• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Episode 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
புவி

”என்ன மச்சி பிளூ பேர்ல்? நகைக் கடைல முத்து மாலை வாங்கித் தரணும்னு கேக்குறாளா?”

பிரபு வளவனின் கையில் இருந்த கோப்பை எட்டிப் பார்த்துக் கிண்டலாகக் கேட்டான்.

வளவன் பதில் சொல்லாமல் அவனை முறைத்தான்.

“ஓக்கே... ஓக்கே... கூல், கூல்... நீ இது என்ன புராஜெக்ட்னு படிச்சுட்டுப் போய் நந்- நோ! நா அவ பேரச் சொல்லமாட்டேன்னு என் குல தெய்வத்து மேல சத்தியம் பண்ணிருக்கேன்... நீ போய் உன் ஆளோட டிஸ்கஸ் பண்ணிட்டு வா, நா போய் ஒரு டீ குடிச்சுட்டு பஜ்ஜி சாப்ட்டு வரேன், இன்னிக்கு மொளகா பஜ்ஜி போட்டிருப்பான்!”

பிரபு வளவனின் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து சென்றான்.

வளவன் தானியங்கிக் குளம்பி இயந்திரத்திலிருந்து ஒரு பெரிய கோப்பை குளம்பி எடுத்துக்கொண்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்தான்.

குளம்பியைக் பருகியவாறே நந்தினி கொடுத்த கோப்பை மேய்ந்தான்.

படிக்கப் படிக்க வளவனின் கண்கள் அகல விரிந்தன. குளம்பிக் கோப்பையைக் கீழே வைத்துவிட்டு அவள் கொடுத்திருந்த பெண்டிரைவைத் தனது கணினியில் பொருத்தினான்.

அதில் காணொளிகளும் திட்ட வரைவுகளும் வரைபடங்களும் தோன்றின.

அவற்றை எல்லாம் பார்க்கப் பார்க்க, படிக்கப் படிக்க, அவற்றின் தகவல்களை உணர உணர வளவனின் வியப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது.

அதையெல்லாம்விட இத்தனை பெரிய காரியத்தில் இந்திய அரசாங்கத்தின் சார்பாகத் தானும் செல்லப் போகிறோம் என்ற வியப்பு பெரிதாக இருந்தது.

“எழ்ன்ன ஷா, உழ்ன் ஆழு கூழ பேஷிழியா?”

வாய் நிறைய மிளகாய் பஜ்ஜியை அசைபோட்டபடியே வந்தான் பிரபு.

அவன் கேட்டது சரியாகப் புரியாமல் அவனை கேள்வியோடு நோக்கினான் வளவன்.

’இரு’ என்று கை காட்டியவன், வாயில் இருந்த பஜ்ஜியை நிதானமாய் மென்று விழுங்விட்டுக் கொஞ்சம் நீரையும் குடித்துவிட்டுப் பின் மீண்டும் கேட்டான்,

“என்ன டா, உன் ஆளு கூட பேசிட்டியா?னு கேட்டேன்! பஜ்ஜி பிரமாதம்... உனக்கு வேணும்னா நேரா கஃபேக்கே போய் சுடச்சுடச் சாப்பிட்டு வா...”

என்று பஜ்ஜியைச் சிலாகித்தான்.

“பிரபு, இந்த மேட்டர் ரொம்ப சீரியஸானது டா! இங்க பாரு...”

வளவன் அந்த நீல முத்துத் திட்டத்தின் கோப்புகளை அவனுக்குக் காட்டியபடியே விவரித்தான்.

“மை காட்! எனக்கென்னவோ இத நீ என்கிட்ட காட்டிருக்கவே கூடாதுனு தோனுது, இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்ல, நீ இத என் கிட்ட சொன்னதா யார்கிட்டயும் சொல்லாத... முக்கியமா நந்தினிகிட்ட-”

பிரபு முடிக்கும் முன் பின்னால் நந்தினியின் குரல் கேட்டது.

“எத என்கிட்ட சொல்லக் கூடாது?”

இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு சிக்னலில் பைக்காரர்களை மடக்கும் அழகான பெண் போலிசைப் போல நின்றுகொண்டிருந்தாள்.

பிரபு வளவனைப் பார்த்து ‘சூன்யக்காரி’ என்று உதட்டசைத்தான்.

பின் நந்தினி பக்கம் திரும்பி அவன் “அது வந்து மா...” என்று தொடங்கி மேலே பேசுவதற்குள் வளவன் குறுக்கிட்டான்,

“இரு பிரபு, பொய் சொல்லிச் சமாளிக்க வேண்டாம்! நந்தினி இந்த பிராஜக்ட்ல பிரபுவும் நம்ம கூட இருக்குறதுதான் நல்லதுனு எனக்குப் படுது... அதனால நான் இதப் பத்தின விவரங்களை அவன்கிட்ட சொல்லிட்டேன்... அதான்!”

“வாட்? டாக்டர். வளவன், இந்த பிராஜக்ட் இந்திய அரசாங்கத்தோட மிக முக்கியமான, இரகசியமான ஒன்னு... இதுல யார் இருக்கனும், யார் இருக்கக் கூடாதுனு முடிவு பண்றது நாம இல்ல...”

அவள் படபடவெனப் பேச, வளவன் நிதானமாக ‘நிறுத்து’ என்று கைக்காட்டி அவளைத் தடுத்தான்.

“இதோட முக்கியத்துவம், இரகசியத்தன்மை எல்லாத்தையும் நான் முழுசா புரிஞ்சுக்கிட்டேன், எனக்கு பிரபு கண்டிப்பா கூட இருக்கனும்... அவன் வந்தாத்தான் நானும் வருவேன், நானே பாஸ்கிட்ட பேசிக்குறேன்...”

வளவன் உறுதியாகச் சொல்ல, நந்தினியின் முகத்தில் ஏமாற்றமும் வெறுப்பும் படர்ந்தன. அவள் சட்டென அவனது குற்றறையைவிட்டுச் சென்றாள்.

“மச்சீ... எ- எனக்காக... உன் நண்ண்பனுக்காகக் காஆதலியே துச்ச்ச்சமா தூஊக்க்க்கி எறிஞ்சு பேசிட்டியே டா... பேசிட்டியேஏஏ... நீ ரொம்ப கிரேட் டா... கிரேட்... உனக்கு கன்னியாகுமாரில திருவள்ளவர் சிலைக்குப் பக்க்க்கத்துல ஒரு சிலை-”

பிரபு நடிகர் சிவாஜியின் குரலில் (அது போலத்தான் முயன்றான், சரியா வரல!) உணர்ச்சி பொங்கப் பேச, வளவன் அவனை இடைவெட்டினான்,

“நிறுத்துறா! அவ பயாலஜிஸ்ட், நான் பிசிசிஸ்ட்டு, நாங்க ரெண்டு பேரு மட்டும் போய் என்ன பண்றது? அங்க கிடைக்குற டேட்டாவலாம் எங்களால ஜென்மத்துக்கும் முழுசா காரலேட் பண்ண முடியாது! அதனாலத்தான் நீயும் வரணும்னேன்... எங்களுக்கு ஒரு ஸ்டாடிஸ்டிசியன் தேவை... அதுமட்டுமில்லாம நீ புரோக்கிராமிங்குலயும் புலி, அதான்!”

“அடப்பாவி... அப்ப என் மேல இருக்குற உன்னதமான நட்புனால இல்லையா?”

“ச்ச ச்ச... அதெல்லாம் ஒரு கன்றாவியும் இல்ல... இன்னொரு காரணமும் இருக்கு, அதச் சொன்னா நீ வரமாட்ட, அதனால அத அப்புறமா சொல்றேன்... இப்ப போய் டிராகனைப் பார்த்துட்டு வரேன்... நீ போய் தடி தடியா சுவெட்டர் ஆர்டர் பண்ணு...”

