை உனக்கு?”

“டேய்... நான் சொன்னது உனக்குப் புரிஞ்சுதா இல்லையா? அவளுக்கு நீ அவளைக் காதலிக்குறன்றது தெரிஞ்சு போச்சு... இப்ப நீ கடைசியா மயங்கினப்ப அவ எங்கயும் போகாம மணிக்கணக்கா இங்கயே உக்காந்துட்டு உன்னையே பார்த்துட்டு இருந்தா...”

பிரபுவின் குரலில் கோவமும் ஆயாசமும் கலந்திருந்தன.

“ஓ, நல்ல விஷயம்தான் மச்சி...”

“டேய், என்னடா ஆச்சு உனக்கு? இங்க வரதுக்கு முன்னாடி அவ கூட பேச ஏங்குவ, அவளுக்குத் தெரியாம அவளையே பார்த்துட்டு இருப்ப, இப்ப என்னடானா ரொம்ப அசால்டா இருக்க?”

பிரபு அவனை அடிக்காத குறையாகக் கேட்டான்.

“மச்சீ... நான் இங்க இல்லாதப்ப என் உடல்ல ஜீவானு ஒருத்தன் இருந்தானா?”

“ஆமா!”

“அவன்கிட்டேர்ந்து ஏதாச்சு விஷயம் தெரிஞ்சுக்கிட்டீங்களா?”

“ஆமா... உலகம் அழியப் போகுது, எதிர்காலத்துல மனுஷங்க வாழ கலாவிக் கிரகம் உருவாக்கப்படும்... ஆனா, சில டீட்டெய்ல்ஸ சரியாக் கேட்டுக்கல, அதுக்குள்ள அவன் மயங்கிட்டான், நீ திரும்பி வந்துட்ட!”

“கவலைப்படாத, நான் எல்லா விவரத்தையும் தெளிவா தெரிஞ்சுக்கிட்டுத்தான் வந்திருக்கேன்... நீ சொன்னியே கலாவிக் கிரகம் உருவாக்கப்படும்னு... அதை யாரு செய்வா?”

“யரோ ஒரு இளம் விஞ்ஞானி... என்னவோ பேர் சொன்னானே... ஆங்... ஜீவப்பிரபு!”

பிரபு நினைவுபடுத்திச் சொன்னான்.

“கரெக்ட்... அந்த ஜீவப்பிரபு கலாவிக்கை உருவாக்கி மனித இனத்தைக் காப்பாத்தனும்னா நந்தினி என்னைக் காதலிச்சே ஆகனும்... அவ என்னைக் கல்யாணம் பண்ணியே ஆகனும்...”

“வாட்? என்ன டா சொல்ற...?”

“மனித இனத்தின் காவலர், கலாவிக்கின் முதல் கௌரவ ஆளுநர், விஞ்ஞானி ஜீவப்பிரபுவோட அப்பா நாந்தான்! அம்மா....”

வளவன் முகமெல்லாம் புன்னகையாக முடிக்காமல் இழுக்க, பிரபு முடித்தான்,

“நந்தினி!”

“யெஸ்! யூ ஆர் ஆப்சலூட்லி ரைட்...” வளவன் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டான்,

“இந்த மனித இனத்தைக் காப்பாத்த எனக்கு வேற வழியே இல்ல... நந்தினியைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணியே ஆகனும்!”

வளவன் குறும்பாகப் போலியான அலுப்புடன் சொன்னான்.

பிரபுவின் முகத்தில் சட்டெனக் குழப்பமேகம் நீங்கி கிண்டலான சிரிப்பு உதயமானது.

“என்னடா, நக்கலா பார்க்குற?”

பிரபு பதில் சொல்லாமல் பின்னாலப் பாரு என்று சைகை மட்டும் செய்தான்.

வளவன் திரும்பும்போதே அங்கு யார் நிற்கிறார்கள் என்று ஊகித்துவிட்டான்.

கம்பளி ஸ்வெட்டர் போட்ட பத்திரகாளியாய் அவள் இவனை முறைத்தபடி நின்றிருந்தாள்.

“ஓ, சார் இந்த உலகத்தக் காப்பாத்ததான் என்னை லவ் பண்றீங்களோ?”

“அது... அது சும்மா நந்து...”

அவள் தணிவதாக இல்லை,

“டாக்டர் வளவன், நம்மள்ல யாரோ ஒருத்தர் ஜீந்தான் ஜீவப்பிரபுவை உருவாக்கப் போகுது... நாம தனித்தனியா வேறொருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அதுக்கான வாய்ப்பு இருக்கு... அப்படியே டிரை பண்ணுவோம்!”

