• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

EN AASAI ATHAI MAGALE 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
Hii friends,

என் ஆசை அத்தை மகளே கதைக்கு நேற்று நீங்க குடுத்த வரவேற்புக்கு ரொம்ப நன்றி...

அனன்யா உங்க எல்லாரையும் பார்க்க வந்துட்டா...படிச்சுட்டு உங்க கருத்துக்கள என்னோட பகிர்ந்துக்கோங்க ...

கதை பத்தி ஏதாச்சும் ஊகிக்க முடிஞ்சா என்கூட அதை பகிர்ந்துக்கோங்க...உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிிறேன்.

Cheers,
வெண்பா.
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
அன்று கல்லூரியின் முதல் நாள்...பல கனவுகளுடன் தங்கள் கல்லூரி வாழ்க்கையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மாணவர்கள்..

அந்த அரங்கமே பெற்றோர்கள் மட்டும் மாணவர்களால் சூழ்ந்து இருந்தது.ஆண் பிள்ளைகள் பெற்றோரை பிரியும் வருத்தமின்றி சிரித்த முகத்துடன் அவர்களுக்கு விடை கொடுக்க பெண் பிள்ளைகளோ பெற்றோரிடம் கதறி அழுது பிரியா விடை கொடுத்தனர்..

ஆனால் இந்த இரண்டும் இல்லாமல் பெற்றோரை விட்டு சற்று தள்ளி நின்று இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது இரண்டு கண்கள்.அவளுக்கு அழவும் தோன்றவில்லை...சிரிக்கவும் தோன்றவில்லை.

.

அவளுக்குப் பெற்றோரை பிரியும் வருத்தம் சிறிதும் இல்லை.இனி சித்தியிடம் திட்டு வாங்கத் தேவை இல்லை என்பது ஒரு புறம் சந்தோசமாக இருந்தாலும் விகாஷையும் ஜிம்மியையும் விட்டுப் பிரிவது மனதுக்கு வருத்தமாக இருந்தது.

அவள் அனன்யா..17 வயது மடந்தை...அப்பா முத்து...அவள் அம்மா மைதிலி..இப்பொழுது உயிருடன் இல்லை...அவளுக்கு 7 வயது இருக்கும்பொழுது ஒரு மர்மக் காய்ச்சலால் இறந்துவிட்டாள்.அவர் இறந்த ஒரு வருடத்தில் அவள் அப்பா வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டார்.அவள் பெயர் சரோஜா...

அப்பொழுது மைக்கில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விட்டுவிட்டுச் செல்லுமாறு அறிவிப்பு வர பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 1008 அறிவுரைகள் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றனர்.

முத்து அவளிடம் “ பத்திரம்” என்ற சொல்லுடன் விடைபெற அவள் பின்னால் செல்லாமல் தேங்கி நின்ற சரோஜா அவர் சென்றவுடன் அவளிடம் “இதுக்கு மேல எங்க வீட்டுக்கு வராத...முடிஞ்சா இங்கயே எவனையாச்சு பாத்து கட்டிக்கோ..அங்கே நீ இல்லாமல் நானும் எங்க பிள்ளைகளும் சந்தோசமா இருக்கோம்.லீவுக்கு கூட அங்கே வரணுமுனு நினைக்காத..உங்க அப்பவே உன்ன பண்டிகைக்கு எல்லாம் கூப்பிட்ட கூட ஏதாச்சு சாக்கு சொல்லி இங்கயே இருந்துக்கோ.அப்புறம் உங்க அப்பா குடுத்த 50௦௦ ரூபாய் நான் பேக்ல இருந்து எடுத்துட்ட...உனக்கு தான் இங்க எல்லாம் இவங்களே கொடுக்குறாங்கல...அப்புறம் எதுக்கு பணம்...ஏற்கனவே பீஸ்னு 1௦௦௦௦ ரூபாய் வேற தெண்ட செலவு பண்ணிருக்கு.இருந்தாலும் பாவமுனு 5௦௦ ரூபாய் கொடுக்குற...பார்த்து செலவு பண்ணு” என்றவர் கையில் ஒரு 5௦௦ ரூபாய் நோட்டை திணித்து விட்டுச் சென்றார்.

