• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En asai kanmaniye-3.2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"நான் ஏண்டி ஷாக் ஆகனும்?. அந்த கார்த்தி அவளை எப்படி லவ் பன்னுகிறேன் என்று உனக்கே தெரியும். அவனை மேரேஜ் செய்தால் போகும் இடத்திலும் வசதியாகவே வாழலாம் என்று நினைத்தேன். அது இல்லை என்றாகி விட்டது அவ்வளவுதான்டி"

"அப்பொழுது கார்த்தியை அவள் கல்யாணம் செய்து வாழ்வதை வேடிக்கை பார்க்க போகிறாயா அக்கா?"

"ஏய்! எனக்கு அந்த கார்த்தியை விட டென்னிஸ் கேரியர்தான் முக்கியம். இந்த மேரேஜ் முடிந்தால் அந்த கீர்த்தனாவின் டென்னிஸ் கேரியர் முடிந்து விடும். நான் அவள் தொல்லை இல்லாமல் நிம்மதியாக ஆடலாம்" என்று சிரித்தாள் வந்தனா.

"அக்கா! அவள் மேரேஜ்க்கு பின்னர் ஆட வந்துவிட்டாள் என்ன செய்வாய் நீ?"

"அவள் ஆட வர வாய்ப்பு இனி குறைவு. அவள் அதை மீறி வந்தால் எப்படி தடுப்பது என்பதை அப்பொழுது பார்த்து கொள்ளலாம்டி."

"சரிக்கா... இதை நினைத்து நாளை பைனல்சை கோட்டை விட்டுவிடாதே"

"காஞ்சு... இப்பொழுதுதான் எனக்கு மைண்ட் ரிலாக்ஸ் ஆக இருக்கிறது. என் எதிரி கீர்த்தி இனி ஆட மாட்டாள். இந்த தெம்பிலே நாளை பைனல்சை ஜெயித்துவிடுவேன்"

"ஆல் தி பெஸ்ட் அக்கா." என்று தங்கை காஞ்சனா போனை வைத்தாள்.

வந்தனா உடனே தன் போனில் இருந்த கீர்த்தனா போட்டோவை பார்த்து "எனக்கு தொழில், வாழ்க்கை ரெண்டிலும் நீதான் எதிரி. என் ஆளை மேரேஜ் பன்ன போறியா? நீ எப்படி நிம்மதியாக வாழ்கிறாய் என்று பார்க்கிறேன்" என்று கூறினாள்.
அவள் முகத்தில் மர்ம புன்னகை தவழ ஆரம்பித்தது.

வந்தனா, காஞ்சனா இருவரும் மஞ்சுளா டெக்ஸ்டைஸ், மஞ்சுளா ஜுவல்லர்ஸ் நிறுவன அதிபர் ராமநாதன் மஞ்சுளா தம்பதியரின் வாரிசுகள்.

கீர்த்தனாவை ஆரம்பத்தில் இருந்து சாய்க்க நினைக்கும் வந்தனா பள்ளி முதல் கல்லூரி வரை ஒரே வகுப்பில் பயின்ற தோழிகள்.
அக்காவை போல் தங்கை காஞ்சனாவும் கல்பனாவும் பள்ளி, கல்லூரிகளில் ஒரே வகுப்பை சார்ந்தவர்கள்.

வந்தனா சொன்னமாதிரி அடுத்த நாள் பைனல்சை வென்று கோப்பையை தன் வசமாக்கி கொண்டாள்.

கீர்த்தனா தன் மனைவி ஆக போவதால் கார்த்திகேயன் உற்சாகமாக தொழிலில் ஈடுபட ஆரம்பித்து விட்டான்.

வந்தனா தன் தங்கையுடன் கார்த்திகேயன் வீட்டிற்கு காரில் வந்தாள்.

வீட்டில் அனைவரும் வெளியே சென்று இருக்க உமாதேவி மட்டும் தனியாக இருந்தாள்.

"ஹாய் ஆண்ட்டி" என்றபடி உள்ள நுழைந்தவர்களை "வா வந்தனா... வாம்மா காஞ்சனா" என்றாள் உமாதேவி.

"ஆண்டி... வீட்டில் யாரும் இல்லையா?"என்றாள் வந்தனா.

"இல்லைம்மா... எல்லோரும் வெளியில் போயிருக்காங்க."

"போனவாரம்தான் மேட்ச் வின் செய்துவிட்டு வந்தேன். இரண்டு வாரமாக மேட்ச்க்காக வெளி மாநிலத்திலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது." என்றாள் வந்தனா.

"அதனால் என்ன உனக்கு பதில் உன் தங்கை வந்து போய் கொண்டு இருக்கிறாளே"

"ஆண்ட்டி... நேற்றுதான் நான் புனேவிலிருந்து வந்தேன். உங்கள் ரெண்டாவது சன்னுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிருக்காம். எங்கேஜ்மெண்ட் அன்றைக்கு நான் டெல்லியில் இருந்தேன். காஞ்சுதான் போனில் எனக்கு விஷயத்தை சொன்னாள்" என்றாள் வந்தனா.