அவள் அவனை முறைத்தபடி சொன்னாள்.

“நந்தினி... நோ நோ... இப்படிலாம் மனித குலத்தோட தலையெழுத்தோட விளையாடாத! நான் சரண்டர்... ஐ லவ் யூ!”

என்று வளவன் அவள் முன் மண்டியிட்டான்.

நந்தினியின் முகத்தில் அவளையும் மீறிப் புன்னகை குடியேறியது!

“அடங்கப்பா... இது உலக மகா நடிப்பு டா சாமீ!” என்று பிரபு கிண்டலாய்ச் சொன்னான்.

வளவனும் நந்தினியும் ஒருசேர அவனை முறைத்தனர்.

*******
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
கலாவிக்

நீனா திரும்பி வந்தபோது அவளிடம் ஒரு பெரும் பரபரப்பு இருந்தது.

“டாக்டர் வளவன், நான் சொல்லப் போறத நீங்க நம்பவே மாட்டீங்க!”

“அப்படி என்னமா சொல்லப் போற? சொல்லு, பார்ப்போம்...”

“ஜீவாவோட உடல்ல கோட் ஆகியிருக்குற டி.என்.ஏ. ஜீவப்பிரபுவோடதுதான்...”

“அதைத்தான் அப்பவே கெஸ் பண்ணிட்டோமே, இதுல நம்பமுடியாதது என்ன இருக்கு?”

வளவன் அலுப்பாகக் கேட்டான்.

“குறுக்கப் பேசாம நான் சொல்றதைக் கேளுங்க...”

“சரி சொல்லு!”

“நான் டி.என்.ஏ-வை செக் பண்ண ஜீவப்பிரபுவோட விவரங்களைப் பார்த்தேன் இல்ல, அப்ப அவரோட அப்பா அம்மா பேரு, பிறந்த இடம் போன்ற தகவல்களும் கிடைச்சுது... அவரோட அப்பா பேரு என்ன தெரியுமா?”

“என்ன?”

“டாக்டர். வளவன் செம்பியன்!”

நீனா சொன்னதை உண்மையாகவே வளவனால் நம்பமுடியவில்லை.

“வாட்?” என்றான், அதற்கு மேல் அவனுக்கு எதுவும் தோன்றவில்லை.

“யெஸ்... நீங்கதான் ஜீவப்பிரபுவோட அப்பா! இந்த கிரகத்தின் முதல் கௌரவ ஆளுநரின் பெருமைமிகு தந்தை நீங்களேதான்!”

நீனா விளையாட்டாக சம்பிரதாயமாக மரியாதையுடன் பணிந்து பேசினாள்.

“நிஜமாவா சொல்ற?”

“ஆமா, இங்கப் பாருங்க... இதுல உங்க புகைப்படம் இருக்கு, இது நீங்கதானா?”

“ஆமா... இது... இது என்னோட புகைப்படமேதான்! சரி...”

வளவன் சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் மனத்தில் தோன்றிய அந்தக் கேள்வியைக் கேட்கலாமா வேண்டாவா என்று அவனுக்குள் ஒரு குட்டிப் பட்டிமன்றமே நடந்தது. அதற்கான பதில் அவன் எதிர்பார்த்ததாய் இல்லை என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது!

“என்ன? ஏதோ கேக்க வந்துட்டு அமைதியாயிட்டீங்க?”

“ஜி- ஜீவாவோட அம்மா...?”

“ம்ம்... அவங்க விவரமும் இருக்கே! பேரு-”

“சொல்லாத! வெயிட்!”

நீனா சொல்லும் முன் வளவன் அவளைத் தடுத்தான்.

“ஏன்?”

“இரு... பட்டுனு சொல்லாத! நான் கேக்குறதுக்கு முதல்ல பதில் சொல்லு... அவங்க பேரோட கடைசி எழுத்து என்ன?”

“இதென்ன க்விஸ் விளையாட்டு?” நீனா சிரிப்போடு கேட்டாள்.

“ப்ச்... விளையாட்டுலாம் இல்ல, நான் பூமில ஒருத்திய தீவிரமா காதலிச்சுட்டு இருக்கேன், இன்னும் அவகிட்ட என் காதலைக் கூட சொல்லல... இப்ப என் மகனான ஜீவப்பிரபுவோட அம்மா பேரு ஒருவேள அவ பேரா இல்லாம இருந்துச்சுனா? அப்ப அதுக்கு என்ன அர்த்தம்...?”