வளவன் தனது இருக்கையில் இருந்து எழ, பிரபு அவனை கேள்வியோடு பார்த்தான்,

”சுவெட்டரா?”

“பின்ன! விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு... டேய், நாம போகப் போறது அண்டார்ட்டிக்காக்கு டா... பூமியோட தென் துருவத்துக்கு!”

*******
கலாவிக்

ஜீவா மீண்டும் இயக்கம் பெற்று கண்விழித்த போது படுக்கையில் படுக்கவைக்கப்பட்டிருந்தான். மெல்லிய இழைகளால் கட்டிலோடு சேர்த்துப் பிணைக்கப்பட்டிருந்தான். தலையை மட்டும் திருப்ப இயன்றது. சுற்றி முற்றிப் பார்த்ததில் அது ஏதோ ஒரு ஆய்வகத்தின் தளம் என்று தெரிந்தது. அங்கிருந்த செயற்கை வளிமண்டலத்தின் அழுத்தத்தைக் கொண்டு அது மிகவும் கீழே இருக்கும் ஒரு தளம் என்பதை உணர்ந்து கொண்டான்.

கலாவிக் கட்டடங்களைப் பொறுத்தவரை ஒரு தளம் எவ்வளவுக்கெவ்வளவு கீழே அமைக்கப்பட்டிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதன் முக்கியத்துவமும் இரகசியத் தன்மையும் அதிகம்.

மெல்ல அந்த அறையை நோட்டமிட்டபடி எடைப்போட்டுக் கொண்டே வந்த ஜீவா வாசற்கதவிற்கு அருகே சுவரோடு சுவராகச் சிலையைப் போல நின்றிருந்த அந்தக் காவலனைக் கவனித்தான்.

“ஏய்! எங்க வெச்சிருக்கீங்க என்னை? இது என்ன இடம்? எதுக்காக இங்க கொண்டு வந்தீங்க? என்னை அவிழ்த்துவிடு... என்னோட பதவி அதிகாரம் தெரியாம என் கூட விளையாடாதீங்க!”

ஜீவா சரமாரியாகக் கத்தியதைச் சற்றும் காதில் வாங்காமல் அந்தக் காவலாளி அசையாமல் நின்றான்.

ஜீவா தனது மணிக்கட்டில் புதைந்திருக்கும் சீரொளி (லேசர்) துப்பாக்கியை இயக்க முயன்றான். ஆனால் அவனது உடல் முழுமையாக அவனது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்துகொண்டான்.

கலாவிக்கின் ஆளுநர்க்கு ஆபத்து சமிஞ்சை அனுப்ப முயன்றான், அம்முயற்சியும் தோல்வியுற்றது.

ஜீவா எரிச்சலடைந்து தனது உடல்பலத்தால் கட்டைப் பிய்த்தெறிய முயன்ற வேளை நீனா உள்ளே வந்தாள்.

“என்ன ஜீவா முதுகு அரிக்குதா?”

நக்கலாகக் கேட்டவளை அவன் எரித்துவிடுவதைப் போல முறைத்துப் பார்த்தான்.

“நல்ல வேளை உங்க இன்-பில்ட் வெபன்சைலாம் டீயாக்டிவேட் செஞ்சேன்... இல்லேனா நக்கீரரை மாதிரி என்னையும் எரிச்சிருப்பீங்க போல!”

“நக்- என்னது?”

“விடுங்க, அது ஒரு பழைய புவிக் கதை! நாம நம்ம விஷயத்துக்கு வருவோம்...”

ஜீவா எரிமலை போலக் குமுறிக்கொண்டிருக்க, நீனாவோ மிக சகஜமாக அவன் அருகில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தாள்.

“டாக்டர். நீனா... நான் உங்களை எச்சரிச்சதையும் மீறி நீங்க என்னை செயலிக்க வெச்சிருக்கீங்க, இப்படி எங்கயோ ஒரு ஆய்வுக் கூடத்துல கொண்டு வந்து கட்டிப்போட்டு வெச்சிருக்கீங்க, அனுமதி இல்லாம என்னோட உடலமைப்புகள்ல கை வெச்சிருக்கீங்க... அரசாங்கத்துக்குத் தெரிஞ்சா நீங்க உச்சபச்ச தண்டனைக்கு உள்ளாவீங்க... சொல்றதக் கேளுங்க...”

