• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Edited episode 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
நால்வரும் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வரும்பொழுது முகிலுடன் பேசிக்கொண்டேவந்த விநாயக் ஒருவர் மேல் தெரியாமல் மோதிவிட “சாரி” என்று கூறி அவர் முகத்தைப் பார்க்க அதிர்ந்தான்.கோபத்தில் முகம் சிவக்க அவனைப் பார்த்து முறைத்தான்.ஆனால் அவனோ கண்டுகொள்ளாமல் விநாயக்கின் பின்னால் வந்து கொண்டிருந்த யாழினியைப் பார்த்துச் சிரித்து “ஹாய் யாழினி!” என்றான்.

யாழினியும் புன்னகைத்து அவனுடன்”ஹாய் யோகேஷ்!எப்டி இருக்க?” என்று பேச விநாயக் கோபத்தின் உச்சிக்குச் சென்றான்.யாழினியன் அருகில் வந்து “யாழினி லேட் ஆச்சு வா” என்றான்.அவள் அவனிடம் விடைபெற்று வர ப்ரியாவிடமும் முகிலிடமும் சொல்லிவிட்டு யாழினியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவன் “உனக்கு எவ்ளோ சொன்னாலும் அறிவில்லையா?அவன்கிட்ட பேசாதனு சொன்ன கேட்க மாட்டிய?” என்று அடிக்குரலில் சீற அவன் அறிவில்லையா என்று கேட்டதில் கோபமடைன்தவள் " ஆமா எனக்கு அறிவு இல்லை..." என்று சொல்ல அவளை முறைத்தவன் பேசாமல் நடந்தான்.

கார் பார்கிங் வர அங்கே அவர்களுக்காக சந்தானகிருஷ்ணன் காத்துக்கொண்டிருந்தார்.”ட்ரிப் நல்லா இருந்துச்சா?” என்று கேட்க இருவரும் மௌனமாக தலை அசைத்தனர்.யாழினியன் வாட்ஸ் சாப் டி.பியில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இருந்ததால் அவர்கள் இருவருக்கும் சண்டை சரி ஆகிவிட்டது என மொத்த குடும்பமும் நினைத்திருக்க இவர்கள் இருவரும் முகத்தை தூக்கி வைத்திருப்பதைப் பார்த்தவரின் மனதில் மெல்லிய சோகம் குடிகொண்டது.

தத்தம் யோசனையிலே அனைவரும் உழன்று கொண்டிருக்க அவர்களைக் கலைத்தது செக்யூரிட்டியின் விசில்.விநாயக் காரை தான் ஓட்டட்ட என்று கேட்க “இல்ல டா வேண்டாம்.நீ ட்யர்டா இருப்ப”என்று கூறி காரை ஸ்டார்ட் செய்தார்.

யாழினி யோக்கேஷை விநாயக் தப்பாக நினைத்ததைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்க விநாயக்கோ யாழினி யோகேஷைப் பார்த்த உடன் மாறியதைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தான்.
யாழினிக்கு அன்று முதல் நாள் செய்முறை வகுப்பு.பெயர் படி இருவர் ஒரு குழுவாக செய்ய வேண்டும்.யாழினியும் யோகேஷும் ஒரு குழுவாக வர ஆசிரியர் அவர்களை பக்கத்தில் உள்ள கேண்டின் சென்று அங்கு அவர்கள் உபயோகிக்கும் தண்ணீரைக் கொண்டு வர சொன்னார்.

அவர்கள் அங்கே சென்று கேட்க அவர்களை அமரச் சொன்ன கேண்டின் ஊழியர் தண்ணீர் எடுக்கச் சென்றார்.இருவரும் அதை வாங்கிக்கொண்டு வகுப்புக்குச் சென்றனர்.

அன்று சாயந்திரம் வகுப்புகள் சீக்கிரமாக முடிய பஸ் ஸ்டாப்பி்ற்கு நடந்து போய்க் கொண்டிருந்த யாழினியை பார்த்த யோகேஷ் அவளுடன் சேர்ந்து பஸ் ஸ்டாப் வரை சென்றான்.”நீ ஹாஸ்டல் தான ஏன் பஸ் ஸ்டாப் வர?”என்று கேட்டதற்கு “கொஞ்சம் வெளிய போக வேண்டிய வேலை இருக்கு..நைட் எட்டு மணிக்குள்ல இருந்தா போதும்...” என்றான்.

