• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Edited episode 17 - final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
விநாயகிற்கு யாழினி இப்பொழுது மிகவும் கோபமாக இருக்கிறாள் என்பது நன்றாக புரிந்தது.அவன் இவ்வளவு நாட்கள் அவளிடம் பேசாமல் இருந்தது அவள் அவனின் காதலை உணர்ந்து தன்னை சந்தேகப் படுவதை முற்றிலுமாக விட வேண்டும் என்பதற்க்கதான்.ஆனால் யாழினி அவனை சந்தேகப் படவில்லை அவளின் போசசிவ்நஸ் தான் அவளை சண்டை போட வைத்தது என்பதை அவன் உணரவில்லை.

ஆனால் இன்று யாழினி எந்தவித உணர்சிகளும் காட்டது அவனிடம் பேசியது அவனுக்கு என்னவோ செய்தது.அவளை மிகவும் தான் காயப்படுத்தி விட்டதை புரிந்து கொண்டான்.இனி அவளை காயப்படுத்த கூடாது என்று முடிவு செய்தவன் அவன் தாயிடம்”ம்மா..எனக்கும் யாழினிக்கும் முன்னாடி கொஞ்சம் சண்டை...அதனால்தான் நான் அவள கல்யாணம் பண்ணிக்க மாட்டனு சொன்ன...பட் தப்பு என்மேல தான் மா...அவள ரொம்ப கஷ்டப்படுத்திட்ட...” என்று சொல்ல சிரித்தவர் “அப்ப சீக்கிரம் கல்யாண சாப்பாடு போட்டறலாம் என்றார்.

சந்தனலக்ஷ்மி சென்றும் அனைவரிடமும் சொல்ல அனைவரும் மிகவும், சந்தோசப்பட்டனர்.யாழினியை ராதை அழைக்க லிவிங் ரூமிற்கு வந்தாள்.அனைவரும் சிரித்த முகமாய் இருக்க “என்ன” என்று கேட்டால்.”கல்யாணத்துக்கு உனக்கு எவ்வளவு பத்திரிக்கை உன் பிரிண்ட்ஸ்கு குடுக்க வேணும்?” என்று கேட்டதற்கு “யார் கல்யாணம்?” என்று கேட்க முறைத்த ராதை “உன்னோட கல்யாணத்துக்கு தான்”.

“என்னது என்னோட கல்யாணமா?” என்றவள் அதிர்ந்து வாயை பிளக்க விநாயக்கோ “ஆமா செல்லம்...நம்மளோட கல்யாணம் தான்” என்று விநாயக் சிரிதிக்கொண்டே சொல்ல “யாரா கேட்டு முடிவு பண்ணிங்க?நான் இவன கல்யாணம் பண்ணிக்க மாட்ட” என்று சொல்ல “வாயை மூடுடி” என்று ராதை சொல்ல விநாயக்கோ “அதை எங்களுக்கு ஒரு சின்ன சண்டை...பேசி முடுச்சுட்டு வந்தர்றோம் என்றவன் அவளை இழுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.

“நீ என்ன முழுசா நம்பணும்னு தான் டி நான் உங்கிட்ட கோபமா இருக்க மாரி நடிச்ச...சத்தியமா உன்ன கஷ்டப் படுத்தனும்னு செய்யல...பட் பிரியா முன்னாடி உன்ன திட்டுனது ரொம்ப தப்பு தான்...ஒதுக்குற...எனக்கு அப்ப இருந்த டென்ஷன்ல என்ன பண்ணரனு தெரியாம திட்டிட்ட...சாரி டி” என்று அவளிடம் பக்குவமாக எடுத்துச் சொன்னான்.

ஆனால் அவளோ அவள் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்பதைப் போல் “எனக்கு உண்மையா உங்க மேல லவ் இல்ல...நீங்க என்ன திட்டுனதுக்கு நான் இப்படி சொல்லல...பட் உண்மையாவே லவ் இல்ல” என்று சொல்ல அவனோ சிரித்தான்.அவள் கண்களைப் பார்த்து “உண்மையா வா?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்க அவளால் அவன் கண்களை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை.அவள் ஒன்றும் சொல்லாமல் அவள் அறைக்குச் செல்ல முயல அவள் கையைப் பிடித்து இழுத்தவன்” சொல்லிடு போ..” என்றான்.”எனக்கு உன்ன புடிகுல...புடிகுல...புடிகுல..போதுமா..” என்று கத்த “உனக்கு புடுச்சாலும் புடிகளைனாலும் நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும்” என்றான்.

“நடக்காது” என்று அவள் சொல்லி முடுப்பதற்குள் அவள் அதரங்களை தன் அதரங்களுக்குள் அடக்கினான்.அதற்கு மேல் யாழினியால் விநாயக்கின் மேல் கோபத்தை காட்ட முடியவில்லை.அவள் முச்சுக்காக திணற அவளை விட்டான்.அவன் முகம் பார்க்க வெட்கப் பட்டவள் அப்படியே தன் அறைக்கு ஓடி விட்டாள்.

அன்று விநாயக் யாழினியை தன்னவளாக மாற்றிக் கொள்ளும் நாள்...அவர்களின் திருமண நாள்..2 முடுச்சை விநாயக் போட 3 ஆம் முடுச்சை அபி போட்டாள்.விநாயக் தாலி கட்ட யாழினியின் கண்ணில் ஆனந்தக்கண்ணீர் .

3 வருடங்களுக்கு பிறகு....

“என் செல்லம்ல..தங்கமல ஒரு வாய் சாப்புடு குட்டி” என்று அத்வந்தின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தாள் யாழினி.ஆனால் அவனோ அவள் கைக்குச் சிக்காமல் அவன் தந்தையிடம் ஓடினான்.”சூப்பர் டா செல்லம்...உங்க அம்மா என்ன படுத்துனதுக்கு எல்லாம் சேர்த்தி நீ அவள படுத்துற “ என்று அவனைத் தூக்கி முத்தமிட்டான்.

விநாயக்கைப் பார்த்து முறைத்தவள் “என் பட்டு சாப்புடு செல்லம்” என்று கொஞ்சி கெஞ்சி ஊட்ட அவளிடம் சாப்பிடாமல் அடம் பிடித்தான்.விநாயக் ஊட்ட கொஞ்சம் சாப்பிட்டான். “எங்க அம்மாவ நான் படுத்துனத விட இவன் என்ன படுத்துறான்” என்று சொல்ல சிரித்த விநாயக் “:வேணும்னா என்ன மாரி சமத்தா ஒரு பொண்ணு ரெடி பண்ணிருலமா?” என்று கண்ணடித்துக் கேட்க “ச்சி..போ டா” என்று ஓடினாள்.
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
Thanks sis...Thanks for ur constant support...A big thanks.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Kaniskavarna டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top