அவர் சென்றதையே பார்த்துக் கொண்டிருந்தவளின் உதட்டில் ஒரு மெல்லிய விரக்திப் புன்னகை வந்து போனது. எப்பொழுதும் போல் மனதில் இருக்கும் ஒரு வெறுப்பு..என்ன விதமான வாழ்க்கை இது என்ற சலிப்பு.இந்தக் கல்லூரியில் இடம் கிடைத்தவுடன் இருந்த சந்தோசம் இப்பொழுது சுத்தமாக இல்லை.

ஆனால் இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு கண்கள் கோபத்தில் சிவந்தது.

பின்பு தன் பெட்டிகளை எடுத்துக் கொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றாள்.அங்கே இருந்தவர்களைப் பார்த்து இவள் சிநேகமாக புன்னகைக்க அவர்களும் இவளைப் பார்த்து புன்னகைத்தனர்.

இவளுடன் பேச அவர்களுக்கு விருப்பம் இல்லை போலும்.தங்களுக்குள்ளே பேசி சிரித்துக் கொண்டனர்.அனன்யாவிற்கு அவர்கள் தன்னைப்பற்றி பேசித்தான் கிண்டல் செய்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக இருந்தது.

ஏனெனில் இவள் தோற்றம் அப்படி இருந்தது.நன்றாக எண்ணெய் வைத்து படிய வாரிய முகம்.தலையில் 1 முழம் கனகாம்புரம் பூ.காலையில் அவளை கண்ணாடியில் பார்க்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை.

ஆனால் இப்படித்தான் கிளம்பவேண்டும் என்பது சித்தியின் ஆணை.அதனை அவளால் மீற முடியாது.எப்பொழுதும் போல் வேறு வழி இல்லாமல் அப்படியே கிளம்பினாள்.

நல்ல வேலையாக அவளுக்கு நாளைக்கு தான் கல்லூரி ஆரம்பம்.நாளை காலை எழுந்து தலைக்கு குளித்து கிளம்பிக்கொள்ளலாம் என்று நினைத்தவள் தலையில் இருந்த பூவை கழட்டி வைத்துவிட்டு தன் துணிகளை கப்போர்டில் அடுக்கினாள்.

திடீரென்று கதவு தட்டும் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்த அனன்யா அங்கே ஒரு பெண் இரண்டு பைகளை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வருவதைப் பார்த்தவள் ஓடிச் சென்று ஒரு பையை அவள் கைகளில் இருந்து வாங்கினாள்.

அந்தப் பெண் இவளைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்து “ஹாய் நான் சிநேகா.நீங்க?” என்று கேட்க “நான் அனன்யா..” என்று இவளும் பதிலுக்குப் புன்னகைத்தாள்.இருவரும் பொதுவான விஷயங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

சிநேகாவிடம் மற்ற இரு பெண்களான சித்ராவும் பானுவும் நன்றாகப் பேசினர்.ஆனால் அனன்யாவிடம் அவர்களால் இயல்பாகப் பேச முடியவில்லை.அவளை பட்டிக்காடு என்று நினைத்தவர்கள் அவளிடம் பேச முயற்ச்சிக்கவில்லை.

அனன்யாவும் அதற்காக வருத்தப்படவில்லை.தன்னுடன் பழகும் சிநேகாவிடம் நன்றாகப் பேசினாள்.சிநேகாவிற்கு அனன்யாவை மிகவும் பிடித்துவிட்டது.அனன்யாவின் புறஅழகை விட அக அழகு சிநேகாவை மிகவும் கவர்ந்தது.

இரவு உணவை முடித்துக் கொண்டு வந்தவுடன் மற்ற மூன்று பெண்களும் அவரவர் பெற்றோருடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தனர்.அனன்யா அவை அனைத்தையும் பார்த்ததும் எப்பொழுதும் போல் வாழ்க்கையின் மேல் இருந்த சலிப்பு இன்று கொஞ்சம் அதிகமானதைப் போல் தோன்றியது.

ஒன்றும் செய்யத் தோன்றாமல் படுக்கையில் விழுந்தவள் உறங்க முயன்று கொண்டிருந்தாள்.ஆனால் தூக்கம் வருவேனா என்று அவளுடன் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தது.