விநாயக் அவனுடைய எண்ண அலைகளில் உழன்று கொண்டிருந்தான்.பிரியா தன் முன்னால் அமர்ந்து அவள் தோழியிடம் சத்தமாக பேசிக்கொண்டிருந்தாள் “டி.....ஜூனியர்ஸ்லா செம ஸ்பீட்...1 இயர் சி.எஸ்ல யாழினினு ஒரு பொண்ணு இருக்கால அவ கேண்டின்ல ஒரு பையன் கூட உட்கார்ந்து சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கா....காலேஜ் வந்து பத்து நாள் கூட ஆகல அதுக்குள்ள இப்டி...”.கேட்டுக்கொண்டிருந்த வினாயக்கிற்கு யாழினியின் மேல் கோபம் வர அவள் வகுப்பிற்குச் செல்ல வெளியே வந்தவனை பார்த்த முருகன்”மச்சா உன் வயசு என்ன டா?” என்று கேட்க அவனை மேலும் கீழும் பார்த்தவன் “21” என்றான்.அவனோ “நமக்கு எல்லா 21 வயசு ஆச்சுனு தான் பேரு....இது வரைக்கும் எதாச்சு பொண்ண தனிய வெளிய கூப்பிட்டு போயிருக்கமா?ஆனா இந்த ஜூனியர்ஸ் பாருடா வந்து 1௦ நாள் கூட ஆகல அதுக்குள்ள கிளாஸ கட் அடிச்சுட்டு வெளிய சுத்தற அளவுக்கு வந்துட்டாங்க...” என்று புலம்ப “யாரு டா அது?” என்றான் விநாயக்.”பையன் ஹாஸ்டல் தான் மச்சா...பேரு யோகேஷ்...பொண்ணு பத்தி விசாரிச்சதுக்கு யாழினினு பேர் மட்டும் சொன்னங்க டா” என்றான்.

விநாயக்கிற்கு யாழினி தப்பு பண்ணமாட்டாள் என்பதில் 1௦௦ சதவிதம் நம்பிக்கை இருந்தது...ஆனால் மற்றவர்கள் அவளைப் பற்றி தவறாக பேசியதில் கோபம்...

உடனே வீட்டுக்கு கிளம்பியவன் யாழினியின் அறைக்குச் சென்றான்.அங்கே யாழினி யாருடனோ போனில் பேசிக்கொண்டுடிருந்தாள்.விநாயக்கைப் பார்த்தவுடன் “சரி பாய்” என்று போனை வைத்தாள்.
“யார் கூட பேசிட்டு இருந்த?” என்று கேட்டதற்கு “யோகேஷ்..என் ப்ரண்ட்”என்று அவள் கூறிய பதிலில் கோபமடைந்தவன்”அறிவில்லையா உனக்கு....காலேஜ் போய் இன்னு 1 மாசம் கூட ஆகல அதுக்குள்ள என்ன பாயஸ்ல ப்ரண்ட் வேண்டி இருக்கு? சும்மா பேசுறது பரவால...பட் அவன் கூட கேண்டின் போறது...பஸ் ஸ்டாப் வரைக்கும் நடந்து வரது ரொம்ப பெரிய தப்பு..” என்று கத்த அறிவில்லையா என்ற வார்த்தையில் கோபமடைந்தவள் அவன் தன்னை நம்பாமல் கண்கானிக்கின்றனோ என்ற ஆத்திரத்தில் “நான் அப்படித்தான் பேசுவ ...யூ ஆர் நாரோ மைண்டட்...” என்று கோபத்தில் கூறிவிட்டாள்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட விநாயக் ஒன்றும் பேசாமல் தன் அறைக்குச் சென்று விட்டான்.அமைதியாக அவன் அறைக்குச் சென்றாலும் அவன் மனதில் கடலைப் போல் எண்ண அலைகள் ஓடிக்கொண்டிருந்தன.தன் யாழினி அவனை மாற்றான் ஆக்கிப் பேசினதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

யாழினி தான் என்ன பேசினோம் என்பதை உணராமல் அவன் தன்னை சந்தேகப்பட்டதாக நினைத்து வருந்தினாள்.இவ்வளவு காலமாக தன்னை முழுவதுமாக நம்பிய விநாயக் இப்பொழுது இப்படி பேசியதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.View attachment 2878
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Kaniskavarna டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top