• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Edited episode 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
யாழினிக்கு இப்பொழுதும் கூட விநாயக் அவளிடம் வந்து பேசவில்லையே என்ற வருத்தம்.தன் மேல் தவறு இருந்தால் கூட உடம்பு சரி இல்லாமல் இருக்கும் இந்நிலையில் அவன் வந்து இவளிடம் பேசி இருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள்.

அவர்கள் இருவரும் பிறந்ததில் இருந்தே சண்டை போட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.ஆனால் மூன்று நாட்கள் பேசாமல் இருந்தது என்பது இதுவே முதல்முறை.சண்டை போட்டால் அதிகபட்சமாக ஒரு நாள் பேசாமல் இருப்பார்கள்.அடுத்த நாளே விநாயக் வந்து அவளிடம் வம்பு செய்து அவளைப் பேச வைத்துவிடுவான்.

அதை எல்லாம் நினைத்த யாழினிக்கு கண்ணில் குளம் கட்டியது.இனி அவனாக வந்து பேசும் வரை அவனிடம் பேசக்கூடாது என முடிவு எடுத்தாள்.

விநாயக்கிற்கோ யாழினிக்கு தன்னால் தான் இப்படி ஆகி விட்டது என்ற குற்ற உணர்ச்சி.இப்பொழுது போய் அவன் அவளிடம் பேசினால் கூட உடம்பு சரி இல்லாததால் தான் தன்னிடம் அவன் பேசுகிறான் என்று தப்பாக நினைத்துக் கொள்வாளோ என நினைத்து பேசாமல் இருந்தான்.

யாழினியும் அவனிடம் பேசக் கூடாது என்று முடிவு எடுத்து விட்டாலே தவிர அவளால் அந்த முடிவை செயல்படுத்த முடியவில்லை.விநாயக்கைப் பார்த்தவுடன் அவனிடம் சென்று பேச வேண்டும் என்று எழுந்த ஆவலை மிகவும் சிரமப்பட்டு அடக்கினாள்.விநாயக் சாப்பிடும் பொழுது சாப்பிடாமல் அவனிக்கு முன்னாடியோ அல்லது பின்னாடியோ சாப்பிடுவது,அவன் ஹாலில் இருந்தால் ரூமிற்குள் இருப்பது,அவள் இருக்கும் இடத்திற்கு அவன் வந்தால் மற்றவர்கள் அறியாதவாறு தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி அவ்விடத்தை விட்டுச் செல்வது என அவனை தவிர்த்தாள்.

இவர்கள் இருவரின் சண்டையை கண்டும் காணாததைப் போல் இருந்தனர் அவ்வீட்டுப் பெரியோர்.அவர்களே சமாதனம் ஆகட்டும் என்று விட்டுவிட்டனர்.

விநாயக் யாழினிக்கு பெரிய சர்ப்ரைஸ் குடுக்க நினைத்தான்.அவளின் பிறந்தநாள் ஒரு வாரம் கழித்து வரவிருப்பதால் அன்று அதைக் குடுக்கலாம் என்று நினைத்து இருந்தான்.

வழக்கம்போல் யாழினி காலேஜ் செல்ல யோகேஷ் அவளிடம் பேச முயற்சி செய்தான்.ஏற்கனவே அவனால் தான் விநாயக்கிடம் பிரச்சனை என்பதால் அவனிடம் பேசுவதைத் தவிர்த்தால் யாழினி.

அவனாக வந்து பேசினாலும் ஒரு இரு வார்த்தைகளுக்கு மேல் பேசுவதில்லை.அவன் அவளிடம் வாட்ஸ் ஆப்பிலும் பேச முயற்சி செய்தான்.ஆனால் இவளோ அதற்கும் ரீப்ளை செய்யவில்லை.

விநாயக் காலேஜில் யோகேஷைப் பற்றி விசாரிக்க அவனைப் பற்றி நல்ல விஷயங்கள் எதுவும் இவன் காதுக்கு வரவில்லை.அவன் பெரிய செல்வந்தர் வீட்டு வாரிசு என்றும் எல்லா கெட்டப் பழக்கங்களும் இருக்கின்றது என்றும் தான் தகவல் வந்தது.

