• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Edited episode 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
யாழினியும் விநாயக்கும் ஆங்கில படம் ஒன்று பார்த்துக்கொண்டிருக்க யாழினியின் மொபைலில் மெசேஜ் வந்தது.வந்த மெசேஜிற்கு ரிப்ளை செய்தவள் படம் பார்க்க மீண்டும் மெசேஜ் வந்தது.அவள் மெசேஜிற்கு ரிப்ளை செய்து கொண்டே படம் பார்த்தாள்.

இதைப் பார்த்த விநாயக் மொபைலை வாங்கி யார் என்று பார்க்க அது யோகேஷ் என்று தெரிந்தது.”ஏன் டி....உன்கிட்ட எத்தன டைம் சொல்லிருக்க அவன் கிட்ட பேசாதனு..திரும்ப எதுக்கு டி அவனுக்கு மெசேஜ் பண்ணற?” என்று திட்ட “அவன் தான் பிரஸ்ட் மெசேஜ் பண்ணான்...ஆனா நீ கூட தான் ப்ரியாக்கு மெசேஜ் பண்ணற...” என்று சொல்ல “நான் எப்ப டி ப்ரியாக்கு மெசேஜ் பண்ண?” என்று கேட்க “என் பர்த்டேக்கு முன்னாடி நாள்...அம்மா உன்ன கடைக்கு என்ன கூடிட்டு போக சொன்னதுக்கு மாட்டனு சொல்லிட்டு அவளுக்கு மெசேஜ் பண்ணிட்டு இருந்தில?” என்று கோபமாக கேட்க “லூசு..அன்னைக்கு தான் பிரஸ்ட் டைம் அவ எனக்கு மெசேஜ் பண்ணதே...போன வர்ஷம் நான் வாங்கி குடுத்த வாட்ச சேஞ்ச் பண்ண என்னவே கூப்பிடுவ..நான் வரனுமா?” என்று கேட்க அவன் தன்னை கண்டுகொண்டதில் நாக்கை கடித்துக்கொண்டவள் “அதுக்காக ஆச்சு நீ சண்ட போட நீ என்கிட்ட பேசுவனு நினைச்சுதான் அப்படி பண்ண..” என்றாள்.


6 மாதங்களுக்குப் பிறகு.......



விநாயக் எம்.எஸ் படிக்க அன்று ஜெர்மனி செல்கின்றான்.2 வருடப் படிப்பு.விநாயக்கை இனி 2 வருடம் கழித்துத் தான் பார்க்க முடியும் என்ற சோகத்தில் அனைவரும் இருந்தனர்.

யாழினிக்கு அழுது அழுது காய்சல் வந்துவிட்டது.அவன் வீட்டைவிட்டு கிளம்பும் முன்னர் அவனை கட்டிப் பிடித்து அழுதுவிட்டாள்.குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் 1௦௦8 அறிவுரை சொல்லி அவனை வழி அனுப்பி வைத்தனர்.

விநாயக் ஜெர்மனி சென்றதும் அவனுக்கு புது இடம்,புது நண்பர்கள் என்று நாட்கள் நகர கஷ்டமாக இருந்தது.மேலும் இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இருக்கிற நேர வித்தியாசத்தில் அவனால் குடும்பத்தினருடன் அதிக நேரம் பேசமுடியவில்லை.

அவனுக்கு படிப்பு ஜெர்மன் மொழியில் இருந்ததால் படிக்க வேறு சிரமமாக இருந்தது.ப்ரியாவும் ஜெர்மனியில் தான் இருந்தாள்.அவள் அம்மா அங்கு வேலை விஷயமாக சென்றதால் அவளும் அவர்களுடன் சென்றுவிட்டாள்.

யாழினிக்கு விநாயக் ஜெர்மனி சென்றவுடன் தன்னிடம் ஒழுங்காக பேசுவதில்லை என்ற குறை இருந்தது.அவனும் நேரம் இருக்கும் பொழுது இவளுடன் பேசுவான்.ஆனால் உண்மையில் அவனுக்கு நேரம் பத்தவில்லை.எப்பொழுதும் விநாயகுடன் இருந்த யாழினிக்கு அவன் இல்லாதது ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது.

அன்று பிரியா விநயாக்கை அவள் வற்புறுத்தி அழைக்கவே அவன் அவள் வீட்டிற்கு சென்று விட்டான்.அவள் அம்மாவுடன்பேசி சிரித்து உண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

விநாயக் இல்லாமல் போர் அடிக்க யாழினி பேஸ் புக் பார்த்துக்கொண்டிருந்தாள்.அதில் பிரியா அன்று விநாயகுடன் எடுத்த புகைப்படத்தைப் போட்டிருந்தாள்.

அதைப் பார்த்த நொடி அவள் கண்கள் கலங்கி விட்டன.விநாயக் அங்கு ப்ரியாவைப் பார்த்ததை அவளிடம் சொல்லவில்லை.அவனும் வேண்டும் என்று சொல்லாமல் இல்லை.அவனுக்கு யாழினியிடம் பேச வேறு நிறைய விஷயங்கள் இருந்ததால் அவளிடம் சொல்ல இது முக்கியமானதாக படவில்லை.