“ஓ... பூமில உங்க காலத்துல அப்படித்தான்ல... நாங்கள்லாம் முன்னேறிட்டோம்... புடிச்சிருந்தா பட்டுனு சொல்லிடுவோம், இல்லேனா கம்ப்யூட்டர் கிட்ட சொன்னா அது எங்களுக்கு ஏத்த ஆளக் கண்டுபிடிச்சுச் சேர்த்து வெச்சுடும்!”

நீனா குறும்போடு சொன்னாள்.

“சரி, நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு...”

“ம்ம்... அவங்க பேரோட கடைசி எழுத்து... ‘டை’!”

“ஓ மை காட்!” வளவன் முதலில் அதிர்ந்தான், பின் மெல்ல அவனுக்கு ஒன்று புரிந்தது,

“வெயிட்ட மினிட்... ‘டை’னு எந்தப் பேரும் முடியாதே?” நீனாவை முறைத்தான்.

“ஏன் முடியாது? ‘திரிசடை’னு ஒரு பேரு இருக்கு எங்க டேட்ட பேஸ்ல!” அவள் குரலிலும் முகத்திலும் குறும்பு தாண்டவமாடியது!

“உன்ன்ன்ன... ஒழுங்க விளையாடாம சொல்லு!”

“சரி சரி... அவங்க பேரோட கடைசி எழுத்து ‘னி’!”

“அப்பாடா... சரி, இப்ப முதல் எழுத்தைச் சொல்லு...”

“அட போயா, அவங்க பேரு நந்தினி... டாக்டர் நந்தினி, அவங்களும் என்னைப் போலவே பயாலஜிஸ்ட்!”

நீனா போட்டுடைத்ததைப் போலப் பட்டெனச் சொன்னாள்.

வளவன் சற்றே அதிர்ந்தாலும், அவள் சொன்னது முழுதாகப் புரியவும் நிம்மதியானான்.

பின் ஆர்வத்துடன் அவள் கையில் இருந்த கைக்கணினியை வாங்கி அதில் ஜீவப்பிரபுவின் விவரம், தங்களின் விவரம் அனைத்தையும் பார்த்தான்.

பூமியின் அழிவு பற்றிய குறிப்புகளையும் பார்த்து நினைவில் குறித்துவைத்துக்கொண்டான்.

நீனா அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவ்வப்போது அவன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னாள்.

ஒரு வழியாக வளவன் திருப்திபட்டு அவளது கைக்கணினியை அவளிடம் கொடுத்தான்.

சட்டென அவன் முகத்தில் இருந்த மகிழ்வும் உற்சாகமும் வடிந்து ஒரு குழப்பம் குடிகொண்டது.

“என்னாச்சு வளவன், ஏன் சட்டுனு டவுன் ஆயிட்டீங்க?”

“அது... இதெல்லாம் சரிதான், ஆனா, நான் இப்படி இங்க ஜீவா உடம்புல இருக்கேனே! இப்படி ஒன்னு நடந்ததா இதுல குறிப்பும் இல்ல, அப்ப, இதுலாம் நடக்காத ஒரு இறந்தகாலம்தானே இனிமே அமையும்? எனக்கென்னவோ எங்களோட இந்த எதிர்பாராத மாற்றம் காலவோட்டத்தை மாற்றிடுச்சுனு தோனுது...”

வளவன் வருத்தமும் குழப்பமும் கலந்த குரலில் சோர்வாகச் சொன்னான்.

”இவ்ளோதானா! என்கிட்ட இன்னும் கொஞ்சம் தகவல் இருக்கு வளவன்... அவசரப்படாதீங்க... எங்க தரவகத்துல வெளிப்படையா இல்லாம அதிரகசியம்னு சில விவரங்கள் இருக்கு, இந்த ஆராய்ச்சிக்காக ஆளுநர் எனக்குக் கொடுத்திருக்குற சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தத் தகவல்களையும் நான் சேகரிச்சுட்டு வந்துட்டேன்...”

நீனா பெருமையாக அவனைப் பார்த்தபடி சொன்னாள்.

“ஓ... என்ன அது? சீக்கிரம் சொல்லு...” வளவன் பரபரப்பானான்.