யாழினி அவனை கண்டுகொள்ளாமல் இருக்கிறாள் என்பதைக் கவிதாவின் மூலம் அறிந்த விநாயக் நிம்மதி பெருமூச்சுவிட்டான்.யாழினி எப்பொழுதும் இப்படித்தான் விநாயக்குடன் எல்லா விசயத்திற்கும் சண்டை போட்டாலும் கூட அவன் கூறுவதை மீறமாட்டாள்.

ப்ரியாவிற்கு விநாயக் அவளைத் திட்டியதில் இருந்து அவன் மேல் கோபம்.இருந்தாலும் எப்படியாவது அவனைத் தன்னைக் காதலிக்கச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.
அவனிடம் நேரில் பேச முயன்று தோற்றால்.விநாயக்கிற்கு யாழினியிடம் அவள் நடந்து கொண்ட முறை சுத்தமாக புடிக்கவில்லை.வாட்ஸ் ஆப்பில் அவனுக்கு சாரி அனுப்ப அவளுக்கு “இட்ஸ் ஓகே!நோ இசுஸ்” என்று அனுப்பினான்.அவன் ரீப்ளை செய்யமாட்டான் என்று நினைத்தவளுக்கு அவன் ரீப்ளை செய்தவுடன் கால் தரையில் படவில்லை.அவன் அனுப்பிய மெசேஜிற்கு “ஹ்ம்ம்” என ரீப்ளை செய்தால்.

அவன் மெசேஜைப் பார்த்துவிட்டதற்கு அடையாளமாக ப்ளூ டிக் வர அவனிடம் இருந்து எந்த பதிலும் வராததால் மீண்டும் அவளே “என்ன பண்ணற”என்று மெசேஜ் அனுப்ப அவளுக்கு ”டிவி” என்று ரீப்ளை செய்தான்.அப்படியே அவர்கள் உரையாடல் நீண்டது.

யாழினி ராதையிடம் சென்று பிறந்தநாள் அன்று போட புது வாட்ச் வேண்டும் என்று கேட்க அவர் தனக்கு வேலை இருப்பதால் விநாயக்கை அழைத்து அவளைக் கடைக்கு அழைத்துப் போகச் சொன்னார்.ஆனால் அவனுக்கு வேலை இருப்பதாக கூறி மறுத்துவிட யாழினி மனம் உடைந்து போவாள்.இவ்வளவு நாட்கள் வெளியே தனியாக செல்ல நேர்ந்தால் எப்பொழுதும் விநாயக் உடன் வருவான்.எப்பொழுது அவன் கூறியதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவன் அப்படி என்ன வேலை செய்கிறான் என்று அவன் அறியாதவாறு அவன் அறைக்குள் எட்டிப் பார்த்தபொழுது அவள் கண்டது அவன் சிரித்துக்கொண்டே மொபைலை நோன்டிக்கொண்டிருந்ததைத் தான்.

அதற்குள் சந்தானலட்சுமி அவனைக் அழைக்க மொபைலை ரூமில் வைத்துவிட்டு கீழே சென்றான்.அவன் சென்றவுடன் அவன் அறைக்குச் சென்று மொபைலைத் திறந்து பார்த்தால் ப்ரியாவிடம் பேசிய சேட் கண்ணில் பட்டது.

யாழினிக்கு சொல்ல முடியாத உணர்வுகள் மனதில் குடிகொண்டது.யாழினியைப் பொறுத்த வரை விநாயக் தனக்கு தான் முன்னுரிமை குடுக்க வேண்டும் என்று நினைப்பவள்.ஆனால் இன்று தன்னை வெளியே அழைத்துச் செல்லாமல் இன்னொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

விநாயக்கிற்கு யாழினியை வெளியே அழைத்துச் சென்றால் அவளிடம் தன்னையும் அறியாமல் பேசி விடுவோமோ என்ற பயம்.அவளிடம் பிறந்தநாள் அன்று தான் பேசவேண்டும் என்று முடிவு எடுத்திருந்தான்.

