• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode EE 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
வணக்கம் மக்களே,

ரொம்பவே தாமதம் ஆகிடுச்சு, தம்பியின் கல்யாணம் இந்த ஜூன் மாதம் மூன்றாம் தேதி நடந்து முடிந்து இருந்தது. அதற்கு சென்னை சென்று வந்தேன், இப்பொழுது வீட்டில் govt protocol padi நாங்கள் 14 days quarantine la irukkom.

En தந்தையின் ஆசீர்வாதத்துடன், இன்று நான் இக்கதையை தொடங்குகிறேன் நீண்ட நாட்கள் கழித்து.

இவ்வளவு நாட்கள் kaaka வைத்ததற்கு மன்னிக்கவும் மக்களே.

இதோ அடுத்த பதிவு .. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள்.

அன்புடன்,
உமா தீபக்..
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 6

முஹுர்த்த நேரத்தில் என்னதான் ஈஸ்வரன் தாலி கட்டி இருந்தாலும், சிற்சில பிரச்சனைகளோடு தான் இத்திருமணம் முடிந்து இருந்தது. இரண்டு பாட்டிமார்களுக்கு அதில் வருத்தம், ஆகையால் அவர்களின்
சாந்தி முஹுர்த்தமாவது நல்ல நேரத்தில் நடக்க வேண்டும் என்று எண்ணி, குல தெய்வ கோவிலுக்கு படையலை போட்டு வந்த பிறகு, அவர்களுக்கு நல்ல நேரம் குறித்து வைத்துக் கொள்வது என்று தீர்மானித்தனர்.


அதன் விளைவாக திருமணம் முடிந்த கையோடு, வீட்டிற்கு கூட்டிட்டு வந்து மணமக்களுக்கு பாலும், பழமும் கொடுத்த பின்னர், சிறிது ஓய்வுக்கு பின் அன்றிரவே அவர்கள் குல தெய்வ கோவிலுக்கு செல்ல ஏற்பாடு செய்து இருந்த மினி பஸ்சில் எல்லோரும் ஏறினர்.

“இந்த கல்யாணம் பண்ணதால மட்டும், நீ என்னை ஜெய்க்க வச்சிட்டதா நினைக்காத ஈஸ்வர். நீங்க ரெண்டு பேரும் நல்லபடியா வாழ்ந்து காட்டினா மட்டும் தான் இத்தனை நாள் நான் பட்ட பாடுக்கு, நான் ஜெய்ச்சதா உணருவேன் டா கண்ணா” என்று அவன் தலையை வாஞ்சையாக கோதிக் கொண்டே கூறினார் அவனின் அன்னை.

ஏனோ, இந்த இடைப்பட்ட நாட்களில் அவன் தாயை கவனித்ததில் வீட்டில் ஏதோ நடக்கிறது நாம் அறியாமல் என்பதை புரிந்து கொண்டு இருந்தான். தந்தை நல்லவர் தான், ஆனால் சில விஷயங்கள் அவரோடு ஒத்து போகவில்லை அவனுக்கு.

தினம் தினம் ஒரு சண்டை வீட்டில் அவரோடு எப்பொழுதும், ஆகையால் தூங்குவதற்கு மட்டுமே வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற பழக்கத்தை மேற்கொண்டான்.

இப்பொழுது அதை எல்லாம் யோசித்து பார்த்தவனுக்கு, தாயை கவனித்து இருந்தால் ஒரு வேளை நாம் வீட்டில் என்ன நடக்கிறது என்று கவனித்து இருப்போமா என்று எண்ண தொடங்கினான்.

தாயின் அருகில் அமர்ந்து பயணித்து கொண்டு இருந்தவன், அப்பொழுது தான் மனைவி எங்கே என்று தேடினான். பின் இருக்கையில் அமர்ந்து புத்தகத்தை விரித்து, படித்துக் கொண்டு இருந்தவளை பார்த்து அதிர்ந்தான்.