கண்ணை மூடி இருந்தவள் தன் மேல் ஏதோ நிழல் படுவதைப் போல் இருந்ததால் கண் திறந்தாள்.அங்கே அவள் முன் சிநேகா கையைப் பிசைந்த படி இருந்தாள்.

“எனக்கு தனியா படுத்தா தூக்கம் வராது?உன்கூட படுக்கட்டுமா?” என்று கொஞ்சம் சங்கடப்பட்டுக் கொண்டே கேட்க அனன்யாவிற்கு எல்லையில்லா மகிழ்ச்சி.அவளிடம் “எனக்கும் தனியா படுக்கறதுனா பயம்..இனிமேல் நாம ஒன்னாவே படுத்துக்கலாம்” என்றாள்.பல நாள் கழித்து அவள் தனியாக படுக்கும் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

படுத்த 5 நிமிடங்களில் சிநேகா உறங்கிவிட அனன்யாவிற்கு தூக்கம் வரவே இல்லை.அந்த நாட்கள் மிக பயங்கரமான கனவு போல் அவள் முன் தோன்றியது.
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
தன் அப்பாவிற்கு இன்னொரு கல்யாணம் நடந்ததை சந்தோசமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அனன்யா.அவள் அம்மா இறந்ததில் இருந்து அவளுக்குள் ஒரு தவிப்பு இருந்து கொண்டு இருந்தது.அவளை அவள் அப்பா தான் கவனித்துக் கொண்டார்.ஆனாலும் அவரால் அவளிடம் தாய் போன்ற நேசத்தைக் காட்ட முடியவில்லை.

என்னதான் வாரத்திற்கு ஒரு முறை அவள் அத்தை சாந்தி வந்து அவளைப் பார்த்துக் கொண்டாலும் அந்த சிறு பிள்ளையின் மனம் தாய் பாசத்திற்காக,தாய் செய்யும் சுவையான உணவிற்காக,பள்ளியில் இருந்து வந்ததும் அன்று நடந்தவற்றை பகிர்ந்து கொள்ள என்று ஒன்றொன்றுக்கும் தாய்க்காக அந்தப் பிஞ்சு மனம் ஏங்கியது.
ஒரு நாள் காலை பள்ளி செல்லும் பொழுது அவள் தலையை பின்னத் தெரியாமல் பின்னிக் கொண்டிருக்க அவளிடம் வந்த தந்தை “அனன்யா கண்ணு...அம்மா இல்லாம உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குல்ல?” என்று கேட்க அந்தக் குழந்தையும் “ஆமா ப்பா...அம்மா இல்லாம எனக்கு அழுகை அழுகையா வருது...அம்மா ஏன் நம்மள விட்டிட்டு சாமி கிட்ட போனாங்க?” என்று அழுதவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டவர் மகளிடம் “நான் உனக்கு இன்னொரு அம்மா கூட்டிட்டு வரவா?அவங்க உன்ன மைதிலி அம்மா மாதிரி நல்லா பாத்துப்பாங்க...உனக்கு சாப்பாடு ஊட்டி விடுவாங்க..உன்ன குளிப்பாட்டி விடுவாங்க..உன்கூட விளையாடுவாங்க..” என்று சொல்ல அந்தப் பிஞ்சு நெஞ்சம் தனக்கு புது அம்மா கிடைக்கப் போகும் சந்தோஷத்தில் தன் அப்பாவிற்கு முத்தத்தை கொடுத்து “சூப்பர் ப்பா...நாம புது அம்மாவ இப்பவே போய் கூட்டிட்டு வரலாம் “ என்று குதித்தது.