“நான் சேகரிச்ச தகவல் பிள்ஸ் என்னோட ஆராய்ச்சி இது இரெண்டையும் வெச்சுப் பார்க்குறப்ப, நீங்க சொன்னா மாதிரி ஜீவப்பிரபு ஜீவாவை உருவாக்கினது மனித இனப்பெருக்கத்துக்காக இல்ல... அவர் தன்னை ஜீவாவுக்குள்ள செலுத்திக்கிட்டு என்றும் அழியாத, எந்த இயற்கைச் சூழலாலும் பாதிக்கப்படாத ஒரு இயந்திர மனிதனா வாழத் திட்டம் போட்டிருக்காரு...”

“ஓ மை காட்!” வளவன் சற்றே அதிர்ச்சியானான்.

“ஆமா... எனக்கும் முதல்ல இதைத் தெரிஞ்சுக்கிட்டப்ப கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு... ஆனா, என்னால இதை ஜீவப்பிரபுவோட சுயநலம், பேராசைனுலாம் சொல்ல முடியல...”

“ஓ?”

“ம்ம்... என்ன இருந்தாலும் அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி, மனித குலத்தையே அழிவிலிருந்து காப்பாத்துற அறிவும் திறமையும் பெற்றவர், பூமி அழிஞ்சிடும்னு தெரியும், கலாவிக்கின் சுற்றுச்சூழலையும் முழுசா நம்ப முடியல, அப்ப அவர் என்ன பண்ணுவார்? தன்னோட திட்டம் வெற்றி பெறுமா பெறாதான்னு தெரியாம அவர் அதை கைவிட விரும்பல, அதனாலத்தான் இப்படி ஒரு திட்டம் போட்டிருக்கார்...”
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
“ம்ம்ம்... புரியுது... அப்போ ஜீவா ஜீவப்பிரபுதானா?”

“அங்கதான் கொஞ்சம் புரியல... ஜீவாவைப் பொறுத்தவரை அவன் ஒரு இயந்திர மனிதன், தான் ஏதோ ஒருவகைல சிறப்பானவன்னு அவனுக்குத் தெரியும், அவனோட அறிவும் அப்பப்ப இங்க விஞ்ஞானிகளுக்கு உதவியிருக்கு, ஆனா, அவன் ஜீவப்பிரபுவா இல்ல... அப்படி அவன் நடந்துக்கிட்டதா எந்தப் பதிவோ சான்றோ இல்ல...”

“எனக்கு இது புரியல... அப்ப ஜீவப்பிரபு ஜீவாக்குள்ள வரலனு சொல்றியா?”

”இல்ல, வந்துட்டாரு... இதுல கெஸ் பண்ண வேண்டிய தேவையே இல்லாம நான் பார்ந்த அந்த அதிரகசிய தரவுல அது பதிவாயிருக்கு... ஜீவாவின் உடம்புக்குள்ள வந்தது தான்தான்னு நிரூபிக்க ஜீவப்பிரபுவே சில குறிப்புகளையும் சான்றுகளையும் பதிவேற்றியிருக்காரு... ஸோ, கண்டிப்பா ஜீவாக்குள்ள இருக்குறது ஜீவப்பிரபுவின் மூளைதான், அதாவது ஜீவப்பிரபுதான் ஜீவா!”

“அப்ப...?”

“அவர் ஏன் தன்னை நிலைநாட்டிக்கல? ஏன் அவரே இந்த கிரகத்தின் முதல் மற்றும் நிரந்தர ஆளுநரா இருந்து வழிநடத்தல? அதானே?”

“ஆமா!”

“எனக்கும் அது உறுதியா தெரியல... ஆனா, என்னோட ஊகம் என்னன்னா அவரோட ட்ரான்ஸ்பர் சரியா முழுமையா நடக்கல... அவரோட மூளையின், நினைவுகளின் சிலப்பகுதி மட்டுமே ஜீவாக்குள்ள வந்திருக்கு... மற்றவை லாஸ் ஆயிருக்கு!”

“மை காட்! அப்ப இப்ப நடந்த ட்ரான்ஸ்ஃபர்? இது கச்சிதமா நடந்திருக்கே?”

வளவன் வியப்பும் அச்சமும் கலந்து கேட்டான்.

“அதுக்கும் என்கிட்ட விடையில்ல... ஆனா ஏதோவொரு வகைல இந்த உடல்ல இருக்குற அந்த ட்ரான்ஸீவர் சரிப்படுத்தப் பட்டிருக்கு... அகெய்ன் மை கெஸ்...”

“ஜீவப்பிரவுவின் ஆழ்மனத்தோட வேலையா இருக்கலாம்?”

“ஆமா!”

”ம்ம்ம்...” வளவன் இதையெல்லாம் முழுதாக உள்வாங்கிக்கொள்ள இயலாமல் சிந்தனையில் ஆழ்ந்தான்.