“அடேய்! எப்படி இதை மறந்தேன்? நல்லவேளை இப்போவாவது நியாபகம் வந்ததே” என்று எண்ணி முடித்த கையோடு, அவன் தன் செல்பேசி எடுத்து யாருக்கோ மெசேஜ் மூலம் தகவல் கொடுத்துக் கொண்டு இருந்தான்.

அந்த பக்கம் வந்த செய்தியை படித்து பார்த்துவிட்டு, அடுத்து செய்ய வேண்டியதை எல்லாம் பட்டியிலிட்ட பிறகு தான் அவனுக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது.

இதை எல்லாம் முடித்துவிட்டு நிமிர்ந்தவன், எல்லோரும் உறக்கத்திற்கு சென்று இருக்க, அங்கே ஈஸ்வரி மட்டும் பின்னிருக்கையில் அமர்ந்து இருக்கும் சிறு வெளிச்சத்தில் படித்துக் கொண்டு இருந்தாள்.

இவன் மெதுவாக அவன் இருக்கையில் இருந்து எழுந்து, நேராக பின் இருக்கைக்கு சென்றான். அந்த பெரிய இருக்கையில் இவனும், அவளும், அவள் புத்தககங்கள் மட்டுமே.

“இந்த வெளிச்சத்தில் படிக்கிறது கண்ணுக்கு நல்லது இல்லை, நாளைக்கு காலை சீக்கிரம் கோவிலுக்கு போய்டுவோம், அங்க வச்சு படி ஈஸ்வரி” என்று இவன் முதல்முறையாக சற்று அக்கறை கலந்த குரலில் கூறவும், அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அந்த பார்வையில் என்ன கண்டாளோ, உடனே எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, அவன் மடியின் மீதே படுத்து உறங்க தொடங்கி விட்டாள்.
அவனோ, அவள் சட்டென்று அப்படி மடியில் படுத்ததில் முதலில் அதிர்ந்தாலும், பின்னர் சிரித்துக் கொண்டான். அப்படியே அவனும் அங்கேயே தூங்க, காலை எழுந்த பெரியவர்கள் இவர்களின் நிலையை பார்த்து, தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.


“அம்மாடி ஈசு, எழுந்துக்கோ கண்ணு கோவில் வந்துருச்சு” என்று ஈஸ்வரனின் தாய் எழுப்ப, அவள் சற்று தூக்க கலக்கத்துடன் எழுந்து கொண்டாள்.

ஈஸ்வரியை எழுப்பும் சத்தத்தில் விழித்த ஈஸ்வர், எதிரில் தன்னை பார்த்து வாஞ்சையுடன் புன்னகை புரிந்த அன்னையை கண்டு அவனும் சிரித்தான். இப்படி உயிர்ப்புடன் அவர் சிரித்து, அவன் இன்று தான் பார்க்கிறான்.

“குட் மார்னிங் அத்தை! அத்தான் தேங்க்ஸ் நல்லா தூங்கிட்டேன், இனி படிக்க ஒரு டைம் எப்படியாவது ஒதுக்கி கொடுங்க. நிறைய இருக்கு படிக்க, இன்னும் மூணு நாள் தான் இருக்கு பரீட்சைக்கு” என்று கூறிக் கொண்டே எழுந்து அவளின் உடமைகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.

அவனோ, இவளால் எப்படி என்னோடு சாதரணமாக இருக்க முடிகிறது என்ற சுய அலசலில் இருந்தான். அதற்குள் இவனை அங்கு பாத்திரங்களை எடுக்க அழைக்க, அவன் அதன் பிறகு அந்த யோசனையை விடுவித்துவிட்டு இவன் அவர்களுக்கு உதவ சென்றான்.