ஆனால் பாவம் அந்தப் பிஞ்சு மனதிற்கு தெரியவில்லை அவள் அப்பா கல்யாணம் செய்து கொண்டாள் தன் வாழ்வு இன்னும் மோசம் ஆகிவிடும் என்பது.அவளிடம் சம்மதம் வாங்கியவர் தன் எண்ணத்தை குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொண்டார்
இதைக் கேட்ட சரவணன் (மைதிலியின் அண்ணன்) சம்மதிக்கவேயில்லை.பின்பு சாந்தி தான் “நாம என்னதான் அனன்யாவ நல்லா பார்த்துக்கிட்டாலும் அவ அவங்க அம்மாக்காக ரொம்ப ஏங்கிறாங்க...ஆதித்யா என்கிட்ட பேசறப்ப கூட அவளோட கண் ஏக்கமா பார்த்தது.நாம என்ன பண்ணாலும் ஒரு அம்மாவோட இடத்த யாருனாலையும் நிரப்ப முடியாது.இன்னொரு பொண்ணு அவளுக்கு அம்மாவா அன்பு காட்டி அவ கூடியே எப்பவும் இருந்தா அவளுக்கு இந்த ஏக்கம் குறைஞ்சு போயிரும்.அந்த பொண்ணு சரோஜாவப் பார்த்தாலும் நல்லா பொண்ணா தான் தெரியுது.அதனால அவ நம்ம அனன்யாவ நல்லா பார்த்துப்பானு எனக்கு தோணுது” என்று சொல்லி சமாதிக்க வைத்தார்.அப்பொழுதும் சரவணன் அரை மனதாகவே சம்மதித்தார்.

காதலித்து கரம் பிடித்த மனைவி இறந்த ஒரு வருடத்தில் எப்படி இன்னொரு பெண்ணை அவனுக்கு கல்யாணம் செய்ய மனம் சென்றது என்று நினைக்கையில் அவருக்கு வேதனையாக இருந்தது.தன் ஆசை தங்கச்சி இறந்தது அவருக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய ஒரு அடி.

தன் தங்கை மேல் உயிரையே வைத்திருந்ததால் தான் அவர் மைதிலியின் கல்யாணத்திற்கு சம்மதித்ததே.அவருக்கு முத்துவைப் பிடிக்கவேயில்லை.ஆனாலும் தங்கை ஆசைப்பட்டுவிட்டாலே என்ற ஒரே காரணத்திற்காக முத்துவிற்கு அவளை கல்யாணம் செய்து கொடுத்தார்.கல்யாணம் செய்து கொடுத்ததோடு நின்றுவிடாமல் அவருக்கு ஒரு ரைஸ் மில்லையும் வைத்துக் கொடுத்தார்.


முத்து சரோஜா திருமணம் முடிந்ததும் முதலில் சரோஜா மாற்றியது அவள் தூங்கும் இடத்தைத் தான் .எப்பொழுதும் தன் தந்தையுடன் தூங்கும் அனன்யாவை மற்றொரு அறையில் படுக்க வைத்தார்.

சரோஜா முத்துவிடம் “அவளுக்கு எட்டு வயசாச்சு...அதனால அவள் இனிமேல் தனியா தூங்கிப் பழகட்டும்.நம்ம கூடியே தூங்குனா பெருசு ஆனதுக்கு அப்புறமும் இந்தப் பழக்கம் தான் வரும்.” என்றவர் பின்பு வெட்கப்பட்டுக் கொண்டே “எனக்கு உங்க கூட தனியா இருக்கனும்” என்று சொல்ல அவரும் புது மனைவியின் மோகத்தில் சரி என்று சொல்லிவிட்டார்.

பிறந்தது முதல் தனியாக படுத்துப் பழக்கம் இல்லாத அனன்யா “நான் தனியா படுக்க மாட்டேன்.அப்பா கூடத் தான் படுப்பேன்” என்று அடம் பிடிக்க முத்து பொறுமையாக அவளிடம் தனியாக படுக்குமாறு எடுத்துரைக்க அவள் மீண்டும் அடம் பிடித்தாள்.

அவரும் மீண்டும் பொறுமையாக எடுத்துக்கூறினார். ஆனால் அனன்யா அதை காதில் வாங்காதவளாய் முத்துவின் அறைக்குச் சென்றுப் படுத்துவிட்டாள்.முத்துவும் வேறு வழி இன்றி அனன்யாவின் ஒரு புறம் சென்று படுத்தவர் சரோஜாவையும் மற்றொரு புறம் வந்து படுக்கச் சொன்னார்.

சரோஜா திருமணம் நடந்தவுடன் எப்படியாவது தந்தையையும் மகளையும் பிரித்து விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தாள்.ஆனால் இந்தச் சிறு பெண் இவ்வளவு அடம் பிடிப்பாள் என்று நினைத்துப் பார்க்கவில்லை.

