• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Edited episode 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
தன் மெயிலை செக் பண்ணிக்கொண்டிருந்த விநாயக்கின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.யாழினி,ப்ரீயா,முகிலை தன் அறைக்கு அழைத்தான்.

அவர்கள் உள்ளே வந்தவுடன் "கங்ராட்ஸ் காய்ஸ்!நம்ம ப்ராஜெக்ட் எஸ்.கே எண்டர்ப்ரைஸஸ்ல செலக்ட் ஆயிருச்சு" என்று கூற அவர்கள் "சூப்பர் சார்" என்றனர்."நம்ம அடுத்த வாரம் ப்ராஜெக்ட்காக யூ.எஸ் போகணும்.போக வேண்டிய ஏற்பாடுகளை கம்பெனி பாத்துக்கும்.நீங்க ரெடி ஆயிருங்க"என்றான்.அவர்கள் "ஓகே சார்" என்றவுடன் தலையசைத்து அவர்கள் வெளியே போக அனுமதி கொடுத்தான்.

ப்ரீயாவிற்கு விநாயக்குடன் அங்கே செல்வது சந்தோஷமாக இருந்தாலும் யாழினி வருவது கடுப்பாக இருந்தது.இந்த டிரிப்பில் இருவரையும் பிரித்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.ஆனால் விதியோ நீ நினைத்தது எல்லாம் நடந்துவிட்டால் நான் எதற்கு இருக்கிறேன் என்று அவளுடன் விளையாட ஆரம்பித்தது.

யூ.எஸ் செல்லவதற்கு முந்தைய நாள் இரவு விநாயக்கின் அறைக்கு வந்த சந்தானலட்சுமி தயக்கத்துடன்"விநா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.ஆனா நீ என்ன தப்பா நினைக்கக்கூடாது" என்று கூறினார்." அவர்கள் கையைப் பிடித்தவன் "நீங்க இப்ப என்ன சொல்லப்போறிங்கனு எனக்கு தெரியும்.யாழினிக்கு குளிருன ஒத்துக்காது.அவளால தனியா சமாளிக்க முடியாது.அவளுக்கும் உனக்கும் என்ன சண்டையா இருந்தாலும் அவள கொஞ்சம் பாத்துக்கொனு சொல்லப்போறிங்க" என்று கண்சிமிட்டிக் கூற அந்தத் தாயின் கண்ணில் தண்ணீர் சுரந்தது.

அவர் கண்ணீரைத் துடைத்துவிட்டவன் " அழாதீங்க அத்தை.நான் அவள பாத்துக்காம இருப்பன?எனக்கும் அவளுக்கும் சண்டை தான்..அதுக்காக அவள பாதுக்கா ம இருப்பனா?நீங்க கவலை படாம போய் தூங்குங்க"என்றான்.

சந்தானலட்சுமிக்கோ அவள் மேல் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறவன் ஏன் அவனிடம் பேசாமல் இருக்கிறான் என்பது புரியவில்லை.நிச்சயம் யாழினியின் மேல் தான் தப்பு இருக்கும் என்று நினைத்தார்.இருவரையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என நினைத்தார்.

ஏர்பொர்டில் யாழினிக்கு ஆயிரத்தெட்டு அறிவுரைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர் சந்தானலட்சுமியும் ராதையும்.அவர்கள் கூறிய அறிவுரைகளுக்கெல்லாம் ம் கொட்டுக் கொண்டிருந்த யாழினி ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் "ம்மா...அத்தை...போதும் ப்ளீஸ் நா ஒன்னு சின்ன புள்ளையில்ல....ஐ யம் 24....ஐ கேன் மேனேஜ் மைசேல்ப்...அங்க இருக்க போறதே இரண்டு வாரம் தான்...." என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுது தீடீரென்று " ஹாய் ஆன்டி " என்ற குரல் கேட்டு திரும்பினர்.அவளைப் பார்த்ததும் புன்னகைத்து " நல்லா இருக்கியா ப்ரியா ?" என்று ராதை கேட்க " நல்லா இருக்க ஆன்டி.நீங்க எல்லாரு எப்படி இருக்கிங்க? " என்று அவர்களையும் விசாரித்து அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.

