• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode EE 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் - 7

மறுநாள் காலையில் எழுந்தவன், அருகில் மனைவியை காணாமல் அவளை தேடினான் அறைக்குள். அங்கே அவள் இருப்பதற்கான அறிகுறி தெரியாததால், மணி என்னவென்று பார்த்தான். அது மணி காலை ஏழு என்று காட்டவும், இவ்வளவு நேரமா உறங்கினோம் என்று தன்னையே கடிந்து கொண்டு, குளிக்க சென்றான்.

குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு இருந்தவன் காதுகளில், கீழே கேட்ட சத்தத்தில் அடித்து பிடித்து ஓடி வந்தான்.

அங்கே அவனின் தாயை பாதுகாத்துக் கொண்டு இருப்பது போல் நின்ற அவனின் மனைவி தான், முதலில் அவன் கண்களுக்கு தெரிந்தான். அங்கே அவனின் சித்தி, அத்தை அவர்களின் புதல்வர்கள் என்று வரிசையாக நின்று இருந்தனர்.

“என்னது இது? எதுக்காக எல்லோரும் காலையிலே இப்படி ரவுண்டு கட்டி நிக்குறாங்க? என்ன பிரச்சனை இப்போ?” என்று தெரியாமல், அங்கே யாரும் அறியாமல் ஒரு ஓரமாக நின்று என்ன நடக்கிறது என்று கவனிக்க தொடங்கினான்.

“பார்த்தீங்களா அண்ணி, உங்க தம்பி பொண்டாட்டி மருமகளை கூட்டிட்டு வந்த மிதப்பில் நமக்கு செய்றதை எல்லாம் மறந்துட்டாங்க” என்று அவன் சித்தி கூற அவன் அத்தை அதற்கு, அவனின் தாயை முறைத்துக் கொண்டு நின்று இருந்தார்.

“ஹலோ! என்ன முறைப்பு வேண்டி இருக்கு? இவங்க என் அத்தை, இந்த வீட்டு மகாராணி, ஒழுங்கா அவங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தா, உங்களுக்கு இந்த வீட்டில் இடம் இருக்கும், இல்லைனா ஒரேடியா வீட்டை விட்டு விரட்டி விட்டுடுவேன் பார்த்துக்கோங்க” என்று அவன் மனைவி ஈஸ்வரி போட்ட போடில்

அவனுக்கு அப்பொழுது தான், லேசாக விஷயம் புரிய ஆரம்பித்து இருந்தது.

“நேத்து முளைச்ச காளான் எல்லாம், இன்னைக்கு என்னை வந்து கேள்வி கேட்குது. அடியே இந்த வீட்டு மகாராணி எப்போவும் நான் தான், நான் வைக்கிறது தான் இங்க சட்டம். என் தம்பியே என் பேச்சை தான் கேட்பான், நீ இன்னைக்கு வந்து நாட்டாமை பண்ண நினைகிறியா?”.

“ஒழுங்கா நான் சொல்லுறதை கேட்டு நடந்தா, நீ இங்க இருக்கலாம், இல்லை உன்னை நான் வாழாவெட்டியா உங்க வீட்டுக்கு துரத்தி விட்டுடுவேன் பார்த்துக்க” என்று மிரட்டினார் அவனின் அத்தை கங்காவதி.

“ஹச்சோ! நான் பயந்துட்டேன்! சும்மா காமெடி பண்ணாம ஓரமா போய் உட்காருங்க, ஒசி சாப்பாடு இன்னைக்கு மட்டும் தான் கிடைக்கும், நாளையில் இருந்து வெளியே போய் உழைச்சு சாப்பிடனும், போய் வெளியே உட்காருங்க ஓடுங்க” என்று அவரை விரட்டிக் கொண்டு இருந்தாள் ஈஸ்வரி.

“ஏய்! யாரை வெளியே விரட்டிகிட்டு இருக்க? அவங்க என் அத்தை, அவங்க கிட்ட இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா?” என்று மிரட்டினான் ஈஸ்வர்.