ஜீவா பொறுமையாக அவளை எச்சரித்தான்.

நீனா அவன் பேசுவதை விளையாட்டாகக் கேட்டுக்கொண்டிருந்தாள், புன்னகை மாறாமல்.

”கமாண்டர் ஜீவா, அரசாங்கம் எனக்கு உச்சபச்ச தண்டனைலாம் விதிக்கப் போறதில்ல, பதவி உயர்வு வேணும்னா தருவாங்க... இதப் பாருங்க...”

அவள் புன்னகையோடு நீட்டிய அந்த கணிப்பலகையை (டேப்லட்) ஜீவா எரிச்சலுடன் வாங்கிப் பார்த்தான் (கட்டப்பட்ட கைகளோடேதான்!) அதில் அவனைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள நீனாவிற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. ஆணையில் ஆளுநரே தனது மின்கையொப்பத்தைப் பதித்திருந்தார்.

(தொடரும்...)
கலாவிக் கையேடு - குறிப்பு #5

புவி மனிதர்களால் பெருகிய சுற்றுச்சூழல் கேடுகளினால் விரைவிலேயே புவி வாழத் தகுதியற்ற கிரகமாகிவிடும் என்று உணர்ந்து பல தீர்வுகளும் மாற்று வழிகளும் முன்வைக்கப்பட்டன. அவற்றில் முதன்மையானது மற்றொரு சாதகமான கோளுக்குக் குடியேறுவது. புவிக்கு அருகிலேயே இருந்த செவ்வாய் கிரகம்முதல் எங்கேயோ பல பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருந்த புவிநிகர் கிரகங்கள்வரை கருத்தில் கொள்ளப்பட்டாலும், முதன்முதலில் அதற்குச் செயல் வடிவம் கொடுத்தது ஒரு 25 வயது இளம் விஞ்ஞானிதான். அவரே கலாவிக் கிரகத்தின் தந்தை என்றும், முதல் கௌரவ ஆளுநர் என்றும் அழைக்கப்படுகிறார். ஆனால் அவரது பாதம் கலாவிக் கிரகத்தில் பட்டதே இல்லை!
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விசய நரசிம்மன் தம்பி
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விசய நரசிம்மன் தம்பி
மிக்க நன்றி அம்மா... :):):)(y)(y)(y)
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Kalavik thaan blue pearl project la kandupidicha kiragam maa.. antha 25 vayasu scientist thaan valavan naa.. ??

Ivanga Antarctica poi enna panna poraanga.. yen aalunar jeeva va kattupadutha sonnanga.. neenga enna panna pora avanai.. haiyoo enna naa pannureenga.. prabu thaan sirika vakkuraan.. enake baji coffee kudikanum pola iruku.. ???
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Kalavik thaan blue pearl project la kandupidicha kiragam maa.. antha 25 vayasu scientist thaan valavan naa.. ??

Ivanga Antarctica poi enna panna poraanga.. yen aalunar jeeva va kattupadutha sonnanga.. neenga enna panna pora avanai.. haiyoo enna naa pannureenga.. prabu thaan sirika vakkuraan.. enake baji coffee kudikanum pola iruku.. ???
:LOL::D:D:):):):cool:(y)(y):coffee::coffee::coffee::coffee:
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அருமையான பதிவு ஆசிரியரே.....வளவன் தான் அந்த. கௌரவ ஆளுநரா....நீனாக்கு ஏன் இந்த அதிகாரம் தரப்பட்டது....வளவனுக்கும் ஜீவாக்கும் ஏதோ சம்பந்தம்?நந்தினி பிரபு வளவன் ஆண்டார்டிக்காகா?அருமை..அங்கங்கே மைண்ட் வாய்ஸ் மிக அருமை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top