"ஆமாம்மா... கார்த்திக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடித்து இருந்தது அதுதான் நாங்கள் அவள் வீட்டில் பேசி மேரேஷ் பிக்ஸ் செய்துவிட்டோம். பெற்றவர்களுக்கு அவர்கள் சந்தோஷம்தானே முக்கியம்"
என்றாள் உமாதேவி.

"கீர்த்தனா என் கிளாஸ்மேட். நானும் அவளும் ஒன்றாகதான் ஸ்கூல், காலேஜ் எல்லாம் படித்தோம். டென்னிஸ் அவள் நல்லா விளையாடுவாள். என்ன அவர்கள் ஸ்டேடஸ் கொஞ்சம் கம்மி. நீங்கள் நம் லெவலுக்கு ஏற்றமாதிரி நல்ல இடம் பார்த்து இருக்கலாம் ஆண்ட்டி" என்று கூறினாள்.

"நாங்களும் மிடில் கிளாசில் இருந்துதான் இந்த லெவல் வந்திருக்கிறோம். பணமா வாழ்க்கையில் முக்கியம்? கார்த்தி சந்தோஷம்தான்மா முக்கியம். இப்பொழுது அவன் சந்தோஷமாக இருக்கிறான். அதுவே எங்களுக்கு போதும்" என்றாள் உமாதேவி.

"ஆமாம்மா... எங்கள் அம்மா கூட இதைத்தான் அடிக்கடி சொல்லுவாங்க" என்றாள் காஞ்சனா.

"உங்கள் பிள்ளைக்காக நீங்கள் அவர்களிடம் சம்பந்தம் வைத்து கொண்டது எல்லாம் ரொம்ப பெரியவிஷயம்தான் ஆன்ட்டி" என்றாள் வந்தனா.

"அவள் மேரெஜ்க்கு அப்புறம் டென்னிஸ் அது இதுன்னு போக போகிறாள். நீங்கள் இப்பொழுதே அதை பற்றி அவளிடம் பேசி கொள்ளுங்கள். நான் ஏன் சொல்கிறேன் என்றால் நம் பேமிலி பற்றி யாரும் தப்பாக பேச கூடாது இல்லையா" என்றாள் வந்தனா.

"மேரேஜ்க்கு அப்புறம் அதை பற்றி பேசி கொள்ளலாம்மா." என்றாள் உமாதேவி.

"உங்க சன் அவள் சொல்வதற்கு எல்லாம் சரி என்பார். நீங்களும் அங்கிளும்தான் அவருக்கு நம் ஸ்டேட்டஸ் பற்றி எடுத்து சொல்ல வேண்டும் ஆண்டி" என்றாள் வந்தனா.

"சரிம்மா" என்றார் உமாதேவி.

"என்னை மாதிரி காஞ்சனா மாதிரி ஆட்கள் ஸ்டேட்டஸ் பார்த்து நடந்து கொள்வார்கள். கீர்த்தனாவுக்கு எல்லாம் நாம்தான் சொல்லி தர வேண்டும் இல்லையா? நீங்கள் பார்த்து கொள்வீர்கள். உங்கள் அனுபவத்திற்கு முன் நான் ஒன்றும் இல்லை ஆண்டி" என்றாள் வந்தனா.

உமாதேவி எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக சிரித்தார்.

"சரிம்மா... நான் வந்து ரொம்ப நேரமாச்சு. நாங்கள் அப்படியே கிளம்பி ஷாப்பிங் போய் விட்டு வீட்டுக்கு போகிறோம்" என்ற வந்தனா சொல்ல வந்த வேளை இனிதே முடிந்த மகிழ்ச்சியில் டீ குடித்து கிளம்பினாள்.

கார்த்திகேயன் வீட்டில் திருமண காரியங்களை தொடங்கி விட்டார்கள்.

சொந்தங்களுக்கு கொடுக்க பத்திரிக்கைகள், நண்பர்களுக்கு தர இன்விடேஷன் என்று இரண்டிலும் கீர்த்தனாவின் குடும்பத்தினருக்கு விக்னேஷ் மூலம் காட்டி சம்மதம் பெற்று அடித்து இரு குடும்பமும் பகிர்ந்து கொண்டார்கள்.

திருமணம் மற்றும் ரிசப்சன் இரண்டிற்கும் மண்டபங்கள், சமையல், பத்திரிக்கைகள் விநியோகம் என்று ஏற்பாடுகள் களை கட்ட ஆரம்பித்தன.

கீர்த்தனா தரப்பிலும் தனிபட்ட ஜவுளி, நகை, அழைப்பிதழ் விநியோகம் என்று ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன.

அழைப்பிதழ் பார்த்த வந்தனா அதில் மணமகள் என்ற இடத்தில் இருந்த கீர்த்தனா பெயர் பார்த்து முதலில் கோபம் அடைந்து பின் மர்ம புன்னகை புரிந்தாள்.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top