அவனின் அந்த மிரட்டலில், முதலில் அவள் புருவத்தை சுருக்கினாள். அதன் பின் அவனின் நிமிட நேர கண் சிமிட்டலில், அவனின் சம்மதம் கிடைத்த குஷியில் புகுந்து விளையாட முடிவு எடுத்துவிட்டாள்.

“மரியாதை கொடுத்தா மட்டும் தான், நான் ஒழுங்கா பேசுவேன். இங்க எங்க அத்தைக்கே மரியாதை இல்லையாம், எனக்கு மரியாதை கிடைச்சிடுமா என்ன? அதுவும் தி கிரேட் அசிஸ்டென்ட் கமிஷனர் ஆப் போலீஸ் கிரைம் பிரன்ஞ் ஆபிசர் ஈஸ்வர் பொண்டாட்டிக்கு, வீட்டுக்குள்ளேயே மரியாதை இல்லைனா, வெளியே எப்படிப்பா மரியாதை கிடைக்கும்” என்று அவனையே திருப்பி கேட்டவளின் திறமையை மெச்சிக் கொண்டான் அவளின் மணாளன்.

“இப்போ என்ன மரியாதை தரல, என் அத்தை உனக்கு? சொல்லு நான் கேட்கிறேன்” என்று கூறி அங்கேயே தோரணையாக ஒரு இருக்கையில் அமர்ந்து விட்டான் ஈஸ்வர்.

அவன் அமர்ந்த தோரணையில், அங்கு ஆட்டம் கண்டது என்னவோ அவனின் அத்தையின் புதல்வர்களும், சித்தியின் புதல்வர்களும் தான். அவனின் அத்தையும், சித்தியும் தைரியமாக தான் இருந்தார்கள்.

“நல்லா கேளு பா, உன் பொண்டாட்டி என்னமோ புதுசா மரியாதை பத்தி எல்லாம் பேசுறா, யார் சொல்லி இவ இப்படி பேசுறாளோ?” என்று கண்கள் அவனின் தாயை நோக்கி தான் வஞ்சித்துக் கொண்டு இருந்தது.
எல்லாவற்றையும் பார்த்தவனுக்கு, மனம் கனத்து போனது. வீட்டிற்கு வராமல், இங்கு நடப்பதை கவனிக்காமல் என்ன செய்து கொண்டு இருந்து இருக்கிறோம் என்று எண்ணி, மனம் உடைந்தான்.


“யாரும் சொல்லி தான் எனக்கு தெரியனும் இல்லை, சில பேரை பார்த்தா தன்னாலே கை எடுத்து கும்பிட்டு மரியாதை கொடுக்க தோணும். உங்களை பார்த்தா எனக்கு கை அடி கொடுக்க தான் பரபரக்குது, அதுக்கு நான் என்ன செய்றது?” என்று வெளுத்து வாங்கினாள் ஈஸ்வரி.

அவள் எங்கே அடித்து விடுவாளோ, என்று சற்று பயத்துடன் ஈஸ்வரனின் அன்னை பார்த்து இருக்க, அவனோ மனைவியின் பேச்சிலும், செய்கையிலும் மயங்கி கொண்டு இருந்தான்.

“அடியே! கை பரபரக்குதோ, அந்த கையை உடைச்சு உடப்பில் போடுறேன்” என்று அவளின் கையை பிடித்த அவனின் அத்தை கங்காவதி, அடுத்து தரையில் விழுந்து கிடந்தார்.

என்ன நடந்தது என்று எல்லோரும் முழித்துக் கொண்டு இருந்தனர், கண் சிமிட்டும் நேரத்தில் அவள் அவரை கீழே விழ வைத்து இருந்தாள்.

“அடிப்பாவி! கண் சிமிட்டுற நேரத்தில், நான் உஷாரகிறதுக்கு முன்னாடி இப்படி பண்ணிட்டியே” என்று பார்வையில் கண்டிப்பு காட்டினான் மனைவியிடம் ஈஸ்வர்.

