• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

en asai kanmaniye-5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
கீர்த்தனாவின் திருமணம் மிக சிறப்பாக முடிந்து வந்தவர்கள் மதிய சாப்பாட்டை முடித்து கொண்டு கிளம்பி விட்டார்கள்.

கீர்த்தனா மற்றும் கார்த்தியின் முக்கிய உறவினர்கள் மட்டும் மண்டபத்தில் இருந்தார்கள்.

விக்னேஷ் மற்றும் கார்த்தியின் அண்ணன் செல்வகணேஷ் இருவரும் மண்டபத்தை காலி செய்யும் வேலையில் ஈடுபட்டு இருந்தார்கள்.

சில நிமிடங்களில் அனைவரும் மண்டபத்தில் இருந்து கிளம்பி கார்த்திகேயன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

கார்த்திகேயன், கீர்த்தனாவுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு உள்ளே அழைத்து செல்லபட்டு பால், பழம் கொடுத்தார்கள்.

சில மணி நேரங்கள் கார்த்தி வீட்டில் இருந்தபின் அங்கு இருந்து கிளம்பி கீர்த்தனா வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

கீர்த்தனா வீட்டில் ஆரத்தி எடுக்கப்பட்டு உள்ளே சென்ற அவர்களை தனி அறைகளில் தங்க வைத்தார்கள்.

அன்று நாள் நல்லதாக இருந்த காரணத்தால் முதலிரவை அன்றே நடத்திவிட இரண்டு வீட்டு பெரியவர்களும் முடிவு செய்து ஏற்பாடுகளை செய்து விட்டார்கள்.

கீர்த்தனாவை விட்டு பிரிந்து இருந்த கார்த்திகேயனுக்கு அவளை காணாமல் நிலை கொள்ளாமல் தவித்து கொண்டு இருந்தான்.

அவன் அண்ணன், அண்ணி, தங்கை, அம்மா, அப்பா என்று மாற்றி மாற்றி வந்து பேசி கொண்டு இருந்தார்கள். அவன் நண்பர்கள் வேறு போனில் வந்து தொல்லை செய்தார்கள்.

கீர்த்தனாவிற்கு வாட்ஸ்அப் மூலம் சில மெசேஜ்கள் தட்டி விட்டான். எந்த மெசேஜ்க்கும் பார்த்த அடையாளம் கூட காட்டவில்லை.

வாட்ஸ்அப் மெசேஜ் கூட பார்க்காமல் இவள் என்னதான் செய்கிறாள் என்று யோசித்தபடி காலத்தை கடத்தினான் நம் கார்த்திகேயன்.

அங்கே கீர்த்தனாவை சுற்றி தங்கை கல்பனா, நாத்தனார்கள் செல்வபிரியா,விஜயலட்சுமி, அம்மா ராதா என்று பெரிய கூட்டமே இருந்தது. அவள் மாமியார் உமாதேவி அடிக்கடி வந்து பார்வையிட்டு பேசி சென்றார்.

கீர்த்தனா இளம் பச்சை நிற சேலை அணிந்து கூந்தலை தளர்வாக விடபட்டு பின்னி மல்லிகை பூ சூடி சிறிய நகைகள் அணிந்து லைட்டாக மேக்கப் போட்டு இருந்தாள்.

அவளை சுற்றி இருந்தவர்கள் கேலி செய்து கொண்டிருக்க அதை வெட்கத்துடன் ஏற்று கொண்டிருந்தாள்.

அவள் வெளியே மற்றவர்கள் முன்னால் சிரித்து கொண்டு இருந்தாலும் உள்ளே அழுது கொண்டு இருந்தாள்.

ஆம். அவளின் சிறுவயது முதல் கண்டு கொண்டிருந்த கனவுகள் இன்றுடன் முடிந்து விடுமா என்ற எண்ணமே அவள் மனதின் அழுகைக்கு காரணம் ஆகும்.

தங்கை கல்பனா அக்காவின் முகத்தை பார்த்தே அவளின் நிலை உணர்ந்து தனிமை எப்பொழுது கிடைக்கும் என்று காத்திருந்தாள்.

சில நிமிடங்களில் கிடைக்க பேச துவங்கினாள் கல்பனா.

"அக்கா... நீ வெளியில்தான் சிரித்து கொண்டிருக்கிறாய் ஆனால் உள்ளே அழுகிறாய் என்று தெரியும். நீ கார்த்திக் மாமாவிடம் தைரியமாக பேசி விடு அக்கா."