சற்று நேரம் அமைதியாக அவனைச் சிந்திக்கவிட்ட நீனா மெல்ல அவன் சிந்தனையைக் கலைத்தாள்.

“என்கிட்ட இன்னொரு தகவல் இருக்கு... மகிழ்ச்சியான தகவல்...”

“உன்கிட்ட எத்தன தகவல்தான் இருக்கு? மொத்தமா கொட்டிடேன்...” வளவன் கிண்டலாகக் கேட்டான்.

நீனா அவனைப் பொய்க்கோவத்துடன் முறைத்தபடி பேசினாள்,

“ஆக்சுவலி உங்க மாற்றம் எப்படி நடந்துதுனு நான் கண்டுபிடிச்சுட்டேன்...”

“ஓ...” வளவன் ஆர்வமானான்.

“அது ஒரு நம்ப முடியாத தற்செயல்களின் கூட்டு! முதல்ல, கலாவிக்கை இங்க நகர்த்த ஒரு வார்ம் ஹோல் கிடைச்சுதுனு குறிப்பு இருக்குல?”

“ஆமா...?”

“அந்த வார்ம் ஹோல் உங்க காலத்துலதான் உருவாகத் தொடங்கியிருக்கு... இப்போதைக்கு அது நிலையில்லாம தோன்றித் தோன்றி மறைஞ்சுட்டு இருக்கு... அப்பப்ப அதோட சுவடு இங்க எங்களுக்கும் தெரியுது... எங்க ஆஸ்ட்ரோபிஸிஸிஸ்ட் குழுதான் இந்தத் தகவலை எனக்குச் சொன்னாங்க...”

“ஓ... இண்ட்ரஸ்டிங்... மேல சொல்லு...”

“சொல்றேன்! சொல்லாம அந்த வார்ம் ஹோலுக்குள்ளயா ஓடிடப் போறேன்?”

“ப்ச்!” வளவன் கண்களை உருட்டினான்.

“சரி... இரண்டாவது, உங்க மாற்றம் நிகழ்றதுக்கு முன்னாடி நாங்க ஜீவாவைத் துரத்திட்டு இருந்தோம்-”

“துரத்துனீங்களா? எதுக்கு?”

“அது ஒரு பெரிய கதை! அவன் என்னோட ஆராய்ச்சிக்கு ஒத்துக்கவே இல்ல, முரண்டு பண்ணிட்டே இருந்தான், அதனால அவனை வலுக்கட்டாயமா தூக்கிட்டு வந்து கட்டி வெச்சோம்... அவன் தப்பிச்சு ஓடப் பார்த்தான்...”

“ஓ...”

“ஆமா... இந்த ரெஸிஸ்டன்ஸ் கூட ஜீவப்பிரபுவோட உள்ளுணர்வுதான்னு இப்ப யோசிச்சுப் பார்த்தா தோனுது!”

“இருக்கலாம்...”

“ம்ம்... சரி, அவனைத் துரத்தினோமா, அவன் தன்னோட விண்படகுல ஏறித் தப்பிக்க முயன்றான், எங்க கார்ட்ஸ் அந்த விண்படகைச் சுட்டு வீழ்த்தினாங்க, அதுல அவனும் அடிபட்டு மொத்தமா ஆஃப்லைன் ஆகி விழுந்துட்டான்...”

வளவன் குறுக்கே பேசாமல் அவளை உன்னிப்பாகக் கவனித்தான்.

“அப்படி அவன் விழுந்து, மறுபடி அவனோட சிஸ்டம் முழுக்க ஆன்லைன் வந்தப்பதான் இந்த ட்ரான்ஸீவரும் ட்ரிக்கர் ஆகியிருக்கு...”

“ஓ!”

“சரியா அதே நேரத்துல அந்த வார்ம் ஹோலும் பூமிக்கும் கலாவிக்குக்கும் தொடர்போட தோன்றியிருக்கு... ஜீவா உடல்ல இருந்த மெமரி மொத்தமும் தகவலா அனுப்பப்பட்டு உங்க மூளைக்குள்ள பதிஞ்சு, உங்க மெமரிய பதிலுக்கு இங்க அனுப்பி ஜீவா உடல்ல பதிய வெச்சிடுச்சு...”

“உண்மையாவா? இது சாத்தியமா? எப்படி?”

“என்ன டாக்டர் வளவன்? ஜீவாவோட மூளைக்குள்ள இருந்துக்கிட்டுச் சாத்தியமான்னு கேக்குறீங்க?”