கீழே விழுந்த தன் அத்தைக்கு கை கொடுத்து தூக்கி நிறுத்தினான், அவரின் புதல்வர்களின் உதவியுடன். பின் தன் அத்தையிடம், பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே, இப்படி கை நீட்டி இருக்க வேண்டாம் என்று கூறினான்.

“ஆமாம் பா! இப்போ கல்யாணமான புதுசுல உனக்கு, இப்போ இப்படி தான் அவளுக்கு சாதகமா பேசுவ. சரி, சரி இப்போ என் தம்பி சாப்பிட வந்திடுவான், சாப்பாடு எடுத்து வைக்க சொல்லு” என்று கூறிவிட்டு மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு, நடுகூடத்திற்க்கு சென்றார்.

“ஏய்! இப்படித்தான் அவங்களை கீழே தள்ளி விடுவியா? கொஞ்சமாச்சும் பெரியவங்க அப்படின்னு மரியாதை வேண்டாம், ஏன் இப்படி செய்ற?” என்று அவளிடம் சிடுசிடுத்தான்.

“ஆமா! எனக்கு வேண்டுதல் பாருங்க. முதல அத்தையை இந்த வீட்டு வேலைக்காரியை விட மோசமா நடத்திகிட்டு இருக்காங்க, இன்னைக்கு சீக்கிரம் முழிப்பு வரவும், குளிச்சிட்டு கீழே இறங்கி வந்தேன்”.

“காலையில் நாலு மணியில் இருந்து சமையற்கட்டில் தான் இருக்காங்க, என்ன அத்தை இவ்வளவு சீக்கிரம் அப்படின்னு கேட்டா, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மெனு சொல்லி செய்ய சொல்லிடுவாங்கலாம்”.

“அவங்க அத்தையை, இந்த வீட்டு வேலைக்காரி அப்படின்னு நினைச்சிட்டாங்களா? மெனு சொல்லுறது சரி, கூட மாட ஒத்தாசை செய்யலாம் தானே, அதுவும் செய்யாம, குறையும் சொல்லிட்டு, நாட்டாமை பண்ணா, எந்த ஒரு மனுஷிக்கும் கோபம் வரத்தான் செய்யும்”.

“ஆனா! இங்க என் அத்தை தெய்வம், இத்தனை ஏச்சு, பேச்சுக்கும் பொறுமையாய் அவங்க இருந்ததே, உங்களுக்காக தான். ஆனா நீங்க என்னடானா, என் அப்பா கூட சண்டை அதனால வீட்டுக்கு சாப்பிட, தூங்க தான் வருவேன்னு சின்ன பிள்ளை மாதிரி, இன்னும் முகத்தை தூக்கிட்டு இருக்கீங்க”.

“வெளியே தான் பெத்த பேரு போலீஸ்ன்னு, வீட்டுல இன்னும் சின்ன பாப்பா மாதிரி சண்டை போட்டுக்கிட்டு இருக்க வேண்டியது” என்று அவனையும் விடாமல் வாங்கி விட்டாள் ஈஸ்வரி.

தன் தவறை உணர்ந்ததாலோ, என்னவோ அவள் பேசியதற்கு ஏதும் எதிர்மறை காட்டாமல், தனக்கு வேண்டியது தான் என்று வசவு வாங்கிக் கொண்டான்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
“போதும் டா ஈஸ்வரி, அவனை திட்டாத. சின்ன வயசில் இருந்தே, அவன் அப்பாவுக்கும், அவனுக்கும் ஆகுறது இல்லை. அதானால தான் அவனுக்கு இங்க நடக்கிறது எதுவும் தெரியல”..

“போதாத குறைக்கு, இவனோட அத்தை, சித்தி வேற இவனுக்கும் இவங்க அப்பாவுக்கும் சண்டை வர மாதிரியே பேசிட்டு போய்டுவாங்க. பாவம் என் பிள்ளை, யாருக்கு பேசுவான் அவன்” என்றவரை பார்த்து இப்பொழுது முறைத்தான் ஈஸ்வர்.