கோவில் அருகே உள்ள மண்டபத்தில் தான் எல்லோரும் குளித்து முடித்து, அடுத்து அங்கே கோவிலில் பொங்கல் வைக்கும் வேலையை தொடர்ந்தனர். ஒரு பக்கம் பெண்கள் இங்கே வேலை பார்க்க, காலை உணவை ஒரு பக்கம் தயாரிக்க அங்கே ஆண்கள் தயாராகினர்.

ஈஸ்வரிக்கு படிக்கும் வேலை இருப்பதால், அவளை அவன் கண் பார்வையில் படும்படி ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு தான் அவன் வேலையை பார்த்தான். ஈஸ்வரிக்கு இப்பொழுது பாடத்தில் மட்டுமே கவனம் இருந்தது, அவள் மனம் முழுவதும் பரீட்சையில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று மட்டும் இருந்தது.

ஆனால், இங்கே ஈஸ்வரனுக்கு மனம் முழுவதும் அவள் நினைப்பு மட்டுமே. வேலை சற்று முடியவும், அவன் சற்று ஒதுங்கி நின்று இவளை தான் பார்வையிட்டான்..

தாயின் உதவியோடு, கடல் வண்ண பட்டுபுடவை அணிந்து இருந்தாள். அவளின் நெற்றியில் இருந்த குங்குமம், கழுத்தில் தொங்கும் புது தாலி எல்லாம் பார்வையிட்டவன் மனம் இவள் தன்னவள் என்று சம்மணமிட்டு அமர்ந்து கொண்டது.

“மாப்பிள்ளை! இப்படியே எம்புட்டு நேரம் உங்க பொண்டாட்டியை பார்த்துகிட்டு இருப்பீக? உங்க பொண்டாட்டி உங்களுக்கு தான், இப்போ வாங்க! வந்து ஒரு கை பிடிங்க! இந்த சாம்பாரை இறக்கி வச்சிடலாம்” என்று இவனுக்கு மச்சான் முறையில் இருப்பவர் வந்து அழைத்து சென்றார்.

அதன் பின், சிறிது நேரத்தில் பொங்கல் பொங்கி வரும் நேரத்திற்கு மணமக்களை அழைத்து அருகில் இருக்குமாறு கூறி, பொங்கி வரும் நேரத்தில் குலவு ஊதிவிட்டு மணப்பெண்ணை பொங்கலை கிண்டிவிட்டு பானையை எடுத்துக் கொண்டு உள்ளே கோவிலினுள் இறக்கி வைக்க கூறவும், அவளும் அதன்படியே செய்து முடித்து, உள்ளே இருக்கும் அய்யனாரை வணங்கி நின்றாள்.

“அய்யனார் சாமி! நான் பரீட்சையில் நல்ல மார்க் வாங்கணும், அது உன் கையில் தான் இருக்கு பா. அப்புறம், என் வீட்டுகாரரை கண் கலங்காம நான் பார்த்துக்க, எனக்கு தெம்பு கொடுங்க”.

“அவர் பாவம் பச்சை மண்ணு, வெளியே இருக்கிற கிரிமினல்ஸ் மட்டும் தான் கண்ணனுக்கு தெரிவாங்க, அப்படி ஒரு வியாதி. அதனால வீட்டுல இருக்கிற சில கிரிமினல்ஸ் கூட மோத எனக்கு தெம்பு கொடுங்க, இந்த பச்சை மண்ணை காப்பாத்தனும் ஆண்டவா” என்று வேண்டிக் கொண்ட மருமகளை பார்த்து, சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டார் ஈஸ்வரனின் அன்னை.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஈஸ்வரியின் ஒரு பக்கம் இவர் நிற்க, மறுபக்கம் அவளின் மணாளன் நின்று இருந்தான். அவன் அவனின் வேண்டுதலில் மும்முரமாக இருந்ததால், இவளின் வேண்டுதல் கேட்கவில்லை.