"என்னடி பேச சொல்கிறாய்? கல்யாணத்துக்கு முன் பேச முடியவில்லை. இந்த பர்ஸ்ட் நைட்டை கொஞ்சம் தள்ளி வைத்திருந்தால் பேசலாம் ஆனால் அதையும் இன்றைக்கே ஏற்பாடு செய்து விட்டார்கள். அவர் வேறு ஆவலாக காத்து கொண்டிருப்பார். இப்பொழுது போய் எனக்கு பர்ஸ்ட்நைட் எல்லாம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? எந்த ஆம்பளைதான் இதை ஏற்று சம்மதிப்பார்?"

"கொஞ்சம் கஷ்டம்தான் அக்கா ஆனால் அவர் உன்னிடம் பேச்சு கொடுத்து, டாபிக் டென்னிஸ் பக்கம் திரும்பினால் உன் ஆசையை சொல்லிவிடு"

"ஆமாண்டி... எத்தனை சினிமா பார்த்து இருக்கிறாய். நான் உள்ளே போய் கொஞ்ச நேரம் வேண்டுமானால் அமைதியாக கேட்பார் அப்புறம் லைட் ஆப் செய்து அவர் வேலையை முடிக்க பார்ப்பாரா இல்லை நீ பேசு என்று வேடிக்கை பார்த்து கொண்டிருப்பாரா?"

"நீ சொல்வதும் சரிதான் அக்கா"

"கல்பி... என் கனவெல்லாம் போச்சுடி. இந்த அம்மா திட்டம் போட்டு அவர்கள் நினைத்ததை நடத்தி விட்டார்கள்" என்று கூறி கீர்த்தனா அழத் தொடங்கினாள்.

"அக்கா... அழாதே... பர்ஸ்ட் நைட் நடந்தால் என்ன? நிறைய பெண்கள் குழந்தை பெற்ற பிறகு கூட சாதிக்கவில்லையா? நீ அந்த மாதிரி சாதிக்க முடியும். கார்த்தி மாமாகிட்ட நீ பேசி டென்னிஸ் விளையாட முயற்சி செய்"

"அவர்கள் எல்லாம் முன்னாடி சாதித்து விட்ட நட்சத்திரங்கள். நான் வளர்ந்து வரும் ஆள். இந்த ஆறு மாத கேப்பில் என் ரேங்க் 600ல் இருந்து 800க்கு மேல் போய்விட்டது. இன்னும் நான் பல மாதங்கள் கடந்தால் ரேங்க 1000க்கு மேல் போய்விடும் அப்புறம் எல்லாம் சான்சே இல்லை"

"நீ சொல்வதும் சரிதான் அக்கா"

"நான் பிரக்னன்ட் ஆகி குழந்தை எல்லாம் பிறந்து விட்டால் என்னை எப்படிடி விளையாட விடுவார்கள்"

Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"அக்கா... நீ சொல்வது எல்லாம் சரிதான். நீயாக எந்த முடிவும் எடுக்காமல் உன் விருப்பத்தை சொல்லி பார். மாமா என்ன சொல்கிறார் என்று கேட்ட பின்னர் எந்த முடிவும் எடுத்து கொள்ளலாம். மாமா கண்டிப்பாக உன் விருப்பத்தை ஏற்று கொள்வார். அவர் சம்மதித்த பின்னர் அவர் பேமிலியிடம் பேசு. எனக்கு கண்டிப்பாக அவர்கள் எல்லாம் இதற்கு சம்மதிப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது அக்கா" என்று கூறினாள் கல்பனா.

"சரிடி. நான் பேச பார்க்கிறேன். கல்பி... உன்னிடம் பேசிய பிறகு மனசு நிம்மதியாக இருக்கிறது" என்று சிரித்தபடி கூறினாள் கீர்த்தனா.

"கல்பனாவை நம்பினோர் என்றும் கைவிடபடார்" என்று பதிலுக்கு கல்பனா கூற அக்கா தங்கை இருவரும் சிரித்தார்கள்.

கதவை தட்டபட கல்பனா சென்று கதவை திறக்க அவள் அம்மா உட்பட பெண்கள் கூட்டம் உள்ளே நுழைந்தது.

அடுத்த சில மணித்துளிகளில் சினிமா பாணியில் கீர்த்தனா கையில் பால் சொம்பை தந்து அறைக்குள் விட்டு கதவை சாத்தி விட்டார்கள்.

கீர்த்தனாவின் மனதில் சற்று பயம் மேலோங்கி இருக்க அதை வெளியில் காட்டாமல் மறைத்து கட்டில் அருகே சென்றாள்.

கார்த்திகேயன் அங்கே அவள் வருகைக்காக அவளுடன் அமர்ந்து இருந்தான்.