“எம்மா! என்னை போதுமான அளவு அவளே வாரிட்டா, மீதியை நீங்களும் சேர்ந்து வாரிடாதீங்க. சீக்கிரம் இங்க வேலை எல்லாம் முடிச்சிட்டு, படிக்க ஓடு, இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு பரீட்சைக்கு” என்று அவளை விரட்டவும், அவளோ அவனை ஆழ்ந்து பார்த்தாள்.

“என்ன இப்படி லுக்கு விடுறா? ஹையோ! இன்னும் பெருசா ஏதும் பிளான் பன்னுராளா? எல்லோரும் இருக்கிற தைரியம், அதான் இப்படி இருக்கா” என்று அவளின் பார்வைக்கு இப்பொழுது அலறினான் ஈஸ்வர்.

அந்த பயம் இருக்கட்டும், என்பது போல் ஒரு லுக்கு விட்டுவிட்டு வேலையை தொடர்ந்தாள்.

“இன்னும் ஒரு மாசம் தாண்டி இங்க, அப்புறம் சென்னைக்கு தான் நீ என் கூட வரணும். ஐயா, வேலையே அங்க தான், இங்க ஒரு கேஸ் விஷயமா தான் இத்தனை நாள் இங்க இருந்தேன். அங்க நீயும், நானும் தான் எப்படி அங்க என் கூட மல்லுக்கு நிக்குறன்னு நானும் பார்க்கிறேன்” என்று மனதில் அவளை அர்ச்சித்து கொண்டே, மீண்டும் மாடி ஏறி அவன் அறைக்கு வந்து சேர்ந்தான்.

அங்கே நடு ஹாலிற்கு வந்தவர்கள் முகமே, இனி அடுத்து என்ன நடக்கும் என்று யோசிக்க தொடங்கி இருந்தனர்.

“அண்ணி! எனக்கு என்னமோ இந்த பொண்ணு நம்மளை இங்க இருந்து விரட்டி விட்டுட்டு தான் மறுவேலை பார்க்கும் போல. அதுவும் உங்க தம்பி பொண்டாட்டியை, எப்படி பாதுகாத்துகிட்டு இருந்துச்சு?”.

“அந்த பொண்ணுக்கு அந்த உண்மை தெரிஞ்சிக்குமோ, அதான் இப்படி பேசுதோ அப்படின்னு பயமா வேற இருக்கு அண்ணி. போற போக்கை பார்த்தா, நாம அடுத்த வேலை சோறுக்கு, நடு தெருவில் தான் நிற்க போறோம் போல” என்று புலம்பிக் கொண்டு இருந்தார் ஈஸ்வரனின் சித்தி மாலா.

“அம்மா! கொஞ்சம் பேசாம இரு மா, அத்தை அப்படி எல்லாம் நம்மளை எல்லாம் விட்டுற மாட்டாங்க. அத்தை அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க, செஞ்சிடலாம்” என்று கூறினான் மூர்த்தி, மாலாவின் புதல்வன்.

மூர்த்தி, ஆங்கில இலக்கியம் படிக்கும் பட்டதாரி. இறுதி வருடத்தில் இருக்கிறான், அவனுக்கு தன் நண்பர்கள் தான் உலகமே. காசை தண்டமாக பார்ட்டி, ரேஸ் என்று செலவழிப்பவன்.

கல்லூரியில், அவன் ஒரு அடாவடியான ரவுடி என்று பேர் பெற்று இருப்பவன். அவன் மேல் புகார் வந்தால், விசாரிக்கும் ஆசிரியர்களையே வந்து பார் என்று நிற்பவன்.

ஆனால் வீட்டில், அவன் தான் அவனின் அத்தைக்கு செல்லம். அவர் ம்ம் என்னுமுன் காரியத்தை முடித்து விடுவான்.

இப்பொழுதும், அவனின் அத்தையின் திட்டத்திற்கு தான் காத்துக் கொண்டு இருக்கிறான், அவருக்கு உதவி புரிய.