கோவில் மணியோசையுடன் கொட்டு சத்தமும் முழங்க, அங்கே தீபாராதனை காட்டப்பட்டது. மனமுருக அந்த அய்யனாரை பார்த்து வேண்டிவிட்டு, அய்யர் கொடுத்த தீபாரதனையை கண்களில் ஒற்றிக் கொண்டு, அவர் கொடுத்த திர்நீரை நெற்றியில் பூசிக் கொண்டு வெளியேறினர் எல்லோரும்.

“ஈஸ்வர்! ரெண்டு பேரும் பிரகாரம் சுத்திட்டு வந்து முதல, அங்க பந்தியில் எல்லோருக்கும் சாமிக்கு படைச்ச பொங்கலை பரிமாருங்க. அப்புறம் அப்படியே நீங்களும் சாப்பிட்டுடுங்க” என்று ஈஸ்வரின் அன்னை கூறிவிட்டு செல்லவும், இருவரும் பிரகாரத்தை சுற்ற தொடங்கினர்.

மெளனமாக நடந்து கொண்டு இருந்தவர்கள், அந்த மௌனத்தை உடைக்கும் முயற்சியாக பேச தொடங்கினர்.

“எக்ஸாம்க்கு ஓரளவு படிச்சிட்டியா, இல்லை இன்னும் படிக்க ஏதும் இருக்கா? ஹெல்ப் வேணும்னா சொல்லு, கண்டிப்பா ஹெல்ப் பண்ணுறேன்” என்று அவன் பேச்சை தொடங்கவும், இவளும் பதில் கொடுக்க தொடங்கினாள்.

“இல்லை மோஸ்ட்லி படிச்சிட்டேன், பட் இன்னும் கொஞ்சம் ரிவைஸ் பண்ண வேண்டியது இருக்கு. இன்னைக்கு எப்படியும் பொழுது இப்படியே பயணத்திலே பாதி போய்டும், இனி நாளைக்கு ஊருக்கு போய் தான் பார்க்கணும்” என்றாள்.

“ம்ம்.. பட் நீ இப்போவே படிச்சு முடிச்சிட்டா பெட்டெர், ஏன்னா நாளைக்கு நம்ம வீட்டுக்கு நீ வரும் பொழுது, திங்க்ஸ் எடுத்து வைக்க, சில சம்ப்ரதாயம் எல்லாம் முடிக்க விட்டுட்டு தான், நம்மளை ப்ரீயா விடுவாங்க”.

“உனக்கு ட்ராவல் பண்ணும் பொழுது படிக்க கஷ்டமா இருந்தா, அப்போ நல்லா தூங்கிடு, அப்புறம் வீட்டுக்கு போய் பிரெஷ் அப் பண்ணிட்டு படிச்சிக்கோ” என்றவனை நன்றியோடு பார்த்தாள்.
அதை ஏற்றுக் கொண்டவன், அங்கே அவனின் அன்னையும், அவளின் அன்னையும் தங்களுக்காக காத்துக் கொண்டு இருப்பதை அறிந்து, அங்கே விரைந்தனர்.


எல்லோருக்கும் பொங்கல் பிரசாதம் கொடுத்துவிட்டு, மேலும் காலை உணவை பரிமாறிவிட்டு தான், இவர்கள் சாப்பிட அமர்ந்தனர். இங்கே இவர்கள் இருக்க, இரண்டு பாட்டிமார்களும் கோவிலுனுள் சென்று அங்கே பூசாரியிடம், இவர்கள் இருவரின் ஜாதகம் கொடுத்து இவர்கள் வாழ்க்கை தொடங்க நல்ல நேரம் பார்க்க சொல்லி கொடுத்தனர்.

அவரோ அதை பார்த்து, சில கணக்குகளை எல்லாம் போட்டு பார்த்துவிட்டு அவர்களை பார்த்தார்.

“நாளைக்கு கூட நல்ல நேரம் தானுங்க, ஆனா இவுக ஜாதகப்படி அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சு அவகளே சேர்ந்தா மட்டும் தான் அவங்க நல்லா இருப்பாங்க” என்றவரை முறைத்து பார்த்தனர்.