யாழினி அடுத்த நாள் கல்லூரியில் நுழையும் பொழுது கண்ட காட்சி அவளை கதி கலங்கச் செய்தது.விநாயக் பைக் ஒட்டிக் கொண்டிருக்க பின்னால் பிரியா அமர்ந்து கொண்டிருந்தாள்.

யாழினி விநாயக்கிடம் நிறைய முறை கெஞ்சி இருக்கிறாள் அவளை அவனுடன் அழைத்துப் போகச் சொல்லி ஆனால் அவனோ முடியவே முடியாது என்று மறுத்து விட்டிருந்தான்.ஆனால் இன்று ப்ரியாவை பைக்கில் பார்த்தவுடன் என்னவென்ற சொல்ல முடியாத துக்கம் அவள் தொண்டையை அடைத்தது.
கல்லூரிக்குச் செல்லாமல் அப்படியே வீடு திரும்பி விட்டாள்.வீட்டில் தலை வலித்ததால் திரும்பி வந்துவிட்டேன் என்று பொய் கூறி தன் அறைக்குச் சென்றாள்.

கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்தவள் அப்படியே கண் அயர்ந்து விட்டாள்.யாரோ தன்னை தட்டி எழுப்பவும் எழுந்தாள்.சந்தனாலக்ஷ்மி தான் சாப்பிட எழுப்பினார்.பேருக்கு இரண்டு வாய் சாப்பிட்டவள் போதும் என்று கூறி எழுந்து விட்டாள்.

அறைக்குச் சென்று அவளும் விநாயக்கும் இருந்த புகைப்படங்களை லேப் டாப்பில் பார்த்துக்கொண்டிருந்தாள்.புகைப்படங்களை பார்க்க பார்க்க அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வலிந்து கொண்டே இருந்தது.

அந்த கண்ணீருக்கான காரணம் அவளுக்குத் தெரியவில்லை.கொஞ்சம் அமைதியாக உட்கார்ந்து யோசித்திருந்தால் தெரிந்திருக்கும் அவள் கண்ணீருக்கான காரணம் என்னவென்று?ஆனால் அவளோ கோபத்தில் இருந்ததால் அவள் மனம் அவளை எதைப் பற்றியும் யோசிக்க விடவில்லை.

இரவு உணவுக்கு ராதை அழைக்க வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.அடுத்த நாள் அவளது பிறந்தநாள்.ஒவ்வொரு பிறந்தநாளிற்கும் விநாயக் அவளுக்கு எதாவது சர்ப்ரைஸ் கொடுப்பான்.ஆனால் இந்த பிறந்தநாளிற்கு அவன் அவளை வாழ்த்துவனா என்றே யாழினிக்கு சந்தேகமாக இருந்தது.

தன்னுடைய முந்தைய பிறந்தநாளிற்கு அவன் குடுத்த டைடன் ராகா வாட்சையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.அப்படியே உறங்கியும் விட்டாள்.

இரவு 11.55க்கு அவள் அறைக்கு வந்த விநாயக் அவள் வாட்சை பிடித்து தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே வாட்சை எடுத்து டேபிளில் வைத்தான்.11.59 மணி வரை குழந்தையைப் போல் தூங்கும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.சரியாக 11.59ற்கு அவளை எழுப்பினான்.

மெதுவாக கண்ணைத் திறந்தவள் அவனைப் பார்த்ததும் அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.அவள் கொடுத்த அடியை வாங்கிக் கொண்டவன் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அவள் இரு கைகளையும் ஒரு கையால் பிடித்து “ஹாப்பி பர்த்டே யாழி!” என்று கூற அவனை முறைத்தவள் “ஏன்டா 1௦ டேஸ்சா என்கிட்ட பேசல?நீ பேசாம இருந்தது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?” என்று கூற அவள் கண்ணில் இருந்து இரு சொட்டு கண்ணீர் வந்தது.”லூசு இதுக்கு எல்லாம் போய் யாராச்சு அழுவாங்களா?” என்று அவள் கண்ணீரைத் துடைத்தவன் “உனக்கு ஒரு சர்ப்ரைஸ்” என்று அவள் கண்ணை மூடி அழைத்துச் சென்றான்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Kaniskavarna டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top