“இல்ல, ஜீவாவோட உடல் ஒரு இயந்திரம், அது தன்னோட மெமரிய ட்ரான்ஸ்மிட் பண்ணிச்சுங்குறது ஏத்துக்குறா மாதிரி இருக்கு, என்னோட மூளைல இருந்த மெமரி எப்படி ட்ரான்ஸ்மிட் ஆச்சு? அதான்...”

“நீங்க சொல்றது புரியுது, ஆனா அதுக்கு இப்ப என்கிட்ட முழுசா உறுதியான பதில் இல்லை... அதுக்கு நான் ஜீவாவோட உடலை இன்னும் ஆராயனும்... ஆனா, உங்க மூளைக்குள்ள பதிவான ஜீவாவோட மெமரிலயே உங்க மெமரிய ட்ரான்ஸ்பர் பண்றதுக்கான கோடிங்கும் இருக்குனுதான் நான் நினைக்குறேன்... இப்போதைக்கு இவ்ளோதான் என்னால் சொல்ல முடியும்!”

“ம்ம்ம்...” வளவன் யோசனையுடன் தலையாட்டினான்.

“சந்தோஷமான விஷயம் என்னனு கேக்கலயே நீங்க?”

”ஆமாமா... என்ன? சொல்லு...”

“ஜீவா உடம்புல இருக்குற ட்ரிக்கர், அந்த வார்ம் ஹோல் இரண்டையுமே ஓரளவு உறுதியோட நாங்க கணிச்சு வெச்சிருக்கோம்...”

“யு மீன்?” வளவன் அவள் சொல்வதன் உட்பொருள் புரிய மகிழ்ச்சி, வியப்பு, குழப்பம் என கலவையான உணர்வுகளோடு அவளைக் கேட்டான்.

“யெஸ்... எங்களால அந்த ட்ரான்ஸ்பரை மறுபடி வெற்றிகரமா செய்ய முடியும்!” நீனா துள்ளிக் குதிக்காத குறையாக மகிழ்ச்சியில் திளைத்தபடி சொன்னாள்.

வளவன் பதில் சொல்ல சொல்லின்றி எழுந்து அவளைக் கட்டிக்கொண்டான்.

அவளும் அன்பும் மகிழ்வும் பொங்க அவனைக் கட்டிக்கொண்டாள்.

”ரொம்ம்ம்ம்ப ரொம்ம்மப் நன்றி நீனா... உனக்கு எப்படி நன்றி சொல்றதுனே எனக்குத் தெரியல!”

“டாக்டர் வளவன்... நான் வாழும் கிரகத்தின் முதல் கௌரவ ஆளுநரின் அப்பா நீங்க, இப்ப நீங்க எனக்கு ஒரு நண்பரா, என்னைக் கட்டிப் பிடிக்குற அளவுக்கு உங்களை எனக்குத் தெரியும்னு சொல்லிக்குறதை விட வேற என்ன மகிழ்ச்சி இருக்கப் போகுது எனக்கு? அது போக, ஒரு பயாலஜிஸ்டா என் துறையிலேயே ஆகச் சிறந்த ஆர்வமூட்டும் ஒரு ஆய்வில் நான் ஈடுபட்டிருக்கேன், அதுக்கு உங்க உதவியும் எனக்குத் துணையா இருந்திருக்கு... இதுக்கெல்லாம் நான்தான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியாம முழிக்கனும்!”

நீனா ஒரு சின்னப் பெண்ணைப் போல உற்சாகமும் மகிழ்வும் பொங்கக் கூறினாள்.

அவள் சொன்னதில் ஏதோ உறுத்த வளவன் சட்டென நகர்ந்துகொண்டான்.

“என்னாச்சு வளவன்?”

“அது... இந்தக் கலாவிக் உருவானதே பூமி அழிஞ்சிடும்னு ஒரு நிலை வந்ததுனாலதான... இப்ப எனக்கு அந்த அழிவைப் பற்றின விவரம் எல்லாம் தெரியும், நான் திரும்ப பூமிக்குப் போனா என்னால அந்த அழிவைத் தடுக்காம இருக்க முடியாது... அப்ப...”

வளவன் தயங்கி நிறுத்தினான்.

“கலாவிக்கே உருவாகாம போகலாம்! நாங்கலாம் இல்லாமலே போகலாம்!”

நீனா அவன் சொல்ல வந்ததை முடித்தாள்.

வளவன் என்ன சொல்வதென்று தெரியாமல் அவளையே பார்த்தான்.