“அது எங்களுக்கு தெரியாது பாருங்க, நல்ல நேரம் மட்டும் குறிச்சி குடும், நாங்க பார்த்துகிடுதோம் அதை எல்லாம்” என்று கூறவும் அவரும் குறித்து கொடுத்துவிட்டார்.

மனதார அந்த அய்யனாரை வணங்கிவிட்டு, தாங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அங்கு இருந்து வெளியேறினர்.

வெளியில் வந்த அவர்கள் கண்களில் பட்டது முதலில், ஈஸ்வரி தனியாக அமர்ந்து படித்துக் கொண்டு இருந்ததை தான். ஈஸ்வரை தேட, அவன் எல்லா பொருட்களையும் எடுத்து வண்டியில் அடுக்கிக் கொண்டு இருந்தான், மற்றவர்களுடன் சேர்ந்து.

“இப்படி பொறுப்பா இருக்குதுங்க, இந்த சின்ன சிறுசுங்களுக்கு இப்போ உடனே வச்சு ஆகணுமா?” என்று கேட்டார் காமாட்சி.

“கண்டிப்பா காமு! எப்போ எந்நேரம் என் பேரன் அவன் அப்பன் பேச்சை கேப்பான்னு தெரியாது. அன்னைக்கு கல்யாணமே ஒரு போராட்டத்தில் தானே முடிஞ்சது, அந்த மனுஷர் பண்ண வேலையில்”.

“அவனுக்கு பேத்தி மேல ஒரு பிடிப்பு வரணும்னா, நாம இதை செய்தே ஆகனும். அவனுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கு, அது பிடித்தமா மாறனும், அதுக்கு இப்போ இது அவசியம் காமு” என்று கூறினார்.

அவருக்கும் புரிந்தது, அதனால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய அவர் தன் பேத்தி ரேகாவை அழைத்து விஷயத்தை கூறினார். அதன் பின் அவர்கள் ஊர் சென்று சேர்ந்தவுடன், மணமக்களை சிறிது ஓய்வு எடுக்க வைத்துவிட்டு அன்றே புகுந்த வீட்டிற்கு செல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர்.

“அடேய்! மாரி! இந்தா இந்த பலகார கூடைய எல்லாம் வண்டியில் ஏத்தி வை. பைய ஓட்டு வண்டியை, பத்திரமா போய் கொண்டுவிட்டு நாளை சாகாசமா வந்தா போதும், புரியுதா” என்று அவனுக்கு கட்டளையிட்டுக் கொண்டு இருந்தார் காமாட்சி பாட்டி.

“புரியுது ஆத்தா!” என்று கூறிவிட்டு எல்லாவற்றையும் எடுத்து வைத்தான்.
அதற்குள் மணமக்களை இங்கே ஹாலில் நிற்க வைத்துவிட்டு எல்லோரும் திர்நீர் பூசி அவர்களை ஆசிர்வதித்து வழியனுப்பினர்.


ரேகாவின் குடும்பமும், ஈஸ்வரனின் அன்னையும் மட்டுமே மணமக்களுடன், அந்த இன்னோவா வண்டியில் அவர்களின் இல்லம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அன்றே நல்ல நாள் என்பதால், மாலை ஆறு மணிக்கு முன் ஈஸ்வரி புகுந்த வீட்டினுள் தன் மணாளனுடன் அடி எடுத்து வைத்தாள். ரேகாவும், ஈஸ்வரனின் அன்னையும் ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே வரவேற்று, பூஜை அறைக்குள் அழைத்து சென்றனர்.

அங்கே விளக்கு ஏற்றி, மணமக்கள் மனதார தங்கள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், பூஜை அறையில் இருந்து வெளியே வந்தனர்.

“ரேகா, பிள்ளைங்களை அழைச்சிகிட்டு கிட்சென் வா மா” என்றார் ஈஸ்வரனின் அன்னை.