“இப்போ நாம எது செய்தாலும் மாட்டிகிடுவோம், பொறுமையா தான் அடுத்து ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கணும்” என்றவரை பார்த்து இப்பொழுது முறைத்தார்கள் அவரின் புதல்வர்கள்.

அஜய் – சஞ்சய் இரட்டையர்கள், கங்காவதியின் பிள்ளைகள். மூர்த்தி படிக்கும் அதே கல்லூரியில் தான் இவர்கள் இருவரும், முதலாம் ஆண்டு படிக்கின்றனர்.

தவமாய், தவமிருந்து பெற்று எடுத்த பிள்ளைகள் என்று எப்பொழுதும் அவர்களுக்கு செல்லம் அதிகம். தாயின் மறுபதிவு என்றும் கூட சொல்லலாம்.

“எம்மா! அதுக்குள்ள அந்த ராங்கிகாரி நம்மளை விரட்டிடுவா” என்றான் அஜய்.

“இன்னைக்கோட நமக்கும், இந்த வீட்டுகுமான பந்தம் முடிஞ்சிடும் மாதிரி தான் அவ சொன்னா. நீங்க என்ன கவனிசீங்க? இன்னைக்கு மட்டும் தான் ஓசி சாப்பாடு அப்படின்னு சொன்னா தானே” என்றான் சஞ்சய்.

“அடேய்! அப்படி எல்லாம் உடனே விரட்ட முடியாது. இது என்னோட சொத்து, அதை அப்படியே தூக்கி என் தம்பிக்கு கொடுத்துட்டா, இது அவனோடதுன்னு ஆகிடுமா என்ன?”.

“எத்தனை தடவை அவனை விரட்ட, நான் முயற்சி செஞ்சு இருப்பேன். இப்போ அவன் நான் என்ன சொன்னாலும் கேட்ப்பான், அந்த நிலைக்கு அவனை வச்சு இருக்கேன்”.

“இந்த ராங்கியால என்னை ஒன்னும் பண்ண முடியாது, பேசாம இருப்போம் கொஞ்ச நாள். அப்புறம் நான் என் வேலையை காட்டிடுறேன், அதுவரைக்கும் எல்லோரும் அமைதியா தான் இருக்கணும்” என்றார்.

அப்பொழுது வீட்டிற்குள் ஈஸ்வரனின் தந்தை ருத்ரன் நுழைந்தார், அவருடன் வக்கீல் மற்றும் சில ஊர் பெரியவர்கள் எல்லோரும் வந்து இருந்தனர்.

“சாரதா! குடிக்க எல்லோருக்கும் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா மா” என்று அழைத்தார் ருத்ரன்.

“ஹா! இதோ வரேங்க” என்று கூறி கையில் தண்ணீர் கப் அடங்கிய ட்ரேயுடன் வந்தார். எல்லோரையும் வரவேற்று, நலம் விசாரித்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டார்.

“அண்ணி! எனக்கு என்னமோ உங்க பிள்ளைங்க சொன்னது தான் சரின்னு தோணுது. வக்கீல் எல்லாம் வந்து இருக்கிறதை பார்த்தா, விஷயம் நம்ம கையை மீறி போய்டுச்சு நினைக்கிறன்” என்று புலம்பினார் மாலா.

“இல்லை, இந்த விஷயம் நம்மளை தவிர வேற யாருக்கும் தெரியவே தெரியாது. அதுவும் ருத்ரனுக்கு தெரியாது, இத்தனை வருஷமா தெரியாம தானே வச்சு இருக்கோம்”.

“நாம சொன்னா தான் உண்டே தவிர, வேற எப்படியும் அவனுக்கு நியூஸ் தெரிய வாய்ப்பே இல்லை. இது வேற விஷயம் நினைக்கிறேன், நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு, என்னனு பார்ப்போம்” என்று கூறினார் கங்காவதி.