பின்பு இரண்டு நாட்கள் கழித்து அனன்யாவே தன் தந்தையிடம் தான் தனியாகப் படுக்க வேண்டும் என்று சொல்ல அவரும் சரி என்று விட்டார்.மகள் ஏன் அப்படி சொன்னாள் என்று யோசிக்கவே இல்லை.

பின்பு நல்லவள் போல் நடித்தவள் அனைவரையும் அவள் அனன்யாவிற்கு நல்லா தாயாக இருக்கிறாள் என்று சொல்ல வைத்தாள்.அவள் போட்ட நாடகத்தை சரவணனும் சாந்தியும் கூட நம்பிவிட்டனர்.

அப்படியே யோசனையில் உழன்று கொண்டிருந்தவள் தன்னையும் அறியாமல் தூங்கிவிட்டாள். அடுத்த நாள் காலை சிநேகா எழுப்பும் பொழுது தான் எழுந்தாள்.அவள் எழுப்பியவுடன் விருக்கென்று எழுந்தவள் சிநேகாவைப் பார்த்ததும் நிம்மதியாக மூச்சு விட்டாள்.

“ஏன் டி என்ன ஆச்சு?ஏன் அப்படி அடிச்சு பிடிச்சு எழுந்த?” என்று கேட்க “ச்சு..கெட்ட கனவு” என்றவள் எழுந்து குளிக்கச் சென்றாள்.

இருவரும் கிளம்பி கல்லூரிக்குச் சென்றனர்.அவர்கள் வகுப்பிற்குள் நுழையும் வரை இரு கண்கள் அனன்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அன்று முதல் நாள் என்பதால் வகுப்புகள் பெரியதாக ஒன்றும் இல்லை.மதிய இடைவேளையின் பொழுது சிநேகாவும் அனன்யாவும் மெசிற்கு சாப்பிடச் சென்றனர்.

அப்பொழுது “ஏய் பிங்க் சுடிதார்” என்று யாரோ கூப்பிடும் ஓசை கேட்க இருவரும் குரல் கேட்ட திசையை நோக்கி திரும்பினர்.அங்கே ஆறரை அடி உயரத்தில் ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.

“உன்ன தான்.இங்க வா” என்று அனன்யாவைப் பார்த்து அந்த இளைஞன் சொல்ல அனன்யாவும் சினேகாவும் பயந்து கொண்டே அந்த இளைஞனை நோக்கிச் சென்றனர்.

அனன்யா சிநேகாவிடம் “இப்படியே அந்தப் பக்கம் ஓடி போய்டலாம் டி..எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று சொல்ல சிநேகாவோ “காலேஜில இது எல்லாம் சர்வ சாதாரணம் டி...பயப்படாம இது எல்லாம் பேஸ் பண்ணி பழகனும்..வா” என்று அவளை தைரியமாக அழைத்துச் செல்ல அனன்யா பயந்து கொண்டே அவளுடன் சென்றாள்.

“என்ன சீனியர் கூப்டா உடனே வரணுமுனு தெரியாதா..ஆடி அசைஞ்சு வரிங்க” என்று கேட்க சிநேகா அவனை முறைத்தாள்.அதைக் கண்டு கொள்ளாதவன் அனன்யாவிடம் திரும்பி “நான் உன்ன மட்டும் தான கூப்பிட்ட..” என்று புருவத்தை உயர்த்திக் கேட்க அவள் திரு திருவென்று முழித்தாள்.

அவளிடம் ஒன்றும் பேசாமல் சிநேகாவிடம் திரும்பியவன் “இங்க எதுக்கு நிக்குற..மெஸ்ஸுக்கு போ” என்று விரட்ட அவனை முறைத்தவள் அங்கிருந்து செல்ல முற்பட்டாள்.ஆனால் அவள் கையை விடாது அனன்யா அழுத்தமாகப் பிடித்திருந்தாள்.

‘போகாத’ என்பதைப் போல் அவளிடம் தலையசைத்தாள்.அவனோ சிநேகாவைப் பார்த்து “உன்ன போனு சொல்லி 1௦ நிமிஷம் ஆச்சு” என்று முறைக்க வேறு வழி இல்லாமல் அனன்யாவை விட்டுச் சென்றாள்.

அவள் போன திசையைப் பார்த்துக் கொண்டிருந்தவளை “க்கும்” என்ற குரல் கலைத்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top