“ஈஸ்வரி, மூணு தடவை உப்பு, வத்தல், புளி, அரிசி, மஞ்சள் எல்லாம் தொட்டு தொட்டு எடுத்து வைக்கணும் மா” என்று அவர்களின் சம்ப்ரதாயத்தை எடுத்து கூறினார்.

இதை எல்லாம் அவளும் பார்த்து இருக்கிறாளே, ஆகையால் அவர் சொன்னதை எல்லாம் செய்துவிட்டு எல்லோரும் ஹாலிற்கு வந்தனர்.

அப்பொழுது தான் வேலை முடிந்து உள்ளே வந்த ஈஸ்வரனின் தந்தை, இவர்களை பார்த்து வரவேற்றார்.

“வாங்க! வாங்க! இன்னைக்கு வர போவதா சொன்னாங்க, ஆனா கொஞ்சம் வேலை ஆதிகமாகிட்டு அதான் வர முடியல சீக்கிரம்” என்று ரேகாவின் கணவரிடம் மன்னிப்பு கேட்பவரை பார்த்து, புருவம் சுருக்கினார் ஈஸ்வரனின் அன்னை சாரதா.

“இவர் என்ன இப்படி நல்லவர் மாதிரியே பேசுறாரே, ஏதாவது உள்குத்து இருக்குமோ?” என்று எண்ணினார்.

“சாரதா! வந்தவங்களுக்கு ஒரு வாய் காபி கூட குடுக்காம என்ன மா செய்ற?” என்று கேட்டவரை பார்த்து இப்பொழுது, உருத்து விழித்தார்.

அவரின் பார்வையை அப்பொழுது தான் சரியாக கவனித்தார், ஈஸ்வரனின் தந்தை ருத்ரன். அவரின் பார்வை புரிந்து, அவரிடம் வந்தவர் அவருக்கு மட்டும் கேக்கும் குரலில் ஏதோ கூறினார்.

அதை கேட்ட பின்பு, சாரதா முகம் சற்று தெளிந்தாலும், ஒரு சந்தேகத்தனத்துடன் தான் அவரை பார்த்து வைத்தார். மகன், மருமகள் முன்பு வீணாக தங்கள் சண்டையை காட்சி பொருளாக்க விரும்பாதவர், ஈஸ்வரியையும், ரேகாவையும் அழைத்துக் கொண்டு கிட்சென் சென்றார்.

போகும் முன் மகனிடம், தந்தையை கவனித்து கொள்ளும்படி ஒரு பார்வையும் பார்த்து வைத்து சென்றார். அன்னையின் பார்வையை புரிந்தவன், தந்தையை நோட்டம் விட தொடங்கினான்.

அவரோ, மகனின் பார்வையை எதிர்கொண்டு அவனையே சற்று நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார். தந்தை மகனின் பார்வையை பார்த்த ரேகாவின் கணவன், எங்கே சண்டை வந்துவிடுமோ என்று அஞ்சி ஈஸ்வரை அழைத்து கொண்டு, வீட்டின் பின் பக்கம் இருக்கும் சிறிய தோட்டத்திற்கு வந்துவிட்டான்

“தம்பி! இது என்னடா இந்தியா பாகிஸ்தான் சண்டையை விட, நீங்க இப்படி கண்ணாலே சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க? உங்களுக்கு நடுல எங்க சித்தி தான் மாட்டிக்கிட்டு முளிக்குறாங்க டா, பாவம் அவங்க” என்றவனை பார்த்து வருத்தம் தோய்ந்த புன்னகையை சிந்தினான்.

“நீங்க சொன்னது சரி தான் அண்ணா, அம்மா தான் எங்களுக்கு நடுல மாட்டிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறாங்க. விபரம் தெரிஞ்ச நாளில் இருந்தே, அவர் அவருக்கு இஷ்டப்படி தான் இருக்கனும்ன்னு சொல்லுவார்”.

