• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Edited episode 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
வீட்டில் எப்பொழுதும் கலகலத்துக் கொண்டிருக்கும் இருவரும் அமைதியாக இருக்க பெரியவர்களுக்குத் தான் கலக்கமாக இருந்தது.இருவரிடமும் கேட்டுப் பார்த்தாலும் ஒன்றுமில்லை என்ற பதில் தவிர வேறு ஒன்றும் வருவதில்லை.கல்லூரியில் இருந்து வந்ததும் தத்தம் அறைக்குச் சென்றால் சாப்பிடுவதற்காக மட்டுமே வெளியே வந்தனர்.

ராதையும் சந்தனலக்ஷ்மியும் தான் மிகவும் வேதனைப்பட்டனர்.ரகுராம் தான் “சின்ன பிள்ளைங்க சண்டை போட்டுக்கறது சகஜம் தான்.இதை எல்லாம் பெருசா எடுத்துக்காதிங்க” என்று இருவரையும் சமாதானப்படுத்தினார்.

யாழினிக்கு விநாயக்கிடம் பேசாமல் இருக்க முடியவில்லை.அவன் தன்னை சந்தேகப்பட்டு விட்டான் என்ற ஒரே காரணத்தால் அவனிடம் இரண்டு நாட்கள் பேசாமல் இருந்தால் அதுவும் அவன் தன்னை சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்.ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் அவன் தன்னை சமாதனப் படுத்தாமல் இருக்க கோபம் மேலும் அதிகமானது.ஆனால் அவள் விநாயக்கிடம் பேசியதை மறந்துவிட்டாள்.

விநாயக்கிற்கு அவள் பேசியதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.அவள் மனதில் இருந்து வந்த வார்த்தைகள் இல்லை கோபத்தினால் வந்த வார்த்தைகள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும் இருந்தாலும் கூட அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அவள் வந்து இவனை சமாதனப்படுத்தாதது இன்னும் கோபத்தை அதிகரிக்க அவளிடம் தானாகச் சென்று பேசக் கூடாது என்ற முடிவை எடுத்துவிட்டான்.

இருவரும் ஒருவரை மற்றவர் வந்து சமாதானம் செய்யட்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க விதியோ அவர்களிடம் விளையாட ஆரம்பித்தது.

யாழினியினால் இரண்டு நாட்களிற்கு மேல் விநாயக்கிடம் பேசாமல் இருக்க முடியவில்லை.ஆனால் பேசுவதற்கு அவள் தன்மானமும் ஒத்துக் கொள்ளவில்லை.

மூன்றாம் நாள் காலையில் இருந்தே அவளால் எதிலும் தன்னுடைய மனதை செலுத்த முடியவில்லை.விநாயக்கிடம் எப்படியாவது பேச வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில் இருந்தது.

அவனிடம் எப்படியாவது பேச்ச வேண்டும் என்று முடிவு எடுத்தவள் அவன் அறைக்குச் சென்றாள்.அவள் உள்ளே வந்ததைப் பார்த்தும் பார்க்காதது போல் வேலை செய்து கொண்டிருந்தவனைப் பார்த்து கடுப்பானவள் “இக்கும்” என்று தொண்டையை கனைக்க அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஒன்றும் பேசாமல் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தான்.

அவன் தன்னை கண்டுகொள்ளாததால் தன் தன்மானத்தை விட்டுக் கொடுத்து “எனக்கு உன்னோட மேத் புக் வேணும்”என்று கேட்க அவன் ஒன்றும் பேசாமல் தன் வேலையைத் தொடர்ந்தான்.அங்கிருந்து சென்று விடலாம் என்று ஒரு மனம் சொன்னாலும் அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்ற ஆசையில் அங்கிருந்து அவள் நகரவில்லை.மீண்டும் அவனிடம்”உங்கிட்ட தான் பேசற எனக்கு உன்னோட மேத் புக் வேணும்” என்று கேட்க அவன் மேஜையின் மேல் இருந்த புக்கை எடுத்து அவளிடம் கொடுத்தான்.அவளை நிமிர்ந்தும் பார்கவில்லை.

இதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காமல் தன் அறைக்குச் சென்றவலால் தன் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.இவ்வளவு வருடங்களில் விநாயக்கிடம் அவள் எத்தனையோ முறை சண்டைப் போட்டிருக்கிறாள் ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் பேசாமல் இருந்ததில்லை.எப்பொழுதும் யாழினியின் மேல் தப்பு இருந்தால் கூட விநாயக் தான் வந்து சமாதனப்படுத்துவான்.ஆனால் இப்பொழுது அவளாக பேசியும் கூட அவன் தன்னிடம் பேசவில்லை ஏன் முகத்தைக் கூட பார்க்கவில்லை என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அவள் அவனிடம் என்ன பேசினால் என்பதை மறந்துவிட்டாள்.படுக்கையில் விழுந்தவள் அப்படியே அழுது கரைந்தாள்.

விநாயக்கிற்கு அவள் தன்னை மூன்றாம் மனிதனாக நினைத்து பேசிவிட்டதால் எழுந்த மனக்குமுறலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.அவள் வந்து பேசும்பொழுது எங்கே அவள் முகத்தைப் பார்த்தால் பேசிவிடுவோமோ என்ற பயத்தில் தான் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை.அவன் மனமோ அவளிடம் பேசச் சொல்லிக் கெஞ்ச மூளையோ அவளிடம் பேசக்கூடாது என்று கட்டளையிட்டது.

அடுத்த நாள் காலை கண்விழித்த யாழினிக்கு தலை மிகவும் பாரமாக இருந்தது.விநாயக்கிடம் சென்று பேசு என்று சொன்ன மனதை அடக்க முடியாமல் ரெப்ரெஷ் செய்துவிட்டு அவன் அறைக்குச் சென்றால்.அவன் யாருடனோ போனில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.இவளைப் பார்த்தவுடன் போனை கட் செய்தவன் ஒன்றும் பேசாமல் தன் அலமாரியில் எதையோ தேடிக்கொண்டிருந்தான்.ஏற்கனவே தலை வலியில் இருந்தவள் அவன் மீண்டும் தன் முகம் பார்க்காமல் இருந்ததால் கோபம் அடைந்தவள் அவன் பின்னால் இருந்து டமார் என்று முதுகில் அடித்தாள்.

அவள் அடித்ததில் எங்கிருந்துதான் அவனுக்கு அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை சட்டென்று திரும்பி அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.பிறந்ததிலிருந்தே யாரிடமும் அடி வாங்காத யாழினிக்கு அவன் தன்னை அடித்துவிட்டான் என்பதை உணர்ந்துகொள்ள இரு நிமிடம் பிடித்தது.

கன்னத்தில் கையை வைத்தவள் அழுது கொண்டே தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.எப்பொழுதும் யாழினி விநாயக்கை விளையாட்டாக அடிப்பாள் தான்.ஆனால் அவன் இப்படி இது நாள் வரை நடந்துகொண்டதே இல்லை.அவன் ஏன் இப்படி நடந்து கொண்டான் என்பதை யோசித்திருந்தால் கூட யாழினிக்கு தான் பேசியது நியாபகம் வந்திருக்கலாம்.ஆனால் அவளோ அதைப் பற்றி யோசிக்காமல் அவன் தன்னை அடித்துவிட்டான் என்பதையே யோசித்துக்கொண்டிருந்தாள்.

விநாயக்கிற்கு தான் செய்தது தப்பு என்று தோன்றினாலும் அவளை சமாதானப்படுத்த முடியவில்லை.அவள் தன்னிடம் அப்படி பேசியது மட்டுமே அவன் கருத்தில் நின்றது.

காலை எட்டு மணி ஆகியும் யாழினி கீழே வராததால் அவள் அறைக்குச் சென்ற ராதை அவளை எழுப்ப அவளோ சுயநினைவின்றி இருந்தாள்.பயந்து போய் அவர் கத்த கீழே இருந்த அனைவரும் மேலே ஓடி வந்தனர்.உடனே மருத்துவரை அழைக்க அவர் வந்து யாழினியைப் பரிசோதித்துவிட்டு “அவங்களுக்கு ஒன்றுமில்லை...ரொம்ப ஸ்ட்ரெஸ் அதனால தான் மயங்கிட்டாங்க...ஒரு ஒன் வீக் எந்த டென்ஷனும் இல்லாம ரெஸ்ட் எடுத்தா சரியா போயிரும்” என்றார்.

விநாயக்கிற்கு தான் அடித்தால்தான் அவளுக்கு இப்படி ஆகிவிட்டது என்ற குற்ற உணர்ச்சி தலை தூக்கியது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top