நீனாவும் சற்று நேரம் அமைதியாய் சிந்தனையில் ஆழ்ந்தாள். பின் அவள் முகத்தில் மீண்டும் புன்னகை குடியேறியது.

“டாக்டர் வளவன்... நாம ரொம்ப சில்லியா கவலைப்படுறோம்... கலாவிக்கின் நோக்கமே மனித இனத்தின் வாழ்வுதான்... பூமின்ற ஆதாரம் அழிஞ்சதுனால ஒரு மாற்றா இதை உருவாக்கியிருக்கோம்... என்ன இருந்தாலும் பூமிதான நம் ஆதாரம்? அதுவே இருக்கும் போது கலாவிக்லாம் எதுக்கு? சின்ன அளவுல சுயநலமா யோசிக்காம பெரிய அளவுல மனித குலத்துக்கே நல்லதுனு யோசிப்போம்... நீங்க மறுபடி அங்கப் போறதுனால கலாவிக் இல்லாமலே போயிரும்னா அதுல எனக்குப் பெருமைதான்!”

அவள் நிதானமாக அழுத்தமாகச் சொன்னாள். வளவன் பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சற்று நேரம் கழித்து வளவனைத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாள். நீனா ஜீவாவின் உடலோடு சில கணினிகளை இணைத்திருந்தாள். அவர்களுடன் சில வானியற்பியல் விஞ்ஞானிகளும் இருந்தனர், ஆளுக்குச் சில கணினிகளை இயக்கியபடி!

“ஓக்கே, நான் தயார்!” நீனா அந்த வானியற்பியல் விஞ்ஞானிகளைப் பார்த்துச் சொல்ல, அவர்கள் தலையை ஆட்டிவிட்டு தங்கள் கணிகளில் மூழ்கினர்.

நீனா வளவனைப் பார்த்தாள்.

“குட்பை டாக்டர் வளவன்... என்னை நியாபகம் வெச்சுக்கோங்க... அநேகமா நான் உங்க நியாபகத்துல மட்டுமே இருக்குற ஒரு விஷயமானாலும் ஆயிடுவேன்!” என்று களங்கமில்லாமல் சிரித்தாள்.

வளவன் சற்று நேரம் பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒரு வானியற்பியல் விஞ்ஞானி “ரெடி...” எனவும், நீனா ஜீவாவின் உடலில் இருந்த ட்ரிக்கரை செயல்படுத்தத் தயாரானாள்.

“குட்பை... நான் உன்னை மறக்கமாட்டேன்... நீயும் என்னை மறக்கமாட்ட!” என்று வளவன் அவளைப் பார்த்துச் சொல்லிவிட்டுக் கண்களை மூடிக்கொண்டான்.

“கோ!” என்றார் அந்த வானியற்பியல் விஞ்ஞானி.

நீனா ட்ரிக்கரை செயல்படுத்த, சில நொடிகளில் ஜீவாவின் உடல் செயலற்று உறைந்தது.

நீனாவும் விஞ்ஞானிகளும் ஆர்வத்துடன் ஜீவாவின் உடலையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

அது எந்த அசைவும் இன்றி அப்படியே இருந்தது.

நேரம் செல்லச் செல்ல அனைவரும் ஆர்வமிழந்தனர். வானியற்பியல் விஞ்ஞானிகள் நீனாவிடம் சொல்லிவிட்டுத் தங்கள் கணினிகளை மூட்டைக்கட்டிக்கொண்டு கிளம்பினர்.

நீனா மேலும் ஒரு மணி நேரம் ஜீவாவின் செயலற்ற உடலையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டுப் பின் அவளும் சோர்வாகி அந்த அறையைவிட்டு வெளியில் வந்தாள்.

சற்று நேரம் வராண்டாவில் உலாத்தியவள் அதன் ஒரு மூலையில் இருந்த காப்பி வழங்கும் இயந்திரன் அருகில் சென்று ஒரு கோப்பை காப்பி எடுத்துக்கொண்டாள்.

ஜீவா ஏன் திரும்பவில்லை?

வளவன் பூமிக்குச் சரியாகச் சென்று சேர்ந்தாரா? அவர் அங்குப் போயிருந்தால் நம் கணக்குப்படி நாம் காணாமல் போயிருக்க வேண்டுமே? ஏன் அப்படி எதுவும் நிகழவில்லை? வளவன் சரியாகப் போகவில்லையோ?

நீனாவின் மனத்தில் கேள்விகளும் குழப்பங்களும் அதிகரித்துக்கொண்டே சென்றன.