“இதுல தான் ஆரம்பிச்சது எங்க சண்டை, இப்போ அது எங்க அம்மாவோட வலியை எனக்கு தெரிய வச்சதுல வந்து நிக்குது. நான் முன்னாடியே கொஞ்சம், வீட்டுல எங்க அம்மாவை கவனிச்சு இருக்கணுமோ அப்படின்னு தோணுது இப்போ” என்று வருத்தப்பட்டவனை அணைத்து ஆறுதல் அளித்தான் ரேகாவின் கணவன்.

“சரி, அதை விடு நான் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். ஈஸ்வரி பத்தி நீ என்ன கணிச்சு வச்சு இருக்க அப்படின்னு எனக்கு தெரியாது, ஆனா அவளை நான் பார்த்தவரை ஷி இஸ் சோ கிளெவர் அண்ட் குட்”.

“அன்பு கொடுக்க என்னைக்கும் தயங்க மாட்டா, ஆனா அதே இது தப்பு செஞ்சது தெரிஞ்சா அப்புறம் நல்லா வச்சு செஞ்சுட்டு தான் அடுத்த வேலையே பார்ப்பா. இப்போ அவ உன்னோட மனைவி, எந்த ஒளிவு மறைவும், உங்க ரெண்டு பேர் கிட்டயும் இருக்க கூடாது”.

“அவளை நீ போக போக புரிஞ்சிப்ப, இன்னும் உங்களுக்கான லைப் நிறைய காத்துகிட்டு இருக்கு. பட் அந்த லைப் ல கொஞ்சம் சண்டை நிறைய காதல், விட்டுகொடுத்தல் இருக்கிற மாதிரி பார்த்துகோங்க” என்றவனை பார்த்து சரி என்று புன்னகைத்தான் ஈஸ்வர்.

“அப்புறம் இன்னைக்கு உங்களுக்கு இங்க முதல் ராத்திரி நடக்க, எல்லா ஏற்பாடும் நடக்குது” என்று கூறிக் கொண்டு இருந்தவனை பார்த்து, இப்பொழுது அதிர்ந்தான் ஈஸ்வர்.

“அண்ணா! அவளுக்கு பைனல் எக்ஸாம்ஸ் இருக்கு, இந்நேரம் இது தேவையா இப்போ?” என்றவனை பார்த்து சிரித்தான்.

“நான் தான் சொன்னேனே பா, உங்களுக்கான லைப் நீண்டு இருக்கு, இது பெரியவங்க ஏற்பாடு, அதை ஒன்னும் சொல்லாம அமைதியா இருன்னு தான் சொல்ல வரேன்” என்று அவன் கூறிய பின்பு தான் அவனுக்கு சற்று ஆசுவாசம் வந்தது.

ஒரு பக்கம் அங்கே இரவு உணவை ஈஸ்வரனின் அன்னை சாரதா, அங்கே வேலைக்கு இருக்கும் வள்ளியுடன் சேர்ந்து தயாரிக்க, மறுமக்கம் ரேகா ஒரு அறையில் ஈஸ்வரியை தயார் செய்து கொண்டு இருந்தாள்.

“ம்கும். இது இப்போ ரொம்ப முக்கியம், அங்க உள்ள போன உடனே, படிச்சிட்டியா, ஒழுங்கா பாஸ் ஆகிடுவியா அப்படின்னு கேட்க போறான். இதுக்கு இம்புட்டு பில்ட் அப் கொடுத்துட்டு நான் இந்த புடவையை, வேற உடுத்திட்டு போகணுமாக்கும்”.

“என்ன கொடுமை முருகா இது? உன் பக்தைக்கு வந்த சோதனையை பாரு, இந்த புடவை இடுப்பிலே நிக்க மாட்டேங்குது. கீழே விழுந்திடுமோ அப்படின்னு பயத்திலே இருக்க வேண்டி இருக்கும் போல, என்னை படிக்க கூட விடல இப்போ”.