" அங்க போய் பத்திரமா இரு மா..." என்று கூற அவள் சரியெனத் தலையசைத்தாள்.பெரியவர்கள் கூறியதெற்கெல்லாம் பொறுமையாக
பதிலளித்துக்கொண்டிருந்தவளை ரகுராம் பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தான் விநாயக்.

ரகுராம் அருகில் வந்த யாழினி " எப்படி தான் இவங்க போடுற மொக்கைக்கு அவ சிரிச்சு சிரிச்சு பதில் சொல்றானு தெரியல பா" என்றாள்.விநாயக்," மரியாதை தெரிஞ்சவ அவ.அதனால தான் இப்டி பெரியவங்ககிட்ட மரியாதையா பேசறா....என்ன உன்ன மாறினு நினைச்சியா?" என்று உதட்டைச் சுளித்தான்.


யாழினியின் முகம் சுருங்கியது.அழுகை முட்டிக்கொண்டு வந்தது."அப்பா நான் ரெஸ்ட் ரூம் போயிட்டுவர " என்றுகூறிச் சென்றாள்.

உள்ளே சென்றவள் நன்றாக அழுது தீர்த்தாள்.பின்பு முகத்தை நன்றாக துடைத்து விட்டு வெளியே வந்தால். அவள் எவ்வளவு தான் அழுததை மறைக்க முயன்றாலும் அவளின் கண்ணில் இருந்த சோகம் அதைக் காட்டிக் கொடுத்தது.

அப்பொழுதுதான் முகில் வந்திருந்தான்.ரகுராமுடன் பேசிக்கொண்டிருந்தவன் யாழினி அருகில் வந்தவுடன்" சார் இவங்க யாழினி...அஸிஸ்டன்ட் டீம் லீட்....இவங்களும் எங்ககூட வராங்க" என்று கூற ரகுராம் சிரித்துக்கொண்டே "அவ என்னோட பொண்ணு.வொர்க் பழகற வரைக்கும் கான்பிடன்சியல்லா இருக்கட்டும்னு தான் யார்கிட்டையும் சொல்லல" என்றார்.

நேரம் ஆவதை உணர்ந்து நால்வரும் செக்கிங் சென்றனர்.

விமானத்தில் யாழினியின் சீட்டு விநாயக்கின் பக்கத்தில் இருந்தது.யாழினி தான் ஏதாவது செய்து விநாயக்கிடம் திட்டி வாங்கிவிடுவோமோ என்ற பயத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.ப்ரியா யாழினி விநாயக்கின் பக்கத்தில் உட்கார்வது பிடிக்காமல் மனதில் கறுவிக் கொண்டிருந்தாள்.விநாயக் ஹரீஷ்ஷைப் பார்க்கும் உற்சாகத்தில் இருந்தான்.முகில் தனது முதல் விமானப்பயனத்தை அனுபவித்துக்கொண்டிருந்தான்.

யூ.எஸ் சென்று இறங்கியவர்கள் செக்கிங் முடித்துக் கொண்டு வெளியே வர ஹரீஷூம் அபியும் அவர்களை எதிர்கொண்டனர்.ஹரீஷ் விநாயக்கை கட்டியணைக்க அபியைப் பார்த்த யாழினி சிரித்துக்கொண்டே அபியை கட்டிக்கொண்டு குசலம் விசாரித்தாள். அபி அப்பொழுது 3 மாதம் கர்ப்பமாக இருந்தாள்.

"டேய் குட்டிப் பையா... அத்தை உன்ன பார்க்க ரொம்ப இகர்ரா வெய்ட் பண்ணிட்டு இருக்க ...சீக்கிரம் வெளியே வந்து அத்தை கூட விளையாட வருவிங்களாமா..." ஏன்று வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசினாள்.