“தம்பி! வீட்டில் இருக்கிற எல்லோரையும் கூப்பிடு பா. இப்போவே இதை பேசி முடிச்சிடலாம், நாள பின்ன அப்புறம் பிரச்சனை வர கூடாது பாரு. முதல உன் பையனை கூப்பிடு பா, அவனுக்கு இந்த விஷயம் சொல்லுவோம் அப்புறம் அவன் முடிவு எடுக்கட்டும்” என்று ருத்ரனுக்கு பெரியப்பா முறையில் இருக்கும் ஒரு வயதானவர் கூறினார்.

“சாரதா போய் ஈஸ்வரை கூப்பிடு, அப்படியே எல்லோரையும் இங்க வர சொல்லு” என்றார்.

விபரம் கேட்பதற்காக கீழே இறங்கி வந்த ஈஸ்வர், அங்கே எல்லோரும் அமர்ந்து இருப்பதை பார்த்து அவன் புருவங்கள் சுருங்கின. அவனின் தாயோ, தந்தை உன்னை கூப்பிடுகிறார் என்று கூறிவிட்டு அவரும் அவனுடன் சென்றார்.

“வாங்க தம்பி! முக்கியமான விஷயமா தான் வந்து இருக்கோம். நாங்க சொல்லுறதை விட, உங்க அப்பா இந்த விஷயத்தை சொன்னா தான் சரியா இருக்கும்” என்று நிறுத்தினார் ஒருவர்.

அவனோ, தன் தந்தையை பார்க்க அவர் தலை குனிந்து சில வருடங்களுக்கு முன் நடந்த கதையை கூற தொடங்கினார்.

ருத்ரனின் தந்தை வேலனுக்கு ரொம்ப வருடங்களாக ஆண் வாரிசு இல்லையே என்ற கவலை அரித்துக் கொண்டு இருந்தது. கங்காவதி பிறந்து ஐந்து வருடமாகிய பின்னும் அவரின் மனைவி சரஸ்வதி அடுத்து ஏதும் கரு உண்டாகவில்லை என்ற கவலை வேறு, அவர்களை அடுத்து என்ன என்று யோசிக்க வைத்துக் கொண்டு இருந்தது.

அப்பொழுது அவர்கள் ஒரு வேண்டுதலுக்காக திருவண்ணாமலைக்கு குடும்பத்துடன் சென்ற பொழுது, ஒரு வயதான முதியவர் அவர்களை ஆசிர்வதித்து ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்குமாறு கூறியதோடு அல்லாமல், அந்த குழந்தையால் இவர்களின் குடும்பத்திற்கு எல்லா வளமும் வந்து சேரும் என்று கூறி சென்று இருந்தார்.

அது கடவுளே அவர்களுக்கு ஆசி வழங்கியது போல் அமைய, கோவிலில் இருந்து அப்பொழுதே நேராக ஒரு அனாதை ஆசிரமம் நோக்கி தான் சென்றனர்.

அங்கே தான் ருத்ரனை அவர்கள் தத்தெடுத்து, வளர்க்க தொடங்கினர். மூத்த மகளிடம் இவன் தான் உன் தம்பி, இனி இக்குடும்பத்தை இவன் தான் பாதுக்காக்க போகின்றான் என்று சொல்லி, சொல்லி வளர்த்தனர்.

அந்த வயதில், அவளும் ஆசையாக தம்பியுடன் விளையாட தொடங்கி இருந்தாள். எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருந்த வேளையில் தான், சரஸ்வதி மீண்டும் கருவுற்றார்.

அப்பொழுது அவரை பார்க்க வந்த சரஸ்வதியின் அன்னை பேச்சி, பிஞ்சு மனதில் நஞ்சை வளர்ப்பது போல் கங்காவதி மனதில் ருத்ரனை சொந்த தம்பி இல்லை என்று கூறி, அவனை எப்படியாவது துரத்தி விட கூறிவிட்டு சென்றார்.