“அதனால, என்ன என்ன கேள்வி எல்லாம் பரீட்சைக்கு வரும்னு நீ தான் பா சொல்லணும், அப்போ தான் அதை மட்டுமே படிச்சிட்டு போய் எழுதி பாஸ் பண்ண முடியும், படிக்க தான் விடுவாங்களா என்னனே தெரியல எனக்கு, இவங்க பண்ணுற அலப்பறை அப்படி இருக்கு” என்று மனதிற்குள் நொந்து கொண்டே ஈஸ்வரி ரேகா சொல்லியதை எல்லாம் செய்து கொண்டு இருந்தாள்.

இரவு உணவு முடிந்த பின், நல்ல நேரம் பார்த்து இருவரையும் மாடியில் இருக்கும் ஈஸ்வரனின் அறைக்குள் அனுப்பி வைத்தனர்.

“எவ்வளவு படிச்சு இருக்க, நோட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா” என்றவனை பார்த்து முறைத்தாள்.

இதுக்கு இந்த புடவை அவசியமா? என்ன சோதனை இது? என்று நொந்தே விட்டாள். படிக்க இப்படி புடவை கட்டிக் கொண்டு வர வேண்டுமா? இதுக்கு ஓவர் அலப்பறை?

அவனோ, பதில் சொல்லாமல் இருக்கும் அவளின் அமைதியில் அப்பொழுது தான் அவளை கவனித்தான். தன்னை எதற்காக இப்படி முறைக்கிறாள், என்று அவளை அளந்தான் அப்பொழுது.

அந்த பேபி பிங்க் புடவையில் தேவதையென ஜொலித்த தன்னவளை, விழி விரித்து பார்த்தான். அவனின் பார்வை மாற்றத்தை கவனித்தவள் நெஞ்சம், படபடத்து போனது.

“படிக்க இன்னும் கொஞ்சம் இருக்கு, ஆனா என் புக்ஸ் எல்லாம் கீழே இருக்கு. ரேகா அக்கா இன்னைக்கு எடுத்துட்டு போகாத சொல்லிடாங்க, எனக்கு வாங்கி தரீங்களா?” என்று கேட்டவளை பார்த்து இப்பொழுது முறைப்பது இவன் முறையானது.

“நாளைக்கு படிச்சிக்கலாம், இப்போ நான் உனக்கு நிறைய விஷயம் சொல்லணும். இங்க நம்ம குடும்பம் பத்தி, நான் என்னோட வேலையை பத்தி சொல்லணும்” என்றவனை இடைமறித்தாள்.

“எனக்கு தூக்கம் வருது அத்தான், கண்டிப்பா நாம இதை பத்தி பேசலாம் நிறைய, நமக்கு டைம் இருக்கு. நான் இப்போ ரெஸ்ட் எடுத்தா தான், நாளைக்கு எழுந்து சீக்கிரம் அத்தைக்கு ஹெல்ப் பண்ணிட்டு, படிக்க போக முடியும்” என்று கூறிவிட்டு போர்வையை நன்றாக இழுத்து மூடிக் கொண்டு படுத்து விட்டாள்.

இவனுக்கோ, அவள் இழுத்து போர்த்திக் கொண்டதில் செம கடுப்பு. தன்னவள் என்ற உரிமை உணர்வில், அவளை இன்று அருகில் வைத்து பார்த்தவனுக்கு அவளை இழுத்து தன்னருகில் வைத்துக் கொள்ள பரபரத்துக் கொண்டு இருந்தது.

ஆகையால் தான், அவளின் இந்த செயலில் அவனுக்கு சற்று கடுப்பாக இருந்தது. தன்னையே நொந்து கொண்டு, அவனும் கட்டிலில் படுத்துக் கொண்டான்.

மறுநாள், ஈஸ்வரி அங்கே ஆட போகும் ஆட்டத்திற்கு அவன் அவளை ஆதரிப்பானா? அல்லது அவளை அடக்க நினைப்பானா?

தொடரும்




















 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top