அப்பொழுது சரியாக விநாயக் போன் செய்யவும் அவனிடம் சண்டை போட ஆரம்பித்துவிட்டாள்.அவன் அவளிடம் பேசவேண்டும் என்று ஆசையாக குப்பிட்டு இவள் சண்டை போட்டதால் கோபத்தில் போனைக் கட் செய்தான்.அதன் பின் இவளும் அவனுக்கு அழைக்கவில்லை அவனும் இவளுக்கு அழைக்கவில்லை.

யாழினி விநாயக் ஜெர்மனி சென்றவுடன் தான் அவன் மேல் அவள் வைத்திருந்த அளவு கடந்த காதலை உணர்ந்தாள்.விநாயக்கிற்கு அவள் மேல் காதல் இருந்தது தான் ஆனால் அவன் அவள் படிப்பு முடியும் வரை அவளிடம் சொல்ல வேண்டாம் என்று நினைத்திருந்தான்.

யாழினிக்கு அவன் அவளைத் தவிர வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து போட்டோ எடுத்தது புடிக்கவில்லை.மேலும் அவன் அவளிடம் நிறையே நேரம் பேசாதது வேறு அவளுக்கு கோபம்.அதனால் தான் அவர்களுக்குள் அவ்வளவு பெரிய சண்டை.

சண்டை போட்டு ஒரு மாதம் ஆகியும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.அவன் பேசட்டும் என்று அவளும்...அவள் பேசட்டும் என்று இவனும் பேசாமல் இருந்துவிட்டனர்.

அவன் மனதில் ஒரு பெரிய வலி...யாழினி தன்னை நம்பவில்லை என்று...ஆனால் உண்மை என்ன வென்றால் பெண்களுக்கு தனக்கு உறுமையானவர் மற்றவரிடம் நெருங்கி பழகினால் எளிதாக அதை ஏற்றுக் கொள்ள முடியாது...அதை யாழினியாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவளாக தன்னை உணரும் வரை அவளிடம் பேசக்கூடாது என்று நினைத்திருந்தான். ஏனேனில் இனி பின்னால் வரும் வாழ்க்கையில் அவள் எதற்காகவும் தன்னையும் தன்னுடைய காதலையும் சந்தேகப் படக்கூடாது என்று நினைத்தான்.அதனால் அவளின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்தவில்லை.


யாழினி சுக்கு நூறாக உடைந்துவிட்டாள்.தன்னுடைய பிறந்த நாளிற்கு கூட வாழ்த்ததவனிடம் இனி பேச கூடாது என முடிவு செய்தவள் அவனிடம் பேசவில்லை.தன்னை முழுவதுமாக படிப்பில் மூழ்கடித்து விட்டாள்.

2 வருடம் கழித்து.....

அன்று விநாயக் இந்தியாவிற்கு வருகின்ற நாள்.அனைவரும் அவனை வரவேற்க ஆவலாக ஏர்போர்ட் சென்றனர்.யாழினிக்கு என்ன தான் அவன் மேல் கோபம் இருந்தாலும் அவனைக் காண வேண்டும் என்ற ஆவலில் ஏர்போர்ட் சென்றாள்.அங்கு கண்ட காட்சியில் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

விநாயக்குடன் ப்ரியாவும் வந்து கொண்டிருந்தாள்.அனைவரும் கேள்வியாக அவனை நோக்க “இவளோட அப்பா ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க...அவங்க அம்மாவும் அங்கே ரொம்ப டிப்ரெஸ்டா இருக்காங்க.....அதனால தான் இங்க கூடிட்டு வந்த...” என்றான்.

ப்ரியாவையும் அழைத்துச் சென்றவர்கள் அவளை அவர்களுடன் தங்க வைத்தனர்.யாழினி மறந்தும் விநாயகின் பக்கம் திரும்பவில்லை.அவனும் அவளிடம் பேச முயற்சிக்க வில்லை.

ஒரு மாதம் கழித்து ப்ரியாவிற்கு ஹாஸ்டல் கிடைத்து விட அவளை அங்கு விட்டனர்.பிரியா சென்றதும் அவனின் அறைக்குச் சென்றவள் அவனிடம் பேச முயன்றாள்.. ஆனால் அவன் அவளிடம் பேச வில்லை.

"சாரி டா...நீ அவ கூட பிரின்ட்டா தான் பழகுணனு தெரியாம சண்டை போட்டுட்ட.
இனி இப்படி பண்ண மாட்ட" என்று சொல்ல அவள் மேல் இருந்த கோபத்தில்" நீ எப்போதும் என்ன நம்ப மாட்டா ...நம்பவும் வேண்டாம்...இனி என்ன நடந்தாலும் என்னால உன்கூட பழைய மாரி இருக்க முடியாது...சோ .." என்று கதவை காண்பித்தான்.

யாழினி அழுது கொண்டே தன் அறைக்குச் சென்றாள். தப்பு தன் மேல் தான் என்பதை உணர்ந்த யாழினி அவனை சமாதானம் பண்ண எவ்வளவோ முயற்சி செய்தால்.ஆனால் அவன் அவளிடம் பேசவே இல்லை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top