ஹரீஷ் அவர்களை தன் வீட்டுக்கு அழைக்க விநாயக் "இல்ல மச்சான் நான் மட்டும் வந்திருந்தா பரவாயில்லை எல்லாரு வந்திருக்காங்க.நான் நாளைக்கு உங்க வீட்டுக்கு வர" என்று கூற அவனுக்கும் அது சரியெனப் பட்டதால் ஒத்துக்கொண்டான்

யாழினிக்கு அபியுடன் தங்க ஆசை. ஆனால் விநாயக் மறுத்துவிட்டதால் அவனுடன் சென்றாள்.


ப்ரியா ஹரீஷிடம், "நீ எஸ்.கேல தான் வொர்க் பண்ணுறியா?" என்று கேட்க அவன் " ஆமா...நாளைக்கு கம்பெனி சார்பா நான் தான் உங்கல அசிஸ்ட் பண்ணுவ" என்றான்.

நால்வரும் ஹோட்டலை அடைந்தனர்.அவர்கள் அறைக்குச் செல்லும் முன் அவர்களிடம் " எல்லாரு 30 மினிட்ல ரெப்ரெஷ் ஆகி கீழே இருக்க ஹோட்டல்க்கு வந்துருங்க.டின்னர் முடிச்சுக்குலாம்" என்றான்.


டின்னர் சாப்பிட அனைவரும் கீழே வர யாழினி மட்டும் வரவில்லை.அவளை அழைத்தவன் " சாப்பிட வா" என்று கூற "எனக்கு பசிக்குல" என்றாள்..

முகிலையும் ப்ரியாவையும் சாப்பிடச் சொன்ன விநாயக் தனக்கு வேலை இருப்பதாகக் கூறிவிட்டுச் சென்றான்.ரிசப்ஷனில் சாப்பாட்டை யாழினியின் அறைக்கு கொண்டு வரச்சொன்னவன் அவள் அறையை நோக்கிச் சென்றான்.

தன் அறை தட்டப்படும் ஓசை கேட்டு படுத்திருந்த யாழினி வந்து அறையைத் திறந்தாள்.அங்கே நின்றிருந்த விநாயக்கைப் பார்த்தவள் கண்டிப்பாக சாப்பிட போகாததற்கு திட்ட போகிறான் என்று நினைத்து இரண்டு அடி பின்னே நகர்ந்தாள்.

விநாயக் சோபாவைக் காட்டி அவளை அமரச் சொல்ல அவளும் அமர்ந்தாள்.அதற்குள் உணவு வந்துவிட அவளிடம் பிளேட்டைக் கொடுத்தவன் தானும் ஒரு பிளேட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பிடாமல் இருந்தால் அவன் திட்டிவான் என்ற பயத்தில் சாப்பிட ஆரம்பித்தவளுக்கு அப்பொழுதுதான் தன் பசி புரிந்தது.

அவள் சாப்பிட்டு முடித்தவுடன் அவன் " வேற ஏதாவது வேண்டுமா? என்று கேட்க அவள் "வேண்டாம்" எனத் தலையசைத்தாள்.
"இன்னும் சின்ன பாப்பானு நினைப்பு...ட்ராவல் பண்ணிட்டு வந்து டையர்ட்ல சப்படமா இருந்தா இன்னும் டையர்ட் தான் அவ.. இப்ப உனக்கு ஊட்டிவிட அத்தை இல்ல...நீ தான் சாப்பிடணும்...சின்ன புள்ள மாரி பண்ணாம இனி ஆச்சு ஒழுங்கா சாப்பிடு" என்றவன் தன் அறைக்குச் சென்றான்.

யாழினிக்குத் தன் பழைய விநாயக்கையே பார்ப்பதைப் போன்ற உணர்வு.அவன் தான் யாழினி கூறாமலேயே அவள் மனதில் இருப்பதை அறிந்து செயல்படுவான்.
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
யாழினி அன்று அணிந்து இருந்த உடை அவனுக்கு மிகவும் பிடித்த உடை ...அது அவன் அவளுக்காக வாங்கித் தந்தது...அதைத் தான் அவள் கல்லூரியின் முதல் நாள் அன்றும் அணிந்து இருந்தாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top