அன்று ஆரம்பித்தது பிரச்சனை, கங்காவதி ரூபத்தில். இதை முதலில் கவனிக்கவில்லை வேலன், ஆனால் அதன் பிறகு கங்கவதியின் நடத்தையில் கண்ட மாற்றம் கண்டு, அதை தன் மனைவிக்கும் எடுத்து கூறினார்.

“ஆமாங்க நானும் கவனிச்சேன், இவ ஒவ்வொரு தடவையும் எங்க அம்மா வரும் பொழுது தான் கொஞ்சம் மாறி தெரியுறா. எங்க அம்மா போதனையா இருக்குமோ, இருக்கும் தான் நினைக்கிறன் ஏன்னா அவங்களுக்கு நாம ருத்ரனை தத்தெடுத்து வந்தது பிடிக்கல” என்று கூறினார்.

“ம்ம்.. அவங்க அதை ஆனா பிஞ்சு மனசுல நஞ்சை விதைச்ச மாதிரி செய்து இருக்க கூடாது. அது பெரிய பாவத்தையே கொண்டு வந்து, நம்மளையே அழிச்சிடும்”.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
“நாம சொல்லி வைப்போம் கங்கா கிட்ட, அப்புறம் இனி சொத்தை ருத்ரன் பேர் ல இருக்கிறது தான் என்னைக்கும் நல்லதுன்னு படுது எனக்கு” என்று யோசித்தவரை பார்த்து புன்னகைத்தார் அவரின் மனைவி.

“எனக்கு நீங்க என்ன யோசிகுறீங்கன்னு புரியுதுங்க, ஆனா இந்த விஷயம் ருத்ரனுக்கு கூட தெரிய கூடாது. நம்ம நம்பி அண்ணா வக்கீல் தானே, அவரை வச்சு நீங்க எல்லாம் தயார் செய்துடுங்க” என்று கூறவும், தன் மனதை படித்த மனைவியை பார்த்து அவருக்கு மேலும், அவர் மேல் அன்பு பெருகியது.

இதை எல்லாம் இப்பொழுது சில நாட்களுக்கு முன்னர், தெரிந்து கொண்ட ருத்ரன் அதன் பிறகு தன் அக்கா செய்த குளறுபடிகளை எல்லாம், அதன் பின் தெரிந்து மனம் நொந்து போனார்.

ஆகையால், இப்பொழுது அவருக்கு என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை. தன் சரிபாதியையும், பிள்ளையையும் அவர் இதுநாள் வரை சரியாக நடத்தவில்லை என்ற குற்றுணர்ச்சி அவரை வாட்டி வதைத்து இருந்தது.

ஆகையால் தான் இன்று ஒரு முடிவுடன், எல்லோரையும் அழைத்து வந்து இருந்தார்.

“நான் என்ன செய்யணும் நினைக்கிற ஈஸ்வர்? நீ என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுறேன் பா, சாரதா என்னை மன்னிச்சிடு மா” என்று அவரையும் பார்த்து மன்னிப்பு வேண்டி நின்றார்.

“அண்ணி! நாம மோசம் போய்ட்டோம் போலயே, இந்த உண்மை எல்லாம் எப்படி தெரிஞ்சது இவருக்கு? யார் சொல்லி இருப்பாங்க?” என்று புலம்பி தள்ளினார் ஈஸ்வரனின் சித்தி.

“கொஞ்சம் சும்மா இரு, அவன் என்ன பதிலை சொல்ல போறான்னு தெரிஞ்சிகிட்டு அதை வச்சு முடிவு எடுக்கலாம்” என்று அவரை அடக்கினார் கங்காவதி.

“அப்பா! தாத்தா உங்க மேல இருக்கிற நம்பிக்கையில் தான், இவ்வளவு சொத்தையும் எழுதி வச்சிட்டு போய் இருக்கார். அதை யாருக்கு எப்படி கொடுக்கணும்ன்னு நீங்க தான் முடிவு எடுக்கணும், இதுல நான் சொல்ல ஒன்னும் இல்லை” என்றான்.