கையில் இருந்த காப்பியைக் குடிக்காமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அவள் தோளில் மெல்ல ஒரு கை அழுத்தியது.

இலேசான அதிர்வுடன் சட்டெனத் திரும்பிப் பார்த்தவள் வியப்பும் மகிழ்வும் மூழ்கடிக்க அப்படியே உறைந்தாள்.

அங்கு ஜீவா இவளைப் பார்த்துப் புன்னகைத்தைபடி நின்றிருந்தான்.

“நீ- நீங்க...”

“வந்துட்டேன்... உனக்குத்தான் நன்றி சொல்லனும்!”

“வளவன்? நாம இன்னும்...” நீனாவால் வாக்கியங்களை முடிக்க முடியவில்லை.

ஜீவா அவளைப் புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

“வளவன் பத்திரமா போய்ச் சேர்ந்துட்டாரு... நாமும் அழியப் போறது இல்ல... போதுமா?”

“அ- அது எப்படி அவ்ளோ உறுதியா தெரியும் உங்களுக்கு?”

நீனா திக்கித் திணறிக் கேட்டாள்.

ஜீவா சிரித்தபடியே அவளது கைக்கணினியை நீட்டினான். அதில் ‘கலாவிக் கையேடு’ திறக்கப்பட்டிருந்தது. நீனா அதை முன்பே பலமுறை படித்திருக்கிறாள், கிட்டத்தட்ட அவளுக்கு அது மனப்பாடமாகத் தெரியும்.

ஆனால், ஜீவா நீட்டிய கலாவிக் கையேட்டின் குறிப்புகள் மாறியிருந்தன. உலகம் அழியவில்லை என்றிருந்தது. வளவன், நந்தினி, பிரபு, கல்பனா, சந்துரு என்பவர்களின் பெயர்கள் இருந்தன, இவளின் பெயரும் இருந்ததுதான் அவளுக்கு உச்சகட்ட வியப்பைத் தந்தது.

நீனா நிமிர்ந்து ஜீவாவைப் பார்த்தாள்.

“இதெல்லாம்...”

“மாறிடுச்சு... உலகம் அழியல... அந்த அணுகுண்டு வெடிப்பைத் தடுத்தாச்சு... சுற்றுசூழல் சீர்கேட்டையும் சரியான காலத்துல சரி பண்ணியாச்சு...”

“அப்ப கலாவிக்...?”

“உலகம் அழியல, ஆனாலும் கலாவிக் உருவாக்கப்பட்டுச்சு...” ஜீவா புன்னகையோடே சொன்னான்.

“ஆனா... எதுக்காக?”

“என்னோட அப்பா சொன்னார்! கலாவிக்கை உருவாக்கு... அது இல்லேனா உலகம் அழிஞ்சிடும்னு அவர்தான் எனக்குச் சொன்னார்!”

“உங்க அப்பாவா?” நீனா வியப்பின் உச்சத்தில் இருந்து கேட்டாள்.

“ஆமா, என் அப்பாவேதான்... அவர் உனக்குக் கூட ரொம்ப பிரெண்டாமே? டாக்டர் வளவன் செம்பியன்?”

இயந்திர உடலுக்குள் இருந்த ஜீவப்பிரபு சொல்லவும் நீனா தன் கையில் இருந்த கைக்கணினியை நழுவவிட்டாள்!

(முற்றும்)
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Vanthuten..

Nalla enga karpanai valathai thoondi vitta novel naa.. ithaan ennoda first full of full scientific story.. athula oru comedy kaathal nu nalla pepper and salt combination la potato chips saaptta thirupthi.. ??????????

Naan kooda neena and jeevaprabu alias jeeva vaa jodi yaa ninaichiten.. haha.. ??? avanga romance aayum oru thani part taa thanthaalum asaraamal padipom la.. ?? congratulations for completing your first novel successfully naa.. ??????????
 




Last edited:

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
அருமை சகோ, கதையைத எந்த இடத்திலும் தொய்வில்லாமல் கதையைக் கொண்டுபோன விதம் & வித்தியாசனமான கதைக்களம் அருமை சகோ, இறுதியில் ஒரு டுவிஸ்டோட (ஜீவன் பிரபு கிட்ட அவன் அப்பா வளவன் சொன்னதாக) முடிவு வைத்தது இரண்டாம் பாகம் வருமோ:unsure:
வாழ்த்துகள் சகோ
விரைவில் அடுத்தக் கதையுடன் வர வாழ்த்துகள் சகோ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top