கீர்த்தனாவிடமிருந்து பால் சொம்பை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு அருகில் உட்கார சொன்னான்.
கீர்த்தனா யோசித்தபடி அவனை பார்த்தாள்.

"கீர்த்தனா... நீ காலில் எல்லாம் விழத் தேவையில்லை. வா வந்து உட்கார்" என்றவன் கூற அருகில் அமர்ந்தாள்.

அவள் மனது படபடக்க தான் கேட்க, பேச நினைத்ததை எல்லாம் மறந்து விட்டாள்.

கீர்த்தனாவை அருகில் பார்த்த கார்த்திகேயனுக்கு தான் காண்பது கனவா நிஜமா என்ற நிலையில் இருந்தான்.

"கீர்த்தனா... என்னால் இதை இன்னும் நம்ப முடியவில்லை. இவ்வளவு சீக்கீரத்தில் நீ என் மனைவியாவாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் அப்பா அம்மா உன் மேல் எனக்கு உள்ள காதலை தெரிந்து கொண்டு உன்னை எனக்கு மனைவியாக கட்டி வைப்பார்கள் என்று நினைக்கவில்லை. இப்பொழுது நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா? அதை வார்த்தைகளில் சொல்லவே முடியாது" என்று கார்த்திகேயன் தான் அடைந்த மகிழ்ச்சியை வெளிபடுத்தினான்.

கீர்த்தனா மெளனமாக கேட்டு தலையசைத்தவள் பின் மெல்ல கேட்டாள்.

"என்னை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?"

"உன்னை எந்த அளவுக்கு எனக்கு பிடிக்கும் என்று கேட்டால் சொல்ல எல்லையே கிடையாது. அயம் மேட்லி லவ் வித் யூ கீர்த்தனா"

"நீங்கள் இவ்வளவு தூரம் என்னை விரும்புகீறீர்கள் என்று கேட்கவே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறதுங்க" என்றாள் கீர்த்தனா.

"அப்படியா கீர்த்தனா" என்றபடி அவளை ஆசையாக பார்த்தான்.

"ஆமாங்க" என்றவள் பின்னர் "நானும் உங்களை பலமுறை டென்னிஸ் கோர்ட்டிலும், உங்கள் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பார்த்திருக்கிறேன். எனக்கு விக்னேஷ் மாமாவின் பிரண்டு என்றும் கடையில் பார்ட்னர் என்ற வகையில்தான் தெரியும்"

தன் பேச்சை நிறுத்தி அவனை பார்த்துவிட்டு பின்னர் "உங்களை பார்த்தவரையில் எனக்கு பிடிக்கும் ஆனால் சாரிங்க உங்கள் மேல் காதல் எல்லாம் இல்லை" என்றாள் கீர்த்தனா.

அவள் பதில் சற்று ஏமாற்றம் தந்தாலும் அதை சமாளித்து "நீ என்னை காதலிக்க அவசியம் இல்லை கீர்த்தனா. உன்னை நான் காதலிப்பதே ரொம்ப நாள் கழித்துதான் எனக்கே புரிய ஆரம்பித்தது" என்றான்.
Write your reply...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"எனக்கு காதல் என்றால் அது டென்னிஸ் மேல் மட்டும்தான். என் பத்து வயதில் இருந்து அதை விரும்புகிறேன். என் பன்னிரென்டாவது வயதில் விளையாட ஆரம்பித்தவள் இன்று வரை எனக்கு அதன் மீது தீராத காதல். என் அப்பா, தங்கை கல்பனா, விக்னேஷ் மாமா, அவர் பேமிலி எல்லாம் சப்போர்ட். என் கனவு எல்லாம் சானியா மிர்சா மாதிரி பெரிய டென்னிஸ் பிளேயராகி நம் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்" என்றாள் கீர்த்தனா.

தன் மனதில் உள்ள ஆசையை எல்லாம் கொட்டிவிட்ட பின்னர் அவனை பார்த்தாள்.

அவள் பேசுவதை பார்த்து ரசித்த அவனிடம் "சாரிங்க என் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி போராடிக்க வைத்து விட்டேன்" என்றாள்.

"இல்லை... நீ பேசுவது எனக்கு போராடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் பேசுவாயா என்று எதிர்பார்த்தேன்"

கீர்த்தனாவுக்கு தன் ஆசையை சொல்ல இதுதான தருணம் என உணர்ந்து "என்னங்க... நான் கல்யாணத்திற்கு பின்னால் டென்னிஸ் விளையாடலாம் என்று" நிறுத்திவிட்டு அவனை பார்த்தாள்.

"தாரளமாக நீ விளையாடுடா. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என்றவன் கூற

"ரொம்ப நன்றிங்க" என்று சந்தோஷமாக சிரித்தபடி கூறினாள் கீர்த்தனா.

"இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி கீர்த்தனா. எனக்கும் உன்னை பெரிய டென்னிஸ் பிளேயர் ஆக்கி பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது"

"அப்படியாங்க" என்றவள் கணவனை ஆச்சரியமாக பார்த்தவள் பின்னர் ஏதோ சிந்தனை வர முகம் வாடி விட்டாள்.

"என்ன யோசனை கீர்த்தனா?" என்றான் கார்த்திகேயன்.

"அதில்லைங்க நீங்கள் மட்டும் சம்மதித்தால் போதுமா? உங்கள் அப்பா அம்மா இதற்கு என்ன சொல்வார்களோ என்று தெரியவில்லையே?"

"கீர்த்தனா எங்கள் பேமிலியே ஸ்போர்ட்ஸ் பேமிலி. எங்கள் அப்பா வாலிபால் பிளேயர். பேங்க் டீமீல் ஆடியவர். நான் அண்ணா, அண்ணி எல்லோரும் டென்னிஸ் பிளேயர்கள். விஜி செஸ் பிளேயர். அம்மா கூட ஸ்கூல் லெவலில் பேஸ்கட்பால் பிளேயராம் அதனால் நீ கவலை பட வேண்டாம். கண்டிப்பாக எல்லோரும் சம்மதிப்பார்கள்"

"அப்படிங்களா? அப்பொழுது சரிங்க ஆனால் நாம் முறைப்படி அவர்களிடம் சொல்லி அனுமதி வாங்க வேண்டும். எனக்கு அப்பொழுதுதான் திருப்திங்க"

"சரி கீர்த்தனா... நான் இன்னும் ரெண்டு நாளில் இதை பற்றி பேசிவிடுகிறேன்"

"சரிங்க" என்றவள் தனக்கு விளையாட சம்மதம் கிடைத்த மகிழ்ச்சியில் கூறினாள்.

கீர்த்தனா சந்தோஷமாக கூறி சிரிப்பதை பார்த்து அவன் மகிழ்ச்சியாகி விட்டான்.

"கீர்த்தனா... நீ டென்னிஸ் விளையாடுவது என்று முடிவு ஆகிவிட்டது அதனால் இன்னும் கொஞ்சம் நாட்கள் நமக்குள் எதுவும் வேண்டாம். நீயும் நானும் முதலில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வோம். நாம் இருவர் மனதிலும் காதல் முழுமையாக வரட்டும். நாம் நல்ல காதலர்களாக மாறிய பின்னர் இதை பார்ப்போம். அது வரை நாம் நண்பர்களாக இருப்போம். நீ டென்னிஸ் விளையாடு. நான் ஹெல்ப் செய்கிறேன்"

முதல் இரவில் தன் மனதின் உணர்வுகளை புரிந்து கொண்டு பேசிய பெருந்தன்னமையான தன் கணவனை ஆச்சரியமாக பார்த்தாள் கீர்த்தனா. அவள் கண்களில் வியப்பு கலந்த மகிழ்ச்சி மின்னியது.

"என்னங்க... நான் உண்மையில் லக்கிதாங்க. உங்களை மாதிரி கணவனாக கிடைக்க நான் முன்ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்திக்க வேண்டும் " என்றாள் கீர்த்தனா.

"நானும்தான் கீர்த்தனா" என்று கார்த்திகேயன் கூற இருவரின் விழிகளும் ஒன்றை ஒன்று விலகாமல் பார்க்க அப்படியே சிலநிமிடங்கள் இருந்தார்கள்.

சிறிது நேரத்திற்கு பின்னர் பார்வையை விலக்கியவன் அவளிடம் "சரி கீர்த்தனா... நீ நிம்மதியாக தூங்கு. குட் நைட்" என்று திரும்பி படுத்து கொண்டு விட்டான் கார்த்திகேயன்.

தன்னை புரிந்த கணவனை நினைத்து மனதில் மகிழ்ச்சி கொண்டாலும் அவன் கனவை கலைத்து விட்டோமா என்ற குற்ற உணர்வு தோன்ற தன் கணவனை பார்த்தபடி இருந்தாள் கீர்த்தனா.

சாரிங்க என்று மானசீகமாக மனதில் மன்னிப்பு கேட்டவள் தூங்கி போனாள்.Write your reply...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
Nice update mam, keerthi ma nee kavalaye padatha un husband unaku support pannuvar, nee avan kitta pesuma, nice mam thanks.
நன்றி சகோ ஆனால் பின்னால் கொஞ்சம் இருக்கிறது அதையும் படித்து விடுங்கள்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top