அவரோ, தன் மனைவியை அதன் பின் பார்த்து என்ன செய்ய என்றார். அவரோ, தன் கூடவே வருமாறு கூறி சமையற்கட்டுக்கு அழைத்து சென்றார். அவர்கள் பின்னாலே செல்ல கங்காவதியும், அவர் புதல்வர்களும் முனைய, ஈஸ்வரி அவர்கள் முன் நின்று உள்ளே விடாமல் தடுத்தாள்.

“ஏய்! வழியை விடு, சும்மா நந்தி மாதிரி குறுக்காலே நின்னுகிட்டு” என்று கங்காவதி அவளை கடிய, அவளோ ஈஸ்வரனை பார்த்து அருகே அழைத்தாள்.

“ஏனுங்க! இந்த கொலையை பண்ண தூண்டுறாங்க இல்லை அவங்களுக்கு எல்லாம் ஸ்ட்ராங் எவிடன்ஸ் எல்லாம் இருந்தா, குறைந்த பட்சம் எத்தனை மாசம் தண்டனை கிடைக்கும் அதுக்கு” என்று அருகில் வந்த அவனின் கணவனை பார்த்து கேட்டாள்.

“அதுக்கா, மாச கணக்கு எல்லாம் இல்லை வருஷ கணக்கா ஜெயில் கம்பி எண்ணிக்கிட்டு உள்ளேயே தான் இருக்கணும். கொலை செய்தவனை விட, அதை தூண்டி விடுறவங்களுக்கு தான் தண்டனை ஜாஸ்தி” என்றுவிட்டு அங்கே மீண்டும் வந்து இருந்தவர்களிடம் பேச சென்றான்.

“ஹல்லோ! கொஞ்ச நாளைக்கு முன்னால கூட நீங்க தானே மாமாவை தூண்டி விட பிளான் போட்டீங்க, அத்தையை போட்டு தள்ள சொல்லி” என்று ஈஸ்வரி அன்று அவர்கள் பேசியதை கூறவும், கங்காவதி பயந்து விட்டார்.


“இது உனக்கு எப்படி தெரியும்?” என்று தந்தி அடித்தது அவரின் பேச்சு.

“ஆல் டிடைல்ஸ் ஐ நோ! இப்போவே கொடுக்கிறதை வாங்கிக்கிட்டு இடத்தை காலி பண்ணா நீங்க தப்பிச்சீங்க. இல்லைன்னு வைங்க, என்னை பத்தி அப்புறம் நிறைய தெரிஞ்சுக்குவீங்க” என்று அவள் விட்ட மிரட்டலில் அவர்கள் தான் பின் வாங்கினர்.

“அத்தை! இந்த பொட்டச்சிக்கு பயந்து நாம ஏன் பின் வாங்கணும்?” என்று கொத்தித்தான் மூர்த்தி.

“நாம இப்போ பதுங்கி தான் இருக்கணும், பாய நேரம் பார்ப்போம். இவளை எப்படி என்ன செய்யணும்ன்னு, அப்புறம் நான் பிளான் போடுறேன்” என்று அவர் கூறிய பின் தான் சற்று அமைதி காத்தான் மூர்த்தி.

இவர்களுக்கு ஈஸ்வரை பற்றியும் தெரியவில்லை, அவனின் சரிபாதி ஈஸ்வரியையும் தெரியவில்லை. ஆனால் அது தெரிய வரும் பொழுது, இவர்களின் நிலை?

தொடரும்..





 




stella

அமைச்சர்
Joined
May 21, 2018
Messages
1,458
Reaction score
2,327
Age
28
மிகவும் அருமையான பதிவு ஈஸ்வரி நல்லா வச்ச இந்த கேடுகெட்ட ஜென்மங்களுக்கு வேட்டு ????????????
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
ஹலோ செல்லம் உங்களை எங்கயோ பார்த்த நியபகம்
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
மிகவும் அருமையான பதிவு ஈஸ்வரி நல்லா வச்ச இந்த கேடுகெட்ட ஜென்மங்களுக்கு வேட்டு ????????????
Nandri Stella akka
Keep supporting
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top